ரஜினி செய்தது சரியா? தவறா?
டாக்டர். உமா தனபாலன். இவர் குளோபல் ஹெல்த் அண்ட் ஹைஜீனிக் சொல்யூஷன் நிறுவனத்தின் இயக்குனராக உள்ளார். இவர்களது ஒட்டுமொத்த குடும்பமும் அமெரிக்காவில்தான் வசித்து வருகிறது.
விமானமேறச் சென்ற டாக்டர் உமாவுக்கும் லூப்தான்ஸா ஏர்வேல் நிர்வாகிகளுக்கும் வாக்குவாதம் தொடங்கி, ஒரு கட்டத்தில் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும் அளவிற்குப் பிரச்னை நீண்டு விட்டிருக்கிறது.
லூப்தான்ஸா ஏர்வேஸ் பொறுப்பு அதிகாரியாக அனுப்குமார் என்பவர் இருந்தார்.
டாக்டர். உமாவிடமிருந்த பயண ஆவணங்களைச் சரி பார்த்தவர், ‘மூன்றாம் தேதி டிக்கெட் எடுத்து விட்டு அதை ஆறாம் தேதிக்குத் தள்ளிப்போட்டது ஏன்?’ என்று கேட்டதுடன் அதற்காக இருநூறு டாலரை அபராதமாகக் கட்டச் சொன்னார். ‘பணத்தைக் கட்டினால்தான் பயணிக்க முடியும்’ என்றார்.
முறைப்படி உங்கள் நிறுவனத்திற்குத் தகவல் கொடுத்து விட்டுத்தான் மாற்றினேன். எனக்கு உடம்பு சரியில்லை என்ற தகவலைச் சொன்னதால் மருத்துவச் சான்றோடு வரச் சொன்னார்கள். ஆக, முன்கூட்டியே உரிய முறையில் தகவல் கொடுத்து சரியாக நடந்து கொண்ட நான், எதற்காக அபராதம் கட்ட வேண்டும்?’
ஆனால், நிர்வாகி அனுப்குமார் டாக்டர். உமா சொன்னதைக் காதில் வாங்கிக் கொள்ளவேயில்லை. அபராதம் கட்டினால்தான் போக முடியும் என்பதை கடினமான வார்த்தைப் பிரயோகத்தோடு பேசினார்!’’ என்று ஆதங்கப்பட்டவர்.
அப்படியே கீழே வீசப்பட்ட டிக்கெட், மற்ற ஆவணங்களைக் குனிந்து எடுத்தபடி நிமிர்ந்தபோது ஆச்சர்யம்! எதிரே சூப்பர் ஸ்டார் ரஜினி நின்று கொண்டிருந்தார். அவரும் அதே விமானத்தில் அமெரிக்கா செல்ல வந்திருந்தார் போலிருக்கிறது. (சிவாஜி ஷ¨ட்டிங்கிற்காக அன்று அவர் அமெரிக்கா சென்றார்!)
நடந்ததையெல்லாம் மீண்டும் அவரிடம் எடுத்துச் சொல்லி, இதில் என்ன தவறு இருக்கிறது? பார்த்துக் கொண்டிருக்கும் நீங்களாவது இதைத் தட்டிக் கேட்கக்கூடாதா?’ .
அவரோ, பரவாயில்லம்மா. அபராதத் தொகையைக் கட்டிவிட்டு, விமானத்தினுள் செல்லுங்கள் மற்றதை பிறகு பார்த்துக் கொள்ளுங்கள்!’ என்ற பதிலையே ஆறுதல் போன்று கூறினார்.
இது குமுதம் ரிப்போட்டரில் வந்த கவர் ஸ்டோரி.. முழுவதும் படிக்க www.kumudam.com செல்லவும்.
நன்றி: www.kumudam.com

31 Comments:
பிரபலங்களுக்கு இது போன்ற தருனங்கள் தர்ம சங்கடமானவையே!!
என்னைப் பொருத்தவரையில் அவர் அவ்வாறு நடந்து கொண்டது அது போன்ற சூழ் நிலையில் சரியே!!
நாம் சினிமாவையும் வாழ்க்கையும் போட்டு குழப்பிக் கொள்வதற்கு இதுவும் ஒரு சாட்சி!
எது எப்படியோ குமுதம் ரிப்போட்டர் சர்குலேசன் எகிரியிருக்கும்!! கடைசியில் பலிகடா ரஜினி!
ஒரு வெளி நாட்டுப் பயண அதிகாரியிடம் போய் அவர் என்ன பெரிதாய்ச் செய்துவிட முடியும்?
அவர் செய்தது யதார்த்தம்தான்.
அந்தக் குடும்பத்தினர், கட்டணத்தைச் செலுத்திப் பயணம் செய்து விட்டு, அந்தக் கட்டணச் சீட்டை அந்த விமானக் கம்பெனியின் தலைமை அலுவலகத்திற்கு ஒரு புகார் கடிததுடன் அனுப்பினால் நடக்க வேண்டியது நடக்கும்!
இது என்னுடைய தாழ்மையான கருத்து
மிஸ்டர் சிவபாலன்!
கட்டப் பஞ்சாயத்து செய்யாதது தவறுதான். நாட்டாமையாக மாறியிருக்க வேண்டாமோ ; )
என்னோட வழமையான வினா: உங்களிடம் இவ்வாறு முறையிட்டால், அவரின் போராட்டத்தில் பங்கு கொள்வீர்களா? நமக்கேன் வம்பு என்று ஆழ்துயிலுக்கு செல்வீர்களா?
சுப்பையா அய்யா,
உங்கள் கருத்தை வழிமொழிகிறேன்!!
நன்றி
பாபா
ஆழ்துயிலில் இருந்தேன்....
என்ன கேட்டீங்க?... :))
ஒரு வெளி நாட்டுப் பயண அதிகாரியிடம் போய் அவர் என்ன பெரிதாய்ச் செய்துவிட முடியும்?
அவர் செய்தது யதார்த்தம்தான்.
அந்தக் குடும்பத்தினர், கட்டணத்தைச் செலுத்திப் பயணம் செய்து விட்டு, அந்தக் கட்டணச் சீட்டை அந்த விமானக் கம்பெனியின் தலைமை அலுவலகத்திற்கு ஒரு புகார் கடிததுடன் அனுப்பினால் நடக்க வேண்டியது நடக்கும்!
இது என்னுடைய தாழ்மையான கருத்து
மிஸ்டர் சிவபாலன்!//
ரிப்பீட்டே:)
----என்னைப் பொருத்தவரையில் அவர் அவ்வாறு நடந்து கொண்டது அது போன்ற சூழ் நிலையில் சரியே!!---
நான் என்ன கேட்பேன் என்றறிந்து விடையயே முதலிலேயே கொடுத்திட்டீங்களா :-)
யதார்த்தமான பதில்!
சந்தோஷ்பக்கங்கள்: 159. ஆண்டவன் சொல்றான்.....
சிபா,
சில நேரங்களில் உணர்வு பூர்வமாக முடிவெடுப்பதைவிட அறிவு பூர்வமாக முடிவெடுப்பது வெற்றிதரும். அதைத்தான் ரஜினி செய்திருக்கிறார் என்று நான் கருதுகிறேன்
//சில நேரங்களில் உணர்வு பூர்வமாக முடிவெடுப்பதைவிட அறிவு பூர்வமாக முடிவெடுப்பது வெற்றிதரும். அதைத்தான் ரஜினி செய்திருக்கிறார் என்று நான் கருதுகிறேன் //
ரிப்பீட்டே!
அப்போதைக்கு அபராதத்தை செலுத்திவிட்டு பயணத்தை முடித்துக் கொண்டு தகுந்த ஆதாரங்களுடன் பின்னர் சம்பந்தப்பட்ட இடத்தில் புகார் செய்யலாம் அல்லவா!
இரஜினியின் எதிர்வினை அனைவரும் செய்யக்கூடியதே. அபராதத்தை இரத்து செய்வது அந்த அதிகாரியினாலேயே முடியாதிருந்திருக்கலாம். இருப்பினும் ஒரு பயணி ( ஆண் என்ன பெண்ணென்ன) யிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதை கண்டித்திருக்கலாம். அவரது statureக்கு ஒரு மதிப்பிருந்திருக்கும்.
/**********************************
பிரபலங்களுக்கு இது போன்ற தருனங்கள் தர்ம சங்கடமானவையே!!
என்னைப் பொருத்தவரையில் அவர் அவ்வாறு நடந்து கொண்டது அது போன்ற சூழ் நிலையில் சரியே!!
நாம் சினிமாவையும் வாழ்க்கையும் போட்டு குழப்பிக் கொள்வதற்கு இதுவும் ஒரு சாட்சி!
எது எப்படியோ குமுதம் ரிப்போட்டர் சர்குலேசன் எகிரியிருக்கும்!! கடைசியில் பலிகடா ரஜினி!
**********************************/
ரிப்பீட்டே. . . . .
ஏண்டா குமுதத்தில பிரசுரம் பண்ண நாதாரி, ரஜினி நடிகர்டா.
குமுததின் கேவலாமன வியாபார தந்திரம் இது.
ரஜினி செய்தது மிக சரி.
குமுதத்திற்கு தெரியாதா ரஜினி என்ன செய்திருக்கமுடியும் என்று? .. அவர்களுக்கு சர்க்குலேஷன் ஏறவேண்டும் . அவ்வளவுதான் .
குமுதம் இதை முக்கிய செய்தியாக்கியதும் நல்லதுதான் . நடிகர்களும் இக்கட்டான சூழ்நிலைகளிலும் , நியாயம் கேட்பதிலும், நம்மைப் போலவே நடந்துகொள்வார்கள் , பொங்குவதும் ,கொதிப்பதும் , தட்டிகேட்பதும் நடிப்பு அன்றி வேறெதுவும் இல்லை என்பதை தெரியாதோர், அறிந்தும் அவர் முதலமைச்சரானால் தமிழ்நாடு வளம்பெறும் என நினைப்போர்க்கும் , தெளிவதற்கு இது ஒரு வாய்ப்பு .
அந்த அம்மணியின் எதிர்பார்ப்பும் நகைப்புக்குறியது .
//எது எப்படியோ குமுதம் ரிப்போட்டர் சர்குலேசன் எகிரியிருக்கும்!! கடைசியில் பலிகடா ரஜினி!//
இது அப்படியே உங்களுக்கும் இந்த பதிவுக்கும் பொருந்துவது தான் வேடிக்கை.அவர்களாவது ஏதாவது எழுதினார்கள் .உங்களுக்கோ ஓசியில்.
மன்னிக்கவும் சிவபாலன் .நீங்கள் ஏதோ உங்கள் கருத்துக்களை எழுதியிருக்கிறீர்கள் என்று வந்து ஏமாந்ததால் இப்படி கூறுகிறேன் .தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்
ஜோ
நீங்கள் சொல்வதுபோல் நானும் அந்த வரிகளை டைப் செய்யும் போது யோசித்தேன்.
நான் நல்ல விவாதங்கள் வரும் என எண்ணிதான் பதிவிட்டேன். அது முதலில் என்னுடைய கருத்தை பதிவு செய்ததால் விவாதம் நன்றாக செல்லவில்லை..
//இது அப்படியே உங்களுக்கும் இந்த பதிவுக்கும் பொருந்துவது தான் வேடிக்கை.அவர்களாவது ஏதாவது எழுதினார்கள் .உங்களுக்கோ ஓசியில்.//
மற்றபடி நீங்கள் சொல்லும் வரிகளை ஏற்றுக் கொள்கிறேன்!
( பொதுவாக எனக்கு கோர்வையாக எழுத வராது. அதனால் பின்னுடங்களில் என் எண்ணகளை வெளிப் படுத்துவேன்..)
உங்கள் ஏமாற்றத்திற்கு வருந்துகிறேன்!
மன்னிக்கவும்!
ரஜினி செய்திருக்கவேண்டியது இதுதான்
2 டாலர்களை அந்த அதிகாரியிடம் தந்துவிட்டு.. விரலைச் சுழட்டிக் காண்பித்து.
நான் ரெண்டு டாலார் தந்தா 200 தந்தமாதிரின்னு டையலாக் விட்டுட்டு விசு விசுக்கென நடக்கவேண்டும்.
கூடவே
வெற்றிக் கொடிகட்டு கேளுங்க
கிடைக்கும் டிக்கட்டு
டாலரப் போடுறேன் பிக் இட்டு(pick it)
என ஒரு பாடல் போட்டா சூப்பரா இருக்க்கும்.
ரஜினி விமான அதிகாரி வேஷம் போட்டத அந்தம்மா தப்பா நென்னச்சிட்டாங்களோ என்னவோ?
ரஜினி ஒரு நடிகர். அவ்வளவுதான். அவரிடம் சினிமாவை மட்டும் எதிர்பார்க்க வேண்டும். அதுகூட நல்ல சினிமா என்று எதிர்பார்க்க முடியுமா என்று சொல்ல முடியாது. அந்த விமான நிலையத்தில் ரஜினி ஒரு பயணி. அவ்வளவுதான் செய்ய முடியும். செய்ய வேண்டும். அதற்கு மேலும் ஏதேனும் செய்திருந்தால்தான் தவறு.
பாபா காட்டி இருக்கும் சந்தோஷ் லிங்கில்:
//தொடர்ந்து என்னை பிளாக் லேடி, யூஸ்லஸ் ஃபெலோ. நான்சென்ஸ் என்று மோசமான வார்த்தைகளைச் சொல்லித் திட்டியபடியே இருந்தார்.//
டாக்டர். உமா தனபாலனைச் சொன்னதால், குமுதம் ரிப்போர்ட்டர் சர்குலேஷன்..
இதே சில்பா ஷெட்டி என்றால்! லண்டன் டீவிக்கே டிஆர்பி கூடுதே! ஆயிரம் சொல்லுங்க, வெள்ளித்திரை நடிகர்கள் மேல் ஒரு மயக்கம் எல்லா ஊரிலும் இருக்கத் தான் செய்யுது!
//நான் நல்ல விவாதங்கள் வரும் என எண்ணிதான் பதிவிட்டேன். //
சிபா, அடப் பாவமே! அப்படியும் இளையராஜாவை விட ரஜினி மட்டம் தான்னு சொல்லிட்டீங்களே! ரஜினி ரசிகர்கள் கவனிக்க :))))
செல்வன் சார்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
பாபா
உண்மையில் நீங்கள் கேட்பீர்கள் என்றுதான் முதலிலேயே என் கருத்தை பதிவு செய்தேன்.. :)
திரு சந்தோஷ் அவர்களின் பதிவின் சுட்டியை தந்தமைக்கு நன்றி!
GK,
உண்மைதான்.
எனக்கு தெரிந்தவரை அந்த 200 டாலரை திரும்ப அந்த நிறுவனத்திடமிருந்து பெறுவது என்பது பெரிய விசயமாக இருக்க முடியாது.
என்னமோ போங்க..
சிபி,
நீங்கள் சொல்வது சாத்தியமே!!
நன்கு படித்த அந்த அம்மையார் இதற்கு ஏன் அவ்வளவு கோபப் பட்டார்கள் என்பது சற்று ஆச்சரியம் தான். அவர்களின் கூற்றுப் படி அந்த அதிகாரியும் அத்துமீறியிருப்பதாகவே படுகிறது. அது உண்மையானால் அந்த பெண் அதையும் மேல் அதிகாரியிடம் முறையிடலாம்.
இதில் ஆத்திரப்படுவதைவிட அமைதியாக அறிவுடன் செயல்படுவதே நல்லது.
ஒரு சக பயணியான ரஜினி எனும் நடிகனால் அவ்வளவு தான் செய்ய முடியும் என்பது என் கருத்து
மணியன் சார்,
அந்தப் பெண் அந்த அதிகாரியிடம் எவ்வாறு நடந்து கொண்டார் என்று சரியாக தெரிய அந்த அதிகாரியின் கருத்தையும் அறிய வேண்டும்.
இதில் ரஜினி குறுக்கிட்டு ஏதேனும் சொல்லியிருந்தால் பிரச்சனை இன்னும் அதிகமாகுமே தவிர குறைய வாய்பில்லை என்பது என் கருத்து.
வெங்கட்ராமன்
உங்கள் கருத்துக்கு நன்றி
Hari,
வருகைக்கு நன்றி
-L-L-D-a-s-u ,
உங்கள் கருத்து ஏற்புடையதே
வருகைக்கு நன்றி
சிறில் ,
:))
சூப்பர் கமென்ட்..
இரசித்தேன்..
ஜிரா,
உங்கள் கருத்தை மிகச் சரியாக பதிவு செய்துள்ளீர்கள்!!
ஏற்புடையதே!!
வருகைக்கு நன்றி
பொன்ஸ்
நல்லா சொன்னீங்க..
அரனால்ட் சூசநேக்கர் பாடிபில்டர், நடிகர் என்பதாலேயே பிரபலமானர். இப்பொழுது கலிபோர்னியா கவர்னர்.
பிரபலங்களுக்கு( அதுவும் வெள்ளிதிரை) மவுசு அதிகம்தான்.
What ever Rajini done is perfect.
He does not know what was happened before during the conversation between uma and airlines...
Moreover Uma should be knowing that whenever you change a ticket you have get your modified ticket before the travel. Without knowing this people cannot blame on others since he is a celebrity... and whatever kumudam reporter done is really bad... If someone else would have been in that scenario they would have suied kumudam... Rajini was more gentle human being.
Post a Comment
<< Home