Wednesday, July 19, 2006

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே.....

Free Image Hosting at www.ImageShack.us


இந்த முக்கியமான விசயத்தைப் பற்றி யாரேனும் பதிவிட்டார்களா என தெரியவில்லை... அவ்வாறு இருந்தால் அப்பதிவுக்கு இதுவும் சேர்ப்பு...

கி.பி. இரண்டாம் நூற்றான்டு ஒட்டிய தமிழ்-பிராமி எழுத்துக்கள் பொறித்த மண் பான்டம் ஒன்று தாய்லாந்தில் தொல்பொருள் ஆய்வாளர்கள் குழு திரு. Dr. Bérénice Bellina of the Centre National de la Recherche Scientifique, France தலைமையில் சமீப்பத்தில்
கண்டெடுத்துள்ளது.

இந்த ஆய்வாளர்கள் குழு கேட்டுக்கொண்டதின் பேரில் திரு. இரவதம் மகாதேவன் ஆய்வு செய்து அது கி.பி. இரண்டாம் நூற்றண்டை சேர்ந்த தமிழ்-பிராமி எழுத்துக்கள் என உறுதி செய்துள்ளார். அதில் பொறிக்கப்பட்ட எழுத்துக்கள் " து ற ஒ ". இதன் அர்ததம் துறவி என பொருள் கொள்ளப்படுகிற்து.

மேலும் விவரங்கள் அறிய " இங்கே செல்லவும்...."



நன்றி: The Hindu நாள்:16-07-2006.

24 Comments:

Blogger Thekkikattan|தெகா said...

How interesting it is Siva? The title is superb :-))

Thanks for the info.

July 19, 2006 7:40 AM  
Blogger கோவி.கண்ணன் said...

திரு சிவபாலன் இது,
நற்செய்தி ... இது தமிழின் தொன்மையை நிலை நிறுத்தவுதவும்

July 19, 2006 7:47 AM  
Blogger ENNAR said...

நமது நாகரிகம் தாய்லாந்து வரை பரவியுள்ளது நல்ல செய்தி

July 19, 2006 7:57 AM  
Blogger aathirai said...

நல்ல செய்தி. அது கி.மு. அல்ல. கி.பி. என்று இருக்க வேண்டும்

July 19, 2006 8:35 AM  
Blogger குமரன் (Kumaran) said...

அந்த எழுத்துகளில் எழுதியிருந்தது 'அறவோன்' என்ற சொல். அது 'துறவி' என்ற பொருளில் உள்ளது என்று 'செய்தி நெட்' வலைப்பதிவில் நேற்று படித்ததாக நினைவு.

July 19, 2006 8:46 AM  
Blogger Machi said...

குமரன் கூறுவது சரி. செய்தி நெட் வலைப்பதிவில் இச்செய்தி வந்துள்ளது. அதில் தவறாக குறிப்பிட்டுள்ளார்கள், அறவோன் அல்ல துறவோன்.

Only three letters have survived on the pottery fragment. They read tu Ra o... , possibly part of the Tamil word turavon meaning `monk.'

July 19, 2006 12:25 PM  
Blogger VSK said...

இன்று ஆங்கில அகராதியில் ஒரு சொல் தேடிக்கொண்டிருந்தபோது, 'விசயன்' என்ற ஒரு சொல்லைப் போட்டு, அதன் கீழ், இது பாலித்தீவில் வசிக்கும் ஒரு பழங்குடிமக்களின் இன/மொழிப் பெயர் எனப் போட்டிருந்தது.
தமிழர் பண்டைய நாகரீகம் இந்தோனேசியா,பாலித்தீவு வரை பரவியிருந்தது என்பதற்கும் ஆதாரங்கள் அடுக்கடுக்காய் உண்டு.
இந்த அண்மைக் கண்டுபிடிப்பு இதனை மேலும் வலுவாக்குகிறது.

ஒன்றைக் கவனித்தீர்களா, சிவபாலன்.
அங்கெல்லாம் போயும் நம் மொழியில்தான் எழுதிவைத்திருக்கின்றனர்.
நாம்தான் அடையாளத்தைத் தொலைத்துவிட்டு, அடுத்தவரைக் குறை கூறி நாளை வீணாக்கி வருகிறோம்.
இது ஒரு வருந்தத் தக்க நிகழ்வு.

முதலில் அவரவர் வீட்டில் கொண்டுவந்துவிட்டு, பின்னர் நாட்டின் பொது இடங்களை நாடலாமே!
சொல்லவந்தால் பழிதான் மிஞ்சும்.

July 19, 2006 3:28 PM  
Blogger Chandravathanaa said...

சிவபாலன்
தகவலுக்கு நன்றி

July 19, 2006 4:28 PM  
Blogger Sivabalan said...

Theka

Thanks...

How is your trip?

July 19, 2006 9:05 PM  
Blogger Sivabalan said...

கோவி.கண்ணன் அய்யா,

நன்றி

நிச்சயம் இது ஒரு முக்கியமான கண்டுபிடிப்புதான்..

July 19, 2006 9:07 PM  
Blogger Sivabalan said...

என்னார் அய்யா,

நன்றி

அக்காலத்தில் கடல் கடந்திருப்பது நிச்சயம் பெரிய விசயமே

July 19, 2006 9:09 PM  
Blogger Sivabalan said...

ஆதிரை அய்யா,

நன்றி

பிழை திருத்தம் செய்துவிட்டேன்..

சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி.

July 19, 2006 9:11 PM  
Blogger Sivabalan said...

குமரன் சார்.

தகவலுக்கு நன்றி!

July 19, 2006 9:12 PM  
Blogger Sivabalan said...

குறும்பன் அய்யா

நன்றி.

துறவோன் என்பது சரி.

July 19, 2006 9:13 PM  
Blogger Sivabalan said...

SK அய்யா,

தகவலுக்கு நன்றி!

அடையாளம் தொலைத்தது நாம் நமது பரம்பரை பரம்பரையாக சேர்த்து வைத்த செல்வங்களை இழ்ந்தது போல் உள்ளது.

நீங்கள் சொல்லுவது மிகச்சரி. முதலில் நம் வீட்டிலிருந்து துவங்க வேண்டும்..

July 19, 2006 9:17 PM  
Blogger Sivabalan said...

நன்றி, சந்திரவதனா அவர்களே..

July 19, 2006 9:18 PM  
Blogger கோவி.கண்ணன் said...

கல்தோன்றி மண்தோன்றா காலத்தில் வாக்கியத்தை கவனித்தீர்களா ... மண் தோன்றவேண்டுமானால் முதலில் கல்தோன்றவேண்டும் என்பது போல் இருக்கிறதல்லவா . அது உண்மை தான்,, கற்கள் சிதைந்தே மண் ஆகிறது. தமிழ் தோன்றி எழுதுவதற்கு இடமில்லாதபோது கல் தோன்றி தன் முதுகை காட்டியிருக்கவேண்டும் ... அதனால் தான் கல்தோன்றா காலத்தில் தோன்றிய தமிழ் என்று கூறிகிறார்கள். தமிழில் முதல் சொல் அல், இல், உல் அதாவது அது, இது, மற்றது என்ற பொருள்வரும் இதுதான் மூலச் சொற்கள் என்கிறார்கள்

July 19, 2006 9:29 PM  
Blogger Sivabalan said...

கோவி.கண்ணன் அய்யா,

நானும் நீங்கள் சொல்வதை தலைப்பு Typeசெய்யும் போது உணர்ந்தேன்..

நீங்கள் சொல்வது மிகச்சரி.. மண்ணைப் பற்றி Geology Theoryயில் இதை தான் கூறியுள்ளார்கள்..


//தமிழில் முதல் சொல் அல், இல், உல் அதாவது அது, இது, மற்றது என்ற பொருள்வரும் இதுதான் மூலச் சொற்கள் என்கிறார்கள் //


மேலும் தகவலுக்கி நன்றி.

July 19, 2006 9:42 PM  
Blogger வெற்றி said...

சிவபாலன்,
நல்ல செய்தியை இங்கே பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி. தமிழன் என்று சொல்லித் தலைநிமிர்ந்து நிக்க வைக்கும் செய்தி. திரை கடலோடித் திரவியம் தேடி , தமிழ் வளர்த்து, தமிழ்ப்பண்பைப்பேணிக்காத்த எம் முன்னோரின் பணியில் நாம் 0.00001% ஆவது செய்தோமோ என்றால் வேதனைதான் மிஞ்சும். எமது பூட்டன்கள் எங்கெல்லாம் சென்று தமிழ் வளர்த்தார்கள், ஆனால் இன்று தமிழ்மண்ணில் எம் முன்னோர் கட்டிய கோவிலிலே கூட தமிழ் கூடாது என ஒரு கூட்டம் சொல்ல , அதையும் கேட்டுக்கொண்டு தன்மானமில்லாமல் சூடு சுரனை இல்லாமல் தமிழினம். யாரிடம் சொல்லி அழுவது!

July 19, 2006 11:20 PM  
Blogger Sivabalan said...

வெற்றி

உங்கள் ஆதங்கம் முற்றிலும் சரியே..

திறுவையாற்றிலும் தமிழுக்கு இடமில்லை.. என்ன ஒரு அவமானம்...

நெஞ்சு பொருக்குதில்லையே...

வருகைக்கு நன்றி...

July 19, 2006 11:24 PM  
Blogger thamillvaanan said...

வணக்கம் சிவபாலன்,

மிகவும் முக்கியமான தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

அன்புடன்
தமிழ்வாணன்

July 19, 2006 11:32 PM  
Blogger Sivabalan said...

தமிழ்வாணன்,

இது மிக முக்கியமான தகவலே...

வருகைக்கு மிக்க நன்றி...

July 20, 2006 6:37 AM  
Blogger Sivabalan said...

onfoyou,

Thanks for your visit.

August 13, 2006 9:44 AM  
Blogger Sivabalan said...

ddumping

Thanks for your visit.

August 16, 2006 1:23 PM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv