Friday, May 11, 2007

தயாநிதி மாறன் செய்தது சரியா?



நன்றி: தினமலர்

42 Comments:

Blogger சிவபாலன் said...

திமுகவை சார்ந்த ஒரு மத்திய அமைச்சர் என்ற முறையில் அவர் அந்நிகழ்ச்சி கலந்து கொண்டிருக்க வேண்டும். நிகழ்ச்சி தேவையா இல்லையா என்பது அல்ல இங்கே விவாதம்.

அக்கட்சியின் அமைச்சர் கலந்துகொள்ளாதது அவருடைய அரசியலில் முதிர்ச்சி இல்லாததையே காட்டுகிறது.

எப்படியோ அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது. கொஞ்ச நாளைக்கு பத்திரிக்கைகளில் சூடு பறக்கம்..

ம்ம்ம்..

May 11, 2007 10:17 PM  
Blogger VSK said...

கலந்து கொள்ளவில்லையா, இல்லை, அழைக்கப்படவில்லையா என அறியாமல் இப்படி ஒரு பதிவிட்டிருப்பதும் ஒரு முதிர்ச்சியின்மையைத்தான் காட்டுகிறது.

May 11, 2007 10:31 PM  
Blogger வெற்றி said...

மாறன் இவ் விடயத்தில் நடந்து கொண்டவிதம் பற்றிய தமிழக சகோதர சகோதரிகளின் உணர்வுகளை உங்களின் இப் பதிவிற்கு வரும் பின்னூட்டங்கள் மூலம் அறிய மிகவும் ஆவலாக உள்ளேன்.

May 11, 2007 10:33 PM  
Blogger சிவபாலன் said...

VSK அய்யா,

நல்ல வேடிக்கையான கமென்ட். நீங்க வேற மாதிரி Try பண்ணியிருக்கலாம்.. Ha Ha Ha.. (கட்சியின் அனைத்து உறுப்பினரும் கலந்து கொள்ளலாம்.. ஆனால் மத்திய அமைச்சர் கலந்து கொள்ளாதற்கு அழைப்பு காரணம் என்பது.... என்னத சொல்ல.. Ha Ha Ha)


வருகைக்கு மிக்க நன்றி

May 11, 2007 10:40 PM  
Blogger அருண்மொழி said...

//கலந்து கொள்ளவில்லையா, இல்லை, அழைக்கப்படவில்லையா என அறியாமல் இப்படி ஒரு பதிவிட்டிருப்பதும் ஒரு முதிர்ச்சியின்மையைத்தான் காட்டுகிறது.//

பிரதமரை வரவேற்க விமான நிலையத்திற்கு எப்படி வந்தார்?. அதற்கு தனியாக அழைப்பிதழ் அனுப்பினார்களோ?

May 11, 2007 10:42 PM  
Blogger சிவபாலன் said...

வெற்றி

வாங்க..

வருகைக்கு மிக்க நன்றி

May 11, 2007 10:42 PM  
Blogger அருண்மொழி said...

இட்லிவடை சொன்னது போல வாக்கிங் ஸ்டிக் ஆக இருந்தவர் இவர். சென்னையில் இல்லை என்றால் சரி.... தமிழில் பேசுவதை ஆங்கிலத்தில் (ஹிந்தியில்???) மொழி பெயர்த்து சோனியாவிற்கு எப்போதும் சொல்பவர் - இப்போது missing என்றால் அது சரியா?

May 11, 2007 10:45 PM  
Blogger வெற்றி said...

சிவபாலன்,
நண்பர் விக்கி அவர்களின் பதிவில் நான் எழுதிய பின்னூட்டத்தை இங்கே[கீழே] பதிகிறேன்.

---------------------------------
/* பேச்சு நடத்துவதற்காக கலாநிதி மாறனையும், தயாநிதி மாறனையும் முதல்வர் கருணாநிதி பலமுறை அழைத்தும் கூட அவர்கள் வர மறுத்து விட்டனராம். */

இதிலிருந்து ஒன்று தெளிவாகிறது. மாறன் சகோதரர்கள் கலைஞரின் சொல்லுக்குக் கட்டுப்பட மறுக்கிறார்கள். இக் கருத்துக்கணிப்பை வெளியிட வேண்டாம் என தான் கேட்டுக் கொண்டதாக கலைஞர் சொல்லியிருந்தார். அப்போது நான் அதை நம்பவில்லை. ஆனால் இப்போது அதை நம்பக் கூடியதாக உள்ளது. கலைஞரின் வேண்டுகோளையும் மீறித்தான் மாறன் சகோதரர்கள் இக் கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளார்கள் என நினைக்கிறேன்.

ஏதோ, கலைஞர் இவற்றிற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க இப்போதே திமுக வின் அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுத்து விட வேண்டும்.

May 11, 2007 10:46 PM  
Blogger சிவபாலன் said...

அருண்மொழி,

நீங்கள் சொல்ல வருவது புரிகிறது.

கட்சியில் இன்னமும் கலைஞர் நல்ல மதிப்புடன் இருக்கிறார், அப்படி இருக்க அவர் விழாவில் கலந்து கொள்ளாதது கட்சி தொண்டர்களிடையே நிச்சயம் சலனத்தை ஏற்படுத்தியிருக்கும். அவர் அரசியல் எதிர்காலத்தை நினைத்தாவது விழாவில் கலந்திருக்க வேண்டும், தவற விட்டுவிட்டார் என்பது என் எண்ணம்.


வருகைக்கு நன்றி

May 11, 2007 10:53 PM  
Blogger சிவபாலன் said...

வெற்றி,

நீங்கள் சொல்வது சரி. ஒரு நல்ல அரசியல்வாதி எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடாது. பொருத்தால்தான் வெற்றி கிடைக்கும்.

May 11, 2007 10:58 PM  
Blogger VSK said...

நான் கேட்ட நியாயமான கேள்விக்கு உள்நோக்கம் கற்பித்து, வேறுவிதமாக ரை பண்ணியிருக்கலாம்எனக் கிண்டலடித்துச் சிரித்ததின் மூல, உங்களுக்கும் இதற்கு விடை தெரியாது; நீங்களும் ஒரு அனுமானத்தின் பெயரில்தான் இப்பதிவை இட்டிருக்கிறீர்கள் என்பது தெளிவாகிறது.
நன்றி.

May 11, 2007 11:06 PM  
Blogger சிவபாலன் said...

VSK அய்யா,

உங்களை கிண்டலடிப்பது என் நோக்கமும் இல்லை அது என் எண்ணமும் இல்லை. அது உங்களுக்கு நன்றாகவே தெரியும்.

விவாவிற்கு அழைகடலென திரண்டுவாருங்கள் என்று பொது மக்களுக்கே அழைப்பு இருக்கிறது. நேற்றைய பத்திரிக்கை முழுவதும் இந்த விளம்பரங்கள்தான்.

அதனால் அழைப்பு என்பது நிச்சயம் ஒரு பிரச்சனை அல்ல அய்யா. அதைத்தான் அப்படி சொன்னேன்.

May 11, 2007 11:12 PM  
Blogger சிவபாலன் said...

VSK அய்யா,,

அந்த அழைப்பிதழை இங்கே இனைத்துள்ளேன். பார்க்கவும்.

May 11, 2007 11:23 PM  
Blogger கோவி.கண்ணன் said...

திமுக உடைகிறதே என்று தினமலர் கவலைப்படுகிறதாம்..

ஹஹஹ்...!

ஆடு...ஓநாய் !
:))))

May 11, 2007 11:46 PM  
Anonymous Anonymous said...

Perhaps Marans were upset with Karunanidhi not ordering the arrest
of Azhagiri and the wayhe was escorted by police from airport.
All said and done, they do have self respect.

May 12, 2007 12:07 AM  
Blogger வால்டர் said...

சிவபாலன் அவர்களை திமுக உறுப்பினர் என நினைத்துக் கிண்டல் செய்து இருக்கும் சங்கர் குமாரை நான் கண்டிக்கிறேன்.

May 12, 2007 1:10 AM  
Anonymous Anonymous said...

கருணாநிதியின் விழாவுக்கு அவர் பேரனுக்கு அழைப்பிதழ் அனுப்ப வேண்டுமா? அழைப்பிதழ் இல்லாமலேயே கலந்து கொள்ள வேண்டும் இல்லையா?

May 12, 2007 2:14 AM  
Blogger உடன்பிறப்பு said...

மாறன் முதலில் பதவியை உதறிவிட்டு பின் புறக்கணித்து இருந்தால் ஏதோ ஏற்றுக் கொள்ளலாம். அவரின் நடவடிக்கை அவருக்கு மேலும் கலங்கத்தையே ஏற்படுத்தும்

May 12, 2007 3:17 AM  
Blogger koothanalluran said...

Deccan Chronicle நாளேட்டில் முதலில் தயாநிதி மாநாட்டுக்கு வருவதை கலைஞர் விரும்பவில்லை என அறிவித்து விட்டு, இன்றைய இதழில் மேடையில் அமர்ந்திருந்தால் வீணாக எல்லோரிடமும் வெறுப்பை சம்பாதிக்கெ நேரிடும் என்பதால் தயாநிதி வரவில்லை எனச் செய்தி

May 12, 2007 6:42 AM  
Blogger முத்துகுமரன் said...

தொழிலதிபர்களால் சிறந்த அரசியல்வாதியாக செயலாற்ற முடியாது என்பதையே தயாநிதி மாறனின் இந்நடவடிக்கை உணர்த்துகிறது. மாறன் குடும்பித்தினரால் திமுகவினால் பலனடைய முடியுமே தவிர திமுக என்ற கட்சிக்கு எந்த வித அதிர்வையும் உண்டாக்க முடியாது. கலைஞருக்கு பின் கட்சியை கைப்பற்றுவார்கள் என்பது எல்லாம் கானல் நீர் கனவுகள்தான்.

விஎஸ்கே அய்யா, முதிர்ச்சி அடையாதிருப்பது யார் என்று நன்றாக தெரிகிறது. விஜயகாந்த் தனமாக பேசுவது உங்களைப் போன்ற உயர்ந்தோருக்கு அழகல்ல. உள்நோக்கம் அது இது என நன்றாக வார்த்தைச் சிலம்பம் ஆடுகிறிர்களே. தனக்கு ஆதாயம் இருக்கும்வரை ஒட்டிக்கொள்வது, பின்பு விலகிக்கொள்வது என்பது பச்சை சந்தர்ப்பவாதம். தயாநிதி மாறன் திமுக உறுப்பினர்தானே! தலைவனின் முக்கியமான சாதனை நிகழ்விற்கு போகாமல் புறக்கணிப்பதுதான் முதிர்சியின்மையான துரோகச் செயல். அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு புறக்கணித்திருந்தாரேயானால் அவரின் நடவடிக்கையை மதிக்கலாம். பதவியில் ஒட்டிக்கொண்டு அந்த பதிவியைத் தந்தவனுக்கு மரியாதை செய்யாது இருப்பது என்பது ஈனத்தனம். என்ன செய்ய! இந்த மாதிரியான சப்பைக்கட்டுகள் இல்லாவிட்டால் நாங்களெல்லாம் புரிந்து கொள்வது எப்போது.

ஆனால் ஒன்று, தமிழ் ஊடகங்கள் தயாநிதி மாறனை பலிகடாபோலவே சித்தரிக்கும். காரணம் என்ன என்பது உள்ளங்கை நெல்லிக்கனி :-)

May 12, 2007 7:32 AM  
Anonymous Anonymous said...

வளர்த்த கடாக்கள் மார்பில் பாய்ந்திருக்கிறது. பணமா பாசமா என்று கேட்டால் மாறன் பிறதர்ஸ் பணம் தான் என்கின்றார்கள். என்றோ ஒரு நாள் மாறன் தி.மு.க உருவாகும். ஸ்டாலினும் ஒரு டி.வி ஒன்றை தொடங்குவது குறித்து யோசிக்கத் தொடங்குவது நல்லது.


புள்ளிராஜா

May 12, 2007 7:39 AM  
Blogger G.Ragavan said...

பொன்விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமை தவறே. உட்பகை இவ்வளவு வெளிப்படையாகத் தெரிந்து விட்டது.

சரி. எல்லாரும் தயாநிதிமாறனைக் கும்முகிறீர்கள். சரி. கும்மப்பட வேண்டிய அழகிரியை எல்லாரும் மறந்து விட்டீர்களே. இந்தத் தயாநிதியைப் பத்திரிகைகள் பலிகடாவாகச் சித்தரிக்கட்டும். ஆனால் அழகிரி தப்பித்துக் கொண்டிருக்கிறாரே. அதைப் பற்றியும் பேசுவதே சரி. மகனா மருமகன் குடும்பமா என்று கருணாநிதி முடிவெடுத்து விட்டது தெரிந்தது. திமுகவிற்கு இதனால் ஆபத்து வரும் என்று நினைக்கவில்லை. அழகிரிக்கும்தான். தயாநிதி பதவி விலகல்/பறிப்பு மட்டும் நடக்கும்.

May 12, 2007 8:53 AM  
Anonymous Anonymous said...

Alakiri is following MK footstep.

When MK got his FIRT DR award by ANNAMALAI UNIV he got over Student Udaikumar Blood and Celebrating his 50 yr service over 3 bodies as gift by alagiri .

So Dayanithi doesnt deserve to be in DMK.

May 12, 2007 9:33 AM  
Blogger முத்துகுமரன் said...

//சரி. கும்மப்பட வேண்டிய அழகிரியை எல்லாரும் மறந்து விட்டீர்களே. இந்தத் தயாநிதியைப் பத்திரிகைகள் பலிகடாவாகச் சித்தரிக்கட்டும். ஆனால் அழகிரி தப்பித்துக் கொண்டிருக்கிறாரே.//
ஆளுக்கொரு வாளெடுத்து போய் சீவிவிடுவோமா :-).
அழகரியின் செயல் காட்டுமிராண்டிதனமானதே. அது கண்டிக்கப்பட வேண்டியது என்பதில் மாற்றுக்கருத்தேதும் இல்லை. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. பார்ப்போம் என்ன மாதிரியான விசாரணை நடக்கிறது என? இந்தபதிவு தயாநிதியைப் பற்றீ என்பதாலே அவருக்கு கும்மி. பதிவுக்கு வெளியே போவது அறமாகாது :-)

May 12, 2007 9:36 AM  
Blogger அரவிந்தன் said...

கலைஞர் அவர்களின் பொன்விழாவினை புறக்கணிக்கும் அளவிற்க்கு தயாநிதி மாறன்..மாறியது எனக்குஎன்னவோ திட்ட மிட்ட செயலாகவே தோன்றுகிறது...

கலைஞர் அவர்களீடம் தயாநிதி மாறன் நிச்சயம் பேசிவிட்டுத்தான் போகமால் இருந்திருப்பார்...

May 12, 2007 11:33 AM  
Anonymous Anonymous said...

//தொழிலதிபர்களால் சிறந்த அரசியல்வாதியாக செயலாற்ற முடியாது என்பதையே தயாநிதி மாறனின் இந்நடவடிக்கை உணர்த்துகிறது.//

டிஸ்கோ நடத்தி கொண்டு இருந்த தயாநிதி 'தொழிலதிபர்' ஆனது எப்போது?


வேண்டுமானால் கன்னட பிராசந்தை போன்ற ஒரு தொழிலதிபர் என்று சொல்லலாமோ ???

May 12, 2007 11:52 AM  
Blogger சிவபாலன் said...

எனக்கு இப்ப ஒரு சின்ன சந்தேகம்.. தயாநிதி கட்டம் கட்டப்படுகிறாரா?..

அடிக்க வராதீங்க..

May 12, 2007 11:57 AM  
Blogger ஆதிபகவன் said...

தயாநிதி கலந்து கொள்ளவில்லை என்பதைவிட அழகிரி தண்டிக்கப்படவில்லை என்பதுதான் இதில் உள்ள உண்மை.

May 12, 2007 4:42 PM  
Anonymous Anonymous said...

எல்லாமே ப்லிம். நம்பாதீங்க.

அண்ணன் அமேரிக்கா, தம்பி தூட்டி, ஸாரி, ஊட்டி அப்படீன்னு எஸ்கேப் ஆகிட்டாய்ங்க.

கலவரம் செய்ய தூண்டி விட்ட ஆள், சட்டசபையிலே உட்கார்ந்து கையை ஆட்டிகிட்டு இருக்காரு.

'அவன் என்னோட மவன் தெரியுமில்லே' அப்படீன்னு பெரிசு டயலாக் விட்டுச்சாம். அடப்பாவிகளா, மூணு பேரு அவுட்டுடா.

சி.பி.ஐ. விசாரணைக்கு கேட்டிருக்காங்களாம். பாய்ஞ்சு வந்திருக்க வேண்டிய சி.பி.ஐ. இன்னும் காணுமே. பாத்தீங்களா?

எல்லாமே பிலிம்மு. நம்பாதீங்க.

May 12, 2007 5:38 PM  
Blogger VSK said...

சரி, திரு. முத்துகுமரன் சொல்லுவது போல், பதிவிற்குள்ளேயே "அறமாக" விவாதிக்கலாம்.

இதுவரை ஒரு கைத்தடியாக செயல்பட்ட தயாநிதி மாறன் இந்த முக்கியமான விழாவுக்கு வரவில்லையெனில்,என்ன காரணமாயிருக்கும்?

1. நண்பர் சிபா சொன்னது போல, தயா
தானாகவே புறக்கணித்திருக்க வேண்டும்.
2. கலாநிதிக்கு ஆதரவாக அவர் வற்புறுத்தலின் பேரில்புறக்கணித்திருக்க வேண்டும்.
3. வந்தால் ஏதேனும் பிரச்சினை, உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என அஞ்சி புறக்கணித்திருக்க வேண்டும்.
4. மாறன் குடும்பத்திற்கு கலைஞர் மிகவும் கடமைப் பட்டிருக்கிறார்.
டெல்லியில் ஒரு வலுவான குரல் கொடுத்ததில் மாறனின் பங்கு மிக மிக முக்கியமானது.
இதைக் கருணாநிதியே பலமுறை ஒப்புக்க்கொண்டிருக்கிறார்.
பொன்விழா நேரத்தில் இப்படி ஒன்று நிகழ்ந்ததால், தயா வந்தால் ஏதேனும் பிரச்சினை, உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என கலைஞரே இப்படி ஒரு ஆலோசனையை வழங்கியிருக்கலாம்.
5. கருணாநிதி அழைப்பு அனுப்பாமல் இருந்திருக்கலாம்.

:))

May 12, 2007 5:39 PM  
Anonymous Anonymous said...

தி மு க வினால் தான் சன் டிவி வளர்ந்தது, இப்போது எண்ணிக்கையில்லா சீரியலால் முதல் இடத்தில் நிலைத்து(விஜயால் தடுமாற்றம் மற்றும் காப்பி) நிற்கிறது. அந்த தி மு க வேண்டாம் தொழில் தான் வேண்டும் என்றால், ஏறிய ஏனியை எட்டி உதைப்பது ஆகும்.

May 12, 2007 7:28 PM  
Anonymous Anonymous said...

//அவன் என்னோட மவன் தெரியுமில்லே' அப்படீன்னு பெரிசு டயலாக் விட்டுச்சாம். அடப்பாவிகளா, மூணு பேரு அவுட்டுடா //

எந்த ஆதாரத்தை வைத்து இந்த கமெண்டை இட்லி வடையில் வந்தது என்று தெரியவில்லை.

ஒரு முதல்வரின் வீட்டில் தனியறையில் ஒரு மத்திய அமைச்சரிடம் முதல்வர் பேசியது ஒருவருக்குத் தெரிந்தது போல் பதிவிட்டால் அதையும் உண்மை என்று நம்பி (வதந்தியைப் பரப்ப) முயற்சிப்பது எந்த வகையில் நியாயம்?

2 ஆண்டுகளுக்கு முன் கலைஞரால் அமைச்சாராக்கப்பட்ட தயாநிதி மாறன் தனியாக நின்று டிபாசிட்கூட வாங்க முடியாது என்று எல்லோருக்கும் தெரிந்தே அவருக்கு ஒரு கூட்டம் வக்காலத்து வாங்குவது ஏன் என்று எல்லோருக்கும் புரிந்து தான் உள்ளது.

May 12, 2007 7:29 PM  
Anonymous Anonymous said...

தயாநிதி மாறன் பதவியியை ராஜினாமா செய்னதால் மிகப்பெரிய இழப்பு திமுக விற்கு அல்ல. தமிழ்நாட்டிற்கும் ,இந்தியாவிற்கும் தான். இதனை பாமரத்தனமாக சொல்லவில்லை. Software என்கிற துறையின் மூலம் மட்டும் இந்தியா முன்னேற முடியாது, Semiconductor துறையும் ரொம்ப முக்கியம் என்பதை உணர்ந்து அதற்காக அவர் செய்த பணிகளை Semiconductor துறையில் ஆராய்சியாளன் என்கிற வகையில் பெருமைப்படுகிறேன். தயாநிதிமாறன் அனைத்து மத்திய அமைச்சர்களை விட மேல்தான். லாலுபிரசாத் மற்றும் தயாநிதி இரண்டுபேரும் star கள்தான்.

அன்புமணி திறமையானவ்ரா இல்லையா என்பதை விட அவர் தாயாநிதி மாறனை விட திறமை குறைந்த்வர் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.

அது சரி, மதுரை சம்பவத்துக்கும் த்யாநிதிமாறனுக்கும் என்ன சம்பந்தம்?
எதற்கு ஊடகங்கள் அவரின் பதவி விலகளை மையப்படுத்துகின்றன?
டெல்லியின் திமுக மாறன் என்பதாலோ? எது எப்படியோ தாயாநிதி யின் திறமை நாட்டுக்கு தேவை...தொலைநோக்கு பார்வையில் சிந்திப்பவர் தாயாநிதி.
வயதில் முதிர்ந்தவர், தாத்தா என்கிற முறையில் பேரனுக்கு பக்குவத்தை ஏற்படுத்தவேண்டும் கலைர் செய்வாரா?

May 12, 2007 9:24 PM  
Blogger அருண்மொழி said...

//சரி. எல்லாரும் தயாநிதிமாறனைக் கும்முகிறீர்கள். சரி. கும்மப்பட வேண்டிய அழகிரியை எல்லாரும் மறந்து விட்டீர்களே. இந்தத் தயாநிதியைப் பத்திரிகைகள் பலிகடாவாகச் சித்தரிக்கட்டும். ஆனால் அழகிரி தப்பித்துக் கொண்டிருக்கிறாரே. //

ராகவன்,

அழகிரி சொல்லித்தான் தாக்குதல் நடந்ததா என்பது எனக்கு தெரியாது - உங்களுக்கும் தெரியாது என்று நம்புகின்றேன். அதற்காக அழகிரிக்கு நான் support செய்கின்றேன் என்று நினைக்கவேண்டாம். CBI விசாரணைக்கு உத்தரவிட்டு இருக்கிறார்கள். அதை பற்றி விளம்பரங்கள் பத்திரிக்கைகளில் வந்துள்ளது. விசாரணையின் முடிவில் அவர் குற்றவாளி என்றால் அதற்குரிய தண்டனை பெறுவார்.

வட இந்தியாவில் எங்கே குண்டு வெடித்தாலும் - அது ISIயின் செயல்.
ஆந்திராவில் வெடித்தால் - அது நக்ஸல் செயல்.
தமிழ்நாட்டில் வெடித்தால் - அது புலிகளின் செயல்.
மதுரையில் வெடித்தால் - அது அழகிரியின் செயல்.

இந்நிகழ்ச்சியில் Sun Tvயின் செயலும், கலாநிதி மாறனின் செயலும் மிகத்தவறு என்பது என் கருத்து.

May 12, 2007 9:48 PM  
Blogger அருண்மொழி said...

//மாறன் குடும்பத்திற்கு கலைஞர் மிகவும் கடமைப் பட்டிருக்கிறார்.
டெல்லியில் ஒரு வலுவான குரல் கொடுத்ததில் மாறனின் பங்கு மிக மிக முக்கியமானது.//

ஹா ஹா ஹா ஹா ஹா

இந்த ஆண்டின் மிகச் சிறந்த joke இதுதான். கருணாநிதியின் ஆதரவோ, திமுகவின் ஆதரவோ இல்லை என்றால் மாறனை தமிழகத்தில் யாருக்கு தெரியும்???

May 12, 2007 9:51 PM  
Blogger VSK said...

ஹாஹாஹாஹா!

இது நான் குறிப்பிட்டது முரசொலி மாறனைப் பற்றி என அறியாமல் எள்ளியவருக்கு!

:)))))))))))))))))))))))

May 12, 2007 10:01 PM  
Blogger Machi said...

தவறாக தெரியவில்லை. தரனின் கருத்தை நான் ஆமோதிக்கிறேன்.

தயாநிதி மாறன் இள வயது அப்படி தான் இருப்பார், இது கலைஞருக்கு தெரியாதா?

May 12, 2007 10:39 PM  
Blogger G.Ragavan said...

// முத்துகுமரன் zei...
//சரி. கும்மப்பட வேண்டிய அழகிரியை எல்லாரும் மறந்து விட்டீர்களே. இந்தத் தயாநிதியைப் பத்திரிகைகள் பலிகடாவாகச் சித்தரிக்கட்டும். ஆனால் அழகிரி தப்பித்துக் கொண்டிருக்கிறாரே.//
ஆளுக்கொரு வாளெடுத்து போய் சீவிவிடுவோமா :-). ///

தேவையில்லை. தயாநிதி மாறனை வாளெடுத்தா சீவிவிட்டோம். ஆனால் அதைப் பற்றிய பேச்சே இல்லை என்பதுதான் நான் சொல்ல வருவது.

// அழகரியின் செயல் காட்டுமிராண்டிதனமானதே. அது கண்டிக்கப்பட வேண்டியது என்பதில் மாற்றுக்கருத்தேதும் இல்லை. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. பார்ப்போம் என்ன மாதிரியான விசாரணை நடக்கிறது என? இந்தபதிவு தயாநிதியைப் பற்றீ என்பதாலே அவருக்கு கும்மி. பதிவுக்கு வெளியே போவது அறமாகாது :-) //

சிபிஐ விசாரணை என்றால் தெரியாதா முத்துக்குமரன். எத்தனை விசாரணைகள் நடந்திருக்கின்றன. அழகிரி உத்தமராகவே இருப்பார். யாராவது தொண்டர்கள் தியாகியாவார்கள். பூசி மெழுகல் நடக்கும். நம்ம அறத்துக்குள்ளயே இருந்து பேசுவோம் முத்து. அதுக்கு வெளியில போக வேண்டாம்.

// அருண்மொழி zei...
ராகவன்,

அழகிரி சொல்லித்தான் தாக்குதல் நடந்ததா என்பது எனக்கு தெரியாது - உங்களுக்கும் தெரியாது என்று நம்புகின்றேன். //

நிச்சயமாக. நடந்ததை நேரில் பார்த்தவன் இல்லை நான். அழகிரி மீதான ஆதாரங்களும் என்னிடம் இல்லை.

// அதற்காக அழகிரிக்கு நான் support செய்கின்றேன் என்று நினைக்கவேண்டாம். CBI விசாரணைக்கு உத்தரவிட்டு இருக்கிறார்கள். அதை பற்றி விளம்பரங்கள் பத்திரிக்கைகளில் வந்துள்ளது. விசாரணையின் முடிவில் அவர் குற்றவாளி என்றால் அதற்குரிய தண்டனை பெறுவார். //

இவ்வளவு அப்பாவியா இருக்கீங்களே அருண்மொழி. சரி. என்ன நடக்குதுன்னுதான் பாப்பமே.

// வட இந்தியாவில் எங்கே குண்டு வெடித்தாலும் - அது ISIயின் செயல்.
ஆந்திராவில் வெடித்தால் - அது நக்ஸல் செயல்.
தமிழ்நாட்டில் வெடித்தால் - அது புலிகளின் செயல்.
மதுரையில் வெடித்தால் - அது அழகிரியின் செயல்.

இந்நிகழ்ச்சியில் Sun Tvயின் செயலும், கலாநிதி மாறனின் செயலும் மிகத்தவறு என்பது என் கருத்து. //

கலாநிதி மாறனின் எந்தச் செயல் தவறு? கருத்துக்கணிப்பை வெளியிட்டதா? அதில் எல்லா கட்சியினரையும் இழுத்திருக்கிறார்கள். பொதுவில் இது போன்ற கருத்துக்கணிப்புகள் மிகுந்த எச்சரிக்கையோடு கையாளப்பட வேண்டும். அது நடக்கவில்லை. அது தவறு என்பதற்காக அந்த வன்முறை தவறாகாது என்பதை நீங்களும் ஒப்புக்கொள்வீர் என்றே நம்புகிறேன். உங்கள் எழுத்தும் அதைத்தான் சொல்கிறது. அழகிரி செய்திருக்க வாய்ப்பில்லை என்று நீங்கள் நினைக்கின்றீர்கள். வாய்ப்பிருக்கிறது என்று நினைக்கிறேன் நான். அவ்வளவுதான் வித்யாசம்.

May 13, 2007 7:41 AM  
Blogger G.Ragavan said...

என்னைக் கேட்டால் தயாநிதிமாறன் பதவி விலகக் கூடாது என்றுதான் சொல்வேன். அவர் சிறந்த அரசியல்வாதியாக இல்லாமல் இருக்கலாம். தனியாக நின்றால் ஓட்டு விழாமல் கூட இருக்கலாம். ஆனால் ஒரு அமைச்சராக அவர் தொடர்வதையே விரும்புகிறேன்.

May 13, 2007 7:43 AM  
Anonymous Anonymous said...

முடிந்தது கதை.

தயாநிதியை அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யச் சொல்லி தி.மு.க. நிர்வாகக் (?!) குழு கட்டளையிட்டுள்ளது.

May 13, 2007 8:52 AM  
Anonymous Anonymous said...

மாறன் ராஜினாமா - பிரமதருக்கு கடிதம் - ஜெயா டிவி
மாறன் ராஜினாமா முடிவு - சன் டிவி

May 13, 2007 11:45 AM  
Anonymous Anonymous said...

///தயாநிதியை அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யச் சொல்லி தி.மு.க. நிர்வாகக் (?!) குழு கட்டளையிட்டுள்ளது.///

இது வரை கருணாநிதி மேல் எனக்கு கோபமே வந்தது இல்லை ஆனால் மாறன் விஷயத்தில் அவர் நடந்து கொண்ட முறை அவர் ஒரு மிகப்பெரும் சுயநலவாதி என்பதனை காட்டுகிறது. தயாநிதி யின் ராஜினாமா இந்தியாவிற்கு ஒரு சறுக்கல். சரி ஜெயலலிதாவிற்கு கருணாநிதிமேல் என்று நினைத்து ஆறுதல் அடைய வேண்டியதுதான்.

May 15, 2007 6:40 AM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv