Tuesday, October 02, 2007

தினமலர் - கலைஞர் கருணாநிதி.

தினமலர் நாளிதழும் கலைஞர் கருணாநிதியும் கை கோர்த்துக்கொண்டதாக குமுதம் வம்பானந்தாவில் வந்துள்ளது.

தினமலர் நாளிதழை படித்துவருபவர்களுக்கு இது ஓரளவு உணர்ந்திருக்க முடியும்.

அரசியலில் எல்லாம் சகஜம் என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு. நாளையே இந்த காட்சி மாறலாம்.

சுமார் இரு வாரங்களுக்கு முன் தினமலர் லட்சுமிபதி அவர்கள் கலைஞரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் என தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.

இது போன்ற அரசியல் கிசுகிசுக்கள் உலா வருவது யாருக்கு உபயோகமோ இல்லையோ அரசியல் செய்திகளை வாசிப்பவர்களுக்கு நல்ல தீனி. அதை செவ்வனே செய்யும் நம்ம "வீராதிவீரனுக்கு" ஒரு "ஓ"


இனி குமுததில் வந்த துணுக்கு கீழே..

===================================================================================

‘‘‘தினகரன்’ நாளிதழ் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருந்த போது, தினகரனை வளர்ப்பதற்காக ஒரு நாளிதழை தி.மு.க.வினர் யாரும் வாங்க வேண்டாம் என்று கலைஞரே சொல்லியிருந்தார் அல்லவா?’’

‘‘ஆமாம் சுவாமி, ஞாபகம் இருக்கிறது. அந்த நாளிதழைத் தாக்கி முரசொலியிலும் எழுதியிருக்கிறார்களே.’’

‘‘அந்த நாளிதழைத்தான் இப்போது தனது ஆதரவுப் பத்திரிகையாக மாற்றியுள்ளாராம் கலைஞர்.’’

‘‘என்ன சுவாமி, ஆச்சரியமாக இருக்கிறதே!’’

‘‘இதுவும் எதிரிக்கு எதிரி நண்பன் ஃபார்முலாதான். தினகரனுக்கும் அந்த நாளிதழுக்கும் ஏற்கெனவே தொழில்போட்டி நடந்து வருகிறது. இப்போது தினகரன் நாளிதழை ஒழிக்க அந்த நாளிதழுக்குத் தனது ஆதரவுக் கரத்தை நீட்டியுள்ளார் கலைஞர். அதனால் இதுவரை இல்லாத அளவிற்கு விளம்பரம் கொடுக்கப்பட்டு வருகிறதாம். அதுமட்டுமின்றி அந்த நாளிதழ் அதிபர் கைது செய்யப்படுவார் என்று பேசப்பட்ட நேரத்தில், கொஞ்சம் சாதகமாக நடந்து கொண்ட நன்றியையும் கருத்தில் கொண்டு, அந்த நாளிதழும் இப்போது தி.மு.க.வுக்கு ஆதரவாக செய்திகள் வெளியிடத் தொடங்கியுள்ளதாம்.’’

‘‘இனிமேல் தி.மு.க.வினர் அந்த நாளிதழைத்தான் வாங்குவார்கள் என்று சொல்கிறார்களா சுவாமி?’

‘‘அப்படித்தான்.


=================================================================================

நன்றி: .(குமுதம் ரிப்போர்டர் 30-09-2007)

8 Comments:

Blogger Anandha Loganathan said...

என்னமோ போங்க.

அரசியலில் இதெல்லாம் சகஜம்பா.

October 02, 2007 4:17 PM  
Blogger Thamizhan said...

மாமாக்கள் என்றும் மாமாக்களே!
அவர்களுக்குக் கைவந்த கலையை எப்போதும் எப்படியும் செய்து கொண்டேதான் இருப்பார்கள்.
கைவந்த கலையாச்சே!!

October 02, 2007 4:25 PM  
Anonymous Anonymous said...

Mr. Thamizhan

Are you calling MK as Mama... that is a good point...

ha ha ha....

October 02, 2007 4:57 PM  
Blogger Thamizhan said...

அநாமதேய மாமா!
சூப்பர் சர்வீஸ் போங்கோ.
கலைஞர் அவரது மாப்பிள்ளைகளுக்கு மாமா.
நீங்க எல்லாத்துக்கும் மாமா.
தொடரட்டும் பணி.

October 02, 2007 7:26 PM  
Blogger சக்திவேல் said...

ஹலோ சார் அது தினமலர் இல்லீங்க தினத்தந்தி. இந்த 84 வயதிலும் தினமலர், தினமனி, ஆனந்தவிகடன், இந்து பத்திரிக்கைகளுக்கு கிலியேற்படுத்திக்கொண்டிருக்கின்றார் கருனாநிதி. கருனாநிதியை ஒழிபதுக்கு சபதம்போட்டுக்கொண்டு இருக்கின்றன இந்த பத்திரிக்கைகள் இவர்களாவது கருனாநிதியோடு சேருவதாவது

October 02, 2007 8:07 PM  
Blogger கோசல்ராம் said...

thanks Sivabalan

October 03, 2007 5:48 AM  
Anonymous Anonymous said...

Hindu is Pro-DMK/UPA
Cho played a major role in DMK-
TMC alliance in 1996
Vikatan will write harsh but is not anti-MK/DMK
Behind the screens there will be
deals and arrangements between
politicians and media. They know
the weaknesses of each other.So I am not surprised if MK strikes a
deal with Dinamalar.

October 03, 2007 8:29 AM  
Blogger சிவபாலன் said...

ஆனந்த லோகநாதன், தமிழன், அனானி-1, சக்திவேல், வீராதிவீரன், அனானி-2,



அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

October 03, 2007 8:53 AM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv