Wednesday, October 03, 2007

OFFICE CARTOONS - சும்மா டைம் பாஸ்Tuesday, October 02, 2007

தினமலர் - கலைஞர் கருணாநிதி.

தினமலர் நாளிதழும் கலைஞர் கருணாநிதியும் கை கோர்த்துக்கொண்டதாக குமுதம் வம்பானந்தாவில் வந்துள்ளது.

தினமலர் நாளிதழை படித்துவருபவர்களுக்கு இது ஓரளவு உணர்ந்திருக்க முடியும்.

அரசியலில் எல்லாம் சகஜம் என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு. நாளையே இந்த காட்சி மாறலாம்.

சுமார் இரு வாரங்களுக்கு முன் தினமலர் லட்சுமிபதி அவர்கள் கலைஞரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் என தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.

இது போன்ற அரசியல் கிசுகிசுக்கள் உலா வருவது யாருக்கு உபயோகமோ இல்லையோ அரசியல் செய்திகளை வாசிப்பவர்களுக்கு நல்ல தீனி. அதை செவ்வனே செய்யும் நம்ம "வீராதிவீரனுக்கு" ஒரு "ஓ"


இனி குமுததில் வந்த துணுக்கு கீழே..

===================================================================================

‘‘‘தினகரன்’ நாளிதழ் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருந்த போது, தினகரனை வளர்ப்பதற்காக ஒரு நாளிதழை தி.மு.க.வினர் யாரும் வாங்க வேண்டாம் என்று கலைஞரே சொல்லியிருந்தார் அல்லவா?’’

‘‘ஆமாம் சுவாமி, ஞாபகம் இருக்கிறது. அந்த நாளிதழைத் தாக்கி முரசொலியிலும் எழுதியிருக்கிறார்களே.’’

‘‘அந்த நாளிதழைத்தான் இப்போது தனது ஆதரவுப் பத்திரிகையாக மாற்றியுள்ளாராம் கலைஞர்.’’

‘‘என்ன சுவாமி, ஆச்சரியமாக இருக்கிறதே!’’

‘‘இதுவும் எதிரிக்கு எதிரி நண்பன் ஃபார்முலாதான். தினகரனுக்கும் அந்த நாளிதழுக்கும் ஏற்கெனவே தொழில்போட்டி நடந்து வருகிறது. இப்போது தினகரன் நாளிதழை ஒழிக்க அந்த நாளிதழுக்குத் தனது ஆதரவுக் கரத்தை நீட்டியுள்ளார் கலைஞர். அதனால் இதுவரை இல்லாத அளவிற்கு விளம்பரம் கொடுக்கப்பட்டு வருகிறதாம். அதுமட்டுமின்றி அந்த நாளிதழ் அதிபர் கைது செய்யப்படுவார் என்று பேசப்பட்ட நேரத்தில், கொஞ்சம் சாதகமாக நடந்து கொண்ட நன்றியையும் கருத்தில் கொண்டு, அந்த நாளிதழும் இப்போது தி.மு.க.வுக்கு ஆதரவாக செய்திகள் வெளியிடத் தொடங்கியுள்ளதாம்.’’

‘‘இனிமேல் தி.மு.க.வினர் அந்த நாளிதழைத்தான் வாங்குவார்கள் என்று சொல்கிறார்களா சுவாமி?’

‘‘அப்படித்தான்.


=================================================================================

நன்றி: .(குமுதம் ரிப்போர்டர் 30-09-2007)

Monday, October 01, 2007

தேறவே தேறாது..!

கீழே இருக்கும் செய்தியைப் பாருங்க.. சிரிப்பதா அழுவதா எனத்தெரியவில்லை. இது போன்று "இந்து" மத அமைப்பின் தலைவர் ஒருவரும் சொன்ன மாதிரி நியாபகம்.

சீனாக்காரன் என்னடான்னா எகப்பட்ட கெடுபிடி செய்து மக்கள் தொகையை குறைத்துக்கொண்டு இருக்கிறான். அங்கே மதங்களுக்கு இது போன்று மக்களைக் குழப்பும் வேலை இல்லை. அதனால் ஒரு வேலை இந்த விடயம் சீன அரசுக்கு எளிதாகிறது.

பிறப்பவன் அனைவரும் இந்தியன் தான். 130 கோடிக்கு மேல் இருக்கிறோமே.. அது பத்தாதா?

மத வாதிகளே கொஞ்சம் யோசியுங்க.. ப்ளீஸ்.. (இதனால் தான் மதங்களே வேணாம் என சொல்லறது..ம்ம்ம்ம்)


===============================================================
அதிக குழந்தை பெறுங்கள்' கிறிஸ்தவர்களுக்கு கடிதம்

திருச்சூர் : "அதிக குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள்; குழந்தைப் பேறு, இறைவன் நமக்கு கொடுத்துள்ள பாதுகாப்பு கேடயம்' என்று, கிறிஸ்தவர்களுக்கு ஆர்ச் பிஷப் கடிதம் எழுதியுள்ளார்.

கேரளாவில், கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. 1950ம் ஆண்டில், 24 சதவீதமாக இருந்த கிறிஸ்தவர், இப்போது 19 சதவீதமாக குறைந்துவிட்டனர். இதனால், கேரளாவில் உள்ள கிறிஸ்தவ மத தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்திய துணை கண்டத்தில், முதலில் செயின்ட் தாமஸ் காலடி வைத்தது திருச்சூர் தான். அதனால், இந்தியாவில் கிறிஸ்தவ மதம் பரவ, கேரளா முக்கிய காரணமாக கருதப்படுகிறது. அதனால், அங்கு, கிறிஸ்தவர் எண்ணிக்கை குறைந்துவிடக்கூடாது என்று மதத்தலைவர்கள் மிகுந்த அக்கறையுடன் உள்ளனர்.


செய்தி: தினமலர்.
நன்றி!

Sunday, September 30, 2007

அக்டோபர்-PIT புகைப் பட போட்டிக்காக..!

இந்த புகைப் படங்கள் அனைத்தும் கடந்த சில தினங்களுக்கு முன் சிகாகோ இயற்கை அருகாட்சியகத்தில் உள்ள வண்ணத்துப்பூச்சிகளின் சொர்க்கம் எனும் காட்சியகத்தில் பகல் நேர வெளிச்சத்தில் எடுக்கப்பட்டது.

இந்த "இனையதளத்திற்கு" சென்றால் அந்த அருகாட்சியகத்தைப் பற்றி அறிந்துகொள்ளலாம்.

===================================================================================================================================================================================================================================================================================================================================================================

Friday, September 28, 2007

வடவழி - வடவள்ளி - கரிகாற் சோழன்

இன்று குமுதம் வலைதளத்தை பார்வையிடும் போது வைரமுத்து பதில்களைப் பார்த்தேன். அதில் ஊர் பெயர்கள் எவ்வாறு மறுவுகிறது என்பதைப் பற்றி விளக்கியிருந்தார். உதாரணத்திற்கு

சிராப்பள்ளி’ என்பது ஊரின் பழம்பெயர். இடைக்காலத்தில் ‘‘திரு’’ வென்ற அடைமொழி இணைந்து ‘திரு சிராப்பள்ளி’ என்றாகி ‘திருச்சிராப்பள்ளி’ என்று வளர்ந்து, ‘திருஸ்னாப்பள்ளி’ என்று ரயில்வே மொழியாகி ‘‘திருச்சி’’ என்று சுருங்கி ‘‘ட்ரிச்சி’’ என்று ஆகிவிட்டது என குறிப்பிட்டிருந்தார்.


இதைப் படித்தவுடன் எனக்கு எங்கள் ஊர் பெயர் எவ்வாறு மறுவுயது என்பதை இங்கே பகிர வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அதன் விளைவே இதன் இடுக்கை.

எங்கள் ஊர் வடவள்ளி, கோவை மாவட்டத்தில் மருதமலை செல்லும் வழியில் உள்ளது.

உண்மையில் இதன் பெயர் வடவழி. அதாவது வடக்கு வழி. காலப் போக்கில் இது வடவள்ளி ஆகிவிட்டது. இன்னும் பழைய பத்திரங்கள் ஏடுகளில் இது வடவழி என்றே வழங்கப்படுகிறது.

ஆனால் அது மறுவி வடவள்ளி என மாறிவிட்டது.

சரி, அது என்ன வடவழி.

கோவையில் பேருர் எனும் ஊரில் சிவன் கோவில் உள்ளது. பட்டிஸ்வரன் எனும் பேரில் வணங்கப்பட்டு வருகிறது. இந்த கோவில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன் கரிகாற் சோழனால் கட்டப்பட்டது. அதைத் தொடந்து கோசல மன்னர்களாலும் விஜய நகரப் பேரரசினாலும் அந்த கோவில் முழுமை பெற்றது. ( அந்த தலத்தின் தல புராணம் எனக்கு சரியாக தெரியாது. தெரிந்தவர்கள் பகிர்ந்துகொள்ளுங்கள்.)அந்த காலகட்டத்தில் பேருர் மற்றும் அதன் சுற்றிய பகுதிகள் மிகப் பெரிய வனம். இதன் குறிப்பு தேவாரப்பாடல்களிலும் உள்ளது.

இந்த கோவில் கட்டுவதற்கு தேவையான கற்கள் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளன. அதாவது அந்த ஊரிலிருந்து வடக்குப் பகுதியில் கணவாய் (கணுவாய்) எனும் மலைப் பகுதியிலிருந்து தான் கற்களைக் கொண்டு வரமுடியும். அந்த மலையை அடைய வடவழியாகத்தான் செல்ல வேண்டும். அந்த மலையிலிருந்து கொண்டுவந்த கற்களை தரம் பிரித்து எடுத்துச் செல்ல சிற்பிகள் அமைத்து தங்கிய ஊர்தான் வடவழி.

இது பேருர் வரலாற்று குறிப்பில் இருப்பதாக கேள்வி.
இந்த செய்தி முழுக்க முழுக்க எனது தாத்தா என்னிடம் பகிர்ந்தது. இதன் நம்பகத்தன்மை பற்றி எனக்கு தெரியாது. அதற்கான முயற்சிகளை நான் இதுவரை செய்யவில்லை.

இந்த செய்திக்கு மாற்று கருத்து இருப்பின் வரவேற்கிறேன்.

நன்றி

இது சம்பந்தமான சுட்டிகள்:

"வடவள்ளி - ஆங்கில விக்கிபீடியா"

"பேருர் பற்றிய செய்தி - 1"

"பேருர் பற்றிய செய்தி - 2"

Wednesday, September 26, 2007

வாவ்! கலக்கும் தமிழகம்!!

தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடநூல்களை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.

பள்ளிப் பாடநூல்களை 1970 முதல் தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் வெளியிட்டு வருகிறது. அரசு மற்றும் மானியம் பெறும் பள்ளிகளுக்கு மாநில மொழி பாடத் திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு இலவச பாட நூல்களை வழங்குகிறது.ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள பாடநூல்களை தற்போது இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.

தமிழகம் மட்டுமின்றி வெளிநாட்டினரும் இந்த பாடத்திட்டங்களை பயன்படுத்த "டவுன்லோடு' செய்து கொள்ள முடியும்.

அரசுப் பொது தேர்வுகளுக்கான கடந்த மூன்றாண்டுக்கான வினாத்தாள்கள் இடம் பெற்றுள்ளன.இதன் மூலம் பாடத் திட்டங்களை ஆய்வு செய்யவும், இணைய தளம் வழியாக மற்றவர்களின் கருத்துகளை பெறவும் திட்டமிடப்பட்டுள்ளது.

நன்றி: தினமலர்.


"இங்கே (www.textbooksonline.tn.nic.in)" சென்று அனைத்து பாட நூல்களையும் இலவசமாக டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

Monday, September 24, 2007

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்!நன்றி: தினமலர்
Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv