இடபங்கீடும் சர்வே நிறுவனங்களும் - இறுதி பகுதி
"பகுதி - 1" , "பகுதி - 2"
தொடர்ச்சி...
ஆனால், இந்த அறிக்கைகளை வைத்து, பிற்படுத்தப்பட்ட இனங்களைச் சேர்ந்த தலைவர்கள், தங்கள் இனத்தின் மக்கள்தொகையை மிகைப்படுத்திக் காட்டி சலுகைகள் பெற முயற்சிக்கிறார்கள் என்று சில ஆதிக்க சாதி பத்திரிகைகள் தொடர்ந்து எழுதி வருகின்றன.
ஆனால், எவ்வளவு குறைத்துச் சொன்னாலும், அதைவிடக் குறைவாகவே பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு உரிமை கிடைத்து வருகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இழந்துவந்ததில் கொஞ்சத்தைக் கூட இந்த சமூகங்கள் பல மாநிலங்களில் பெறவில்லை என்பதுதான் சுடும் நிஜம்
இந்தியாவில் 1931ல் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்பிறகு இப்படி நடைபெறவில்லை. சமூக நீதிக்காக தமிழகத்தில் எழுந்த போராட்டத்தின் விளைவாக, முதல் பிற்படுத்தப்பட்டோர் கமிஷனை 1953ல் மத்திய அரசு அமைத்தது. அப்போது எம்.பி.யாக இருந்த காகா கலேல்கர் தலைமையில் அமைக்கப்பட்ட இந்த கமிஷன், 1955 மார்ச் 30ல் தன் அறிக்கையை அரசிடம் அளித்தது. இந்தியா முழுக்க 2,399 சாதிகளை பிற்படுத்தப்பட்ட இனங்களாக அடையாளம் காட்டிய கலேல்கர், 1961ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரியாக எடுக்க வேண்டும் என பரிந்துரைத்தார்.
வேலையில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற கலேல்கர், எல்லா கல்வி நிலையங்களிலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 70 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்றார். இது சாதிப் பிளவை அதிகரிக்கும் என கமிஷன் உறுப்பினர்களில் சிலரே முரண்பட்டார்கள். ஆனால், கலேல்கர் தெளிவாகச் சொன்னார்:
சாதியின் பெயரால் அடக்கி வைக்கப்பட்ட ஒருவரை, அந்த சாதிக்கு முன்னுரிமை கொடுப்பதன் மூலம் மட்டுமே மேலே கொண்டுவர முடியும். முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும்
இந்தப் பரிந்துரைகளை அப்போதைய அரசு ஏற்கவில்லை. ஜனதா ஆட்சியில் மண்டல் கமிஷன் அமைக்கப்பட்டது. 80ம் ஆண்டு டிசம்பரில் தன் அறிக்கையை அரசிடம் கொடுத்தார் மண்டல். சரியான புள்ளிவிவரங்கள் கிடைக்காததால் 1931ம் ஆண்டு எடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பை வைத்து, உத்தேச நிர்ணயமாக பிற்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 சதவிகிதம் என அவர் சொன்னார். தீவிரவாதம் தலைதூக்கியிருக்கும் பகுதிகளில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த முடியாதபோது, அரசே இதைத்தான் செய்கிறது.
மண்டலின் பரிந்துரைகளை அமல்படுத்த பத்து ஆண்டுகள் கழித்து வி.பி.சிங் வரவேண்டி இருந்தது. அவரை தமிழக முதல்வர் கருணாநிதி வற்புறுத்த வேண்டியிருந்தது. அப்போதும்கூட, இட ஒதுக்கீடின் உச்சவரம்பு 50 சதவிகிதத்தை தாண்டக்கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் நிபந்தனை இருப்பதால், வெறும் 27 சதவிகித இட ஒதுக்கீடே கிடைத்தது. அதையும் எல்லா இடங்களிலும் அமல்படுத்த இன்னமும் போராட வேண்டிய நிலை.
52 சதவிகித மக்களுக்கு 27 சதவிகிதமே அரைகுறையாக கிடைத்திருக்க, இருப்பதையும் பறிக்க நீதிமன்றங்களைத் தூண்டும் வேலைதான், இது போன்ற குழப்ப கணக்கெடுப்புகள்!?

8 Comments:
இந்த புள்ளி விவர நிறுவனங்கள் தங்களால் முடிந்தவரையில் இடப்பங்கீடுக்கு எவ்வளவு பங்கம் விளைவிக்க முடியுமோ அவ்வளவையும் செய்து கொண்டுதான் இருக்கிறது.
இதற்கு ஆதிக்க சக்திகளின் மீடியாவும் சுதி தப்பாமல் தாளம் போடுகிறது.
இந்த முதலைகளை எல்லாம் தாண்டிதான் இடப்பங்கீடு அமல் படுத்தப்படவேண்டும் என்பது சுதந்திர இந்தியாவின் இன்றைய நிலை.
வேலையில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற கலேல்கர், எல்லா கல்வி நிலையங்களிலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 70 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்றார்.
He included women also in this.
This fact is not highlighted by
many supporters of reservation
for OBCs who talk of the 70%
reservation.
There is no need for 69% reservation in Tamil Nadu.
We need to review the reservation
system as a whole, assess its
performance, merits and shortcomings, exclude castes that
are advanced and bring in an affirmative action plan instead of caste based reservations.Those who
have benefitted out of the caste
based reservation now want to extend the benefits further and
maintain and consolidate their hegemony wherever possible. Rich and powerful OBCs benefit while the poor and many OBC castes do not
get the most out of this reservation. To hide this the label
of social justice is used.This is
sham.
Ravi Srinivas Sir,
பிற்படுத்தப்பட்ட ஏழை மக்களின் மீது நீங்கள் காட்டும் கரிசனம் நீங்கள் இடப்பங்கீட்டை ஆதரிக்கிறீர்கள் என்பது காட்டுகிறது. மகிழ்ச்சி.
ஆனால் கிரிமிலேயர் இன்னும் சரிவர வறையருக்கப்படவில்லை. வறையருக்கப்படவேண்டும் என்பதே எனது ஆசையும்.
அதற்கு தெளிவான செயல்திட்டம் தேவை என்பதை நான் ஏற்கொள்கிறேன்.
ஆனால் அதுவரை இடஒதுக்கீடு கூடாது எனும் வாத்ததை நான் எதிர்க்கிறேன். (இது இடப்பங்கீட்டை தள்ளி போடு வைக்கும் தந்திரம் என்பது என் எண்ணம்.)
இடப்பங்கீடு என்பது சமூக நீதிக்காகத்தான். இதில் மாற்றுக் கருத்து இல்லை.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
Tamil Nadu Government today contended before the Supreme Court
New Delhi, Feb. 26 (PTI): Tamil Nadu Government today contended before the Supreme Court that it was difficult to identify the creamy layer for excluding them from the benefit of reservation for backward classes in admission to educational institution and government jobs.
"Identification of creamy layer is a question of fact relating to various facts and circumstances and no simple formula could be evaluated for identifying such creamy layer," the state government said in its affidavit submitted before a Bench comprising Justice A K Mathur and Justice Dalveer Bhandari.
The Bench sought response to the affidavit withing two weeks from the NGO, VOICE (Consumer Care Council), which has filed PIL seeking to forbid the state government from applying the existing reservation policy without excluding the creamy layer from amomg the backward classes.
Tamil Nadu refuted the allegation of the NGO that it was continuing with the reservation policy without excluding the creamy layer for vote bank politics.
It maintained that both the policy of providing 69 per cent quota and the issue of exclusion of creamy layer from the benefit if backward class reservation are pending before the apex court and the contention of the NGO was untenable that the state government was not following its direction.
The NGO had submitted that the Tamil Nadu Government was not following the apex court directives as delivered in the Mandal case by which government had to apply the relevant and requisite socio-economic criteria to exclude socially advanced sections, ie "creamy layer" from OBCs.
Tamil Nadu Government in its affidavit, however, said that the NGO's allegation that failure to identify the creamy layer and exclude them from benefit of reservation had literally worked against the really needy persons was not supported by facts and figures.
The NGO in its PIL referred to a petition in which the state government's legislation providing 69 per cent reservation has been challenged and is pending before a Constitution Bench.
The Tamil Nadu Backward Classes, Scheduled Castes and Scheduled Tribes (Reservation of seats in Educational institutions and of appointment or posts in the services under the state Act, 1993 provides 69 per cent reservation.
The PIL said it was contrary to the apex court directives in the Mandal case which said reservation should not exceed 50 per cent.
The state government maintained that the reservation execeeding 50 per cent reservation was introduced in 1980 and now all the communities found in the list of Backward Classes are socially and educationally backward.
http://www.hinduonnet.com/thehindu/holnus/002200702261951.htm
//சாதியின் பெயரால் அடக்கி வைக்கப்பட்ட ஒருவரை, அந்த சாதிக்கு முன்னுரிமை கொடுப்பதன் மூலம் மட்டுமே மேலே கொண்டுவர முடியும். முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும்//
இதை தான் என் முந்தைய பின்னூட்டத்தில் குறிப்பிட்டேன்.
இடப்பங்கீடு பற்றி பேசும் போது எல்லோருக்கும் உதாரணம் தமிழ்நாடு வந்துவிடுகிறது. ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், குஜராத்.... என வடமாநிலங்களில் பிற்படுத்தப்பட்ட மக்கள் நிலை என்ன எனவும் விவாதிப்பது நல்லது. காரணம் இது ஒரு மாநிலம் சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல. நமது விவாதங்கள் தமிழக அளவில் முடங்கி விடுவது ஏனோ?தகவல்கள் இல்லாமையா? வேறு காரணங்களா?
bala has left a new comment on your post "இடபங்கீடும் சர்வே நிறுவனங்களும் - இறுதி பகுதி":
//அதற்கு தெளிவான செயல்திட்டம் தேவை என்பதை நான் ஏற்கொள்கிறேன்.
ஆனால் அதுவரை இடஒதுக்கீடு கூடாது எனும் வாத்ததை நான் எதிர்க்கிறேன். (இது இடப்பங்கீட்டை தள்ளி போடு வைக்கும் தந்திரம் என்பது என் //
சிவபாலன் அய்யா,
க்ரீமி லேயருக்கு வரைமுறை செய்யமாட்டாங்களாம்,50 வருஷமா.இத நான் க்ரீமி லேயர் எடுக்கும் அதிகார பிச்சையாகவே(கொள்ளை) பார்க்கிறேன்.
பாலா
பாலா
நலமா?!
ரொம்ப நாளா ஆளையே காணவில்லையே என்று பார்த்தேன்...
திரு,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Post a Comment
<< Home