Friday, July 27, 2007

வர்ணாசிரமம் - HOT PHOTO!!

படம் : காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் நேற்று யாகம் நடந்தது. யாகத்தை ஒட்டி நடந்த ஊர்வலத்தில் கலந்துகொண்ட ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா.

இதில் சிவப்பு குறியிட்டிருக்கும் நபரைப் பார்க்கவும். (குடையை எடுத்துச் செல்பவர்.)

எனக்குள் எழுந்த கேள்விகள்

1. ஏன் அந்த மனிதர் மட்டும் தோளில் துண்டோ அல்லது சட்டையோ அணியக்கூடாது.

2. இன்னும் இது போன்ற வழிமுறைகள் தேவையா?

3. உண்மையில் இதில் என்ன கவுரவம் VIPக்களுக்கு வந்துவிடப்போகிறது.

4. அந்த மனிதன் தன்னுடைய தொழிலைத்தான் செய்கிறார் என்றால், அதற்கு இன்னும் பழைய வர்ணாசிரம வழிமுறைகளை ஏன் கடைபிடிக்கவேண்டும்? மாற்றலாமே?

5. சில இடங்களில் மாறி இருக்கலாம்? மற்ற இடங்களில்?

இந்தப் புகைப்படத்தை கண்டவுடன் என்னுள் எழுந்த கேள்விகள் இவை? உங்களுடன் பகிர்ந்துகொள்ளும் எண்ணத்துடன் இங்கே.

இன்னுமொரு கேள்வியும் தோன்றியது.. குடை தூக்கும் மனிதன் ஏன் கடவுள் சிலையை தீண்டக்கூடாது.?

பல வருட போராட்டத்திற்கு பிறகு தற்போதைய முதல்வரின் முயற்சியால், அனைவரும் அச்சகர் ஆகலாம் என சட்டம் வந்துள்ளது. மகிழ்ச்சிதான். ஆனால், அதையும் சில சக்திகள் தடுத்து வருவது வருந்ததக்கது.

வரும் காலங்களில் வசந்தம் வரும் என நம்புவோம்!

27 Comments:

Blogger சிவபாலன் said...

படம்:
நன்றி: தமிழ் முரசு

July 27, 2007 10:35 PM  
Blogger வெற்றி said...

சிவபாலன்,
நியாயமான கேள்விகள். நானறிந்த வரையில் இலங்கையில் உள்ள சைவ ஆலயங்களில் இப்படி VIP க்களுக்கு குடை பிடிக்கும் வழக்கம் இல்லை. தமிழக ஆலயங்களுடன் பரீட்சயம் உள்ளவர்கள் பதில் சொல்வார்கள் என நம்புகிறேன். நானும் உங்களின் கேள்விகளுக்கான விடைகளை அறிய ஆவலாக உள்ளேன்.

July 27, 2007 10:38 PM  
Blogger சதுக்க பூதம் said...

அவா எல்லாம் குருக்களுக்கு சேவை செய்து அடுத்த பிறவியிலாவது கால் லேயிருந்து iduppukku முன்னேற try செய்துண்டுருக்கா. நீ அபச்சாரமா என்னமோ பேசுரியே?

July 27, 2007 10:38 PM  
Blogger சிவபாலன் said...

வெற்றி

ஆமாங்க! பல மாற்றங்கள் நடந்து வருகிறது. இது போன்ற வழிமுறைகளலால் நாம் இன்னும் தாழ்ந்த நிலையில் தான் இருக்கிறோம் என்ற எண்ணம் வருவதில் வியப்பில்லை.

யாரேனும் பதில் சொல்கிறார்களா என பார்ப்போம்! உங்களைப் நானும் ஆவலுடன்!

July 27, 2007 10:50 PM  
Blogger சிவபாலன் said...

சதுக்க பூதம்,

என்னமோ..ம்ம்ம்ம்ம்ம்...

நாம இன்னும் முழுமையா அடிமைத்தனதிலிருந்து வெளி வரவில்லை என்பதையே இந்த படம் காட்டுவதாக எனக்கு படுகிறது!

உங்கள் கருத்துக்கு நன்றி

July 27, 2007 10:53 PM  
Blogger TBCD said...

/*பல வருட போராட்டத்திற்கு பிறகு தற்போதயை முதல்வரின் முயற்சியால், அனைவரும் அச்சகர் ஆகலாம் என சட்டம் வந்துள்ளது. மகிழ்ச்சிதான். ஆனால், அதையும் சில சக்திகள் தடுத்து வருவது வருந்ததக்கது.*/
நம்ம அடிப்படையா ஒரு தப்பு பன்னுரோம், சாமி கும்பிடுங்க.. ஆனா..இந்த தேவை இல்லாத பழைய சம்பிரதாயங்களை விட்டொழித்தால், யார் வேன்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம்..இப்பொழுது, அர்ச்சகர் பள்ளியில் அவர்கள் கற்பது சம்ஸ்கிருதம் எனில்.. இத்தனை காலம் முயற்சிகளுமே வீன் தான்..

July 27, 2007 11:01 PM  
Blogger சிவபாலன் said...

TBCD,

உண்மைதான். முதலில் இச்சட்டம் ஓரளவு செயல்படுவதும் அதை சில பேர் ஆதரிப்பதும் மகிழ்ச்சிதான்.

இதே திருவண்ணாமலையில் ஒருவர் இதை கடுமையாக எதிர்த்து சில திய சத்திகளை தூண்டிவிட்டு, தற்பொழுது அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த சுட்டியில் சென்று பார்க்கலாம்.

http://satrumun.blogspot.com/2007/07/blog-post_8552.html

உங்கள் கருத்துக்கு நன்றி!

July 27, 2007 11:12 PM  
Blogger PRINCENRSAMA said...

ஆரியம் இருக்கிறதா? பார்ப்பனீயம் இருக்கிறதா? என்றெல்லாம் அறிவு ஜீவிகள் என்று கருதிக் கொள்வோர் எழுப்பும் கேள்விகளுக்கு பதில். இன்னும் அது தன் விஷ நாக்கை நீட்டிக் கொண்டிருக்கிறது.. அது ஒழிக்கப்பட வேண்டும் என்பதை இப்போதாவது உணர வேண்டும்

July 27, 2007 11:44 PM  
Anonymous Anonymous said...

உங்களின் கண்டுபிடிப்பு ஆபாராம். இவ்வாறு பிராமணர்களும், கோவில் பூசாரிகளும் கோவில் வழிபாடு செய்யும்போது துண்டோ, சட்டையோ அணீவதில்லை. அதுவும் இதர சாதி வகுப்பின் சாதி வெறியால் ஏற்பட்டதாக இருக்குமோ,

July 28, 2007 1:19 AM  
Blogger G.Ragavan said...

நல்ல கேள்விகள். இந்த நிலை கண்டிப்பாக மாறியே ஆக வேண்டும். அதில் எந்த ஐயமும் இல்லை.

July 28, 2007 1:44 AM  
Blogger Vaasi said...

Sorry to post in english. I used e-kalappai to post a reply and took more than an hour. my eyes are strainig. but still while seeing this blog i remembered something. onece a person from netherlands came to the place i was working. he was amused to see the convoy of cars go behind the politicians. When i asked about the situation in his country he said"THOSE POLITICIANS ARE THERE FOR US TO SERVE" They are just another people like us, What is so special about it?"! We migrated from karnataka to Tamilnadu in 70s. In my village temple there was a board( I still don't know if it is there )தமிழில் அற்சனை செய்யப்படும். I never heard one single ARCHANAI offered in Tamil, so The point is As long as we bend ourselves We are going to see the photos you put in. May God help us

July 28, 2007 7:08 AM  
Blogger சிவபாலன் said...

VAASI,

Pls go to this link.

http://www.suratha.com/leader.htm

Go down on that page..


there are two boxes.

if you type anything in english on the top box, the tamil letters will appear on the bottom box.

pls try and let me know..

July 28, 2007 7:16 AM  
Blogger Pot"tea" kadai said...

அந்த நாய்கள் கறுத்துப்போனால் தான் போகட்டுமே...குடை அவசியமா என்பதே என் முதல் கேள்வி?

July 28, 2007 7:38 AM  
Anonymous காஞ்சிபுரத்தான் said...

சுந்தர்ராமன் கொலை வழைக்கில் உள்ளே சென்ற சுந்தரேசன் ஐயர் ஜாமினில் வந்துட்டாரா ?

கூட்டத்தில் ஜம் என்று நடந்து செல்கிறாரே ?

மாமா நன்ன இருக்கேளா ?

July 28, 2007 9:07 AM  
Blogger ஜீவி said...

அன்பு சிவபாலன்,
உங்கள் பார்வை மிகவும் தீட்சண்யமாகப் பாய்ந்திருக்கிறது. ஒருவரியில் இதை ஒழிக்க வேண்டுமென்று சொன்னதோடு நம் வேலை முடிந்ததாகப் போகப் பிடிக்க வில்லை. இதே விஷயத்தை, சின்ன வயசில், நான் வேறு கோணத்தில் பார்த்து வெறுத்திருக்கிறேன். சாமிக்குப் பிடிக்கும் அதே குடையை இந்தமாதிரி ஆசாமிகளுக்கும் பிடிக்க வேண்டுமா?.. அப்படியென்றால் சாமியும், இவர்களும் சமமாகி விடுகிறார்களே, என்று.
அந்த வயசில் எனக்குப் பதில் இல்லை. ஆனால் பிறகு தெரிந்தது.
இவர்களுக்கு சாமியும் ஒன்றுதான்;
ஆசாமியும் ஒன்றுதான். எல்லாவற்றையும் ஒரு 'தொழில்
கண்ணோட்டத்தோடு' செய்கிறார்களென்று. போகட்டும்.
எல்லோருக்கும் வயிற்றுப்பாடு.
அந்த குடைபிடிப்பவருக்கு அந்த சமயத்தில், நீங்கள் ஒரு சட்டையைக்
கொடுத்தால் கூட, "இதைப் போட்டுக்கிட்டு, கொடையைத்தூக்கிப்
பிடிக்க முடியாது; தொந்தரவாயிருக்கும்" என்று கொடுத்த சட்டையை வாங்கிக் கக்கத்தில் செருகிக்கொள்வார்.
இன்னொன்று. இதுவாவது, ம்டம்.
கோயில்களிலெல்லாம், வெகுசாதாரணமாக "கும்பமரியாதை"
என்று அதிகாரிகளிலிருந்து ஆரம்பித்து
அமைச்சர்கள் வரை இப்பொழுது
சகட்டுமேனிக்கு, பிரதிபலனுக்காக
மரியாதைகாட்டும் வழக்கம் வந்தாச்சு.
இப்பொழுது உங்கள் அடிப்படை கேள்விக்கு வருவோம்.
அந்தக் குடைபிடிப்பவர், சட்டை போட வழி என்ன?.. வழி இருக்கு.
கிட்டத்தட்ட தமிழக இந்துக்கோயில்கள் அத்தனையும் 'இந்து அறநிலைத்துறை'யின் கீழ்தான் செயல்பட்டு வருகின்றன. அந்தத்துறை "கோயில் வாட்ச்மேன்களுக்கு யூனிபார்ம் வழங்குவது போல்,
இவர்களுக்கும் வழங்க வேண்டும்' என்று ஒரு உத்திரவு போட்டுவிட்டால்
விஷயம் முடிந்தது.நடப்பது,கலைஞர் ஆட்சிதானே?..மனதிருந்தால் செய்யலாமே என்றால், செய்ய வேண்டாமென்று இல்லை. இந்த மாதிரி விஷயங்களை அவர்கள்
நினைத்தேப் பார்க்காத பொழுது,
நெஞ்சு பதறாத பொழுது, இதைப்
படிக்கும் ந்ம்மைப்போன்ற யாராவது தான், --அரசுக்கு நெருக்கமானவர்கள்,
அதிகாரிகள், அரசு அலுவலர்கள்--
என்று யாராவது தான் இந்த அவலங்களைக் களைவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
கோயில் என்றால் பார்ப்பனர்கள்,
பார்ப்பனர்கள் என்றால் கோயில் என்று
வீண் வம்பு பேசி வாதாடிக்கொண்டிருக்கும் ஒரு சமுதாயத்தில், இதற்கெல்லாம் எங்கே
நேரமிருக்கிறது?.. கோயில்களெல்லாம்
பார்ப்பனர்களின் கையை விட்டுப்போய்
எவ்வளவோ காலமாயிற்று. இப்பொழுது அவர்கள், கோயில்களில்
ஆத்மார்த்தமாகக் கூலி வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அவ்வளவுதான்.

July 28, 2007 9:30 AM  
Anonymous Anonymous said...

ஆமா அவர் சுந்தரேச அய்யர் தான்

இதோ சுட்டி இங்கே

http://www.hindu.com/2004/11/16/stories/2004111608140900.htm

July 28, 2007 9:32 AM  
Anonymous Anonymous said...

Congratulations Sivabalan,

You are continuing to prove that at the core you are a mean son of a bitch and a caste fanatic.

July 28, 2007 9:47 AM  
Blogger சிவபாலன் said...

அனானி முன்டமே

பதிவை ஒழுக்கமாக படிடா வெண்ணை!!

July 28, 2007 9:52 AM  
Blogger Thekkikattan|தெகா said...

சிவா,

எல்லாரின் கண்களும் அந்தப் புகைப்படத்தில் யாரெல்லாம் பெரியவங்க இருக்காங்கன்னுதான் பார்த்திருக்கும். உங்கள் பார்வை எங்கு இருக்கிறது பாருங்கள்.

"வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் - வள்ளலார்"

என்பது போலத்தான் இருக்கிறது உங்களின் பார்வையும்.

அந்த மாதிரி ஒரு சக மனிதனை நாம் நடத்தும் விதத்தில் தான் மனிதனின் "அகங்காரத்தை" வெளிக்கொணரும் ஒரு வாய்ப்பாக அமைத்துக் கொள்கிறோம்.

இந்த hierarchical தனம் நம் வேலை செய்யும் இடங்களிலிர்ந்து ஆரம்பித்து, சமூக புற்று நோயாக சற்றே அதிகமாக நமது சமுதாயத்தில் எங்கெங்கும் விரவிக் கெடக்கிறது.

July 28, 2007 9:54 AM  
Blogger தஞ்சாவூரான் said...

இந்த முறை கடுமையாக கண்டிக்கத் தக்கது. மேல்சட்டை இல்லாமல் செல்லவேண்டும் என்றால், வசுந்தராஜேயும் அது இல்லாமல் செல்லட்டுமே! சுயமாரியாதை விழிப்புணர்வு நமக்கு வந்தாலொழிய, இந்நிலைமை மாறப்போவது இல்லை.

July 28, 2007 11:01 AM  
Blogger SurveySan said...

அவரு மட்டும் சட்ட போடாம குடையை தூக்கிச் செல்வது பாக்க கஷ்டமாதான் இருக்கு.

ஆனா, அவரு சட்டை போடக் கூடாதுன்னு யாராவது அடிச்சு சொன்னாங்களான்னு தெரியல.

அவரே 'விருப்பப்பட்டு' அப்படி செய்ததா இருக்கலாம்.

அர்ச்சகர்கள் நார்மலா சட்டையோ துண்டோ போட மாட்டாங்க. கடவுளுக்கு மரியாதை தர மாதிரி கணக்கு அது.

ஆனா, இந்த ஆளு, யாருக்கு மரியாதை தராருன்னு தெரியல. மே பி, அவருகிட்ட கிழியாத நல்ல சட்ட இல்லாம இருந்திருக்கலாம்.

நம்ம ஊரு நாட்டார் கடைல பாத்திருக்கேன். நாடார் சட்டையெல்லாம் போடாம் கஷ்கத்த சொறிஞ்சுனு தான் சாமான் பொட்டளம் கட்டுவார்.

என்ன சொல்ல வரேன்னா, அந்த ஆளு சட்டை போடாததுக்கு நாமே ஏதாவது அர்த்தம் கற்பிக்கரோமோ?

இன்னும் என்ன சொல்ல வரேன்னா, படிப்பறிவு இல்லாதவரைக்கும், இந்த 'அடங்கி' வாழ்தல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் :)

எஸ்கேப்... அடிக்க வராதேள்!

July 28, 2007 11:45 AM  
Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சிவபாலன்!
இலங்கையில் குறிப்பாக வடபகுதியில் இப்படி ஒன்றில்லை.
மாலை ,களாஞ்சி கொடுத்து மரியாதையுண்டு.
இந்தக் குடை பிடிப்பவருக்கு நல்ல
சீருடைக்கு ஏற்பாடு செய்யலாம்.
இதைக் கோவில் நிர்வாகம் செய்யலாம்.
யாரவது இதை அவர்களுக்கு தெரிவிக்கலாம்.
ஏன் ? பத்திரிகைகள் கூடச் சுட்டிக் காட்டலாம்.
நமது நாடுகளில் மாற்றம் வரும்..ஆனால் கால மெடுக்கும்.
பெண்கள் முன்னேற்றம் என்பது..நடக்கவில்லையா?
எத்தனை காலம் எடுத்தது.
எனவே
அனைவருக்கும் கல்வி என்ற நிலையும்..சற்று கேள்வி கேட்கும் துணிவும் வரவேண்டும்.அத்துடன் குழுவாக இயங்குவது, உரிமையைக் கேட்பது...என்பது பற்றிய சிந்தனையும் வரவேண்டும்.

July 28, 2007 1:59 PM  
Blogger Thamizhan said...

கோவில் கட்டுபவர்கள் யார்,சிலை வடிப்பவர் யார்,சாமிகளைத் தூக்கிச் செல்பவர்கள் யார்,தேர் இழுப்பவர் யார் அவரே தான் குடையும் பிடிக்கின்றார்.
ஒரே விடிவு இந்திய அரசியல் சட்டத்திலே சாதியை(தற்போதுள்ள தீண்டாமையை இல்லை) ஒழித்திட வேண்டும்.சாதி வேறுபாடு செய்பவர்களைத் தண்டிக்கும் துணிவு வேண்டும்.வரத்தான் போகிறது.
இந்தச் சாதி வேறுபாடும் மனித நேய அக்கிரமங்களும் ஐக்கிய நாட்டுச் சபையின் விவாதங்கட்கு வந்து விட்டன்.
விடிவுகள் விரைவில் வரத் துணிவுடன் சட்டங்கள் இயற்ற வேண்டியக் கட்டாயம் வந்துவிடும்.

July 28, 2007 4:35 PM  
Anonymous Anonymous said...

ஒரே விடிவு இந்திய அரசியல் சட்டத்திலே சாதியை(தற்போதுள்ள தீண்டாமையை இல்லை) ஒழித்திட //வேண்டும்.சாதி வேறுபாடு செய்பவர்களைத் தண்டிக்கும் துணிவு வேண்டும்.வரத்தான் போகிறது.
இந்தச் சாதி வேறுபாடும் மனித நேய அக்கிரமங்களும் ஐக்கிய நாட்டுச் சபையின் விவாதங்கட்கு வந்து விட்டன்.
விடிவுகள் விரைவில் வரத் துணிவுடன் சட்டங்கள் இயற்ற வேண்டியக் கட்டாயம் வந்துவிடும்.//

I hope this happens.Then creamy layer OBCs like Sivabalan will not be able to go about with arrogance and will not be able to dominate and oppress other less fortunate people.

July 28, 2007 9:30 PM  
Anonymous சொறிந்தவன் said...

வக்கனை பேசும் ஜீவி,

அந்த மனிதன் கோவணம் எனக்கு விருப்பமானது என்று சொன்னால் அதை மட்டும் கட்டிக் கொண்டு குடைபிடிக்க அனுமதிப்பார்களா ?

July 28, 2007 11:00 PM  
Blogger ஜீவி said...

//சொறிந்தவன் said...
வக்கனை பேசும் ஜீவி,

அந்த மனிதன் கோவணம் எனக்கு விருப்பமானது என்று சொன்னால் அதை மட்டும் கட்டிக் கொண்டு குடைபிடிக்க அனுமதிப்பார்களா ?//

வக்கனை??..புரியவில்லை.
மற்றபடி, அனுமதிப்பார்களா என்று
என்னைக் கேட்டால்?....
சிவபாலனும், நானும்-- பாவம், அந்தக் குடை பிடிப்பவர் மேல்சட்டை இல்லாமல் இருக்கிறாரே என்று வருந்தி, அவர் சட்டை போட வழி
தேடினால், நீங்கள் அவர் கட்டியிருக்கிறதையேக் களையச்சொல்கிறீர்களே?..நியாயமா,
இது?..

August 02, 2007 7:24 PM  
Blogger பாரி.அரசு said...

சிவபாலன்,

இப்படிபட்ட கேவலமான நிகழ்வுகளை எழுதபடாத சட்டமாக இன்னும் அவா வைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

இதுக்கெல்லாம் ஏன் இப்படி? என்று ஓரு வரலாற்று சிறப்புமிக்க புத்தகம் இருக்கிறது... அதை கட்டாயம் படித்து நீங்கள் தெளிவு பெற வேண்டுகிறேன்:-)))

அதுதான் 'அர்த்தமுள்ள இந்துமதம்'

August 02, 2007 10:07 PM  

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv