படைப்பாளிக்கு பதில் சொல்லும் பொறுப்பும உண்டு : வைரமுத்து
கேள்வி: படைப்பது மட்டுமே என் வேலை; பதில் சொல்வதல்ல என்கிறார்களே சில எழுத்தாளர்கள்...?
வைரமுத்துவின் பதில்:
சோழமன்னனின் தமிழ் அவை. நளவெண்பாவை அரங்கேற்றுகிறான் புலவன் புகழேந்தி. தளைதட்டாத வெண்பாச்சுவையில் தரைசுற்றிக் கிடக்கிறது தமிழ்க் கூட்டம்.
மாலைப்பொழுதின் மனோகரம் சொல்லவந்த புலவன் _‘‘மல்லிகையே வெண்சங்கா வண்டூத’’ என்கிறான். அதாவது _ மல்லிகைப்பூக்களில் தேன் குடிக்கும் வண்டினங்களைப் படிமப்படுத்தியவன் ‘மல்லிகைப் பூக்களைச் சங்குகளாக்கி வண்டுகள் ஊதி ஒலிசெய்யும் பொழுது’ என்கிறான்.
‘நிறுத்து’ என்கிறான் ஒட்டக்கூத்தன்.
‘‘சங்கூதுகிறவன் சங்கின் பின்புறமிருந்து ஊதுவதே மரபு. மல்லிகைப்பூக்களின் மேற்புறம் தேன் குடிக்கும் வண்டுகள் சங்கூதுவதாய்ச் சொல்வது காட்சிப்பிழை; இது வெண்பா அல்ல; வெறும்பா.’’
ஒரு ஞான நிசப்தம் நுரைகட்டி நிற்கிறது சபையில்.
புகழேந்தி பதிலிறுக்கிறார்:
‘‘ஒட்டக்கூத்தரே உட்காருமய்யா! கள் குடிப்பவனுக்குத் தலை எது கால் எது என்று தெரியாதய்யா.’’
படைப்பது மட்டுமன்று; பதில் சொல்லும் பொறுப்பும் உண்டு படைப்பாளிக்கு.
- வைரமுத்து
"குமுதத்தில் வைரமுத்துவின் பதில்கள் என்ற பகுதியிலிருந்து."
படித்ததில் எனக்கு பிடித்தது.
நன்றி: குமுதம்
11 Comments:
சிவபாலன்,
மிகவும் சுவாரசியமான தகவல். பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
உங்களின் கனவுகள் நனவாகி வாழ்வில் இன்பம் மலரும் ஆண்டாக இவ் ஆண்டு அமைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
நன்றி வெற்றி.
தங்கள் குடும்பத்தாருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவிக்கவும்.
பகுத்தறிவு ஓங்கட்டும்!
கேள்வி அழகு என்றால்
பதில் அழகோ அழகு!
பல சமயங்களில் கேள்விகளால், பதில்கள் பல மடங்கு பரிமளிக்கின்றன!
கவியரசர் வைரமுத்துவின் "பதில் சொல்லும் பொறுப்பு" அருமை!
நன்றி சிபா பகிர்ந்தமைக்கு!
சிவா அருமை
எப்படி சிவா இது எல்லாம் ஆன்லைன்லயா?..
உங்களுக்கும், மறுபாதிக்கும், குட்டி தேவதைக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
நல்ல quote. கவியரசரது கவிதைகள் பல வற்றில் லயித்திருக்கிறேன். அதேசமயம், நான் கவிஞர்களிடம் பதில் எதிர்பார்ப்பதில்லை என்பது ஒரு விஷயம் (கவிதைக்குப் பொய் அழகு).
ஆனால், எழுத்து பற்றிய கேள்விகளுக்குப் பதில் சொல்வதில் நம் கலைஞருக்கு நிகர் கலைஞர் தான்! சரிதானே?
ரவிசங்கர்,
வாங்க.. ரொம்ப நாளைக்கு அப்பறம் உங்களை என் பதிவில் சந்திக்கிறேன்.
மிக்க மகிழ்ச்சி!
வருகைக்கு நன்றி
மங்கை,
நானும் படித்தவுடன் மகிழ்ந்தேன். யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகமும்.. Ha Ha Ha..
Bharateeyamodernprince,
ஆமாங்க.. கலைஞர் டைமிங் நல்லாயிருக்கும்..எனக்கும் பிடிக்கும்
வருகைக்கு நன்றி
நல்ல பதில் சி.பா. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
மணி
வாங்க.. உங்களுக்கும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
வருகைக்கு நன்றி
Post a Comment
<< Home