ஆத்மாவின் ராகமொன்று அழகுறக் கட்டியது ஆத்மாவின் ராகத்தில் அவளுக்கென ஒரு மஹால் ஆத்மாவின் ராகத்தை அறையில் வைத்துப் பூட்டியும் ஆத்மாவின் ராகம் சன்னல் வழியே தரிசித்து நின்றது ஆத்மாவின் ராகம் உடல் விட்டுப் பிரியும் வரை! ஆத்மாவின் ராகம் அருகில் சென்று அடங்கியது. ஆத்மாவின் ராகங்கள் ஒன்றாக இணைந்தன!
மூன்றாம் படம் காட்டும் சோகம் இதுதான்! நன்றாகக் கவனித்தால் சோகம் விளங்கும்!
// SK said... மூன்றாம் படம் காட்டும் சோகம் இதுதான்! நன்றாகக் கவனித்தால் சோகம் விளங்கும்! // பன்னிருகை வேலைனை பாடுபவர் பாரத பண்பாட்டு சின்னமதை பாடுவாரா ? எனக்கேட்க பண்புகளைப் நாடுவேன், நற்பண்புகளை பாடுவெனென பண்படைத்த சங்கரா, உன் புகழ்போற்றி பரிசென்ன கொடுக்கலாம் என்று நோக்க பரிசெல்லாம் வேண்டாம் பரிகாசம் செய்யாமல் பாராட்டினால் போதும் என்ற பார்வையின் பரிவைப் பார்த்துப் பணிந்துபோனேன் நான் !
சொந்த வீடு கட்டச் செய்து தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அன்பு மருத்துவரே, நான் எவ்வீட்டில் இருந்தாலும் உங்கள் இல்லம் தேடி வரவைக்கும் உங்கள் தமிழ் தமிழ்மணத்திற்கு பெரும் வரம்...
கோடை முடியறதுக்குள்ள எவ்வளவு மிட்யுமோ அவ்வளவு சிக்காகோவை பார்த்துவிட முடிவு செய்தொ ஒவ்வொரு வாரமும் ஒவொரு இடமாய்ப் போகிறோம். உங்க வீட்டுக்கு நிச்சயம் ஒரு ப்ளான் இருக்கு. என் மனைவிகூட அப்பப்ப நினைவு படுத்துவார், உங்க வீட்டுக்கு வருவது பற்றி.
33 Comments:
திரு சிவபாலன், இலவசமாக ஆக்ராவிற்கு கூட்டிசென்று விட்டீர்கள்.
எஸ்கே வந்து என்ன கவிதை எழுதுவார் என்று ஆவலாக இருக்கிறது.
அழகனைப் பாடுபவர், கலை
அழகையும் பாடுவாரா ?
ஆத்திகம் போற்றுபவர், இந்திய
ஆஸ்தியையும் போற்றுவாரா ?
ஆறுமுகனை நினைப்பவர், ஆக்ரா
ஆற்றங்கரையையும் நினைப்பாரா ?
:))))
கோவி.கண்ணன் சார்,
அருமையான கவிதை வரிகள். நன்றி.
SK வருவார் என நினைக்கிறேன்.
சார், இந்த 3ம் படத்தை பார்த்தீர்களா...
//Sivabalan said...
சார், இந்த 3ம் படத்தை பார்த்தீர்களா...//
திரு சிவபாலன்,
அது செங்கோட்டைதானே, நான் அங்கு சென்றதில்லை
கோவி.கண்ணன் சார்,
ஆம்...
சிவபாலன்,
இந்த படங்களை நீங்கள் எடுத்ததா ?
இல்லை சார், என் நன்பனின் உபயம்...
தாஜ்மகால் பார்க்கவேண்டும் எனும் என் ஆசையை இன்னும் கிளப்பைவிட்டீங்க..
அடுத்தமுறை இந்தியா போயி...கட்டாயம் பாக்கணும்.
சிறில்,
கட்டாயம் பார்க்க வேண்டிய இடம்...
அடுத்த முறை பார்த்துவிடுங்கள்....
ஆமா, எப்ப எங்க வீட்டுக்கு வருகிறீர்கள்?
அழகனையும் பாடுவேன்
அழகையும் ஆராதிப்பேன்!
ஆன்மீகம் பாடுகின்ற வேளையினில்
ஆத்மாவின் ராகத்தயும் பாடிடுவேன்!
ஆன்மாவில் பிறப்பதுதானே ஆன்மீகம்!
ஆத்மாவின் குரல் சொல்வதும் இதுவன்றோ!
ஆத்மாவின் ராகமொன்று அழகுறக் கட்டியது
ஆத்மாவின் ராகத்தில் அவளுக்கென ஒரு மஹால்
ஆத்மாவின் ராகத்தை அறையில் வைத்துப் பூட்டியும்
ஆத்மாவின் ராகம் சன்னல் வழியே தரிசித்து நின்றது
ஆத்மாவின் ராகம் உடல் விட்டுப் பிரியும் வரை!
ஆத்மாவின் ராகம் அருகில் சென்று அடங்கியது.
ஆத்மாவின் ராகங்கள் ஒன்றாக இணைந்தன!
மூன்றாம் படம் காட்டும் சோகம் இதுதான்!
நன்றாகக் கவனித்தால் சோகம் விளங்கும்!
நன்றி சிவபாலன்!
SK அய்யா,
மிக அருமை...
3ம் படத்தின் உண்மையை மிக அருமையாக கவிதை வரிகளில் கலக்கிவிட்டீர்கள்....
மிக்க நன்றி...
//
SK said...
மூன்றாம் படம் காட்டும் சோகம் இதுதான்!
நன்றாகக் கவனித்தால் சோகம் விளங்கும்!
//
பன்னிருகை வேலைனை பாடுபவர் பாரத
பண்பாட்டு சின்னமதை பாடுவாரா ? எனக்கேட்க
பண்புகளைப் நாடுவேன், நற்பண்புகளை பாடுவெனென
பண்படைத்த சங்கரா, உன் புகழ்போற்றி
பரிசென்ன கொடுக்கலாம் என்று நோக்க
பரிசெல்லாம் வேண்டாம் பரிகாசம் செய்யாமல்
பாராட்டினால் போதும் என்ற பார்வையின்
பரிவைப் பார்த்துப் பணிந்துபோனேன் நான் !
:))))))
பணிவும் ஓரழகு -- உம்
துணிவும் ஓரழகு! -- பார்வைக்
கனிவும் ஓரழகு! -- அதில்
நனையும் உம் சொல்லழகு!--என
இனியும் என்ன சொல்ல- நும்
கனித் தமிழும் ஓரழகே!-- பரிசு
இனி வேண்டாம்! -கோவியாரின்
பரிவொன்றே பேரழகு!
நன்றி!
உண்மை பாராட்டுக்கு ஒரு 'சீர்' ஆட்டமா'
வெண்ணைப் போல் உருகுது இங்கே
கண்ணனின் நெஞ்சம் :)))
"நல்லன சொல்வதில் நடுக்கம் இல்லை!"
:))
போதும் என்று நிறுத்துகிறேன்... சிவபாலன் நம்ம லாவனியைப் பார்த்து பயந்துவிடப்போகிறார். :))))
இரு பெரும் தலைகள் இப் பதிவில் உலா வந்தது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது....
:)கோவியாரே!
சொன்னது போலவே சிவபாலன் வந்து நம் தலைகளை உருட்ட ஆரம்பித்து விட்டார்!
நிறுதுத்தல் சம்மதமே!!
:)
ஆறு தலை கொண்டவர்கள் மத்தியில் உரையாடுவது, புரிந்துணர்வில்
மாறுதலையும், ஆறுதலையும் தருகிறது, வேறு தலைகளும் உடன் வந்தால்
வே(ற்)றுதலைகளை அகற்றலாம்.
எங்கே சிபியாரை இன்னும் காணும்?
நம்ம பொன்ஸ் மாதிரி, தேன்கூடு போட்டி கேன்வாஸிங்ல பிஸியா இருக்காரா?
:))
Siva,
Seems like SK and KOVI Aiya(s) both are taking care of you, right now ;-))
I am still here watching, though i cant use the tamil script.
Thanks for the picture.
Theka,
Thanks a lot for your support and appreciation.
Thanks again...
நல்ல படங்கள் சிவபாலன்.
என்ன வேலை அதிகமா? மற்றவர் பதிவுகளில் உங்கள் பின்னூட்டங்கள் அதிகமாகத் தென்படுவதில்லையே?!
வாடகை வீட்டில் இருந்தவரை ஒழுங்காக வந்துகொண்டுதான் இருந்தார்!
சொந்த வீடு கட்டியபின் தான் இப்படி!
கேட்டால், வீட்டிலேயே வேலை சரிய்ய்யா இருக்கென்கிறார்!
:)))))
குமரன் சார்,
வ்ருகைக்கு நன்றி.
கொஞ்சம் வேலை அதிகமாகிவிட்டது.
இருப்பினும் உண்மை என்னவென்றால் BLOGகினால் வீட்டில் கொஞ்சம் பிரச்சனை... அதனால் ....
சார், எப்படி நீங்கள் சரியாக இந்த கேள்வியை கேட்டீர்கள்.. ஆச்சர்யமும் அதிர்ச்சியும்...
பாம்பின் கால் பாம்பறியும் :-)
அதென்ன திடீர்ன்னு சார்ன்னு கூப்புடத் தொடங்கிட்டீங்க?
சொந்த வீடு கட்டச் செய்து தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அன்பு மருத்துவரே, நான் எவ்வீட்டில் இருந்தாலும் உங்கள் இல்லம் தேடி வரவைக்கும் உங்கள் தமிழ் தமிழ்மணத்திற்கு பெரும் வரம்...
குமரன் சார்,
திரு.நடராஜன் Effect...
//இருப்பினும் உண்மை என்னவென்றால் BLOGகினால்
வீட்டில் கொஞ்சம் பிரச்சனை... அதனால் ...//.
நம்ம தங்கமணி இந்தியாவுக்கு
டிக்கட் போடுங்குது.
இங்கயும் அதே பிரச்சினை.
பெருசு அய்யா
வருகைக்கு மிக்க நன்றி.
//இங்கயும் அதே பிரச்சினை. //
அதை ஏன் கேட்கிறீங்க... வீட்டில் இப்பொழுது Office Mail check பன்னக்கூட தடா...
வடிவேல் styleலில் "முடியல"
வடிவேல் ஸ்டைல் "முடியல" சரி.
அதே ஸ்டைல்லே இந்த செவுத்துக்கும்
அந்த செவுத்துக்கும் போய் வருவது உண்டா
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....
எங்க பொன்னு தயவில் தற்காத்துக்கொள்கிறேன்...
எனினும் நிலைமை மோசமாவதை தடுக்கவே Blog விஜயம் குறைக்கப் பட்டுள்ளது...
//ஆமா, எப்ப எங்க வீட்டுக்கு வருகிறீர்கள்?//
கோடை முடியறதுக்குள்ள எவ்வளவு மிட்யுமோ அவ்வளவு சிக்காகோவை பார்த்துவிட முடிவு செய்தொ ஒவ்வொரு வாரமும் ஒவொரு இடமாய்ப் போகிறோம். உங்க வீட்டுக்கு நிச்சயம் ஒரு ப்ளான் இருக்கு. என் மனைவிகூட அப்பப்ப நினைவு படுத்துவார், உங்க வீட்டுக்கு வருவது பற்றி.
இந்தவாரமும் கொஞ்சம் பிசி.
கட்டாயம் ஒரு நாள் சந்திக்கலாம்.
சிறில்,
எங்க வீட்டிலேயும் விசாரித்தார்கள்..
எங்க குழந்தை வேற கேட்டுட்டே இருந்தா..
எப்ப நேரம் கிடைக்கிதோ அப்ப கண்டிப்பாக வாங்க..
Post a Comment
<< Home