Tuesday, April 24, 2007

தமிழ்மணத்திற்கு ஆதரவு!


சாதி/மத வெறியர்கள் பரப்பும் அவதூறுகளை புறந்தள்ளி தமிழ்மணத்திற்கு எனது முழு ஆதரவை அளிக்கிறேன்.

22 Comments:

Blogger கோவி.கண்ணன் said...

சத்தம் இல்லாத தமிழ்மணம் கேட்டேன்,
யுத்தம் இல்லாத விவாதங்கள் கேட்டேன்.
பதிவர்களுக்கு இடையே நேர்மை கேட்டேன்.
சமநீதி எங்கும் கிடைத்திடக் கேட்டேன் !

சிபா உங்க ஆதரவுக்கு பதிவுக்கு என் பேராதரவு!
:)

April 24, 2007 9:10 AM  
Blogger Muthu said...

இனிய நண்பர் சிவபாலன் பதிவின் மூலம் நானும் என் ஆதரவினை தெரிவிக்கிறேன்.

என் பதிவில் பட்டையை சேர்க்கக்கூட எனக்கு நேரம் இல்லையப்பா..


இப்படிக்கு

திராவிட ராஸ்கலாக இருந்து திராவிட ரவுடியான முத்து

April 24, 2007 9:14 AM  
Blogger மங்கை said...

கோவி.கண்ணன் said...
//சத்தம் இல்லாத தமிழ்மணம் கேட்டேன்,
யுத்தம் இல்லாத விவாதங்கள் கேட்டேன்.
பதிவர்களுக்கு இடையே நேர்மை கேட்டேன்.
சமநீதி எங்கும் கிடைத்திடக் கேட்டேன் !///


கோவி கண்ணன்.. படத்தில ஹீரோ இதெல்லாம் கிடைக்கலைன்னு விரக்தியில தான் பாடரார்.. இங்கேயும் அப்படியே ஆகிறப் போகுது..

compensate பண்றதுக்கு வேற பாட்டு ஏதாவது பாடீருங்க..:-))

April 24, 2007 9:35 AM  
Blogger சிவபாலன் said...

GK,

உங்களின் பேராதரவுக்கு மிக்க நன்றி

April 24, 2007 10:18 AM  
Blogger சிவபாலன் said...

தலைவர் முத்துவின் ஆதரவை இங்கே பதிவு செய்தது மகிழ்ச்சியளிக்கிறது.

April 24, 2007 10:20 AM  
Blogger சிவபாலன் said...

மங்கை,

:)

வருகைக்கு நன்றி!

GK, இன்னொரு பாடலையும் கொடுத்துவிடுங்க.. :)

April 24, 2007 10:23 AM  
Blogger வெற்றி said...

சிவபாலன்,
வணக்கம்.

என்ன நடந்துவிட்டது என்று ஆளாளுக்கு தமிழ்மணத்திற்கு ஆதரவு என பதிவு போடுகிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா?ஏதாவது நான் கவனிக்கவில்லையா/தவறவிட்டேனா?
:-))

தமிழ்மணத்தின் சேவையை மிகவும் நன்றியுடன் பாராட்ட வேண்டும். அதில் எனக்கு எந்தவொரு மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை.

உலகின் பல மூலைகளிலும் இருக்கும் தமிழர்களை இணைக்கும் ஒரு உறவுப்பாலமாகத் தமிழ்மணம் செயற்படுகின்றது என்றால் மிகையாகாது.

யாழ்ப்பாணத்தில் இருக்கும் சுப்பனையும், காஞ்சியில் இருக்கும் கந்தனையும், ஆபிரிக்காவில் இருக்கும் வேலனையும் இணைத்து நட்புக் கொண்டாட வைத்தது/வைக்கிறது தமிழ்மணம்.

ஆகவே என் பேராதரவும் தமிழ்மணத்திற்கு உண்டு.

அதேநேரம், தமிழ்மண நிர்வாகத்தினர் சில விடயங்களைத் தவறாகக் கையாண்டதும் இந்தக் குழப்பங்களுக்கு ஒரு காரணம் என்பதை மிகவும் பணிவன்புடன் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இது என் தனிப்பட்ட கருத்து. நான் கடந்த சில மாதங்களாக இதை அவதானித்து வந்ததால்தான் சொல்கிறேன்.

April 24, 2007 11:08 AM  
Blogger சிவபாலன் said...

வெற்றி

வாங்க..

வெறியர்கள் ஆட்டம் அதிகமாகிவிட்டதால்தான் இந்த ஆதரவு பதிவு!

உங்கள் ஆதரவுக்கும் நன்றி!

வருகைக்கு மிக்க நன்றி!

April 24, 2007 11:14 AM  
Anonymous Anonymous said...

திராவிடக் கருத்துக்களுக்கு இனி எதிர் கருத்து தமிழ்மணத்தில் இருக்கப்போவதில்லை.. இந்துமத துவேஷத்திற்கும் இனி எதிர் கருத்து தமிழ்மணத்தில் இருக்கப்போவதில்லை.. எதிரணியே இல்லாம சிக்சரா அடிச்சி என்னப்பா பிரயோசனம்...

என்னமோ போங்கப்பா...

April 24, 2007 11:41 AM  
Anonymous Anonymous said...

//இந்துமத துவேஷத்திற்கும் இனி எதிர் கருத்து தமிழ்மணத்தில் இருக்கப்போவதில்லை..//

repeat .

I can see all anti Hindu /Indian blogs here .

I like to see all not filtered system .

Without "vidathu karuppu " and aravindhan . TM will become a propaganda not a collections .

April 24, 2007 12:54 PM  
Blogger கருப்பு said...

எனது ஆதரவையும் இங்கே பதிவு செய்கிறேன்.

April 24, 2007 6:20 PM  
Blogger குமரன் (Kumaran) said...

வெற்றியின் கருத்துடன் ஏறக்குறைய நானும் ஒத்துப் போகிறேன். தமிழ்மணத்தார் சில விடயங்களைத் தவறாகக் கையாண்டதாக அவருடைய அவதானத்தைக் கூறியிருக்கிறார். எனக்கும் அப்படிப் பட்டத் தோற்றம் தான் கிட்டியிருக்கிறது. அது வெறும் மாயத் தோற்றமா இல்லை உண்மையிலேயே தமிழ்மணத்தார் தவறாக கையாண்டிருக்கிறார்களா என்பது இப்போது யாரும் (தமிழ்மணத்தார் உட்பட) எனக்குத் தெளிவாகச் சொல்ல முடியும் என்று எண்ணவில்லை. காலம் பதில் சொல்லும்.

அனானி சொன்னது போல் துவேஷக் கருத்துகளுக்குத் தமிழ்மணத்தில் இனி எதிர் குரல் இருக்காது என்று எண்ணவில்லை. யார் என்ன சொன்னாலும் புரிந்துணர்வு கொள்ள மறுக்கும் அன்பர்கள் இருக்கும் வரை எதிர் எதிர் குரல்கள் நாகரிகத்தோடோ இல்லாமலோ இங்கோ வேறு எங்காவதோ ஒலித்துக் கொண்டே தான் இருக்கும் என்பது எனது அவதானம்.

April 24, 2007 8:14 PM  
Blogger கோவி.கண்ணன் said...

//இந்துமத துவேஷத்திற்கும் இனி எதிர் கருத்து தமிழ்மணத்தில் இருக்கப்போவதில்லை.. //

இவர்கள் (வெளியேறியவர்கள்) மட்டுமே இந்துக்கள் என்று சொல்ல வருகிறாரா ?

April 24, 2007 9:03 PM  
Anonymous Anonymous said...

vetri kumaran what are they

April 24, 2007 9:04 PM  
Blogger ஆதி said...

ஆதிசேஷனை தூக்கியபோது பிராமணீயம் எங்கே சென்றது?
நானும் எழுத வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் எழுதும் நிலைக்கு ஆளாக்கி விட்டார்கள். பிராமணீயம் எழுத வேண்டாம் என்று தடுக்க யாரும் இல்லை. இது நமது சொந்த வலைப்பதிவு. நமக்குப் பிடித்ததை எல்லாம் எழுதுகிறோம். முஸ்லிமைக் கண்டபடி வாய்க்கு வந்தபடி திட்ட பார்ப்பனர்கள் எல்லாம் நமது வலைப்பதிவைப் பயன்படுத்துகிறோம்.

சொந்த பெயரில் ஒரு பதிவும் போலியாக ஒரு பெயரிலும் நமது கருத்துக்களை மக்கள் முன் வைக்கிறோம். அதனைக் கேள்வி கேட்க தமிழ்மணத்துக்கு உரிமை இல்லை. நமதுபதிவோ அல்லது பின்னூட்டமோ ஆபாசமாக இருக்கும்போது அல்லது வரையறைகளை மீறும்போது மட்டுமே தமிழ்மணம் நம் பதிவுகளை தூக்குகிறது. எனவே அவர்கள் ஆரிய திராவிட பேதம் பார்ப்பது இல்லை.

நான் எனது பதிவினில் முஸ்லிமை எதிர்ப்பேன், அல்லது தாக்குவேன். அது எனது தனிப்பட்ட உரிமை. அதேபோல தமிழ்மணம் நிர்வாகிகள் தங்களுக்குப் பிடித்த பதிவுகளை சேமிக்க பூங்கா என்ற இதழை நடத்துகின்றனர். அங்கே சென்று பார்ப்பனீயம் மட்டுமே போட வேண்டும் அல்லது சமகிருதம்தான் போட வேண்டும் என்று சொல்வது சரியாக எனக்கு படவில்லை. அதேபோல நமது ஒவ்வொருத்தரின் பதிவுக்கும் தமிழ்மணமும் அதன் நிர்வாகிகளும் வந்து திராவிடர்களை ஆதரித்துதான் பதிவுகள் போட வேண்டும் என்று சொன்னால் நாம் கேட்போமா? கண்டிப்பாக கேட்க மாட்டோம்.

எனவே இந்த விஷயத்தில் தமிழ்மணம் சொல்வது சரியாகப் படுகிறது எனக்கு. எனவே எனது தார்மீக ஆதரவை தமிழ்மணத்துக்கு நான் அளிக்கிறேன். இதனால் என்மேல் கோபம் கொண்டு நேசகுமார், திருமலைராஜன், ஜயராமன், டோண்டு, முகமூடி, எல்லேராம், கால்கரி சிவா, வஜ்ரா சங்கர். ம்யூஸ், அரவிந்தன், ஜடாயு, இட்லிவடை, அன்புடன் பாலா போன்றவர்கள் என்னை ஆபாசமாக சித்தரித்தாலும் கவலைப்பட போவதில்லை. எனது ஆதரவு என்றும் தமிழ்மணத்துக்கு உண்டு.

ஜெய்ஹிந்த்!!!

April 24, 2007 9:24 PM  
Blogger வினையூக்கி said...

ஆதரவு உண்டு. பட்டையும் போட்டாச்சு.

April 24, 2007 10:48 PM  
Blogger SurveySan said...

நானும் பட்டைய போட்டாச்சு. ஆனா இது வேற பட்டை.

April 24, 2007 11:12 PM  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

சிவபாலன் மற்றும் வெற்றி,

தமிழ்மணம் ஐபிகளை அளித்திருக்கலாம் அளிக்காமலும் இருந்திருக்கலாம். ஆனால் ஒரு ஐயப்பாடு எழுப்பப்பட்டது. அதுவும் நிச்சயமாக குற்றச்சாட்டாக இல்லை. அந்த ஐயப்பாடு எழும்பிய நிலையிலும் கூட தமிழ்மணம் அளித்திருக்க வாய்ப்பில்லை என நம்பியவர்களில் நானும் ஒருவன். இதோ நான் கூறிய கருத்துக்களை மீண்டும் கூறுகிறேன்:
"சரி அதையெல்லாம் விடுங்கள். அது உங்கள் சொந்த கதை. ஆனால் தங்கள் கெடு-cum-விளக்கத்தில் கூறியுள்ள ஒரு வரி பிரச்சனையாக உள்ளது. "எமது செயற்பாடுகள் குறித்து தார்மீகக்காரணங்களுக்காக நாமே விரும்பினால்மட்டுமே தகவல்களைத் தாமாகவே எமது விதிமுறைகளுக்கமைய வந்திணைந்து கொள்ளும் பதிவர்களுக்குத் தரமுடியும்." தார்மீகக்காரணம் என தமிழ்மணம் எதைக்குறிப்பிடுகிறது? தார்மீகக்காரணத்துக்காக தமிழ்மண நிர்வாகிகள் விரும்பினால் உங்கள் விதிமுறைக்கொப்ப இணையும் பதிவர்களுக்கு எந்த தகவல்களை தருவீர்கள்? "அவை முறையான விண்ணப்பமூடே சட்டம் கொணரக் கேட்டாலன்றி, எந்நிலையிலுங்கூட, எவருடனும் பகிர்ந்துகொள்ளப்படுவதில்லை" என்கிற வரிக்கும் 'தார்மீகக்காரணங்களுக்காக நாமே விரும்பினால்' தகவல்களை அளிப்பேன் என்பதற்கும் வேறுபாடு இருக்கிறதல்லவா? இந்த தார்மீகக்காரணங்களுக்காக நீங்களே விரும்பி அளிக்கும் தகவல்களில் ஐ.பி அட்ரஸ் இத்யாதி அடங்குமா?நிற்க நீங்கள் ஐ.பி தகவல்களை கொடுத்திருக்க மாட்டீர்கள் என நான் உறுதியாக நம்புகிறேன். உங்கள் 'தார்மீகக் காரணங்களுக்கும்' 'நாமே விரும்பும்' விரும்பங்களுக்கும் அப்பால் அந்த அளவுக்கான நேர்மை எஞ்சியுள்ளது என்றே நினைக்கிறேன்."

பாருங்கள். அவர்களது இடியாப்பக் குழப்பமான வாக்கியம் சில ஐயப்பாடுகளை மீள்-எழுப்புவதையே நானும் கூறியிருந்தேன். ஆனால் பாசிச மனப்பாங்குள்ள தமிழ்மணத்துக்கு இது 'நச்சு பிரச்சாரம்' ஆயிற்று. "எமது செயற்பாடுகள் குறித்து தார்மீகக்காரணங்களுக்காக நாமே விரும்பினால்மட்டுமே தகவல்களைத் தாமாகவே எமது விதிமுறைகளுக்கமைய வந்திணைந்து கொள்ளும் பதிவர்களுக்குத் தரமுடியும்" என்பதில் எமது செயல்பாடுகள் என்னவென்றால் தார்மீக காரணங்களுக்காக நாங்களே விரும்பினால் தகவல்களை எமது விதிமுறைக்கு ஏற்ப வந்திணையும் பதிவர்களுக்கு தரமுடியும்" எனும் பொருள் இருப்பதை நோக்குங்கள். "எமது செயல்பாடுகள் குறித்த தகவல்களை" என எப்படி இதனை பொருள் கொள்ள முடியும்? எதுவானால் என்ன சகிப்புத்தன்மையற்ற பாசிச போக்கினை ஏற்றுக்கொண்டுதான் எனது பதிவு இந்த திரட்டியில் ஏற்கப்பட வேண்டுமென்றால் எனக்கு அந்த திரட்டி தேவையில்லை. ஆனால் இது பாசிசம் என உரக்க கூறுவோம். மீண்டும் மீண்டும்.

April 26, 2007 8:13 AM  
Anonymous Anonymous said...

//கோவி.கண்ணன் said...
//இந்துமத துவேஷத்திற்கும் இனி எதிர் கருத்து தமிழ்மணத்தில் இருக்கப்போவதில்லை.. //

இவர்கள் (வெளியேறியவர்கள்) மட்டுமே இந்துக்கள் என்று சொல்ல வருகிறாரா ?//


கோவி.கண்ணன் அய்யா
நான் அப்படி சொல்லவில்லை... இந்துமத துவேஷக் கருத்துக்களை மிகக் கடுமையாக எதிர்த்தவர்கள் இப்போது வெளியேறியவர்கள் மட்டுமே..

மீண்டும் சொல்கிறேன் அவர்கள் கருத்து சரியா? தவறா? என்பதல்ல கேள்வி.. இனி ஒரு பக்க ஓசை மட்டுமே கேட்க்கும் என்பது என் ஆதங்கம்...

திரு ஜெகத் பதிவில் சிலர் அனானிகளாக குறிப்பிட்டதே என்னுடைய கருத்தும்....

//திரு.செகத் அவர்களே, வணக்கம்.
முன்பு தொடர்ந்து எழுதி வந்த பல பதிவர்கள் இப்போது எழுதவதேயில்லை / மிகக் குறைவாக எழுதுகிறார்கள். விலகியவர்கள்/விலக்கப்பட்டவர்கள் முன் வைக்கும் கருத்துக்கள் மீது விவாதம் இருக்கலாம்.ஆனால் அவர்கள் விபரம் தெரியாதவர்களோ அல்லது வெறுமனே வார்த்தைகளை வைத்து விளையாடுபவர்களோ அல்லர். அரவிந்தன் நீலகண்டன் ஆர்.எஸ்.எஸ்காரர்தான். அவரது அனைத்து எழுத்துக்களையும் ஆர்.எஸ்.எஸ் என்ற சிமிழிக்கும் அடைத்துவிட முடியாது. இந்த வகையில் நோக்கும்கால் தமிழ்மணத்தில் உள்ள கருத்துக்களின் பன்வகைத்தன்மை பாதிப்புற்றிருப்பதை அவதானிக்க முடியும். இதைப் புரிந்து கொள்ளாமல் தமிழ் மண ஆதரவு பட்டையை இடுவதும், கசடுகள் ஒழிந்தன என்று எக்காளமிடுவதும் தமிழ்மணம் ஒரு பக்க சார்புடையவர்களையே ரும்பான்மையினராகக் கொணட ஒர் திரட்டியாகிவிடுமோ என்ற ஐயம் எழுகிறது. தமிழில் காத்திரமான செய்தி அலசல் கட்டுரைகள்,துறை சார்ந்த பதிவுகள், இருதரப்பாரும் பங்கு பெறும் செம்மையான விவாதங்கள் குறைவு. இப்போது வலைப்பதிவுகளில் அவை இன்னும்
குறையும் நிலை உருவாகியிருப்பது நல்ல அறிகுறி அல்ல.
(எழுத்துப் பிழை இருப்பினும் கருத்தினை தெளிவாக இட்டருக்கிறேன் என்று கருதுகிறேன். எனவே பிழை பொறுத்திடுக)
//




//என்னை பொருத்தவரை, சரியோ தவறோ... ஒரு சாராரை நீக்கியது/அவர்களாகவே நீங்கியது, தமிழ்மணத்திற்கு பின்னடைவே...

இருவரும் தமிழ்மணத்தில் இருந்ததால் தான் என் போன்றோர் இருசாராரின் கருத்துக்களையும் அறிய முடிந்தது....சில விரும்பத்தகாத விஷயங்கள் நடந்திருந்தாலும் அதை தமிழ்மணம் சரியாக Handle செய்யவில்லை என்றே எண்ணத்தோன்றுகிறது...

இதுவரை பலவிஷயங்கள் விவாதிக்கப்பட்டு வந்தன.. பல அரிய கருத்துக்கள் அறிய வந்தன..அவசரபடாமல்...உணர்ச்சிவசப்படாமல் யோசித்தால் ஏற்பட்டு இருக்கும் இழப்பு புரியும்.. இனி ஒரு பக்க வாதங்களே தமிழ்மணத்தில் இருக்கும், அதற்கு எதிர்கருத்தோ விவாதங்களோ இருக்கப்பொவதில்லை..
விவாதங்கள்/எதிர்கருத்துக்கள் இல்லாமல் எந்தக் கருத்தும்/வாதமும் முழுமை அடைய போவதில்லை...

இப்பொழுதே. கடந்த சில நாட்களாக வாசகர் பரிந்துரை பக்கம் சென்று பார்த்தால்.. திராவிட பதிவுகளும், இஸ்லாமிய பதிவுகளும் தான் பெரும்பான்மையாக உள்ளன.. ஒரு பக்க கருத்துக்களே முதன்மை பெறுவது ஆரோக்கியமற்ற சூழல்.


உங்களுடைய வாதங்களை சோதனைக்குட்படுத்தி எதிர் தரப்பினர் பலருடன் விவாதித்து முடிவில் நீங்கள் உங்கள் கருத்தில் வெற்றி பெறும் போது கிடைக்கும் சந்தோஷம், பெருமை, கவுரவம் இனி உமக்கு வாய்க்கப்போவதரிது...

இதை சரியாக புரிந்து கொள்ளாமல் ஒரு பக்க ஆட்டமே வெற்றி என நினைத்தால் சொல்வதுற்கு ஏதுமில்லை...நன்றி
//


அவர்களை தவிர நல்ல பதிவர்கள் இல்லையா?? என்று பதில் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.. கண்டிப்பாக இருப்பார்கள்.. அதனால் இவர்கள் இல்லாமல் போவதனால் ஏற்படும் இழப்பு இல்லையென்றாகிவிடுமா??? இல்லை இவர்களுடையததெல்லாம் மொக்கை பதிவு என்றாகிவிடுமா...


பொதுசேவை செய்ய வரும் போது சேவைமன்ப்பான்மையுடன் சகிப்புத்தன்மையும் வேண்டும்.. அனைத்து பெரும் தலைவர்களும் இதைவிட கடுமையான, கொடுமையான விமர்சனங்களை சந்தித்திருக்கிறார்கள். அதை அவர்கள் பொறுமையுடனும், நிதானத்துடனும் எதிர் கொண்டுள்ளனர்..

தமிழ்மணத்தினடமும் அதைதான் எதிர்பார்க்கிறோம்.. அவர்கள் செய்யும் சேவை மிகப்பெரியது...அதை இங்கு யாரும் மறுக்கவில்லை... தன் மீது குற்றம் சாட்டப்பட்ட போது அவர்கள் எடுத்த நடவடிக்கைகளில் ஒரு கோபமும், பொறுமையின்மையும் தான் தெரிகிறது...

மீண்டும் சொல்கிறேன்... எதிர்ப்பவன் பலமாக இல்லாத எந்தவிதமான entityயும் பெரும் வெற்றி பெற்றதில்லை..

April 26, 2007 11:14 AM  
Blogger சிவபாலன் said...

Anonymous has left a new comment

-- Edited By Sivabalan

தமிழ்மணம் நேசகுமார், அரவிந்தன் நீலகண்டன், எழில், ஜடாயு, கால்கரி சிவா, வஜ்ரா இவர்களின் கால்களிலே விழுந்து தமது குற்றங்களை ஒத்துக்கொள்ளவேண்டும். இவர்களிடம் மன்னிப்பு கேட்பதாகவும் தாங்கள் பாசிஸ்டுகள், அரபுக்காரர்கள், திம்மிகள், தேசவிரோதிகள் என்று ஒத்துக்கொண்டு பட்டை தமிழ்மணத்திலே ஒட்டவேண்டும். இவர்களை மீண்டும் சேர்த்துக்கொள்ளும்வரை திராவிட, முஸ்லீம் பதிவர்களை பதிவு போட அனுமதிக்கக்கூடாது.

நேசகுமார் சொல்லும் குற்றச்சாட்டுகளை ஆதாரம் கேட்காமல் ஏற்றுக்கொள்ளவேண்டும். அதுவரை நாங்கள் தமிழ்மணத்திலே சேரமாட்டோம். ஆனால், அனானிகளாக எங்கள் கருத்தை நாங்களே ஆதரித்தும் உறுதிப்படுத்தியும் எழுதுவோம். மற்றவர்கள் அனானிகளாக எழுதுவதை அனானிகளாகக் கண்டிப்போம்.

April 26, 2007 1:04 PM  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

சிவபாலன்,
இங்கே உள்ள விசயத்தை பாருங்கள்.அதிர்ச்சியாக இருக்கிறது. நான் தமிழ்மணத்தின் பாசிச போக்கை எதிர்த்துதான் வெளியேறினேனே தவிர அவர்கள் ஐபியை கொடுக்கும் அளவுக்கு நேர்மை கெட்டு போக மாட்டார்கள் என நினைத்தேன். அந்த நினைப்பிலும் மண் விழுந்துவிட்டது. தமிழ்மணத்திலிருந்து வெளியேறியது நல்லது. இதற்கு நேசகுமாருக்குதான் நன்றி சொல்லவேண்டும்.

April 28, 2007 10:49 AM  
Blogger Deepak Vasudevan said...

தமிழ்மணத்திற்கு ஆதரவு என் பதிவிலும் போட்டு விட்டேன். முகவரி.

August 19, 2007 8:53 AM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv