Wednesday, September 12, 2007

இதெல்லாம் உண்மையா என தெரியாது!

கீழே சில படங்களை இணைத்துள்ளேன். இவை அனனத்தும் எனக்கு இமெயிலில் வந்தவை. ஆனால் அதன் நம்பகத்தன்மை பற்றி எனக்கு தெரியாது. இருப்பினும் பகிர்தலில் தவறில்லை என தோன்றியதால் உங்கள் பார்வைக்கு..17 Comments:

Blogger வவ்வால் said...

சிவபாலன்,

இதில் ரத்த வகையும் ஒரு நபரின் ஆளுமையும் குறித்து போட்டுள்ளது மட்டும்... சரிவர நிறுபிக்கப்படவில்லை. ரத்த வகைப்பொருத்தம் அறிவியல். அது சரியே.

மேலும் பழங்கள் சாப்பிடுவதால் மேற்குறிப்பிட்ட அனைத்து சாதகங்களும் கிடைக்குமா என்று தெரியாவிட்டாலும் கண்டிப்பாக நன்மையே! அதிகம் பூச்சி மருந்து, உரம் போடவில்லை எனில் பலன் உண்டு.

கைகள், உள்ளங்காலில் உள்ள நரம்பு புள்ளிகளில் அழுத்தம் தருவதால் பலன் உண்டு என அக்கு பிரஷ்ஷர் தெரிவிக்கிறது, அந்த மசாஜ் செய்வதும் அப்படி தான். ஆனால் அவற்றினால் உடனடியாக கைமேல் பலன் என்று சொல்வதெல்லாம் கொஞ்சம் உடான்ஸ்.

இன்னும் சொல்லப்போனால் அவை எல்லாம் ரிலீஃப் தருபவை , தீர்வு தரும் என்று உறுதியாக சொல்ல முடியாது. அது குறித்து நிறைய புத்தகங்கள் உள்ளது. என்னிடம் கூட ஒரு புத்தகம் உள்ளது.

இதே போல காந்த சிகிச்சை என்றும் ஒன்று உள்ளது, காந்தங்களை உடலின் சில இடங்களில் குறிப்பிட்ட நேரம் வைத்து இருந்தால் சில பலன்கள் என்று! ஆனால் அவை எல்லாம் மாற்று மருத்துவம் என சொல்லப்படுகிறது அதற்கு எல்லாம் இதுவரை மருத்துவ ரீதியாக நிறுபனம் இல்லை!

September 12, 2007 12:56 PM  
Blogger வெற்றி said...

பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி சிவபாலன்.

எனது ஊரில் முந்திச் சொல்வார்கள், கீரை, கரட் போன்றன சாப்பிட்டால் கண் பார்வை நல்லாயிருக்கும் எண்டு.
அதில் எவ்வளவு உண்மையோ தெரியாது.

அந்த நேரம் இவற்றைச் சாப்பிட்டிருந்தால் இப்ப மூக்குக் கண்ணாடியைப் புழங்க வேண்டிய அவசியம் இல்லாமலிருந்திருக்குமோ என சில வேளைகளில் எண்ணுவதுண்டு.

வவ்வால் சொன்னது போல "மேலும் பழங்கள் சாப்பிடுவதால் மேற்குறிப்பிட்ட அனைத்து சாதகங்களும் கிடைக்குமா என்று தெரியாவிட்டாலும் கண்டிப்பாக நன்மையே!"

September 12, 2007 2:14 PM  
Blogger துளசி கோபால் said...

நானும் இப்பத்தான் தெரிஞ்சுக்கிட்டேன்.

நல்ல விவரங்கள் அடங்கிய பதிவு.

நம்பகமா இல்லையா என்றதை விட படிக்க சுவாரசியமா இருக்கு.

September 12, 2007 2:48 PM  
Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சிவபாலன்!
இங்கு சுகாதாரத் திணைக்களத்தால்
ஒருநாளைக்கு 5 பழம்,மரக்கறி சாப்பிடும் படி இப்போ விளம்பரம் செய்கிறார்கள்.
மற்றும் படி வவ்வால் கூறுவது போல்
இந்த நோய்க்கெல்லாம் தீர்வு என்பதும்
ஏனைய விடயங்களும்,எல்லோருக்கும் பொருந்துமா? என்பது கேள்விக் குறியே?

September 12, 2007 3:24 PM  
Anonymous செந்தழல் ரவி said...

ஆஹா...

இதை ப்ரிண்ட் அவுட் எடுத்து சுவத்துல ஒட்டி போலி டாக்டர் தொழில் ஆரம்பிச்சுடப்போறாங்க....

உஷார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

September 12, 2007 5:50 PM  
Blogger வடுவூர் குமார் said...

பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் சீன நண்பருக்கு அந்த "கால்" வேண்டும் என்றார்.பிரிண்ட் போட்டு கொடுத்தாகிவிட்டது.அதன் மேல் அவருக்கு நம்பிக்கை போலும்.
சிங்கை தொடக்கநிலை பள்ளிகளில் முகத்தில் செய்யக்கூடிய சிலவற்றை சொல்லிக்கொடுக்கிறார்கள்.
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

September 12, 2007 7:27 PM  
Anonymous Anonymous said...

நிறைய கேரட் சாப்பிட்டால் கண் பார்வை நன்றாகத் தெரியும் என்பது உண்மைதான். எந்த முயலாவது கண்ணாடி போட்டுப் பார்த்திருக்கிறீர்களா?

-மொக்கை பதிவிற்கு பின்னூட்டமிடுவோர் சங்கம்

September 12, 2007 9:26 PM  
Blogger சிவபாலன் said...

வவ்வால்,

காந்த சிகிச்சை பற்றி நேரம் கிடைக்கும் போது பதிவிடுங்க.. என்னதான் சொல்லறாங்கன்னு பார்ப்போம்..

கருத்துக்கு நன்றி!

September 13, 2007 11:28 AM  
Blogger சிவபாலன் said...

வெற்றி

மூக்கு கண்ணாடி பயன் படுத்தும் நிலைமையா? சரி விடுங்க.. முக்கால் வாசி பேர் அந்த நிலைமைதான்.. ம்ம்ம்..

கருத்துக்கு நன்றி!

September 13, 2007 11:29 AM  
Blogger சிவபாலன் said...

துளசி மேடம்,

கருத்துக்கு மிக்க நன்றி!

September 13, 2007 11:30 AM  
Blogger சிவபாலன் said...

யோகன் அண்ணா,

கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி!

September 13, 2007 11:30 AM  
Blogger சிவபாலன் said...

ரவி,

:)


நன்றி!

September 13, 2007 11:31 AM  
Blogger சிவபாலன் said...

வடுவூர் குமார்,

கருத்துக்கு மிக்க நன்றி!

September 13, 2007 11:32 AM  
Blogger சிவபாலன் said...

அனானி,

ஹா ஹா..

:)

நன்றி!

September 13, 2007 11:32 AM  
Anonymous Anonymous said...

SB,

i thought O+ is a universal donor... but the chart says O- as universal donor...

cud some doctor/ compounder / nurse clarify this?

September 13, 2007 12:50 PM  
Blogger சிவபாலன் said...

அனானி

உங்கள் கேள்வி நல்ல கேள்வி..

இந்த சுட்டியில் பாருங்க சில விளக்கும் உள்ளது.

இது போன்ற சார்ட் போற்றிருக்கிறார்கள்.

அதில் ஓ நெகடிவ் எல்லா வகைக்கும் சேரும் என்பது போல் உள்ளது.

http://www.bloodbook.com/type-facts.html

நன்றி!

September 13, 2007 12:55 PM  
Blogger சிவபாலன் said...

O - (negative)

7% of the population has O negative Blood. People with O negative donors are potential universal red Blood cell donors. This means that their red Blood cells can be transfused to patients with all types of Blood.

September 13, 2007 12:58 PM  

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv