கிடு கிடு கிழவர்கள் - வென்றது இங்கிலாந்து.

சனிக்கிழமை கொஞ்சம் நிம்மதியா இருக்கலாம் என எதையும் படிக்காமல் வெறும் டிவி மட்டும் பார்த்துக்கொண்டிருந்தேன்.
கொஞ்சம் போர் அடித்தது. சரி, செய்தி படிக்கலாம் என தினமலர் வெப்சைட் போனால்.. வழக்கம் போல் கிழவர்களின் கிடு கிடு ஆட்டத்தால் வென்று இருக்கிறது இங்கிலாந்து. கேப்டன் கிழவன் டிராவிட் டக் அடித்து வெளியேறியுள்ளார். என்னப்பா அங்கே குளிர் அதிகமாக.. கிழவனால் மூன்று பந்துகளுக்கு மேல் நிற்க முடியவில்லையே..
ஒட்டு மொத்தத்தில் இந்த கிழவர்கள் விளம்பரங்களில் சம்பாதிப்பதற்காக நம் நாடு அவமானப்பட வேண்டியுள்ளது. அதனால் தான் டீமை விட்டு விலகாமல் அட்டை போல் ஒட்டிக் கொன்டு நம் மானம் எனும் ரத்தத்தை உறிஞ்சுகிறார்கள்.. இந்த கிழவர்கள்.
தொடரை வென்ற எதிரணிக்கு எனது வாழ்த்துக்கள்..
(கிழவர்கள் என்ற பதம் வயதான நல் இதயங்களை காயப்படுத்த அல்ல.. அவ்வாறு யாரேனும் உணர்ந்தால் அதற்காக எனது வருத்தங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.)
24 Comments:
umpire aleemder too played well...if you want to find mistake you can find many...
சும்மா டிஸ்கி போடறதை விட கொஞ்சம் நல்ல சொற்களை பயன்படுத்தி இருக்கலாம்.
இந்தப் பதிவாகட்டும் இதற்கு முன் வேறொரு பதிவில் நீங்கள் இட்ட பின்னூட்டங்களாகட்டும் உங்களுக்கு கிரிக்கெட் ரொம்ப அறிமுகமாகாத துறை என்பது தெரிகிறது.
இன்று வலைப்பதிவில் எல்லாவற்றையும் பரபரப்பாக பதிவிட்டு பெயர் வாங்கிக் கொள்வதுதான் வழக்கமாக இருக்கிறது. இதையும் அதில் ஒன்றாகவே கருதுகிறேன்.
(டிஸ்கி: நான் உங்களை தனிப்பட்ட முறையில் தாக்கி எழுதவில்லை. அதற்கு அவசியமும் இல்லை. ஆனால் கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் என்ன வேண்டுமானாலும், யாரைப் பற்றி வேண்டுமானாலும், எந்த முறையில் வேண்டுமானாலும் எழுதலாம் என்றிருக்கிற நம் வலையுலகை நொந்து கொள்ளவே இந்தப் பின்னூட்டம்.)
அனானி
umpire aleemder too played well, மைதாணம் சரியில்லை, இன்னும் 25 ரன் எடுத்திருந்தால் ஜெயித்திருப்போம்.. இன்னு எத்தனை நாளைக்கு இதை சொல்லிக்கொண்டு இருப்பது..
வேறு ஏதாவது வித்தியாசமாகவாவது சொல்வோம்..
கருத்துக்கு நன்றி!
இகொ
வாங்க..
ரொம்ப உணர்ச்சி வசப்படுகிறீர்களே..!!
கிரிகெட் ஒரு துறை? Ha Ha Ha..அது சரி..
அந்த இலவை நானும் ஒரு மூனு வருசம் பொரஃபசனால வேற விளையாடித் தொலைச்சேன்...
ம்ம்ம்ம்...
இல்லைங்க.. உங்களுக்கு புரியாது.. கொஞ்சம் உலக்கோப்பை சமயத்தில் நான் இட்ட பின்னூடங்களை கொஞ்சம் பாருங்க..
மற்றபடி இந்த பதிவின் மூலம் கருத்து சுதந்திரம் பாதிக்கப்பட்டு விட்டது என்பதை என்னால் ஏற்க முடியாது. அவ்வாறு நான் கருதவில்லை.
விளம்பர நிறுவனங்கள் கையில் தான் இன்றைய கிரிகெட். அதனால் தான் நம்மால் ஜெயிக்க முடிவதில்லை.
மிக மிக திறமையான வீரர்கள் உள்ளே வரமுடியாமல் தவிக்கிறார்கள்.
என் மனதாங்கலை வெளிப்படுத்தவே இந்த பதிவு.
நன்றி
உங்க இந்தப் பதிவு மட்டும் என்னை இப்படி உணர்ச்சி வசப்படவைக்கவில்லை சிவபாலன். ஆனால் இதுவும்தான்.
//கேப்டன் கிழவன் டிராவிட் டக் அடித்து வெளியேறியுள்ளார். என்னப்பா அங்கே குளிர் அதிகமாக.. கிழவனால் மூன்று பந்துகளுக்கு மேல் நிற்க முடியவில்லையே..//
ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரரால் எழுதப்பட்ட வரிகளாகத் தெரியவில்லை.
//மற்றபடி இந்த பதிவின் மூலம் கருத்து சுதந்திரம் பாதிக்கப்பட்டு விட்டது என்பதை என்னால் ஏற்க முடியாது. அவ்வாறு நான் கருதவில்லை.//
கருத்து சுதந்திரம் பாதிக்கப்பட்டுவிட்டது என நான் சொல்லவில்லை. ஆனால் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் என்ன வேண்டுமானாலும் எழுதலாம், எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என இன்று தமிழ் வலைப்பதிவுகளின் நிலை இருக்கிறதே என்றுதான் ஆதங்கப்பட்டேன்.
இல்லை, நான் எழுதியது நல்ல தரமான பதிவுதான். நல்ல தரமான எழுத்துதான். நல்ல தரமான கருத்துக்களைத்தான் தந்துள்ளேன் என நீங்கள் உண்மையில் நினைத்தீர்களானால் நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை.
//விளம்பர நிறுவனங்கள் கையில் தான் இன்றைய கிரிகெட். அதனால் தான் நம்மால் ஜெயிக்க முடிவதில்லை.
மிக மிக திறமையான வீரர்கள் உள்ளே வரமுடியாமல் தவிக்கிறார்கள்.//
இதெல்லாம் தொழில்ரீதியாக விளையாடி இருக்கும் உங்களுக்குத் தெரிந்து இருக்குமாய் இருக்கும். அதற்காக என்ன செய்யவேண்டும் எனப் பதிவிட்டால் நான் படித்துவிட்டுப் போகப் போகிறேன். அல்லது அங்கு நடக்கும் ஊழலை வெளிப்படுத்தினால் அதுவும் சரி.
அதற்குப் பதிலாக அடுத்தவரை இகழ்ந்து பதிவு போடுவதால் என்ன ஆகப் போகிறது? என்னைப் போன்றவர்களை உணர்ச்சி வசப்பட வைப்பதை விட?
//என் மனதாங்கலை வெளிப்படுத்தவே இந்த பதிவு.//
இன்று தடி எடுத்தவன் தண்டல்காரன் என இருக்கும் தமிழ் பதிவுலகை நினைத்து நான் பட்ட ஆதங்கத்தை வெளிப்படுத்தவே அந்தப் பின்னூட்டம்.
உங்களுடன் சண்டை போடவோ விவாதம் செய்யவோ வரவில்லை.
இப்பதிவில் இதுவே என் கடைசிப் பின்னூட்டம். நன்றி.
இகொ,
அந்த வரிகள் சொல்வதற்கான காரணம்.
1. இந்திய அணி இங்கிலாந்து என்று இரு மாதங்களுக்கு மேல் ஆகிறது. இதற்கு முன் டெஸ்ட் போட்டி விளையாடி உள்ளனர். ஆகையால் அந்த சூழ்நிலைக்கு நன்கு மாறியிருப்பர். அப்படி இருந்தும் இது மாதிரி மோசமான விளையாட்டு யாரையும் கோபப்படச் செய்யும்.
2. இவ்வளவு முக்கியமான மேட்சில் ஒரு அணித்தலைவன் தன் பங்கு எது தெரிதிருக்கும்.
இல்லைங்க.. நமக்கு கோபம் இருந்தால் கருத்து தெரிவிப்பதில் தவறில்லை. அதுவும் இது போல் அட்டை பூச்சிகளை பற்றி எழுதுவது தவறில்லை.
நீங்க சொன்ன மாதிரி ஒரு லிஸ்ட் ரெடி பன்னி போடறேன்.. யார் யாரெல்லாம் புரக்கணக்கப்படுகிறார்கள் என..
இன்னுமே எனக்கு கோபம் தீரவில்லை..ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...இவர்களை நினைத்தால்.
என்னங்க என் கருத்தை சொன்னால், தன்டல்காரனா.. எதோ கடுமையான வார்த்தைகளாக படுகிறது. சரி, அது உங்கள் கருத்து. அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
சிவபாலன்! வருத்தமாக இருக்கிறது. இளைஞர்களுக்கு ஆதரவு என்பதை தாண்டி விளையாட்டை விளையாட்டாக கூட பார்க்க முடியாத காழ்ப்புணர்வே எஞ்சி நிற்கிறது.
நேற்றைய இங்கிலாந்து அணியில் 12 பேர். நடுவர் ஆலன் டாரையும் சேர்த்து சொல்கிறேன். அவர்தான் நேற்றைய ஆட்ட நாயகன். அவரின் முடிவுகள் ஆட்டத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்று பேசுவீர்களாயின் மேற்கொண்டு பேச ஒன்றும் இல்லை
மைதானத்தில் நடுவரின் முடிவே இறுதியானது என்பதும் அதை விமர்சிக்க முடியாது என்பது நிதர்சனம். ஆனால் டிராவிட், சச்சின் காட்டிய வெளிப்பாடு அவர்கள் மனப்பக்குவத்தை காட்டியது.
இளம்படை தான் 20க்கு 20க்கு போகுது. பார்ப்போமே என்ன நடக்கிறது என்று.
முத்துக்குமரன்
கருத்துக்கு நன்றி!
வருத்தப்பட இதில் ஒன்றுமில்லை..
உலக்கோப்பை சம்யத்தில் வந்த எல்லா பத்திரிக்கைகளையும் கொஞ்சம் புரட்டி பாருங்க.. அப்பறம் முடிவு செய்வோம் இதை விளையாட்டா பார்க்கலாமா? வேணாமா என்று?
இரசிகர்கள் காந்திய முறையை பயன்படுத்துவதால் தான் ந்ம்மால் தர மான விளையாட்டை பார்க்க முடியவில்லை.
ஐசிஎல் அந்த ஏக்கத்தை போக்க முடியும் என நான் நம்புகிறேன். அதற்கான காரணமும் இருக்கிறது.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
Cheers முத்துக்குமரன்!!
சிவபாலன்,
நான் இப்படி ஒரு கிழவர்கள் என்றப்பதிவு கண்டிப்பா உங்க கிட்டே இருந்து வரும்னு மேட்ச் பார்க்கும் போதே நினைத்தேன்.உங்களுக்கு கிரிக்கெட் பிடிக்காம அப்படி சொல்லவில்லை ,அதிகமா பிடிக்கிறது என்பதால் எனத்தெரியும். இந்திய அணி போல நீங்க நம்பிக்கை துரோகம் பண்ணவில்லை :-))
இதுல ஒன்றைக்கவனிக்க வேண்டும் இந்த மும்முர்த்திகள் இளமையாய் இருக்கும் காலத்திலும் இறுதி ஆட்டம் அல்லது அது போல முடிவு தரும் ஆட்டம் எனில் சொதப்பி விடுவார்கள்.
நிறைய விமர்சகர்கள் கூட final chokers என்று நம் அணியை சொல்வதுண்டு. நாம் தான் இன்னும் கைப்புள்ளையை நம்பும் அப்பாவி மக்களா இருக்கோம்!
சரி இதை விட்டு தள்ளிட்டு வழக்கம் போல நல்லப்பதிவுகளாகப் போடுங்க, இ,கொ வேற வருத்தப்படுறார் பாருங்க! எல்லோருக்கும் ஆதங்கம் தான் , வெளிப்படுற விதம் தான் மாறுது!
ஆமாங்க என்னங்க பண்ணுரது, இவனுங்க இப்படி ரெம்ப மோசமாத் தான் விளையாடுராய்ங்க. அதனாலத் தான் நான் இப்ப கிரிகட் பார்க்கிறதையே விட்டுட்டேன். இவனுங்களப் பத்தி சொன்னா ஏனுங்க இனா கொனா க்கு இவ்வளவு கோபம் வருது. நீங்க உண்மையைத் தான சொன்னீங்க !! (உண்மை எப்பவும் கசக்குங்கிறதுனாலோ?)
வவ்வால்
வாங்க..
பாம்பின் கால் பாம்பறியும்!!Ha Ha Ha..
உங்க Weekend பதிவு படித்த பிறகு கோபம் இன்னும் அதிகமாகிவிட்டது. அதில் இந்த அட்டைப் பூச்சிகளை நீங்களும் போட்டுத்தாக்கியிருந்தீர்கள். அதனால்தான் இந்தப் பதிவு.
மற்றபடி அந்த மும்மூர்த்திகள் மட்டுமல்ல.. இன்னும் இருக்கிறது ஒரு லிஸ்ட்.. அதைப் போட்டால் நம் மக்கள் இன்னும் கொதித்து எழுவார்கள்..
வேணாங்க..Blood Suckers..இந்த பற்றி நாம் ஏன் பேச வேண்டும்.
நீங்க சொன்னமாதிரி வேறு பதிவுக்கு மாறிவிடுவோம்.
மற்றபடி இகொ கோபப்படுவது அவருடைய உரிமை.. என்னைப் போலவே! Ha Ha Ha..
கருத்துக்கு நன்றி
செந்தில் அழகு பெருமாள்,
உங்க கருத்துக்கு மிக்க நன்றி!
SivaPa - We would have won if we got 25 runs - that statement alone tells the inability of the side..it is the admission of the team they weren't good enough....
but team cannot be responsible for umpires incompetence (or umpire's different interest)... can you show one single batsman who is better than SRT, Ganguly and Dravid and still discarded by the management?
Same Anony
Mr. Sivapalan
Would you quit your job because there are 1000s of better candidates waiting to be employed outside of your company?
Currently noone to substitute SRT/Gang/Dravid and co
Same Anony again
அதே அனானி,
உட்கார்ந்து யோசிப்பீங்களா?! Ha Ha ha..
நாம் செய்துகொண்டிருக்கும் வேலையும் கிரிகெட் விளையாட்டும் ஒன்று நீங்க சொன்னல் அதை நான் ஒப்புக்கொள்கிறேன்..
சூப்பர்..
Have Great Weekend Buddy!
இதுக்குதான் நான் கிரிக்கெட்டே பாக்குறதில்ல. கிரிக்கெட்னாலே ஒரு பிடித்தமின்மை. இத்தனைக்கும் குடும்பமே உக்காந்து கிரிக்கெட் பாக்கும். நானும் அம்மாவும் மட்டும் பாக்க மாட்டோம். ஆகையால கிழவர்கள் விளையாண்டாலும் கவலையில்லை. அரைக்கிழவர்கள் விளையாண்டாலும் கவலையில்லை. பொதுவா...இந்தியர்கள் கிரிக்கெட் மோகத்தைக் குறைச்சிக்கிறது நல்லது.
சிவபாலன்
நல்லவேளை சனிக்கிழமை நிறைய நேரம் தூங்கிவிட்டதால் மேட்சை பார்க்கவில்லை.
ஐ.சி.எல் போல் ஒரு போட்டி வந்தால் தான் பி.சி.சி.ஐயின் மோனோபொலி ஒழிந்து கிரிக்கட் புதுவாழ்வு பெறும் என நினைக்கிறேன்.
எந்த ஒரு பந்திலும் அவுட் ஆக முடியும் என்பதை நன்கு அறிந்த ஒரு தொழில் முறை ஆட்டக்காரரெனச் சொல்லிக் கொள்ளும் ஒரு பதிவரிடமிருந்தா இப்படி ஒரு பதிவு?
வெட்கமாயும், வேதனையுமாயும் இருக்கிறது!
தனக்கில்லாப் பொருளின்று எவருக்குமில்லாமற் போகட்டும் என்ற மனநிலையையே இது தெளிவாகக் காட்டுகிறது.
உங்கள் மன அமைதியை நீங்கள்தான் பெற வேண்டும்!
பெற வேண்டுகிறேன்!
ஜிரா
நீங்கள் சொன்ன கருத்தை நானும் வழிமொழிகிறேன்.
கருத்துக்கு மிக்க நன்றி!
VSK அய்யா
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!
செல்வன் சார்
உண்மைதான், இது மோனோ பொலி என ஆகிவிட்டது. மாற்று என வந்தால் தான் உண்மையான திறமை வெளிச்சத்திற்கு வரும்.
கருத்துக்கு மிக்க நன்றி!
கிரிக்கட்டில் நடுவரும் எதிரணியுடன் சேர்ந்து விளையாடிவிட்டார் என்று தோல்விக்கு சாட்டு சொல்கிறார்கள்/சொல்கிறீர்கள்.
IAAF- World Championship in Athletics - Osaka, Japan-2007 - Aug-Sep)சர்வதேச தடகள போட்டியில் இந்தியா ஒரு பதக்கம்கூட பெறவில்லையே, ஏன்?????
எத்தியோப்பியா, கென்யா, மிகச்சிறிய நாடான பஹாமஸ் கூட பதக்கங்கள் பெற்றன.
நடுவரின் உதவியுடன் மற்ற நாடுகள் பதக்கத்தை பெற்றுக்கொண்டன என்று சொல்லப் போகிறீர்களா?
சர்வதேச தடகள போட்டிகள் ஒசாகா ஜப்பானில் (2007 - Aug-Sep) நடை பெற்றதைப் பற்றி ஒரு பதிவுகூட வரவில்லை.
இந்தியா கிரிக்கட்டில் மட்டுமல்ல எல்லா விளையாட்டிலும் சொதப்பிக்கொண்டுதான் இருக்கிறது.
கிரிக்கட்டுக்கு வெளியே மிகப் பெரியதோர் விளையாட்டு உலகம் இருக்கிறது என்று இந்தியா எப்போது உணரப்போகிறது????
என்னத்தை சொல்ல. இவ்னுங்கோ எப்பிக்கும் இப்டிதான். அட வுட்டுத்தள்ளு.
ஒரு பத்திரிகை பேட்டியில் வெளிப்படையாக 'அரசியலால் அழிக்கப்பட்ட (அல்லது பழி(லி)வாங்கப்பட்ட ஒரு நல்ல ஆட்டக்காரர் ராபின் சிங்) என்று கபில்தேவ் சொல்லியிருந்ததை படித்திருக்கிறேன்.
என் தமக்கை வீட்டில் கிட்டத்தட்ட 10-12 ஆண்டுகள் முன்பு தொலைக்காட்சிப்பெட்டி வாங்கினது உலகக்கோப்பை கிரிக்கெட் பார்ப்பதற்காகத்தான் என்னும் அளவில் நாங்களெல்லாம் ஆர்வலர்களாக இருந்தோம்.
ஆனால், சூதாட்டம், அரசியல், ஊழல் போன்றவற்றால் மனம் கசந்து கிரிக்கெட்டில் ஆர்வமிழந்துவிட்டதால் உலகக்கோப்பை சமயங்களில் படபடப்பு, எரிச்சல் இவை ஏற்படாமல் இருக்க முடிகிறது.
சமகாலத்தில் சாந்திகள் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதை கேள்விப்படும்போது கொஞ்சமாவது இப்படிப்பட்ட கிரிக்கெட்டர்கள் மேல் நமக்கு ஆத்திரம் வரவில்லையெனில், மன்னிக்கவும், 'விளையாட்டை விளையாட்டாக பார்ப்போம்' என்று வசனம் பேசிக்கொண்டு நம்மை நாமே முட்டாளாக்கிக்கொண்டிருக்கிறோம் என்றுதான் சொல்ல முடியும்.
அன்புடன்
முத்துக்குமார்
Post a Comment
<< Home