Friday, September 28, 2007

வடவழி - வடவள்ளி - கரிகாற் சோழன்

இன்று குமுதம் வலைதளத்தை பார்வையிடும் போது வைரமுத்து பதில்களைப் பார்த்தேன். அதில் ஊர் பெயர்கள் எவ்வாறு மறுவுகிறது என்பதைப் பற்றி விளக்கியிருந்தார். உதாரணத்திற்கு

சிராப்பள்ளி’ என்பது ஊரின் பழம்பெயர். இடைக்காலத்தில் ‘‘திரு’’ வென்ற அடைமொழி இணைந்து ‘திரு சிராப்பள்ளி’ என்றாகி ‘திருச்சிராப்பள்ளி’ என்று வளர்ந்து, ‘திருஸ்னாப்பள்ளி’ என்று ரயில்வே மொழியாகி ‘‘திருச்சி’’ என்று சுருங்கி ‘‘ட்ரிச்சி’’ என்று ஆகிவிட்டது என குறிப்பிட்டிருந்தார்.


இதைப் படித்தவுடன் எனக்கு எங்கள் ஊர் பெயர் எவ்வாறு மறுவுயது என்பதை இங்கே பகிர வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அதன் விளைவே இதன் இடுக்கை.

எங்கள் ஊர் வடவள்ளி, கோவை மாவட்டத்தில் மருதமலை செல்லும் வழியில் உள்ளது.

உண்மையில் இதன் பெயர் வடவழி. அதாவது வடக்கு வழி. காலப் போக்கில் இது வடவள்ளி ஆகிவிட்டது. இன்னும் பழைய பத்திரங்கள் ஏடுகளில் இது வடவழி என்றே வழங்கப்படுகிறது.

ஆனால் அது மறுவி வடவள்ளி என மாறிவிட்டது.

சரி, அது என்ன வடவழி.

கோவையில் பேருர் எனும் ஊரில் சிவன் கோவில் உள்ளது. பட்டிஸ்வரன் எனும் பேரில் வணங்கப்பட்டு வருகிறது. இந்த கோவில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன் கரிகாற் சோழனால் கட்டப்பட்டது. அதைத் தொடந்து கோசல மன்னர்களாலும் விஜய நகரப் பேரரசினாலும் அந்த கோவில் முழுமை பெற்றது. ( அந்த தலத்தின் தல புராணம் எனக்கு சரியாக தெரியாது. தெரிந்தவர்கள் பகிர்ந்துகொள்ளுங்கள்.)



அந்த காலகட்டத்தில் பேருர் மற்றும் அதன் சுற்றிய பகுதிகள் மிகப் பெரிய வனம். இதன் குறிப்பு தேவாரப்பாடல்களிலும் உள்ளது.

இந்த கோவில் கட்டுவதற்கு தேவையான கற்கள் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளன. அதாவது அந்த ஊரிலிருந்து வடக்குப் பகுதியில் கணவாய் (கணுவாய்) எனும் மலைப் பகுதியிலிருந்து தான் கற்களைக் கொண்டு வரமுடியும். அந்த மலையை அடைய வடவழியாகத்தான் செல்ல வேண்டும். அந்த மலையிலிருந்து கொண்டுவந்த கற்களை தரம் பிரித்து எடுத்துச் செல்ல சிற்பிகள் அமைத்து தங்கிய ஊர்தான் வடவழி.

இது பேருர் வரலாற்று குறிப்பில் இருப்பதாக கேள்வி.




இந்த செய்தி முழுக்க முழுக்க எனது தாத்தா என்னிடம் பகிர்ந்தது. இதன் நம்பகத்தன்மை பற்றி எனக்கு தெரியாது. அதற்கான முயற்சிகளை நான் இதுவரை செய்யவில்லை.

இந்த செய்திக்கு மாற்று கருத்து இருப்பின் வரவேற்கிறேன்.

நன்றி

இது சம்பந்தமான சுட்டிகள்:

"வடவள்ளி - ஆங்கில விக்கிபீடியா"

"பேருர் பற்றிய செய்தி - 1"

"பேருர் பற்றிய செய்தி - 2"

9 Comments:

Blogger கோவி.கண்ணன் said...

//சிராப்பள்ளி’ என்பது ஊரின் பழம்பெயர். இடைக்காலத்தில் ‘‘திரு’’ வென்ற அடைமொழி இணைந்து ‘திரு சிராப்பள்ளி’ என்றாகி ‘திருச்சிராப்பள்ளி’ //

பள்ளி என்பது ஒரு குறியீட்டுச் சொல். பள்ளி என்று முடியும் ஊர்கள் அனைத்திலும் பெளத்த மற்றும் சமண பள்ளிகள் (மடங்கள்) இருந்தனவாம்.

//அந்த தலத்தின் தல புராணம் எனக்கு சரியாக தெரியாது. தெரிந்தவர்கள் பகிர்ந்துகொள்ளுங்கள்//

சிபா,
தல புராணங்களில் 90 விழுக்காடு 'கனவில் தோன்றி இறைவன் சொன்னதாகத்தான்' இருக்கும். தலபுராணங்கள் உள்ள அந்த ஊர்களும், கோவில்களும் ஆகமப்படி அமைக்கப்பட்டு இருக்கும். அடுத்து எங்காவது சென்றால் கவனியுங்கள்.

September 28, 2007 10:25 AM  
Blogger சிவபாலன் said...

ஜீகே,

//'கனவில் தோன்றி இறைவன் சொன்னதாகத்தான்' இருக்கும். //

உங்கள் ஊகம் ஓரளவு சரியாகத்தான் இருக்கும்.

//ஆகமப்படி அமைக்கப்பட்டு இருக்கும். //

உண்மைதான்.

September 28, 2007 10:31 AM  
Blogger சிவபாலன் said...

ஜிகே

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

September 28, 2007 10:32 AM  
Blogger கோவி.கண்ணன் said...

//உங்கள் ஊகம் ஓரளவு சரியாகத்தான் இருக்கும்.//

ஊகமெல்லாம் இல்லைங்க சிபா, அவைகளை பார்த்தது, படித்தது தான். அந்த சிவன் கோவில்கள் சைவ மூவர்களாலும், பெருமால் கோவில்கள் வைணவர்களாலும் பாடல் பெற்ற தலமாகவும் இருக்கும்.

September 28, 2007 10:36 AM  
Blogger சிவபாலன் said...

ஜீகே,

// பள்ளி என்பது ஒரு குறியீட்டுச் சொல். பள்ளி என்று முடியும் ஊர்கள் அனைத்திலும் பெளத்த மற்றும் சமண பள்ளிகள் (மடங்கள்) இருந்தனவாம். //

நல்ல தகவல்.

ஓகோ, சமண மதத்தின் ஊரில் திரு வை இனைத்துவிட்டாகள்.

சரியா?!

வரலாறு மிக முக்கியம்.

September 28, 2007 10:37 AM  
Blogger வெற்றி said...

சிவபாலன்,
நல்ல சுவாரசியமான பதிவு. அதிகமான தமிழ் ஊர்ப் பெயர்கள், அது தமிழகமாக இருந்தாலும் சரி, ஈழமாக இருந்தாலும் சரி, காரணப் பெயர்களாகவே இருக்கின்றன.

இக் காரணப் பெயர்களை ஆராய்ந்து பதிவு செய்து வைப்பது மிகவும் அவசியம்.

ஈழத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள அதிகமான ஊர்கள், நகரங்களின் பெயர் வரலாறுகளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியராக இருந்த திரு.பாலசுந்தரம் ஆய்வு செய்து நூலாக வெளியிட்டிருந்தார்.

அதுபோல தமிழக ஊர் பெயர் வரலாறுகளும் பதியப்பட வேண்டியது மிகவும் அவசியம்.

September 28, 2007 11:15 AM  
Blogger சிவபாலன் said...

வெற்றி,

வாங்க!

ஆமாங்க இந்த காரணப் பெயர்களை ஆவணப்படுத்துவதும் முக்கியம்.

// ஈழத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள அதிகமான ஊர்கள், நகரங்களின் பெயர் வரலாறுகளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியராக இருந்த திரு.பாலசுந்தரம் ஆய்வு செய்து நூலாக வெளியிட்டிருந்தார்.//

நல்ல விடயம்.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

September 28, 2007 1:47 PM  
Blogger Unknown said...

சிவபாலன்

நல்ல தகவல்கள்.வடவழி தான் வடவள்ளி என்று ஆனதா?நான் இத்தனை நாளும் மருதமலை அருகே இருப்பதால் வள்ளிக்கு அங்கே எதேனும் கோயில் இருந்து வடவள்ளி என ஆனது என நினைத்து கொண்டிருந்தேன்.

October 01, 2007 10:05 AM  
Blogger சிவபாலன் said...

செல்வன் சார்,

நீங்கள் அடுத்த முறை செல்லும் போது ஏதாவது பெயர் பலகையை பாருங்கள். வடவழி என எழுதியிருப்பார்கள்.

எங்கள் வீட்டு பத்திரம் கூட வடவழி எனத்தான் இருக்கும்.

ஏனோ, அதை வடவள்ளி என மறுவி விட்டனர்.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

October 01, 2007 10:10 AM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv