Wednesday, February 21, 2007

இடபங்கீடும் சர்வே நிறுவனங்களும் - பகுதி - 2

பகுதி - 1 - படிக்க " இங்கே செல்லுங்க......"

அதன் தொடர்ச்சி..


என்ன சோப்பு உபயோகிக்கிறீர்கள் என்று 100 பேரிடம் கேட்டு, இந்தியாவில் முப்பது சதவிகிதம் பேர் எங்கள் சோப்பைத்தான் பயன்படுத்துகிறார்கள் என்று ஒரு நிறுவனம் சொல்லலாம். அதில் ஓரளவுக்காவது உண்மை இருக்கக்கூடும். ஆனால், ஒன்றேகால் லட்சம் வீடுகளில் ஒரு கணக்கெடுப்பு நடத்தி, அதன் அடிப்படையில் இந்தியாவில் எந்தெந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் எவ்வளவு இருக்கிறார்கள் என்று எப்படி சொல்ல முடியும் என்பதுதான் சமூக நீதி அமைச்சகத்தின் கேள்வி.


இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு விதமானது. உதாரணமாக, வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் கிறிஸ்தவர்கள் 90 சதவிகிதம் பேர் இருக்கிறார்கள். மிசோரத்தில் 87 சதவிகிதம் மக்கள் கிறிஸ்தவர்கள். இந்த இடங்களில் மாதிரி கணக்கெடுப்பு நடத்திவிட்டு, இந்தியா கிறிஸ்தவர்கள் நிறைந்த நாடு. மற்றவர்கள் சொற்பமாக இருக்கிறார்கள் என்று ஒரு முடிவை வெளியிட்டால், அது எவ்வளவு பெரிய அபத்தம்?!


எத்தனையோ சாதிகள், அதில் உட்பிரிவுகள் என இந்தியா முழுக்க குழப்பங்கள் உண்டு. ஒரு சாதி ஒரு இடத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் பிரிவில் இருக்கும். இன்னொரு இடத்தில் பிற்படுத்தப்பட்ட இனமாக அடையாளம் காணப்படும். உதாரணமாக, பரவர், பாணர் இனங்கள் கன்னியாகுமரி மாவட்டத்திலும் நெல்லை மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்திலும் தாழ்த்தப்பட்டோர் பிரிவில் வருகிறது. தமிழகத்தின் ஏனைய இடங்களில் இவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட இனமாகக் கருதப்படுகிறார்கள். இப்படி இருக்கும் வேறுபாடுகளை எப்படி கணித்தார்கள் என்பது இன்னொரு கேள்வி.


இதே குழப்படி வேலையை இந்த நிறுவனம் தொடர்ந்து செய்து வருகிறது என்பதுதான் வேதனை. 1999-2000மாவது ஆண்டுக்கான கணக்கெடுப்பின் முடிவில், இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை 36 சதவிகிதம்தான். அதிலும் முஸ்லிம்களை கழித்துவிட்டால் வெறும் 32 சதவிகிதம்தான் என்று இந்த நிறுவனம் அறிவித்தது.

98-ம் ஆண்டு தேசிய குடும்ப நல புள்ளிவிவரம் எடுக்கப்பட்டது. இதுவும் மத்திய அரசு நிறுவனம் ஒன்றின் கணக்கெடுப்புதான். இந்தியாவில் முஸ்லிம்கள் தவிர இதர பிற்படுத்தப்பட்டவர்கள் 29.8 சதவிகிதம்தான் இருக்கிறார்கள் என அறிவித்தது அந்த புள்ளிவிவரம்.

மத்திய அரசின் இரண்டு வெவ்வேறு நிறுவனங்கள் முரண்பட்ட முடிவுகளை வெளியிடும்போது எது சரி? எது தவறு? இரண்டுமே தவறா? என்ற கேள்விகள் எழக்கூடும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அப்படி யாரும் கேட்கவில்லை.

7 Comments:

Blogger மங்கை said...

1930 க்கு பின் OBC பற்றிய கணக்கெடுப்பே நடக்கவில்லை என்று படித்த நியாபகம்..Justice Arijit Pasayat and Justice L S Panta இவர்கள் அடங்கிய பென்ச் இதற்கு விளக்கம் கேட்டிருக்காங்க...

உருப்படியான புள்ளி விவரங்கள் இல்லாமல் இட ஒதுக்கீட்டு கொள்கையை அறிவித்ததற்கு இந்த பென்ச் கொடுத்த கமென்ட்

''You play the game first without the rule in place''

(நான் தான் first aaa...:-))

February 21, 2007 10:35 AM  
Blogger குழலி / Kuzhali said...

கட்டுரையை இட்டமைக்கு நன்றி சிவபாலன், தேசிய மாதிரி கணக்கெடுப்பு விடும் டுபாக்கூர் புள்ளிவிபரங்களுக்கு அளவேயில்லாமல் போகின்றது, இதற்கெல்லாம் ஒரே வழி சாதி ரீதியான முழுமையான மக்கள் தொகை கணக்கெடுப்புதான் சரியான விபரங்களை தரமுடியும்...

இது பற்றி பாமரன் எழுதிய கட்டுரை ... மிகுந்த நகைச்சுவையோடும் சுவையாகவும் எழுதியிருப்பார்

http://kuzhali.blogspot.com/2006/12/blog-post_20.html

February 21, 2007 11:10 AM  
Blogger சிவபாலன் said...

மங்கை,

நீங்கள் சொல்வது சரியே!

இன்றைய நிலையில் எத்தனை பிற்படுத்தப்பட்டோர்/தாழ்த்தப்பட்டோர் இருக்கிறார்கள் என உண்மை நிலவரத்தை தெரிவிக்காமல் ஏதோ 1.5 லட்சம் மக்களிடம் சர்வே நடத்திவிட்டு முடிவுக்கு வருவது அபத்தம் மற்றும் ஆபத்தானது.

இது முழு அளவில் சர்வே நடத்துவது ஒன்றும் முடியாத விசயமே இல்லை.

ஆனால் இதையே காரணம் காட்டி இடஒதுக்கீட்டை தள்ளிப் போடும் சதிகளும் நடக்கும்.

எல்லாவற்றிக்கும் ஒரு தெளிவான செயல் திட்டத்தை உருவாக்க மத்திய அரசு முழு அளவில் துரிதமாக செயல்படவேண்டும்.

February 21, 2007 2:36 PM  
Blogger சிவபாலன் said...

குழலி

உங்கள் கருத்தை வழிமொழிகிறேன்.

அருமையான பதிவின் சுட்டிக்கு நன்றி!

February 21, 2007 2:39 PM  
Blogger வெண்பா said...

ஒரு ஊரில் 100 பெண்களில் 10 பேர் கர்ப்பிணியாய் இருந்தால், ஓவ்வொரு பெண்ணும் 1 மாதம் கர்ப்பமாய் இருப்பதாகச் சொல்வதுதான் புள்ளி விவரம்.

February 21, 2007 3:40 PM  
Blogger சிவபாலன் said...

Veebee,


உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

February 23, 2007 2:26 PM  
Blogger thiru said...

சிவபாலன்,

ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சமூகநீதி தான் இடப்பங்கீடு. இடப்பங்கீடை அமல்படுத்துவதை தடுக்க ஆதிக்கச்சாதி 'சாணக்கியத்தனம்' சட்டத்தின் சந்துபொந்துகள், தந்திரமான வாதங்கள் என முன் வைப்பதற்கு இப்படியான புள்ளிவிபரங்கள் அவசியமாகிறது. இவையெல்லாம் காலங்காலமாக நடந்துவருகிற தந்திரங்கள் தான்.

இந்தியாவை பொறுத்தவரை சாதி ரீதியான கணக்கெடுப்பு அவசியம். சமூகநீதியை வழங்குவதற்காக, யார் எந்த சாதி என புறந்தள்ளுவதற்காக அல்ல. எந்த சாதியை முன் வைத்து ஒடுக்கப்பட்டார்களோ, அந்த சாதியை காரணியாக வைத்து தான் சமூகநீதியை வழங்க இயலும்.

February 26, 2007 1:58 PM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv