Tuesday, August 07, 2007

ரகசியமானது காதல் மிக மிக - பாடல் - விடியோ





ரகசியமானது காதல் மிகமிக
ரகசியமானது காதல்
முகவரி சொல்லாமல் முகம்தனை மறைக்கும்
ஒருதலையாகவும் சுகமனுபவிக்கும்
சுவாரசியமானது காதல் மிகமிக
சுவாரசியமானது காதல்

சொல்லாமல் செய்யும் காதல் கனமானது
சொல்லச் சொன்னாலும் சொல்வதில்லை மனமானது
சொல்லும் சொல்லைத் தேடித்தேடி யுகம் போனது
இந்த சோகம் தானே காதலிலே சுகமானது
வாசனை வெளிச்சததைப் போல அது சுதந்திரமானதுமல்ல
ஈரத்தை இருட்டினைப் போல அது ஒளிந்திடும் வெளிவரும் மெல்ல

ரகசியமானது காதல் மிகமிக
ரகசியமானது காதல்

கேட்காமல் காட்டும் அன்பு உயர்வானது
கேட்டுக் கொடுத்தாலே காதல் அங்கு உயிராகுது
கேட்கும் கேள்விக்காகத் தானே பதில் வாழுது
காதல் கேட்டு வாங்கும் பொருளும் அல்ல இயல்பானது
நீரினை நெருப்பினைப் போல விரல் தொடுவதில் புரிவதும் அல்ல
காதலும் கடவுளைப் போல அதை உயிரினில் உணரணும் மெல்ல

ரகசியமானது காதல் மிகமிக
ரகசியமானது காதல்



படம்: கோடம்பாக்கம்
இசை : சிற்பி
பாடல் : விஜய் சாகர்
நடிப்பு: நந்தா, தியா
குரல்: Harini, Harish Ragvendra
வருடம்: 2005
இயக்கம் : ஜகன் ஜி
தயாரிப்பு: செவ்வேல்

9 Comments:

Blogger கோவி.கண்ணன் said...

சிபா,

அண்மையில் வந்த பாடல்களில் நான் மிகவும் ரசித்துக் கேட்பதில் இந்த பாடலும் ஒன்று !

நன்றி !!!

August 07, 2007 8:30 AM  
Blogger சிவபாலன் said...

மிக்க நன்றி! GK.

August 07, 2007 8:34 AM  
Blogger தருமி said...

பிடித்த பாட்டு. ஆடியோவை மட்டும் எங்கு பிடிப்பது?

August 07, 2007 9:22 AM  
Blogger சிவபாலன் said...

தருமி அய்யா

இங்கே போனால் கேட்கலாம்..



http://www.oosai.com/tamilsongs/kodambakkam_songs.cfm

மிக்க நன்றி

August 07, 2007 9:27 AM  
Blogger குமரன் (Kumaran) said...

சே. முந்திக்கிட்டீங்க. இன்றோ நாளையோ இந்தப் பாடலைக் 'கேட்டதில் பிடித்தது' பதிவில் இடவேண்டும் என்று நேற்று தான் எண்ணிக் கொண்டிருந்தேன். :-)

August 07, 2007 10:14 AM  
Blogger சிவபாலன் said...

டாக்டர்,

நன்றி!

August 07, 2007 11:38 AM  
Blogger சிவபாலன் said...

குமரன்,

புத்திசாலிகள் ஒரே மாதிரி யோசிப்பார்கள் என்று யாரோ சொன்னது நியாபகத்திற்கு வருகிறது! :-)


நன்றி!

August 07, 2007 11:41 AM  
Anonymous Anonymous said...

எங்கய்யனுக்கு புடிச்ச பாட்டு.

@தருமி அய்யா,

www.tamilbeat.com தளத்தில் பாருங்கள். இல்லாட்டி இருக்கவே இருக்கு raaga.com, musicindiaonline.com

August 07, 2007 12:21 PM  
Blogger சிவபாலன் said...

அனானி

நன்றி!

August 08, 2007 7:57 AM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv