Wednesday, April 04, 2007

இடப் பங்கீடு ஒழிந்தால் சாதி ஒழியுமா?

சாதி ஒழிப்பு வீரர்களே : சாதி அளவுகோலை பயன்படுத்துவது கிண்டல் செய்யப்படுகிறது. பாம்புக்கடிக்கு மருந்தாக பாம்பின் விசம் பயன்படுத்தப்படுவது போலவேதான் சம்த்துவம் உருவாக்கப்பட சாதி அளவுகோல் பயன்படுத்தப்படுகிறது.



நன்றி: தினகரன்

30 Comments:

Anonymous Anonymous said...

//// இடப் பங்கீடு ஒழிந்தால் சாதி ஒழியுமா? ////

சொல்லமுடியாது. இட ஒதுக்கீடு ஒழிப்பால் சாதி மறையும் என்று சொல்லமுடியாது.

ஆனால், எதிர்மறையை நிச்சயமாக சொல்லலாம். இட ஒதுக்கீடு இருக்கும்வரை சாதி மறையாது. இட ஒதுக்கீடே சாதியை நிரந்தரப்படுத்தும் ஒரு செயல். இதனால், இந்தியன் என்பது மறைந்து எல்லோரும் சாதிக்கூறுகளை மட்டுமே பார்ப்பார்கள்.

அதனால், இட ஒதுக்கீடு என்று ஒழிகிறதோ அன்றே இந்தியன் பிறப்பான்.. அதுவரை ஓசி, பீசி என்றுதான் சொல்லிக்கொண்டு இருப்பான்.

April 04, 2007 6:54 AM  
Blogger சிவபாலன் said...

சமூக நீதி சட்டம் கொண்டுவருவது ஓட்டுவங்கி அரசியல் என்று ஒதுக்கி தள்ளிவிட முடியாது. சமூக நீதியை ஏற்றுக் கொண்டால்தான் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கும் என்றால் இதை அனைத்து மக்களும் விரும்பும் சட்டம் என்று ஏன் பொருள் கொள்ளக் கூடாது?

April 04, 2007 6:59 AM  
Blogger சிவபாலன் said...

உலகில் வேறெங்கும் இல்லையாம். ஆம், இல்லைதான். ஏனென்றால், அங்கு சாதிகள் இல்லை. பார்க்காதே, வராதே, தொடாதே என்ற பாரம்பரியம் நமக்கு மட்டுமே உரியது

April 04, 2007 7:01 AM  
Blogger சிவபாலன் said...

அமெரிக்காவில் நீக்ரோக்களின் பிறபடுத்தப்பட்ட நிலைக்கு காரணம், அவர்களின் நிறப்பாகுபாடு. எனவேதான் நிறத்தின் அடிப்படையில் அங்கு சலுகைகள் தரப்பட்டன. இங்கே சாதி, அதனால் சாதி அடிப்படை.

April 04, 2007 7:04 AM  
Anonymous Anonymous said...

சிவபாலன்,

காமெடியாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்.

தன் மக்களுக்கும் ஓட்டு வங்கிக்கும் தோதாக சட்டம் போட்டுக்கொள்வது சமூக நீதி அரசியல் இல்லை. தனக்கு லாபம் என்றால் அதை ஆதரிப்பதும் சமூக நீதி அரசியல் இல்லை.

தொடாதே, பார்க்காதே, என்று சொல்லும் பாரம்பரியத்தை இன்று கடைபிடிப்பவர்கள்தானே இன்று இந்த ஓ.பி.சிக்கு அலைந்துகொண்டு இட ஒதுக்கீட்டுக்கு சத்தம் போடுகிறார்கள். இவர்கள்தானே மற்ற மக்கள் மீது அடக்குமுறை இன்றும் செய்துகொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் சாதிக்கலவரங்களை தூண்டும் இந்த கேடுகெட்ட சாதி மனிதர்களுக்கு ஏன் இட ஒதுக்கீடு?

யோசியுங்கள்.

April 04, 2007 7:06 AM  
Blogger சிவபாலன் said...

பொருளாதார அளவுகோல் நெகிழும் தன்மை உடையது. நேற்றைய பணக்காரனுக்கு இன்று மஞ்சள் நோட்டிஸ் வரலாம்.

April 04, 2007 7:07 AM  
Anonymous Anonymous said...

/// நேற்றைய பணக்காரனுக்கு இன்று மஞ்சள் நோட்டிஸ் வரலாம். ////

சரிதானே. வந்தால் சலுகை கிடைத்துவிட்டுப்போகிறது. வசதியற்றவர்கள் சமூகத்தில் போராட வழியற்றவர்களுக்கு அரசே உதவுமே. நீங்கள் பொருளாதார இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு கொடுப்பது அறிந்து மகிழ்ச்சி...

April 04, 2007 7:12 AM  
Blogger சிவபாலன் said...

பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவன் ஐஐடி, ஐஐஎம் சேர்ந்த அடுத்த ஆண்டே அவனது குடும்பம் பணக்காரன் ஆகிவிட்டால் அவனை உடனே வெளியே அனுப்பிவிடுவீர்களா? அதனால்தான் பொருளாதார அளவுகோல் நெகிழும் தன்மை உடையது.

April 04, 2007 7:12 AM  
Blogger சிவபாலன் said...

அதனால்தான் இரும்பு அளவுகோல் சாதி அடிப்படையை மண்டல் தீர்மானித்தார்

April 04, 2007 7:14 AM  
Blogger சிவபாலன் said...

கோயிலில் சாதி வேண்டும். ஐஐடியில் சாதி வேண்டாம்.

சாதி இருப்பதால்தான் கல்வி, வேலை வாய்ப்பிலும் கேட்கப்படுகிறது. இதில் சாதி ஒழிந்தால் எல்லா இடத்திலும் சாதி ஒழிந்துவிடும் என யாரேனும் சொன்னால் அவர்களை சந்தேகப்படுங்கள்

April 04, 2007 7:20 AM  
Anonymous Anonymous said...

சிவபாலன்,

பொருளாதார அடிப்படையே சிறந்தது என்று தெளிவு நீங்கள் பெறுங்கள். பின்னர் அதற்கான பல வழிமுறைகள் எல்லாருக்கும் நிறைவாக வகுக்கலாம்.

நீங்கள் சொல்கின்ற மறுப்புக்கள் எல்லாம் ஒரு சின்ன பொருள் கொண்டவை. இவை எளிதில் சரி செய்யப்படும்.

பொருளாதார நிலையை நாம் ஒரு பொழுதின் நிலையை வைத்து ஏன் தீர்மானிக்க வேண்டும். ஒரு நான்கைந்து ஆண்டு வருமானத்தை சராசரியாக கொண்டு தீர்மானிக்கலாம். இல்லை குடும்ப அசையா சொத்துக்கள், மற்றும் சகோதர சகோதரிகளின் மொத்த வருமானம் என்று பல இலக்குகள் யோசிக்கலாம்.

மேலும், இட ஒதுக்கீடு வழங்கப்படும் போது மட்டுமே இவை பரிசீலிக்கப்படும். தொடர்ந்து அவன் ஏழையாகவே இருக்க வேண்டும் என்பதல்ல. இன்று சாதி அடிப்படையில் இருக்கும் இட ஒதுக்கீடும் இதுமாதிரியே. ஒருவன் சாதி அடிப்படையில் உள்ளே வந்தாலும் பின் சாதி, மதம் மாறினால் அவன் சலுகைகள் பறிக்கப்படுவதில்லை..

நான் சொன்ன பரிகாரங்கள் எல்லாம் ஏற்கனவே பலமுறை பல சான்றோர்கள் சொல்லப்பட்டவையே.

அவற்றை நீங்கள் தெரிந்துகொள்ளுங்கள்..

பொருளாதார அடிப்படை என்பது ஒன்றும் புரியாத அத்வைதம் அல்ல. எத்தனையோ சட்டங்களை இயற்றிய நம்மால் இதை நிர்ணயிப்பதும் இயலாத்து அல்ல.

இட ஒதுக்கீடு ஒரு தற்காலிக ஊன்றுகோல் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

April 04, 2007 7:20 AM  
Anonymous Anonymous said...

//// கோயிலில் சாதி வேண்டும். ஐஐடியில் சாதி வேண்டாம். ///

இவ்வாறு சொல்லும் ஒரு அறிஞரை காட்டுங்களேன். ஏன் வீணாக ஜல்லி அடிக்கிறீர்கள்.

ஐஐடியில் சாதி வேண்டும். கோவிலில் வேண்டாம் என்று சொல்பவர்கள் நீங்கள். சிவபாலன் தொடங்கி இணையத்தில் பல நேர்மையற்றவர்கள். இதை தங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்.

April 04, 2007 7:22 AM  
Blogger bala said...

//// இடப் பங்கீடு ஒழிந்தால் சாதி ஒழியுமா? ////

ஒழியாது.இந்த க்ரீமி லேயர் ஓ பி சி அயோக்ய அரசியல்வாதிகள் மனம் திருந்தி மனிதர்களாகும் வரை ஒழியாது.

பாலா

April 04, 2007 7:25 AM  
Blogger thiru said...

சிவா,

இந்திய சமூகத்தில் ஏற்றத்தாழ்வு இருவிதமானது. ஒன்று பொருளாதாரம் சார்ந்தது. இன்னொன்று சாதிப்பிரிவினை சார்ந்தது.

பொருளாதாரம் சார்ந்த வறுமையையும் அதன் விளைவுகளையும் அகற்ற பல வறுமை ஒழிப்புத் திட்டங்கள் உள்ளன. இதில் சாதி எங்கும் இல்லை.

வறுமை ஒழிப்புத் திட்டங்களும், பொருளாதார மேம்பாட்டு திட்டங்களும் இந்தியாவின் சாதிப்பாகுபாட்டை அகற்றிவிடாது.

சாதிப்பாகுபாட்டை அகற்ற சாதியை அடிப்படை அளவுகோலாக கொண்டு தான் திட்டங்களை இயற்ற இயலும். எப்படி ஆணாதிக்க அடக்குமுறைக்கு எதிராக பெண் என்ற அடையாளம் விடுதலைக்கு அவசியமோ, அதுபோல சாதி ஆதிக்கத்திற்கு எதிராக சாதி தான் அடையாளம். நிறவேற்றுமை பற்றி நீங்கள் குறிப்பிட்ட உதாரணம் போன்றது இது.

பொருளாதாரத்தை அடிப்படையை பயன்படுத்தினால் சாதி அடைப்படையில் எழுந்த சமூக அநீதியை மாற்ற இயலாது.

உதாரணமாக: சென்னை ஐ.ஐ.டியில் படிக்க பொருளாதாரம் அடிப்படையாக இருக்கிறது என வைத்துக்கொள்வோம். யார் அந்த பயனை பெறுவார்கள்? குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உரிய இடம் கிடைக்கும் என்பதற்கான அத்தாட்சி என்ன? இப்போதைய நிலையில் குறிப்பிட்ட சில சாதிகளின் ஆதிக்கம் தானே சென்னை ஐ.ஐ.டியில்.

பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை நீக்க வேறு திட்டங்களை கொண்டுவருவதற்கு யாரும் எதிர்க்கவில்லை.

சில வலைப்பதிவுகளில் சமூக ஒழுக்கம், குடும்பம், வன்முறை, கட்சி அரசியல் என வேண்டுமென்றே குழப்பி இடப்பங்கீடு எதிர்ப்பு என்ற பெயரில் திசைதிருப்பலும் நடப்பது வேடிக்கை.

April 04, 2007 7:35 AM  
Blogger dondu(#11168674346665545885) said...

ரொம்ப சௌகரியமாக ரிசர்வேஷனுக்காக வாதிடும்போது மட்டும் ஓ.பி.சி.க்கள் எஸ்.சி. க்களை சேர்த்துக் கொள்கிறார்கள். மற்ற நேரத்தில் அவர்கள் மேல் வன்கொடுமை செய்வது அவர்களே.

பா.ம.க. வில் இருந்து வெளியே வந்த பல தலித் தலைவர்கள் ராமதாசு அவர்கள் தங்களை நிற்க வைத்தே பேசுவார்கள் என்று கூறியதை மறந்து விட்டீர்களா? பல இடங்களில் பஞ்சாயத்துத் தலைவர்கள் தங்கள் நாற்காலிகளில் கூட உட்கார விடுவதில்லை இந்த ஓ.பீ.சீக்கள் என்பதை அறிவீர்களா?

கீழ்வெண்மணியில் தலித்துகளை எரித்த கோபால கிருஷ்ண நாயுடுவை பெரியார் ஏன் கண்டிக்கவில்லை என்பதை அறிவீர்களா?

இம்மாதிரி செய்பவர்கள் பார்ப்பனர் இல்லையே. ஆனால் சௌகரியமாக உயர்சாதீயத்தை வேண்டுமென்றே பார்ப்பனீயம் என்று போட்டுக் கொள்வீர்கள்.

வேறு என்ன நேர்மை இம்மாதிரி வாதிடுபவர்களிடமிருந்து பெற முடியும்?

எப்படி சிவபாலன் சார் இதையெல்லாம் மறைத்து இம்மாதிரி அகண்ட பஜனை எல்லாம் செய்கிறீர்கள்?

சுப்ரீம் கோர்ட் கேட்ட கேள்விகளைக் கண்டு ஏன் ஓடுகிறீர்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

April 04, 2007 7:50 AM  
Anonymous Anonymous said...

திரு அவர்களின் பதிவு ஒரு "திரு"ப்பு முயற்சி. அவர் "திருதிரு" என்று விழிப்பதையே அவர் பின்னூட்டம் காட்டுகிறது.

அவர் வாதத்தின் படியே வைத்துக்கொண்டால் இந்தியாவில் இரண்டு ஏற்றத்தாழ்வுகள் இருக்கிறதாமா? அதாவது பொருளாதார ஏற்றத்தாழ்வு. இது எனக்கு புரிகிறது. இரண்டாவது, சாதி சமூக ஏற்றத்தாழ்வு.

இந்த இரண்டாவது சமூக ஏற்றத்தாழ்வு, முதலாவது பொருளாதார ஏற்றத்தாழ்வுக்கு வேறானது என்று சொன்னால் ஏன் பொருளாதார அறிகுறிகளையே இதற்கு சாற்றுகிறீர்கள். சமூக ஏற்றத்தாழ்வு தீர்ந்துவிட்டதா என்று அறிய ஐஐடியில் இருக்கும் மாணவ சமுதாயம்தான் அறிகுறியா. மேல் வேலையில் நன்றாக பணம் சம்பாதிக்கும் ஒரு வர்க்கத்தில் சாதி எவ்வளவு என்று ஏன் பார்க்க்ப்படுகிறது.

இதிலிருந்தே இந்த சமூக ஏற்றத்தாழ்வு பொருளாதார ஏற்றத்தாழ்வோடு பின்னிப்பிணைந்தது என்று புரியும். இதை திரு அவர்களேதான் ஒப்புக்கொள்கிறார்.

மேலும், ஐஐடி முதலானவை ஒரு சமூக குறிக்கோள் அல்ல. பொருளாதார வசதி பெற ஒரு சாதனங்கள் அவ்வளவே. இன்று ஐஐடியில் படித்தால் உடனே வெளிநாட்டில் வேலை என்பதால்தான் அங்கு கூட்டம் அம்முகிறது. பொருளாதாரம் இல்லாவிட்டால் அங்கு என்ன வேலை. உதாரணத்துக்கு கோயிலில் மணி அடிக்கும் வேலைக்கு ஏன் இட ஒதுக்கீடு இல்லை? ஏனென்றால், அங்கு போட்டி இல்லை. இது கூட புரியவில்லையா.

இரண்டாவது, பொருளாதார சாதனங்கள் மூலமாகத்தான் சமூக ஏற்றத்தாழ்வு விரைவில் நீங்கும். வேறு சட்டம் போட்டோ, கூட்டம் போட்டோ இல்லை. இன்று மேலே வந்த பள்ளர்கள், பறையர்கள், என்று எல்லோரும் சமூகத்தில் மதித்து பிற வகுப்பினரும் ஒன்றர கலந்து கொள்வது பணத்தால் மட்டுமே சாத்தியம்.

இன்று சாதி நிச்சயமாக ஒழிந்த இடம் பணக்காரர்களின் வீடுகள்தான்.

/// சென்னை ஐ.ஐ.டியில் படிக்க பொருளாதாரம் அடிப்படையாக இருக்கிறது என வைத்துக்கொள்வோம். யார் அந்த பயனை பெறுவார்கள்? குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உரிய இடம் கிடைக்கும் என்பதற்கான அத்தாட்சி என்ன? /////

திரு ஐயா, இங்கு ஐஐடியில் பணக்கார பிற்படுத்தவர்கள் வரவில்லை என்றால் அது அவர்கள் ஐஐடியை விரும்பவில்லை என்று அர்த்தம். அதனால், சாதி இட ஒதுக்கீடு அங்கே தேவையில்லை. பொருளாதாரம் இருந்தும் சாதியினர் சரியான அளவில் வரவில்லை என்றால் ஒன்றும் பாதகம் இல்லை. உதாரணத்துக்கு மார்வாடி சேட் பசங்கள் ஐஐடியில் ஈடுபடுவதில்லை. வியாபாரம்தான் அவர்கள் வழி. அதனால், அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களா.

இன்று இட ஒதுக்கீடு என்பது பல "திரு"வாளர்கள் திரிக்கப்பட்டுவிட்டது.

இட ஒதுக்கீடு என்பது சமுதாயத்தில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டோருக்கு வழங்கப்படுவது. வாய்ப்புகள் மறுக்கப்பட்டோருக்கு என்பதை மறுமுறை படிக்கவும். இன்று பணம் இருந்தால் வாய்ப்புகள் உண்டு. அப்புறம் என்ன இட ஒதுக்கீடு..

திரு ஐயாவை மேலும் திசை திருப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.



இந்திய சமூகத்தில் ஏற்றத்தாழ்வு இருவிதமானது. ஒன்று பொருளாதாரம் சார்ந்தது. இன்னொன்று சாதிப்பிரிவினை சார்ந்தது.

பொருளாதாரம் சார்ந்த வறுமையையும் அதன் விளைவுகளையும் அகற்ற பல வறுமை ஒழிப்புத் திட்டங்கள் உள்ளன. இதில் சாதி எங்கும் இல்லை.

வறுமை ஒழிப்புத் திட்டங்களும், பொருளாதார மேம்பாட்டு திட்டங்களும் இந்தியாவின் சாதிப்பாகுபாட்டை அகற்றிவிடாது.

சாதிப்பாகுபாட்டை அகற்ற சாதியை அடிப்படை அளவுகோலாக கொண்டு தான் திட்டங்களை இயற்ற இயலும். எப்படி ஆணாதிக்க அடக்குமுறைக்கு எதிராக பெண் என்ற அடையாளம் விடுதலைக்கு அவசியமோ, அதுபோல சாதி ஆதிக்கத்திற்கு எதிராக சாதி தான் அடையாளம். நிறவேற்றுமை பற்றி நீங்கள் குறிப்பிட்ட உதாரணம் போன்றது இது.

பொருளாதாரத்தை அடிப்படையை பயன்படுத்தினால் சாதி அடைப்படையில் எழுந்த சமூக அநீதியை மாற்ற இயலாது.

உதாரணமாக: சென்னை ஐ.ஐ.டியில் படிக்க பொருளாதாரம் அடிப்படையாக இருக்கிறது என வைத்துக்கொள்வோம். யார் அந்த பயனை பெறுவார்கள்? குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உரிய இடம் கிடைக்கும் என்பதற்கான அத்தாட்சி என்ன? இப்போதைய நிலையில் குறிப்பிட்ட சில சாதிகளின் ஆதிக்கம் தானே சென்னை ஐ.ஐ.டியில்.

பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை நீக்க வேறு திட்டங்களை கொண்டுவருவதற்கு யாரும் எதிர்க்கவில்லை.

சில வலைப்பதிவுகளில் சமூக ஒழுக்கம், குடும்பம், வன்முறை, கட்சி அரசியல் என வேண்டுமென்றே குழப்பி இடப்பங்கீடு எதிர்ப்பு என்ற பெயரில் திசைதிருப்பலும் நடப்பது வேடிக்கை.

April 04, 2007 7:52 AM  
Anonymous Anonymous said...

ஏங்க இந்த பொருளாதார சர்டிபிகேட் வாங்குவது அவ்வளவு கடினமானது இல்லை. அதனால் உயர்சாதி ஆளுங்க இதை எளிதில் பெற்று புற வாசல் வழியாக உள்ளே வரும் முயற்சிதான் இந்த பொருளாதார அடிப்படை. இதனால்தான் மீடியாக்களும் இதையே ஜல்லி அடிக்கிறது.

இதற்கு தீர்வு என்ன வென்றால்,

சாதி அடிப்படையில் பொருளாதாரம். அப்பொழுது இந்த இடஒதுக்கீடு சேர வேண்டியவர்களுக்கு
சேரும்.

வெறும் பொருளாதாரம் என்று வைத்தால் 2000 வருடம் என்ன செய்தார்களோ அதையே ஒரு சர்டிபிகேட் வாங்கி கொண்டு செய்ய துவங்கிவிடுவார்கள்.

- சேரன்

April 04, 2007 8:33 AM  
Blogger கோவி.கண்ணன் said...

இன்றைக்கு இருக்கும் சாதிப் பற்றும், அன்றைய சாதிப் பற்றையும் ஒப்பிட்டுப் பார்த்தேலே தெரியும். அன்றைக்கு சிலர் இந்த சாதிக்காரர்கள் என்று தங்களைச் சொல்வது கேவலம் என்றும், சிலரை சாதியைச் சொல்லி இழிவு படுத்துவதற்கும் அவரவர் சாதிப்பற்று இருந்துவந்தது.

ஆனால் இன்றைய நிலைமை வேறு. என் சாதி தாழ்ந்ததல்ல என்று நெஞ்சு நிமிர்த்து தங்களை சாதியைப் பற்றி சொல்கின்றனர்.

இன்றைய தேதியில் சாதியை சொல்லி முன்பு தாழ்ந்தவர்கள் எனச் சொல்லப்பட்ட எவரையும் திட்ட முடியாது என்பது உயர்வான விசயம் தான்.

April 04, 2007 8:38 AM  
Blogger BadNewsIndia said...

இன்று ஏழை நாளை பணக்காரனாகிவிடுவானே, அதனால் பொருளாதார அடிப்படையில் எப்படி இடஒதுக்கீடு கொடுப்பது?
இதெல்லாம் சரியான வாதங்களா?


இன்று உணவில்லை என்று இருப்பவனிடம், இரக்கம் காட்டாமல், இவனுக்கு நாளைக்கு லாட்டரி அடிச்சிட்டா என்ன செய்வது என்று யோசிக்க முடியுமா?

பொருளாதார அடிப்படையில், ஒதுக்கீடு அமைந்தால், பொருள் இருப்பவனும், திருட்டு-சான்றிதழ் பெற்று பலன் அனுபவிக்க நேரும்?

வெட்க்கமாய் இருக்கிறது நம் நாட்டின் நிலை. திருட்டு நாய்களை ஒடுக்க வழி யோசிக்காமல், அவனுக்கு பயந்து, நாம் ஏன் பதுங்கி வாழ வேண்டும்?

சாதி அடிப்படையில் வழங்கினாலும், பலர் OBC க்குள் நுழையப் போடும் பேடி வேஷங்கள் தொடரத்தானே செய்யும்?

யாராவது, பொருளாதார இடஒதுக்கீட்டின் மற்ற தீமைகளை விளக்கினால் புரிதல் கிட்டும்

thanks,
-BNI

April 04, 2007 9:57 AM  
Anonymous Anonymous said...

நான் ஒரு இந்து. தாழ்த்தப்பட்ட ஹரிஜன வகுப்பை சேர்ந்தவன். என்னையும் உயர்ஜாதி என்று ஏற்றுக் கொள்வார்களா பார்ப்பனர்கள்? அவர்கள் போட்டுக் கொள்ளும் பூனூலை நானும் போட்டுக்கலாமா? நான் அவர்கள் வீட்டு திண்ணையில் கொஞ்ச நேரம் அமர்ந்தால் திண்ணையை கழுவாமல் இருப்பார்களா பார்ப்பனர்? எனக்கு பார்ப்பனர் பெண் கட்டித்தருவார்களா?

April 04, 2007 8:57 PM  
Blogger Thamizhan said...

இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் எந்த அல்பமாவது சாதி ஒழியவேண்டும் என்று பேசுகிறதா?
இவர்களுக்குத் திடீரென்று தாழ்த்தப்பட்டவர்கள் மீது அக்கறை பொங்கிவழிகிறதைப் பாருங்கள்.பிற்படுத்தப்பட்டவர்கள் தாழ்த்தப் பட்டவர்களுடன் நுழையப் பார்க்கிறார்களாம்.
கழிசடைகளே பாபாசாகேப் அம்பேத்கர் சட்ட அமைச்சராக இருந்து பண்டித நேரு பிரதமராக இருந்து கொண்டுவரப்பட்ட 15(4) ஐப் பாருங்கள்.ச்முதாய,கல்வியில் பிற்படுத்தப்பட்ட அல்லது SC/ST என்று போடப்பட்டிருப்பதை.
இட ஒதுக்கீடு சமுதாய அநீதியைச் சரி செய்ய வந்த ஒரு உரிமை.பொருளாதாரத்திற்கு அங்கே வேலை கிடையாது.
எப்படியாவது இட ஒதுக்கீட்டை ஒத்தி வைக்கவேண்டும்,நீக்க வேண்டும் நாமே என்றென்றும் சவுண்டி அடித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்கு இல்லாத பொல்லாத வியாக்யாணங்கள்!
முதலில் சாதியை ஒழியுங்கள்,பின் அனைவரும் சமத்துவம் பேசலாம்.

April 04, 2007 11:14 PM  
Anonymous Anonymous said...

//நான் ஒரு இந்து. தாழ்த்தப்பட்ட ஹரிஜன வகுப்பை சேர்ந்தவன். என்னையும் உயர்ஜாதி என்று ஏற்றுக் கொள்வார்களா பார்ப்பனர்கள்? அவர்கள் போட்டுக் கொள்ளும் பூனூலை நானும் போட்டுக்கலாமா? நான் அவர்கள் வீட்டு திண்ணையில் கொஞ்ச நேரம் அமர்ந்தால் திண்ணையை கழுவாமல் இருப்பார்களா பார்ப்பனர்? எனக்கு பார்ப்பனர் பெண் கட்டித்தருவார்களா?
//

மிக அருமையான கேள்விகள் நண்பரே. இதே கேள்வியை பார்ப்பனரை பார்த்து மட்டும் கேட்காமல் தேவர், வன்னியர், கவுண்டர் என்று தலித் மக்களை வன்கொடுமை செய்யும் எல்லா சாதியினரையும் பார்த்து கேளுங்கள். நீங்கள் உண்மையிலேயே தலித்தாக இருந்தால் அவர்களை பார்த்து உங்கள் கேள்விகளை கேட்பதே மிக பொருத்தம்.

April 05, 2007 5:10 AM  
Blogger dondu(#11168674346665545885) said...

//கழிசடைகளே பாபாசாகேப் அம்பேத்கர் சட்ட அமைச்சராக இருந்து பண்டித நேரு பிரதமராக இருந்து கொண்டுவரப்பட்ட 15(4) ஐப் பாருங்கள்.ச்முதாய,கல்வியில் பிற்படுத்தப்பட்ட அல்லது SC/ST என்று போடப்பட்டிருப்பதை.//

அப்படியா? அப்படியானால் ஏன் மண்டல் கமிஷன் வரும் வரைக்கும் காத்து கொண்டிருந்தார்களாம்?

அம்பேத்கர் 15 ஆண்டுகளுக்கு பிறகு நிலைமையை மறுபடியும் அவதானிக்க வேண்டும் எனக் கூறியதாகவும் ஞாபகம்.

மற்றப்படி எதிர்க் கருத்துடையவர்களை கழிசடைகள் என்று ஏன் கூறவேண்டும்? உங்கள் சாதியில் (அது எதுவாக இருப்பினும்) அப்படித்தான் பேசக் கற்று கொடுக்கிறார்களா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

April 05, 2007 6:57 AM  
Blogger அருண்மொழி said...

இடப் பங்கீடு ஒழிந்தால் சாதி ஒழியுமா?

நிச்சயமாக இல்லை. எப்போது முகத்தில் இருந்து பிறந்ததாக உளறிக் கொண்டு இருக்கும் இழிபிறவிகள் மனிதனாக மாறுகின்றார்களோ அன்றுதான் சாதி ஒழியும்.

April 05, 2007 8:14 AM  
Blogger அருண்மொழி said...

thamizan,

//கழிசடைகளே பாபாசாகேப் அம்பேத்கர் சட்ட அமைச்சராக இருந்து பண்டித நேரு ....//

கழிசடைகளே என்ற வார்த்தையை உபயோகிப்பது தவறு. அவார்களுக்கு புரியும்படியாக "இழிபிறவிகளே" என்று அன்போடு அழைக்கும்படி கேட்டுக் கொள்கின்றேன்.

April 05, 2007 8:17 AM  
Blogger மங்கை said...

நல்லா இருக்கு சிவா...

April 05, 2007 8:53 PM  
Blogger Floraipuyal said...

கல்வியைப் பொறுத்தவரை இடஒதுக்கீடும் சாதியைக் கேட்கும் வழக்கமும் ஒழியத்தான் வேண்டும். தன் மக்களுக்குக் கல்வி அளிப்பது அரசின் கடமை. அனைவருக்கும் கல்வி கட்டாயம் வேண்டும். ஆனால் அந்நிலை ஏற்படும் வரை இடஒதுக்கீடு இன்றியமையாதது. அரசு உதவியுடன் அல்லது இட ஒதுக்கீட்டில் படிப்பவர்களை சில ஆண்டுகளாவது கட்டாயமாக அரசுப்பணிகளில் ஈடுபடுத்த வேண்டும்.

மற்ற இடங்களில் இன்னும் சிலகாலத்திற்காவது இட ஒதுக்கீடு தேவைப்படுகிறது. அனைவரும் சமமாகக் கல்வி பெறும் காலம் வரையாவது. என்ன தான் ஏழ்மையில் இருந்தாலும் கல்வியின் தேவை சில வகுப்பினருக்குப் புரிகிறது. ஆனால் மற்றையோருக்கு அப்படியில்லை. அரசு கடுமையான சட்டங்களின் மூலம் அனைத்துப் பிள்ளைகளுக்கும் கல்வி வழங்க வேண்டும். இல்லையேல் இஃது என்றென்றும் தொடரும்.

April 05, 2007 9:31 PM  
Blogger thiru said...

சிவா,

தனிப்பட்ட விதமாக தவறாக எனது பெயரை இழுப்பதலால் srinidhi என்னும் நபருக்காக இல்லாவிடினும், அவசியம் கருதியே எழுதுகிறேன்.

இனி அந்த நபரின் பின்னூட்டமும் என் பதிலும். நீண்ட பின்னூட்டத்திற்கு பொறுத்துக்கொள்ளவும்.

//srinidhi said...
The first backward classes commission included women in
the backward classes.But politicians want reservation
on basis of caste only.Because
they are like Thiru who are progressives as long as it does
not involve women.Like Thiru
they will argue that only caste
and poverty are the factors
of inequality.They are gender
blind.If USA can include women
in affirmative action (AA)why not
India also.I as a woman from
india benefit from AA but in
india i will not get any benefit
from reservation.In usa i come
under two categories in AA-
woman, and, person of asia-pacific
origin.Is not shameful that in india all these males talk so much on inequality etc but are against reservation for women.//

பாலின அடிப்படையில் ஏற்பட்டுள்ள ஏற்றத்தாழ்வை பற்றியதல்ல இந்த பதிவு. மண்டல் குழுவும் அதன் அறிக்கையும் பாலின வேறுபாடுகளால் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுகளை பற்றி ஆராயவில்லை.

சாதி அடிப்படையில் புறக்கணிக்கப்பட்டு சமூக மற்றும் கல்வியில் பின்தங்க வைக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளம் கண்டு சமூக திட்டங்கள் உருவாக்கவே மண்டல் குழு ஏற்படுத்தப்பட்டது. மண்டல் குழுவின் அறிக்கை பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடப்பங்கீடு என பரிந்துரைக்கும் போதே, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் ஆணும், பெண்ணும் அடங்கும் என்ற சிறு உண்மை கூட தெரியாமலா இருக்கிறீர்கள்? பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவிகிதம் மொத்த இடஒதுக்கீட்டிற்கு முதலில் உங்களைப் போன்ற ஆதிக்ககுரல்கள் ஒத்துக்கொள்ளட்டும். அந்த 27 சதவிகிதம் இடப்பங்கீட்டிற்குள் பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு தனி இடப்பங்கீடு அமைப்பதை எதிர்க்க யாரும் இல்லை.

பொதுவாக பெண்களுக்கு என தனி இடப்பங்கீடு என்பது தான் உங்கள் பின்னூட்டத்தின் கருத்தாக இருந்தால் அதுபற்றி தனியாக விவாதிப்பது அவசியம். பெண்களுக்கு சமூகத்தின் அனைத்து பகுதியிலும் சமஉரிமை வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. பெண்களுக்கு இடப்பங்கீடு பற்றி இந்த பதிவில் பேசவில்லை. காரணம் அது தனியாக பேசப்படவேண்டிய விசயம்.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடப்பங்கீடு பற்றிய இந்த பதிவில் அதை பற்றி விவாதிப்பது தான் நேர்மையானது. ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையை மறுக்க இப்படி ஒரு தந்திரமான திசைமாற்றுதல் அவசியமில்லை.

வசதியாக உள்நோக்கம் கற்பித்து இடப்பங்கீடு பற்றிய வாதத்தை திசைதிருப்ப என் மீது கல்லெறியும் உங்கள் தந்திரத்தை பாரட்டுகிறேன். பேஸ் பேஸ் மனுதர்ம ஆதிக்கம்.

இதுவரை துவங்காத உங்கள் வலைப்பக்கத்தில் ஆணாதிக்கத்திற்கு எதிராக எழுதுவீர்கள் என நம்புகிறேன். பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமையை பற்றி பேசுபவர்களை கேள்வி கேட்கும் நீங்கள் பெண்ணின விடுதலை பற்றி பலர் எழுதிய பதிவுகளில் கலந்துகொள்ளாமல் எங்கு ஒளிந்து கொண்டீர்கள்?

April 06, 2007 8:42 AM  
Blogger கோவி.கண்ணன் [GK] said...

அனைவருக்கும் வாய்புகள் வழங்கப்பட வேண்டும் என்று எல்லோரும் சமத்துவ வாதிகளாகவே இருக்கிறார்கள்,

அனைத்து சாதி விழுக்காடுகளையும் கணக்கிட்டு இந்த இந்த சாதிக்கு இத்தனை விழுக்காடு என்று சாதிய அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கினால் எந்த குழப்பமும் வராது, யாருக்கும் ஏமாற்றம் இல்லை.

ஒரு சாதியைச் சேர்ந்தவர்களே அள்ளிக் கொண்டுச் சொல்வதால் தான் சிக்கல்.

:)))))))))))

April 06, 2007 10:43 AM  
Blogger thiru said...

//Mr.Thiru, I had pointed out that the first backward classes commission included women also
in the category.The second one
(Mandal) did not include women.
...................//

பெண்மணீ,

ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் போன்ற உயர்கல்வி நிலையங்களின் வெறும் ஆண்கள் மட்டும் தான் படிக்கிறார்களா? பெண்களுக்கு இடமில்லையா? பிற்படுத்தப்பட்ட பெண்களுக்காகவா நீங்கள் வாதடுகிறீர்கள்? அல்லது பொதுவாக பெண்களுக்கு இடப்பங்கீடு வேண்டும் என்கிறீர்களா? இந்த கேள்விகளுக்கு முதலில் உங்களது பதில் சொல்லுங்கள். அதன் பின்னர் விவாதிப்போம்.

புது விசை இதழில் கீதாவின் ஏற்கனவே படித்ததுதான். அதிலிருந்து ஒரு பகுதி...

//தமிழகத்தில் பார்ப்பனியம் தொடர்ந்து விமர்சனப் படுத்தப்பட்டாலும் அது சாதித்துள்ள வேலைப் பிரிவினையானது-உடலுழைப்புக்கும் மூளை உழைப்புக்கும் இடையிலான பிரிவினையானது-நவீன கல்வியுலகை தொடர்ந்து ஆட் கொண்டுள்ள நிலையில் வருண தருமத்தை வேரறுக்கும் கல்வித்திட்டம் வகுக்கப்பட வேண்டியதன் தேவையை நாம் அங்கீகரிக்க வேண்டியவராகிறோம். உழைப்பையும் உழைப்பாளியையும் கைவினைஞனையும், நவீன கல்விக்குள் கொண்டுவரத்தக்க கல்வி நமக்கு தேவை. இவர்களுக்கு வாய்த்துள்ள பட்டறிவை மேலும் செழுமைப்படுத்தும் நவீன அறிவியல் கல்வியையும் தத்துவக் கல்வியையும் வளர்த்தெடுப்பதற்கு பதில் பார்ப்பன ‘ஐ.ஐ.டி’களையும் சூத்திர-தலித் ‘ஐ.டி.ஐ’களையும் உருவாக்கி வருணக் கொள்கையை கட்டிக்காத்து வருகிறோம்.//

கீதாவின் கட்டுரையின் ஒரு பகுதி இது. உயர்கல்விநிலையங்கள் எந்த சாதியினரால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது?

April 06, 2007 11:38 AM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv