Sunday, September 09, 2007

திராவிட நெடுஞ்சாலையா?

ஆனந்த விகடனில் ஒரு கேலி துணுக்கு வந்துள்ளதாக படித்தேன்.

அந்த கேலி எதைப் பற்றி என்றால், தேசிய நெடுஞ்சாலை என்பதை தமிழ் நாட்டில் திராவிட நெடுஞ்சாலை என மாற்றிக்கொள்ளலாம் என கேலி செய்யப்பட்டுள்ளது.

ஆதிக்க சக்திகள் தனது விச நாக்கை அவ்வப்போது வெளி நீட்டும். இதுவும் அது போன்று தான்.

இதில் என்ன கொடுமை என்றால், படிப்பவன் திராவிடன் (தமிழன்). ஆனால் அவன் அடையாளங்களை எப்படி எல்லாம் அழிக்கலாம் என்று தனது குருர எண்ணங்களை வெளிப்படுத்தவே இது போன்ற ஆதிக்க சக்திகளின் ஊடகங்கள் தொடர்ந்து பாடுபட்டு வருகின்றன.

பெரியார், அண்ணா போன்ற பெருந்தலைவர்கள் போராடி ஒரு இன மக்களை விழிப்படையச் செய்தது இந்த திராவிடன் என்ற உணர்வை வைத்துதான். அந்த உணர்வின் மூலம்தான் நாம் ஆதிக்க சக்திகளுக்கு எதிராக ஒன்று கூடட முடிந்தது என்றால் மிகை ஆகாது.


இன்னும் அந்த போராட்டங்கள் மீதம் இருக்கிறது என்பதை காட்ட இங்கே ஏராளமான உதாரணங்கள் உள்ளது. அதை இங்கே பல பதிவுகளில் படித்திருப்பீர்கள். அந்த வகை சார்ந்தது தான் இந்த இடுக்கையும்.

இப்படி ஒரு கேலி துணுக்கை வெளியிட்டு தனது மன அழுக்கை வெளிக்காட்டிக் கொண்ட ஆனந்த விகடன் வார இதழக்கு எனது எதிர்ப்புகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

சரி, இந்த இடுக்கையில் இன்னுமொரு முக்கியமான விடயம், கொஞ்சம் துறை சார்ந்த கருத்து, அது இங்கே பகிர்ந்துகொள்வது அவசியம் என கருதுவதால் இங்கே கொடுக்கிறேன்.

முதலில், இந்தியாவில் சாலைகள் எப்படி வகைப்படுத்தப்படுகிறது என பார்ப்போம்.

1. அதி விரைவு சாலைகள் - மொத்தம் 200 கி.மீ.
2. தேசிய நெடுஞ்சாலைகள் - மொத்தம் 66,590 கி.மீ.
3. மாநில நெடுஞ்சாலைகள் - மொத்தம் 1,31,899 கி.மீ.
4. முக்கிய மாவட்ட சாலைகள் - மொத்தம் 4,67,763 கி.மீ.
5. கிராம மற்றும் இதர சாலைகள் - மொத்தம் 26,50,000 கி.மீ.

சரி, இதை நிறுவகிக்கவும், பராமரிக்கவும் தனித்தனி துறைகள் உள்ளன. எவ்வாறு என்றால், அதி விரைவு சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளை, தேசிய நெடுஞ்சாலை மற்றும் மேம்பாட்டு துறை கவனிக்கும். மற்ற சாலைகளை அந்த அந்த மாநில நெடுஞ்சாலைத்துறை கவனிக்கும். (இங்கே நெஞ்சாலைத்துறை ஊழியர்கள் போராட்டும் கூட மாநில நெடுஞ்சாலைத்துறையை எதிர்த்துதான். இது ஒரு சிறு குறிப்பு.)

ஆனால், எல்லா சாலைகளிலும் மாநில மற்றும் மத்திய அரசின் பங்களிப்பு இருக்கும். அவ்வாறு தான் நிதி ஒதுக்கீடுகள் இருக்கும். இந்தியாவில் சாலை ஆதாரங்களுக்கு நாம் பெருமளவு உலக வங்கியைத்தான் சார்ந்திருக்கிறோம். அதற்கு பெருமளவு வட்டியும் கட்டிக் கொண்டுதான் இருக்கிறோம்.

இந்த சாலைகள் நிர்மாணிக்கும் போது, அதில் எல்லா பிராதான சாலைகளிலும் இந்திய ராணுவ டாங்கிகள் வந்து செல்லும் அளவுக்கு அமைக்க வேண்டும். அதாவது அந்த டாங்கிகளை தாங்கும் சுமை சக்தி சாலைகள் மற்றும் அதில் வரும் மேபாலங்களுக்கு இருக்க வேண்டும்.

முக்கிய மேபாலங்கள் மற்றும் சாலைகளின் வரைபடங்கள் மற்றும் விபரங்கள் இராணுவத்திற்கு அனுப்ப வேண்டியது ஒவ்வொரு நெடுஞ்சாலைத்துறையின் கடமை. சில சமயம் அதை இராணுவம் நேரில் சென்று சோத்திக்கலாம். ஆனால் அது போல் நடப்பதில்லை.

ஆக, இது போன்று நெடுஞ்சாலைகளை வகைப்படுத்துவது அந்த துறை சார்ந்த செயலே. அதாவது அதை நிறுவகிக்கவும் பாரமரிக்கவும் வகைப்படுத்தும் ஒரு செயல்.

இதில் தேசிய என்பது தேசியம் என பொருளாகாது.

இவ்வளவு காலம் பத்திரிக்கை துறையில் இருக்கும் ஆ.வி.க்கு இது தெரியாமலா இருந்திருக்கும்?

அல்லது, நம் தோழர்களை சீண்டிப் பார்க்கும் எண்ணமா?


நன்றி: National Highways Authority of India.

16 Comments:

Anonymous செந்தழல் ரவி said...

சரியான ஷாட் சிவபாலன்...இரண்டு கையையும் மேலேதுக்கி...

சிக்ஸர் !!!!!!!!!

September 10, 2007 8:56 AM  
Blogger சிவபாலன் said...

ரவி

கருத்துக்கு மிக்க நன்றி!

வருகைக்கு நன்றி!

September 10, 2007 9:23 AM  
Anonymous Anonymous said...

சிவபாலன், அது தேசிய நெடுஞ்சாலை அல்ல, ஆரிய நெடுஞ்சாலை என்று பேர் வைத்திருக்கிறார்களாம். அதனால்தான் ஆ.வி அப்படி எழுதியிருக்கிறது, சிலருக்கு அது தரமான நகைச்சுவையாக படுகிறது. இத்தனை வருசமா இருக்குன்னா ஏதாவது அர்த்தம் இல்லாம இருக்காது என்று கூச்சமில்லாமல் வருணாசிரமக் கோவணத்தை ஆத்திக அன்பர்கள் தூக்கி வீசும்போது கண்டித்தார்களா இவர்கள்? எலிக்குத் தலையையும் கீரிக்கு வாலையும் காட்டுவதுதான் யோக்கியதை என்று ஆகிப்போயிற்று, பிறகென்ன ஒளிவுமறைவு வேண்டிக்கிடக்கிறது? திராவிட, கழகம் கருவாடு என்று சொல்வதெல்லாம் சகிக்கவில்லை என்று வெளிப்படையாகச் சொல்வதுதானே. நான் பதிவை எழுதியவரை சொல்லவில்லை ஐயா, பொதுவாக சொல்கிறேன். பிறகு என்னை மட்டும் சொல்கிறார்கள் என்று ஏதாவது பிரச்சினை வரப்போகிறது.

ரொம்ப காட்டமாக எதையும் விமர்சித்து கிமர்சித்து வைக்காதீர்கள். பிறகு உங்களையும் திரா விட குஞ்சு பிரியாணி தின்னுட்டு முட்ட வருது தனிமனித தாக்குதல் என்று முதலைக்கண்ணீர் வடிக்கப் போகிறார்கள்.

September 10, 2007 9:37 AM  
Blogger கோவி.கண்ணன் said...

சிபா,
மைல் கல்லுக்கு பொட்டு வச்சி சாமி கும்பிடாதவரை....என்ன பெயர் வச்சாலும் எனக்கு பரவாயில்லை.

:))

September 10, 2007 10:18 AM  
Blogger குமரன் (Kumaran) said...

முன்பு பாலங்களைப் பற்றிய தகவல்கள் தந்தது போல் இப்போது சாலைகளைப் பற்றிய தகவல்கள் தந்திருக்கிறீர்கள் சிவபாலன். முதன்மைச் சாலைகள் (பிரதான சாலைகள்) மட்டும் தான் இராணுவ பீரங்கிகளைத் தாங்கும் வலுவுடன் கட்டப்படவேண்டுமா? அந்த முதன்மைச் சாலைகள் பட்டியலில் கிராம மற்றும் இதர சாலைகள் வரா என்று எண்ணுகிறேன். முக்கிய மாவட்ட சாலைகள் வருமா?

September 10, 2007 10:33 AM  
Blogger சிவபாலன் said...

குமரன்,

முக்கிய சாலைகள், அதாவது எல்லை ஒட்டிய சாலைகள் எதுவாகினும் நிச்சயம் இராணுவ டாங்கிகள் வந்து செல்லும் அளவு இருத்தல் வேண்டும்.

சில சாலைகளில் எவ்வளவு டன் எடை உள்ள பொக்குவரத்து அனுமதிக்கப்படும் என விவரங்கள் எழுதியிருப்பர். அது கனரக வாகனங்களுக்கும் இதர வாகனங்களுக்கும் பொருந்தும்.

உண்மையில் எல்லா பால்ங்களும் பாகுபாடின்றி இந்திய இராணுவ டாங்கிகளுக்குத்தான் கட்டப்படுகிறது.

ஏனென்றால் அந்த டாங்கிகளை தாங்குமானால் மற்ற கனரக வாகனங்களையும் தாங்கும் என்பது அடிப்படை.

இதில் முக்கியமான் விடயம், Rolling Loads என்பது. அது டாங்கிகளின் சுமையைதான் அடிப்படையாக கொள்கின்றனர்.

எல்லா நெடுஞ்சாலைகளும் அவ்வாறு தான் நிறுவப்படுகிறது.

கிராம மற்றும் இதர சாலைகள் எல்லை ஒட்டி இருந்தால் அவைகளும் அவ்வாறு.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

September 10, 2007 10:42 AM  
Blogger PRINCENRSAMA said...

//தனது குருர எண்ணங்களை வெளிப்படுத்தவே இது போன்ற ஆதிக்க சக்திகளின் ஊடகங்கள் தொடர்ந்து பாடுபட்டு வருகின்றன//
100% சரியான கருத்து... தொடர்ந்து உங்கள் பதிவுகளைப் படிக்கிறேன். வெகு சிறப்பு! தொடருங்கள்!

அதிலும் சில படங்களை மட்டும் போட்டு கருத்து அடிக்கும் உங்கள் பாணி பாராட்டுக்குரியது...
உங்கள் மின்னஞ்சல் முகவரி தரலாமே!
princenrsama@gmail.com

September 10, 2007 10:44 AM  
Blogger சிவபாலன் said...

அனானி

கருத்துக்கு மிக்க நன்றி!

வருகைக்கு நன்றி!

September 10, 2007 10:44 AM  
Blogger சிவபாலன் said...

ஜிகே,

// மைல் கல்லுக்கு பொட்டு வச்சி சாமி கும்பிடாதவரை //

ரிப்பிட்டே..

கருத்துக்கு நன்றி!

September 10, 2007 10:46 AM  
Blogger சிவபாலன் said...

பிரின்ஸ் என் ஆர் சமா,

உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி!

கருத்துக்கு மிக்க நன்றி!

sivabalanv@gmail.com

இது தான் என் மின்னஞ்சல் முகவரி.

வருகைக்கு நன்றி!

September 10, 2007 10:53 AM  
Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சிவபாலன்!
நம் நாடுகளில், ஆளுபவர்கள் நாட்டை வீட்டுச் சொத்தாக நினைப்பதால், வந்த தடுமாற்றம்.
பல சந்தேகங்களைத் தீர்க்கும் வண்ணம் துறைசார் விளக்கத்துடன் பதிவிட்டதற்கு நன்றி!

September 10, 2007 11:26 AM  
Blogger Anandha Loganathan said...

//இதில் தேசிய என்பது தேசியம் என பொருளாகாது.
//

Good explanation.
:)

September 10, 2007 11:43 AM  
Anonymous Anonymous said...

http://en.wikipedia.org/wiki/Streets_named_after_Martin_Luther_King,_Jr.

September 10, 2007 1:17 PM  
Anonymous Anonymous said...

mr.sivabalan,you are always writing about mr.annadorai that he has contributed a lot to tamil society.he was not serious about anything what he has preached.look at his separate dravida nadu,anti braminism(he has joined with rajaji to defeat kamaraj)he himself declared as annadorai mudaliar when he was contested in an election in kanchpuram.If he is an non-beleaver in god means he could have not told as "ondrey kulam oruvane devan".for annadorai poltics was his livelyhood like most of his thambis.vizzy.

September 10, 2007 7:34 PM  
Blogger சதுக்க பூதம் said...

இந்த நெடுங்சாலை ராமர் இலங்கைக்கு போக அயோத்தியிலிருந்து ராமேசுவரத்துக்கு போட்ட சாலை. எனவே ராமர் சாலை என்று பெயர் வைப்பது தான் சரி.5000 வருடத்துக்கு முன்னாடி கடலில் இவ்ளோ பெரிய பாலம் போடும் போது இது முடியாதா?

September 10, 2007 9:41 PM  
Blogger Thamizhan said...

ஒரு திட்ட மிட்ட சூழ்ச்சி நடந்து வருவது வெளிப்படையாகிக் கொண்டுள்ளது.
பார்ப்பனீயம் என்றும் நேராக மோதியதாகச் சரித்திரமேயில்லை.
தற்போது தமிழர்களை எப்படியெல்லாம் பிரித்து மோதவிட்டுச் சிதறடிக்கலாம் என்பதுதான் நடந்து கொண்டு வருகிறது.

கலைஞர் ஆட்சி பார்ப்பனீய எதிர் ஆட்சி என்பது நாளொரு வண்ணமும் தெரிந்து வருவதால் பார்ப்பனீயப் பத்திரிக்கை உலகும்,மற்ற மாமாக்களும் தங்கள் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுப் பி.ஜே.பி மறுமலர்ச்சிக்கு வழி காண்பார்கள்.

பதிவுகளைப் படிக்கும்,பின்னூட்டம் இடும் நண்பர்கள் இந்த சூழ்ச்சிகளைப் புரிந்து கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

திராவிடம் தமிழியம் தான்.தமிழும் திராவிடமும் ஒன்றுதான் என்பதை நண்பர் கோவி.கண்ணன் பதிவில் பாருங்கள்.நம்மில் ஒத்துக் கொள்ள முடிந்ததை ஏற்றுக் கொள்வோம்,ஒத்துக் கொள்ள முடியாததைப் பொறுத்துக் கொள்வோம் ஆனால் ஒரு போதும் எதிரிக்கு இடம் கொடுக்கமாட்டோம் என்று செயல் பட வேண்டுகிறேன்.

September 10, 2007 9:42 PM  

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv