"அமெரிக்காவில் மகன்" - நடிகர் சிவக்குமார் வாசித்த கவிதை -வீடியோ
நடிகர் சிவக்குமார் தனது "அகரம்" அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு பரிசு வழங்கி பேசிய போது தனது நண்பர் ஒருவர் எழுதிய கவிதையை வாசித்தார். அந்த கவிதையை இங்கே தருகிறேன்.
அந்த நிகழ்ச்சியின் வீடியோவைக் காண "இங்கே செல்லுங்க.. ". அங்கே "Surya's Gesture" என்ற வீடியோவைக் கிளிக் செய்யுங்க..
கவிதை கிழே..
=======================================================================
மகனே நீ பிறந்த அன்று
தோட்டத்தில் நட்டு வைத்தேன்
ஒரு தென்னங்கன்று
என் வியர்வையில்
நீ வளர்ந்தாய்
நான் வார்த்த தண்ணீரில்
தென்னை வளர்ந்தது.
எங்கோ இருந்து
நீ ஈட்டும் பணம்
உனக்கு இன்பம் தருகிறது
இங்கே இருக்கும் தென்னை
எனக்கு சுவை நீரில் சுகம் தரும்
பழம் தருகிறது
ஒரு நாள் இமெயிலில்
நீ மூழ்கியிருக்கும் போது
என்னை, ஈ மொய்த்த
செய்தி வந்து சேரும்
இறுதிச் சடங்கில்
நீ இல்லாது போனாலும்
தென்னை ஓலை
கடைசி மஞ்சமாகும்
=========================================================================
அந்த நிகழ்ச்சியின் வீடியோவைக் காண "இங்கே செல்லுங்க.. ". அங்கே "Surya's Gesture" என்ற வீடியோவைக் கிளிக் செய்யுங்க..
கவிதை கிழே..
=======================================================================
மகனே நீ பிறந்த அன்று
தோட்டத்தில் நட்டு வைத்தேன்
ஒரு தென்னங்கன்று
என் வியர்வையில்
நீ வளர்ந்தாய்
நான் வார்த்த தண்ணீரில்
தென்னை வளர்ந்தது.
எங்கோ இருந்து
நீ ஈட்டும் பணம்
உனக்கு இன்பம் தருகிறது
இங்கே இருக்கும் தென்னை
எனக்கு சுவை நீரில் சுகம் தரும்
பழம் தருகிறது
ஒரு நாள் இமெயிலில்
நீ மூழ்கியிருக்கும் போது
என்னை, ஈ மொய்த்த
செய்தி வந்து சேரும்
இறுதிச் சடங்கில்
நீ இல்லாது போனாலும்
தென்னை ஓலை
கடைசி மஞ்சமாகும்
=========================================================================
9 Comments:
சிவபாலன்!
கவிதையைப் படித்தேன்,
படித்த மாத்திரத்தில் என் கண்களில் நீர் திவலைகள்,
மனம் பாரமானது,
இதயத்தின் அதிர்வு கூடியது,
சிறிது நேரத்திலேயே சமரசம் ஆனேன்.
எனது ஒரே மகனும் அமெரிக்காவில்தான்!
இருப்பினும், வாழ்வின் யதார்த்தம் புரிந்து கொள்ள முடிவதால் வருத்தம் ஏதுமில்லை.
All in the game.
அய்யா (அனானி)
தங்களைப் போலவே நானும் எனது அம்மாவின் நியாபகத்தில், இந்த கவிதையை வாசிக்க கேட்டவுடன் கொஞ்சம் உருகி விட்டேன்.
எனது அன்னையும் மிகுந்த சிரமங்களுக்கு இடையேதான் என்னை வளர்த்தார்கள்.
ம்ம்ம்ம்ம்ம்ம்..
//All in the game. //
வழிமொழிகிறேன்..
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
மனம் வருத்தமாய உள்ளது இந்த கவிதையைப் படிக்கும் பொழுது!!!
மயிலாடுதுறை சிவா
சிவபாலன்,
ஒளியிழைச் சுட்டிக்கு மிக்க நன்றி.
அருமையான கவிதை.
After reading this I feelso sad also.I guess that is life.
Rumya
உண்மை சுடுகிறது
இன்றைய பெற்றோரின் அவலம்!
மயிலாடுதுறை சிவா, வெற்றி, அனானி, Ideas Money, கீதா சாம்பசிவம்,
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
அருமையாக இருக்கு சிவகுமார் கவிதை.
கவியரசரின் வரி,
"பிள்ளையை பெற்றால் கண்ணீரு, தென்னையை பெற்றால் இளநீரு"
Post a Comment
<< Home