நீயூஸ் மீடியாக்களை எதால் அடிக்கலாம்?
மும்பையில் 1993ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. இந்த பயங்கர குண்டு வெடிப்பில் 357 பேர் உடல் சிதறி பலியானார்கள். நூற்றுக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். பலர் கை, கால்களை இழந்தனர். தொடர் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை மும்பை தடா கோர்ட்டில் நடந்து வந்தது. இதனைத் தொடர்ந்து இவ்வழக்கில் 100 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். குற்றம் நிரூபிக்கப் பட்டவர்களுக்கான தண்டனை விவரங்களை தடா கோர்ட் நீதிபதி பி.டி.கோடே பல்வேறு கட்டங்களாக அறிவித்து வருகிறார்.
இந்த வழக்கில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மீது சட்டவிரோதமாக ஏ.கே., 56 ரக துப்பாக்கியை வைத்திருந்தது, போலீசாருக்கு தெரிந்தவுடன் அதை அழித்தது போன்ற குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து தடா கோர்ட் இன்று தீர்ப்பு கூறியது.
இந்த செய்தியை எதோ சஞ்சய் தத் நாட்டின் தியாகி போல் சித்தரித்து, அவருடைய தங்கையுடன் கட்டித்தளுவும் படத்தை தினமலர் வெளியிட்டுள்ளது.
நாட்டின் பிரபலமான NDTV - நீதிபதியிடம் சஞ்சய்தத் கெஞ்சியதை "நண்பர்கள் போல் பேசிக்கொண்டார்கள் என வெளியிட்டுள்ளது."
அது போல் CNN IBN TV"அதே மாதிரித்தான் செய்துள்ளது."
எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஒரு குற்றவாளிக்கு எதற்கு இப்படி ஒரு பில்டப். கேவலமாக உள்ளது.
எரிச்சலுடன் ..
இந்த வழக்கில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மீது சட்டவிரோதமாக ஏ.கே., 56 ரக துப்பாக்கியை வைத்திருந்தது, போலீசாருக்கு தெரிந்தவுடன் அதை அழித்தது போன்ற குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து தடா கோர்ட் இன்று தீர்ப்பு கூறியது.
இந்த செய்தியை எதோ சஞ்சய் தத் நாட்டின் தியாகி போல் சித்தரித்து, அவருடைய தங்கையுடன் கட்டித்தளுவும் படத்தை தினமலர் வெளியிட்டுள்ளது.
நாட்டின் பிரபலமான NDTV - நீதிபதியிடம் சஞ்சய்தத் கெஞ்சியதை "நண்பர்கள் போல் பேசிக்கொண்டார்கள் என வெளியிட்டுள்ளது."
அது போல் CNN IBN TV"அதே மாதிரித்தான் செய்துள்ளது."
எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஒரு குற்றவாளிக்கு எதற்கு இப்படி ஒரு பில்டப். கேவலமாக உள்ளது.
எரிச்சலுடன் ..
18 Comments:
அவாளையெல்லாம் விளக்குமாற்றால் அடிக்கப்படாது. தர்பையால் தான் அடிக்கனும். இல்லையென்றால் தெய்வம் குற்றம் ஆகிடும்.
sivabalan, athai vida kevalam 1993-la seitha thappukku 14 varusham kazhichi thandai kodukkarathu... :-(
justice delayed is justice denied..
~lordlabakku
அனானி,
ஆமாங்க.. கால தாமதம் இன்னும் எரிச்சலை அதிகரிக்கிறது. அதைப் பற்றி எல்லாம் ஒரு வரி கூட பத்திரிக்கைகளில் காணவில்லை.
எனக்கும் அதே தான் தோனியது சிவா. இன்னும் சில பத்திரிக்கைப் புகைப் படங்கள் பார்த்தேன் எப்படி இந்த காவல் துறை மக்கள் பல் காட்டிக்கொண்டு படத்திற்கு தத்'துடன் சேர்ந்து நின்று போஸ் கொடுக்கிறார்கள் என்பதனை காணும் பொழுது. எரிச்சலோ எரிச்சல்.
நிறைய பேருக்கு இவர் எதன் தொடர்பாக சிறைக்குப் போறார் என்பதே இப்போது விளங்காது. என்னாத்தை சொல்றது, போங்க.
தெகா,
ஆமாங்க.. இதுல வேற ஜனநாயத்தின் நாண்காவது தூன் என்று வேறு மார்தட்டிக்கொள்கிறார்கள்.. ச்சே.. எரிச்சலோ எரிச்சல்..ம்ம்ம்
சிவபாலன்,
பத்திரிகைத் தர்மம், பக்கசார்பின்மை போன்றன ஊடகத்துறையிலிருந்து மறைந்து பல காலமாகிபிட்டது என நினைக்கிறேன்.
வெற்றி
ஆமாங்க.. விளம்பரத்தில் வரும் வருமானத்தை விட சார்பு செய்தியை வெளியிடுவதில் பணத்தை அள்ளிக் குவிக்கும் நிலைமைதான் இப்போது..
சார்,
நல்ல விளக்கம்!
This is message appear in Rediff.Com.
Good Comment.
Media at its worst
by Eric Chhapgar on Aug 01, 2007 01:14 AM | Hide replies
Today will be remembered as the day when the media reacted similar to how sharks react when thrown a piece of bloody meat. As soon as Sanjay's verdict was announced the media indulged in the highest form of stupidity and insensitivity. Some channels put up lines like "Munna bye" and also ran a background of a song "kaise kate ga har pal". Other "reputed" channels had the anchors solemnly asking Sanjay's friends and well wishers " how they felt on hearing this verdict?" Thisnis of course a standar question that they feel compelled to ask everyone even during times of natural disasters or during times when someone has been killed in an accident. (wonder if they expected anyone to declare their joy during such events)They also gravely tried to draw a parallel between Sanjay's anti-hero roles in his movies with his real life legal problems.
At every point the media, who need to be neutral in their attitude and need only to report the news to their viewers, resorted to bashing up Sanjay and airing their sanctimonious views on how Sanjay had been given his due justice.
I cringed every time some pompous anchor stated that Sanjay was to be treated no different then any other person. Especially when the continous airing of the same news and repeatedly shown clips proved that the media is the one who has made sure that Sanjay has no hope ever of being treated on par with others.
Continuous spotlight and focus on Sanjay by the media has resulted in him being made out to be "an exam
பெயரிலி,
மிக்க நன்றி!
Mr. Sivabalan,
If the same person's name is Mohammed Sanjay/ Sanjay Ahamed,(ada avlo venananga ithe Salman Khana irukattume) the media would have reacted entirely different!!!!
They would have covered as if India has relieved of the 'biggest' criminal of the history....
Same Sister would have been projected as another criminal supporting this most dangerous terrorist...
அனானி
உங்கள் கருத்து ஏற்புடையதே!
மிகவும் கேவலமான சிந்தனை, சமூக அமைப்பு நம்மிடம் இருக்கிறது சிவபாலன்!
குற்றமென்பதை விட, கொலை செய்வது சிலருக்கு சமூக உரிமை என்பது போல் இருக்கிறது...
இதற்க்கு மிக அடிப்படை காரணம் நாம்தான், நம்முடைய சொரணையற்ற தன்மைதான்.
நம்முடைய வாசிப்பு தன்மை எப்படியிருக்கிறது என்பதை நாம் எப்போதவது உரசிபார்க்கிறோமா!
ஊடகங்களில் கொலைகாரர்களுக்கு, கொள்ளையடிப்பவர்களுக்கு, இன்னும் பெண்களை வைத்து தொழில் செய்பவர்களுக்கு முதல் பக்கத்தில் படம் போட்டால்தான் நாம் அந்த பத்திரிக்கைகளை வாங்குகிறோம்.
படித்த இளைய சமுதாயம் நிறைந்த வலைப்பதிவு உலகில் எப்படிப்பட்ட பதிவுகள் சூடான இடுகையில் வருகிறது என்பதை வைத்தே நம்முடைய சிந்தனையின் தரத்தையும், நமது சமூக அக்கறையும் தெரியும்.
நாம் மாறாமல் ஊடகங்கள் மாறாது.
பத்திரிகைகளுக்கு சர்குலேசனும், வியாபாரமமுமே முக்கியம். சஞ்சய் தத் சினிமா என்ற மாஸ் மீடியாவில் இருப்பதால் மக்களை மிக சுலபமாக ஈர்க்க முடியும்.
நம் நாட்டில் பெரும்பாலான ஊடகங்கள் சார்புடையதாகவே இருக்கின்றன.
போதாக் குறைக்கு ஒரு வலைப்பதிவர் எழுதியுள்ளதைப் பாருங்கள்
http://netrikan.blogspot.com/2007/07/blog-post_31.html
எங்க போய் 'முட்டிக்கிறது'?
சினிமா, கிரிக்கெட் இந்த ரெண்டு பைத்தியமும் ஒழிஞ்சாதான் நம்ம நாடு உருப்படும்.
ஆயுட் தண்டனை கொடுக்க வேண்டிய இவருக்கு 6 ஆண்டுத் தண்டனை வெறும் கண்துடைப்பு.
செய்தித் துறை எதாலடித்தாலும் திருத்துமெனும் நம்பிக்கையெனக்கில்லை.
இந்த ஆறு வருட தண்டனையும் சுப்ரீம் கோர்ட்டுக்கு போனால் தாங்குமான்னு தெரியல... ஜட்ஜ்மென்ட்ல ஏ.கே. 56 வச்சிருந்தது அவரோட பாதுகாப்புக்குன்ற மாதிரி தான் சொல்லியிருக்காங்க... அதுக்கு, 6 வருட தண்டனையானு வாதாடுவங்க...
ஒரு தப்பு பண்ணிட்டு சினிமால காந்தி மாதிரி நடிச்சா போதும் போல.... நம்ப மீடியாக்கள எதால அடிச்சாலும் திருந்த மாட்டாங்க...!
//Mr. Sivabalan,
If the same person's name is Mohammed Sanjay/ Sanjay Ahamed,(ada avlo venananga ithe Salman Khana irukattume) the media would have reacted entirely different!!!!
They would have covered as if India has relieved of the 'biggest' criminal of the history....
Same Sister would have been projected as another criminal supporting this most dangerous terrorist...//
Agreed that Sanjay Dutt is a criminal and has to be handled that way.
I have no two opinions that criminals have to be punished - immaterial of whether his name is sanjayDutt or SalmanKhan.
That apart, if the name of the criminal is Salman Khan, would the anony who has commented above have rated him still as a criminal?
Hope he will.
Pondering,
anony munna
Post a Comment
<< Home