Monday, October 01, 2007

தேறவே தேறாது..!

கீழே இருக்கும் செய்தியைப் பாருங்க.. சிரிப்பதா அழுவதா எனத்தெரியவில்லை. இது போன்று "இந்து" மத அமைப்பின் தலைவர் ஒருவரும் சொன்ன மாதிரி நியாபகம்.

சீனாக்காரன் என்னடான்னா எகப்பட்ட கெடுபிடி செய்து மக்கள் தொகையை குறைத்துக்கொண்டு இருக்கிறான். அங்கே மதங்களுக்கு இது போன்று மக்களைக் குழப்பும் வேலை இல்லை. அதனால் ஒரு வேலை இந்த விடயம் சீன அரசுக்கு எளிதாகிறது.

பிறப்பவன் அனைவரும் இந்தியன் தான். 130 கோடிக்கு மேல் இருக்கிறோமே.. அது பத்தாதா?

மத வாதிகளே கொஞ்சம் யோசியுங்க.. ப்ளீஸ்.. (இதனால் தான் மதங்களே வேணாம் என சொல்லறது..ம்ம்ம்ம்)


===============================================================
அதிக குழந்தை பெறுங்கள்' கிறிஸ்தவர்களுக்கு கடிதம்

திருச்சூர் : "அதிக குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள்; குழந்தைப் பேறு, இறைவன் நமக்கு கொடுத்துள்ள பாதுகாப்பு கேடயம்' என்று, கிறிஸ்தவர்களுக்கு ஆர்ச் பிஷப் கடிதம் எழுதியுள்ளார்.

கேரளாவில், கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. 1950ம் ஆண்டில், 24 சதவீதமாக இருந்த கிறிஸ்தவர், இப்போது 19 சதவீதமாக குறைந்துவிட்டனர். இதனால், கேரளாவில் உள்ள கிறிஸ்தவ மத தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்திய துணை கண்டத்தில், முதலில் செயின்ட் தாமஸ் காலடி வைத்தது திருச்சூர் தான். அதனால், இந்தியாவில் கிறிஸ்தவ மதம் பரவ, கேரளா முக்கிய காரணமாக கருதப்படுகிறது. அதனால், அங்கு, கிறிஸ்தவர் எண்ணிக்கை குறைந்துவிடக்கூடாது என்று மதத்தலைவர்கள் மிகுந்த அக்கறையுடன் உள்ளனர்.


செய்தி: தினமலர்.
நன்றி!

10 Comments:

Blogger கோவி.கண்ணன் said...

மதங்களும், மதவேற்றுமைகளும் மண்ணில் இப்படியே நிலைத்திருக்க வேண்டும் என்று நினைக்கும் மனப்பாண்மையன்றி வேறு என்ன ?

சாதிவெறி, மத அடிப்படை வாதம் எல்லாமே ஒன்றுதான்.

மதவாதிகள் சாதி அழுக்கை கண்டும் காணாமல் இருப்பதற்கு காரணமே, தம்மீது உள்ள அழுக்கு தெரிந்துவிடும் என்பதால் தான்.
:(

October 01, 2007 9:24 AM  
Blogger மாசிலா said...

கூடவே எப்படி குழந்தை பெற்றுக்கொள்வது பற்றிய படத்துடன் கூடிய விளக்கவுரை கொடுத்திருக்கலாம்!...

";-D"

மொதல்ல இந்த சாமியார்களை உதாரணம் காட்ட சொல்லனும்!

காம உணர்வுகளை தூண்டியதாக பொது நல வழக்கு போடலாமா?

மத பிரச்சினைகள் எதுவரைக்கும் பாயுதுங்க பாருங்கய்யா! எந்தெந்த உருவத்திலேயோ பாயுதுங்க பாருங்க!

இதிலிருந்து தெரியும் இன்னொரு உண்மை என்னென்னவென்றால், மத நம்பிக்கை உடைய பெற்றோர்கள் தாங்கள் பெறப்போகும் பிள்ளைகள் இவ்வுலகத்திற்கு வருமுன்னையே மதவாதிகள் தங்கள் தேவைகளுக்காக அவைகளை சுவீகாரம் எடுத்துக் கொள்கின்றனர். சிசுக்களின் மூளை அக்கிரமிக்கப் படுகின்றன. பெற்றோர்கள் பிள்ளை பெறும் வெறும் ஒரு இயந்திரமாகவே கருதப்படுகின்றனர்.

இந்த சாமியார்கள், தானும் வாழ மாட்டார்கள், மற்றவர்களையும் வாழ விடமாட்டார்கள்.

பைத்தியக்கார உலகமடா சாமி!

October 01, 2007 9:26 AM  
Blogger சிவபாலன் said...

ஜீகே

இரத்தின சுருக்கமாக சொல்லிவிட்டீர்கள்.

அருமை.

மனிதன் மனிதனாக வாழும் நாள் எப்போது.. பறவைகள் விலங்குகளுக்கு இருக்கும் சுதந்திரம் கூட மனிதனுக்கு இல்லை. சாதி மததத்தில் கட்டுண்டு கிடக்கிறான்.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

October 01, 2007 9:28 AM  
Blogger சிவபாலன் said...

மாசிலா,

சும்மா நச் என்று சொல்லிட்டீங்க..!

// பைத்தியக்கார உலகமடா சாமி! //

உண்மைதான்.

மதங்கள் இந்தியாவிற்கு இருக்கும் மிகப் பெரிய சவால்.ம்ம்ம்ம்...

October 01, 2007 9:36 AM  
Blogger சிவபாலன் said...

மாசிலா,

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

October 01, 2007 9:36 AM  
Blogger மாசிலா said...

//அதிக குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள்; குழந்தைப் பேறு, இறைவன் நமக்கு கொடுத்துள்ள பாதுகாப்பு கேடயம்' என்று, கிறிஸ்தவர்களுக்கு ஆர்ச் பிஷப் கடிதம் எழுதியுள்ளார்.//

எனக்கு ஒன்னும் ஆட்சேபனை இல்லபா. நான் சொல்ற அட்றசுக்கு யாரை வேணும்னாலும் அனுப்ப சொல்லுங்க!

ஆனா, ஒரு வேளை பிரியாணி, ஒரு குவாட்டரு, கையில 500 ரூவா கொடுத்துடனும்!

ஓ கேவா!

October 01, 2007 11:24 AM  
Blogger மாசிலா said...

"சாமியார் விளக்கு பிடிப்பாரா?"

தட் ஈஸ் த கொஷீன்!

சாரி, மெழுகு வர்த்தி பிடிப்பாரா?

;-D

October 01, 2007 11:59 AM  
Blogger மாசிலா said...

கோவனம் அவிக்க நேரம் பாத்து கொடுப்பாரா?

ஆமேன்!

;-D

October 01, 2007 12:01 PM  
Blogger மாசிலா said...

பேசாம,

சாமியாருக்கு டபுள் எம்.ஏ பட்டம் கொடுக்கலாம்!

;-D

October 01, 2007 12:26 PM  
Blogger Dharan said...

ha ha

October 02, 2007 11:01 AM  

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv