இடபங்கீடும் சர்வே நிறுவனங்களும் - பகுதி - 1
One out of six Indians are born into the country's "Untouchable" caste. (Source :http://news.nationalgeographic.com)
சமூக நீதியை நிலைநிறுத்துவதற்காக தலித்துகளுக்கும் பழங்குடியினருக்கும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கும் இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே, அதை இல்லாமல் செய்வதற்கான சதித்திட்டங்கள் ஆதிக்க சக்திகளால் நடத்தப்படுகின்றன. நாட்டையே நிர்வகிக்கும் உயர் அதிகார மையங்களின் நிழலில் அந்த சக்திகள் தஞ்சம் புகுந்து, இதை செய்கின்றன.
இதில் லேட்டஸ்டாக கிளம்பியிருக்கும் விவகாரம் ஒரு கருத்துக் கணிப்பு. இந்த கருத்துக் கணிப்பு முடிவு வெளியான நேரம்தான் முக்கியமானது. பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு உயர் கல்வி நிறுவனங்களில் 27 சதவிகித இட ஒதுக்கீட்டை மத்திய அரசு அமல் செய்திருக்கிறது.
இது தொடர்பாக அரசிடம் உச்ச நீதிமன்றம் சில விளக்கங்கள் கேட்டிருக்கிறது.
. 27 சதவிகிதம் என்ற எண்ணிக்கையை எப்படி முடிவு செய்தீர்கள்? யார் யார் பிற்படுத்தப்பட்டவர்கள் என்பதை எப்படி முடிவு செய்வீர்கள்? எப்படி அமல்படுத்துவீர்கள்? என்பவை நீதிமன்றம் எழுப்பிய கேள்விகள்.
இந்தியாவில் பிற்படுத்தப்பட்டோர் 52 சதவிகிதம் இருப்பதாக ஏற்கனவே மண்டல் கமிஷன் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நவம்பர் முதல் தேதி தேசிய மாதிரி கணக்கெடுப்பு நிறுவனம் ஓர் அறிக்கை வெளியிட்டது. எங்கள் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் பிற்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 41 சதவிகிதம்தான் என்று அறிவித்தது இந்த நிறுவனம்.
இந்தியாவின் வேலைவாய்ப்பு நிலை பற்றி ஒவ்வோர் ஆண்டும் மாதிரி கணக்கெடுப்பு நடத்துகிறது இந்த நிறுவனம். ஜூலை 2004 முதல் ஜூன் 2005 வரையிலான காலத்துக்கு எடுக்கப்பட்ட 61வது சுற்று கணக்கெடுப்பு முடிவுகளை வெளியிடும்போது இதைச் சொல்லியிருக்கிறது இந்த நிறுவனம். 7,999 கிராமங்கள், 4,602 நகரப்பகுதிகளில் 1 லட்சத்து 24 ஆயிரத்து 680 வீடுகளில் எடுக்கப்பட்ட மாதிரி கணக்கெடுப்பு இது.
ஒரு மாதிரி கணக்கெடுப்பு எப்படி மக்கள்தொகை அளவை பிரதிபலிக்க முடியும்? என்று சமூக நீதி அமைச்சகம் கேள்வி எழுப்பி இருக்கிறது.
ஆனால், அங்கீகரிக்கப்பட்ட அறிவியல்ரீதியான முறையில்தான் நாங்கள் கணக்கெடுப்பு நடத்தினோம். நாங்கள் தரும் பெரும்பாலான புள்ளிவிவரங்கள், மக்கள்தொகை கணக்கெடுப்போடு ஒத்துப் போயிருக்கின்றன என்றார் இந்த அமைப்பின் உயர் அதிகாரி ஒருவர்.
நன்றி: தினகரன்
11 Comments:
நன்றி: தினகரன்
இந்த பதிவு சற்று நீளமான பதிவு என்பதால், மூன்று பதிவுகளாக கொடுக்கவிருக்கிறேன்.
ஆதிக்க சக்திகளின் பொருளாதார சமுதாய அந்தஸ்து பற்றி கவலை படும் சமூகம் இது..(Francois Gautier இன் article நினைவிறுக்கும்)
இப்படியே சப்பக்கட்டு கட்டி கதைய மாத்தி விடறதுக்கு தான் இது எல்லாம்.. இவ்வளவு பெரிய ஜனநாயக நாட்டில், இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த விஷயத்திற்காக எடுக்கும் நடவடிக்கைகளில் இப்படி குளறுபடி இருந்தால் என்னவென்று சொல்வது ஹ்ம்ம்ம்...
Sundaram of Delhi School of Economics wrote an in EPW based on
NSSO data.I will try to give the link later. NSSO data is used by many bodies including ministries in central govt.Sachar Committee has also used NSSO data.Mandal Commission 'arrived' at that percentage by extrapolation.
This is the link to the paper by
Sundaram.He is a well known economist.
www.cdedse.org/pdf/work151.pdf
This issue has been discussed already in blogs also.If you do a google search for OBC NSSO you will
get the links.
realitycheck.wordpress.com/2006/12/14/nss-61st-round-data-for-social-groups/
realitycheck.wordpress.com/data-sheet/
மங்கை,
//ஆதிக்க சக்திகளின் பொருளாதார சமுதாய அந்தஸ்து பற்றி கவலை படும் சமூகம் இது. //
மிகச் சரியாக சொன்னீர்கள்.
உண்மையில் நமது ஊடகங்களும் அதை செவ்வனேன் செய்கின்றன.. இந்த சர்வே நிறுவனங்கள் போல
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
Ravi Srinivas Sir,
மூன்று பாகமும் படித்துவிட்டு உங்கள் கருத்தை பகிர்ந்துகொள்ளுங்கள்.
( இந்த முறை Why it bothers you? என்ற கேள்வியை கேட்காமல் விட்டுவிட்டீர்கள்.. Ha Ha Ha..)
வருகைக்கும் சுட்டிகளும் மிக்க நன்றி!
நிச்சயம் படித்து பார்க்கிறேன்
கருத்துக் கணிப்பு
It is not as opinion poll.NSSO is
not a private agency.
மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது பிற்படுத்தப்பட்ட மக்களின் சதவிகிதத்தை கணக்கிட முடிவதில்லையா?
இடப்பங்கீடு பற்றிய கேள்விகளும், தீர்ப்புகளும் குரங்கு ஆப்பம் பங்கு வைக்கும் கதையை நினைவுபடுத்தி தொலைக்கிறது.
Post a Comment
<< Home