Wednesday, September 26, 2007

வாவ்! கலக்கும் தமிழகம்!!

தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடநூல்களை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.

பள்ளிப் பாடநூல்களை 1970 முதல் தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் வெளியிட்டு வருகிறது. அரசு மற்றும் மானியம் பெறும் பள்ளிகளுக்கு மாநில மொழி பாடத் திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு இலவச பாட நூல்களை வழங்குகிறது.ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள பாடநூல்களை தற்போது இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.

தமிழகம் மட்டுமின்றி வெளிநாட்டினரும் இந்த பாடத்திட்டங்களை பயன்படுத்த "டவுன்லோடு' செய்து கொள்ள முடியும்.

அரசுப் பொது தேர்வுகளுக்கான கடந்த மூன்றாண்டுக்கான வினாத்தாள்கள் இடம் பெற்றுள்ளன.இதன் மூலம் பாடத் திட்டங்களை ஆய்வு செய்யவும், இணைய தளம் வழியாக மற்றவர்களின் கருத்துகளை பெறவும் திட்டமிடப்பட்டுள்ளது.

நன்றி: தினமலர்.


"இங்கே (www.textbooksonline.tn.nic.in)" சென்று அனைத்து பாட நூல்களையும் இலவசமாக டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

47 Comments:

Anonymous Anonymous said...

super duper

September 26, 2007 2:13 PM  
Blogger சிவபாலன் said...

அனானி

வருகைக்கு நன்றி!

September 26, 2007 2:35 PM  
Blogger வற்றாயிருப்பு சுந்தர் said...

ஆஹா. சிவபாலன். தகவலுக்கு நெம்ப தேங்க்ஸ்!

நேரம் கிடைக்கும்போது அப்பப் படிக்காம விட்டதைத் திரும்பப் படிக்கணும்! :-)

September 26, 2007 2:53 PM  
Blogger சிவபாலன் said...

வற்றாயிருப்பு சுந்தர்,

//நேரம் கிடைக்கும்போது அப்பப் படிக்காம விட்டதைத் திரும்பப் படிக்கணும் //


ரீப்பிட்டே!! ஹா ஹா...!

வருகைக்கு மிக்க நன்றி!

September 26, 2007 2:56 PM  
Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சிவபாலன்
மிக நல்ல செய்தி!
தமிழ் படிக்க வேண்டியுள்ளது.

September 26, 2007 3:05 PM  
Blogger சிவபாலன் said...

யோகன் அண்ணா,

வருகைக்கு மிக்க நன்றி!

September 26, 2007 3:09 PM  
Blogger வெட்டிப்பயல் said...

அருமை...

பத்தாவது தமிழ் புத்தகம் படிக்க ஆரம்பிச்சேன்...

கேள்வி பதில் எல்லாம் பார்த்தாலே வயித்துல புளிய கரைக்குது :-)

September 26, 2007 3:11 PM  
Blogger சிவபாலன் said...

பாலாஜி,

வாங்க!

//பத்தாவது தமிழ் புத்தகம் படிக்க ஆரம்பிச்சேன்...//

அட!! நானும்தாங்க..! ஹா ஹா..

வருகைக்கு மிக்க நன்றி!

September 26, 2007 3:15 PM  
Blogger ஜீவி said...

முதல் நன்றி தமிழக அரசின் கல்வித்துறைக்கு,
அடுத்த நன்றி அருமை சிவபாலனுக்கு,
--பாடப்புத்தக சுட்டி கொடுத்தமைக்கு.
ஆர்வத்தோடு 12 வகுப்பு துணைப்பாடம் முழுதும் பார்த்துவிட்டேன்.
முதல் இரண்டுபாடங்களில் அடுத்து அடுத்து பிள்ளைமார்கள்:-
1.புதுமைப்பித்தனின் "பால்வண்ணப்பிள்ளை"
2.வல்லிக்கண்ணணின் "மூக்கப்பிள்ளை
வீட்டு விருந்து"
செய்யுள் பகுதியில்---
கடவுள் வாழ்த்து:'இராம காவிய' கம்பரின் "உலகெலாம் உணர்ந்து..."
கல்வித்துறையைச் சுதந்திரமாகச்
செயல்பட வைத்த தமிழக அரசை
வாழ்த்துவோம்!
புலம் பெயர்ந்த தமிழர்களின் குழந்தை
களுக்கு அரிய வாய்ப்பு.
தயவுசெய்து சின்ன வயசிலேயே குழந்தைகளூக்கு வண்ணப்படங்களோடு
இருக்கும் இந்தப் புத்தகங்களின் துணையொடுதமிழ்ச்சொல்லிக்
கொடுங்கள்.
வாழ்க நற்றமிழ்!
வாழ்க செந்தமிழ்நாடு!

September 26, 2007 3:30 PM  
Blogger சிவபாலன் said...

ஜீவி,

ஆமாங்க..! வெளி நாட்டில் வாழும் தமிழர்களுக்கு இது பெறும் உதவியாக இருக்கும்.

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!

வருகைக்கு நன்றி!

September 26, 2007 3:35 PM  
Blogger ஜீவி said...

சிவபாலன்,
கடவுள் வாழ்த்துக்கு கம்பரின்
பாடலை "உலகம் யாவையும்..."
என்று திருத்திப்படிக்க வேண்டுகிறேன்.
அவசர ஆர்வத் தவறுக்கு வருந்துகிறேன்.

September 26, 2007 3:48 PM  
Blogger சிவபாலன் said...

ஜீவி,

நானும் நீங்க குறிப்பிட்ட பாடல் "உலகெலாம் உணர்ந்து".. பற்றி ரொம்ப நேரம் யோசித்துக் கொண்டிருந்தேன்..

மிண்டும் வந்து கருத்து பகிர்தலுக்கு மிக்க நன்றி!

September 26, 2007 3:51 PM  
Blogger வவ்வால் said...

சிவபாலன்,
தகவலுக்கு நன்றி!
நான் எங்கள் ஊரில் இருந்த வரைக்கும் பள்ளி புத்தகம் எனினும் இப்போது புதிதாக பசங்க என்ன தான் படிக்கிறாங்க என தெரிந்து கொள்ள பள்ளிப்புத்தகங்களை வாங்கி ஒரு பார்வை பார்ப்பேன். தற்போது அதற்கு வாய்ப்பில்லாமல் இருந்தது. இணையத்தில் பாடப்புத்தங்களை போட்டு தமிழக அரசு மிக அரிய உதவியை செய்துள்ளது. அரசின் முற்போக்கான சில பலன் அளிக்கும் செயல்களில் இதுவும் ஒன்று!

September 26, 2007 4:06 PM  
Blogger அறிவன் /#11802717200764379909/ said...

Hi,
Very good information.
Any other state had followed it?

September 26, 2007 5:00 PM  
Blogger அறிவன் /#11802717200764379909/ said...

Also if they could havd published Hindi material in language sector,even people who want to learn hindi from level 1 can learn !!!!!!!

September 26, 2007 5:01 PM  
Blogger ரவிசங்கர் said...

தகவலுக்கு நன்றிங்க.

அறிவன் - ஏற்கனவே இது போல் கேரளம் தன் பாடப்புத்தகங்களை வெளியிட்டிருக்கிறது.

September 26, 2007 7:04 PM  
Blogger நற்கீரன் said...

தகவலுக்கு மிக்க நன்றி. மிகவும் பயனுள்ள தகவல்.

நேற்றுத்தான் இப்படி ஒன்று நடக்காதா என்று பல தமிழ் விக்கிபீடியாவில் அலசிக் கொண்டிருந்தார்கள். இன்று, இந்த தகவல்.

கட்டற்ற கல்வி, அதுவும் தமிழில், இதற்கு உழைத்த அனைவரையும் பாராட்ட வேண்டும்.

நன்றி.

September 26, 2007 7:20 PM  
Blogger கோவி.கண்ணன் said...

//தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடநூல்களை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.//

சிபா,

மீண்டும் பள்ளிக்குப் போகலாம்...நம்மை நாம் அங்கே தேடலாம்.
:))

September 26, 2007 7:20 PM  
Blogger பிரபு ராஜதுரை said...

very very useful effort...thanx fr the information.

September 26, 2007 7:38 PM  
Blogger அருண்மொழி said...

மிக மகிழ்ச்சியான செய்தி.

சிறந்த முறையில் செயல்பட்டு வரும் அமைச்சர் தங்கம் தென்னரசுவிற்கு ஒரு "ஓ" போடுவோம்.

September 26, 2007 7:49 PM  
Blogger கூமுட்டை said...

கலக்கல். ரொம்ப நன்றிங்க.

September 26, 2007 7:55 PM  
Anonymous Anonymous said...

Hi,
VERY USEFUL INFORMATION. THANK YOU!!!

September 26, 2007 8:05 PM  
Anonymous Nakkeeran said...

really good news..புலம் பெயர்ந்த தமிழர்களின் குழந்தை
களுக்கு..

September 26, 2007 8:19 PM  
Blogger SurveySan said...

சூப்பருன்னு சொல்லத் தான் தோணிச்சு.

ஆனா, யாருக்கு இதனால் பலன்?

புரியலயே?

September 26, 2007 8:35 PM  
Blogger சிவபாலன் said...

சர்வேசன்,

கீழே செய்தி பாருங்க..!

புதிய இணைய தளத்தை தொடங்கி வைத்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில்,

தற்போது 1150 மேனிலைப்பள்ளிகளிலும், 1500 உயர்நிலைப்பள்ளிகளிலும் கம்ப்யூட்டர் லேப்கள் அமைக்கப்பட உள்ளன.
அவற்றில் இந்த பாட நூல்களை மாணவர்களும், ஆசிரியர்களும் பார்க்கலாம். மேலும் பள்ளிப் பாடத்திட்டம் 5 ஆண்டுக்கு ஒரு முறைதான் திருத்தம் செய்யப்படுகின்றன.
ஆனால் தேவைக்கேற்ப அவற்றில் ஆண்டுதோறும் மாறுதல்களை கொண்டு வருவதற்காக பாடத்திட்ட மேம்பாட்டு அமைப்பு ஒன்றை ஏற்படுத்த அரசு முயற்சி எடுத்து வருகிறது என்றார்.

------

இது மட்டுமின்றி இனைய பயன்பாடுகள் எவ்வளவு உதவும் என நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை.

பாட புத்தங்கள் தாமதம் ஆகும் போது இது பேருதவியாக இருக்கும் என்பது என் எண்ணம்.

நன்றி!

September 26, 2007 8:45 PM  
Blogger SurveySan said...

//தற்போது 1150 மேனிலைப்பள்ளிகளிலும், 1500 உயர்நிலைப்பள்ளிகளிலும் கம்ப்யூட்டர் லேப்கள் அமைக்கப்பட உள்ளன.
அவற்றில் இந்த பாட நூல்களை மாணவர்களும், ஆசிரியர்களும் பார்க்கலாம்//

ஹ்ம். எனக்கு இது பெரிய விஷயமா தெரியல.
எப்படியும், ப்ரிண்டட் புத்தகம் எல்லார் கிட்டயும் இருந்தாகணும். கம்ப்யூட்டர் லேபுக்கு, ஒரு நாளைக்கு ஒரூ க்ளாஸுக்குத்தான் போவாங்க. பொழுதன்னைக்கும் அங்க இருக்க முடியாது.
வீட்டிலும் இருக்காது.

10 வருஷம் கழிச்சு வேணா இது,ப்ரயோஜனமான திட்டமா இருக்கலாம். எல்லா மாணவன் கிட்டயும், லேப்பி வரும்போது.

இப்ப தேவை, அனைத்து மாணவனுக்கும் இலவச பாட புத்தகங்கள். (ஏற்கனவே தரப் படுவதில்லைன்னா)

Seriously, the more I think about this, the more I think, its not that great of an idea, at this time :)

no?

September 26, 2007 9:45 PM  
Blogger SurveySan said...

well, nice topic for a survey though ;)

September 26, 2007 9:45 PM  
Blogger ஜோ / Joe said...

அமைச்சர் தங்கம் தென்னரசு-க்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

September 26, 2007 9:51 PM  
Blogger சிவபாலன் said...

சர்வேசன்,

சில பள்ளிகளுக்கு நிர்வாக சிக்கலால் பாட புத்தகங்கள் தாமாகத்தான் கிடைக்கிறது. அங்கே இது உதவியாக இருக்கும்.

அது மட்டுமின்றி, புலம் பெயர்ந்து வாழ்பவர்களுக்கு இது உதவி புரியும்.

மேலும் நமது பாடதிட்டங்களை பற்றி உலகில் அனைவருக்கும் நிச்சயம் உதவி புரியும்.

இனையம் என்பது கட்டற்ற ஒரு ஊடகம். அதில் பயன் இல்லை என்பது என்க்கு வியப்பளிக்கிறது.

பழைய வினாத்தாள்களும் இதில் வைக்க உள்ளனர்.

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

September 26, 2007 9:53 PM  
Blogger K.R.அதியமான். 13230870032840655763 said...

Great Work.

and Surverysan,

Obviously you haven't stood in the hot sun in long q's to buy the text books as it happens every year when there is acute shortage, esp in the mofussils. i have stood in the que many times.

this online text is a great boon for many, when they cannot get them easily in schools or bazars.
esp in the beginning of the acedemic year, when the huge demand is not met by prompt supply.

September 26, 2007 9:59 PM  
Blogger SurveySan said...

சிவபாலன், இணையத்தில் புக்ஸ் ஏற்றப்படுவதால், கிடைக்கும் நன்மைகள் பலப் பல என்பது ஒரு பக்கம் நல்லாவே புரியுது.

ஆனா, இந்த திட்டம் ஆரம்பிச்சதுக்குக் காரணம், மாணவனுக்கு, ஈ.புக்கா படிக்கலாம்னுதானே?

புக்கே காலதாமதமா போற பள்ளிக்கூடங்களில், இணைய வசதி எங்கேருந்து இருக்கப் போவுது? இருந்தாலும் ஒண்ணு ரெண்டு பி.ஸி இருக்கலாம். அதுவும், ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம்தான் கிட்டும்.

டீப்பா திங்க் பண்ணிப் பாத்தா, எனக்கு இதன் தற்காலப் ப்ரயோஜனம் புரியல்ல. அதான் கேட்டேன்.

லூஸ்ல விடுங்க, எனக்கு புரிஞ்சு என்னாகப் போவுது ;)

பி.கு சர்வே போட்டு தெரிஞ்சுக்கறேன். :)

September 26, 2007 10:03 PM  
Blogger வவ்வால் said...

சிவபாலன்,

சர்வேசன் ஒரு மேதாவி அதான் இப்படி சொல்கிறார்,
//Seriously, the more I think about this, the more I think, its not that great of an idea, at this time :)

no?//

தமிழ் நாட்டு மாணவர்கள் புத்தகங்கள் வாங்கி விடுவார்கள் ஆனால் மற்றவர்களுக்கும் இது பயன்படும்.இன்னும் சொல்லப்போனால் அயல் நாட்டில் இருப்பவர்களின் குழந்தைகளுக்கு பயன்படும். விருப்பப்பட்டால் அங்கே இந்த பாடங்களை இணையத்தில் படித்து விட்டு தமிழ் நாட்டுக்கு வந்து தனித்தேர்வர்களாக தேர்வு எழுதவும் முடியுமே!

போட்டித்தேர்வு எழுதுபவர்களைக் கேட்டுப்பார்க்க சொல்லுங்கள் , சி.பி.எஸ்.இ, ஐ.எஸ்.சி, மாநில பாடத்திட்டம் என அனைத்து புத்தகங்ளும் தேவைப்படும். நானே ஒரு காலத்தில் இப்படி பல பாடத்திட்ட புத்தகங்களும் வாங்கிப்படித்தவன் தான்(எத்தனைக்கடை ஏறி இருப்பேன் என்பது எனக்கு தான் தெரியும், பள்ளிதுவக்க காலங்களில் மட்டும் தான் புத்தகம் கிடைக்கும் அப்புறம் கிடைக்காது அப்போதெல்லாம்). இப்படி இணையத்தில் இருந்தால் அலையாமல் எளிதாக அதுவும் இலவசமாக படிக்கலாம்.

September 26, 2007 10:03 PM  
Blogger முத்துலெட்சுமி said...

உபயோகமான தகவல் ...
நன்றி சிவபாலன்.

September 26, 2007 10:45 PM  
Blogger ரவிசங்கர் said...

சர்வேசன், உங்கள் புரிதல் வியப்பளிக்கிறது. இது மாதிரி வெளியிடமாட்டார்களா என்று பல நண்பர்கள் எதிர்ப்பார்த்திருந்தோம்.

பலன்கள்:

1. சிவபாலன் சொன்னது போல், பாடப்புத்தகம் தாமதமாகும் போது இதில் பெற்றுக் கொள்ளலாம்.
2. பாடத்திட்டத்தில் திருத்தங்களை இங்கு உடனுக்குடன் வெளியிடலாம். 3. cbse, matric முறையில் இருப்போர் தங்கள் பாடத்திட்டம் தவிர, பிற பாடத்திட்டங்களைக் கலந்தாலோசிக்க விரும்புவோர் அதற்காக காசு கொடுத்து புத்தகம் வாங்காமல் இணையத்தில் பார்க்கலாம். state boardல் 1st groupல் படிப்போர் கூட அடுத்த பிரிவின் முழுமையான தாவரவியல், விலங்கியல் பாடங்களைப் புரட்டிப் பார்க்கலாம்.
4. சென்ற ஆண்டுப் பாடங்களைப் பார்க்க விரும்புவோருக்கு உதவும்.
5. பிற மாநிலப் பாடத்திட்டக் குழுவுக்கு நம் பாடத்திட்டத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியும். குறிப்பாகப், பிற மாநிலங்களில் தமிழ்ப் பாடம் நடத்துவோர் நம் பாடங்களைப் பார்த்துக் கொள்ள முடியும்.
6. இலங்கை, மலேசியா போன்ற நாடுகளில் முழுக்கத் தமிழ் வழியக் கல்வி பயில்வோர் நம்மோடு ஒப்பு நோக்கியும் ஒருங்கிணைந்தும் செயல்பட உதவும். கலைச்சொல்லாக்கத்தில் ஒத்திசைவு, பாடத்திட்ட இற்றைப்படுத்தத்துக்கு உதவும்.
7. புலம்பெயர்ந்த தமிழர், இந்தியாவில் பிற மாநிலத்தில் உள்ள தமிழர் தங்கள் பள்ளிப் பாடங்களைத் திருப்பிப் பார்க்கவும் தங்கள் குழந்தைகளுக்குத் தமிழ் கற்பிக்கவும் தமிழில் கற்பிக்கவும் உதவும்.
8. இணையத்தில் இது குறிப்பிடத்தக்க தமிழ் உள்ளடக்கம். பொழுதுபோக்கு, செய்திகள் தவிர தமிழில் தகவலுக்காகவும் இணையத்தை அணுகுவார்கள். பயனுள்ள உள்ளடக்கம் இல்லாமல் இணையத்தில் பயன் குறைவானதே.
9. என்னைப் போல் ஆங்கில வழியத்தில் பயின்ற பலருக்குத் தமிழில் கலைச்சொற்களைக் கற்க உதவும். விக்கிபீடியா போன்ற தளங்களில் கட்டுரை எழுதுவோருக்கு பெரிதும் உதவும்.
10. முக்கியமாக, தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தின் வெளியீடுகள் மக்கள் சொத்து. அது உலகில் உள்ள எந்த ஒரு தமிழனுக்கும் இலவசமாகக் கிடைப்பதாக இருப்பது மிகப் பொருத்தம்.

இதைச் செய்வதால் அரசுக்கு ஒரு நட்டமும் இல்லை. ஆடம்பரமும் இல்லை. ஆனால், பலன்கள் ஒரு சிலவாவது இருந்தால் நல்லது தானே. எதற்கு எடுத்தாலும், இதனால் என்ன ஆகப் போகிறது என்ற மனப்பான்மை தேவை இல்லை. தகுந்த சமயங்களில் அரசைப் பாராட்டவும் வேண்டும்.

September 27, 2007 3:49 AM  
Blogger Dr.Sintok said...

"6. இலங்கை, மலேசியா போன்ற நாடுகளில் முழுக்கத் தமிழ் வழியக் கல்வி பயில்வோர் நம்மோடு ஒப்பு நோக்கியும் ஒருங்கிணைந்தும் செயல்பட உதவும். கலைச்சொல்லாக்கத்தில் ஒத்திசைவு, பாடத்திட்ட இற்றைப்படுத்தத்துக்கு உதவும். "

கண்டிப்பாக...........பயன்யுள்ளதாக உள்ளது.

மலேசியாவில் இனிமேல் முழுக்கத் தமிழ் வழியக் கல்வி இல்லை....

கணிதம் மற்றும் அறிவியல் இனி இங்கு அனைத்து(தமிழ் , மாலாய் மற்றும் சீன) பள்ளிகளில் ஆங்கிலத்தில் போதிக்கப் படும்.

September 27, 2007 7:58 AM  
Blogger மங்கை said...

\\வற்றாயிருப்பு சுந்தர் said...
ஆஹா. சிவபாலன். தகவலுக்கு நெம்ப தேங்க்ஸ்!

நேரம் கிடைக்கும்போது அப்பப் படிக்காம விட்டதைத் திரும்பப் படிக்கணும்! :-)\\\

yes....i repeat..:-))

September 27, 2007 8:02 AM  
Blogger வற்றாயிருப்பு சுந்தர் said...

இதுக்கு எதாவது Suggestions தெரிவிக்கணும்னா எங்கிட்டுச் சொல்றது? தனித்தனி Chapter-ஆ இருக்கறதை ஒரே PDF-ஆ போட்டாங்கன்னா இன்னும் பலனுள்ளதா இருக்கும். எல்லாப் பக்கத்தையும் Scan பண்ணி வலையேத்திருக்காங்க. உண்மையான Interactive e-book-ஆ இருந்தா இன்னும் சிறப்பாக இருக்கும்.

ஏதோ இந்தளவுக்காவது செய்திருக்கிறார்களே என்பதில் மகிழ்ச்சி.

September 27, 2007 8:39 AM  
Blogger Sathia said...

உபயோகமான தகவலுக்கு நன்றி சிவபாலன்.
இன்னும் என்னென்ன இருக்கு அந்த தளத்துலனு பாக்கணும்.
ஒண்ணாங்கிளாஸ் இப்போதான் ஆரம்பிச்சு இருக்கேன்;-)

September 27, 2007 8:43 AM  
Blogger Boston Bala said...

நன்றி சிபா

September 27, 2007 8:51 AM  
Blogger Boston Bala said...

ரவிசங்கர் ...

உங்கள் பின்னூட்டத்தை ஒரு பதிவாக சேமித்து வையுங்களேன்.

September 27, 2007 8:52 AM  
Blogger அமிழ்து said...

உபயோகமான தகவல்! மலையாளம் ஒன்றாம் வகுப்பிலிருந்து படிக்க ஆரம்பித்திருக்கேன்!

September 27, 2007 9:23 AM  
Blogger சிவபாலன் said...

வவ்வால்,அறிவன் ,ரவிசங்கர் ,நற்கீரன், ஜிகே, பிரபு ராஜதுரை சார், அருண்மொழி, கூமுட்டை, கருமுகில் , Nakkeeran, ஜோ ,K.R.அதியமான், முத்துலெட்சுமி , Dr.Sintok, மங்கை , Sathia, பாபா, அமிழ்து


தங்கள் அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

September 27, 2007 10:59 AM  
Blogger குமரன் (Kumaran) said...

பயனுள்ள வலைப்பக்கத்தைக் காட்டியதற்கு மிக்க நன்றி சிவபாலன்.

September 27, 2007 11:18 AM  
Blogger KARTHIKRAMAS said...

FYI
http://masivakumar.blogspot.com/2007/09/blog-post_27.html#comment-8853881197642323059

September 27, 2007 2:18 PM  
Blogger ரவிசங்கர் said...

பாஸ்டன் பாலா, மறுமொழியை என் பதிவில் ஒரு இடுகையாக இட்டிருக்கிறேன்.. (எல்லாம் icarus prakash காட்டிய வழி :) )

September 27, 2007 7:46 PM  
Blogger K.R.அதியமான். 13230870032840655763 said...

////ஆனா, இந்த திட்டம் ஆரம்பிச்சதுக்குக் காரணம், மாணவனுக்கு, ஈ.புக்கா படிக்கலாம்னுதானே?///

Surveysan,

i forget add that these e-books can be printed out, xeroxed and distributed cheaply and easily as and when needed. no need for computers or net connection for all. or the relevent chapters alone can be printed, xeroxed and distributed in emergency. that is the basic purposes of e-books...

TN govt could have done it much earlier...

September 27, 2007 9:26 PM  
Blogger சிவபாலன் said...

குமரன், கார்த்திக்ராமாஸ் ரவிசங்கர், அதியமான்,

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

September 28, 2007 9:21 PM  

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv