Thursday, July 13, 2006

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்

Free Image Hosting at www.ImageShack.us

இசை ஆல்பம் : இராஜாவின் இரமண மாலை.

இசை : இராகதேவன் இளையராஜா

பாடல் இயற்றியது : இராகதேவன் இளையராஜா

பாடலைப் பாடியது : இராகதேவன் இளையராஜா

"பாடல் இதோ இங்கே..."

------------------------------------------------------------------
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே

பிண்டம் எனும் எலும்போடு சதை நரம்பு
உதிரமும் அடங்கிய உடம்பு எனும்

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே

அம்மையும் அப்பனும் தந்ததா?
இல்லை ஆதியின் வல்வினை சூழ்ந்ததா?
இம்மை நான் அறியாததா?

சிறு பொம்மையின் நிலையினில்
உண்மை உணர்ந்திட நான்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே

பிண்டம் எனும் ....

அத்தனை செல்வமும் உன்னிடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்...

வெறும் பாத்திரம் உள்ளது என் இடத்தில்
அதன் சூத்திரமோ அது உன்னிடத்தில்...

ஒரு முறையா இருமுறையா
பல முறை பலப் பிறப்பெடுக்கவைததாய்...

புது வினையா பழைய வினையா
கணம் கணம் தினம் என்னை துதிக்கவைத்தாய்..

பொருளுக்கு அலைந்திடம்
பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே...

உன் அருள் அருள் அருளென்று
அலைகின்ற மனமிங்கு பிதற்றுதே...

அருள் நிறையும் அருனையே
இரமணன் எனும் கருணையே...

உன் திருக்கரம் எனை அரவணைத்து
உனது அருள் பெற...

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே

நான் ஒரு பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே

பிண்டம் எனும் ....

----------------------------------------------------------------------

பி.கு: சுவாமி ரமண மகரிஷின் கலந்துரையாடல்களையும் அவருடைய புகைப்படங்களையும் காண விரும்புவோர் இந்த பக்கத்தில் சென்று பெற்றுக் கொள்ளலாம்.... இங்கே......

10 Comments:

Blogger கோவி.கண்ணன் said...

திரு சிவபாலன், ரமண மகிரிஷி, 15 வயதில் வீட்டை விட்டு அண்ணாமலையாரின் சித்த அழைப்பின் பேரில் திருவண்ணாமலைக்கு வந்து அங்கேயே இருந்துவிட்டாராம்

July 13, 2006 10:51 AM  
Blogger Unknown said...

sivabalan,

I understand this is an article on bhagavan ramanar.Cannot read it from my macintosh.will read it once I come back from home.

anbudan
selvan

July 13, 2006 11:06 AM  
Blogger Thekkikattan|தெகா said...

சிவா, இங்கே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியில், மகரிஷி எந்த சூழலில் அப்படி திருவண்ணாமலைக்கு இழுக்கப் பட்டார் என்ற உண்மையும் கூறப்பட்டுள்ளது.

அருமையான சுட்டி, நிறையெ பக்கங்கள் கீழிறக்கம் செய்துகொள்ள. நன்றி சிவா, இந்த பதிவிற்கு!

July 13, 2006 11:09 AM  
Blogger Sivabalan said...

கோவி.கண்ணன் அய்யா

இரமண மகிரிஷி பற்றிய விசயத்தை பகிர்ந்துகொண்டதற்கு மிக்க நன்றி.

July 13, 2006 12:27 PM  
Blogger Sivabalan said...

Selvan Sir,

Take your time to read this.

You are most welcome sir.

July 13, 2006 12:28 PM  
Blogger நாகை சிவா said...

ரமண மகரிஷி பற்றி அவ்வளவாக படித்தது இல்லை. ஆனால் அவரின் புகைப்படத்தை காண மிகவும் பிடிக்கும். அமைதியான முகம், பார்த்துக் கொண்டே இருக்க தோன்றும் முகம்.

July 16, 2006 4:31 AM  
Blogger Sivabalan said...

தெகா

வருகைக்கு மிக்க நன்றி.

பாடலைக் கேட்டீர்களா?

July 16, 2006 7:44 AM  
Blogger Sivabalan said...

நாகை சிவா

வருகைக்கு மிக்க நன்றி.

முடிந்தால் அந்த வலைதளத்தை பாருங்கள்..

July 16, 2006 7:45 AM  
Blogger Chandravathanaa said...

பாடலைக் கேட்டு ரசித்தேன்.
தந்ததற்கு நன்றி

July 22, 2006 4:13 PM  
Blogger Sivabalan said...

சந்திரவதனா,

பாடலை இரசித்தற்கு மிக்க நன்றி.

வருகைக்கு நன்றி.

August 16, 2006 1:26 PM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv