Sunday, February 11, 2007

14 தமிழ்ச் சான்றோர் நூல்கள் நாட்டுடமை

தமிழ்ச் சான்றோர் 14 பேரின் நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளன. அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 6 லட்சம் பரிவுத்தொகை வழங்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிக்கை:

தமிழுக்கு பெருந்தொண்டாற்றி சிறப்புமிக்க நூல்களை படைத்துள்ள தமிழ்ச் சான்றோர்களின் நினைவை போற்றும் வகையிலும் அவர்களின் படைப்புகள் பெருமளவில் மக்களை சென்றடையும் நோக்கிலும் அவர்களின் நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டு, அவர்களது மரபுரிமையினருக்கு பரிவுத் தொகைகள் அரசால் அளிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில்

மாயூரம் வேதநாயகம் பிள்ளை,

சக்தி வை.கோவிந்தன்,

தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்,

தா.நா.குமாரசாமி,

கா.சு.பிள்ளை,

புலவர் குலாம் காதிறு நாவலர்,

வை.சதாசிவப் பண்டாரத்தார்,

டாக்டர் சி. இலக்குவனார்,

மகாவித்வான் தண்டபாணி தேசிகர்,

தி.ஜ.ரங்கநாதன்,

நாரண துரைக்கண்ணன்,

டாக்டர்கள் மா.ராசமாணிக்கனார்,

வ.சு.ப.மாணிக்கம்,

புலவர் கா.கோவிந்தன்

14 தமிழ்ச் சான்றோர்களின் நூல்களை அரசுடைமையாக்கப்படுகிறது.

அவர்கள் ஒவ்வொருவர் குடும்பத்தாருக்கும் தலா 6 லட்சம் ரூபாய் வீதம் பரிவுத் தொகை வழங்கிட அனுமதித்து முதல்வர் கருணாநிதி இன்று அறிவித்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

14 Comments:

Blogger சிவபாலன் said...

தமிழக அரசு இது போன்று தொடர்து செய்துவருவது மகிழ்ச்சியளிக்கிறது.

தமிழக அரசுக்கு வாழ்த்துக்கள்

இதையும் பாருங்க..

"பரிதிமாற்கலைஞர் நூல்கள் நாட்டுடமை"

http://sivabalanblog.blogspot.com/2006/12/blog-post_04.html

February 11, 2007 10:01 AM  
Blogger கோவி.கண்ணன் said...

அரசின் பாராட்டத்தக்க செயல் !

February 11, 2007 10:05 AM  
Blogger thiru said...

நல்ல செய்தி சிவபாலன்.

February 11, 2007 10:14 AM  
Blogger SP.VR. SUBBIAH said...

நல்ல செயல்!

இதே போல சாண்டில்யன்,நா.பார்த்தசாரதி,
பட்டுக்கோட்டையார், ஆகியோரின்
ப்டைப்புக்களையும் நாட்டுடமையாக்கினால்
நல்லது

February 11, 2007 10:18 AM  
Blogger ஜோ/Joe said...

கலைஞருக்கு பாராட்டுகள்!

இதிலும் கலைஞரை எப்படி திட்டலாம் என்று யோசனையில் இருப்பவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!

February 11, 2007 10:29 AM  
Blogger சிவபாலன் said...

GK,

வருகைக்கு நன்றி!

February 11, 2007 10:48 AM  
Blogger Vassan said...

>> இதே போல சாண்டில்யன்.

*சாண்டில்யன்* :))

February 11, 2007 10:52 AM  
Blogger சிவபாலன் said...

திரு,

வருகைக்கு நன்றி

February 11, 2007 10:59 AM  
Blogger சிவபாலன் said...

சுப்பையா அய்யா

வருகைக்கு நன்றி!

February 11, 2007 11:53 AM  
Blogger விழிப்பு said...

தமிழக அரசின் செயல் பாராட்டப்படவேண்டிய ஒன்று.

தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

February 11, 2007 9:23 PM  
Blogger சிவபாலன் said...

ஜோ / Joe ,

வருகைக்கு நன்றி!

February 12, 2007 10:56 AM  
Blogger சிவபாலன் said...

tamilreber,

நல்ல தொரு தலையங்கம். சுட்டிக்கு நன்றி

வருகைக்கு நன்றி!

February 12, 2007 10:57 AM  
Blogger சிவபாலன் said...

வாசன்,

வருகைக்கு நன்றி!

February 12, 2007 10:57 AM  
Blogger சிவபாலன் said...

விழிப்பு!,

வருகைக்கு நன்றி!

February 12, 2007 10:59 AM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv