Sunday, April 29, 2007

தளைதட்டாத வெண்பா - காதல் : வைரமுத்து




மல்லிகா, துறையூர்: கேள்வி: - மண்ணுக்குள் போனாலும் மல்லிகா எனது கண்ணுக்குள் நீ வாழ்வாய் கண்ணே என்று எனக்கு வெண்பா எழுதியிருக்கிறான் என் அண்ணனின் நண்பன். எனக்குக் காதல் வந்துவிடும்போல் இருக்கிறதே!




வைரமுத்துவின் பதில்:

தங்கை மல்லிகா! மொழி பார்த்தோ, முகம் பார்த்தோ வந்துவிடக் கூடாது காதல், நேசித்தல்_ புரிதல்_ பொருந்துதல்_ மதித்தல் _ சத்தியம்_ சாத்தியம் எல்லாம் கூடிய கலவையே நல்ல காதல். இன்னொன்று_ உன் நண்பன் எழுதிய வெண்பா தளைதட்டுகிறது.

மல்லிகா என்பது கூவிளம் விளமுன் நேர்வர வேண்டும் வெண்பாவுக்கு; இங்கே நிரை வந்திருக்கிறது. என என்ற புளிமாச்சீருக்குப் பிறகு நிரை வரவேண்டும். இங்கே நேர் வந்திருக்கிறது. இன்னொன்று கண்ணே என்று முடியக்கூடாது வெண்பா. நாள்_ மலர்_ காசு_ பிறப்பு என்ற வாய்பாடுகளுள் ஒன்றால்தான் அது முடிய வேண்டும். ஆகவே மண்ணுக்குள் போனாலும் மல்லிகா என்னிரண்டு கண்ணுக்குள் நீ வாழ்வாய் காண் என்றிருந்தால் அது தளைதட்டாத வெண்பா. வெண்பா தளைதட்டினால் திருத்திக் கொள்ளலாம். காதல் தளை தட்டாமல் பார்த்துக்கொள்.



நன்றி: குமுதம்

2 Comments:

Blogger மங்கை said...

ஐயோஓஓஓஓஓ..

ஏன் சிவா..

புது வேலை.. ரொம்ப கஷ்டமா..

கூவிளம் விளமுன், புளிமாச்சீருக்குப்
(இது எல்லான் நான் படிச்சேன்?????)

எதுக்கும் தங்கமணிகிட்ட கொஞ்சம் சொல்லி வைக்கலாம்..

அழகா நம்ம ஊரு பத்தி எழுதுங்கன்னா
வைரமுத்துவ விட மாடேங்கரீங்க...
:-))

May 02, 2007 12:48 AM  
Anonymous Anonymous said...

கவிப்பேரரசா கொக்கா ?

May 02, 2007 10:24 PM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv