Saturday, April 28, 2007

பாரதிதாசன் பிறந்த தின நல்வாழ்த்துக்கள்

தமிழுக்கும் அமுதென்று பேர்! - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!


1891 - ஏப்ரல் 29, அறிவன் (புதன்) இரவு பத்தேகால் மணிக்குப் புதுவையில் சுப்புரத்தினம் பிறந்தார். தந்தை கனகசபை. தாய் இலக்குமி. உடன்பிறந்தோர் தமையன் சுப்புராயன். தமக்கை சிவகாமசுந்தரி. தங்கை இராசாம்பாள்.

1908 - புதுவை அருகில் உள்ள சாரம் முதுபெரும் புலவர் (மகா வித்துவான்) பு.அ. பெரியசாமியிடமும் பின்னர் பெரும் புலவர் பங்காரு பத்தரிடமும் தமிழ் இலக்கணஇலக்கியங்களையும் சித்தாந்த வேதாந்த பாடங்களையும் கசடறக் கற்றார். மாநிலத்திலேயே முதல் மாணவராகச் சிறப்புற்றார். புலவர் சுப்புரத்தினத்தை வேணு "வல்லூறு" வீட்டுத் திருமணத்தில் பாரதியார் காணும் பேறு பெற்றார். பாரதியாரின் தேர்வு எடையில் நின்றார். வென்றார். நட்பு முற்றியது. பாரதியாரின் எளிய தமிழ், புலமை மிடுக்கேறிய சுப்புரத்தினத்தைப் பற்றியது.

1918 - பாரதியாருடன் நெருங்கிப் பழகிய பழக்கத்தால் சாதி, மதம், கருதாத தெளிந்த உறுதியான கருத்துகளால் ஈர்ப்புற்றுப் புலமைச் செருக்கும் மிடுக்கும் மிகுந்த நடையில் எழுதும் தேசிய தெய்வப் பாடல்களைப் பழகு தமிழில் எழுதுதல். புதுவை, தமிழக ஏடுகளில் புதுவை கே.எசு.ஆர்., கண்டெழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், கே.எசு. பாரதிதாசன் என்ற பெயர்களில் பாடல், கட்டுரை, கதை மடல்கள் எழுதுதல். 10 ஆண்டுக்காலம் பாரதியாருக்கு உற்றுழி உதவியும் உறு பொறுள் கொடுத்தும் தோழனாய் இருந்தார்.


1944 - பொரியார் முன்னிலையில் தலைமகள் சரசுவதி திருமணம். மணமகன் புலவர் கண்ணப்பர். "இன்ப இரவு" (புரட்சிக்கவி) முத்தமிழ் நிகழ்ச்சி அரங்கேற்றம். இருண்ட வீடு, காதல் நினைவுகள், நல்ல நீர்ப்பு (நாடகம்) அழகின் சிரிப்பு ஆகிய நூல்கள் ஒன்றன் பின் வெளியிடல். சதி சுலோசனா என்ற திரைப்படத்திற்குக் கதை, உரையாடல், பாடல் எழுதுதல். குடும்ப விளக்கு 2 வெளியிடல். செட்டிநாடு முழுவதும் இலக்கியச் சொற்பொழிவு நடத்திப் பகுத்தறிவு இயக்கத்தைக் காலூன்றச் செய்தல். கலைவாணர் என்.எசு.கே. வுக்காக "எதிர்பாராத முத்தம்" நாடகமாத் தீட்டித் தருதல். "கற்கண்டு" பொறுமை கடலினும் பெரிது இணைத்து எள்ளல் நூல் வெளியிடல்.

7 Comments:

Blogger மாசிலா said...

புரட்சி கவி பாரதிதாசன் புகழ் ஓங்குக!

பகிர்ந்தமைக்கு நன்றி.

April 28, 2007 12:47 PM  
Blogger மருதநாயகம் said...

பாவேந்தர் பற்றிய தகவல்களுக்கு நன்றி சி.பா

April 29, 2007 8:07 AM  
Blogger Thamizhan said...

புரட்சிக் கவிஞரின் பிறந்த நாளில் அவருடைய தேன்சட்டியிலிருந்து ஒரு சொட்டுத் தேன்...

நிலவைப் பாடாத கவிஞனே இல்லை.இந்த வார்த்தைகளை வேறு யாராவது இவ்வளவு சுவையுடன் சொல்லியிருக்கிறார்களா பாருங்கள்...

நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து
நிலவென்று காட்ட்டுகின்றாய் ஒளி முகத்தைக்
கோல முழுதும் காட்டி்விட்டால் காதல் கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ
வானச் சோளையிலே பூத்த தனிப்பூவோ நீதான்
சொக்க வெள்ளிப் பார்க்குடமோ அமுத ஊற்றோ
காலை வந்த செம்பரிதிக் கடலில் மூழ்கி கன்ல் மாறிக் குளிரடைந்த ஒளிப் பிழம்போ....

April 29, 2007 8:35 AM  
Blogger சிவபாலன் said...

மாசிலா, மருதநாயகம்,

வருகைக்கு நன்றி!!

April 29, 2007 8:36 AM  
Blogger வெற்றி said...

சிவபாலன்,
அருமையான பதிவு. பாவேந்தர் பற்றிய தகவல்களுக்கு மிக்க நன்றி.

இனமான உணர்வு மிக்க பாடல்கள் பல தந்தவர். எனது தளத்தின் [Blog] முகப்பில் அவரின் பாடல் வரிகளைத்தான் நான் போட்டிருக்கிறேன்.

அவரது இறுதி ஆசைதான் என் ஆசையும்.

"சாகும் போதும் தமிழ் படித்துச் சாக வேண்டும்.
என் சாம்பலும் தமிழ் மணத்து வேக வேண்டும்"

April 29, 2007 11:29 AM  
Blogger kannabiran, RAVI SHANKAR (KRS) said...

பாவேந்தர் நாளில் அவரின் தமிழ்த் தொண்டை நினைவு கூர்வோம்.
அவர் தமிழிசைக்கு எவ்வளவோ நற்பணியாற்றியுள்ளார்;
தியாகராஜரின் கீர்த்தனையைப் பொருளும் சுவையும் ராகமும் மாறாது அப்படியே தமிழில் தந்து, தமிழாலும் முடியும் என்று சாதித்ததை, இன்று மாலை இசை இன்பம் வலைப்பூவில் இட முயல்கிறேன்.

துன்பம் நேர்கையில் யாழ் எடுத்துநீ
இன்பம் சேர்க்க மாட்டாயா....
என்று திரை இசையிலும் பாவேந்தர் நீங்கா இடம் பெற்றுள்ளார் அல்லவா!

April 29, 2007 12:22 PM  
Blogger maraimalai said...

பாவேந்தர் பிறந்தநாளில் அவர் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்தமைக்கு நன்றி.
117-ஆம் பிறந்தநாளில் 117 வலைப்பூக்களிலாவது அவரைப் ப்ற்றி
எழுதினால் மகிழ்வாக இருக்கும்.
சென்னைவாசிகளுக்கு ஒரு செய்தி:
இன்று மாலை ஆறு மணிக்குச் சென்னை உயர்நீதிமன்றம் எதிரில் ஒய்.எம்.சி.ஏ.
மன்றத்தில் பாரதிதாசன் பிறந்தநாள் விழா.சென்னைவாசிகள் வருக-
மறைமலை இலக்குவனார்

April 29, 2008 12:49 AM  

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv