Friday, August 03, 2007

திரு.குமரன் அவர்களின் இடுக்கைக்கு ஒரு பதில்

PAMBAN BRIDGE, Tamil Nadu, India.


திரு.குமரன் அவர்கள் "இந்தப் பதிவில்." அமெரிக்காவில் பாலம் இடிந்து விழுந்ததை பற்றி கூறியிருக்கிறார். அதில் சில விசயங்களையும் தனது பின்னூடத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

நானும் ஒரு பின்னூடமிட்டேன். அதற்கு அவர் பதில் பின்னூடமிட்டுள்ளார்.முதலில் அந்தப் பாலம் ஏன் விழுந்திருக்கும் என்று என் சிற்றரிவுக்கு எட்டியவரை யோசித்துப் பார்த்தேன். Structural Failure ஆக இருக்க வாய்ப்பு அதிகம். (அமெரிக்க வானொலியில் பேசிய ஒரு பொறியாளர்கூட இதை குறிப்பிட்டிருந்தார்)

இதில் Fatigue Load என்று ஒன்று உள்ளது. அதாவது காலம் ஆக ஆக எற்படும் Shearக்கு ஏற்றவாறு (Joints)சந்திப்புகளிலும் அந்த (Span)ஸ்பேனின் மையத்திலும் ஏற்படும் மாற்றங்கள்.இது 40 வருடம் கடந்தும் நடக்கலாம். அல்லது 60 வருடம் கடந்தும் நடக்கலாம். திரு.வடுவூர்.குமார் சில விசயங்களை பின்னூடத்தில் சொல்லியிருந்தார். அது ஏற்புடையதே! நான், அந்த உடைந்த பாலத்தின் புகைப் படத்தை பார்த்தேன். அது உடைந்திருப்பதைப் பார்த்தால் அது Structural Failure இருக்க வாய்ப்பு அதிகம்.

சரி, இதில் திரு.குமரன் இடுக்கையில் இன்னும் சில.

1. நம்ம ஊரில் பாலம் விழுந்தால் கண்டு கொள்ள மாட்டார்கள்.

நிச்சயம் இல்லை. இது என்னால் எற்றுக் கொள்ளமுடியாது. எந்த வகையான பாலம் என்பது முக்கியம். இது போல் நகரின் பிராதான சாலையில் விழுந்தால் அது மிகப் பெரிய விசயம். அந்தத் துறையை சார்ந்த ஒவ்வொரு பொறியாளாரும் பாதிக்கப்படுவார்கள். அதுவும் உடனடி சஸ்பென்ட் தான். இங்கே இவனுங்க இந்த பாலம் விழுந்த அறிக்கை தாக்கல் செய்யவே இன்னும் 2 வருடங்களாவது ஆகும். இதை யாரும் மறுக்க முடியாது.

2. ஒவ்வொரு வருடம் ஆய்வு செய்கிறார்கள். இல்லை. இது எனக்கு சரியாக தெரியவில்லை. நான் கேள்விப் பட்டவரையில் இரண்டு வருடங்கள்க்கு ஒரு முறை என. சரி அது எப்படியோ, இந்தியாவில், இது போன்று சோதனை செய்வதில்லையா? யார் சொன்னது.

பாலத்தின் தன்மைக்கு ஏற்ப, குறிப்பிட்ட கால அவகாசத்தில் பொது பணித்துறையோ, நெடுஞ்சாலைத் துறையோ செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். இதையும் மீறி பாலங்கள் விழந்த்தான் செய்கின்றன. ஆனால் இது போன்ற மிக பிராதான பாலங்கள் நிச்சயம் கிடையாது. சில சமயம், பாலம் பராமரிப்பு சில உள்ளாட்சி அமைப்புகளிடம் செல்வதுண்டு. அங்கே கோட்டை விட்டு விடுகிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.


ஒரு ஆறு மாதங்களுக்கு முன் ஒரு ரயில்வே மேம்பாலம் இடிந்துவிழுந்தது. ஆனால அது மிகப் பழைமையான பாலம். அதை பயன்பாட்டுக்கு உகந்தது இல்லை என பல வருடங்களுக்கு முன்பே மூடிவிட்டார்கள்.


இன்னொரு முக்கியமான விசயம், உலகிலேயே, நில நடுக்கம் ஏற்பட்டு பெருந்த சேதம் ஏற்பட்டும், ஒரு சிறு கீறல் கூட விழாத நீர் தேக்க தொட்டியை கட்டிய பெருமை இந்தியனுக்கு மட்டுமே உண்டு. இன்னும் அதில் பல ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கிறது.

3. சரி, இந்தப் பாலம் விழுந்தவுடன், அமெரிக்காவில் உள்ள மற்ற பாலங்களையும் சரி செய்துவிடுவார்கள். இதை என்னால் ஏற்றுக் கொள்ள முடிய்வில்லை. இது மீடியா மூன்று நாண்கு நாட்களுக்கு சொல்லிவிட்டு விட்டுவிடும். ஒரு கமிட்டி அமைக்கப்படும்.

இங்கும் உள்ளாட்சி அமைப்புகள் பலம் வாய்ந்தவை. ஆனால் பல திட்டங்களுக்கு பட்ஜெட் பற்றாக்குறை. ( இது நான் படிக்கும் நாள்ழிதலை வைத்து சொல்கிறேன்.) அதனால், ஒரு பாலம் யார் பாரமறிப்பில் உள்ளது என்பதைப் பொருத்து இது மாறுபடும். மாகாணங்களிலும் பட்ஜெட் பற்றாகுறை உள்ளது. அதாவது தீடிர் திட்டங்களுக்கு.

4. இந்தியாவில் இது போல் நடந்தால் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்களா? இல்லை! அந்த அந்த துறையை சார்ந்தவர்கள் செயல் பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். மீடியாவில் வரவில்லை என்பதற்காக ஒட்டு மொத்த நாட்டையும் சொல்வது சரியில்லை.

5. தூண்கள் இல்லாமல் கட்ட்பட்டால் இது போன்று ஏற்பட வாய்ப்புள்ளதா? இல்லை! இந்தியாவில் இது போல் ஏராளம் உள்ளது.


இது அமெரிக்கா அல்லது இந்தியா என்ற பார்வை சரியில்லை. இந்திய பொறியாளர்கள் எந்த விததிலும் சளைத்தவர்கள் இல்லை.

அப்பறம் ஏன் சென்னையில் வானுயர்ந்த கட்டிங்கள் இல்லை.?

அய்யா, சென்னையில் LIC BUILDINGவிட உயரமாக கட்ட முடியாது. அது சட்டம். அதுவும் இல்லாமல், இந்தியாவில் Vertical Development அனுமத்தித்தால் Horizontal Develpment கிராமங்கள் மேம்பாடு அடையாது என்பதால் Floor Space Index மிக மிக குறைவாக அனுமதிக்கிறார்கள்.

அதனால் நம்மால் வானுயர்ந்த கட்டிடங்கள் கட்ட முடியாது என்பது தவறு. நிச்சயம் முடியும்! அரசாங்கம் அனுமத்தித்தால்.

24 Comments:

Blogger சிவபாலன் said...

நான் கடைசியாக சொல்லியிருக்கும் விசயம் திரு.குமரனின் இடுக்கைக்கு அல்ல. நம் மக்களின் பொதுவான கேள்வி என்பதால்!

August 03, 2007 8:12 AM  
Blogger சிவபாலன் said...

குமரன்,

இந்த பதிலை உங்கள் பதிவிலே கொடுக்கலாம என இருந்தேன்! ஆனால் பதில் கொஞ்சம் பெரிதாகிவிட்டதால், இங்கே தனிப்பதிவு!

நன்றி!

August 03, 2007 8:13 AM  
Blogger குமரன் (Kumaran) said...

சிவபாலன். நான் எங்கேயும் இந்தியாவைக் குறை கூறியதாகத் தோன்றவில்லை. நான் சொன்னவற்றை எல்லாம் தவறாகப் புரிந்து கொண்டு இங்கே பதில் சொல்லியிருக்கிறீர்களோ என்று தோன்றுகிறது. ஆனால் என்ன - என் எழுத்துகள் எப்படி தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம் என்று எடுத்துக் காட்டியதற்கும் இந்தியர்களின் பெருமையை எல்லோரும் அறிய எடுத்துக் கூறிவதற்கும் உங்களின் இந்த இடுகை பயன்படுவதால் மிக்க மகிழ்ச்சி.

'எல்லா ஊருலயும் நடக்குது. நம்ம ஊருல நடந்தா செய்திகளில் ஒரு ஓரத்தில் வந்து போய்விடும் - பாலம் இடிந்து 10 பேர் பலி. அவ்வளவு தான். அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடுவோம்.
'

இது என் பின்னூட்டத்தில் நான் சொன்னது. இங்கே செய்திகளில் இப்படிப்பட்ட விபத்துகள் பெறும் கவனத்தைத் தானே பேசியிருக்கிறேன்? அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடுவோம் என்றது பொது மக்களை - பொறியாளர்களை இல்லை. நீங்கள் பொறியாளர்களைச் சொன்னேன் என்று எடுத்துக் கொண்டு எதிர்வினை செய்திருக்கிறீர்கள். நான் ஒட்டு மொத்த நாட்டை எங்கே ஏதாவது சொன்னேன் என்று புரியவில்லை. செய்திகளில் பெறும் கவனத்தையும் அதனால் பொது மக்கள் இந்த மாதிரி விபத்துகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தையும் சொன்னேனே ஒழிய ஒட்டு மொத்த நாட்டையும் எதுவுமே சொல்லவில்லை. அப்படிப் பொருள் புரிந்து கொண்டு என் நாட்டுப்பற்றை ஐயப்பட உங்களுக்கு உரிமை இருக்கலாம். ஆனால் உங்கள் ஐயம் தவறு; என் நாட்டுப்பற்று உங்களின் பற்றை விட எந்த விதத்திலும் குறைந்ததில்லை என்று அறுதியிட்டுக் கூறவும் எனக்கு உரிமை உண்டு.

ஒவ்வொரு வருடமும் ஆய்வு செய்து வந்திருக்கிறார்கள் என்று சொன்னேன். அது தவறு; இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை தான் ஆய்வு செய்திருக்கிறார்கள் என்று நீங்கள் படித்ததைச் சொல்கிறீர்கள். நான் ஒத்துக் கொள்கிறேன். ஆனால் எங்கே இந்தியாவில் அப்படி எல்லாம் ஆய்வு செய்யவில்லை என்று சொன்னேன்? எடுத்துக் காட்டுங்கள். நீங்கள் பதில் சொல்லியிருக்கும் முறையைப் பார்த்தால் ஏதோ நான் இந்தியாவில் யாருக்குமே பொறுப்பில்லை என்று பொறியாளர்களைக் குறை சொன்னது போலும் இருக்கிறது. நான் விழுந்தப் பாலத்தைப் பற்றி மட்டுமே பேசும் போது நீங்கள் அதனை நீட்டி இந்தியாவில் ஆய்வு செய்வதில்லை என்று சொன்னதாக ஏன் எடுத்துக் கொள்கிறீர்கள்? நான் சொல்லாததை என் மேல் ஏன் திணிக்கிறீர்கள் என்று புரியவில்லை. நீங்கள் எழுதியதைப் பார்த்து ஒரு அனானி எதிர்வினையாக வெள்ளைக்காரன் வெளிக்குப் போவதைப் பற்றி எல்லாம் பேசுகிறார். இது எனக்குத் தேவையில்லாத ஒரு கெட்டப்பெயர்.

இந்தப் பாலம் விழுந்தவுடன் அமெரிக்காவில் உள்ள மற்ற பாலங்களையும் சரி செய்துவிடுவார்கள் என்று எங்கே சொன்னேன்? நீங்களாக நான் சொன்னது என்று நினைத்துக் கொண்டு அதற்கு மறுப்பு சொன்னால் அப்படி நான் சொன்னதாக ஆகிவிடுமா? நான் சொன்னது 'விபத்தின் காரணத்தை அறிந்து அமெரிக்காவில் இருக்கும் எல்லா ஊர்களிலும் மீண்டும் இது நடக்காமல் என்ன செய்ய வேண்டும் என்று ஆராய்ந்து அதனைச் செயல்படுத்த முயல்வார்கள்.' நான் தான் தெளிவாக 'முயல்வார்கள்' என்று சொல்லியிருக்கிறேனே. எங்கே 'சரி செய்துவிடுவார்கள்' என்று அறுதியிட்டுச் சொன்னேன்? அதே நேரத்தில் 'அமெரிக்காவில்' அது நடக்கும் என்று சொன்னதால் 'இந்தியாவில்' அது நடக்காது என்று சொன்னதாகப் பொருளா? ஏன் அப்படிப் பொருள் கொண்டு நம்மூர் உள்ளாட்சி அமைப்புகளைப் பற்றிச் சொன்னீர்களோ தெரியவில்லை. உள்ளாட்சி அமைப்புகளைப் பற்றியும் பற்றாக்குறைப் பற்றியும் சொன்னதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அது நான் சொன்னதாக நீங்கள் நினைத்துக் கொண்ட ஒரு கருத்திற்குச் சொன்ன பதில் என்ற வகையில் ஏன் அப்படி நினைக்கிறீர்கள் என்ற கேள்வி வருகிறது.

இது என்னைப்பற்றிய குற்றம் சாட்டும் தொனியில் இருக்கும் இடுகையின் பகுதிகளுக்கும் அனானியின் பின்னூட்டத்திற்கும் ஆன பதில்.

உங்கள் இடுகையால் நான் அறிந்து தெளிந்து கொண்ட மற்ற பகுதிகளைப் பற்றி மீண்டும் வந்து சொல்கிறேன்.

August 03, 2007 9:54 AM  
Blogger பாரி.அரசு said...

//சென்னையில் LIC BUILDINGவிட உயரமாக கட்ட முடியாது. அது சட்டம். //

இது சட்டமல்ல சிவபாலன். இது மாநகராட்சி கடைபிடிக்கிற ஒரு மரபு அவ்வளவுதான்.

ஆனால் மீறப்பட்டதாக கோயம்பேடு பேருந்துநிலையம் எதிரில் கட்டப்பட்ட குடியிருப்பு அனுமதியில் ஒரு வழக்கு நடந்துக்கொண்டிருந்தது. அது என்னவாயிற்று என்று தெரியவில்லை.

அப்புறம் பொறியாளர்கள் திறமை வாய்ந்தவர்கள் தான் ஆனால் முக்கியமான கருத்து விபத்து, விபத்துக்கான காரணம், அதை எதிர்காலத்தில் தவிர்த்தல் போன்ற ஆராய்ச்சி முறைகள் எந்தளவு நடைமுறையில் இருக்கிறது என்பதை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

நன்றி

August 03, 2007 10:11 AM  
Blogger Boston Bala said...

ஒப்புமை, அலசல், தகவல்கள், பின்னணி என்று தெளிவாக்கியமைக்கு, நன்றி சிவபாலன்.

August 03, 2007 10:13 AM  
Blogger சிவபாலன் said...

நன்றி குமரன்!

நீங்கள் அனைத்தையும் சொன்னீர்கள் என்று எங்கேயும் சொல்லவில்லை. அதனால்தான் உங்கள் இடுக்கை என்று தலைப்பை வைத்தேன்.

உங்கள் இடுக்கையை படிக்கும் எவருக்கும் வரும் கேள்விகள், இந்தியா பற்றிய சிந்தனைகள், சந்தேகங்கள் என்று எல்லாவற்றுக்கும் பதில் அளிக்கும் முயற்சி. அவ்வளவு!

இது உங்கள் பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் என நீங்கள் கருதினால் இப்பதிவை இப்பொழுதே விளக்கிக் கொள்ள தயாராக இருக்கிறேன்.

உங்கள் இடுக்கையில் வந்த பின்னூடங்கள் இந்தியா பற்றி குறிப்பிட்டு இருக்கிறது. அதை நீங்கள் அனுமத்தித்தும் இருக்கிறீர்கள். அதைப் படிப்பவர்கள் தவறாக புரிய வாய்ப்பு இருப்பதாக எண்ணியதால் இங்கே தனிப்பதிவு!

வேறு உள்நோக்கமில்லை. புரிந்துகொள்ள்வீர்கள் என நம்புகிறேன்.

மேலும் அனானி பின்னூடம் உங்கள் மனதை பாதிக்குமாறு இருப்பதால் அதை டெலிட் செய்துவிடுகிறேன்.

நன்றி!

August 03, 2007 10:30 AM  
Blogger சிவபாலன் said...

அனானியின் பின்னூடம் டெலிட் செய்யப்பட்டது!

நன்றி!

August 03, 2007 10:32 AM  
Blogger குமரன் (Kumaran) said...

//ஒப்புமை, அலசல், தகவல்கள், பின்னணி என்று தெளிவாக்கியமைக்கு//

இடுகையை எடுக்க வேண்டாம். இதற்காகவும் நான் இனி மேல் இடப்போகும் பின்னூட்டத்திற்காகவும் இருக்கட்டும். வரும் பின்னூட்டத்தில் நான் இந்த இடுகைப் படித்துத் தெரிந்து கொண்டதைப் பேசுவேன். :-)

August 03, 2007 10:35 AM  
Blogger சிவபாலன் said...

பாரி.அரசு ,

அது மரபு இல்லை. மாநாகராட்சியில் கொடுக்கப்பட்டிரும் அதிக பட்ச கட்டிட உயரெல்லைக்கான தீர்வு.

மற்றபடி, தமிழ்க நெடுஞ்சாலைத்துறை, பொது பணித்துறை அனைத்துறைகளிலும் ஆராய்ட்சிக்கு என்று தனி பிரிவே உள்ளது. அது திறமையான பொறியாளர்களால்தான் கையாளப்படுகிறது.

அண்ணா பல்கலைக்கழ்கத்தில், இதற்கு தனிப்பாடப் பிரிவே இருக்கிறது. இது நாடெங்கும் உள்ளது.

கொங்கன் இரயில்வே ஒரு முறை சென்று வாருங்கள். நன்றாக செய்துள்ளன்ர்.

நீங்கள் சொல்வது போல் இன்னும் அதிக விழிப்புனர்வு வேண்டும் என்பதை நான் ஏற்கொள்கிறேன். ஆனால மற்ற பெரிய நாடுகளுக்கு இந்த விசயத்தில் இந்தியா சளைத்தது இல்லை என்பதை நான் குறிப்பிட விரும்பிகிறேன்.

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

August 03, 2007 10:46 AM  
Blogger சிவபாலன் said...

நன்றி பாபா!

August 03, 2007 10:50 AM  
Blogger சிவபாலன் said...

புரிதலுக்கு நன்றி குமரன்!

August 03, 2007 10:53 AM  
Blogger Thekkikattan|தெகா said...

இங்கு அமெரிக்காவில் உள் நாட்டு விவகாரங்ளில் அதிகமாக கவனத்தை செலுத்தாமல், வெளி நாட்டு சங்கதிகளில் அதிகமாக மூக்கை நுழைப்பதனைப் பொருட்டு அன்மைய காலங்களில் இங்கு நிறைய புலம்பல்கள் வந்த வண்ணம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. புதிய ட்ராபிக் சிக்னல் போடுவதிலிருந்து இது போன்ற காலவதியாகிப் போன 195x கட்டப்பட்ட பாலங்கள் வரை மீண்டும் கவனிக்கப் படுவதில்லை என்பது.

மேலும், கவுண்டிகளைக் கொண்டு கையாளப் படும் லோக்கள் விசயங்கள் சென்ரலிருந்து பணம் வந்து கிடைப்பதில் ப்ரச்சினை இருப்பதால், குப்பை எடுத்துச் செல்வதெல்லாம்... கன்னா பின்னாவென்று மாதப் பணம் ஏற்றப்பட்டுள்ளது, நான் மாதம் $26(பிஸினஸ்க்கு) தான் கட்டி வந்தேன், இப்பொழுது அதுவே 113$ உயர்ந்திருக்கிறது. இந்த ரேஞ்சில் போனால் எங்கே போய் நிற்கப் போகிறது இந்த நாடும், இந்த நாட்டு மக்களும் என்று விளங்க வில்லை.

இங்கே ஒரு அமெரிக்கனின் ஆதங்கம்... நு யொர்க் டைம்ஸ்ல்...

....It’s alarming the number of structurally deficient bridges in this country! I expect there is quite a range of problems, from major to minor, which are covered by that term, but even so, the number is surprisingly high. I am from Boston, where we have been dealing with infrastructure problems of our own. The Big Dig despite the billions spent is leaking water from one part and we all know about the tragic consequences of the collapse of another part. What is not perhaps so known is the delayed maintenance issues about other bridges and tunnels that are now emerging. With the Boston tunnel collapse, the San Francisco bridge collapse, now the Minneapolis collapse, this country is reaching a point where the consequences of skimping on maintenance can no longer be denied. What is going on here? I call on the Times to look into this- all this talk about cutting back government spending should not be at the expense of essential responsibilities of government, namely, keeping essential infrastructure safe and intact. How many more people need die?

Posted by Juan Jaime ...

August 03, 2007 10:59 AM  
Anonymous Anonymous said...

/இதில் Fatigue Load என்று ஒன்று உள்ளது. அதாவது காலம் ஆக ஆக எற்படும் Shearக்கு ஏற்றவாறு (Joints)சந்திப்புகளிலும் அந்த (Span)ஸ்பேனின் மையத்திலும் ஏற்படும் மாற்றங்கள்./

நண்பரே
இப்பாலம் உடைந்துவிழுந்ததினை அசாதாரண அநர்த்தங்கள் அல்ல என்று இப்போதைக்குக் கருதிக்கொள்வோம். குண்டு வெடிப்பில்லை & நிலநடுக்கமில்லை.

அதனைவிட்டால், இதற்கு நீங்கள் கூறிய களைப்பு ஏற்றுகை (fatigue load) உடைந்திருப்பதற்கான ஒரு காரணம் மட்டுமே. அதைவிடவும் வெடிப்பு, உடைவு உட்பட வேறு காரணங்களும் உண்டு. ஆனால், அதனையறியவே அடிக்கடி பாலம் எவரின் நிர்வாகத்துக்குக் கீழே வருகின்றதோ (உள்ளூராட்சி, மாநில ஆட்சி, மத்திய ஆட்சி), அந்நிர்வாகத்தின் போக்குவரத்துத்துறைசார்பொறியியலாளர்கள் குறிப்பிட்ட காலத்துக்கொரு முறை பாலத்தின் அப்போதைய தரத்தினைப் பரிசீலிக்கவேண்டும். அவர்களின் முடிவுகளையும் சிபார்சுகளையும் பொறுத்தே அடுத்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். மினியாபொலிஸ்-சான் போல் 35மேற்கு பாலத்தின் மேலான முன்னைய பாலநிலமை பற்றிய அறிக்கைகள் செய்தியூடகங்களிலே தரப்படுவதை வைத்துப் பார்த்தால், குழப்பமே மிஞ்சுகின்றது.

'களைப்பு ஏற்றுகை'கூட, பல வகைகளிலே ஏற்படலாம். நீங்கள் கூறிய களைப்பு ஏற்றுகையின் விளைவு, மறைமுகமாக, பாலத்துண்டங்கள் (slabs), தூண்களின் (columns) மீள்தன்மையின் எல்லையைப் பொறுத்து, பாலத்திலே ஏற்படும் மாற்றத்திலானது. பாலம் உடைந்த பொழுதிலேயான வெப்பநிலை, பாலத்தின்மீதான இயங்குஏற்றுகை (dynamic loading), நடந்துகொண்டிருப்பதாகச் சொல்லப்படும் புனரமைப்புக்கட்டுமானம் என்பனவற்றின் தாக்கங்களினையும் இருந்து பார்க்கவேண்டும். பாலங்களோ வேறெந்த குடிசார் பொறியியலமைப்புகளோ அதீதநிலைகளுக்கேற்பக் (extreme conditions) கட்டப்படமுடியாது; பொருளாதாரம் இடம் கொடுக்காது. அதனால், இயன்றவரை பாலத்தின் தேவை, கடக்கும் ஆட்கள், பாரம், சுற்றுப்புறத்தின் தன்மை (வெப்பநிலை, பனி, நிலத்தன்மை), பாலக்கட்டுப்பொருள், பாலத்தின் வகை, பாலம் பயன்பாட்டிற்கென எதிர்பார்க்கப்படும் காலம் என்பனவற்றினைக் கணக்கெடுத்து, வரையமைப்புஏற்றுகைக்கு (design load) ஏற்பவே, ஒரு பாதுகாப்புக்குணகத்தினையும் (safety factor) இனையும் சேர்த்து நிர்ணயிக்கப்பட்டு அமைக்கப்படும். அதன்படி, இவ்வுடைவினைப் பார்த்தால், நேற்று கோர்னல் பல்கலைக்கழகப்பேராசிரியர் ஒருவர் சொன்னதுபோல, அதிர்ஷ்டச்சீட்டிலே ஒருவருக்குக் கோடி விழுவதுபோன்றதற்கான நிகழ்தகவே இங்கும் உடைவதற்குண்டு. மேலும் இப்பாலம் அறுபதுகளின் பின்னரைகளிலே கட்டப்பட்டபோது, தற்போதிருக்கும் பாலக்கட்டுப்பொறியியல் அமைப்புக்கோவை (design codes) நடைமுறைக்கு வரவில்லையென்பதையும் கணக்கிலெடுக்கவேண்டும். அதனைக் கண்டுகொண்டிருக்கவேண்டாமா என்பது இன்னொரு கேள்வி.

முழுமையான பொறியியலாளர்களின் அறிக்கையின்றி நாம் எதையுமே சொல்லமுடியாது. அதனாலேயே, பாலத்தினை மீளப்பொருத்திச் செய்து பார்த்தே தீர்மானிக்கமுடியுமென்று பேசத்தொடங்கியிருக்கின்றார்கள்.

August 03, 2007 11:39 AM  
Anonymous Anonymous said...

regarding boston tunnel collapse,
it is totally different ball game. It is mainly due to the corruption (and of course, the "blind eye" on groundwater effect). They could have done it better.

August 03, 2007 11:41 AM  
Blogger சிவபாலன் said...

தெகா

உண்மைதான். இன்னும் சொல்லப்போனால், கருப்பினத்தவர்கள் வாழும் பகுதியை மிக மோசமாக வைத்திருக்கிறார்கள். என்னமோ..


உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!

August 03, 2007 12:53 PM  
Blogger வவ்வால் said...

சிவபாலன் ,

நல்ல விளக்கம் , கட்டுமானக்குறைப்பாடும் இருக்கலாம் , அல்லது காலப்போக்கில் ஏற்பட்டதாகவும் இருக்கலாம் , ஆனால் ஒத்திசைவு (resonance) என்று ஒன்று சொல்வார்கள் அது ஏற்பட்டால் கூட பாலம் அதிர்ந்து விரிசல் விட்டு நொறுங்கும். பள்ளிக்கூடம் அடிப்படை பாடம் தான், ராணுவ வீரர்கள் பாலங்களில் செல்லும் போது மார்ச் ஃபாஸ்ட்டில் செல்லக்கூடாது எனப்படித்த நினைவு இருக்குமே!

டிஸ்கவரி சேனலில் ஒரு முறை காற்றின் வேகத்தில் நொறுங்கிய பாலம் என ஒன்று காட்டினார்கள். காற்று வேகத்தினால் லேசாக ஊசல் ஆடி பின்னர் அதுவே அதன் இயல் அதிர்வெண்ணுக்கு வந்து ஒத்திசைவாக மாறி இடிந்ததாம்!

August 03, 2007 1:24 PM  
Blogger சிவபாலன் said...

//முழுமையான பொறியியலாளர்களின் அறிக்கையின்றி நாம் எதையுமே சொல்லமுடியாது. அதனாலேயே, பாலத்தினை மீளப்பொருத்திச் செய்து பார்த்தே தீர்மானிக்கமுடியுமென்று பேசத்தொடங்கியிருக்கின்றார்கள். //

அனானி

உங்கள் விளக்கத்திற்கு நன்றி!

August 03, 2007 6:52 PM  
Blogger சிவபாலன் said...

அனானி - 2,

// They could have done it better. //

உங்கள் கருத்துக்கு நன்றி!

August 03, 2007 6:53 PM  
Blogger வெற்றி said...

சிவபாலன்,
உங்கள் பதிவிலிருந்தும் பின்னூட்டங்களிலிருந்தும் பல தகவல்களை அறியக் கூடியதாக இருந்தது. நன்றி.

August 03, 2007 7:39 PM  
Blogger வடுவூர் குமார் said...

நேற்று இரவு தமிழ் செய்தியில் அங்கு இருந்த பாதுகாப்பு கேமிராவில் பதிவாகி இருந்ததை காட்டினார்கள்.முதலில் மத்திய பகுதி அப்படியே உட்கார்கிறது பிறகு மற்றவை.
என் அனுமானப்படி 2 வித காரணங்கள் இருக்க முடியும்
1.Overload (chances are less)
2.Steel member fatigue
இப்பாலம் இரும்பு பொருட்கள் மூலம் தாங்கப்படுவதால் அதில் ஏதேனும் முக்கியமான மெம்பர் வலுவிழ்ந்த நிலையில் முறிந்து போக மீதமும் அப்படியே கீழே போயிருக்கும்.
இவை எல்லாமே அனுமானம் தான்.விரிவான ரிப்போர்ட் வரும் போது தான் ஓரளவு புலப்படும்.

August 03, 2007 8:23 PM  
Blogger தஞ்சாவூரான் said...

அமெரிக்காவில், நிறைய பாலங்கள் இப்படித்தான் இருப்பதாக செய்திகள் கூறுகின்றன. அமெரிக்க அரசாங்கத்திற்கு, இராக்கில் பில்லியன் கணக்கில் பணத்தை இறைக்கும் ஆர்வம், உள்ளூர்களில் கட்டுமானங்களை சரி செய்வதில் இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை! இதில் அமெரிக்கா, இந்தியா என்பது போன்ற விமரிசனங்கள், நம்மைப் பற்றி நாமே குறைவாக மதிப்பிடுவதால்தான். நாம் யாருக்கும் எந்த விஷயத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்பது என் கருத்து!

குமரன் இந்தியாவைப் பற்றி குறைவாக கூறியதாக நான் நினைக்கவில்லை! அமெரிக்கா ஒரு மாய உலகம். இந்தியா மாதிரி ஒரு நல்ல நாடாக (எல்லா வகையிலும்) இருக்க அது பெருமுயற்சி எடுக்க வேண்டும். இங்கு பணமே பிரதானம். மற்றவை எல்லாம் சும்மா!

நம்ம ஊரிலும் எல்லாவிதமான கட்டுப்பாடுகளும், சட்டங்களும் இருக்கின்றன. அவை எந்த அளவுக்குப் பின்பற்றப்படுகின்றன என்பதுதான் கவலைக்குரிய செய்தி!

August 03, 2007 9:19 PM  
Blogger மணியன் said...

நல்ல அலசல்களுடனும் கட்டுமானத் துறை சார்ந்த நுட்ப விதயங்கள் பதிவிலும் பின்னூட்டங்களிலும் அழகுதமிழில் அமைந்து படிப்பதற்கு இன்பமாக இருந்தது.

நமது தாழ்வுமனப்பான்மையாலேயே நமது திறமைகளையும் நடைமுறைகளையும் குறைத்து எடைபோடுகிறோம். ஊழலும் குடியுரிமை அறியாமையும் மட்டுமே நமது தடைகற்கள். பொறியியலின் அனைத்து துறைகளிலும் சாதனை நிகழ்த்திக் கொண்டுதான் இருக்கிறோம்.அரசின் நடைமுறைச் சட்டங்களும் உலகநாடுகளில் எவருக்கும் சளைத்ததில்லை. அவற்றை அமல்படுத்துவதிலேதான் அவ்வப்போது சிக்கல்கள் எழுகின்றன.

August 04, 2007 12:15 AM  
Blogger நண்பன் said...

பல நல்ல அரிய மொழிமாற்றங்களை வெளிக் கொண்டு வந்த ஒரு பதிவு.

இந்திய பொறியாளர்களின் திறமைக்கு ஒரு குறைவுமில்லை. ஆனால், அவர்காளை நிர்வகிக்கும் பணியைத் தான் திறமையற்றவர்கள் கையில் கொடுத்து விடுகிறோம்.

ஆர்வமும், துடிப்புமிக்கவர்களை முடக்கிப் போட்டு விட்டு, தங்கள் அடிவருடிகள் அல்லது தங்கள் சாதியைச் சார்ந்தவர்களா என்ற கோணத்தில் தான் பதவி உயர்வுகளும், வாய்ப்புகளும், வசதிகளும் வழங்கப்படுகின்றன.

இதை சிலர் மறுக்கலாம். ஆனால், நெடுஞ்சாலைத் துறையில் பொறியாளாராக இருக்கும் நெருங்கிய நண்பன் என்னுடன் பகிர்ந்து கொள்ளும் தகவல்களை வைத்து தான் கூறுகிறேன்.

'தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி, தகுதியுடையவரை அவமானப்படுத்துவது என்பது தமிழக அரசியல்வாதிகளுக்கு ஒரு அத்தியாவசியமான தேவையாகவே இருக்கிறது. தங்களுடைய தகுதியின்மையின் பலவீனத்தை மறைத்துக் கொள்ள அவர்கள் போடும் ஆட்டமே - திறமையாளர்களை விட, தங்களுக்கு இணங்கி நடக்கும் நபர்கள் இருந்தால் வசதி என்ற நம்பிக்கையில் தான்.

இது அனைத்து துறைகளுக்கும் கூட பொருந்த்தலாம்.

August 04, 2007 11:35 AM  
Blogger Boston Bala said...

fyi... NPR : The Science Behind Strong Bridges

August 10, 2007 11:57 AM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv