பதிவர் பட்டறை - தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் - சில குழப்பங்கள்!
சென்னை பதிவர் பட்டறையை மிக அழகாக வெளியிட்டு நம் அனைவரின் மகிழ்வுக்கும் காரணமான தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிழதலுக்கு ஒரு பெரிய நன்றி!
இது போன்ற பட்டறையை நடத்தி காட்டிய நல் இதயங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். வணங்குகிறேன்!
ஆனால், இந்தியன் எக்ஸ்பிரஸ் முதல் பக்கத்தல் வந்த பதிவர் பட்டறையை பற்றி வந்த கட்டுரை அவ்வளவாக இரசிக்க முடியவில்லை.
அதாவது அதில் குறிப்பிடப்பட்டுள்ளது போல் கும்மி, மொக்கை, உள் குத்து, ஜல்லி, கயமைத்தனம், கவுஜ (கவிதை), தடாலடி போட்டி, பா.க.ச (பாலபாரதி கலாய்போர் சங்கம்)- இதைத் தேடித்தான் புதுப்பதிவர்கள் வரவேண்டுமா?
நான் இவற்றை எதிர்க்கவும் இல்லை, தவறு என்று சொல்லவும் இல்லை.
ஆனால், ஒரு பிரபல நாளிதழ், ஒரு மிக முக்கியமான நிகழ்வை இவ்வாறு கொடுத்தது, எனக்கு சற்று அதிர்ச்சிதான். அதுவும் இந்தப் பட்டறையை நடத்தியவர்களின் எண்ணங்கள் முழுவதும் தமிழை முன் நிறுத்தும் முயற்சி எனும் போது, இது போன்ற கட்டுரைகள் புதிதாக தமிழ் உலககிற்கு வரவேண்டும் என்பவர்களை எவ்வாறு ஊக்கிவிக்கும் என்பது எனக்கு குழப்பமும் சந்தேகமும் தான்.
நிச்சயம், அந்த பத்திரிக்கையில் மிக நல்ல ஆசிரியர்கள் இருப்பார்கள். அவர்களிடம் கொடுத்து நல்ல விதமாக ஒரு கட்டுரையை கொடுத்திருக்கலாம் என்பது என் ஆதங்கம்.
இங்கே நிறைய பதிவர்கள் பட்டறையைப் பற்றி தங்கள் அனுபங்களை மிக அழகாக கொடுத்திருக்கிறார்கள். அவற்றுடன் ஒப்பிட்டால் கூட இந்தக் கட்டுரை சற்று தரம் தாழ்ந்ததாகவே நான் கருத்துகிறேன்.
ஒரு வேளை என் பார்வை தவறோ?! இருக்கலாம்!
பி.கு. இந்த இடுக்கை யார் மனதையும் புண்படுத்த இல்லை. அப்படியாகின் என் வருத்தத்தையும் மன்னிப்பையும் இப்பொழுதே கூறிவிடுகிறேன்.
27 Comments:
This comment has been removed by the author.
சிவா,
எனக்கும் இந்த பதிவர் சந்திப்பு குறித்து மிக்க மகிழ்ச்சியே. இருப்பினும், இந்த வெகு ஜன பத்திரிக்கையான "இந்தியன் எக்ஸ்பிரஸ்ல்" வந்த செய்தியை படித்தவுடன், பக் கென்றது மனது. ஏன் மற்ற புது நபர்களை உள்ளே இழுக்க இது போன்ற விசயங்களை சொல்லித்தான் கொண்டு வர வேண்டுமா?
இது எனக்கு முரணாகவே பட்டது. புதிதாக வருபவர்களுக்கும், அப்படி இந்த ப்ளாக்கர்களைப் பற்றி தெரிந்து கொள்பவர்களுக்கும் இது ஒரு தவறான புரிதலை அல்லவா கொடுக்கும்.
இதுவும் எனது புரிதல் பொருட்டு எழும் ஒரு சந்தேகமாகவே இங்கு முன் வைக்கிறேன்.
நன்றி, சிவா உங்களின் பார்வையை முன் வைத்தமைக்கு.
ஆங்கில நாளிதழின் நக்கல் தொனி என்று சொல்லலாம். இல்லை, வெகுஜன இதழின் கிசுகிசு பாணி என்று சொல்லாம். இதை எல்லாம் விட முக்கியம், எதை செய்தியாளர்களிடம் வெளிப்படுத்துகிறோம் என்ற உணர்வு இல்லாமல் இதைச் சொல்லிக் கொடுத்துப் பேட்டி கொடுத்தவர்கள் தான். நாம் ஒழுங்காகக் கருத்தை வெளிப்படுத்தி இருந்தால் அவர்கள் ஏன் இப்படி எழுதப் போகிறார்கள்.
கனிந்த மரம் கல்லடி படவே செய்யுமுங்க. அதனால அதிர்வளர்ச்சி கண்டுவரும் தமிழ் வலைப்பூ உலகில் சதா ஏதாவது குறை கண்டுபிடித்து புண்படுத்துவது என்பது சிலருக்கு தவிர்க்க முடியாததுங்க ஐயா.
விட்டுத்தள்ளுங்க. ஆக வேண்டியத பாருங்க.
மேலும் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை வந்த செய்தியில் கண்டு கொள்ள படாமல் விடப்பட்ட முக்கிய செய்தி...
இந்த பட்டறைக்கு ஏற்பாடு செய்து பாடுபட்ட நண்பர்கள்... பாலபாரதி... லக்கிலுக்... விக்கி... போன்றவர்களை கன்டு கொள்ள வில்லை...இவர்கள் இல்லாமல் இந்த பட்டறை என்பதே இல்லை...
மாசிலா
பதிவைப் படித்து விட்டு பின்னூடமிடவும்! :-)
கருத்துக்கு நன்றி!
தெகா
என் எண்ணத்துடன் தங்கள் எண்ணமும் ஒத்து போவது மகிழ்ச்சியே!
நன்றி!
அனானி
அதே பத்திரிக்கையில் மூன்றாவது பக்கத்தில் மிக அழகாக நம் நண்பர்கள் பேட்டி கொடுத்திருக்கின்றனர். ஒரு வேளை அந்த நிருபர், நம் மக்கள் ஜாலியாக பேசிக் கொண்டிருந்ததை முதல் பக்கத்தில் போட்டுவிட்டார் என நினைக்கிறேன்.
இருந்தாலும் ஆதங்கம் தான்..
மாசிலா
குறை என்பதைவிட செம்மைப் படுத்துதல் என ஏன் நீங்கள் நினைக்கக் கூடாது?
நன்றி!
தமிழ்க் குரல்
உங்கள் கருத்துக்கு I Have No Comments! :-)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
சிவபாலன் சார்,
உங்களின் ஆதங்கம் நியாயமானதே!!! நிருபர், காலையிலிருந்து மாலை வரை பட்டறையில் இருந்து அனைத்து விசயங்களையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார். அவர் கவனித்த விசயங்களை பல்வேறு பதிவர்களிடம் உரையாடி தெளிவுப் பெற்றுக் கொண்டார். "Casual talk" என்கிற முறையில் தான் அந்த ரிப்போர்ட்டர் எல்லோரிடமும் கலந்துரையாடிக்கொண்டிருந்தார். அப்படி "Casual" ஆகபேசினாலும் பேசிய பதிவர்கள் எல்லோரும் பொறுப்புணர்வோடு தான் பேசினார்கள். அந்த நிருபரும் மூன்றாவது பக்கத்தில் அருமையாகத்தான் தொகுத்துள்ளார். "Catchy" யாக இருக்கவேண்டும் என்று சுவாரசியம் என அந்த நிருபர் கருதிய விசயங்களை பத்திரிக்கையில் முதல் பக்கத்தில் போட்டு இருக்கலாம். ஒரு சின்ன தன்னிலை விளக்கம்.. நான் அந்த நிருபருடன் பேசிய விசயங்கள் மூன்றாவது பக்கத்தில் அனைத்தும் வந்துவிட்டன. மற்ற எந்த விசயத்தைப் பற்றியும் அவர் என்னிடம் கேட்கவில்லை. பேச நேரமுமில்லை.
சிவா,
உங்களின் கவலை ஏற்றுக்கொள்ளக்கூடியதே.
ஆங்கில நாளிதழ்கள் என்றில்லை பொதுவாகவே ஊடகங்கள் நிகழ்வை விட சுவாரசியமாக தோன்றும் விஷயங்களையே செய்திகளாக்க விரும்புகிறார்கள். இதனை நான் நிறைய நிகழ்வுகளில் அனுபவப்பூர்வமாக உணர்திருக்கிறேன். இந்த கவரேஜை பொறுத்தளவில் தமிழ் நாளிதழ்கள் எதுவும் இந்த நிகழ்வை கண்டு கொள்ளாத போது குறைந்த பட்சம் இந்தியன் எக்ஸ்பிரஸாவது கண்டு கொண்டது என்பதால் எனக்கு அதிக வருத்தமில்லை.
வினையூக்கி,
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி! மிக அழகாக சொல்லிவிட்டீர்கள்.
நிச்சயம் யாரையும் நான் தனிப்பட்ட முறையில் தாக்கவில்லை. அது என் நோக்கமும் இல்லை. இந்த இடுக்கையை போடலாமா? வேண்டாமா? எனற குழப்பத்துடன் தான் இந்தப் பதிவும்.
ஒரு வேளை இந்தப் பதிவே போட்டிக்கிறக்கூடாதோ..? :-)
எனினும் என் கேள்வி எல்லாம் பத்திரிக்கையை நோக்கித்தான். எந்த தனிமனதரையும் நோக்கி அல்ல...
சொல்ல மறந்துவிட்டேன்.. பத்திரிக்கையில் உங்கள் பேட்டியும் புகைப் படமும் மிக அருமை!
வாழ்த்துக்கள்.
//சொல்ல மறந்துவிட்டேன்.. பத்திரிக்கையில் உங்கள் பேட்டியும் புகைப் படமும் மிக அருமை!
வாழ்த்துக்கள். //
நன்றி சிவபாலன் சார். விளக்கமளிக்க ஒரு வாய்ப்பாக தங்கள் பதிவு அமைந்தது.
விக்கி,
சரியாகச் சொன்னீர்கள்! தமிழ் பத்திரிக்கைகள் கண்டு கொள்ளாதது வருத்தமே! (தின்மலரில் நெட்டில் படிக்கலாம் பகுதியில் நம் நண்பர்கள் வலைப்பதிவைப் பற்றி குறிப்பாவது தருகிறார்கள், அந்த வகையில் பாராட்டலாம்)
என் ஆதங்கத்தை புரிந்துகொண்டதற்கு மிக்க நன்றி!
பட்டறையைப் பற்றி இவ்வளவு பெரிய கவரேஜ் கொடுத்த இந்தியன் எக்ஸ்பிரஸ்க்கு நிச்சயம் பெரிதளவு பாராட்டபட வேண்டும். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை.
இருப்பினும் முதல் பக்கத்தை இன்னும் நல்லபடியா செய்திருக்கலாம் என்பது என் ஆதங்கம்.
நன்றி!
---
வலைப் பதிவுகளில் நீங்கள் ஆற்றிய அரும் பணியை பற்றி அறிந்துகொண்டேன். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள், விக்கி.
கருத்துக்கு மிக்க நன்றி
சிவபாலன்,
உங்கள் சிந்தனையில் தான் நானும் இருக்கிறேன்.
பதிவையும், இந்தியன் எக்ஸ்ப்ரஸ் செய்தியையும் (படத்தின் மூலம்) வாசித்துப் பார்த்ததில், நீங்கள் கூறியது போல, இதைவிடச் சிறப்பாகக் கட்டுரையாக்கம் செய்திருக்க முடியும்.
ஒரு அருமையான சந்தர்ப்பத்தை நிருபர் இழந்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.
சதங்கா,
ஒத்த கருத்துக்கு மிக்க நன்றி!
நீங்கள் சொல்வது போல் நல்ல சந்தர்ப்பம் கை நழுவிப் போனது. ஒரு நம்பரில் லாட்டரிச் சீட்டில் பரிசு தவறிப்போனது போல்..ம்ம்ம்..
நன்றி!
உங்கள் ஆதங்கம் சரியானதுதான்.
அந்த நிருபர் காலை முதல் மாலை வரை அங்கு இருந்து, பலரிடம் கேட்டு அனைத்து விசயங்களையும் கவனித்துக்கொண்டிருந்தார்.
இந்தியன் எக்ஸ்பிரஸில் 3 வது பக்கத்தில் வந்ததை முதல் பக்கத்தில் கூட கொடுத்திருக்கலாம்.
ஆனால் அவர்கள் என்ன நினைத்தார்களோ, இதை முதல் பக்கத்தில் கொடுத்திருக்கிரார்கள்.
நாம் வருத்தப்படுவதை தவிர்த்து, விக்கி சொன்னதுபோல் இவர்களாவது கண்டுகொண்டார்களே என மகிழ்ச்சி அடைவோம்.
நியாயமான கவலைகள் தான்.
முதல் முறை என்பதால், கொஞ்சம் அப்படி இப்படித் தான் இருக்கும்.
அடுத்த முறை, கவுஜை, மொக்கைக்கெல்லாம் அதிக முக்கியத் துவம் கொடுக்காமல் பாத்துக்கலாம் - குறிப்பா நிருபர்களிடம்.
but still, it was delighting to see the response and coverage. awesome work everyone!
சிவபாலன்,
முதலில் திருத்தம், இது இந்தியன் எக்ஸ்பிரஸ் அல்ல.. நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்.. இரண்டும் வெவ்வேறு பத்திரிக்கைகள் என்றே நான் நினைக்கிறேன்.
அடுத்து நிகழ்வுக்கு வந்திருந்த நிருபர் ரஞ்சனி இளையவர். காலை முதல் மாலை வரை ஆர்வமாக உட்கார்ந்து கேட்டார்.. அவருக்கு catchyஆக இருந்த பகுதியை அவர் எடுத்து பிரசுரித்திருக்கிறார்.. என்னிடமும் இன்னும் பலரிடமும் தொடர்ச்சியாக casualஆக பேசிக் கொண்டிருந்தார். இந்த விவரத்தை தலைப்புச் செய்தியாக்க எண்ணியது, ஒரு நாளிதழின், நிருபரின் சுதந்திரம் என்பதைத் தவிர்த்து வேறு ஏதும் சொல்லத் தெரியவில்லை..
நீங்கள் அழகாக குழப்பங்கள் என்று தலைப்பிட்டு கேட்டதை வேறு இடத்தில், போகிற போக்கில் வருத்தமாக சித்தரித்து இருக்கிறார் நண்பர் ஒருவர். நிகழ்வு நடந்த இடத்துக்கு மிக அருகாமையில் வசித்த அவர் போன்ற பெரியவர்கள் நேரில் வந்து, நிருபரிடம் பேசி இருந்தால் ஒருவேளை இந்த பட்டறை பற்றி முதல்பக்கத்தில் விளையாட்டுத்தனமாக ஏதும் வராமல் இருந்திருக்கலாம் ;)
சிவபாலன்,
ஜனரஞ்சக படுத்துதல் என்பார்கள் இதனை, வணி ரீதியாக எழுதும் போது இப்படி தான் நடக்கும். வலைப்பதிவு பட்டரை என்பதை ஒரு வண்ணமயமான கல்லூரி கலை நிகழ்வினை போன்ற எண்ணத்துடன் அந்த நிருபர் அனுகி இருக்கலாம். எனவே இதில் வருத்தப்பட ஏதும் இல்லை. ஊடகங்களின் பார்வை கிட்டியதே ,இப்படி ஒரு தளம் உள்ளது அங்கு கருத்து ரீதியாக செயல்படலாம், பதிவிட வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்கு வந்தால் சரி தான்.
பதிவர்கள் கொடுத்தது கதை ... அதற்கு திரைக்கதை அமைத்தது அவர்கள். எனவே அப்ப்டி இப்படி மாறி தான் வரும்.
பொன்ஸ்,
இந்தியன் எக்ஸ்பிரஸில் உரிமையாளர்கள் இடையே பாகப்பிரிவினை வந்ததால் "புதிய எக்ஸ்பிரஸ்" ஆகிவிட்டது அவ்வளவு தான், இந்தியன் எக்ஸ்பிரஸ் என போட்டாலும் அதையே தானே குறிக்கும்.
J.K.
உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி!
சர்வேசன்
கருத்துக்கு மிக்க நன்றி!
பொன்ஸ்,
திருத்தம் செய்துவிட்டேன். நன்றி!
நீங்கள் சொல்வதுபோல் அது நிருபரின் சுதந்திரம் என்பதில் எனக்கு சற்று நெருடல்தான். ஏனென்றால், அந்த நிருபரின் செயல்கள் எண்ணங்கள் பல பேரைச் சென்றடைவதால் அவருக்கு சமூகக் கடமை அதிகமாகிறது. அதனால் கொஞ்சம் வேறு கோணத்திலும் அந்த நிருபர் யோசித்திருந்தால் நிச்சயம் (அத்தனை நேரம் பட்டறையில் செலவிட்டதற்கு) மிக சுவாரசியமான அதே சமயத்தில் அனைவருக்கும் Catchyயாக அந்தக் கட்டுரையை அவரே செய்திருக்கலாம்.
ஒரு வேளை நம் நண்பர்களோடு ஜாலியாக உரையாடிய தாக்கத்திலிருந்து அவர் வெளி வர நேரமாகி இருக்கலாம். :-)
எனினும் அவ்வளவு நேரம் செலவிட்டு மிகப் பெரிய கவரேஜ் தந்து உதவிய அந்த இளம் நிருபருக்கு எனது நன்றிகளும் பாராட்டுகளும்.
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி! பொன்ஸ்.
வவ்வால்,
உங்கள் பார்வை என்னை யோசிக்க வைக்கிறது. நீங்கள் சொல்வதுபோல் இது வண்ண மயமான நிகழ்வு எனற கோணத்தில் நிருபர் அணுகியுள்ளார் என்பது ஓரளவு சரிதான்.
இருந்தாலும் அனைத்து பிரிவினரையும் மனதில் கொண்டு செயல்பட்டிருக்கலாம் என்பது என் ஆதங்கம்.
நீங்கள் சொல்வதுபோல் இவ்வளவு பெரிய கவரேஜ் தந்தமைக்கு நிச்சயம் பாராட்டுகளும் நன்றிகளும்.
கருத்துக்கு மிக்க நன்றி!
pons says:நிகழ்வு நடந்த இடத்துக்கு மிக அருகாமையில் வசித்த அவர் போன்ற பெரியவர்கள் நேரில் வந்து, நிருபரிடம் பேசி இருந்தால் ஒருவேளை இந்த பட்டறை பற்றி முதல்பக்கத்தில் விளையாட்டுத்தனமாக ஏதும் வராமல் இருந்திருக்கலாம் ;)
Sivabalan, do you think that the reporter is going to speak to him, even if he has come? She is from the 'thinathanthi' of English, So she wrote like this. This crap of media-crazy kids who organized this 'show' boast 2 much, and imagine themselsves achieved something gr8.
hope better sense prevails at least in the long run.
அனானி
நீங்கள் நிருபரைப் பற்றி கூறிய கருத்துக்கு என்னிடம் No Comments.
ஆனால், பட்டறையை நடத்தியவர்கள் மீடியா கிரேஸ் என்றால், அதற்கு அவர்கள் பட்டறையே நடத்தியிருக்க வேண்டியதில்லை. பல வழிகள் அவர்களால் மீடியா அட்டென்சன் பெற முடியும். அதனால் நீங்கள் சொல்லும் கருத்து எற்க முடியாது.
இந்த பட்டறை தமிழ் வலைப்பூக்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சி. நிச்சயம் பாராட்டப் படவேண்டிய விசயம்.
உங்கள் கருத்துக்கு நன்றி!
Post a Comment
<< Home