Tuesday, February 13, 2007

ஆப்ரிக்கா பார்க்காத கடவுள்!! ( படங்கள் - Readers Discretion recommended)





















39 Comments:

Blogger கோவி.கண்ணன் said...

சிபா,

படங்கள் கொடுமை கொடுமை !
ஆள்பவர் பிழையா ? ஆண்டவன் பிழையா ?

இரண்டும் என்பேன் !

நம்ம ஊரில் தான் பிள்ளையாரே பால் குடிப்பார். தெய்வம் வந்து ஞானப்பால் கொடுத்த வரலாறுகள் உண்டு.

ஆபிரிக்காவுக்கும் நம்ம சாமிகளை அனுப்பி வைக்கனும் !

February 14, 2007 11:01 AM  
Blogger குமரன் (Kumaran) said...

நல்ல பதிவு சிவபாலன்.

தலைப்பையும் நன்றாகத் தான் வைத்திருக்கிறீர்கள். தெய்வ மனுஷ்ய ரூபேன என்று ஒரு வடமொழி சுலோகம் சொல்லும். தெய்வம் மனித உருவில் இருக்கிறது என்று. இந்தப் படங்களைப் பார்க்கும் போது மற்ற இடங்களில் வாழும் 'மனிதர்கள்' ஆப்ரிக்காவைப் பார்க்கவில்லை என்று தோன்றுகிறது.

அவ்வளவு ஏன். நம் நாட்டிலேயே நம்மைச் சுற்றியே எத்தனை ஏழைகள் உண்ண உணவின்றிச் செல்கிறார்கள். அவர்கள் நம்மில் எத்தனைப் பேருக்கு கண்ணில் படுகிறார்கள்? கண் கெட்ட கபோதிகள் நாம்.

February 14, 2007 11:13 AM  
Blogger VSK said...

இறையைக் குறை சொல்வதை விடுத்து இங்கே மானுடம் என்ன செய்கிறது என்ன பார்க்க வேண்டும்.

தெய்வம் மனித வடிவில்!!

எல்லாத்தையும் இறையின் மேல் போடுவது ஒரு தப்பிக்கும் வழி!

சாமிகளை அனுப்ப வேண்டாம்!

ஆசாமிகள் போனாலே ,.... மனம் வைத்தாலே போதும்!

பல நூல் படித்து நீ அறியும் கல்வி
பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்
பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்!

February 14, 2007 11:15 AM  
Blogger சிவபாலன் said...

இப்பதிவிற்கு அனானி பின்னூடங்கள் அனுமதிக்கப்படும்.

நன்றி!

February 14, 2007 11:22 AM  
Anonymous Anonymous said...

மோதிரம் எடுக்கும் சாமியார்கள் அங்கு சென்று ரொட்டியாவது எடுத்துத் தரக் கூடாதா ?

February 14, 2007 11:25 AM  
Anonymous Anonymous said...

அனானிகளுக்கு வழிவிடும் அண்ணன் சிவபாலனுக்கு அமுக சார்பில் ஓ போடுகிறோம்

அனானி முன்னேற்ற கழகம்
சென்னை கிளை

February 14, 2007 11:32 AM  
Blogger குமரன் (Kumaran) said...

//
இப்பதிவிற்கு அனானி பின்னூடங்கள் அனுமதிக்கப்படும்.

நன்றி!

//

இது எதற்கு சிவபாலன்?

தானாக அனானி பின்னூட்டங்கள் வந்தால் சரி. இப்படி கேட்டுப் பெறுவது எதற்கு?

February 14, 2007 11:33 AM  
Anonymous Anonymous said...

கேளுங்கள் கொடுக்கப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்கிற கடவுளையும் அங்கே அனுப்பினால் நல்லாயிருக்கும்.

February 14, 2007 11:35 AM  
Anonymous Anonymous said...

மிசிநரிகளின் பார்வை எல்லாம் அங்கு படாது

February 14, 2007 11:41 AM  
Blogger சிவபாலன் said...

குமரன் சார்,

இதுவரை எனது பதிவுகளில் அனானி பின்னூடங்கள் அனுமதிக்கவில்லை.

ஆனால் கடவுள் கான்சப்ட் பற்றி பேச பல பேருக்கு இந்த அனானி பின்னூடங்கள் வழிவகுக்கும் என நான் கருதுவதால் இந்த ஏற்பாடு.

நிச்சயம் தனிமனித தாக்குதல்கள் அனுமத்திக்கப் படாது.

இதில் ஏதேனும் தவறு என கருதினால் சொல்லுங்கள்.. நிச்சயம் பரிசிலிக்கிறேன்.

நன்றி

February 14, 2007 11:41 AM  
Blogger SP.VR. SUBBIAH said...

என்ன சிவபாலன் இப்போது இங்கே இரவு - 11.15 மணி
இப்படிய்ல்லாம் படம் போட்டு எங்களைப் பிழியலாமா?
-----------
அதுசரி, பதிவுலக பின்னூட்ட மன்னர்
எப்படி (உங்கள் பதிவு உட்பட) எல்லாப் பதிவுகளுக்கும் முதலில் வந்து விடுகிறார்?

February 14, 2007 11:46 AM  
Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இப்படங்கள் ஏற்கனவே! "வாழும் புன்னகை வித்யா" ,பல மாதங்களுக்கு முன் போட்டிருந்தார்.வேதனையைத் தரும் படங்கள். ஆனால் இந்த நாட்டு(சூடான்;எதியோப்பியா) அரசியல்வாதிகளுக்கு பாரிசில் பெரிய மாளிகைகள் சொந்தமாக உண்டு.அவர்கள் மனம் வைத்தால் மாற்றலாம்.

February 14, 2007 12:04 PM  
Blogger நாமக்கல் சிபி said...

ஐயோ!

கொடுமையான படங்கள் இவை. முன்பே மின்னஞ்சலில் வந்துள்ளன!

பார்த்துட்டா மனசே நிம்மதியா இருக்காது கொஞ்ச நாளைக்கு!

:(

February 14, 2007 12:18 PM  
Blogger Thamizhan said...

நெஞ்சை உருக்கும் காட்சிகள்.இந்த அவலங்களை மனிதனால்தான் போக்கமுடியும்.பில் கேட்சு அவர்கள் இந்தியா ஆப்பிரிக்காவிலே நோய்களை ஒழிக்க சிறந்த அறிவாளிகள் மூலமாக முயற்சி செய்கிறார்.
பில் கிளிண்டன் அவர்கள் உலக அறிஞர்களை ஒன்று திரட்டி பெரும் பணக்காரர்களும் நிறுவனங்களும் ஏழ்மை ஒழித்தல்,பசிதீர்த்தல் ,மதநல்லிணக்கம் போன்று வெறும் பேச்சில்லாமல் செயல் Global confernce அவற்றின் செயல்பாட்டு ஆண்டறிக்கை என்று 6 பில்லியன் டாலர் ஒரே நாளில் நன்கொடைத்திட்டங்கள் சேர்த்தார்.Bill Clintation Foundation இணையத்தில் பார்க்கலாம்,உதவி பலரும் செய்கிறார்கள்(ஆம்,அதில் இந்திய,ஈராணிய மருத்துவ அறிஞர்கள் பங்கேற்றனர்.யூத இசுலாமியர் ஒரே மேடையிலே ஒற்றுமைக்கான வழிகள் பற்றிப் பேசினர்.
நமது மக்களுக்குத்தான் இன்னும் கடவுளையுங் கோவிலையுந்தாண்டி வரமுடியவில்லை.வெளி நாடுகளிலே வசதியாக இருக்கும் தமிழர்களும் இந்தியர்களுங்கூட அப்படித்தான் இருக்கிறார்கள்.ஒரே விடை,கடவுளை மற மனிதனை நினை.
வெறும் பேச்சல்ல எங்கள் பங்கிற்கு நாங்கள் ஆசாமிகளுக்கு உதவுகிறோம் என்பதை அடக்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.சிறுதுளி பெருவெள்ளமாகட்டும்.

February 14, 2007 6:38 PM  
Blogger சிவபாலன் said...

GK,

கடவுளை மற! மனிதனை நினை!!

கிழே தமிழன் கருத்துக்கள் தான் எனதும். நானும் என்னால் ஆன சில விசயங்களை என் நண்பர்களுடன் இனைந்து செய்துகொண்டுதான் இருக்கிறேன்.

February 14, 2007 7:08 PM  
Anonymous Anonymous said...

சோத்துக்கே வழியில்லாத மக்களை காக்காக கடவுள் எங்களுக்கு தேவை இல்லை!

February 14, 2007 7:35 PM  
Anonymous Anonymous said...

ஒரு வேளை தேவபாடை படிக்காததால் ஆண்டவன் கொடுமை பன்றாரோ அந்த மக்களை?

February 14, 2007 7:36 PM  
Anonymous Anonymous said...

அனானி ஆப்ஷன் திறந்து விட்ட சிவபாலன் நூறாண்டு வாழ்க!

February 14, 2007 7:36 PM  
Blogger கொசு said...

//ஒரு வேளை தேவபாடை படிக்காததால் ஆண்டவன் கொடுமை பன்றாரோ அந்த மக்களை? //

அனானி, நீங்க பன்றது கொஞ்சம் கூட நல்லா இல்லை. உலக மக்கள் தொகையில் சமஸ்கிருதம் படிச்சவா வெறும் 0.000000003% கூட இருக்காது!

February 14, 2007 7:53 PM  
Blogger சிவபாலன் said...

குமரன் சார்

உங்கள் கருத்து ஏற்புடையதுதான்!

ஆனால் கடவுள் என்று ஒன்று இருப்பதாகவும் அது நம்மை காப்பதாகவும் சொல்லி மக்களை ஏமாற்றி, வெறும் பூஜை அறை/ ஜப அறை / தொழுகை அறையிலேயே மனித நேயத்தை முடித்துக் கொள்ளும் அளவுக்கு மனிதன் மாற்றப் பட்டிருக்கிறான். (நான் பொதுவான சமுதாயத்தை சாட்டுகிறேன்).

கடவுள் மறுப்பாளர்கள் எல்லாம் நல்லவர்கள் மற்றவர்கள் கெட்டவர்கள் என நான் சொல்லவில்லை.

மதங்கள் மனிதனுக்கு கடவுள் நம்பிக்கையை ஏற்றி (பொதுவாக பய உணர்வை பயன்படுத்தி இந்த கடவுள் கான்சப்ட் ஏற்றப்படுகிறது) மனித நேயத்தை குறைத்து வருகிறது. எப்படி என்று சமுதாய அன்றாட வாழ்க்கை
பார்த்தாலே புரியும்.

நீங்கள் சொல்வதுபோல் நாம் கண்கெட்ட கபோதிகளாய் மதங்களாலும் கடவுள் கான்சப்ட் மூலம் ஆக்கப்பட்டிருக்கிறோம்.

நன்றி

February 15, 2007 8:35 AM  
Blogger சிவபாலன் said...

SK அய்யா,

கடவுள் தூனிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்கிறார்களே.. நம்மை காக்கும் கடவுள் ஆப்பிரிக்காவில் இல்லையா?

கடவுள் மேல் பலியை போடவேண்டிவற்றுக்கு போடாமல் மற்றவைகளுக்கு போட்டுதான் இந்த கடவுள் கான்சபட் வளர்க்கப்பட்டிருக்கிறது.

இறை கான்சப்டை கேள்வி கேட்டால் மானுடம் என்பீர்கள்? மானுடத்தை கேள்வி கேட்டால் இறை என்பீர்கள்? நான் பொதுவாக சொல்கிறேன்.

குறிப்பிட்டு உங்களை அல்ல..

நன்றி

February 15, 2007 8:41 AM  
Blogger சிவபாலன் said...

சுப்பையா அய்யா,

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி

February 15, 2007 8:44 AM  
Blogger Hari said...

கொடுமை. அதுவும் அந்த சிறுவன் ஒட்டகத்தின் சிறுநீர் குடிக்கும் அந்த படம் என்னை அசைத்தது உண்மை.

கடவுளை வைவது எவ்வகையிலும் சரியில்லை. பட்டினி போடுவது சரியென்று கடவுள் எங்கும் சொல்லவில்லை.

February 15, 2007 8:47 AM  
Blogger சிவபாலன் said...

யோகன் பாரிஸ்,

மனிதன் மனதுவைத்தால் அங்கு நல்லது நடக்கும்.. கடவுள் என சொல்லப்படுவதால் அது முடியாது என்கிறீர்கள்.

ம்ம்ம்..

வருகைக்கு நன்றி

February 15, 2007 8:48 AM  
Blogger குமரன் (Kumaran) said...

//நீங்கள் சொல்வதுபோல் நாம் கண்கெட்ட கபோதிகளாய் மதங்களாலும் கடவுள் கான்சப்ட் மூலம் ஆக்கப்பட்டிருக்கிறோம்.
//

சிவபாலன். இதனைப் படித்தவுடன் சிரிப்பு தான் வந்தது. என்னைக் கேட்டால் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் தான் அதிகம் மற்ற உயிர்களைப் பற்றிக் கவலைப்படுகிறார்கள் என்பேன். நீங்களோ கடவுள் நம்பிக்கை தான் நம்மைக் கண் கெட்ட கபோதிகளாக்குக்கிறது என்கிறீர்கள். ஆனால் நான் சொல்வது கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கெட்டவர்கள் என்ற பொருளில் இல்லை. நீங்கள் சொல்வதோ கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் கெட்டவர்கள் என்ற தொனியை மிகத் தெளிவாகத் தருகிறது. உங்கள் பின்னூட்டம் முன்னுக்குப் பின் முரண்.

ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். கடவுள் நம்பிக்கையைச் சாடுவதால் ஆப்பிரிக்காவிலோ நம் நாட்டிலோ இருக்கும் வறுமை நிலை மறைந்துவிடப்போவதில்லை. மனிதர்கள் தங்கள் சமுதாயக் கடமையை உணர்ந்து கடைபிடிப்பதில் தான் அது நடக்கும். அதற்கு கடவுள் நம்பிக்கையைச் சாடுவதோ கடவுள் மறுப்பைச் சாடுவதோ எந்த வகையிலும் பயன் அளிக்காது. வெட்டி அரட்டைகளுக்கும் ஒருவரை ஒருவர் சாடுவதற்கும் மட்டுமே பயன்படும். அது தான் உங்கள் நோக்கமோ என்பது இங்கே வந்திருக்கும் சில அனானி பின்னூட்டங்களைப் பார்க்கும் போது தோன்றுகிறது.

அது தான் நோக்கம் என்றால் அது தவறு என்றும் சொல்லவில்லை. உங்கள் பதிவை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.

February 15, 2007 8:52 AM  
Blogger சிவபாலன் said...

சிபி,

வருகைக்கு நன்றி

February 15, 2007 8:53 AM  
Blogger சிவபாலன் said...

தமிழன்

உங்கள் கருத்தை மிகத் தெளிவாக பதிவு செய்துள்ளீர்கள்.

முழுவதும் உடன்படுகிறேன்.

வருகைக்கு நன்றி

February 15, 2007 8:54 AM  
Blogger சிவபாலன் said...

கொ.பு (கொசு புடுங்கி)

வருகைக்கு நன்றி

February 15, 2007 8:55 AM  
Blogger குமரன் (Kumaran) said...

//கடவுள் தூனிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்கிறார்களே.. நம்மை காக்கும் கடவுள் ஆப்பிரிக்காவில் இல்லையா?

கடவுள் மேல் பலியை போடவேண்டிவற்றுக்கு போடாமல் மற்றவைகளுக்கு போட்டுதான் இந்த கடவுள் கான்சபட் வளர்க்கப்பட்டிருக்கிறது.

இறை கான்சப்டை கேள்வி கேட்டால் மானுடம் என்பீர்கள்? மானுடத்தை கேள்வி கேட்டால் இறை என்பீர்கள்? நான் பொதுவாக சொல்கிறேன்.

குறிப்பிட்டு உங்களை அல்ல..
//

ஆக இந்தப் பதிவின் முக்கிய நோக்கம் கடவுள் நம்பிக்கையைச் சாடுவதே. ஆப்பிரிக்க வறுமையைப் பார்த்து மனம் வருந்தி பதிவு இட்டுவிட்டதாகத் தவறாக எண்ணிவிட்டேன். பதிவின் தலைப்பைக் கண்டபின்னும் உங்கள் நோக்கத்தை அறியாத என் முட்டாள்தனத்தை மெச்சுகிறேன். :-) உங்கள் நோக்கத்தை செவ்வனே நிறைவேற்றுங்கள்.

கடவுள் நம்பிக்கை இருப்பவனோ இல்லாதவனோ எவனுக்கு இதனைக் கண்டு மனம் பதறுகிறதோ அவனை நான் வணங்குகிறேன்.

February 15, 2007 8:57 AM  
Blogger சிவபாலன் said...

Hari,

கடவுள் இரக்கமுள்ளவன் என்றால் ( அப்படி சொல்லியும் கடவுள் கான்சப்ட் வளர்க்கப்படுகிறது) ஏன் இந்த பட்டினி சாவுகளை தடுக்கவில்லை.

வருகைக்கு நன்றி

February 15, 2007 8:58 AM  
Blogger சிவபாலன் said...

குமரன் சார்

இந்த படங்களை இமெயிலில் பார்த்தவுடன் மன்சு மிகுந்த வேதனைப்பட்டது.

அதுவும் அந்த கடைசி படத்தில்.. அந்த குழந்தை இறந்தவுடன் அக்குழந்தை சாப்பிட காத்திருக்கும் கழுகு.. இதை போட்டோ எடுத்தவரும் மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்டதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

என்னை மிகவும் பாத்தித்தது.

மேலும் அந்த இமெயிலில் இது போன்று ஏற்படாமல் நம்மை காத்து வருவது கடவுள்தான். அதனால் கடவுள்
பிராத்திப்போம்.. மேலும் இந்த இமெயிலை தொடர் சங்கிலிபோல் அனுப்பி கடவுள் கான்சப்ட் கொண்டு செல்லப் படவேண்டும் என்பது போல் அதில் குறிபிடப்பட்டுள்ளது.

அது எனக்கு மேலும் மன் வலியை அதிகப்படுத்தியது. அதன் விளைவே இப்பதிவு!

நான் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் கெட்டவர்கள் என சொல்லவில்லை. அவர்களும் நம் இனமான மனிதன இனம் என்றே பார்க்கிறேன்.

மொத்தத்தில் கடவுளை மற! மனிதனை நினை!! என்பதே என் கருத்து.

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

February 15, 2007 9:26 AM  
Anonymous Anonymous said...

//ஆபிரிக்காவுக்கும் நம்ம சாமிகளை அனுப்பி வைக்கனும் ! //
முடிந்தால் அனுப்பி வையுங்கள், உங்களுக்கு புண்ணியமாப்போம்.

//கடவுளை மற! மனிதனை நினை!!//
ஏப்பா உங்களுக்கெல்லாம் கடவுள், எம்மளவு பெரீய்ய்ய்ய மனசக்கொடுத்திருக்குறார்.
அவருக்கே ஏப்ப்பா ஓரவஞ்சன செய்யிரீங்க.
மனுசனையும் நினையுங்க. ஒரு ஓரமா கடவுளையும் வச்சுக்குங்களேன்,

February 15, 2007 10:29 AM  
Blogger மரைக்காயர் said...

As usually, an orphan, a little girl, stood at the street corner begging for food, money or whatever she could get. Now, this girl was wearing very tattered clothes, was dirty and quite disheveled. A well-to-do you man passed that corner without giving the girl a second look. But, when he returned to his expensive home, his happy and comfortable family, and his well-laden dinner table, his thoughts returned to the young orphan. He became very angry with God for allowing such conditions to exist. He reproached God, saying, "How can you let this happen? Why don't you do something to help this girl???" Then he heard God in the depths of his being responding by saying "I did. I created you."

February 15, 2007 8:29 PM  
Blogger கருப்பு said...

//கடவுள் என்று ஒன்று இருப்பதாகவும் அது நம்மை காப்பதாகவும் சொல்லி மக்களை ஏமாற்றி, வெறும் பூஜை அறை/ ஜப அறை / தொழுகை அறையிலேயே மனித நேயத்தை முடித்துக் கொள்ளும் அளவுக்கு மனிதன் மாற்றப் பட்டிருக்கிறான். (நான் பொதுவான சமுதாயத்தை சாட்டுகிறேன்).
//

அதே நிலையில்தான் நானும் சிபா.

கண்களில் நீர் வரவழைக்கும் காட்சிகள். கொடுமை.

February 15, 2007 9:26 PM  
Blogger ராவணன் said...

நம்ம பகவான் ஆப்ரிக்காவில் ஒரு அவதாரம்கூட ஏன் எடுக்கவில்லை?

கேள்விகள் கேட்கும்போது மதங்களின்
மடமைத்தனம் புரியும்.

கடவுள் உன்னைப் படைத்தானே,நீ போய் உதவவேண்டியதுதானே என்று
கேட்பவர்களுக்கு,இவர்களுக்கு உதவும்படி ஒருவரையும் ஏன் கடவுள் படைக்கவில்லை?
கடவுள்தான் அனைத்தையும் படைத்தானென்றால் அவனைப் போன்ற குரூரவாதி யாரும் இல்லை.

February 15, 2007 9:30 PM  
Blogger thiru said...

சிவா இந்த படங்களில் சிலவற்றை 4 வருடங்களுக்கு முன்னர் பார்த்தேன். 2005ல் முதல் முறை எனது ஆப்பிரிக்க பயணம் சாம்பியா நாட்டில். நான் தங்கியிருந்தது ஒரு ஏழையின் வீட்டில். அனைவருக்கும் ஒரு வேளை கூட உணவில்லாத நிலையும், பல் துலக்க கூட தண்ணி கிடைக்காமலும் இருந்த அந்த சில நாட்கள் இன்னும் மனதில் இருக்கிறது. அனைத்து வளங்களும் கொழிக்கிற ஆப்பிரிக்கா கண்டத்தின் வளங்களான விலையுர்ந்த கற்களும், தாதுபொருட்களும், விவசாய பொருட்களும் ஐரோப்பிய, அமெரிக்க நிறுவனங்களால் கொள்ளையடிக்கப்படுகிறது. காங்கோ நாட்டின் குழுச்சண்டைகளுக்கு பணம் கொடுத்து அந்த சண்டைகளுக்கிடையில் தாதுபொருளை களவாடுவதும் பன்னாட்டு நிறுவனங்கள். வளங்களை பகிர்ந்துகொள்ளாதவரை வறுமை அகலாது.

பதிவிற்கு நன்றி!

February 16, 2007 11:31 AM  
Blogger BadNewsIndia said...

கடவுள் இல்லையோ என்று தோன்றும் தருணங்கள் தரும் பதிவு இது.

அந்த கோலத்தில் இருக்கும் குழந்தையையும் அரவணைத்து பாதுகாக்கிறாளே, அந்த தாயில் இருப்பதும் கடவுள் தான்.

பதிவின் கடைசி புகைப்படத்தை எடுத்து விருது வாங்கிய, புகைப்படக்காரர் kevin மூன்று மாதம் கழித்து தற்கொலை செய்து கொண்டாராம். அடுத்தவருக்காக வேதனை படும் இதயங்கள் அனைத்திலும் கூட இறைவன் இருக்கிறான்.

இதைக் கண்டு நாம் ஒன்றும் செய்யாமல், அடுத்த பதிவை பார்க்கப் போய்விடுகிறோமே, நம்மில் தெய்வம் இல்லை!!!!!!!

February 16, 2007 8:33 PM  
Blogger BadNewsIndia said...

--மதங்கள் மனிதனுக்கு கடவுள் நம்பிக்கையை ஏற்றி (பொதுவாக பய உணர்வை பயன்படுத்தி இந்த கடவுள் கான்சப்ட் ஏற்றப்படுகிறது) மனித நேயத்தை குறைத்து வருகிறது. --

இது எப்படி என்று புரியவில்லை எனக்கு.
மனித நேயம் இல்லை என்றால், சுனாமி, குஜராத் பூகம்பம் என்று வரும்போது அனைவரும் நேசக் கரம் நீட்ட மாட்டார்களே?

மனித நேயம் அன்றாட வாழ்வில் குறைந்து கொண்டு வருவது உண்மை. ஆனால், இறை நம்பிக்கைக்கும் அதர்க்கும் சம்பந்தம் உண்டா? எப்படி?

February 16, 2007 8:46 PM  
Blogger நெல்லை சிவா said...

மனசுக்கே கஷ்டமாக இருக்கிறது, உலகளாவிய மனிதம் வேண்டும், இதில் கடவுளுக்கு அடுத்த கட்டம்தான்!

February 16, 2007 9:54 PM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv