Friday, September 21, 2007

கருணாநிதியின் தலையையும் நாக்கையும் வெட்டிக் கொண்டுவருபவர்களுக்கு தங்கம் பரிசு

விஹெச்பி தலைவர் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் ராம் விலாஸ் வேதாந்தி, கருணாநிதியின் தலையையும் நாக்கையும் வெட்டிக் கொண்டுவருபவர்களுக்கு தங்கம் பரிசளிக்கபடும் என்றும் அதை அயோத்தி துறவியின் கரங்களால் வழக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.



மேலும் செய்திக்கு செல்லவும்: "WWW.REDIFF.COM".

45 Comments:

Blogger சிவபாலன் said...

இந்த இடுக்கையை "சற்றுமுன்னில்" தரலாம் என்று இருந்தேன்.

ஆனால் இடுக்கையின் முக்கியதுவம் கருதி என் பதிவிலேயே கொடுத்துவிட்டேன்.

இந்து மத வெறியர்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் செய்தி.

இவ்வளவு எதிர்ப்பு இருப்பதால், வடக்கில் தற்போதைய தேவை பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கை.

இதை யாரேனும் வடக்கிற்கு எடுத்துச் செல்வார்களா?!..

எதிர்ப்பு அதிகமாக இருப்பதால் வெற்றி அடைய வாய்ப்பிருக்கிறது..!

ம்ம்ம்ம்......

September 21, 2007 9:11 AM  
Blogger வவ்வால் said...

சிவபாலன் ,

காட்டுமிராண்டிகள் என மீண்டும் நிறுபிக்கிறார்கள். இவர்களை எல்லாம் தடை செய்ய மாட்டாங்களே!

எனக்கு தங்கமெல்லாம் யாரும் தற வேணாம் அந்த வேதாந்தி முகவரி சொல்லுங்க அந்தாளு தலைய எடுத்துறலாம்!

September 21, 2007 9:22 AM  
Blogger சும்மா அதிருதுல said...

பத்வானு சொல்லுங்க சார்..:)

September 21, 2007 9:24 AM  
Blogger குமரன் (Kumaran) said...

அருவருப்பாக இருக்கிறது இந்த அரசியல்வாதிகள் தாழ்ந்து போகும் நிலைகளைக் கண்டால். அரசியல் என்று வந்துவிட்டால் எதுவும் சரி என்று நினைக்கும் காட்டுமிராண்டிகள் இந்த அரசியல்வாதிகள். :-((

September 21, 2007 9:27 AM  
Blogger Unknown said...

வேதாந்தி என்ற பெயருக்கு நன்கு படித்த/அறிந்தவர் என்று பொருள். அவர் லெவல் எப்படி இருக்கிறது பாருங்கள். இவரையெல்லாம் தலைவர்களாக் வைத்து இருக்கும் கட்சி மக்களுக்கு என்ன சொல்லி கொடுக்க முடியும். கருணாநிதி ராமாயனத்தை குறித்து பட்டிமன்றத்தில் நேருக்கு நேரில் பேச அத்வானிக்கு அழைப்பு விடுத்து இருக்கிறாரெ.. எற்றுக்கொள்ளவேண்டியதுதானே. அவருக்கு நேரமோ அல்லது ராமாயணத்தைப் பற்றிய கல்வி ஞான்மோ இல்லையென்றால் வேரு ஒருவரையோ அனுப்பட்டுமோ.. கருணாநிதியும் ஒருவரை அனுப்பலாம். மேடையில் விவதிக்கட்டுமே. நேரடி ஒளிபரப்பு செய்யலாமே. ம்க்களுக்கு புரியும்படி எடுத்து சொல்லட்டுமே. அதை விட்டுட்டு மக்களை தூண்டிவிடுதல்... முடிந்தால் ராம் விலாஸ் வேத்தந்தியே பொய் அவர் சொல்லும் வெலையை செய்யட்டும். படிப்பறிவு இல்லாத மக்களை தூண்டிவிடும் கேடுகெட்ட ஜென்மங்கள்...மற்றவர்களின் துன்பதில் குளிர்காய முயற்சிக்கும் பெரும் தலைவர் வேதாந்தி...

September 21, 2007 9:27 AM  
Blogger ஜெகதீசன் said...

காட்டுமிராண்டிகள். :(

September 21, 2007 9:32 AM  
Anonymous Anonymous said...

ருஷ்டிக்கும் சுவீடன் கார்டூனிஸ்டுக்கும் மிரட்டல் விட்டவர்களுக்குச் சளைத்தவர்களா நாம்?

September 21, 2007 9:38 AM  
Blogger kiddy ppl said...

என்னுடைய கன்டனங்களை பதிவு செய்கிறேன். தமிழ்நாட்டின்
முதல்வர் பதவியில் இருப்பவருக்கே இந்த கதி என்றால் எங்களைப் போன்றவர்களுக்கு....

பல ஆபத்துக்களுக்கு இடையே தான் எழுதிக் கொண்டிருக்கிறோம்.

தமிழர்களே!!!சிந்தித்துப்பாருங்கள். மதம் மனிதனை எந்த அளவுக்கு மிருகத்தனத்துடன் பேச வைக்கிறது என்று....

September 21, 2007 9:42 AM  
Blogger சிவபாலன் said...

மதவுணர்வுகள் பற்றிய கேள்வியில் அறிவு பிறக்கும் : கனிமொழி

சென்னை: தமிழக முதல்வரின் ராமர் பற்றிய கருத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், அவரது மகளும் ராஜ்யசபா உறுப்பினருமான கனிமொழி பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமது தந்த‌ை நகச்சுவை உணர்வுடனும் கடவுள் கொள்கைக்கு எதிராக போராடுபவர் என்பது உலகறிந்த‌ே என்றும், பெரியா‌ர் வழி வந்த அவர் இது போன்ற கொள்கையில் ஊறிப்போனவர் என்றும் இதன் காரணமாகவே அவர் இது போன்ற கருத்தை வெளியிட்டார் என்றும் இதைவிட வன்மையாக கருத்து வெளியிட்ட பெரியாரிடம் மதத்தலைவர்கள் நல்ல உறவு வைத்திருந்ததாகவும் கூறினார். நம்பிக்கைகளுக்கு எதிராக கேள்வி எழுப்புவதன் மூலம் அறிவு பிறக்கும் என்றும் இதை காரணமிட்டு வன்முறையில் ஈடுபடுவது தேவையற்றது எனவும கூறியுள்ளார். கடவுள் கொள்கைகளுக்கு எதிராக பெரிய தலைவர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ள நிலையிலும் மதவுணர்வுகள் அனைவரிடமும் வளம் பெற்றிருப்பதிலிருந்தே நமது நாட்டில் மதம் தலைத்தோங்கியுள்ளது விளங்கும் என்றும் எனவே இத போன்ற கேள்விகள் கடவுள் மீதுள்ள சந்தேகங்கள‌ை அகற்றுமே தவிர மதஉணர்வை அழித்துவிடாது எனவே எனது தந்தையின் கருத்துக்கு எதிர்கேள்வி மூலம் விடை காண முட்பட வேண்டுமே தவிர வன்முறையில் ஈடுபடக்கூடாது என தெரிவித்துள்ளார்.

செய்தி: தினமலர்.
நன்றி!

September 21, 2007 9:45 AM  
Blogger மாசிலா said...

அதிர்ச்சி தரும் செய்தி.

ஒரு மாநிலத்தின் முதல்வர் மீது இப்படி ஒரு கொலைவெறி தூண்டுதலை கிளப்பிவிட்டிருப்பது சட்டபூர்வமாக தண்டிக்கப்பட வேண்டிய குற்றம்.

எனது வன்மையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.

September 21, 2007 9:51 AM  
Blogger வெற்றி said...

சிவபாலன்,
கலைஞர் மீதான இப்படியான மிரட்டல்கள் தமிழகத் தமிழர்கள் மட்டும் சம்பந்தப்பட்ட விடயமல்ல. இது உலகெங்கும் பரந்து வாழும், குறிப்பாக ஈழத் தமிழர்களின் மனங்களையும் வேதனை கொள்ள வைக்கும் விடயம் என நினைக்கிறேன்.

அன்று தன் எதிரியாக இருந்த போதும், ஒரு தமிழ் மன்னனை இழிவு செய்ததற்காக வட இந்தியாவிற்குப் படையெடுத்துச் சென்று வெற்றி கொண்டு இமயத்தில் கொடியேற்றிய சேர மன்னன் போல இன்று தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் யாவும் வேற்றுமைகளை மறந்து கலைஞருக்கு விடப்பட்டுள்ள மிரட்டலை எதிர்க்க வேண்டும்.

இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் செயல்களுக்கும் இக் கும்பலின் செயல்களுக்கும் எந்த ஒரு வேறுபாடும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

September 21, 2007 10:08 AM  
Blogger ஜோ/Joe said...

கலைஞரின் கருத்து தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்று கலைஞர் அபிமானிகளே வருத்தப்பட்டிருப்பார்கள் .இப்போது அதை கலைஞர் மேல் அனுதாபமாக மாற்றியுள்ளார் நமதருமை நண்பர் ராஜாதி ராஜ ராஜ கம்பீர சிரீமான் வேதாந்தி அவர்கள் .

September 21, 2007 10:19 AM  
Anonymous Anonymous said...

கலைஞரின் கருத்து தவிர்க்கப்பட்டிருக்கலாம் UNNECESSARY ONE.. prompted more severe reaction which may presurize central government and may bring more troubles to Sethu project...

September 21, 2007 10:34 AM  
Blogger வெட்டிப்பயல் said...

அந்த வேதாந்தியை நிச்சயம் கைது செய்து தக்க தண்டனை கொடுக்க வேண்டும்...

September 21, 2007 10:36 AM  
Blogger John Felix Fernando, B.E.(Ag) said...

ராமர் பாலம் கட்டினாரா? அவரது வானர சேனைகளான குரங்குகளல்லவா கட்டியதாக வால்மீகி கூறுகின்றார்? இதை அநுமன் பக்த சபையினர் எப்படி பொறுத்துக்கொள்ள இயலும்? தன் மனைவிதன்னைச் சேர வழி தெரியாமல், கையறுந்த நிலையில் இருந்த போது, "நான் உனக்கு பாலம் கட்டித் தருகிறேன், அதற்கு கைமாறாக, என் உடன் பிறந்த சகோதரனைக் கொல்" என்ற அக்ரிமெண்டின்படி,மறைந்து இருந்து அம்பெய்தி கொன்று, அதன்மூலம் அனுமன் படைபலத்தால் உருவான பாலம் அல்லவா? அதெப்படி ராமன் கட்டியதாக புளுக முடியும்? ராமன் பெயர் சொன்னால், புளுகு விலை போகும் என்பதால் தானே? எப்படி இருந்தாலும், கற்கால புத்தி தன்னைவிட்டுப் போகவில்லை என்று மீண்டும் ஒருமுறை உலகத்திற்கே நிருபித்த அத்வானிக்கு ஜே!

September 21, 2007 10:52 AM  
Blogger PRINCENRSAMA said...

http://princenrsama.blogspot.com/2007/09/blog-post_21.html

நானும் பதிவு செய்திருக்கிறேன். பிறகுதான் உங்கள் தளம் பார்த்தேன். காவிக் கூட்டம் - காலிக் கூட்டம் என்பது இன்னொரு முறை நிரூபிக்கப்ட்டிருக்கிறது. வேடிக்கட்டும் திராவிட- ஆரியப் போர்!

September 21, 2007 11:10 AM  
Blogger PRINCENRSAMA said...

குமரன்...
அரசியல்வாதிகளுக்கும் மதவாதிகளுக்கும் வித்தியாசம் தெரியவில்லையா உங்களுக்கு?
மதவெறி தான் இங்கே நிர்வாணமாய் தலைவிரி கோலமாய் நர்த்தனம் ஆடியிருக்கிறது.

September 21, 2007 11:11 AM  
Anonymous Anonymous said...

சிவபாலன் பெரியாருக்கு ஜே போடுறத்தை நிறித்து புட்டு இந்த ராமர்பாலம் மேட்டர்ல் அத்வானி கருணாநிதி டி ஆர் பாலு சோனியா இவங்க எல்லாம் எவ்வளவு சம்பாதிச்சாங்கன்னு யோசி. அது தான் உண்மையான பகுத்தறிவு, அதவுட்டுபுட்டு அவன் சொன்னான் இவன் சொன்னான்னு நொண்டியடுக்காதே.
பணமே எல்லாத்துக்கும் காரணம்
ஜாதியாவது மதமாவது

September 21, 2007 11:20 AM  
Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ஜோ அவர்கள் சொல்வதே சரி..
கலைஞர் மேல் எனக்கு அவர் கருத்தால் வருத்தம் இருந்தது.ஆனால் இப்போ 'எங்கள் கலைஞர் தலை கொய்யவா?, என ஆகிவிட்டது.
இவரைக் கொலைக்குற்றத்துக்குத் தூண்டியதென இன்னும் சிறையில் போடவில்லையா??
வேதாந்திக்கும் நாக்கில் சனி தொற்றிவிட்டதா???
இவர் எப்படி இருப்பார் எனப் பார்க்க படம் ஒன்று போடவும்.

September 21, 2007 11:21 AM  
Blogger சிவபாலன் said...

அனானி

நீங்களும் கொஞ்சம் தைரியத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்..Atleast அறிவுரை சொல்லவாவது..ஹா ஹா..

September 21, 2007 11:23 AM  
Blogger ஜோ/Joe said...

இந்த லட்சணத்துல கலைஞர் பதவி விலகணும்-ன்னு லேட்டஸ்ட் அரசியல் ஞானி சர்பத் குமார் ..சாரி.. சரத் குமார் அறிக்கை விட்டிருக்காராம்.

September 21, 2007 11:29 AM  
Anonymous Anonymous said...

//அனானி

நீங்களும் கொஞ்சம் தைரியத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்..Atleast அறிவுரை சொல்லவாவது..ஹா ஹா.//

என்னாத்தை செய்றது அண்ணாத்தே
பெயர் போட்டு கமேண்ட்டு போட்டா குலவிளக்குகள் முத்திரை குத்துவாங்க :)))

அண்ணாத்தே நீயும் அமேரிக்கா நானும் அப்படியே
உம் மனசுலுலே இப்படி விளங்க முடியா கவுதையா தோனுது. நம்ம மனசுல மக்கள் வரிபணத்தை ஏப்பம் விட்டு நாடகம் போடுறாங்கன்னு தோனுது..

September 21, 2007 11:31 AM  
Anonymous Anonymous said...

http://jataayu.blogspot.com/2007/09/blog-post.html

September 21, 2007 11:32 AM  
Anonymous Anonymous said...

சிவபாலன்
விட்டதும் மற்றதும்
இதே பணத்தை பார்த்து தான் நானும் நீங்களும் இங்க சிங்கி அடிக்கிறோம். அதே பணத்துக்காக அவனுங்க நாட்டல கூடி அடிக்கிறாங்க. ஒன்னும் வித்சாயம் இல்லை. யாரே வருவார் யாரோ போவார் வருவதும் போவதும் தெரியாது

என்ன ஒன்னு இந்த மாதிரி மேட்டர்ல உடனே சுதாரிச்சு ஜாதி மதம் கண்டுபுடிச்சி நான் நல்லவன் ரொம்ப நல்லவன்னு காட்டுறது உம்ம பாலிசி
அப்பாலிக்க குந்திகுனு இந்த இந்தியா கர்பதடை இல்லாமல் பெற்று எடுத்த முத்துக்கள் பேசி எதுக்கு டென்சனாகன்முகிறது என் பாலிசி
அப்பாலிக்க த்தோ மாமே

September 21, 2007 11:35 AM  
Blogger குமரன் (Kumaran) said...

//குமரன்...
அரசியல்வாதிகளுக்கும் மதவாதிகளுக்கும் வித்தியாசம் தெரியவில்லையா உங்களுக்கு?
மதவெறி தான் இங்கே நிர்வாணமாய் தலைவிரி கோலமாய் நர்த்தனம் ஆடியிருக்கிறது.
//

ஐயா. நான் மதவாதிகளுக்கு ஆதரவாகப் பேசவில்லை. இங்கே பேசுபவர்கள் மதவாதிகள் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் இரண்டு பக்கங்களிலும் அரசியல்வாதிகள் எவ்வளவு தூரம் கீழிறங்கிச் செல்ல முடியுமோ அவ்வளவு தூரம் செல்கிறார்கள் என்றே நினைக்கிறேன். யாருக்கும் யாரும் சளைத்தவர்களில்லை என்று தான் நினைக்கிறேன். ஆனால் ஒரு மாநில முதல்வரின்/ஒரு பெரிய கட்சியின் தலைவரின் தலையைக் கொண்டு வா என்று ஆணையிடும் அளவிற்குத் தரம் தாழும் என்று எண்ணவில்லை. தமிழச்சி சொன்ன மாதிரி அவரின் தலையையே கேட்பவர்கள் சாதாரணர் தலையைக் கேட்பது எவ்வளவு எளிது.

இரு பக்கங்களிலும் அதே கூச்சல்கள் தான் கேட்கின்றன. இவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்லப்போவதில்லை. அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு இவர்கள் பதில் சொல்லப்போவதில்லை. இருபுற அரசியலாளர்களின் கூத்துகளைக் கண்டு நொந்து போய் ஒன்றும் சொல்லாமல் தான் இருந்தேன். ஆனால் இந்த செய்தி மிகவும் அருவருக்கத் தக்கதாக இருக்க பேசிவிட்டேன்.

September 21, 2007 11:40 AM  
Blogger சிவபாலன் said...

அனானி

இதில் கலைஞர், அத்வானி போன்றோர் அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை.

அதே சமயத்தில் மத வெறியர்கள் அடிக்கும் கூத்து அதை விட மோசமாக உள்ளது.


உங்களைப் போலத்தன் நானும் ஜாதியாவது மதமாவது..!!

இது போல் எல்லோரும் நினைக்கும் காலம் வரவேண்டும்.. வரனும்..! அதே!!

September 21, 2007 11:41 AM  
Blogger குமரன் (Kumaran) said...

//கலைஞர் மேல் எனக்கு அவர் கருத்தால் வருத்தம் இருந்தது.ஆனால் இப்போ 'எங்கள் கலைஞர் தலை கொய்யவா?, என ஆகிவிட்டது.
//

யோகன் ஐயா சொன்னது போல் தான் என் உணர்வுகளும் இருந்தன இந்த இடுகையைப் பார்த்தவுடன்.

September 21, 2007 11:42 AM  
Blogger வெற்றி said...

சிவபாலன்,

அரசியலுக்குள் மதத்தைப் புகுத்தினால், மதவாதிகளின் வாக்குக்காக அரசியல்வாதிகள் மதவாதிகளின் பாட்டுக்கு ஆடினால் ஒரு நாடு எப்படிக் குட்டிச் சுவராகும் என்பதற்கு இலங்கை ஒரு எடுத்துக்காட்டு.

September 21, 2007 11:59 AM  
Anonymous Anonymous said...

Whatever politics we have with in us, we have to come up together for Kalaignar in this matter, even we are against this ‘Sethu’ project.

September 21, 2007 12:10 PM  
Blogger RATHNESH said...

ராமனைப் பற்றிப் பேசி அரசியல் ஆதாயம் தேடுவது ஒருவழி. அதனை அத்வானி கைக்கொண்டு விட்டதால் தன் அடையாளத்தை, அதைவிடப் பெரிதான ஒரு விஷயத்தை உளறினால் தானே சாத்தியப் படுத்த முடியும் என்கிற அற்ப ஆசை கொண்ட ஒரு பேதாந்தியின் சில்லறை அறிவிப்பு இது. இதனைப் பெரிது படுத்தி அவனை சமூகத்தில் அடையாளப்படுத்த வேண்டியது அவசியமா? இப்போதே பாருங்கள் ஒருவர் அவனுடைய புகைப்படம் எங்கே என்று கேட்க ஆரம்பித்து விட்டார். இதிலே கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், கருணாநிதி மாற்றுக் கருத்து கூடக் கூறவில்லை; "அவாள்" போற்றுகின்ற ராமாயணத்தில் இருக்கின்ற விஷயத்தைத் தானே சொன்னார்? ராமாயணம் சொன்ன நாக்கிற்கும் அது குறித்து சிந்திக்கும் தலைக்கும் என்ன கதி என்று தான் அந்தப் பேதாந்தி சுட்டிக் காட்ட முயல்கிறானோ?

RATHNESH

September 21, 2007 12:46 PM  
Anonymous Anonymous said...

காலையில் தான் கதையிட்டேன், இன்னமும் வன்மையாக இருக்கிறது கதையைவிட.

http://panimalar.blogspot.com/2007/09/blog-post_21.html

பனிமலர்.

September 21, 2007 12:51 PM  
Blogger தீரன் said...

இது தமிழர்கள் எல்லோரும் ஒரே அணியில் திரள ஒரு நல்ல வாய்ப்பு -- வீரமணி சொன்ன பதிலயே நானும் இங்கே சொல்ல விரும்புகிறேன் -- ஒரே மசுரயும் புடுங்க முடியாதுடா வெங்காயங்களா

September 21, 2007 12:55 PM  
Blogger Thamizhan said...

பிடுங்கிகளா தலையையா பிடுங்கப் போகிறீர்கள்
தலை முடியைக்கூடப் பிடுங்க முடியாது!
நாவையா அறுக்கப் போகிறீர்கள்
நாவினால் பேசிப் பாருங்கள் நாதாரிகளே!

கப்பல் போகக் கடலைத் தோண்டினால்
கடலுக் கடியில் ராமனைத் தேடிக்
கலகம் காணும் கபோதிகளே!
கருத்தில் மோதுங்கள்
கலைஞர் தயார்!

அதவானி அல்றுகிறார்!
அறிவுரைகள் ஏராளம்
சூழ்ச்சியின் முழு உருவே
தமிழகம் அயோத்தியில்லை!
புளுகு மூட்டை மடையர்களே
பிடுங்குங்கள் பார்த்திடுவோம்!

September 21, 2007 1:05 PM  
Blogger G.Ragavan said...

கருணாநிதியின் பேச்சு எரிச்சலைத் தந்தது உண்மைதான். வாயை வெச்சுக்கிட்டு சும்மாயிருக்க மாட்டாரான்னு தோணுச்சு. அந்த எரிச்சல் மறந்து போற அளவுக்கு எரிச்சலைக் கெளப்பி விட்டிருக்காரு வேதாந்தி. புடிச்சி அவரை கீழ்ப்பாக்கத்துக்கு அனுப்புங்கப்பா. எல்லாம் பக்தி கெடையாது. மதப் பற்றும் கெடையாது. முழுக்க முழுக்க அரசியல். என்ன...இதுனால கருணாநிதிக்குத் தமிழ்நாட்டுல வாழ்வு. வி.எச்.பி, பி.ஜே.பிக்கு வடநாட்டில் வாழ்வு.

September 21, 2007 1:09 PM  
Blogger குமரன் (Kumaran) said...

//புடிச்சி அவரை கீழ்ப்பாக்கத்துக்கு அனுப்புங்கப்பா. எல்லாம் பக்தி கெடையாது. மதப் பற்றும் கெடையாது. முழுக்க முழுக்க அரசியல். //

ரிப்பீட்டே

September 21, 2007 1:40 PM  
Blogger வவ்வால் said...

ராகவன் கலைஞர் பேசியது உண்மை அதான் உங்களுக்கு எரிச்சல் தந்துச்சா :-))

ஆனா வேதாந்தி பேசினது பைத்தியக்காரத்தனம் , மத வெறி! கொலை வெறி! ஜன நாயக நாட்டில் அப்படிப்பேசிக்கொண்டு திரிவது குற்றம்!

September 21, 2007 1:40 PM  
Blogger G.Ragavan said...

// வவ்வால் said...
ராகவன் கலைஞர் பேசியது உண்மை அதான் உங்களுக்கு எரிச்சல் தந்துச்சா :-)) //

அப்படியில்ல வவ்வால். நான் சொல்ல வந்தத நீங்க புரிஞ்சிக்கலைன்னு நெனைக்கிறேன். எங்கடா பிரச்சனை இருக்கும்னு அலையிற ஊர்ல நம்மளா எதுக்குப் பிரச்சனையைக் கெளப்பனும்னுதான். அதான் இப்பக் கெளம்பீருச்சே. இப்பத் தேவையில்லாம இந்த வி.எச்.பிக்கு ஒரு பப்ளிசிட்டி.

September 21, 2007 2:02 PM  
Blogger மனிதன் said...

இங்க வவ்வால் ரொம்பத்தான் உளறி இருக்கார். நான் கேக்கறன், அட வவ்வாலே வேதாந்திய வுடு அது வெத்து மிரட்டல். தா. கிருஷ்ணன் கொலை வழக்கு மற்றும் தினகரன் அலுவலத்தில் பெட்ரோல் குண்டு போட்டு மூன்று பேர கொன்ற ரவுடி அழகிரியோட மசுரவாவது புடுங்க முடியுமா உன்னால. அல்லது இந்த பின்னூட்டத்த வெளியிடும் ஆண்மைதான்
உண்டா உங்களிடம்.
அன்புடன்,
ராமச் சந்திரன்.

September 21, 2007 2:42 PM  
Anonymous Anonymous said...

இதுதான் அரசியல்,

பகுத்தறிவு பேசும் திராவிடத் தலைவர்கள் ஏன் இந்து மதம் தவிற மற்ற மதங்களை உண்மை என்று ஏற்றுக்கொள்கிறார்கள், அது சிறுபான்மையினத்தவர்களின் வாக்குக்காக என்பது யாவரும் அறிந்ததே..இப்படியிருக்க கலைஞராகட்டும் யாராகட்டும், கோடிக்கணக்கான இந்துக்களை இவரின் அரசியல் நாடகத்துக்காக, லாபதிற்காக புண்படுத்தியது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல...

மத ரீதியாக மக்களை பிரித்து, வன்முறையைத்தூண்டி விட்டுள்ளார் கலைஞர்..

பகுத்தறிவு முழுமையானதாக இருக்க வேண்டுமே தவிர உயர் சாதி, இந்து பிராமணர்களை எதிர்ப்பதாக நினைத்து மற்ற கோடிக்கணக்கான இந்துக்களின் மனதை புண்படுத்தியுள்ளார் கருணாநிதி...

இதே கலைஞர், நபியும், இயேசுவும் கற்பனை கதாபாத்திரங்கள் என்று சொல்ல துணிவு உள்ளதா? சொல்லிதான் பார்க்கட்டுமே..

இதெல்லாம் அரசியல் நாடகம். மக்களை ஏமாற்றும் வேலை...

September 21, 2007 3:06 PM  
Anonymous Anonymous said...

கலைஞரும் திகவும் எதிர்பது இந்து மத பாகுபாடுகளைத்தான். மதத்தின் பெயரால் சக மனிதனை பாகுபடுத்தி இழிவாக நடத்தும் மதம் இந்து மதம். இந்தியாவில் இருக்கும் கிருட்துவரோ, முகமதியரோ தன்னோடு வரும் பக்தர்களை பாகு படுத்தி இந்துவாக இருந்தாலும் இங்கே எல்லாம் வரக்கூடாது என்று சொல்வது கிடையாது. ஆகையால் அவர்களுக்கு அவைகளை எதிர்க வேண்டிய அவசியம் இல்லை.

இந்து மதம் இந்த பாகுபாட்டை விட்டொழித்தால் என்ன, ஏன் மாட்டேன் என்று அடம் பிடிக்கிறது. அடிப்படையில் பார்த்தால் இதற்காகத்தான் மதமே என்று அல்லவா பொருள்படுகிறது.

நீதியுணர்வு உள்ளரேனும் சரியான பதிலைத்தரவும்.

September 21, 2007 4:30 PM  
Anonymous Anonymous said...

Jesus woke up after 3 days.. do you have proof..
when moses crossed the sea, the sea divided and laid a path to him...do you have proof?? or will you ask proof???

when jesus touched a person with leparacy, he got cured.. oh did jesus finish his MBBS in any medical college..

why only Hindu gods.. whether it is right or wrong.. crores of people believe Ram.. Remember not only 'Paarpans'.
like christians believe Jesus.. like muslims believe allah..

every religion has flaws.. mhy Mr. MK always target Hinduism...
because, he knows that Hindu won't react..

does he have guts to question about Jesus or allah.. the ROOT cause of this issue is MK. He provoked /given a chance to BJP to ruin Sethu project..

60yrs experiance leader should have handled this properly in order to sucessfully complete the project.

September 21, 2007 5:26 PM  
Anonymous Anonymous said...

கீழ்ப்பாக்கம் அனுப்பப்பட வேண்டியவர் வேதாந்தி அல்ல, கலைஞர்தான். பல வீடுகளில் ஒரு பெரிசுகள் சும்மா பினாத்திகிட்டு இருக்கும் அதைப் போல் ஆகிவிட்டார் கலைஞர்.
இனி அவர் இனி முத்திப் போய் தொல்காப்பியர் முதுகலை முடித்துவிட்டா தமிழிலக்கணம் எழுதினார், திருவள்ளுவர் என்னைப் போல் மதுரைக் காமராஜர் பல்கலைகழகத்தில் பிஎச்டி வாங்கினாரா, திருக்குறள் எழுத, எனக் கேட்டாலும் கேட்பார்.

மேலே உள்ள கனிமொழியின் வார்த்தைகளில் உள்ள மெச்சூரிட்டியில் பாதி கூட இல்லை அவரிடம்.

பின்குறிப்பு: வேதாந்தி போக வேண்டிய இடம் கீழ்ப்பாக்கமல்ல.சிறைசாலை.

September 21, 2007 9:13 PM  
Anonymous Anonymous said...

//John Felix Fernando, B.E.(Ag) said...
ராமர் பாலம் கட்டினாரா? அவரது வானர சேனைகளான குரங்குகளல்லவா கட்டியதாக வால்மீகி கூறுகின்றார்? ...
//

John Felix க்கு ஏன் இந்த கவலை? நேரம் இருந்தால் இயேசு அப்பா இல்லாமல் எப்ப்டி பிறந்தார் என்று ஆராய்ச்சி செய்து சொன்னால் பயனாக இருக்கும்.

September 21, 2007 10:56 PM  
Blogger SurveySan said...

முதல்வர் பதிவியில் இருந்து கொண்டு இருப்பவர் பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையைப் பற்றிக் கவலைப் படாமல் வார்த்தைகளை உதிர்த்தது தவறு. ஆவூன்னா வெட்ட கெளம்பும் அரசியல் கழிசடைகள் வாழும் ஊரில், தலைவன் ஒன்று சொல்வதர்க்கு முன் பலமுறை யோசித்துப் பேசணும். உணர்ச்சிவயப்பட்டு பேட்டி எல்லாம் தரப்படாது.

வி.எச்.பி ஆளப் பத்தி சொல்ல ஒண்ணுமில்ல. பக்கா கழிசடை. மக்களைத் தூண்டி விட்டு ஆதாயம் தேடும் காரியவாதிக்கு இது ஒண்ணும் புதுசு இல்ல. ஊர ரெண்டாக்கரது யாருன்னு போட்டி வச்சா ஃபஸ்ட் பரிசு இவனுக்குதான் கொடுக்கணும். கம்னாட்டி வேதாந்தி. பேதி புடிங்கி சாகட்டும் கழிசடைகள்.

September 21, 2007 11:52 PM  
Blogger PKS said...

வேதாந்தி மாதிரியான மதஅடிப்படைவாதிகள் ஒருபக்கம் பிறமத அடிப்படைவாதிகளின் வன்முறையைத் தூண்டும் பேச்சைக் கண்டித்துக் கொண்டே இன்னொருபுறம் தங்கள் எதிரிகள் போலவே தாங்களும் செயல்பட ஆரம்பித்துவிடுகிறார்கள். ஊருக்குத்தான் உபதேசம். இஸ்லாமிய பயங்கரவாதத்தை எதிர்க்கிற பல இந்துத்துவ நண்பர்கள் உள்ளுக்குள் இப்படிப்பட்ட இந்துத்துவ வன்முறைக்கு வக்காலத்து வாங்குவதில் சளைப்பதில்லை. வேதாந்தியை அரசு உடனடியாகக் கைது செய்யவேண்டும். சட்டப்படி அதிகபட்சத் தண்டனை கொடுக்கப்பட வேண்டும். அதேநேரத்தில், 84 வயதான, அரசியல் முதிர்ச்சியும் அனுபவமும் உடைய தமிழக முதல்வர் ராமரைப் பற்றி மட்டுமில்லை, எந்த மத நம்பிக்கையைப் பற்றியும் (பிற மதங்களைப் பற்றி அவர் பேசமாட்டார்!) நம்பிக்கையாளர்கள் மனம் புண்படும்படி பேசுவதையும் கண்டிக்கிறேன்.

தினமணி நாளிதழ் சிலநாட்களுக்கு முன்னர் எழுதிய தலையங்கத்தின் பின்வரும் வரிகள் அப்படியே என் எண்ணப் போக்கை ஒத்திருக்கின்றன. இந்த முறை ஆட்சியில் இவ்வளவு நாட்கள் அவர் செய்த பல நல்ல விஷயங்களை இப்படிப்பட்ட உளறல்கள்மூலம் தமிழக முதல்வர் கெடுத்துக் கொள்கிறார்.

"முதல்வர் கருணாநிதிக்கு ஒரு ராசி உண்டு. தனது சொந்த பலம், செல்வாக்கைவிட சந்தர்ப்ப சூழ்நிலைகள்தான் அவரை மீண்டும் மீண்டும் ஆட்சியில் அமர்த்தி அழகு பார்த்திருக்கின்றன. ஒவ்வொருமுறை ஆட்சியில் அமரும்போதும், அவருக்குப் பேராதரவு உருவாகும். அவரை விமர்சித்தவர்கள்கூட, அவர் கனிந்துவிட்டார், மாறிவிட்டார் என்றெல்லாம் கூறி புளகாங்கிதம் அடைவார்கள்.

இவையெல்லாம் ஓரிரு ஆண்டுகளுக்குத்தான். பிறகு, தேவையில்லாத எதையாவது பேசி சர்ச்சையில் சிக்குவார். அவரது ஆட்சி மக்களால் விரும்பப்படாத ஆட்சியாக மக்களின் வெறுப்பைச் சம்பாதித்துவிடும். அந்த ராசி இந்தமுறையும் வேலை செய்யத் தொடங்கிவிட்டதோ என்று தோன்றுகிறது. கடவுள் காப்பாற்றட்டும்."

- பி.கே. சிவகுமார்

September 22, 2007 9:29 AM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv