தமிழ்த்தாத்தா 153வது பிறந்த நாள்!!
டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் தமிழ்த் தாய்க்குச் செய்திருக்கும் தொண்டுகளைப் பற்றித் தெரியாதவர்களே இருக்க முடியாது. தமிழ்த் தாத்தா, தரணி போற்றும் நல்லவராக மெல்லத் தமிழை வாழ வைத்த வள்ளலாக விளங்கியவர்.
பலர் பெயரால் மட்டும் கேள்விப்பட்டிருந்த பழந்தமிழ் இலக்கியங் களைக் கண்டுபிடித்து அச்சேற்றித் திருத்தமான உயர்ந்த பதிப்புகளாக வெளியிட்டவர். அவர் வெளிக் கொண்டு வந்த பல நூல்களில் சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூறு, பத்துப்பாட்டு என்னும் பாடல்கள் முக்கியமானவை.
உ.வே.சா அவர்கள் சிவபக்தியில் திளைத்தவர். ஆனால் அவரிடம் மத வேறுபாடில்லை! ஜைன மத நூலான சீவகசிந்தாமணியே உ.வே.சா.வின் பதிப்பில் முதல் அரும்பாகும்.
தமிழ்த் தொண்டினால் இன்பம் உண்டு என்னும் உண்மையை எனக்கு முதலில் வெளிப்படுத்தியது சிந்தாமணி நூலே என்கிறார் சாமிநாதய்யர்.
சைவம், அத்வைதம், வைணவம் என்னும் மூன்று சமயக் கருத்துக்களே தமிழ்நாட்டில் அதிகமாக வழங்கி வந்தன. ஜைன சமயத்தைப் பற்றி அறிந்தவர்களையோ, ஜைன சமயம் பற்றிக் கூறும் நூல்களையோ காண்பது அரிதாக இருந்தது. ஆயினும் புறச் சமயமான ஜைனத்தின் மேன்மையை உலகறியச் செய்தவர் சிந்தாமணி நூல் பதிப்பின் மூலம் உ.வே.சா.தான் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
திருவாசகம், திருக்குறள், நாலடியார் இவைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த திரு.ஜி.யு. போப் அவர்களுக்கு உ.வே.சாவின் பதிப்பு வேலைகள் தான் மொழி பெயர்ப்புக்குத் தூண்டுதலாக அமைந்தன.
ஓலைச் சுவடிகளைத் தேடி நடந்தும், மாட்டு வண்டிகளிலும் பயணம் செய்தவர் தமிழ்த்தாத்தா. போக்குவரத்து வசதியில்லாத அந்தக் காலகட்டத்தில் இவ்வளவு பொக்கிஷங்களைத் தமிழ் உலகிற்கு அவர் தேடித் தந்திருக்கிறார் என்றால் அப்பணிக்கு ஈடு இணை ஏது?
நன்றி: www.sify.com
23 Comments:
தமிழ் மேலும் செழிக்கட்டும்!!
அனைவருக்கும் தமிழ்த்தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் பிறந்த தின வாழ்த்துக்கள்!
நன்றி: www.sify.com
தமிழ் உண்டு தமிழ் மக்கள் உண்டு நல்ல
தமிழுக்கு நாளும் செய்வோம் நல்ல தொண்டு
இவரோட முயற்சியால் இன்னைக்கு பல இலக்கியங்கள் அழிந்து போகாம இருக்கு...
(ஆனா ஒன்னு சொல்ல மனசு துடிக்குது.. வேணாம்..சொல்லலை
:-(((..
குமரன் சார்
இரு வரிகளில் அருமையாக சொல்லிவிட்டீர்கள்!
வருகைக்கு நன்றி!
மங்கை
நீங்கள் சொல்வதுபோல் அவர்தம் பணி அரும்பணி!!
நீங்கள் சொல்லவந்ததை நான் இங்கே சொல்லிவிடுகிறேன்.
என் யூகம் சரியா என சொல்லுங்கள்!
இந்தப் பதிவை யாரும் படிக்கவில்லையா? அல்லது படித்து விட்டு கண்டுகொள்ளவில்லையா?
தமிழ்த்தாத்தாவை இன்னும் நிறைய பேர் கௌரவப்படுத்தியிருக்கலாம் என்பது உங்கள் ஆதங்கம் சரியா?
தமிழ்த்தாத்தாவின் 153வது பிறந்தநாளுக்கு என் வாழ்த்துகள்!
ஐயா உ.வெ. சாமிநாதய்யர் அவர்களின் தமிழ் தொண்டிற்கு பாதம் பணிந்த எம் வணக்கங்கள்.
வாழ்க அவர் புகழ்!
அன்புடன் மாசிலா.
உவெசா அவர்களின் பணி மகத்தானது. காலத்தைக் கடந்து அவர் புகழ் நிலைபெறட்டும்.
வைசா
SK அய்யா,
வாழ்த்துக்கு நன்றி!
வருகைக்கு நன்றி
மாசிலா,
வருகைக்கு நன்றி
வைசா,
வருகைக்கு நன்றி
//தமிழ்த்தாத்தாவை இன்னும் நிறைய பேர் கௌரவப்படுத்தியிருக்கலாம் என்பது உங்கள் ஆதங்கம் சரியா? ///
அதே...அதெ...
கோயமுத்தூர்காரங்கன்னா லேசா என்ன
:-)))...
உ.வே.சா அவர்களிடம் இருந்து சில விஷயங்களை நாம் கற்றுக் கொள்ள வேண்டும். செயற்கரிய செயலைச் செய்த அந்த மகான் என்றுமே தன்னுடைய பெருமையைப் பேசிக் கொண்டதில்லை.
யார் மனதையும் புண்படுத்தி அவர் பேசியதில்லை. யாரைப் பார்த்தாலும் அவர்கள் வயதில் சிறியவராக இருந்தாலும் ஒருமையில் விளித்து அழைக்க மாட்டார். நீர் & என்றே சொல் மரியாதை கொடுத்துப் பேசுவார்கள்.
தள்ளாத வயதிலும் தம் வேலையைத் தாமே செய்வாரேயன்றி பிறருக்கு இடைஞ்சல் கொடுக்கமாட்டார்.
உவேசா அவர்கள் பற்றிய எனது இடுகை இங்கே.
http://simulationpadaippugal.blogspot.com/2006/02/blog-post_19.html#links
- சிமுலேஷன்
சிமுலேஷன்,
உங்கள் பதிவின் சுட்டிக்கு நன்றி
வருகைக்கு நன்றி
மங்கை,
கோவை மக்களை பாரட்டியதற்கு நன்றி!
எப்படியோ கோவைக்காரங்க அவங்களை அவங்களே பாராட்டிக் கொண்டால்தான் உண்டு என்று நன்றாக தெரிந்துவிட்டது.
:-)))
ஏனுங்க. நான் பாராட்டுறேன். சின்னக் குழந்தை முதற்கொண்டு எல்லாரையும் வாங்க போங்கன்னு மரியாதையோட பேசற மரியாதை தெரிஞ்ச மக்கள் வாழும் இடம்; எங்கேயாவது போறதுக்கு வழி கேட்டா அவங்களும் நம்மளோடயே வந்து வழி காட்டும் பிறர்க்குதவி என்றால் முன்னால் வந்து நிற்கும் மக்கள் வாழும் இடம்; அன்னபூர்ணா முதல் சிக்கன் சம்பூர்ணா வரை அருமையான உணவகங்கள் கொண்ட இடம் - இன்னும் சொல்லிக்கிட்டே போகலாம் கோவையைப் பத்தி.
இன்னொன்னும் இருக்கு. எல்லாப் பதிவையும் படிச்சுட்டு பேசாம போகாம வந்ததுக்கு மரியாதையா 'நல்ல பதிவு'ன்னு ஒரு வார்த்தைப் பின்னூட்டமாவது போட்டுட்டுப் போறவங்க ஊரு கோவை.
குமரன் சார்
ரொம்ப மகிழ்ச்சிங்க!!
இப்படி சந்தோச வெள்ளத்தில் மிதக்க விட்டுடீங்க..
நன்றி! நன்றி! நன்றி!
வார்த்தைகள் இல்லை நன்றியை தெரிவிக்க..
ஆஹாஆஆஆஆ...குமரன்..
சிவா சொன்ன மாதிரி...சந்தோஓஓஓஓஓஓஓஒஷ வெள்ளத்தில மூழ்க வச்சுட்டீங்கண்ணா...
ரொம்ப நன்றிங்கோவ்....
:-)))....
சிவபாலன், தொடர்ந்து உற்சாகமான பின்னூட்டத்தால் எனக்கு உந்துதலாக இருப்பதற்கு நன்றி!
சிவபாலன், உ.வே.சா பற்றி பள்ளிக்கூட பாடத்திட்டத்தில் படித்த போது, ஒரு நாள் இவரைப் போல நாமும் தமிழுக்கு தொண்டாற்ற வேண்டும் என்று நினைத்துகொண்டேன். நினைத்த அளவுக்கு செய்யவில்லை என்றாலும் ஏதோ நம்மால் முடிந்ததை செய்கிறேன்.
சரியான நேரத்தில் அவரது பிறந்த தினத்தில் அவரைப் பற்றிய ஞாபகம் தந்ததற்கு நன்றிங்க, சிவபாலன்
உ.வே.சா. அவர்கள் பற்றிய எனது இடுகை இதோ:
http://dondu.blogspot.com/2007/09/blog-post_15.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment
<< Home