ராமர் பாலம் - ராமச்சந்திரன் - உமாபாரதி
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே உள்ள கடல்பகுதியில் கப்பல் போக்குவரத்து வசதி ஏற்படுத்துவதற்காக அந்தப்பகுதியில் கடலின் ஆழத்தை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டு செயல் படுத்துவதுதான் சேது சமுத்திர திட்டம். இந்த திட்டம் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என்று நம்பப்படுகிறது. ஆனால் இத்திட்டம் காரணமாக ராமாயண காலத்தில் ராமர் கட்டியதாக கூறப்படும் பாலம் இடிக்கப்படுவதாகவும், உடனடியாக இத்திட்டத்தை கைவிட வேண்டும் என சில இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
அந்த வகையில் பாரதிய ஜனசக்தி கட்சி தலைவரும், மத்தியபிரதேச முன்னாள் முதல்வருமான உமாபாரதியும் போராட்டம் நடத்திவருகிறார். அவர் மதுரையில் ஜீலை 6ம் தேதி பத்திரிக்கையாளர்களை சந்தித்த போது சேது சமுத்திரதிட்டத்தினால ராமர் பாலம் இடிக்கப்படும் நிலை உள்ளது அதனால் அந்த திட்டத்தை உடனே கைவிடவேண்டும் என வலியுறுத்தினார். அதை தொடர்ந்து அயோத்தியில் நேற்று (24-07-07)முதல் 7 நாட்கள் உண்ணாவிரதம் தொடங்கியுள்ளார்.
இந்நிலையில் இன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தேசிய சுற்றுப்புற பாதுகாப்பு குழுவின் தலைவரும் சென்னை பல்கலைக்கழக துணை வேந்தருமான சு.ராமச்சந்திரன் தன்னுடைய கருத்தையும் கூறியுள்ளார்.
10 வருடமாக கடலியல் படிப்பு படித்து உள்ளேன். சுற்றுப்புறச் சூழல் தேசிய கமிட்டியின் தலைவராகவும் இருக்கிறேன். சேது சமுத்திர திட்டப்பணிகள் தொடங்குவதற்கு முன் நடந்த முதல் கூட்டத்தில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவன் நான்தான். கடல்நீரை பல்வேறு முறைகளில் பரிசோதித்து அதன் முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தோம்.
அதன்படி, அவர்களும் கடல்நீரை பரிசோதித்தனர். அதற்கு தேசிய கமிட்டி அமைக்கப்பட்டது. ஒவ்வொருமாதமும் சேது சமுத்திர திட்டத்தின் முடிவுகளை விவாதிக்க குழு கூட்டம் கூடியது. இதுவரை சுற்றுச்சூழலில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அங்கு, மீன்பிடித் தொழிலும் பாதிக்கப்படவில்லை. சொல்லப்போனால், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிக அளவில் மீன்பிடிக்கப்பட்டுள்ளது.
தேசிய கமிட்டி குழுவின் கூட்டம் மதுரையில் வருகிற 30-ம் தேதி நடைபெற உள்ளது. அதில், சுற்றுச்சூழல் ஆய்வு முடிவுகள் வெளிப்படையாக வைக்கப்படும். எனவே, அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
சேது சமுத்திர திட்டப்பணிகள் நடைபெறும் இடத்தில் ராமர் பாலம் இருப்பதாக ஒரு சிலர் கூறி வருகிறார்கள். தேசிய தொலை உணர்வு மையத்தின் வல்லுனர்கள் கடந்தமாதம் வந்து ஆராய்ச்சி செய்தனர். ராமர் பாலம் உள்ளது என்று கூறும் இடத்தில் மணல் திட்டு உள்ளது என்று அறிவித்து உள்ளனர். எனவே, ராமாயணத்துக்கும் மணல் திட்டுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ராமர் பாலத்துக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இது, முழுக்க, முழுக்க கடலியல் சம்பந்தப்பட்டது, என கூறியுள்ளார்.
எனக்கு சில சந்தேகங்கள், இவ்வளவு பெரிய திட்டம் ஆரம்பிக்கும் முன், பல நிலைகள் திட்டம் சம்பந்தமாக, திட்டத்தினால ஏற்படும் பயன்கள், பொருளாதாரம், தொழில்நுட்பம் மற்றும் விளைவுகள், நிச்சயம் அலசி ஆராயப்பட்டிருக்கும். அதுவும் அந்த அந்த நிபுனர்களை வைத்துதான் ஆராயப்பட்டிருக்கும். அப்படி இருக்க இது போன்று தீடீர் போராட்டங்கள் எனக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
வைகோ போன்றவர்களின் மவுனம் இன்னும் ஆச்சர்யம்.
திட்டம் நிறைவேறுமா அல்லது கைவிடப்படுமா? வரும் காலங்களில் தெரியும்.
9 Comments:
I really don't understand why is this mess about. Is there any real benefit to our country? I have been reading through this issue in newspapers, why BJP is not proving what is beneath. If they believe then they have to prove it. Don't we have any other issues to look into. This is the fate of voters. Ghost is gone,Devil is in.
வாசி
உண்மைதாங்க.. எனக்கும் வெறுப்பாக இருக்கிறது. ஆனால் ஜனநாயத்தில் இதெல்லாம் சகஜம். வேறு வழியில்லை.
திட்டம் நல்லது என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். ஆனால் அரசியல் உள்ளே நுழைந்துவிட்டது. இனி அதன் பாடு திண்டாட்டம்தான்.
கருத்துக்கு நன்றி
கன்யா குமரிக்கும் காஷ்மீருக்கும் உள்ள நெடுஞ்சாலையை அகலப்படுத்தலாம். இராமர் பாலம் ? டெண்டர் விட்டு சீரமைக்கச் சொன்னால் வருமானம் கிடைக்கும்.
:)
ராமர் பாலம் என்ற ஒன்றைக் காரணம் காட்டி இத்திட்டத்திற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது நம் நாட்டின் குரூரமான வேடிக்கைகளில் ஒன்று. அறியாமை என்னும் உயர்ந்த கொள்கையை எவ்வளவு இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு அதை விட மறுக்கும் நிலையில் இன்று நாம் உள்ளோம் என்பதேயே இது எடுத்துக்காட்டுகிறது.
இத்திட்டத்தை எதிர்க்க வேறு நியாயமான காரணங்கள் உள்ளன. அது பற்றி சில வருடங்களுக்கு முன் வலைப்பதிவுகளில் அதிகம் பேசப்பட்டது. நானும் என் பங்குக்கு சில இடுகைகளை எழுதியிருந்தேன். எப்படியோ, நல்லது நடந்தால் சரி.
Sethu project will come true. don't worry about that.
//வைகோ போன்றவர்களின் மவுனம் இன்னும் ஆச்சர்யம்.//
அது ஒரு மெளனப்புரட்சி என்று புரிந்து கொள்ள வேண்டும்.
GK,
நல்ல கேள்வி!
Voice of Wings,
சுட்டிக்களுக்கு நன்றி!
படித்துப்பார்கிறேன்.
இந்த திட்டத்திற்கு எதிரான பார்வை என்ற முறையில் நிச்சயம் படிக்க வேண்டும்.
நன்றி!
சிவபாலன்!
இத் திட்டம் இப்போ பக்தி அரசியலாக்கப்பட்டு விட்டது.இனி ராமர் வந்து அதை நான் கட்டவில்லை
என்றாலும், அவர் 'பொட்டி' வாங்கி விட்டார். என இந்தப் பொட்டை அரசியல்வாதிகள் கூறுவார்கள்.
சில படித்த சிந்தனைவாதிகள் என்று தம்மை மார்தட்டுவோரும். ராமர் சூட்டில் காய்வது கவலையே!
Post a Comment
<< Home