Thursday, July 19, 2007

"மங்கை" சொன்ன Memory Triggersநமது மூளையில் ஏகப்பட்ட விசயம் இருக்கு.. அதில் ஒன்று இந்த Memory Triggers . இதைப் பற்றி மங்கை மிக அழகா ஒரு பதிவு போட்டிருக்காங்க.. நிறைய பேர் படித்திருப்பீர்கள். இல்லை என்றால் " இங்கே போய் படித்துவிட்டு வாங்க..."சரி, இப்ப என்னுடைய Memory Triggers

1. LIFEBOUY SOAP - அந்த காலத்தில் செங்கல் Sizeக்கு வரும். அதனுடைய வாசனை வந்தாலே எனக்கு எங்க தாத்தா பாட்டி நியாபகத்திற்கு வருவாங்க. ஏனென்றால், நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் வரை எனது தாத்தா பாட்டிதான் குளிக்க வைப்பாங்க.. அதுவும் அந்த சோபில்.. அதன் மனமே தனி சுகம். பெரிய அடுப்பில் நிறைய தண்ணீர் வைத்து மரங்களுக்கு நடுவே ஆனந்தமான குளியல். இப்ப நினைத்தாலும் மகிழ்ச்சியா இருக்கு.

2. தக்காளி சாதம். இதன் சுவை எங்கே சாபிட்டாலும் எங்க சின்னமா நியாபகத்தில் வந்துபோவாங்க.

3. Black Tea வாசனை. என்னுடைய முன் நாள் Boss வந்து போவாரு. ஏனென்றால் அவருக்கு பாதி நாள் Black Teaதான் சாப்பாடு.

4. விபூதி வாசனை - இதில் எல்லா விபூதியும் ஒரே வாசனை வராது. அந்த பழநி சித்தனாதன் விபூதிக்கு ஒரு வாசனை உண்டு. அது எப்பவாவது நுகர்ந்தால் எனக்கு சிறுவயதில் மருதமலையில் இருந்த நியாபகம் வரும்.

5. அரச மரத்தின் வாசனை வந்தால் எனக்கு நான் படித்த டியூசன் சென்டர் நியாபகத்திற்கு வரும். அது மிகப் பெரிய அரச மரம். அரச மரம் என்றாலே விநாயகரும் வந்துவிடுவார். ஆம், அங்கே, விநாயகர், வெறும் மேடையில் அமர்ந்தவாறு. எப்பவுமே ஜில்லென்று இருக்கும். கிட்டதட்ட எல்லா வெள்ளிக் கிழமையும் சுண்டல் கிடைக்கும். ரொம்ப ரொம்ப ஜாலியான நாட்கள்.

துள்ளித்திரிந்த தொரு காலம்..

பள்ளிப் பயின்றதொரு காலம்..


இது மாதிரி நிறைய இருக்கு.. ஆனால் போர் அடித்துவிடும்.. அதனால இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.

நீங்களும் உங்களுக்கு இருக்கும் Memory Triggers பற்றி பதிவிடுங்கள்.. படிப்போம் ஜாலியாக..

16 Comments:

Blogger சிவபாலன் said...

பதிவிட தூண்டிய மங்கை அவர்களுக்கு நன்றி!

July 19, 2007 10:06 AM  
Blogger மங்கை said...

படு வேகமா இருக்கீங்க...நன்றி

இந்த சரக் கொன்றை வாசனை வந்தா எனக்கும் மனி ஃபீடர் ஸ்கூல படித்த நாட்கள் நியாபகம் வந்துடும்...

ரொmப நல்லா இருக்கு சிவா..முதலும் கடைசியும்...தாத்தா பாட்டியுடன் சம்பந்தப்பட்ட விஷயங்கள் நிறைய இருக்கும் எல்லார்த்துக்கும்

July 19, 2007 10:08 AM  
Blogger சிவபாலன் said...

மங்கை

ஆமாங்க! தாத்தா பாடி என்றாலே ஜாலிதான்.. அடிக்கமாட்டங்க அதுனால..

அதுவும் அந்த LIFEBOUY சோப் எவ்வளவு நேரம் தண்ணீரில் இருந்தாலும் கரையவே கரையாது. அதனால் இன்னும் ஜாலி. குளித்துக்கொண்டே இருக்கலாம். வேப்ப மரம், முருங்கை மரன், அகத்தி மரம், தெண்ணை, பூவரச மரம் எல்லாம் நம்மை வேடிக்கை பார்க்க.. Ha Ha Ha..

July 19, 2007 10:13 AM  
Blogger delphine said...

சிவ பாலன்.. நல்லா இருக்குங்க.. ..
golden memories..have been triggered by Mangai..

July 19, 2007 10:15 AM  
Blogger சிவபாலன் said...

டாக்டர் Delphine,

ஆமாங்க.. ரொம்ப ஜாலியான விசயம். மங்கைக்கு ஒரு Special Thanks..


நீங்களும் முடிந்தால் பதிவிடுங்கள்.. ஜாலியா படிப்போம்.

July 19, 2007 10:17 AM  
Blogger Thekkikattan|தெகா said...

1) எனக்கு இந்த அகர் பத்தி வாசனை வந்தா சொர்க்கத்தில் மிதப்பதாக நினைக்கத் தோன்றும்... ஆழ்ந்து விடுவது அப்படியே

2) ச்சீப்பான பன்னீர் செண்ட் ஸ்மெல் எங்கயிருந்து மிதந்து வந்தாலும், என் செத்துப் போன தாத்தாவின் இறந்த நாள்...

3) பள்ளி நாட்களின் காலை 8.45 மணிக்கு ரோடியோவில் ஒலி பரப்பாகும் லைப்பாய், மற்றும் கோபல் பல்பொடி விளம்பரங்கள்... I hate it even now :-))

அவ்வளவுதான் இப்போதைக்கு ஞாபகத்தில நிக்குது.,,

July 19, 2007 10:22 AM  
Blogger சிவபாலன் said...

தெகா

"LIFEBOUY எவ்விடமோ ஆரோக்கியம் அவ்விடமே..!!" என்னங்க இதை பிடிக்கவில்லை என்று சொல்லறீங்க.. Ha Ha Ha..

எனக்கு தெரிந்து மிகப் பழைய விளம்பரம்.

எனினும் உங்கள் " Memory Triggers" ஐ பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

July 19, 2007 10:28 AM  
Blogger SurveySan said...

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
முதல் முதலாக
முங்கிக் குளித்த
பாசி படர்ந்த கோயில் குளமே!

:)

July 19, 2007 10:38 AM  
Blogger சிவபாலன் said...

சர்வேசன்

கோயில் குளமா? சரி சரி.. அப்ப ஜாலியாத்தான் இருக்கும்.. கடைசியில் பழம் தேங்காய் சுண்டல் என நல்லா சாப்பிடலாம்..

கருத்துக்கு நன்றிங்க!

July 19, 2007 10:45 AM  
Blogger காட்டாறு said...

அண்ணாச்சி.. நீங்க படு வேகமா இருக்குறதப் பார்த்தா... இந்நேரம் lifebouy-யோட மன்றாடிட்டு இருப்பீங்கன்னு நெனைக்கிறேன்.

July 19, 2007 11:02 AM  
Blogger காட்டாறு said...

//Thekkikattan|தெகா said...
1) எனக்கு இந்த அகர் பத்தி வாசனை வந்தா சொர்க்கத்தில் மிதப்பதாக நினைக்கத் தோன்றும்... ஆழ்ந்து விடுவது அப்படியே
//

அதென்னங்க தெகா சொர்க்கத்தில் மிதக்கிறது?

July 19, 2007 11:03 AM  
Blogger சிவபாலன் said...

காட்டாறு ,

வாங்க!

ஆமாங்க. சில விசயங்கள் நம் மனதை விட்டு அகலுவதே இல்லை. அதில் இதுவும் ஒன்று.

காட்டாற்றின் Memory Triggers என்னவென்ற சொன்னால் நல்லாயிருக்கும்!

July 19, 2007 11:08 AM  
Blogger Thekkikattan|தெகா said...

அதென்னங்க தெகா சொர்க்கத்தில் மிதக்கிறது? //

அதாங்க காட்டாறூஊஊ,

இந்த சொர்க்கத்தில நாம நினைக்கிறதெல்லாம் இருக்குமாமில்ல, எனக்கு எட்டுன வரைக்கும் என் சொர்க்கத்தில நிறைய பறவைகளோட, தென்னை மரங்களுக்குகிடையே, பில்ஸ் எல்லாம் மறந்திட்டு ஹாயாக கட்டில் போட்டு உறங்குவது போன்ற ஃபீலிங் அஃப் ஈத்தீயப்பாஸ் தான்... :-))

ஏண்டா கேட்டேம் இவனேன்னு இருக்குமே... :-D

July 19, 2007 12:03 PM  
Blogger vathilai murali said...

நான் படித்த பள்ளி ஹாஸ்டலில் ஒரு குறள் சொல்லியவுடன் தான் அனைவரும் சாப்பிடவேண்டும். அந்த குறள் காதில் விழுந்தவுடன் எனக்கு பசியெடுக்கும் இப்பொதும்.

July 19, 2007 12:24 PM  
Blogger வல்லிசிம்ஹன் said...

நினைவுகளைத் தட்டி எழுப்பும் வாசனைகளா....
நித்தியமல்லிப்பூ வாசனை....பிறந்த வீடு,

இஞ்சிமரப்பா........தாத்தா

தேங்காயெண்ணை.....பாட்டி

கோபால் பல்பொடி சந்திரிகா சோப் ,பாண்ட்ஸ் பவுடர் அம்மாவீடு
மல்லிகைப்பூ.....மதுரை பஸ் ஸ்டாண்ட் ரொப நன்றி சிவபாலன்,.

July 19, 2007 1:27 PM  
Blogger கோபிநாத் said...

ம்ம்ம்...சூப்பர் நினைவுகள் ;)

July 19, 2007 1:56 PM  

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv