Wednesday, August 08, 2007

"எரிகிறதா புதைக்கிறதா" புகழ் தெகாவின் புதிய இடுக்கை



நம்ம எல்லோருக்கும் தெகாவை நன்றாக தெரியும். ஒரு காலத்தில் "என்னை எரிக்கிறதா இல்லை புதைக்கிறதா" என்று கேட்டு ஒரு பெரிய அலையை ஏற்படுத்தியவர்.

நல்ல பதிவர். பல முக்கியமான விசயங்களை பதிவுலகிற்கு கொண்டு வந்து விவாதப் பொருளாக்கியவர்.

அவர் தற்பொழுது எடுத்துக் கொண்டிருக்கும் இன்னுமொரு முக்கியமான விசயம் "வால்மார்ட் இந்தியாவிற்கு அவசியமா?" என்பது.

அங்கே எனக்கு தெரிந்த விசயங்களை பகிர்ந்துகொண்டிருக்கிறேன். அதை இங்கேயும் கொடுத்துவிடுகிறேன்.

------------------------------------------------------

// ஆமாம் தெகா. எங்க குடும்பம் விவசாயக் குடும்பம் தான். அதுவும் வானம் பார்த்த பூமி (மானவாரி நிலங்கள்).

அது போன்ற நிலங்களில் விளைச்சலும் அதை வணிகம் செய்வதும் எவ்வளவு கடினம் எனபதை உணர்ந்தவன்.

வால்மார்ட், இது போன்ற விவாசாயிகளில் குரல் வலையை நசுக்குகிறதா அல்லது இடைத்தரகர்களை நசுக்குகின்றதா என்பதைப் பார்க்க வேண்டும்.

பொதுவாக விவசாயிகள் சில்லறை வணிகத்தில் ஈடுபடுவதில்லை. அதனால் வால்மார்ட் இடைத்தரகர்களைவிட நல்ல விலை கொடுக்கலாம்.

ஆனால் பிரச்சனை ஆரம்பமே அங்கு தான். விவசாயிக்கு நல்ல விலை வரவில்லை என்றால் மற்ற இடத்திற்கு பொருளை தற்பொழுது நிலையில் விற்க முடியும். ஆனால் வால்மார்ட் வந்தால் இந்த நிலையில் என்ன மாற்றம் வரும் என்பதை அறிய விரும்பிகிறேன்.

அதே போல் விதைகளை அவர்களே கொடுக்கும் பட்சத்தில் அந்த விதைகள் நம் மண் வளங்களை சுரண்டும் வண்ணமும், ஒவ்வொரு முறை விதைகளுக்கு வால்மார்ட் நம்பி இருக்கும் நிலையும் இருந்தால் அது மிகப் பெரிய ஆபத்து. ஏனென்றால் விதைகளின் விலை வால்மார்ட் வசம் போய்விடும். அப்படியாகின் நம் விவசாயிகள் தூக்கில் தான் தொங்க வேண்டும். //

-----------------------------------------

// தெகா

மேலும், இது மற்ற வர்த்தகத்திற்கும் பொருந்தும். எப்படி என்றால், ஒரு லுங்கி தாயாரிக்கும் ஆலையை எடுத்துக்கொள்வோம்.( சேலும் அதை ஒட்டிய இடங்களில் இந்த ஆலை மிக அதிகம்).

ஒரு வேளை வால்மார்ட் இந்த நிறுவனங்களிடமிருந்து ( அதாவது குடிசைத் தொழில் போல் செய்யும் நிறுவனங்கள்) கொள்முதல் செய்வதாக வைத்துக் கொண்டால், வால்மார்ட் போக போக தனது தனது தொழில் ஏற்படும் மாற்றங்கள் இந்த நிறுவனங்களின் மீது தினிக்கும்.

மக்களும் வால்மார்டிடமே விரும்பி செல்கிறார்கள் என்றால், மற்ற நிறுவனங்கள் தனித்து இயங்க முடியாமல் போகலாம். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், குடிசை தொழில் போல் செய்பவர்கள் காணாமல் போய்விடுவர்.

இது என் சிற்று அறிவுக்கு ஏற்ப என் கருத்தை சொல்லியிருக்கிறேன். இந்த வர்த்தகத்தை பற்றி அறிந்தவர்கள் இன்னும் தெளிவாக விளக்கலாம். எனக்கும் மற்றவர்களும் உபயோகமாக இருக்கும்.

நன்றி //

------------------------------------

நான் எதிர்ப்பார்பதெல்லாம், இந்த வால்மார்ட் உண்மையில் நம் இந்தியாவில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை பற்றி ஒரு தெளிவான விவாதம்/கட்டுரை.

அங்கே நடக்கும் இந்த விவாதத்தில் நீங்களும் கலந்துகொண்டு கருத்தை பகிர்ந்துகொள்ளவும்..

6 Comments:

Blogger Thekkikattan|தெகா said...

ரொம்ப வேகமாத்தான் இருக்கீங்க, சிவா!!

அதே தான் நான் எதிர்பார்ப்பதும். எந்த அளவிற்கு இந்த வால்மார்ட்டின் பிரவேசிப்பு இந்தியாவில் எண்ண அலைகளை மக்களிடத்தே ஏற்படுத்தி இருக்கிறது என்பதனை அறிந்து கொள்ள ஆசை.

நன்றி! தங்களின் கவனிப்பிற்கும்.

August 08, 2007 12:52 PM  
Blogger வெற்றி said...

/* நம்ம எல்லோருக்கும் தெகாவை நன்றாக தெரியும்.*/

சூரியனுக்கு அறிமுகமா? :-))
தமிழ்மணத்தில் உபயோகமான பதிவுகளைத் தொடர்ந்து தரும் தெகாவைத் தெரியாதார் உண்டோ? :-)

August 08, 2007 1:04 PM  
Blogger Thekkikattan|தெகா said...

யம்மாடி, வெற்றி இப்படி போட்டு அடிக்கிறீங்களே. நான் தாங்குவேனா :-))) ?

August 08, 2007 1:15 PM  
Blogger சிவபாலன் said...

தெகா

உங்கள் எண்ண ஓட்டம் சரியே! அதன் விளைவே இப்பதிவு!

அப்பறம் இன்னொரு விசயம், எரிக்கிறதா இல்லை புதைக்கிறதா? முடிவுக்கு வந்தீங்களா? இல்லையா? Ha Ha Ha..

நன்றி!

August 08, 2007 1:32 PM  
Blogger சிவபாலன் said...

வெற்றி,

இரவில் சூரியன் வருவதில்லை.. அதனால்தான் இந்த டார்ச் லைட்.. Ha Ha Ha..

வருகைக்கு மிக்க நன்றி!

August 08, 2007 1:34 PM  
Blogger சிவா said...

பல வருடங்களுக்கு முன்னர் கர்னாடகத்தில் ஒரவர் இதையே தீவிரமாக எதிர்த்து போராட்டமெல்லாம் நடத்தினார். என்ன ஆயிற்று என்று தெரியாது. இதைப்பற்றி நன்றாக தெரிந்தவர்கள் இங்கு பதிவதோடு நிறுத்திக்கொள்ளாமல் ஏதாவது பத்திரிக்கையில் எழுதினால் இன்னும் உபயோகமாக இருக்கும்.

August 11, 2007 11:37 AM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv