Friday, September 14, 2007

SHEDD AQUARIUM, சிகாகோ - படங்கள்

SHEDD AQUARIUM, சிகாகோ, அமெரிக்காவில் உள்ளது. இது John G. Shedd, (retired president of Marshall Field & Company)என்பவரால் மே, 30, 1930ல் உருவாக்கப்பட்டது.
இது மிச்சிகன் ஏரியின் கரையில் அமைந்துள்ளது.


சில குறிப்புகள்.

ஒரு வருடத்திற்கு வரும் பார்வையாளர்கள் : சுமார் 2 மில்லயன்கள்

பரப்பு : 422,000 சதுர அடி.

உயிரினங்கள்: சுமார் 22,000 கடல் வாழ் உயிரினங்கள் காட்சிக்காக வைக்கப்பட்டிருக்கிறது.

காட்சி: டால்பின் காட்சி, ஷார்க் (sharks)காட்சி, அமேசான் பகுதி (Anacondas and Piranhas)

நான் இது வரை ஒரு முறை தான் சென்றுள்ளேன். நுழைவு கட்டணம் அப்படி ஒன்றும் அதிகம் இல்லை.

உள்ளே சென்றவுடன் ஒரு புதிய உலகில் உள்ளது போன்ற உணர்வு ஏற்படும். ஆனால் முழுவதும் ஒரே நாளில் பார்க்க முடியாது. (நீங்கள் பி.டி.உஷா போன்று வேகமாக ஓடினால் மட்டுமே முடியும்).

யாராவது இந்தப் பக்கம் வந்தீங்கன்னா, ஒரு நடை போய் பார்த்துட்டு போங்க.. கொடுத்த காசுக்கும் செலவு செய்த நேரமும் நிச்சயம் வீனாகாது..!



==========================================================


=============================================================


=============================================================


=============================================================


=============================================================


=============================================================


=============================================================


=============================================================


=============================================================


இந்த மீன் அருங்காட்சியகம் பற்றி அறிய "இங்கே செல்லுங்க.. ".

10 Comments:

Blogger Thekkikattan|தெகா said...

சிவா,

இந்தப் புகைப்படங்கள் நீங்கள் எடுத்ததா? நானும் அந்த அருங்காட்சியகத்திற்கு வந்திருக்கிறேன். இன்னும் மனத்தினுள் இருக்கிறது. இப்பொழுது அட்லாண்டாவில் ஒரு மீன்காட்சியகம் பெரிய அளவில் இருக்கிறது, மூன்று முறை போயிருக்கிறேன். நிறைய புகைப்படங்களும் வைத்திருக்கிறேன்... மிக விரைவில் ஒரு பதிவு போட்டு விடுவோம்...

September 14, 2007 10:02 AM  
Blogger வெற்றி said...

படங்களுக்கு நன்றி சிவபாலன்.

/* யாராவது இந்தப் பக்கம் வந்தீங்கன்னா, ஒரு நடை போய் பார்த்துட்டு போங்க.. கொடுத்த காசுக்கும் செலவு செய்த நேரமும் நிச்சயம் வீனாகாது..!*/

சிகாகோ வந்திருந்த போது இங்கும் சென்று வந்திருக்கிறேன்.

சிகாகோவில் உள்ளது போல் இப்போது ரொரன்ரோவிலும் அமைக்கத் திட்டமிட்டுள்ளார்கள்.

இயற்கையை அழித்து காணும் இடமெல்லாம் "கொங்கிறீட்" கட்டிடங்கள் அமைத்து அச் சிறைக்குள் வாழும் நகர மக்களுக்கு இப்படியானவை தேவைதான். :-))

September 14, 2007 10:13 AM  
Blogger இலவசக்கொத்தனார் said...

நானும் அங்க வந்த பொழுது போயிட்டு வந்துட்டேன். டால்பின் காட்சி பார்த்தோம்.

நீங்கள் படம் போட்டு இருக்கும் பென்குயின்களுக்கு உணவு வழங்கும் காட்சியையும் கண்டோம்.

ஒரு நாள் போதாதுதான் முழுவதையும் பார்க்க.

September 14, 2007 10:53 AM  
Blogger சிவபாலன் said...

தெகா

படங்கள் என் கை வண்ணம்தான்.. கொஞ்சம் சுமாராகத்தான் இருக்கும்... :))


நீங்களும் பதிவிடுங்கள்.. படிப்போம்..

வருகைக்கு நன்றி!

September 14, 2007 2:02 PM  
Blogger சிவபாலன் said...

வெற்றி

நீங்களும் பார்த்து இரசித்துள்ளீர்களா!..

நல்லது!

வருகைக்கு நன்றி!

September 14, 2007 2:03 PM  
Blogger சிவபாலன் said...

இகொ,

ஆமாங்க.. ஒரு நாள் போதாது.

என்ன ஒவ்வொரு முறை செல்லும் போதும் பார்க்கிங் பெரிய பிரச்சனையாக உள்ளது.

இரு வாரங்களுக்கு முன், சென்றோம், ஆனால், சோல்சர் பீல்டில் ஜாஸ் இசை விழா என, அங்கே எல்லா பார்கிங் லாட்டும் நிரம்பி வழிந்தன. அதனால் உள்ளே செல்ல முடியாமல் வீடு திரும்பினோம்.

குளிர்காலத்திற்கு முன் எப்படியாவது மீண்டும் ஒரு முறை பார்க்க வேண்டும் என எண்ணியுள்ளேன்..

வருகைக்கு நன்றி!

September 14, 2007 2:06 PM  
Blogger இலவசக்கொத்தனார் said...

காரில் செல்லாமல் தொடர்வண்டி எடுத்துச் செல்லலாமே. நாங்கள் அப்படித்தான் செய்தோம்.

September 14, 2007 2:29 PM  
Blogger துளசி கோபால் said...

சூப்பரா இருக்கும்போல இருக்கு. இன்னும் அந்த சிகாகோப் பக்கம் வரலை.

சான் டியேகோ ஸீ வொர்ல்ட் மட்டும்தான் போய்வந்தேன்.

அது என்ன பாட்டில்நொஸ் டால்ஃபினா?

படங்களுக்கு விளக்கம் போட்டுருக்கலாம்.

September 14, 2007 2:54 PM  
Blogger சிவபாலன் said...

இகொ

அது மாதிரி மாற்று வழிகள்தான் யோசிக்க வேண்டும்..!

எங்க பொன்னு ரொம்ப சுட்டி.. அதனால் தான் எங்க போனாலும் கார்..ம்ம்ம்..

குளிரிக்கு முன் பார்த்துவிடவேண்டும் என்ற பட்டியலில் SHEDD AQUARIUMமும் உள்ளது.

நன்றி!

September 14, 2007 4:00 PM  
Blogger சிவபாலன் said...

துளசி மேடம்,

வாங்க.. ஒரு முறை வந்து பார்த்துட்டு போங்க..

பக்கத்திலேயே The Field Museumமும் இருக்கு.. அதையும் பார்க்கலாம்..

அப்படியே எங்க வீட்டுக்கும் வந்துட்டு போங்க..!

நன்றி!

September 14, 2007 4:03 PM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv