தாலியே தேவையில்லை நீ தான் என் பொஞ்சாதி
இந்த பாடல் தாமிரபரணி என்ற படத்திலிருந்து. இந்த பாடல் இனிமையாக இருக்கிறது. படமாக்கிய விதமும் நன்றாக உள்ளது. யுவனின் இசை தாளம் போட வைக்கிறது. நேரம் கிடைக்கும் போது பொறுமையாக இரசித்து கேளுங்கள்.
பாடல் வரிகளை - படிக்க " இங்கே செல்லுங்க......"
பாடலின் வீடியோ - பார்க்க " இங்கே செல்லுங்க......"
பாடலின் ஆடியோ - கேட்க " இங்கே செல்லுங்க......"
திரைப்படம் : தாமிரபரணி
இசை : யுவன் சங்கர் ராஜா
இயக்கம் : Hari
பாடியவர்கள் : பவத்தாரிணி, Hariharan
நடிப்பு : விசால்,பானு
இயற்றியவர் : பா.விஜய்
வருடம்: 2006
நன்றி : www.pkp.in
12 Comments:
திரு. ப்ரியமுடன் கே.பி. அவர்களுக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்துக்கொள்கிறேன்.
என் நண்பர் ஒருவர் இந்தப் பாடலைக் கேட்டிருந்தார். தேடிப்பிடித்து 'கேட்டதில் பிடித்தது' வலைப்பதிவில் இடலாம் என்றிருந்தேன். என் வேலையை எளிதாக்கிவிட்டீர்கள் நீங்கள் இருவரும். நண்பருக்கு மின்னஞ்சலில் இந்த இடுகையின் சுட்டியை அனுப்பிவிட்டேன்.
குமரன் சார்,
மிக்க நன்றி!
தூத்துக்குடி படத்தில் "கருவாப்பையா" பாடல் நன்றாக உள்ளது. உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது கேட்டுப் பாருங்க..
வருகைக்கு மிக்க நன்றி!
சிவபாலன்/குமரன்,
இருவருக்கும் என் மனமார்ந்த நன்றி. சமீபத்தில் வந்த பாடல்களில் யுவன் ஷங்கரின் இசையில் வந்த பாடல்கள் அருமை. "கருவாப்பையா" - எனக்கு பிடித்த இன்னொரு பாடல்.
நன்றி,
குமரேஷ்
வாங்க திரு. மரமண்டை. (Wood Head)
(ஏன் தான் இப்படி எல்லாம் பெயர் வச்சுக்கிறாங்களோ? வெட்டிப்பயல்ன்னு ஒருத்தர் வந்தார். இவர் மரமண்டையா?) :-))
நல்ல பாடல் சிபா...
படமும் ஓரளவு பரவாயில்லை...
குமரன்,
//(ஏன் தான் இப்படி எல்லாம் பெயர் வச்சுக்கிறாங்களோ? வெட்டிப்பயல்ன்னு ஒருத்தர் வந்தார். //
இன்னும் இருக்கிறார் :-))
கொஞ்சம் லீவ் போட்டாலும் போட்டு தாக்கறாங்களே!!! ;)
This comment has been removed by the author.
நல்ல பாட்டு எனக்கும் பிடிக்கும்.
பெண்
தாலியே தேவ இல்ல \\நீ \\தான் ஒன் பொஞ்சாதி
தாம்பூலம் தேவ இல்ல \\நீ\\ தான் என் சரிபாதி
பெண்
தாலியே தேவ இல்ல நாந்தான் ஒன் பொஞ்சாதி
தாம்பூலம் தேவ இல்ல நாந்தான் ஒன் சரிபாதி
என்று வர வேணும்.
குமரேஷ் வாங்க!
வருகைக்கு நன்றி!!
குமரன் சார்
//ஏன் தான் இப்படி எல்லாம் பெயர் வச்சுக்கிறாங்களோ //
:)
பாலாஜி,
வருகைக்கு நன்றி
சிநேகிதி,
பிடித்த பாடலா! நல்லது!
வருகைக்கு நன்றி!!
Post a Comment
<< Home