Thursday, June 29, 2006

ஆறாம் அறிவு - The Sixth Sense - மனிதன்

திரு.Dr.சங்கர்குமார் (SK) அவர்கள் என்னை ஆறு பதிவு போட அழைத்திருந்தார். அவரின் அழைப்பினை ஏற்று இப்பதிவு..

எனக்கு பிடித்தவை......6

1. தொலை தூர பயனம்
2.நன்பர்களை சந்திப்பது
3. அலுவலகம் செல்ல அதிகாலையில் Express Wayல் (50 miles) கார் ஓட்டுவது..
4. சென்னை மெரினா கடற்கரை
5. எங்களுடைய கிராமம் (பழைய)
6. ரஜினிகாந்த் நடித்த படங்கள்.


எனக்கு பிடிக்காதது......6

1. வரிசையில் நிற்பது.
2. டெலிபோனில் பேசுவது
3. உறவினர்களிடம் உள்ள காழ்புணர்ச்சி
4. என் தலை முடி கொட்டி வலுக்கையாகி கொண்டிருப்பது.
5. வன்முறை நிறைந்த படங்கள்
6. தி.நகர் இரங்கநாதன் தெரு.


எனக்கு பிடித்த படங்கள்......6

1. பாட்சா
2. மை. ம. கா. ராஜன்.
3. கில்லி
4. காசி
5. கஜினி
6. கேப்டன் பிராபகரன்.


எனக்கு பிடித்த ஆங்கில நடிகர்கள்......6

1. Adam Sandler - Anger Management
2. Robin Williams - One Hour Photo, Mrs.Doubtfire
3. Kevin Kline - Life as a House
4. Tom Hanks - Cast Away, Terminal
5. Bruce Willis - Armageddon, The Sixth Sense
6. Arnold Schwarzenegger - Terminator - Judgement Day.


எனக்கு பிடித்த தமிழ் கவிஞர்கள்...6

1.கலைஞர் மு.கருனாநிதி
2. வைரமுத்து
3. பாரதியார்
4. பா.விஜய்
5. வாலி
6. பழனி பாரதி


எனக்கு பிடித்த வலைப்பதிவர்கள்

1. தமிழ் சசி
2. பத்ரி
3. செல்வன்
4. வெளிகண்ட நாதர்
5. தெ.கா/ இயற்கை நேசி / Orani
6. குப்புசாமி செல்லமுத்து

மேலும் SK, முத்து தமிழினி, குமரன் (Kumaran), திராவிட தமிழர்கள், குழலி, வஜ்ரா சங்கர், கால்கரி சிவா, இராகவன், போனபெர்ட், சந்திப்பு, இட்லி வடை, நாமக்கல் சிபி , பொன்ஸ் மற்றும் இலவசகொத்தனார்.

37 Comments:

Blogger Sivabalan said...

Test Comment....

June 29, 2006 9:05 PM  
Blogger குமரன் (Kumaran) said...

This comment has been removed by a blog administrator.

June 29, 2006 9:07 PM  
Blogger Thekkikattan|தெகா said...

சிவா,

//4. என் தலை முடி கொட்டி வலுக்கையாகி கொண்டிருப்பது.//

ரொம்ப பாவம சொல்றீங்களே, என்னங்க பண்றது. இருந்தாலும் :-))) எனக்கும் அதே கதைதான்...

எல்லாமே நல்லாருக்கு... திரும்ப வாரேன்.

June 29, 2006 9:12 PM  
Blogger Unknown said...

அனைத்து தேர்வுகளும் அருமை சிவபாலன்.ரங்கநாதன் தெருவில் தேர்க்கூட்டம் எப்போதும் நிறைந்திருக்கும்.ஒரே தரம் தான் அங்கே சென்றிருக்கிறேன்.உங்கள் கிராமம் என்றது வடவள்ளிதானே?

June 29, 2006 9:15 PM  
Blogger Unknown said...

தமிழ்மணத்தில் பதிவு செய்துவிட்டீர்கள் போலிருக்கிறதே?அதற்கும் வாழ்த்துக்கள்.கோவையில் இருந்து மேலும் ஒரு தமிழ்மலர்.மிக்க மகிழ்ச்சி

June 29, 2006 9:17 PM  
Blogger Sivabalan said...

I will put my reply tomorrow.

Thanks to everyone.

June 29, 2006 10:28 PM  
Blogger Muthu said...

சிவபாலன்,

இந்த பிடிக்காதது வரிசை ரொம்ப இன்ட்ரெஸ்டிங்காக உள்ளது.

June 29, 2006 10:28 PM  
Blogger குமரன் (Kumaran) said...

சிவபாலன். ஆறாம் அறிவும் Sixth Senseம் ஒன்றா? Sixth Sense என்றால் அது Para-psychology என்று சொல்லப்படும் துறையைச் சேர்ந்ததல்லவா? நீங்கள் அந்தத் தலைப்பில் எழுதியிருப்பதைப் பார்த்து வியந்து ஓடோடி வந்தேன். :-) பார்த்தால் ஆறு பதிவு. :-)

எஸ்.கே. அவர்களின் முழுப்பெயரைப் போட்டு எழுதிவிட்டீர்களா? நன்று. அண்மையில் தான் நானும் அவரின் முழுப்பெயரையும் அறிந்து கொண்டேன். :-)

நடுநிலையானவர் என்பது உங்களுக்குப் பிடித்த வலைப்பதிவர்கள் பட்டியலைப் பார்க்கும் போது தெரிகிறது. அப்படியே தொடரட்டும். :-)

June 30, 2006 5:25 AM  
Blogger Sivabalan said...

வாருங்கள் குமரன். தங்கள் வருகைக்கு மிக்க நன்றி & மகிழ்ச்சி.


// ஆறாம் அறிவும் Sixth Senseம் ஒன்றா? //

தவறை சுட்டி காட்டியமைக்கு நன்றி. கடமைப்பட்டுள்ளேன்.

தலைப்பு சும்மா ஒரு Stunt அவ்வளவே!

//எஸ்.கே. அவர்களின் முழுப்பெயரைப் போட்டு எழுதிவிட்டீர்களா? நன்று. //

ஆம். Dr.சங்கர்குமார் எனும்போது நன்றாக உள்ளது.

உங்களைப் பற்றி சில விசயங்கள் சொல்ல ஆசைப்படுகிறேன்...

உங்கள் பதிவுகள் நிச்சயம் நல்ல தமிழுக்கு ஒரு எடுத்துக்காட்டு. உங்கள் பதிவுகளை முடிந்தவரை படித்துவிடுவேன். நிச்சயம் எதோ ஒரு விசயம் அதிலிருந்து கற்றுகொள்வேன்.

தொடரட்டும் உங்கள் நற்பணி..

நீங்கள் ஒரு நல்ல மேலாளர் மற்றும் வழிகாட்டி என்பதை திரு.நடராஜன் அவர்களுடன் பேசும்போது அறிந்துகொண்டேன். மிக்க மகிழ்ச்சி...

நன்றி

June 30, 2006 6:51 AM  
Blogger Sivabalan said...

தெ.கா, (Dr.பிரபாகரன்)

வாங்க வாங்க... நீங்க வந்தது பெரு மகிழ்ச்சி ஏற்படுத்தியது...

//ரொம்ப பாவம சொல்றீங்களே, என்னங்க பண்றது. இருந்தாலும் :-))) எனக்கும் அதே கதைதான்... //

என்ன பன்னுவது என்று தெரியவில்லை... என் பொன்னு என்னை இப்பவே கேலி செய்கிறாள்...


சீக்கிரமாக திரும்பி வாங்க...

June 30, 2006 7:03 AM  
Blogger Sivabalan said...

செல்வன்,

தங்கள் வருகை எனக்கு மிக மகிழ்ச்சி ஏறபடுத்தியுள்ளது.

இரங்கநாதன் தெருக்கு மாதம் ஒரு முறையாவது செல்ல வேண்டிய நிலை ஏறபட்டுவிடும். நிச்சயம் அந்த நாள் எரிச்சலூட்டும் நாள்.

ஆம் செல்வன், எங்கள் கிராமம் வடவள்ளிதான். ஆனால் இப்பொழுது டவுன் என்கிறார்கள். ம்ம்ம்ம்...


//கோவையில் இருந்து மேலும் ஒரு தமிழ்மலர் //

என்னை பொருத்தவரை கோவைத் தங்கம் திரு.செல்வன் தான்..


உங்கள் பதிவுகள் எனக்கு பலமுறை பாடம் எடுத்துள்ளது.. உங்களுடைய சிந்தனைகள் பிரம்ப்பூட்டுகிறது... மிக சிறந்த எழத்தாளனாக நீங்கள் பரிமானப்படுவது மிக விரைவில்...

மிக்க நன்றி!!

June 30, 2006 7:31 AM  
Blogger Sivabalan said...

தலைவர் முத்து இச்சிறு தொண்டனை தேடி வந்திருப்பது சந்தோசமாக உள்ளது...

பிடிக்காததை பிடித்திருக்கிறது என்று சொல்கிறீர்கள்... சொல்லுவது தலை.... மறுமொழிகிடையாது....

மிக்க நன்றி!!

June 30, 2006 7:41 AM  
Blogger VSK said...

அழைப்பினை அங்கீகரித்து
அருமையான 'ஆறு' போட்டு
அப்படியே என் பேரும் போட்டு
அளவோடு சொல்லெழுதி-வலைப்பூவில்
அடிஎடுத்து வைத்திருக்கும்
அன்பான சிவபாலரின்
அழகான பதிவு
ஆல் போல் தழைத்து
அருகு போல் வேரோடி
ஆற்று வெள்ளமாய்
ஆண்டாண்டு நிலைத்திருக்க
அடியவனின் வாழ்த்துகள்!

நன்றி!

June 30, 2006 9:06 AM  
Blogger நரியா said...

வணக்கம் சிவபாலன்.
உங்கள் ஆறு படு ஜோர்.
இதில் "Terminal" , "பாட்ஷா","நண்பர்களை சந்திப்பது" மற்றும் சில எனக்கும் பிடித்தது.

உங்கள் பதிவுகளில் மேலாண்மை பற்றி தெரிந்துக் கொள்ள ஆவலாக உள்ளேன்.

வாழ்துக்கள்!!
நன்றி!

June 30, 2006 9:14 AM  
Blogger குமரன் (Kumaran) said...

//தலைப்பு சும்மா ஒரு Stunt அவ்வளவே!
//

சிவபாலன். நானும் அப்படி நெனச்சுத் தான் ஒரு பதிவு போட்டேன். நெருங்கிய நண்பர்ல இருந்து பல நண்பர்கள் ஆப்படிச்சுட்டாங்களே.... வலி இன்னும் கொஞ்சம் இருக்கு.... :-((((

நடராஜனோட வேற பேசினீங்களா? ரொம்பவே என்னைப் பத்தி பேசியிருப்பாரே?! அவரை மாதிரி ஆளுங்க தான் என்னை ஏத்திவுடறதே. இல்லாதததையும் பொல்லாதததையும் சொல்லி மத்தவங்ககிட்ட ஆப்பு வாங்க வச்சிர்றாங்க. :-)

June 30, 2006 9:18 AM  
Blogger Sivabalan said...

திரு SK அவர்களே,

தங்கள் வருகையால் இந்த பதிவு தனிச்சிறப்புற்றது!!

உங்கள் (மருத்துவரின்) வாழ்த்துகள் நிச்சயம் எனக்கு மிகப்பெரிய ஊக்க மருந்து..

தமிழே வந்து வாழ்த்தியிருப்பது மிக்க மகிழ்ச்சி.


வருகைக்கு மிக்க நன்றி!!.

June 30, 2006 9:22 AM  
Blogger Sivabalan said...

வாங்க நரியா!! தங்கள் வருகைக்கு நன்றி.

எனக்கு பிடித்த சில உங்களுக்கும் பிடித்திருப்பது மிக்க மகிழ்ச்சி!!

Airportல் நடக்கும் Terminalகதை மிக அருமை. Airport மேலாளரின் நடிப்பும் நன்றாக இருக்கும்.

June 30, 2006 9:41 AM  
Blogger Sivabalan said...

குமரன்,

// நானும் அப்படி நெனச்சுத் தான் ஒரு பதிவு போட்டேன். நெருங்கிய நண்பர்ல இருந்து பல நண்பர்கள் ஆப்படிச்சுட்டாங்களே.... வலி இன்னும் கொஞ்சம் இருக்கு //

கொஞ்சம் முன்னாடியே சொல்லியிருந்தால் தப்பித்திருப்பேன்...
விதி(அப்படி ஒன்று இருக்கா?) யாரை விட்டது...

திரு.நடராஜனுடன் பேசியதன் மூலம் நீங்கள் செய்யும் நல்ல விசயங்களை தெரிந்துகொண்டேன்.

June 30, 2006 9:48 AM  
Blogger Sivabalan said...

One More Test Comment.

Sorry...

June 30, 2006 5:44 PM  
Blogger Chellamuthu Kuppusamy said...

சிவபாலன்,

விளக்கமே இல்லாம 6 மேட்டர் முடிச்சுட்டீங்க :-)

பொன்ஸ் அழைச்சதுக்கே இன்னும் சூப்பர் 6 பொடலைன்னு குற்ற உணர்ச்சி இருக்கு. நீங்களும் என்னைக் கொல்டி சாரி கில்டி ஆக்கறீங்க.. just kidding.. thanks for inviting!!

July 01, 2006 8:07 AM  
Blogger Sivabalan said...

வாங்க குப்புசாமி செல்லமுத்து,

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி. மகிழ்ச்சி.

நிதானமாக உங்க ஆறு பதிவை போடுங்க...

உங்கள் பதிவுகள் தமிழ்மணத்தில் தனிதன்மை வாய்ந்தவை. நான் தொடர்ந்து படிக்கும் பதிவுகளில் உங்களதும் ஒன்று.

ஆமா, நீங்க கோவையை சார்ந்தவரா? ஒன்றும் சொல்லாமல் விட்டுடீங்க...

July 01, 2006 8:26 AM  
Blogger கோவி.கண்ணன் said...

//என் தலை முடி கொட்டி வலுக்கையாகி கொண்டிருப்பது.//
ரொம்ப அப்பாவிய 'வெளிச்சம்' போட்டு காட்டியிருக்கிங்களே

July 02, 2006 9:00 AM  
Blogger Sivabalan said...

கோவி கண்ணன்,

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. மிக்க மகிழ்ச்சி.

தற்பொழுதுதான் உங்கள் பதிவுகளை படிக்க ஆரம்பித்துள்ளேன். மற்ற உங்கள் பதிவுகளை படித்துவிட்டு பின்னூடமிடுகிறேன். உங்கள் பதிவுகள் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

எங்க குடும்பத்தில் ஏகதேசம் ஆண்கள் அனைவருக்கும் வலுக்கைதான். அதனாலோ என்னவோ எனக்கும் அதே நிலை நீடிக்கிறது.

July 02, 2006 9:38 AM  
Blogger Muthu said...

சிவபாலன்,

நம்முடைய காலேஜ் பற்றி கொஞ்சம் என் பதிவில் எழுதி உள்ளென். சரியான்னு பாருங்கள்.

(நான் தலைவரா? நீங்க தொண்டரா? எப்பத்திலிருந்து இது? என்னை கண்ட இடத்தில் சுட ஒரு குரூப் அலையுதுப்பு..பார்த்து...

July 03, 2006 5:11 AM  
Blogger Sivabalan said...

முத்து,

நிச்சயம் படித்துவிட்டு சொல்கிறேன்.

நீங்க எப்ப நம்ம காலேஜின்னு சொன்னீங்களோ அப்ப இருந்தே நீங்க நம்ம தலைவர்தான்.

July 03, 2006 7:40 AM  
Blogger நாகை சிவா said...

Short and Sweeta போட்டு உள்ளீர்கள். நன்றாக உள்ளது.

தொலைப்பேசியில் பேசுவது பிடிக்காதா.. எல்லாரிடமுமா, இல்ல ஒரு சிலரை மட்டுமா. ஏன்வென்றால் உங்களை தொலைப்பேசியில் அழைக்கலாம் என்று நினைத்தேன். அதான் கேட்டேன். ;)

July 03, 2006 10:18 AM  
Blogger Sivabalan said...

நாகை சிவா,

தங்கள் வருகைக்கு நன்றி.

நிங்க எப்ப வேண்டுமானாலும் கூப்பிடுங்க.. வரவேற்கிறேன்.

அலுவகத்தில் பார்த்தீங்கன்னா, எப்ப பார்த்தாலும் மீட்டிங் மீட்டிங்ன்னு சாவடுச்சராங்க... அதனால தான்..

July 03, 2006 10:48 AM  
Blogger Thekkikattan|தெகா said...

என்ன சிவா,

பிடித்த படங்களில் "அழகி" "குட்டி" போன்ற படங்கள் மிஸ்ஸிங். அந்த படங்களை பார்த்தீர்களா?

//3. உறவினர்களிடம் உள்ள காழ்புணர்ச்சி// - அதற்கு அவர்கள் நீண்ட நெடுந்தூரம் தாங்கள் போக வேண்டியிருக்கிறது என்பதனை மறைமுகமாக காட்டும் ஒரு தறம் குறைந்த மனப் போக்கே இந்த "காழ்புணர்ச்சி."

Tom Hanks- வோட Forrrest Gump என்ற படம் பார்த்தீர்களா? சமீபத்தில் தான் ஓசியில் பார்த்தேன் கண்ணீரும் கம்பளையாகவும்(?)... கிடைத்தால் முயன்று பாருங்கள்.

July 03, 2006 12:18 PM  
Blogger பொன்ஸ்~~Poorna said...

என்ன சிவபாலன், போன் பேசப் பிடிக்காதா? மேலாண்மைக்கும் போனுக்கும் ரொம்பப் பொருத்தமாச்சே?!!

மேலாளர்னு சொன்னாலே பொழுதொரு தொலைபேசிக் கூட்டமும்(teleconference), நாளொரு எக்ஸல், வோர்ட் டாக்குமென்டும் தானே?!! (ஜி.ரா, இதைப் படிச்சா, ஹி ஹி, உங்களைச் சொல்லலைங்க.. )

July 03, 2006 12:39 PM  
Blogger Sivabalan said...

தெ கா (Dr.பிரபாகர்),

மீன்டும் வருகை தந்ததிற்கு மிக்க நன்றி.

உங்கள் பதிவுகளை தவறாமல் படித்துவிடுவேன். உங்கள் பதிவுகளில் அமெரிக்க கல்விக் கூடங்களில் ஆசிரியாரக பணியாற்றிதன் மூலம் கிடைத்த் அனுபவங்கள் மற்றும் இந்தியாவில் கிடைத்த ஒப்பற்ற அனுபவங்கள், அறிய முடிகிறது.

தங்களைப் போன்றோர் வலைப்பதிவுகளில் இருப்பது என்னை பொருத்தவரையில் ஒரு வரப்பிரசாதமே.


//பிடித்த படங்களில் "அழகி" "குட்டி" போன்ற படங்கள் மிஸ்ஸிங். அந்த படங்களை பார்த்தீர்களா? //

அழகி பார்த்தேன். குட்டி பார்க்கவில்லை. பார்க்கவேண்டும்.


//3. உறவினர்களிடம் உள்ள காழ்புணர்ச்சி// - அதற்கு அவர்கள் நீண்ட நெடுந்தூரம் தாங்கள் போக வேண்டியிருக்கிறது என்பதனை மறைமுகமாக காட்டும் ஒரு தறம் குறைந்த மனப் போக்கே இந்த "காழ்புணர்ச்சி."//

உண்மைதான்.

//Tom Hanks- வோட Forrrest Gump என்ற படம் பார்த்தீர்களா? சமீபத்தில் தான் ஓசியில் பார்த்தேன் கண்ணீரும் கம்பளையாகவும்(?)... கிடைத்தால் முயன்று பாருங்கள். //

நிச்சயம் முயற்சிகிறேன்.

Kevin Kline படங்களும் நன்றாக இருக்கும்.

July 03, 2006 12:46 PM  
Blogger Sivabalan said...

பொன்ஸ்

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. மிக்க மகிழ்ச்சி.

தமிழ், தமிழ் இலக்கனம் நன்றாக தெரிந்த உங்களைப் போன்ற வலைப் பதிவர்கள் கிடைப்பது மிக அரிதாக உள்ளது.
தாங்கள் விசயங்களை எடுத்து வைக்கும் பாங்கு மிக அருமை. இது வெறும் புகழ்ச்சி அல்ல, மனதில் தோன்றியதை சொன்னேன்.

Tele Conferenceஐ கண்டுபிடித்தவன் மட்டும் எங்கிட்ட மாட்டினான்னா தீந்தா...

சாப்பிட விட மாட்டிங்கறாங்க.. என்ன பன்றதுன்னு ஒன்னும் புரியவில்லை...

July 03, 2006 12:58 PM  
Blogger அசுரன் said...

சிவபாலன்,

பதிவு இப்பொழுது சரிப்படுத்தப்பட்டுவிட்டது. யுனிகோட் முறையில் மாற்றப்பட்டுவிட்டது, இனிமேல் படிப்பதற்க்கு சிரமம் இருக்காது.

தங்களை சிரமப்படுத்தியதற்க்கு மன்னிக்க வேண்டுகிறேன்

நன்றி,
அசுரன்

July 04, 2006 3:43 AM  
Blogger Sivabalan said...

அசுரன் ,

வருகைக்கு நன்றி.

நான் உங்களது பதிவை படிப்பேன்.

நன்றி.

July 04, 2006 9:29 AM  
Blogger Thekkikattan|தெகா said...

சிவா,

//தெ கா (Dr.பிரபாகர்),
மீன்டும் வருகை தந்ததிற்கு மிக்க நன்றி.//

நீங்க அது என்னமோ என் பெயருக்கு முன்னலே போடுறீங்களே, அது என்னங்கோவ்... :-)))))

அது செம ஜோக்குங்க... Mr. ஜான், M.L.P, MPTEd, MIEE(london), AIUEE, BS (USA return) ;-))))))) :-)))))

July 04, 2006 10:00 AM  
Blogger Sivabalan said...

Dr.பிரபாகர் (தெகா),

நீங்கள் தன்னடக்கத்துடன் இருக்கிறீர்கள் என்பதற்கு நீங்கள் இங்கே இட்டுருக்கும் பின்னூட்டமே எடுத்துக்காட்டு.

ஆராய்ச்சியாளானக, சிம்பன்சிகளுடன் Language Research Centerல் (Gerogia State Varsity) பணியாற்றிய அனுபவம் மற்றும் இந்தியாவில் Phdயில் பெற்ற அனுபவங்களை பற்றி தான் குறிப்பிட்டிருந்தேன். இது என் மனநிறைவுக்காகவே.

July 04, 2006 11:48 AM  
Blogger இலவசக்கொத்தனார் said...

அடடா இதெல்லாம் பார்க்காம விட்டுடேனே. நல்லா இருக்குங்க. பிடிச்ச படங்கள் அப்படின்னு ஒரு கதம்பமா போட்டு எல்லா ரசிகர்களையும் நெருங்கிட்டீங்க. வாழ்க. :)

July 07, 2006 8:00 PM  
Blogger Sivabalan said...

இலவசக்கொத்தனார் சார்,

வாங்க. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

உங்க பதிவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும். என்ன டென்சனோட உங்க பதிவுக்கு வநதாலும் மனசு ஜாலியாகிவிடும். தொடரட்டும் உங்கள் மேலான பணி!


//பிடிச்ச படங்கள் அப்படின்னு ஒரு கதம்பமா போட்டு எல்லா ரசிகர்களையும் நெருங்கிட்டீங்க.//

நீங்க சொன்னது சரிதான்.

வாழ்த்துக்கு மிக்க நன்றி!!

July 07, 2006 9:25 PM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv