Monday, May 07, 2007

பொது இடத்தில் கட்டி அணைப்பது அநாகரிகமா?



பொது இடத்தில் கணவன் மனைவி கட்டிப் பிடிப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று மக்களிடம் தினகரன் ஏசி நில்சன் நடத்திய சர்வே முடிவு.



உண்மையில் மக்களின் இந்த மன நிலை என்னை சற்று யோசிக்க வைக்கவிட்டது. அதுவும் 90%.. ம்ம்ம்ம்..

அப்ப திரையரங்கில் கானும் சினிமாவில் ஓகேவா?

என்னை பொருத்தவரையில் இது அவர்களின் தனிப்பட்ட விருப்பம்.

நன்றி: தினகரன்

28 Comments:

Blogger Unknown said...

//என்னை பொருத்தவரையில் இது அவர்களின் தனிப்பட்ட விருப்பம்.//

ஏற்கத்தக்க கருத்து. அப்படியே வழிமொழிகிறேன் சிவபாலன்.

May 07, 2007 7:15 PM  
Blogger சிவபாலன் said...

செல்வன் சார்

ஆமாங்க... ஆனால் மக்கள் ஏன் இது மாதிரி ஒருமித்த கருத்து வைத்திருக்கிறார்கள் என தெரியவில்லை. நிச்சயம் இந்த சர்வே சேம்பளில் இளைஞர்களும் இருந்திருப்பார்கள். அவர்கள் கூட அவ்வாறு தான் நினைக்கிறார்கள் என்று அறியும் போது ஆச்சரியமாக உள்ளது..

என்னமோ..

வருகைக்கு மிக்க நன்றி

May 07, 2007 9:14 PM  
Anonymous Anonymous said...

சர்வேயில் கலந்து கொண்டவர்கள் கேள்வியை சரியாகப் புரிந்து கொள்ளவில்லைங்க...

ஒரு கணவர், தனது சொந்த மனைவியை கட்டிப்பிடிப்பது அல்லது ஒரு மனைவி தனது சொந்தக் கணவரைக் கட்டிப்பிடிப்பது தவறா என தெளிவாக கேட்டிருக்க வேண்டாமோ????

May 07, 2007 10:36 PM  
Blogger சிவபாலன் said...

அனானி

தெரியவில்லை. கேள்வியை சரியாகத்தான் புரிந்திருக்கிறார்கள் என நான் நம்புகிறேன்.

ஆனால் நம்ம மக்கள் அநியாயத்திற்கு வெட்கப்படுகிறார்கள்?????

வருகைக்கு நன்றி

May 07, 2007 11:00 PM  
Blogger பொன்ஸ்~~Poorna said...

//நிச்சயம் இந்த சர்வே சேம்பளில் இளைஞர்களும் இருந்திருப்பார்கள். //

சிவபாலன்,
நிச்சயம் இருந்திருப்பார்களா? Samping proportion ஏதும் கொடுத்திருக்காங்களா?

தகவலுக்காக, இதைப் பார்த்தீங்களா?

May 07, 2007 11:00 PM  
Blogger சிவபாலன் said...

பொன்ஸ்,

Sampling Proportion அதில் கொடுக்கவில்லை.

ஆனால் அநாகரிகம் எனறு சொல்லக் காரணங்களை கொடுத்திருக்கிறார்கள்.
1. தமிழ்ப்பண்பாடு கிடையாது
2. மற்றவர்களை தவறு செய்யத்தூண்டும்
3.இது சமூக சீர்கேடு
4. சின்ன பிள்ளைகள் கெட்டு போய்விடுவார்கள்.

ம்ம்ம்ம்.......


சுட்டிக்கு நன்றி!

வருகைக்கு நன்றி

May 07, 2007 11:19 PM  
Blogger முஸ்லிம் said...

//அப்ப திரையரங்கில் கானும் சினிமாவில் ஓகேவா?//

திரையில வர்ரவங்க கணவன் மனைவி இல்லீங்க. அதனாலதான் நாலு சுவத்துக்குள்ளே நடக்குறதையும் திரையில் காட்டுறாங்க.

பொது இடத்தில் கணவன், மனைவி ஒருவரையொருவர் கட்டி அணைப்பது அநாகரீகம்+கொச்சைப்படுத்துவது.

இது என் கருத்துங்க.

May 07, 2007 11:21 PM  
Blogger சிவபாலன் said...

முஸ்லிம்

வாங்க.

அதாவது நாகரிகம் என்பது மாற்றங்கள் நிறைந்ததுதான். பழைய நாகரிகம் இப்போ நிறைய மாறிவிட்டதை யாரும் மறுக்க முடியாது.

சினிமாவில் பொதுவில் கட்டி தளுவுவது நிறைய காண்பித்துள்ளார்கள். அப்ப நாம் மகிழ்ச்சிதான் அடைக்கிறோம்.

கட்டிப்பிடிப்பதால் கொச்சைபடுத்தப்படும் என்பதை என்னால் ஏற்க முடியவில்லை.

இது ஒருவித அச்சம் கலந்த வெட்க உணர்வினால் கூட அநாகரிகம் என சொல்கிறார்கள் என நினைக்கிறேன்.

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

May 07, 2007 11:29 PM  
Blogger சீனு said...

/////
//என்னை பொருத்தவரையில் இது அவர்களின் தனிப்பட்ட விருப்பம்.//

ஏற்கத்தக்க கருத்து. அப்படியே வழிமொழிகிறேன் சிவபாலன்.
/////

அப்படி விட்டுவிட முடியாது என்பது என் தனிப்பட்ட கருத்து. காரணம், தமிழ் நாடு போன்ற இடத்தில் பொதுவில் முத்தமிடுவதில் உங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. பொதுவில் முத்தமிடும் வழக்கம் இருக்கும் நாடான சீனாவில் அடுத்து பொதுவில் top less-ஆக வருவதில் எந்த பிரச்சினையும் இல்லை என்று சொல்ல யாராவது இருப்பார்கள். இதே போல அடுத்த நிலைக்கு படிப்படியாக உயர உயர இர்ஹு மாறிக்கொண்டே இருக்கும்.

உங்கள் கூற்றுப்படி இன்று பொதுவில் முத்தமிடுவதை அனுமதித்தால் இன்னும் 5-10 வருடங்கள் கழித்து அடுத்த நிலைக்கு யாராவது போகலாம் என்பார்கள். இது முடிவில்லாமல் போகும். வீனான கற்பனை அல்ல இது.

மனோகரா படத்தில் ராஜசுலோசனாவை தூணில் கட்டிப்பொடும் காட்சியில் அவர் மார்புக்கு இடையில் கயிறு போனது அப்பொழுது பெரிய ஆபாசமான காட்சியாக பலராலும் விமரிசிக்கப்பட்டது. ஆனால் இப்பொழுது நிலைமை என்ன? ஷெர்லியின் அறை நிர்வாண காட்சி வரும் வரைக்கும் தமிழ் படம் முன்னேரிக்கொண்டிருக்கிறது.

May 08, 2007 12:05 AM  
Blogger PRABHU RAJADURAI said...

சிவபாலன்,

நான் நினைப்பது, 'we are mostly sex starved people'. அதாவது, இங்கு பலருக்கு திருமணத்திற்கு பிறகுதான் மறுபாலரின் அந்நியோநியம் கிடைக்கிறது. அது வரை ஏங்கித் தவிக்கும் உள்ளங்களே அதிகம். எனவே ஒருவர் தனக்கு கிடைத்த 'அதிஷ்டத்தை' பலர் முன் வெளிப்படுத்தும் பொழுது மற்ற உள்ளங்களில் பொறாமையை கடைசியில் வெறுப்பை விளைவிக்கிறது.

நாடு பஞ்சத்தில் தவிக்கையில் ராஜ குடும்பத்தினர் ஆடம்பரமாக திருமணம் நடத்திய பொழுது அனைவரும் கண்டிக்கவில்லையா? அது போலத்தான்.

தற்பொழுது எப்படி என்று தெரியாது. நான் கல்லூரியில் படிக்கையில் திரையரங்கிற்கு யாராவது தனது காதலியை கூட்டி வந்தால்...தொலைந்தது. கிண்டலை காது கொடுத்து கேட்க இயலாது. ஆனால் அப்படி கிண்டலடிக்கும் அனைவரும் அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் விடமாட்டார்கள்...ஏன் கிடைக்கவில்லையே என்று ஏங்கித் தவிப்பவர்கள்தான்.

எனவே நல்ல விருந்து கிடைத்தால், பசியோடு இருப்பவர்களின் மனநிலையினை கருதி சற்று மறைவாக உண்ணுங்கள்.

உடல் முழுவதும் நகை அணிந்து ஒரு பெண் பொது இடத்திற்கு வந்தால், 'இப்படியா வருவது, அதுதான் இல்லாதவனுக்கு திருடணும்னு தோணுது'' என்று கூறுவதில்லையா? அது போலத்தான்.

உங்களுக்கு பிடித்ததை செய்வது உங்கள் உரிமை...சட்டப்படி அது சரியாக இருக்கலாம். ஆனால் தார்மீகப்படி?

அன்புடன்
பிரபு ராஜதுரை

May 08, 2007 7:23 AM  
Blogger மங்கை said...

சிவா

நம்ம சமூகத்தில நிறையா விஷயங்கள் பெரும்பாலனவர்கள் என்ன சொல்றாங்களோ அதவே நாமலும் சொல்ல பழகீட்டோம்... முக்கியமா இது மாதிரி சென்ஸ்டிவான விஷயங்கள்ல உண்மையான கருத்துக்களை படித்தவர்கள் கூட வெளிப்படுத்த மாட்டாங்க..

May 08, 2007 7:59 AM  
Anonymous Anonymous said...

முத்தம் என்பது ஆபாசமா? போச்சடா போ! கண்ணிணாலே பெண்ணை ஒருவன் திருட நினைக்கிற உலகம் சார். கிடைச்ச உடனே திருப்பிக் கொடுத்திட வேண்டும் என இதயம் துடிப்பது இந்த முத்தத்தை மட்டும் தான்.

இட‌த்தையும் நேர‌த்தையும் பார்க்காதீர்க‌ள். அடிக்க‌டி கொடுங்க. கொடுத்துக்கிட்டே இருங்க‌. அனா திருப்பி வாங்க‌ மற‌க்க‌வேண்டாம் சார்.

புள்ளிராஜா

May 08, 2007 8:55 AM  
Blogger -L-L-D-a-s-u said...

ஆம். கட்டிப்பிடிப்பது நம் கலாச்சாரம் இல்லை . ஆனால் கட்டிய மனைவியை கை நீட்டி அடிக்கலாம். அதை நம் கலாச்சார காவலர்கள் ஒத்துக்கொள்வார்கள்.. இந்திய கலாச்சாரம் அது இதுன்னு.. எரிச்சல்தான் வருகிறது .

May 08, 2007 8:59 AM  
Anonymous Anonymous said...

சிவா, சிக்காகோவில இருக்கிற தைரியத்தில தான் எழுதினீங்களா? :) தலைப்பு, பதிவு, பின்னூட்டம் எல்லாம் பாத்துட்டு, முதல்ல எந்த ஊர்ல இருந்துட்டு எழுதிறீங்கன்னு பாத்துக்கிட்டேன்! :)

மங்கை தான் சூப்பரா பின்னூட்டம் விட்டுருக்காங்க. ஆழமான உண்மை அதுதான்! :)

கல்யாணம் ஆயிடுச்சா உங்களுக்கு? அப்படின்னா ஒரு ரகசியம் சொல்லுங்க உங்க வைஃபு-கிட்ட ... ஊர்ல எல்லாரும் காச்சு மூச்சுன்னு கதை விடுவாங்க லுக்கு விடுவாங்க, அதுக்கெல்லாம் அசந்திராம உங்க கையப் பிடிக்கட்டும், தோளில சாஞ்சிக்கிட்டும். மக்கள் அதைப் பத்தி பேசியே மாஞ்சு போறதுல, மத்த குத்தம் குறை பேச மறந்திருவாங்க ... எப்படி ஐடியா? ஆளாளுக்கு புகைஞ்சு போய் பேசுறது காட்டு காமடியா இருக்கும். சர்வேயெல்லாம் சும்மா ... (நாடு திரும்பி அனுபவம்!)

May 08, 2007 9:41 AM  
Anonymous Anonymous said...

அமெரிக்காவில் பெண்கள் குழந்தைக்கு பொது இடத்தில்
பாலூட்டுவது அனாகரிகமா என்று கேட்டி பாருங்கள்.
80 சதம் ஆம் என்று பதில் வரும். (
இந்தியாவில் இது சர்வ சாதாரணம்.

ஊருக்கு ஏற்றது போல கருத்துகளும் மாறுபடும். இந்த
கருத்து கணிப்பில் ஆச்சரியமும் இல்லை. இவர்களுடைய
பதில்கள் தவறு என்று சொல்லவும் யாருக்கும்
( தனி மனித உரிமை,கிரிமை ) உரிமை
இல்லை.

http://www.abcnews.go.com/GMA/AmericanFamily/story?id=2206291&page=1
http://www.decaturdaily.com/decaturdaily/livingtoday/050128/public.shtml

-aathirai

May 08, 2007 9:46 AM  
Blogger கோவி.கண்ணன் said...

உணர்வு பூர்வமாக கணவன் - மனைவி நீண்ட இடைவெளிக்குப் பின்பு சந்திக்கும் வாய்புக் கிடைக்கும் போது விமான நிலையங்கள், இரயில் நிலையங்கள் போன்ற இடங்களில் கட்டிப்பிடித்துக் கொள்கிறார்கள். இவை தவறாக தெரியவில்லை சிபா.

மற்ற நேரங்களில், இடங்களில் செய்வது அநாகரீகமாகத்தான் தெரிகிறது

May 08, 2007 9:48 AM  
Blogger Boston Bala said...

2 cents :)

Hug, Kiss, Love, Lust, Sex - Appropriateness in Public places

May 08, 2007 10:22 AM  
Blogger பெருசு said...

சிவபாலன் நீங்க எப்படி??

May 08, 2007 10:51 AM  
Blogger மணிகண்டன் said...

நிச்சயமா இது தனிப்பட்ட விருப்பம் தான் சி.பா. பீச்,பார்க் மாதிரி இடங்கள்ல காதலர்கள்ங்கற பேர்ல சிலர் நடத்துற கூத்து கண்டிக்கதக்கது. அதே சமயம் ஒரு கணவனும் மனைவியும் நீண்ட பிரிவுக்கு அப்பறம் சந்திக்கறப்போ கட்டிபிடிக்கறதுல தவறே இல்லை. யார், எங்கே, எப்படிங்கறது தான் முக்கியம்.

May 08, 2007 12:19 PM  
Blogger அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

அடுத்தவன் என்ன பண்றான்னு பார்க்காம அவன் அவன் அவன் வேலையப் பார்த்தாவே நாடு உருப்பட்டுடும்..

இங்க நெதர்லாந்தில், தன் தோழியைத் தோள் மேல் தூக்கி வைத்து தெருவெங்கும் போனான் ஒருத்தன்..அந்தப் பொண்ணு முகத்துல இருந்த சந்தோஷத்த பார்த்திருக்கணும் எல்லாரும்..அன்பை வெளிப்படுத்தும் விதத்தில் செய்யும் தழுவல்கள், தொடுகை எதுவுமே தப்பு கிடையாது. ஆனா, அதுக்கான தைரியம் நம்ம ஊருல கிடையாது..பிரபு சொன்ன உளவியலும் ஒரு காரணம்

கொலை, துரோகம், வலி போன்ற உணர்வுகள், செய்கைகள் தான் உலகெங்கும் ஒரே உண்மையாக இருக்க முடியும்..மிச்ச கலாச்சாரக் கூப்பாடு எல்லாம் உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசும் அரசியல் தான்

May 08, 2007 1:06 PM  
Blogger சிறில் அலெக்ஸ் said...

என்னை பொது இடங்களில் கட்டிப்பிடிக்கலாம் என இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.

முத்தம்? என் மனைவி இல்லாத பொது இடங்களில் ஓ.கே.

தொடர்புள்ள பாடல்: கட்டிப் புடி கட்டிப் புடிடா..
தொடர்பில்லாத பாடல்: சாரே ஜாகான் சே அச்சா

May 08, 2007 1:22 PM  
Anonymous Anonymous said...

அசிங்கமா, யாரு சொன்னான்? நாலு சுவருக்குள்ளே செய்தா தப்பில்லையா? .

ஒரு பாட்டி நடக்கிற இடத்தில கரன்ற் கட்டென்றால் நம்மவங்க பண்ணுற கூத்து அப்பாடா.
பேருந்தில ஏறினா இந்த பொண்ணுக படுற பாடு கண்றாவி.மனசுக்குள்ள அலையிறாங்க அனா பெரிசா புனிதர்கள் மாதிரி பின்னூட்டம் போட வந்திட்டாங்க.


புள்ளிராஜா

May 08, 2007 1:41 PM  
Blogger தருமி said...

//மிச்ச கலாச்சாரக் கூப்பாடு எல்லாம் உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசும் அரசியல் தான்//

ரவிசங்கரின் இக்கருத்தை ஒத்துக் கொள்கிறேன்.

சிறில் கருத்தை முழுமையாக ஒத்துக் கொள்கிறேன்.(இந்த வயசில ஆசைய பாருன்றது யாரு?)

பாபா,
2 cents அப்டின்னா என்ன?

May 08, 2007 2:43 PM  
Anonymous Anonymous said...

For Dharumi Sir

"My two cents" and its longer version "put my two cents in" is an American idiomatic expression used to preface the stating of one's opinion. By deprecating the opinion to follow — suggesting its value is only two cents, a very small amount — the user of the phrase hopes to lessen the impact of a possibly contentious statement, showing politeness and humility. Though sometimes it's used with irony when expressing a strongly felt opinion. The phrase is also used out of habit to preface uncontentious opinions.

BABA Ghost

May 08, 2007 10:46 PM  
Anonymous Anonymous said...

விவேக் சொன்ன வசனம் தான் ஞாபகத்துக்கு வருகிறது,

வெளிநாட்டில் பப்ளிக்கா kiss அடிக்கலாம் p**s அடிக்க முடியாது

நம்ம நாட்டில் p**s அடிக்கலாம் kiss அடிக்க முடியாது.


என்னைப் பொருத்தவரை kiss அடிப்பது மேல்

ராஜராஜன்

May 09, 2007 1:12 AM  
Blogger Boston Bala said...

Ghost... நன்றி :)

May 09, 2007 7:42 AM  
Blogger தருமி said...

Baba Ghost ரொம்ப நன்றி நல்லா class எடுத்ததற்கு.

இன்னொரு ஐயம்: ghost அப்டின்றதுக்கு என்ன பொருள்? போலின்னு இல்லியே! ஏன்னா, பாபாவுக்கே தெரியாம, அவரு ghost வருதுன்னா அது எப்படி?

May 09, 2007 9:55 AM  
Blogger CAPitalZ said...

எனக்கென்னமோ "றிச்சட் கியர்", ஷில்பா ஷெடியை "வைச்சிகிட்டு" இருக்கார் போல தோன்றுது.

அட இங்கு அமெரிக்காவில் கூட சும்மா கட்டி அண்ணைப்பார்கள். மிஞ்சிப்போனால் கன்னத்தில் முத்தமிடுவார்கள்்.

இவர் செய்தது ரொம்பத்தான் ஓவரா இருக்கு. ஏதோ தண்ணியடித்துவிட்டு இருவரும் கும்மியடித்தது போல் இருந்தது.

_______
CAPitalZ
ஒரு பார்வை

May 11, 2007 11:00 PM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv