Monday, July 23, 2007

உயர்சாதியினரின் மலம் - வால்மிகி அள்ள வேண்டும்.

கோகாத், மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமம். இங்கே வால்மிகி என்ற சாதி பிரிவினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் சாதி அமைப்பு முக்கோணத்தின் அடிமட்டத்தில் இருக்கும் மக்கள். அதாவது தாழ்த்தபட்ட மக்கள். இவர்கள், கிட்டதட்ட அடிமை போன்று உயர்சாதியினரின் மலத்தை தினமும் அள்ள வேண்டும். இவர்கள் வேறு ஏந்த வேலைக்கும் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.

இதில் மிகப் பெரிய கொடுமை என்னவென்றால், இதற்கு அவர்கள் பெறும் ஊழியம் ஒரு மாதத்திற்கு வெறும் ரூ 20. அதே வீட்டில் உணவிற்காக கையேந்தி நிற்க வேண்டும்.

இது சம்பந்தமாக உயர்சாதியினர் ஒருவர் கூறியது "இந்த வேலையை அவர்கள்தான் செய்ய வேண்டும். அவர்கள் செய்யவில்லை என்றால் யார் செய்வது?" என்றார்.

இது போன்று வால்மீகி சாதியினர் மலம் அள்ளுவதால் அவர்களை மற்றவர்கள் தீண்ட மறுக்கின்றனர். அதாவது முடிதிருத்தம் செய்வோர், அவர்களுக்கு முடிதிருத்தம் செய்ய மறுகின்றனர். இதனால் அவர்கள் முடிதிருத்தம் செய்ய சுமார் 20 கி.மீ. செல்ல வேண்டியுள்ளது.

""இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி பிரிவு 15ல் "எந்த மனிதரையும் சாதி அடிப்படையில் பேதம் காட்டக்கூடாது. எல்லா மனிதர்களும் பொது இடத்திற்கு செல்ல அனுமதி பெற்றவர்கள்".""


இருப்பினும் இதை நடைமுறைப்படுத்துவதில் இன்னும் பல சாவல்கள் வந்துகொண்டுதான் இருக்கிறது. அதற்கு வால்மிகி சாதியினர் ஒரு சாட்சி.

இந்த வால்மிகி சாதியினர் பொது இடத்தில் தண்ணீர் எடுக்கவோ, கடவுள் இருக்குமிடத்திற்கு செல்லவோ முடியாது. டீ கடை, உணவகங்களில் இவர்களுக்கு தனி பாத்திரங்களில் தான் எல்லாம் பரிமாரப்படுகிறது.

பகவதி பிராசாத் குமார் என்ற பிராமணர் கூறுகையில், "நாங்கள் பல வருடங்களாக மதச் சடங்குகள், பூஜைகள் செய்து வருகிறோம். ஆனால் நாங்கள் வால்மிகி சாதியினருடன் அமர்ந்து உணவு உட்கொள்ளும் தவறை இது வரை செய்ததில்லை." என்றார்.

2003ம் வருடம் மத்திய பிரதேச அரசாங்கம், "அனைத்து மலம்களிக்கும் இடத்தை பொது சாக்கடையில் கலக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றது. ஆனால் இதுவரை அது நடக்கவில்லை. இன்னும் வால்மிகி சாதியினர்தான், மலம் அள்ளுகின்றனர்.

சுமார் 20 வருடங்களாக இது போன்று மலம் அள்ளும் சுதா என்ற பெண், அதன்
துருநாற்றத்தினால் மூச்சு திணறல் நோய், ஆஸ்துமா, டி,பி மற்றும் மஞ்சக்காமலையால் அவதிப்படுகிறார். இது போன்று கிட்டதட்ட மலம் அள்ளும் அனைவரும் அவதிப்படுகின்றனர்.

மேலும், மலம் அள்ளும் ஒருவர், "என்னால் மலத்தை தினமும் பார்க்கமுடியவில்லை. அதன் துருநாற்றத்தினால் என்க்கு தூக்கம் வருவதில்லை. அதனால் மது அருந்தினால்தான் தூக்கம் வருகிறது." என்கிறார்.

இதில், பூரி என்ற மற்றொரு பெண், திருமணம் முடிந்து சுமார் 10 வருடங்களாக இதை செய்வதாகவும், முதலில் மிகவும் கடினாமாக இருந்ததாகவும் அதனால் வாந்தி எடுத்ததாகவும் கூறியுள்ளார். ஆனால் அது நாளைடைவில் பழகிவிட்டதாகவும் கூறியுள்ளார். இதில் தனக்கு நாண்கு குழ்ந்தைகள் இருப்பதாகவும் கணவன் குடித்துவிட்டும் சீட்டு ஆடிக்குகொண்டும் தான் கொண்டுவரும் பணததையும் பிடிங்கிக்கொள்ளுவதாகவும் கூறியுள்ளார். இதனால் தான் வருமையில் வாடுவதாகவும் கூறியுள்ளார்.


உண்மையில் இது மிகவும் வேதனைக்குறிய விசயம். இந்த நிலைமை மாறி எல்லோரும் மனிதர்களாக பார்க்கும் நாள் வரவேண்டும். மனித மலத்தை மனிதனே அள்ளும் அவலம் ஒழிய வேண்டும். மாற்றம் வரவேண்டும்.

இந்தக் கொடுமையை வெளிக்கொண்டுவந்த CNN-IBN TVக்கு எனது நன்றிகள். இது சம்பந்தமான CNN-IBN TVயின் வீடியோ கிழே.



மிகுந்த மனபாரத்துடன்.

சிவபாலன்

43 Comments:

Anonymous Anonymous said...

"அகம், புறம் என அனைத்தும் கண்டு சொன்ன இந்திய மூளைக்கு மனிதன் மலத்தை மனிதன் அள்ளும் பிரச்சனைக்குத்தான் தீர்வு காணத் தெரியவில்லை " எனப் பொருளுடைய புதுகவிதை, எங்கோ படித்தது நினைவுக்கு வருகிறது.

July 23, 2007 8:36 AM  
Blogger சிவபாலன் said...

உண்மைதான் அனானி. இங்கே எனது ஆங்கில நண்பர் சொன்னது" நீங்கள் அனைவரும் அறிவாளிகளாகவும் திறமைசாலிகளாகவும் உள்ளீர்கள். எப்படி இது போன்று நடக்க அனுமதிக்கிறீர்கள்? என்கிறார்.

பதில்தான் தெரியவில்லை.!!

July 23, 2007 8:51 AM  
Blogger தருமி said...

//மிகுந்த மனபாரத்துடன்.//

இயலாமையுடனும் ...

July 23, 2007 8:58 AM  
Blogger Balaji-Paari said...

நம் நாட்டில் சமூகம் மேம்பட்டு விட்டது... இக்காலத்தில் தீண்டாமை கொடுமை இல்லை... என்ற மூர்க்கனத்தனமான கருத்துக்களுக்கு இத்தகைய குறிப்புகள்தான் இயல்பான பதிலாக இருக்கின்றது.
இப்பதிவிற்கு நன்றிகள்.

July 23, 2007 9:07 AM  
Blogger வெற்றி said...

(:-

July 23, 2007 9:19 AM  
Anonymous Anonymous said...

//இவர்கள் வேறு ஏந்த வேலைக்கும் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.//

இது உண்மையானால் காரணமானவர்களை தாராளமாக செருப்பால் அடிக்கலாம்.

அனானி முன்னா

July 23, 2007 9:22 AM  
Blogger கோவி.கண்ணன் said...

எச்சில் - ஓம் பிரகாஷ் 'வால்மிகி'

எழுதிய நூலில் இந்த சம்பவங்கள் அனைத்தும் இன்னும் அந்த சூழலுடனே விளக்க்ப்பட்டுள்ளது.

படித்தால் நொந்துவிடுவீர்கள்.

சாதி கொடுமைகள் எவ்வளவு கொடுமையானது என்பதை அந்த நூலில் தான் கண்டு கொண்டேன்.
:(

July 23, 2007 9:29 AM  
Blogger ஜெகதீசன் said...

//இது சம்பந்தமாக உயர்சாதியினர் ஒருவர் கூறியது "இந்த வேலையை அவர்கள்தான் செய்ய வேண்டும். அவர்கள் செய்யவில்லை என்றால் யார் செய்வது?" என்றார்.//

இவர்கள் மிருகங்களை விட கேவலமானவர்கள்.. நடுத்தெருவில் நிற்க வைத்து கல்லால் எரிந்து கொல்ல வேண்டும்...

July 23, 2007 9:45 AM  
Blogger சிவபாலன் said...

இதில் மேலும் ஒரு கொடுமை ..

ரொம்ப கொடுமையானதும்...துயரமானதும்...எச்சில் இலைகளில் மிச்சமான உணவை பணக்காரர்கள் தூக்கியெறிவதை எடுத்து வந்து காயவைத்து மழைகாலங்களில் அதை சாப்பிடுவாங்களாம்

July 23, 2007 9:54 AM  
Blogger சிவபாலன் said...

தருமி அய்யா

ஓங்கி கண்ணத்தில் அரைந்தது போல் உள்ளது. என் இயலாமையைக் கண்டு எனக்கே என்னை கேவலமாக பார்க்க தோன்றுகிறது.

இன்னும் இயலாமையுடன்

சிவபாலன்

July 23, 2007 10:05 AM  
Blogger சிவபாலன் said...

பாலாஜி - பாரி,

மிகச் சரியாக சொன்னீர்கள். இது தான் இந்திய இயல்வு வாழ்கையின் நிலைமை.

July 23, 2007 10:06 AM  
Blogger சிவபாலன் said...

வெற்றி
ஆம், வருத்தம்தான். ஆனால் இது மனிதனின் மிக மிக மோசமான நிலைமை.

July 23, 2007 10:08 AM  
Blogger சிவபாலன் said...

அனானி முன்னா,

மனிதர்கள் என தன்னை நினைப்போர் ஏதாவது செய்ய வேண்டும். இந்த கொடுஞ்செயல் ஒழிய வேண்டும்.!

July 23, 2007 10:10 AM  
Blogger சிவபாலன் said...

GK,

உண்மைதான். அந்த வீடியோவைப் என்னால் முழுமையாக பார்க்க முடியவில்லை. கண்களில் கண்ணீரே வந்துவிட்டது. சாதியும் அதன் விளைவுகளும் மிக மிகக் கொடுமை. விடிவு எப்போது!

July 23, 2007 10:29 AM  
Blogger சிவபாலன் said...

சிங்கபூர் சிங்கம்,

இது போன்ற கொடுமைகள் ஒழிய வேண்டும். எத்தனையோ தொழிலில்கள் இருக்கின்றன. இந்த மனிதர்களும் நல்ல தொழில் செய்து வாழ இந்த சமூகம் இடம் தரவேண்டும்.

July 23, 2007 10:32 AM  
Anonymous Anonymous said...

Here we see ppl carrying a plastic bag to remove their pet's shit when them take them out , it is shame to say that we employ human to clean human shit....

July 23, 2007 10:45 AM  
Blogger வெற்றி said...

சிவபாலன்,
இந்தப் பகுதியில் நடக்கும் அவலத்தை மத்திய பிரதேச மாநில அரசு, இந்திய நடுவண் அரசு போன்றவற்றிற்கு வெளிநாடுகளில்/இந்தியாவில் இருக்கும் இந்தியர்கள் தொலைபேசியிலோ அல்லது மின்னஞ்சலிலோ அல்லது online petition மூலமோ ஏன் தெரியப்படுத்தக் கூடாது? இப்படி எதாவது அழுத்தங்கள் கொடுத்தால் அதிகாரிகள் சிலவேளை ஏதாவது நடவடிக்கை எடுப்பார்களல்லவா?

July 23, 2007 10:57 AM  
Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சிவபாலன்!
இதைப் படித்த போது, நான் ஈழத்தவன் ஆனபோதும்,இந்திய சமுதாயத்துடன் இரத்தத் தொடர்புடையவன் என்பதை நினைத்து வெட்கப்படுகிறேன்.
சீ இப்படியுமா??? மிருகமனம் படைத்தோர்.
இவர்கள் திருந்த மாட்டார்களா???

July 23, 2007 11:25 AM  
Blogger Thekkikattan|தெகா said...

சிவா, இந்தியா ஒளிர்கிறது அந்த பெண்களின் கண்களில் :-(

July 23, 2007 11:34 AM  
Blogger Santhosh said...

மிகவும் வருத்தத்துக்குரிய விஷயம்.. அடிப்படை கட்டுமானங்களை சீர்படுத்தினால் மட்டுமே இதை சரியாக்க முடியும்.. கல்வியும் கடுமையான சட்டங்களுமே இந்த நிலையை சரி செய்ய இயலும்..
//இயலாமையுடனும் ..//
வழிமொழிகிறேன்..

July 23, 2007 12:16 PM  
Blogger சிவபாலன் said...

அனானி

கருத்துக்கு நன்றி!

July 23, 2007 1:41 PM  
Blogger G.Ragavan said...

கொடுமை. கொடுமை.

என்ன கூடச் சேந்து சாப்புடுற தவறைச் செய்யலையா? யாருய்யா அங்க...அவரு தலைல ஒரு வாளியக் கவுத்துங்க.

July 23, 2007 2:06 PM  
Blogger சிவபாலன் said...

வெற்றி

இந்த தகவல் ஒரு பெரிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பியுள்ளனர். நிச்சயம் இது அரசுக்கும் அதிகாரிகளுக்கும் நெருக்கடி கொடுக்கும். நீங்கள் சொல்வதுபோல் ஆன்லைன் பெட்டிஷனும் நல்ல யோசனைதான்.

July 23, 2007 2:55 PM  
Blogger சிவபாலன் said...

யோகன் பாரிஸ் அய்யா,

உண்மைதான். இது ஒவ்வொரு மனிதனுக்கும் அவமானம். இந்த அவலம் ஒழியவேண்டும்!

July 23, 2007 2:57 PM  
Blogger ALIF AHAMED said...

இந்தியா கண்டிப்பாக வல்லரசாக மாறும்...:(

July 23, 2007 3:28 PM  
Blogger ILA (a) இளா said...

//இது உண்மையானால் காரணமானவர்களை தாராளமாக செருப்பால் அடிக்கலாம்.//
அட அனானி, இதுக்கு செருப்பால அடிச்சா போதுமா? இழுத்து வெச்சு "நறுக்"க வேணாம்?

July 23, 2007 3:41 PM  
Blogger கருப்பு said...

உள்ளே போனாலும் பரவாயில்லை என்று கழுத்தை வெட்டி சீவி எறிய வேண்டிய ஜந்துக்கள்!!!

July 23, 2007 7:09 PM  
Anonymous Anonymous said...

அடப்பாவமே,

அவங்க, நம்ம திராவிட க்ரீமி லேயர் ஓ பி ஸி உயர் சாதி இந்துக்கள் கிட்ட சொன்னாக்க, மலத்தை, எம் மக்கள்(அதாங்க ராஜவனஜ் அய்யாவோட சகோதரர்கள்) கையில் கொடுத்துடுவாங்களே.இதை யார் வால்மீகி காரங்ககிட்ட சொல்வது?

July 23, 2007 9:29 PM  
Blogger koothanalluran said...

இதற்காக மத்திய பிரதேசம் போகனுமா ? மன்னார்குடியிலும்,கும்பகோணத்திலும், மதுரையிலும் இது சர்வ சாதாரணம். 'தோட்டிகள்' என்ற சாதியின் பிரதான தொழிலே இதுதான்.

'பீ' என்ற குறும்படம் பார்க்கவும்.

July 23, 2007 10:00 PM  
Blogger வடுவூர் குமார் said...

சலனப்படம் பார்க்கவில்லை,இருந்தாலும் எழுதியதை வைத்து பார்க்கும் போது... மிக மிக கண்டனத்துக்கு உரியது.
சிலர் மண்டையில் உள்ளதை மாற்ற முடியாது,அதற்கு பதிலாக மலம் அள்ளும் தொழிலே இல்லாத மாதிரி மாற்ற அந்த ஊரில் உள்ள அரசியல்வாதிகள் முன் வரவேண்டும்.

July 24, 2007 2:53 AM  
Blogger குமரன் (Kumaran) said...

போன வருடம் பல வலைப்பதிவுகளில் இந்தக் கொடுமையைப் பற்றி நிறைய படித்தேன். இந்தக் கொடுமை மாறக் கீழிலிருந்து மேல் வரை எல்லோரும் மாற வேண்டும். நம்மை அறியாமல் நமக்குள் ஒழிந்திருக்கும் சாதி உணர்வைக் கண்டு பிடித்து ஒழிக்க வேண்டும். அப்போது தான் விடிவு. நம்மிலிருந்து தொடங்குவோம்.

அமெரிக்கா வந்த பிறகு இங்கிருக்கும் வெள்ளை இன மக்களும் கருப்பு இன மக்களும் பழகுவதையும் அவர்களுக்கிடையில் இருக்கும் வேறுபாடுகளைக் களைய முற்படுவதையும் பார்த்த பிறகு நம் ஊரிலும் அது போல் ஏன் நடைபெறுவதில்லை என்று தோன்றும். முழுதுமான விடை கிடைக்கவில்லை. வெற்றி சொன்னது போல் மின்னஞ்சல், தொலைபேசி மூலம் சட்டத்தை நிலைநாட்ட வேண்டியவர்களுக்குச் சொல்லலாம் தான். அமெரிக்காவில் என்றால் உடனே நடவடிக்கை எடுப்பார்கள். நம் ஊரில்? அந்த அதிகாரிகளின் அறிதலுடன் தானே இது நெடுங்காலமாக நடக்கிறது?! அப்படி இருக்க அவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா?

அமெரிக்காவில் செயல்பாட்டில் காட்டும் ஆர்வம் போல் இன்றி நம் நாட்டில் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொள்வதிலேயே நேரத்தைக் கழித்துவிடுகிறோமோ என்ற எண்ணமும் தோன்றுகிறது. கருப்பு இன மக்களுக்காக எந்த வெள்ளையனும் போராடவோ வேலை செய்யவோ வந்தால் கருப்பு இன மக்கள் அதனை உடனே ஏற்றுக் கொண்டு எல்லா வித ஒத்துழைப்பும் தருவதாக எனக்குத் தோன்றுகிறது. அப்படிப்பட்ட நிலைமை நம் நாட்டில் இல்லை. மேலே உள்ளவன் கை கொடுத்து உதவுவதும் உரிமை உள்ளவர் உரிமையைப் பெறும் போது அதற்குத் துணை போவதும் அப்படி அவர்கள் செய்யும் போது மேலே வருபவர்கள் அதற்குக் கை கொடுப்பதும் தேவையான ஒன்று என்று தோன்றுகிறது.

சமூகத்தைப் பற்றிய என் புரிந்துணர்வுகள் மேலோட்டமாக இருக்கின்றன என்று அனானி நண்பர் ஒருவர் முன்பு சொல்லியிருந்தார். அதனால் நான் இங்கு சொன்னதும் பிரச்சனைகளை முழுவதும் புரிந்து கொள்ளாமல் மேலோட்டமாகப் பேசியதாக இருக்கலாம். ஆனால் என்ன செய்தால் நல்லது என்று எண்ணிய எண்ணத்தால் வந்த கருத்துகள் இவை.

July 24, 2007 5:07 AM  
Blogger Balaji-Paari said...

http://thatstamil.oneindia.in/news/2007/07/24/dalit.html

இதோ இன்னொரு நிகழ்வு.
குமரன் சொல்வது போல், கீழ் இருப்பவர்கள் அடிமைத் தனத்தை ஏற்றுக்கொள்வதிலிருந்து மாறத் துவங்கிவிட்டனர், பெரியாரின் சீரிய வழிநடத்தல் மூலம்.
//மேலும் வருகிற 25ம் தேதி தபால் நிலையத்திற்குள் தலித்களுடன் அத்துமீறி நுழையும் போராட்டத்தையும் அவர்கள் அறிவித்துள்ளனர்//
இத்தகைய மாற்றங்கள் மட்டுமே அனைத்தையும் மாற்றும்.

July 24, 2007 9:21 AM  
Anonymous Anonymous said...

சில கேள்விகள்,


இந்த மலம் அள்ளும் வால்மீகிகளுக்கு கடந்த பல ஆண்டுகளாக அரசு அளித்துவரும் இட ஒதுக்கீடு போய் சேரவில்லையா ? ஏன் ?


அப்படிச்சேர்ந்திருந்தால் அவர்கள் படித்து முன்னேறியிருப்பார்களே?

அரசு இடஒதுக்கீடு அளிப்பதற்கு முக்கிய காரணம் (reason de etre) இவர்கள் தானே ?


I consider these questions blindingly obvious after reading this news article.

As a proponent of our main social justice delivery system of Quota cum reservation system. What is your opinion?

July 24, 2007 10:02 AM  
Anonymous Anonymous said...

//I consider these questions blindingly obvious after reading this news article. //

The answers are also equally obvious ,my dear Adyar.The quota system is a loot system benefitting creamy layer characters like Sivabalan himself.It is very nice ofcourse that Sivbalan weeps for Valmikis of the world.Thats the characteristic of creamy later dravida obc.

July 24, 2007 9:25 PM  
Blogger மாசிலா said...

வெட்கத்தில் தலை குனிகிறேன்.
:(

July 31, 2007 1:25 PM  
Anonymous Anonymous said...

அனானி முண்டங்களுக்கு, அதாவது தலையற்றவர்களுக்கு நானும் முகமூடி அணிந்தே பதில் சொல்கிறேன்.

சுற்றி பார்பனர்களுக்கு இடஒதுக்கீடுதான் கண்களை உறுத்துகின்றது

அரசாங்கம் இட ஒதுக்கீடு கொடுத்தால் போதுமா ? அவர்களை படிக்கவிட வேண்டாமா ? தாழ்த்தப்பட்டவர்களை பள்ளிக்கு செல்லவிடாமல் மாட்டுக் கொட்டகையில் வேலை வாங்கும் சாதித்திமிர் இருக்கிறதே, அப்படியும் சில சிறுவர்கள் பள்ளியை எட்டிவிட்டால் உயர்சாதி ஆசிரியர்கள் அம்மாணவர்களை சாதியை சொல்லித் திட்டி 'நீயெல்லாம் படிக்க வந்து இந்தியாவை முன்னேற்றப் போகிறாயா ? மாடு மேய்பதையாவது ஒழுங்காக செய்டா ***** சாதிக்கார பயலே' என்று அம்மாணவர்களை குறுகி போக வைத்திருக்கின்றனர். பல பள்ளிகளில் சாதி சான்றிதழும் சாதியும் கேட்பது மாணவர்கள் எந்த சாதியை சேர்ந்தவர்கள் என்று அறிந்து ஒதுக்கி வைப்பதற்கே

இடஒதிக்கீட்டில் இருக்கும் இடங்கள் காலியாக இருப்பதற்கு காரணம் அவர்களுக்கு இடம் இருப்பதை மட்டும் காட்டி கதவை அடைத்துக் கொள்வதுதான்.

அப்படியும் சில மாணவர்கள் படித்து உயருகிறார்கள் என்றால் கண்கானாத இடத்திற்கு சென்று இந்த சாதி தாழ்த்தப்பட்டவை என்று அறிய முடியாத இடத்தில் சென்று படித்ததால் மட்டுமே அவை சாத்தியம் ஆகிறது

July 31, 2007 7:13 PM  
Anonymous Anonymous said...

//உயர்சாதி ஆசிரியர்கள் அம்மாணவர்களை சாதியை சொல்லித் திட்டி 'நீயெல்லாம் //

கரெக்ட்,இந்த உயர் சாதி கும்பல் எல்லாமே ஒட்டு மொத்தமா தங்களை ஒபிசி என்று வர்ணித்துக்கொள்ளும் கேவலமான ஜாதி வெறியர்கள் தான்.

July 31, 2007 9:27 PM  
Anonymous Anonymous said...

mihavum thevayaana pathivu.
_____________________________
manithaneya adippadayil samuthaaya angeehaaram pattri pesinaal kooda athai ida othukkeedu enginra varayarayil mattumey athai nokkuhinra thahuthiyum thiramaiyum padaiththa arivu jeevihal irukkum varai india vallarasu enkinra kanavai urakkaththil mattumey kaana mudiyum.
________________________

- ranjith

August 01, 2007 4:38 AM  
Blogger -/சுடலை மாடன்/- said...

இதுபோல் நாம் பலமுறை பலதளங்களில்அரசியல்வாதிகளையும், அரசாங்கத்தையும், சாதியமைப்பையும், சாதியமைப்பை சித்தாந்தரீதியில் கட்டிக் காத்துக் கொண்டிருக்கும் பிராமணீய-வேளாளக் கொள்கைகளையும் தாக்கிப் புலம்பிக்கொண்டிருந்து விட்டு அடுத்து ஒரு சிவாஜி படம் வரும்பொழுது அங்கே போய் விடுவோம். சிவாஜி படங்கள் எடுக்கப் படுவதன், கூவி விற்கப் படுவதன் நோக்கமே இதுதான் என்பதை தற்போதைக்கு விட்டு விடுவோம்.

சில தொண்டு அமைப்புகள் சாதியமைப்பை சித்தாந்த ரீதியில் உடைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில், வேறு சில அமைப்புகள் சாதியத்தொழில்களிலிருந்து அம்மக்களை விடுதலை செய்யும் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த இரண்டு அமைப்புகளுமே நமக்குத் தேவை என்றாலும், முன்னதற்குச் சொல்லெறிகளும் பின்னதற்குக் கல்லெறிகளும் கிடைக்கும் என்றாலும், நம்மாலியன்ற உதவிகளை இந்த இரண்டுக்கும் செய்ய முடியும். குறிப்பாக தகவல் தொழில் நுட்பத்திலும், மேலை நாடுகளிலும் உள்ளவர்கள் இரண்டாவது பணிக்குப் பொருளாதார ரீதியில் ஒரு சிறு பங்கை அளிக்க முடியும்.

கீழ்க்கண்ட சுட்டியில் அப்படிப்பட்ட ஒரு அமைப்பைப் பற்றியும், மனிதக் கழிவகற்றும் தொழிலிலிருந்து சிறுமிகளை விடுவித்து அவர்களுக்கு கல்வியையும், வேறு தொழிற்பயிற்சிகளையும் அளித்து வருகின்ற திட்டத்தையும் அறிந்து கொள்ளலாம். இங்கு பலர் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்க நாம் ஏதாவது செய்யலாமா என்று கேட்டிருக்கிறபடியால் மட்டுமே இதை இங்கு அளிக்கிறேன்.

HUMANIST ALTERNATIVE FOR SCAVENGER GIRLS

Swachchakar Dignity

ஆண்டுக்கு 5000 ரூபாய் மூலம் ஒரு பெண்குழந்தை தன் பள்ளிக்கூடப் படிப்பைத் தொடர முடியும். அடுத்த தலைமுறையில் எல்லோருமே படித்து வேறு வேலைக்குச் சென்று விட்டால், பீயள்ளுவதற்கு யாரும் இருக்க மாட்டார்கள். பீயள்ளுவதற்கான தொழில்நுட்ப மாற்றத்தை அரசுகள் பரீசிலிக்கும்! முதல்முறையாக கோயில்களும், பூசாரிகளும், கும்பிடப் போகிறவர்களும், பீயள்ளுவதை முக்கியப் பிரச்னையாகக் கடவுளுக்கும் சொல்லித் தீர்வு வேண்டுவார்கள், பூஜைகளும் நடத்தக் கூடும்!!

நன்றி - சொ. சங்கரபாண்டி

August 01, 2007 7:41 AM  
Blogger சிவபாலன் said...

சொ. சங்கரபாண்டி ,

மிக்க நன்றி!

சுட்டிக்கு மிகவும் நன்றி!

கடமைப்பட்டுள்ளேன்!

August 01, 2007 7:46 AM  
Anonymous Anonymous said...

//சாதியமைப்பை சித்தாந்தரீதியில் கட்டிக் காத்துக் கொண்டிருக்கும் பிராமணீய-வேளாளக் கொள்கைகளையும் //

மொதோ தடவையா வேளாளக் கொள்கையை பற்றி இங்கே படிக்கிறேன். பார்ப்பனர்களை திட்டுபவர்கள் வேளாளக்கட்டை அந்த அளவுக்கு திட்டாததற்கு என்ன காரணம் என்று சொல்லி தெரிய வேண்டியதில்லை.

August 01, 2007 7:53 AM  
Blogger kankaatchi.blogspot.com said...

Dont. find fault.Find the remedy.

This inhuman practice is found in Andra Pradesh also.Instead of exposing this in a periodical manner by these so called publicity oriented TV channals they
should stop this practice by constructing latrines in all the households of that village and rehabilitate all the people engaged in that work. The Govt. of India was spending crores of rupees on Total Sanitation Programme for construction of household latrines and also educating the people in this regard.
The Govt is allotting crores of funds for the upliftment of this poor people but it is swallowed by the politicians,and corruptive bureacrazy.and middlemen.
The poor remains in the same place where they are even though we are sending rockets to the moon.The
politicians who are calling themselves as champions of poor are exploiting them by offering them some baits through words and soaps at the election time to come to power and then forget them.

March 01, 2009 4:29 AM  
Blogger kankaatchi.blogspot.com said...

மலங்களே ..மலங்களே இது என்ன நிஜமா ?
மலங்களே மலங்களே இது என்ன நிஜமா ?

அடங்கியதே என் அகந்தை
ஒழிந்ததே என் தற்பெருமை .

என்ன இது ஒரு பிரபல தமிழ்
திரைப்பட பாடலின் வரிகளின் சாயல் .

மலம் என்றால் அசிங்கமா ?
மலம் அள்ளுவது கேவலமா ?
மலம் அசிங்கம் இல்ல i
மலம் அள்ளுவது கேவலம் இல்லை .

அசிங்கம் என்று நினைத்திருந்தால் தாய் தன் குழந்தையின் மலத்தை அள்ளுவாளா ?
செவிலியர்கள் அசைய முடியாத நிலையில்
படுத்திருக்கும் நோயாளிகளின் மலத்தை அப்புரபடுதுவார்களா ?

இன்று குடலில் உள்ள நோய் கிருமிகளை கண்டுபிடிக்க மலத்தை அல்லவோ ஆய்வு செய்து உலகம் முழுவதும்
தெருக்கு தெரு சோதனை கூடம் வைத்து
காசு வாங்கி பிழைப்பை நடத்தி கொண்டிருக்கிறார்கள்

மலம் அள்ளுவது கேவலம் என்றால் மஹாத்மா காந்தி தானே
அந்த வேலையை செய்தது ஏன் ?
சேவா தலத்தில் சேர சென்ற மற்றவர்களுக்கும் முதலில் அந்த பணியை
அளித்தது ஏன் ?

மலம் அசிங்கம் என்றால் அதை சேகரித்து மாட்டு சாணத்துடன்
சான எரிவாயு உற்பத்தி செய்து பெட்ரோலிய எரிவாயுவிற்கு பதிலாக
இன்று இந்தியா முழுவதும் செயல்பட்டு கொண்டு வருகிறது உங்களுக்கு தெரியுமா !

மாடு மலம் போடுவதை சாணி என்கிறோம்
மனிதர்கள் சாணி போடுவதை மலம் என்கிறோம்
அவ்வளவுதான்
சாணத்தின் வாசனை ஏற்றுக்கொள்ள மனம் பழகிவிட்டது .
ஆனால் நாம் போடும் சாணியின் வாசனையை ஏற்றுக்கொள்ள
நம்மால் முடியவில்லை.
அதுதான் இத்தனை விபரீதங்களுக்கும் காரணம் .

ஒன்றை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்
உங்கள் உடலின் இரண்டு கால்கள் மீதுதான்
உங்களின் கழிவுகளையும் கேட்ட கழிவு
நீரையும் சேமித்து வைக்கும் தொட்டி
கட்டப்பட்டுள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா ?
நீங்கள் சுவைத்து சுவைத்து சாப்பிடும் உணவுகள்
மலமாக மாற்றப்படும் குடல் அதன் மேல்தான் உள்ளது .

மற்றோன்றையும் புரிந்து கொள்ளுங்கள்
நீங்கள் சாப்பிடும் உணவுகள் மலமாக மாற்றப்பட்டு
இரண்டு விழுக்காடுகள்தான் வெளியேறுகிறது
மீதமுள்ள 98 சதவிகித மலம் உங்கள் உடல் முழுவதும்
பரவியிருக்கிறது ,அதனால்தான் மனிதன் உடலில்
அவன் வெளியேற்றும் மலத்தில் துர் நாற்றத்தை விட
உடலின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் வெளியேறும் நாற்றம்
மூக்கை துளைக்கிறது .அதை மறைக்க நீங்கள் மாதா மாதம்
ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு வாசனை சோப்புகளையும் வாசனை திரவியங்களையும் வாசனை ச்ப்ரய்க்களையும் உடலுக்கு தனியாக வும் அதையும் மீறி உடல் மீது அணிந்து கொள்ளும் ஆடைகள் மீதும் தெளித்து கொள்ள ஒழித்து கொண்டிருகிறீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்

இன்னொன்று சொல்கின்றேன் .
சில மாதங்களுக்கு முன்பு ஒரு செய்தி வெளியானது
டெல்லியில் ஒரு நிறுவனம் , உலர்ந்து போன மலத்திளினை தக்கைகளாக செய்து உறுதிபடுத்தி அதில் அறைகளில் தடுப்பரைகள் அமைக்க பயன்படுத்தும் அட்டைகள் தயாரிக்கும் தொழில் நுட்பத்தை உருவாக்கி அதற்க்கு தேவையான மலக்குவியலை ராஜஸ்தான் அரசிடம் கேட்டுள்ளது என்பதுதான்

எனவே மலம் என்பது அசிங்கமல்ல
மலம் அள்ளுவது கேவலமல்ல
மலத்திலே தோன்றி மலமாய் வாழ்ந்து
மலத்திலே புழுவாய் போகும் இந்த உடல் படைத்த நாம்
நாம்தாம் உயர்ந்தவர்கள்
நம்முடைய மலத்தை மற்றவர்கள் அல்ல வேண்டும் என்று
நினைக்கும் மனிதர்களே கேவலமானவர்கள் .

மலம் என்பது ,மனிதனின் bye product
You find out some technology to put it into use
Now all the world whether vegetarian or non vegietarian are enjoying
The ice cream made totally out of gelatine knowingly or unknowingly
Is it not?How many people know that it is made from cows bones

அதை கொண்டு மற்றவர்களை இழிவுபடுதுபவனுக்கு இறந்த பிறகு என்ன தண்டனை தெரியுமா ?
நரகத்தில் அவன் நரகலை அதாவது மலத்தைதான் உண்ண நேரிடும் என்பதை
மறக்காதீர்கள் என்று சாத்திரம் சொல்கிறது .

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றான் திருவள்ளுவன்
பாரதி எழுதினான்
இந்தய மக்கள் சுதந்திரம் அடைந்துவிட்டால்
மனிதரை மனிதர் இழிவு செய்யும் வழக்கம் இங்கு இனியுண்டோ என்று
ஆனால் நாட்டில் இது போன்ற செயல்களை செய்யும் மூடர்கள்
இருக்குதான் செய்கிறார்கள் .என்ன செய்வது ?
அவர்களை சமூகத்திலிருந்து ஒதுக்கி வைப்பதுதான் சரி.
நடக்கும் பாதையில் முட்கள் இருக்கத்தான் செய்யும்
அப்புரபடுதிவிட்டு அடுத்து ஆகா வேண்டிய வேலையை பார்ப்பதுதான்
அறிவுடையோர் செயல் .

March 04, 2009 9:42 AM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv