Sunday, July 30, 2006

பெரியாரின் சிந்தனைத் துளிகள்...


1. "நான் மனிதனே! நான் சாதாரணமானவன், என் மனத்தில் பட்டதை எடுத்துச் சொல்லி யிருக்கிறேன். இதுதான் உறுதி. இதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும் என்று சொல்லவில்லை. ஏற்கக்கூடிய கருத்துக்களை உங்கள் அறிவைக் கொண்டு நன்கு ஆய்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள், மற்றதைத் தள்ளிவிடுங்கள்.

2. மனித தர்மத்தை அடிப்படையாக வைத்து, மனித சமுதாயத்திற்கு யாராவது தொண்டாற்ற வேண்டுமானால் முதலில் செய்யவேண்டியது, பகுத்தறிவுப்படி மக்களை நடக்கச் செய்வதும் சிந்திக்கச் செய்வதுமே யாகும்.

3. மனிதன் தனக்குள்ளாகவே, தான் மற்றவனைவிடத் பிறவியில் தாழ்ந்தவன் என்கிற உயர்வு தாழ்வு உணர்ச்சியைப் போக்கித் தன்னம்பிக்கையும், சுயமரியாதையும் பெற வேண்டும்.

4. கல்வியறிவும் சுயமரியாதை எண்ணமும் பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்.

5. ஒரு நாட்டிற் பிறந்த மக்களுக்கு வேண்டப்படும் பற்றுகளுக்குள் தலையாய பற்று மொழிப்பற்றே யாகும். மொழிப்பற்று இராதவரிடத்து தேசப்பற்று இராதென்பது நிச்சயம். தேசம் என்பது மொழியை அடிப்படையாகக் கோண்டு இயங்குவது.


6. மணமக்கள், உயிர் நண்பர்கள் ஒருவருக்கொருவர் பழகும் முறையைப்போல் நடந்துகொள்ள வேண்டும். எதிலும் தான் கணவன் என்ற ஆணவத்தை மணமகன் கொள்ளக்கூடாது. திருமணம் என்பது மணமக்களை மட்டும் பொறுத்ததல்ல. நாட்டின் முன்னேற்றத்திலும் தொடர்பு கொண்டிருக்கிறது.

7. நம் நாட்டுக்கு இன்று எவ்வித அரசியல் கிடைப்பதானாலும் அதில் சமூக சமத்துவமும், சமூக ஒற்றுமையும் உண்டாக்கக்கூடிய தன்மை இருக்க வேண்டும்.

8. ஒருவன் தன்னுடைய சொந்தக் காரியத்தைப் பொருத்த மட்டில்தான் மானத்தையும், கவுரவத்தையும் கவனிக்க வேண்டும். பொதுநலம், பொதுத்தொண்டு என்று வந்துவிட்டால் அவை இரண்டையும் பார்க்கக்கூடாது.

9. சமுதாய வாழ்க்கையில் ஒழுக்கமே பக்தியைவிட இன்றியமையாது. ஒழுக்கம் என்பது, சொல்லுகின்றபடியே நடப்பதும் நடந்தபடியே செல்லுவதுமாகும்.

10. மூட நம்பிக்கைகளைப் பகுத்தறியாமல் பின்பற்றியதாலேயே உழை ப்பாளி அடிமையாகவும், சோம்பேறி ஆண்டானாகவும் இருக்கும் நிலை வந்தது.

11. எந்த நூலை எடுத்துக் கொண்டாலும் அதன் மதிப்பு, அந்த நூலின் பயனை அளவாகக் கொண்டதே ஒழிய, அதை ஆக்கியவனையோ, அதில் உள்ள தெய்வீகத் தன்மையையோ, இலக்கண இலக்கிய அள வையையோ, அமைப்பையோ, அற்புத தன்மையையோ அளவாகக் கொண்டது ஆகாது.

12. மனிதன் பெண்களைத் தனக்குரிய ஒரு சொத்தாகக் கருதுகிறானேயொழிய தன்னைப் போன்ற உணர்ச்சிக்கும் அருகதையுள்ள ஓர் உயிர் என்று மதிப்பதில்லை. ஆண் எப்படி வேண்டுமானாலும் திரியலாம், எவ்வளவு மனைவிகளை வேண்டுமானாலும் மணக்கலாம், என்கின்ற முறையே, விபச்சாரம் என்னும் பிள்ளைகளைப் பெற்றெடுக்கின்றது.

13. இளைஞர்கள் குழந்தைகளுக்ச் சமமானவர்கள். சமீபத்தில் உள்ளதைப் பற்றுகிறவர்கள், பின்விளைவை அனுபவித்து அறியாதவர்கள். கண்ணோட்டம் விழுந்தால் பற்றி விடுபவர்கள். எழுச்சி என்பது எங்கொங்குக் காணப்படுகின்றîதா, கூட்டம் கு­கலம் என்பவை எங்கெங்குக் காணப்படுகின்றனவோ அவற்றையெல்லாம் பற்றுவதும், அவை மறைந்தால் கைவிட்டுவிடுவதுமான குணமுடையவர்கள்.

14. சாதி ஒழிப்புக்கு இன்றைய அரசியல் சட்டம் இடந்தரவில்லை. அதை, அடிப்படை உரிமைக்கு விரோதம் என்கிறது. அதேபோல்தான் வகுப்புவாரி விகிதப் பேச்சும் பேசாதே அது வகுப்புத் துவேசம் என்கிறது. சாதி இருப்பது தவறல்லவாம். சாதிப்படி உரிமை கேட்டால் மட்டும் தவறு என்றால் இதைவிடப் பித்தலாட்டம் வேறு இருக்க முடியுமா?

நன்றி: தமிழ்நேசன்.ஒர்க், http://www.tamilnation.org/hundredtamils/periyar.htm

வந்ததும் வந்தீங்க.."திரு.முத்துகுமரன்" .."திரு.விழிப்பு" அவர்களின் பதிவையும் படித்துவிடுங்கள்...

118 Comments:

Blogger Balaji-Paari said...

இப்பதிவிற்கு நன்றிகள்.

July 31, 2006 8:35 AM  
Blogger Sivabalan said...

Balaji-Paari,

வருகைக்கு நன்றி.

July 31, 2006 8:49 AM  
Blogger கோவி.கண்ணன் said...

//11. எந்த நூலை எடுத்துக் கொண்டாலும் அதன் மதிப்பு, அந்த நூலின் பயனை அளவாகக் கொண்டதே ஒழிய, அதை ஆக்கியவனையோ, அதில் உள்ள தெய்வீகத் தன்மையையோ, இலக்கண இலக்கிய அள வையையோ, அமைப்பையோ, அற்புத தன்மையையோ அளவாகக் கொண்டது ஆகாது. //


எந்த நூலை எடுத்துக் கொண்டாலுமா ?

உடன்பாடு இல்லை. சில நூல்களும் அமைப்பிலும் நன்றாகவே உள்'ளது

July 31, 2006 8:54 AM  
Blogger Thekkikattan|தெகா said...

எனக்கென்னமோ பெரியாரை பார்க்கும் பொழுதெல்லாம் சார்லஸ் டார்வினின் (பரிணாமத் தந்தை) ஞாபகம்தான் வருகிறது. அது சிறு வயது முதலே.

இப் பதிவிட்டமைக்கு நன்றி, சிவா! # 3, 11 நல்ல அடிப்படை புரிதல் (எல்லாமேதான்...)

July 31, 2006 8:55 AM  
Blogger Unknown said...

//எந்த நூலை எடுத்துக் கொண்டாலும் அதன் மதிப்பு, அந்த நூலின் பயனை அளவாகக் கொண்டதே ஒழிய, அதை ஆக்கியவனையோ, அதில் உள்ள தெய்வீகத் தன்மையையோ, இலக்கண இலக்கிய அள வையையோ, அமைப்பையோ, அற்புத தன்மையையோ அளவாகக் கொண்டது ஆகாது. //

எல்லா விஷயங்களிலும் ஒளிந்திருக்கும் போலி அழகியலை நோக்கி வீசப்பட்ட முதல் கல்

July 31, 2006 8:56 AM  
Blogger கோவி.கண்ணன் said...

//ஏற்கக்கூடிய கருத்துக்களை உங்கள் அறிவைக் கொண்டு நன்கு ஆய்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள், மற்றதைத் தள்ளிவிடுங்கள். //
இதுதான் உண்மையான பகுத்தறிவு வாதம் - பெரியார் பெரியர்

July 31, 2006 8:59 AM  
Blogger Sivabalan said...

GK,

ஒரு சாதான மனிதனுக்கு தேவை நூலின் பயன்பாடே..

//நன்கு ஆய்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள், மற்றதைத் தள்ளிவிடுங்கள்.//

எனினும் இதை நான் வழிமொழிகிறேன்.

July 31, 2006 9:03 AM  
Blogger கோவி.கண்ணன் [GK] said...

This comment has been removed by a blog administrator.

July 31, 2006 9:05 AM  
Blogger கோவி.கண்ணன் [GK] said...

ஒரு பின்னூட்டத்திற்கு ஒரு மறு பின்னூட்டம் தான் போடனும்.
நீங்களே பின்னூட்ட எண்ணிக்கையை குறைத்துக் கொள்வது எனக்கு கவலை அளிக்கிறது :(
:)))

July 31, 2006 9:05 AM  
Blogger கோவி.கண்ணன் [GK] said...

This comment has been removed by a blog administrator.

July 31, 2006 9:06 AM  
Blogger Sivabalan said...

தெகா

உணமைதான். இந்தியாவின் டார்வின் என்று கூட கூறலாம்.. நிச்சயம் பொருந்தும்.

July 31, 2006 9:06 AM  
Blogger Sivabalan said...

மகேந்திரன்.பெ,

நீங்கள் சொல்வது மிகச் சரி.

ஆனாலும் இன்னும் கல் எறிந்துகொண்டுதான் இருக்கிறோம்.. அது விழுந்த பாடில்லை.. அது தான் வருத்தமான விசயம்.

July 31, 2006 9:11 AM  
Blogger Sivabalan said...

GK,

நீங்கள் கொஞ்சம் அவசரப் பட்டுவிட்டீர்கள்.. நான் அதற்கும் பதில் சொல்லத்தான் வந்தேன்.. சரி விடுங்க.. பரவாயில்லை.. பின்னூடத்திற்கு நன்றி.


// பெரியார் பெரியர் //

இதை நான் வழிமொழிகிறேன்.

July 31, 2006 9:15 AM  
Blogger பாவூரான் said...

முன்னுக்குப் பின் முறண்பாடு இல்லாமல், மனதில் பட்டதை ஆணித்தரமாக சொன்ன பெரியாரின் சில சிந்தனைத் துளிகளை வழங்கியதற்கு நன்றி.

July 31, 2006 9:19 AM  
Blogger கோவி.கண்ணன் said...

சிபா, நான் பெரியாரின் ஒரு சில சமூக வெறுப்பு சார்ந்த கருத்துக்களை இன்றைய காலக்கட்டத்தில் மறக்கிறேன். மற்றவை மிக மிக நல்ல கருத்துக்களே என்பதில் 100% உடன்பாடு உண்டு

July 31, 2006 9:26 AM  
Blogger கப்பி | Kappi said...

மனிதனை பகுத்தறிவுக்கு இட்டுச் செல்லும் சிந்தனைகள்...

பகிர்ந்தமைக்கு நன்றி சிவபாலன்...

July 31, 2006 9:28 AM  
Blogger Sivabalan said...

பாவூரான்,

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

July 31, 2006 9:34 AM  
Blogger Sivabalan said...

GK,

உணமைதான். கால் ஓட்டத்தில் எது தேவையோ அதை மட்டும் பற்றிக் கொள்தலே ஒரு சாதாரண மனிதனுக்கு தேவை. அதைத் தான் பெரியாரும் சொல்கிறார்.

July 31, 2006 9:37 AM  
Blogger Sivabalan said...

கப்பி பய,

பகுத்தறிவு தான் மனிதனை விளங்கிடமிருந்து வேறுபடுத்தியது. அந்த பகுத்தறிவை மனிதன் பற்றிக் கொள்ள வேண்டும் என்பது தான் பெரியாரின் ஆசை.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

July 31, 2006 9:40 AM  
Blogger Vaa.Manikandan said...

Thanks Sivabaalan

July 31, 2006 9:45 AM  
Blogger Unknown said...

வி/ள/ங்கிடமிருந்து வேறுபடுத்தியது.

விலங்கிடமிருந்து வேறுபடுத்தியது.

July 31, 2006 9:46 AM  
Blogger Sivabalan said...

Vaa.Manikandan,

வருகைக்கு நன்றி.

July 31, 2006 9:50 AM  
Blogger Sivabalan said...

மகேந்திரன்.பெ,

சுட்டிக்காடியமைக்கு நன்றி.

July 31, 2006 9:51 AM  
Blogger Unknown said...

//ஒருவன் தன்னுடைய சொந்தக் காரியத்தைப் பொருத்த மட்டில்தான் மானத்தையும், கவுரவத்தையும் கவனிக்க வேண்டும். பொதுநலம், பொதுத்தொண்டு என்று வந்துவிட்டால் அவை இரண்டையும் பார்க்கக்கூடாது//

வலையில் நிறைய சொல்லடிகளுக்கும் முத்திரை குத்துதலுக்கும் ஆளாகும் பதிவர்கள் கவனத்துக்கு

July 31, 2006 9:58 AM  
Blogger Sivabalan said...

மகேந்திரன்.பெ,

ஆகா அருமை.

பெரியாரின் சிந்தனைகள் வலைப் பதிவர்களுக்கு தேவை என்பதற்கான வரிகளில் இதும் ஒன்று..

July 31, 2006 10:03 AM  
Blogger Unknown said...

ஆணித்திரமான கருத்துக்கள்.நன்றி சிவபாலன்

July 31, 2006 10:11 AM  
Blogger கோவி.கண்ணன் said...

'கடவுள் அருளால்' பெரியாருக்கு நீண்ட ஆயுள் கிடைத்திருக்காவிட்டால் பல சமூகங்கள் விடுதலை அடைந்திருக்காது :)))))

July 31, 2006 10:14 AM  
Blogger Sivabalan said...

செலவன் சார்,

உணமைதான்..

மனிதனை மனிதனாக்கும் சிந்தனைகள்.

July 31, 2006 10:17 AM  
Blogger Sivabalan said...

GK,

சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த பின்னூடம்...

கலக்கிடீங்க...

July 31, 2006 10:19 AM  
Blogger ╬அதி. அழகு╬ said...

பாட்டுக் கேட்கும் பலரும் பலவாறே கூறுவரெனினும் பாட்டுக்காரன், பாடியே தீர வேண்டும்.

பெரியார் கூறினார்:
"ஒரு பாட்டுக்காரன் பாடும்போது, பாமர மக்களும் வித்வத்தன்மை உள்ளவர்களும் கலந்திருந்து கேட்பார்களேயாயினும் பாமர மக்கள், பாட்டின் வாசகங்களை - சொற்களைப் பொருத்தவரையில் கவனித்து விட்டு, இது ஏதோ சாமிப் பாட்டுப் பாடினான் என்றும் இது ஏதோ பெண்களைப் பற்றிப் பாடினான் என்றும் அந்த வார்த்தைகளின் அளவோடு அவர்கள் கச்சேரிக்குப் போன தன்மையை முடித்துக் கொள்ளுவர்.

அதே பாட்டுக்காரனிடம் பண்டிதத் தன்மை உடையவர்கள் கேட்ட அளவில், சங்கீதக் கலை ஞானத்தைக் கொண்டு மிக நுணுக்கமாகக் காது கொடுப்பார்கள்.

ஆதலால், பாடுகிறவன் பாடுகிற வேலையை மிகப் பிரமாதமாகக் கொண்டு, மிகக் கஷ்டத்தோடு, கவலையோடு பாடவேண்டியதிருக்கும்"

சேலம் கல்லூரி தத்துவக் கலைக் கழகத்தில் ஆற்றிய சொற்பொழிவில் கூறிய ஓர் உவமை. ஆண்டு 1947.

July 31, 2006 10:31 AM  
Blogger Sivabalan said...

அழகு(ஜமீல்) அய்யா,

மிக அருமையான உவமை. ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு விதத்தில் பொருந்தக் கூடியது.

பெரியாரின் இந்த உவமையை இங்கே பகிர்ந்து கொண்டமைக்கு மிக மிக நன்றி.

July 31, 2006 10:39 AM  
Blogger Unknown said...

ஒருவனுடைய எந்த கருத்தையும் மறுப்பதற்கு யாருக்கும் உரிமை உண்டு. ஆனால், அதனை வெளியிடக்கூடாது என்பதற்கு எவருக்கும் உரிமை கிடையாது. "

இதைக்கூட வலைப்பதிவு நண்பர்களுக்காகவே சொல்லியிருப்பார் போலும்

July 31, 2006 10:42 AM  
Blogger Sivabalan said...

Mahendran,

சூப்பர்...

உணமை கசக்கும் என்பார்கள். அது இதுதானோ..

July 31, 2006 10:49 AM  
Blogger Unknown said...

தன்னிலை விளக்கம்

ஈ.வே.ராமசாமி என்கின்ற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத் தினரைப்போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு அதே பணியாய் இருப்பவன்.

அந்த தொண்டு செய்ய எனக்கு "யோக்கியதை" இருக்கிறதோ இல்லையோ, இந்த நாட்டில் அந்த பணி செய்ய யாரும் வராததினால், நான் அதை மேற்போட்டுக் கொண்டு தொண்டாற்றி வருகிறேன்.

இதை தவிர வேறு எந்த பற்று ஒன்றும் எனக்கு இல்லாததாலும், பகுத்தறிவையே அடிப்படையாக கொண்டு கொள்கைகளையும், திட்டங்களையும் வகுப்பதாலும், நான் அத் தொண்டுக்குத் தகுதி உடையவன் என்றே கருதுகின்றேன்.

சமுதாயத் தொண்டு செய்பவனுக்கு இது போதும் என்றே கருதுகின்றேன்.

July 31, 2006 11:00 AM  
Blogger Sivabalan said...

மகேந்திரன்.பெ ,

பெரியாரின் தன்னிலை விளக்கத்தை இங்கே பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.

July 31, 2006 11:05 AM  
Blogger பாலசந்தர் கணேசன். said...

நல்ல தொகுப்பு

July 31, 2006 11:23 AM  
Blogger Sivabalan said...

பாலசந்தர் கணேசன்,

வருகைக்கு நன்றி.

July 31, 2006 11:31 AM  
Blogger VSK said...

வாழும் நெறிக்குத் தேவையான வளமான கருத்துகள்!

கூட்டு சமூகத்தில் வாழும் மனிதனுக்கு இது போன்ற சிந்தனைகள் அவசியம்.

அதே சமயம் தனி மனிதத்தேடல் என்ற கேள்விக்கு இவற்றைக் கடந்த ஒன்று தேவைப்படுகிறது!

கட்டுகளை மீறித் தேட வேண்டும்.

நல்ல பதிவு, சிபா..

July 31, 2006 11:54 AM  
Blogger Sivabalan said...

SK அய்யா

// கூட்டு சமூகத்தில் வாழும் மனிதனுக்கு இது போன்ற சிந்தனைகள் அவசியம் //

அருமையாக சொன்னீர்கள்...

//கட்டுகளை மீறித் தேட வேண்டும்.//

ஆம். அந்த கட்டுகளை மீற மனிதனுக்கு தன்னம்பிக்கை மிக முக்கியம்.

July 31, 2006 11:59 AM  
Blogger மகேஸ் said...

பெரியார் இளம் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டது பற்றி வலைப்பதிவில் ஏன் இங்கு யாரும் வாய் திறக்க மறுக்கிறீர்களே?

தமிழ்நாட்டில் தி.மு கழகம் உருவானதே அதனால்தானே.

யாராவது அதனை நடுநிலையாக பதிவு போட்டால் நலம். ஏற்கனவே ஏதாவது சுட்டி இருந்தால் தந்து உதவவும்.

July 31, 2006 1:05 PM  
Blogger Unknown said...

மகேஸ் அவரின் டிஸ்கியை பார்க்கவும் மேலும் அன்னா இதைவிட அதைகமாகவே அவரை பற்றி எழுதியிருக்கிறார்

July 31, 2006 1:16 PM  
Blogger Sivabalan said...

மகேஸ்

வருகைக்கும் கருத்து பதிவுக்கு மிக்க நன்றி.

அவ்வாறு ஒரு பதிவிடக் கூடாது என்ற எண்னம் இல்லை. சுட்டியை தேடித்தான் பதிவிட வேண்டும்.

// ஏற்கக்கூடிய கருத்துக்களை உங்கள் அறிவைக் கொண்டு நன்கு ஆய்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள், மற்றதைத் தள்ளிவிடுங்கள். //

இதை நீங்கள் படித்தீர்கள் என நம்புகிறேன்.


இன்னொரு விசயம், பெரியாரின் மீது உங்களுக்கு ஏதேனும் கோபமா? அவ்வாறு இருந்தாலும் தவறில்லை. அதைத்தான் பகுத்தறிவு என்கிறார் பெரியார்.

July 31, 2006 1:18 PM  
Blogger Machi said...

சிவபாலன் தேவையான நேரத்தில் பதித்ததிற்கு நன்றி.

/"நான் மனிதனே! நான் சாதாரணமானவன், என் மனத்தில் பட்டதை எடுத்துச் சொல்லி யிருக்கிறேன். இதுதான் உறுதி. இதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும் என்று சொல்லவில்லை. ஏற்கக்கூடிய கருத்துக்களை உங்கள் அறிவைக் கொண்டு நன்கு ஆய்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள், மற்றதைத் தள்ளிவிடுங்கள்./
இது தான் பகுத்து அறிதல்.

July 31, 2006 1:24 PM  
Blogger Sivabalan said...

குறும்பன்,

உண்மைதான். நம் இளைய தலை முறைக்கு பல விசயங்கள் தேவைப்படும் நேரமிது.

வருகைக்கும் கருத்து பதிவுக்கு மிக்க நன்றி.

July 31, 2006 1:31 PM  
Blogger மகேஸ் said...

//இன்னொரு விசயம், பெரியாரின் மீது உங்களுக்கு ஏதேனும் கோபமா? அவ்வாறு இருந்தாலும் தவறில்லை. அதைத்தான் பகுத்தறிவு என்கிறார் பெரியார்//

ஒரு தலைவர் என்பவர் மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டும் என நினைப்பபன்.

பெண்கள் சுதந்திரம் பற்றி நிறையச் செல்லிவிட்டு அதனை அவரே மீறியதனால் தான் அண்ணாவை ஏற்க முடிந்த என்னால் பெரியாரை ஒரு தலைவராக ஏற்க முடியவில்ல்லை.

இதனைப் படித்ததும் குழலி பதிவிடுவார் என்று நினைக்கிறேன். ;)

July 31, 2006 2:11 PM  
Blogger Sivabalan said...

மகேஸ்,

எந்த ஒரு மனிதனும் முழுமையாக நல்லவனும் இல்லை கெட்டவனும் இல்லை.

நீங்கள் இந்த விசயத்தை வைத்து பெரியாரை ஏற்க முடியாது என்பது உங்களுடைய பகுத்தறிவுச் சிந்தனை. அதை நான் மதிக்கிறேன்.

இந்த பகுத்தறிவு எல்லா விசயங்களில் இருத்தல் வேண்டும் என்றே பெரியார் விரும்பினார்.

July 31, 2006 2:18 PM  
Blogger ╬அதி. அழகு╬ said...

//பெண்கள் சுதந்திரம் பற்றி நிறையச் செல்லிவிட்டு அதனை அவரே மீறியதனால் தான் அண்ணாவை ஏற்க முடிந்த என்னால் பெரியாரை ஒரு தலைவராக ஏற்க முடியவில்லை.//

மணியம்மையின் சுதந்திரமான விருப்பமின்றிப் பெரியார் அவரை வலுக்கட்டாயமாகத் திருமணம் செய்து கொண்டாரா என்ன?

தி.மு.க. உதயமாகி, 'கண்ணீர்த் துளிகள்' காய்ந்து காற்றோடு போய் நீண்ட காலத்திற்குப் பின்னர்தான் அண்ணா கூறினார்:

"பத்திரிகை பாராட்டுதல், பாமாலை, பூமான்களின் பவுன்மாலை, சர்க்கார் தரும் பட்டம்-பதவி ஆகியவைகளை வெற்றிச் சின்னமெனக் கொள்வதாயின், பெரியார் வெற்றி பெற்றவரல்லர்.

ஆனால், வாலிப உள்ளங்களின் நன்றி கலந்த அபிஷேகமே வெற்றிக்கான சின்னம் எனில், பெரியார் பெருவெற்றியை நெடுநாட்களுக்கு முன்னதாகவே பெற்று விட்டார் என்று திட்டமாகக் கூறலாம்.

சட்டசபைக்கு அழைத்துச் செல்ல மாட்டார்; பட்டம் வாங்கித் தரமாட்டார்; ஒரு பாராட்டுரை கூட வழங்க மாட்டார் என்பதைத் தெரிந்திருந்தும் ஆயிரமாயிரம் இளைஞர்கள் அவருக்குத் துணை நிற்பது வேறு எங்கும் காண முடியாத அற்புதம்! பெரியாரின் பெருவெற்றி அது ..."

நன்றி: அறிஞர் அண்ணாவின் 'புன்னகை'

July 31, 2006 3:49 PM  
Blogger Sivabalan said...

மகேந்திரன்.பெ ,

இரத்தின சுருக்கமாக கூறியுள்ளீர்கள்.

நன்றி.

July 31, 2006 4:53 PM  
Blogger Sivabalan said...

அழகு(ஜமீல்) அய்யா,

இந்த நல்ல தகவலை இங்கே பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.

July 31, 2006 4:56 PM  
Blogger Thekkikattan|தெகா said...

This comment has been removed by a blog administrator.

July 31, 2006 6:45 PM  
Blogger Thekkikattan|தெகா said...

This comment has been removed by a blog administrator.

July 31, 2006 6:46 PM  
Blogger விழிப்பு said...

சிவபாலன்,

மிக நல்ல பதிவு.

சுவையான விடயங்கள் சொன்ன மகேந்திரன், அழகு, தெக்கிகாட்டான் மற்றும் மகேஸ் ஆகியோருக்கும் நன்றிகள்.

எனக்கு பிடித்த பெரியாரின் கருதுக்களை நானும் பதித்திருக்கிறேன்.

பதிவின் சுட்டி.

http://vizippu.blogspot.com/2006/07/blog-post.html

July 31, 2006 7:08 PM  
Blogger கோவி.கண்ணன் said...

மேற்கண்ட பெரியார் சிந்தனைகள் கருத்துக்கள் அனைத்தும் ஒரு 'முதிர்ந்த ஆன்மிக வாதியின் சிந்தனை' போல் தெளிவாக உள்ளது :)

July 31, 2006 7:39 PM  
Blogger Thekkikattan|தெகா said...

மகேஸ்,

//ஒரு தலைவர் என்பவர் மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டும் என நினைப்பபன்.//

சரி ஒத்துக்கொள்வது போல இருந்தாலும் இது நடைமுறை வாழ்வில் சாத்தியமா?

பெண்களை போற்றி புகழ்ந்து எழுதும் ஆசிரியர் பாலகுமாரன் அவருக்கு இரண்டு மனைவிகள், ஒரு முறை எங்களது கல்லூரி ஆண்டு விழாவிற்கு அவரை அழைந்திருந்தோம். அவ்வாறு அவர் சொற்பொழிவு ஆற்றிவிட்டு, மாணவ மாணவிகள் ஏதாவது கேள்விகள் இருந்தால் கேட்கலாமென்று கூறிவிட்டு அமர்ந்து விட்டார்.

ஒரு மாணவன், இந்த இரண்டு பொண்டாட்டி விசயத்தை கிட்டதட்ட நாம் எப்படி கேக்க வேண்டுமென்று நினைக்கிறோமோ அது போலவே கேட்டுருந்தார். ஊருக்கெல்லாம் உபதேசம் பண்ணும் நீங்கள் ஏன் இப்படி இரண்டு திருமணம் செய்து கொண்டீர்கள் என்று?

..... தொடரும் 2

July 31, 2006 7:45 PM  
Blogger Thekkikattan|தெகா said...

தொடர்ச்சி 2... மகேஸ்

நமது பாலாவிற்கு வந்ததே கோபம், எந்த அப்பா முகம் தெரியாத பையாட இப்படி ஒரு கேள்வியை, தனது பெயரையும் போடமல் கேட்டது என்றும், தான் முதலில் ஒரு ஆண் பிள்ளையானால் தைரியமாக பெயருடன் கேள்வி கேட்க வேண்டுமென்றும் கூறிவிட்டு, தொடர்ந்தார்.

யாருக்கும் அவருடைய சொந்த வாழ்க்கையை பற்றி கேள்வி கேட்கும் அதிகாரமில்லையென்றும், படைப்பாளி சமூதாயத்திற்கு படைபங்களிக்கிறான் என்றால், அதனை பெற்று சமூதாயம் முன்னேற வேண்டுமே தவிர, அவனை நோண்டி எது போன்ற வாசம் அவன் பின்புலத்தில் உள்ளது என்று பார்ப்பது சரியல்ல என்றார்.

எனக்கும் அவர் கூறியது சரியென்றே பட்டது. அதற்காக அவரை பின் தொடர்ந்து அது போலவே தானும் வாழ்வு அமைத்து கொள்ளலாம் என்று பொருள் கிடையாது. அவருக்கு எது போன்ற சூழ்நிலையோ எது அவரை அச் சூழலுக்கு எடுத்துச் சொன்றதோ நமக்கு தெரியாது, இல்லையா?

பெரியாரை நான் அவ்வளவு தூரம் வாசிச்தது கிடையாது. அதனால் எனக்கு தெரியாது அவர் மைனரை திருமணம் அப் பெண்ணின் விருப்பமில்லாமல் செய்து கொண்டார என்றும், சட்டத்திற்கு புறம்பாக, அதனால் எது உண்மையென்பது தெரியாமல் பேசுவது சரியல்ல என்று எனக்கு இங்கு படுகிறது.

இருப்பினும் படைக்கும் எவனும் சுந்தமாக 100% இருந்து கொண்டுதான் தான் சொல்லவந்தை சொல்ல வேண்டுமென்றால், பில் கிளின்டனிலிருந்து, இருக்கும் அத்துனை மத பூசாரிகளும், பிஷப்களும் எதுவும் செய்ய முடியாது அவர்கள் போதிப்பது போலவே தனது சொந்த வாழ்வில் நடந்து கொள்ள வேண்டும் அப்பொழுதுதான் அந்த இடத்தில் நாம் கால் வைப்பேன் அல்லது அந்த தலைவருக்கு கீழ் வாழ்வேன் என்றால் நம்மால் அது போன்ற மனிதர்களை எங்கு காண்பது. இமயாலத்திலா?

மீண்டும் வருகிறேன்....

July 31, 2006 7:45 PM  
Blogger Sivabalan said...

தெகா,

மிக அருமையான விளக்கம்.

தொடர்ந்து கூறவும்.

நானும் ஒரு விசயத்தை இங்கே சொல்ல விரும்புகிறேன்.


மகேஸ்,

நமது தேச தந்தையின் சுய சரிதையை படித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

அதில், அவர், ஒரு சமயம் வேசியின் வீட்டுக்கு சென்றதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் பல விசயங்களை கூறிப்பிட்டுள்ளார்.

July 31, 2006 7:46 PM  
Blogger Sivabalan said...

விழிப்பு,

வருகைக்கு சுட்டிக்கும் நன்றி.

இப்பதிவுடன் இனைத்துவிடுகிறேன்.

அடிக்கடி பதிவுக்கு வந்து போங்கள்...

July 31, 2006 7:58 PM  
Blogger Sivabalan said...

GK,

இக்காலக் கட்டத்தில் ஆன்மிக வாதி என்று சொன்னால் தான் மதிப்பு என்ற நிலை. ஆகவே அவர் கருத்துக்களை வைத்து அவ்வாறு சொல்கிறீர்கள்.. காலத்தின் ஓட்டம்... சரி.. சரி..

July 31, 2006 8:03 PM  
Blogger Sivabalan said...

தெகா

நல்ல ஒரு உதாரணத்துடன் விளக்கியுள்ளீர்கள்.

அருமையான பின்னூடம்.

மிக மிக நன்றி.

July 31, 2006 8:06 PM  
Blogger இயற்கை நேசி|Oruni said...

மற்றொரு மனித புரிதலும் இங்கு பகிர்ந்து கொண்டால் இன்னும் நாம் பேசும் விசயம் பிடிபடும் என்பதால் இதோ அது இங்கு...

ஒரு முறை நாங்கள் கோவை ஆனைகட்டியிலிருந்த சுவாமி சரஸ்வதி ஆசிரமத்திற்கு எனது குடும்ப அன்பர்களுடன் போயிருந்தேன். அதற்கு அடுத்த குடில் நான் வேலை பார்த்த அலுவலகமாக இருந்தது.

நாங்கள் போயிருந்த நேரம் விசிட்டர்கள் அனுமதி கிடையாது. வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும்தான் பொது மக்களுக்கு உள்ளே நுழைய அனுமதி என்று வெளியே தகவல் பலகையும் இருந்தது.

இருப்பினும் நான் எங்கிருந்து வருகிறேன் என்று கூறியதற்கு பிறகு எங்களை உள்ளே அனுமதித்தார்கள், உள்ளே போன எங்களுக்கு ஒரே ஆச்சர்யம் ஏற்கெனவே ஒரு நூறு பேர் உள்ளே இருந்தார்கள். அங்கேயே குடில்களில் வசித்து, படித்து வருவார்கள் போல.

எங்களுக்கு அங்கேயே மதிய சாப்பாடும் சாமி கும்பிடுவதற்கும் வசதிகள் பண்ணிகொடுக்கப்பட்டன. பிறகு வீடு திரும்பியதும், எனது அண்ணன் என்னிடத்தில் வினாவினார். என்னாட சாமீயாரு அவரு, பணம், பேரு இருக்கிறவனுக்கு ஒரு ரூல்ஸ்ம் இல்லாதவனுக்கு ஒரு ரூல்ஸ்ம் வச்சிருக்கார்னு கேட்டார். ஏன்னா என் வேலை பார்க்கும் இடத்தின் பெயரை வைச்சு உள்ளே போனதாலும், உள்ளே பெரிய ஆட்களை பார்த்தாலும்...

இரண்டாம் பாகம் வருகிறது....

July 31, 2006 9:33 PM  
Blogger Sivabalan said...

தெகா,

//இருப்பினும் படைக்கும் எவனும் சுந்தமாக 100% இருந்து கொண்டுதான் தான் சொல்லவந்தை சொல்ல வேண்டுமென்றால் //
//அது போன்ற மனிதர்களை எங்கு காண்பது. இமயாலத்திலா? //

இது தான் சாராம்சம்... நல்ல வரிகள்.

July 31, 2006 9:48 PM  
Blogger இயற்கை நேசி|Oruni said...

...இரண்டாம் பாகம்....

அப்படி அவர் கேட்ட உடன் எனக்கு உடனடியாக உதித்தது இதுதான்... ஏற்கெனவே உள்ளே இருப்பவர்கள், நிச்சயமாக ரிடையர்டு மற்றும் இப்பொழுது பெரும் பொருப்புகளில் இருப்பவர்கள் சற்றே ஒதுங்கி இருந்து பிரட்சினைகளுக்கு ஆக்கப்பூர்வமான முறையில் சிந்திப்பதற்கும், மன ஆரோக்கியத்தை பேணி (ஏனெனில் அதிக மக்கள் தொடர்புடைய வேலையில் இருப்பவர்களுக்கு, அது தேவையில்லையா).

சரஸ்வதி அது போன்ற அதிக தினப்படி மக்கள் தொடர்புடையவர்களுடன் சந்தித்து அலோசிக்கும் பொழுது (மனம் சம்பந்தப்பட்ட), ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் அங்கே பரிமாறிக்கொள்ளப்படுகிறது எந்த வித அடிப்படை விளக்கங்களும் தேவைப்படாமல் (பத்து பேரே ஆனாலும், அதற்கு மாறாக அந்த ஓவொருவரும் ஒரு இரண்டு லட்சம் பேர் உள்ள ஊரில் ஒரு கலெக்டராகவோ வேறு மக்களுடன் தொடர்புடைய வேலை பார்பவராகவோ இருக்கலாம்)... அதே செய்தியை ஒரு பொதுக் கூட்டத்தில் பரிமாற எத்தனிக்கும் பொழுது, அங்கே பல புரிமான நிலையில் பலதரப் பட்ட மக்கள் இருக்கலாம், அங்கே சிந்தனை வோட்டம் சிதைவுறுகிறது.

அந்த சூழலில் ஒரு பத்து பேருக்கு ஆக்கப்பூர்வமான வகையில் பரிமாறப்பட்ட கருத்து சரஸ்வதியிடமிருந்து புறப்பட்டு எல்லா இடங்களிலும் ஆக்கப்பூர்வமான முறையிலேயே சிதைவுறாமல் சென்று அடையலாம் அல்லாவா? அதனால் சரஸ்வதி இது போன்ற ஒரு முறையை கடைப்பிடிக்கலாமென்று கூறினேன்.

சரி இப்ப என்ன இதிலிருந்து சொல்ல வருகிறேன் என்றால், நமக்கு கிடைக்கும் அனுபவமும், புரிதல்களும் ஒரு விசயத்தை அவர் அவர்களின் புரிதல்கள் நிலையிலிருந்தே புரிந்து கொள்ள முயற்சித்து, அவ் வளர்ச்சி சூழ்நிலைக்கேற்ப, தான் புரிந்து கொண்டது சரியென்று நம்பியும், அடுத்த கட்டத்திற்கு செல்கிறோம். ஆனால், அந்த வளர்ச்சி கட்டத்தில் நாம் முன்பு புரிந்து வைத்திருந்த விசயம் இப்பொழுது வேறு விதமான கோணத்தில் வந்து விழுகிறது. ஏன் அப்படி?

July 31, 2006 9:53 PM  
Blogger திராவிட தமிழர்கள் said...

திராவிட தமிழர்களாகிய நாங்கள் நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத் தினரைப்போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு அதே பணியாய் இருப்பவர்கள்.

அந்த தொண்டு செய்ய எங்களுக்கு "யோக்கியதை" இருக்கிறதோ இல்லையோ, இந்த நாட்டில் அந்த பணி செய்ய யாரும் வராததினால், நாங்கள் அதை மேற்போட்டுக் கொண்டு தொண்டாற்றி வருகிறோம்.

இதை தவிர வேறு எந்த பற்று ஒன்றும் எனக்கு இல்லாததாலும், பகுத்தறிவையே அடிப்படையாக கொண்டு கொள்கைகளையும், திட்டங்களையும் வகுப்பதாலும், நாங்கள் அத் தொண்டுக்குத் தகுதி உடையவர்கள் என்றே கருதுகின்றோம்..

சமுதாயத் தொண்டு செய்பவனுக்கு இது போதும் என்றே கருதுகின்றேன்.

July 31, 2006 10:17 PM  
Blogger Muthu said...

மகேசுக்கு,

நூறு சதவீதம் சொக்க தங்கம் என்று இங்கு யாரும் கிடையாது.(புனித பிம்பங்களைத்தவிர, அதுவும் புரஜக்ட் செய்யப்படுவதுதான்.வாய்ப்பு கிடைக்காததும் இன்னொரு காரணம்:)

"மனுச பயலாப் பொறந்துட்டாலே" என்ற வாக்கியத்தை கேள்விப்பட்டுள்ளீர்களா?

உங்களுக்கு லாஜீக் யாராவது சொல்லித்தரவேண்டி உள்ளது.(இது வேறு விஷயத்திற்கு :)


ஆகவே பகுத்தறிவை உபயோகித்து விஷயங்களை கிரகித்து கொள்வது தான் புத்திசாலித்தனமே ஒழிய கொச்சைப்படுத்தி பார்ப்பது அல்ல.

July 31, 2006 10:23 PM  
Blogger Sivabalan said...

தெகா

நல்லதொரு விசயத்தை பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி.

இதில் சில விசயங்கள் உங்களிடம் கேட்க வேண்டும். நாளை கேட்கிறேன்.

July 31, 2006 10:27 PM  
Blogger Sivabalan said...

திராவிட தமிழர்கள் said...... //

இதில் நானும் ஒருவன் என்ற முறையில் அந்த கருத்தை முழுமையாக வழிமொழிகிறேன்.

July 31, 2006 10:30 PM  
Blogger Sivabalan said...

முத்து,

சொல்ல வேண்டியதை சரியாக சொல்லிவிட்டீர்கள்.. புரியவேண்டியவர்களுக்கு புரியும் என நம்புகிறேன்.

July 31, 2006 10:34 PM  
Blogger அருண்மொழி said...

திருமணத்தின் போது பெரியாருக்கு வயது 72. மணியம்மைக்கு வயது 31. அது ஒரு சட்டப்படிக்கான, இயக்க நடப்புக்கான பாதுகாப்பான ஏற்பாடே ஆகும் என அவரே திருமணத்திற்கு முன் அறிக்கை வாயிலாக தெரியப்படுத்தினார்.

பெரியாரின் கொள்கையில் மாறுபட்டு நின்றவர் இதை ஒரு காரணமாக எடுத்துக்கொண்டு புது கழகம் கண்டனர். சென்றவர் வெற்றி பெற்றதும் திருச்சி சென்று ஆட்சியை அவருக்கு காணிக்கையாக அளித்ததும் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்.

July 31, 2006 11:20 PM  
Blogger வெற்றி said...

சிவபாலன்,
பெரியாரின் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள்.

//3. மனிதன் தனக்குள்ளாகவே, தான் மற்றவனைவிடத் பிறவியில் தாழ்ந்தவன் என்கிற உயர்வு தாழ்வு உணர்ச்சியைப் போக்கித் தன்னம்பிக்கையும், சுயமரியாதையும் பெற வேண்டும்.

4. கல்வியறிவும் சுயமரியாதை எண்ணமும் பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்.

5. ஒரு நாட்டிற் பிறந்த மக்களுக்கு வேண்டப்படும் பற்றுகளுக்குள் தலையாய பற்று மொழிப்பற்றே யாகும். மொழிப்பற்று இராதவரிடத்து தேசப்பற்று இராதென்பது நிச்சயம். தேசம் என்பது மொழியை அடிப்படையாகக் கோண்டு இயங்குவது.//

அருமை.

July 31, 2006 11:27 PM  
Blogger ╬அதி. அழகு╬ said...

//பெரியாரை நான் அவ்வளவு தூரம் வாசிச்தது கிடையாது. அதனால் எனக்கு தெரியாது அவர் மைனரை திருமணம் அப் பெண்ணின் விருப்பமில்லாமல் செய்து கொண்டார என்றும், சட்டத்திற்கு புறம்பாக, அதனால் எது உண்மையென்பது தெரியாமல் பேசுவது சரியல்ல என்று எனக்கு இங்கு படுகிறது.//

சிவபாலன்,

பாலகுமாரனையும் பெரியாரையும் ஒப்பிடுவது சரியா?

பின்னூட்டக் கருத்துகளுக்கு மதிப்பளிக்க வேண்டியதுதான். அதற்காக எல்லாவற்றிற்கும் ஓ போட வேண்டுமா?


இங்கு நாகம்மையும் மனியம்மையையும் தெ.கா. குழப்பி விட்டார்.

மைனர் பெண்ணான நாகம்மையை மணம் முடிக்கும்போது, பெரியார் திராவிடர் கழகத் தலைவரல்லர்; ஊரார் முன்னிலையில் தம் தந்தையிடம் அடி வாங்கும் சிறுவர்தான்.

பொது வாழ்விற்கு வந்த பின்னர் அவருடைய சொல்லும் செயலும் வேறாயிருந்த ஏதெனும் ஒன்றைச் சுட்டியிருந்தால் பொருத்தமாயிருந்திருக்கும்.

நல்லவேளை தெ.கா. டிஸ்கியோடு பதிந்திருக்கிரார்.

July 31, 2006 11:39 PM  
Blogger ரவி said...

டிஸ்க்கின்னா என்னாங்க ?

எனக்கு பாயின்ட நம்பர் நாலு ரொம்ப பிடிச்சிருக்கு...

//கல்வியறிவும் சுயமரியாதை எண்ணமும் பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்.//

August 01, 2006 1:28 AM  
Blogger பாவூரான் said...

"கடவுள் இல்லை, இல்லை என்று சொல்லிவருகிறோமே!!, திடீரென்று கடவுள் நம் முன் வந்து நின்றுவிட்டால் என்ன செய்வது" என்று பெரியாரிடம் கேட்டபோது.

"திடீரென்று கடவுள் நம் முன் வந்து நின்றுவிட்டால் அவர் இருக்கிறார் என்று ஒத்துக்கொள்ள வேண்டியதுதானே" என்றாராம் பெரியார்.

எனக்கு பெரியாரிடம் மிகவும் பிடித்தது, அவரது நேர்மை.

August 01, 2006 1:54 AM  
Blogger கோவி.கண்ணன் said...

சிபா... எங்கே ?
நாகம்மையின் மரணம் நன்மைக்கே - என்று ஒரு அருமையான கட்டுரையை நண்பர் முத்துக்குமரன் அழகாக பதித்துள்ளார் நேரம் கிடைத்தால் படிக்கவும் :))

August 01, 2006 8:22 AM  
Blogger Sivabalan said...

அருண்மொழி,

வருகைக்கும் கருத்து பதிவுக்கும் மிக்க நன்றி.

தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

August 01, 2006 8:53 AM  
Blogger Sivabalan said...

வெற்றி,

வருகைக்கும் கருத்து பதிவுக்கும் மிக்க நன்றி.

பரிட்சைக்கு படித்து முடித்து விட்டீர்களா?

August 01, 2006 8:55 AM  
Blogger Sivabalan said...

அழுகு அய்யா,

மீன்டும் கருத்தை சொன்னதற்கு நன்றி.

நீங்கள் தான் குழுப்புவது போல் நான் உணர்கிறேன். தெகா அவர் கருத்தில், ஒரு உதாரணத்தை, அதுவும் அவருக்கு நன்கு தெரிந்ததை , எடுத்து பேசியிருக்கிறார். அவர் சொல்லவந்த நோக்கம் எந்த மனிதனும் முழுமையாக நல்லவன் இல்லை எனபது. இதில் தெகாவின் நோக்கத்தைதான் நான் பார்க்கிறேன். இது உள்ளங்கை நெல்லிக்கணி.

தெகாவின் பதிவுகளை தொடர்ந்து படிப்பவன் என்ற முறையிலும் அவர் என்னுடைய நல்ல நன்பர் என்ற முறையிலும் அவர் சொல்ல வந்த கருத்தை நான் நன்கு அறிவேன். இதில் "ஓ" போட என்ன இருக்கிறது. தெகா, நான் மதிக்கும் பெரியாரை நிலையை ஆதரித்துத்தான் கருத்து சொல்லியிருக்கிறார். அதனால் ஒரு முறை என்ன ஆயிரம் முறை ஓ போடுவென்.

August 01, 2006 9:07 AM  
Blogger Sivabalan said...

செந்தழல் ரவி,

தங்கள் வருகைகும் கருத்துக்கும் நன்றி.

தங்களுக்கு தெரியாத டிஸ்கியா?

August 01, 2006 9:12 AM  
Blogger Sivabalan said...

பாவூரான்,

தங்கள் வருகைகும் கருத்துக்கும் நன்றி.

நல்ல தகவலை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி.

August 01, 2006 9:17 AM  
Blogger Machi said...

சிவபாலன் உங்களை 'அழகு' பகுத்தறிந்து "ஓ" போட்டீர்களா என்று கேட்டதற்காக அவரை 'அழுகு' ஆக்கலாமா? :-)) இது முறையா? நேர்மையா? நீதியா? பகுத்தறிந்து தான் இவ்வாறு எழுதினீர்களா? :-))

August 01, 2006 9:29 AM  
Blogger Thekkikattan|தெகா said...

//---மைனர் பெண்ணான நாகம்மையை மணம் முடிக்கும்போது,
---பெரியார் திராவிடர் கழகத் தலைவரல்லர்; ஊரார் முன்னிலையில் தம் தந்தையிடம் அடி வாங்கும் சிறுவர்தான்.//

அழகு, இதெல்லாம் தெரியாதுங்க எனக்கு நீங்க இப்ப நாகம்மை, மனியம்மைன்னு சொல்லப் போகத்தான் எனக்கு அப்படி ஒரு விசயம் இருக்கிறதே தெரியுது.

நான் சும்மா குத்து மதிப்ப 'மகேஸ்' சொன்னத வைச்சு அவருக்கும் இன்னும் பல பேருக்கும் இலக்கிய உலகில நிரம்பப் புடிச்ச பாலாகுமாரன வச்சு, சிவபாலன் சொன்னமாதிரி "யாரும் 100% புடம் போட்ட தங்கமில்லை"ங்கிற ஒரு உதாரணதுக்காக எடுத்ததுதான் அந்த எழுத்தாளர்.

என்னை பொருத்தவரை சிந்தனை என்பது, எல்லோருக்கும் வசப்படும் ஒரு விசயம்தான், அதற்கு தேவை உழைப்பே, உழைப்பும் முயற்சியும் இருந்தால் நீங்களும் ஒரு "அழகு பெரியார்" ஆகலாம். சிந்தனைகள் பெரியாருடன் தடைப்பட்டு போகவில்லை. சிந்தனை = உணர்வு சார்ந்த நிலை (Consciousness) எல்லோருக்கும் எப்பொழுதும் அந்த ஃபீல்ட் திறந்தே இருக்கிறது.

அன்பே சிவம்!

August 01, 2006 9:38 AM  
Blogger Sivabalan said...

குறும்பன் ,

மிகவும் இரசித்தேன்..

நல்ல டைமிங்...

நன்றி...

August 01, 2006 9:40 AM  
Blogger கோவி.கண்ணன் said...

நான் போட்ட பின்னூட்டம் மிஸ்ஸிங்

'நாகம்மையின் மரணம் நன்மைக்கெ' என்ற ஒரு பதிவை முத்துக்குமரன் பதிந்திருக்கிறார்.. நல்ல பதிவு

August 01, 2006 9:40 AM  
Blogger Sivabalan said...

தெகா

விளக்கத்திற்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

அழுகு அய்யா அவர்கள் பெரியாரின் மேல் உள்ள மரியாதை காரணமாகத்தான், நீங்கள் பாலகுமாருடன் ஒப்பிட்டதாக யூகித்து அவ்வாறு ஆதங்கப்பட்டுவிட்டார். அவர் ஆதங்கத்தை நீங்கள் மதித்து மறு மொழி கூறியதற்கு மிக்க நன்றி.

August 01, 2006 9:53 AM  
Blogger முத்துகுமரன் said...

இருமுறை விளம்பரத்திற்கு நன்றி கோவியாரே. அந்தப் பதிவின் சுட்டிhttp://eenpaarvaiyil.blogspot.com/2006/04/blog-post.html

August 01, 2006 9:56 AM  
Blogger Sivabalan said...

GK,

அந்த பதிவை இங்கே இனைத்துக்கொள்கிறேன்.

வேறு ஏதும் பின்னூடம் மட்டுறுத்துதலில் இல்லை..

August 01, 2006 9:58 AM  
Blogger Sivabalan said...

முத்துகுமரன்,

உங்கள் பதிவை இங்கே இனைத்துக்கொள்கிறேன்.

வருகைக்கு நன்றி.

August 01, 2006 9:59 AM  
Blogger ╬அதி. அழகு╬ said...

பெரியார்-மணியம்மை திருமணம் நடந்தபோது மணியம்மைக்கு வயது 26.
திருமண நாள்: 9 ஜூலை 1949.

August 01, 2006 10:29 AM  
Blogger Sivabalan said...

அழுகு அய்யா,

பகிந்துகொண்டமைக்கு மிக்க நன்றி.

August 01, 2006 10:32 AM  
Blogger மகேஸ் said...

//ஆகவே பகுத்தறிவை உபயோகித்து விஷயங்களை கிரகித்து கொள்வது தான் புத்திசாலித்தனமே ஒழிய கொச்சைப்படுத்தி பார்ப்பது அல்ல//
அவரைக் கொச்சைப் படுத்திப் பார்ப்பதில் என்னக்கு என்னங்க வரப்போகுது. ஏதாவது கேள்வி கேட்டா கொசுவை அடிகிறமாதிரி ஒரே அடி.ம்ம்ம்ம்ம்ம் :)

(மு.கு: நானும் சாதி பாகுபாடு பார்க்கக் கூடாது என்று சொல்லும் தி.க ஆளுதான்யா.இந்த ஒரு விசயத்துக்காகத்தான் திராவிடத் தமிழர்கள் இயக்கத்தில் இருக்கிறேன்)

ஏன் நான் கேட்பதுவெல்லாம், பெரியார் 70+ வயதில் ஒரு இளம் பெண்னைத் திருமணம் செய்து கொள்கிறார்.
அந்த வயதில் மறுமணம் செய்வதற்கு ஒரு நல்ல காரணம் இருக்க வேண்டுமல்லவா? என்ன காரணமாக இருக்க இருக்க முடியும்?

1. இருவரின் சம்மதத்துடனேயே திருமணம் நடந்தது. - எனவே சட்ட ரீதியான தடை எதுவும் இல்லை அதனால் தவறு என்றும் சொல்லவில்லை.
வயதானவர் இளம் பெண்ணைத் திருமணம் செய்ததால் வந்த சமூக ரீதியான எதிர்ப்புதான்.
2. பின் ஏன் திருமணம் செய்து கொண்டார்.
2.1 சொத்துக்களை பாதுகாக்கவா?
2.2 இயக்கத்தை அவருக்குப் பின் வழிநடத்தவா?
2.3 வயதான காலத்தில் துணையாக, உதவியாக இருக்கவா?
2.4 (கேட்க சங்கடமாக இருந்தாலும் கேட்க வேண்டியுள்ளதே :( ) உடல் இச்சையைத் தணித்துக் கொள்ளவா?
என் சாதாரண அறிவுக்கு இந்தக் காரணங்களில் ஏதாவது ஒன்றாகத்தான் இருக்க முடியும் என்று தோன்றுகிறது.
யராவது சொல்ல முடிந்தால் சொல்லுங்கள். பிடிக்கலேயா விட்டுருங்க.
விஷய ஞானம் உள்ளவர்கள் வேறு காரணங்களை விளக்கிச் சொன்னால் பகுத்தறிவை(!!?^^?**) வைத்து வேண்டியதை ஏற்றுக் கொள்கிறேன்.

//சொல்ல வேண்டியதை சரியாக சொல்லிவிட்டீர்கள்.. புரியவேண்டியவர்களுக்கு புரியும் என நம்புகிறேன்.//
ஆமாங்க, பதிவு சூப்பர்ன்னு பின்னூட்டம் போட்டா நான் புரிந்தவன்.தெரியாமல் கேள்வி கேட்டு விட்டால் புரியாதவன் தான். :)

August 01, 2006 10:50 AM  
Blogger Sivabalan said...

மகேஸ்

உங்களுடைய நிலைப்பாடுதான் என்ன?

இந்த ஒரு விசயத்திற்காக தான் பெரியாரின் சிந்தனைகள்
கொள்கைகளை எதிர்கீர்கள் எனக் கொள்ளலாமா?

என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை.. (பகுத்தறிவு வீக ஆகிவிட்டதோ? :))


//தெரியாமல் கேள்வி கேட்டு விட்டால் புரியாதவன் தான். :)//

கோவிச்க்காதீங்க... உங்களைப் பற்றி தப்பா எங்கேயும் சொன்ன மாதிரி எனக்கு தெரியவில்லை...:-/

August 01, 2006 11:17 AM  
Blogger மகேஸ் said...

//உங்களுடைய நிலைப்பாடுதான் என்ன//

நீங்கள் இங்கு குறிப்பிட்டுள்ள பெரியாரின் சிந்தனைகள் தவறு என்று சொல்லவில்லை.

ஆனால் பெண்ணுரிமை,பெண் விடுதலை,குழந்தைத் திருமணம் பற்றிச் சொன்ன பெரியாரை என்னால் ஏற்க முடியவில்லை.

பெண்ணுரிமை,பெண் விடுதலை பற்றி அவர் சொன்ன கருத்துகள் எல்லாம் சரிதான். ஆனால் அவர் இளம் பெண்ணைத் திருமணம் செய்ததை ஒத்துக் கொள்ள முடியவில்லை.

நான் என்ன காரணத்திற்காகத் திருமணம் செய்து கொண்டார் கேள்வி கேட்கிறேன்.

நிலைப்பாடு புரிந்ததா சிவபாலன்.

August 01, 2006 12:35 PM  
Blogger Sivabalan said...

மகேஸ்,

மிக நன்றாக புரிந்தது..

நீங்கள் கேட்கும் கேள்விக்கு எனக்கு விடை தெரியாது..

ஆனால் எல்லோரின் பின்னூடத்தையும் என்னுடையது உடபட படித்தீரிப்பீர்கள் என நம்புகிறேன்.

அப்ப அப்ப நம்ம பதிவுக்கு வந்து போங்க...

நன்றி.

August 01, 2006 12:55 PM  
Blogger ╬அதி. அழகு╬ said...

நான் அடிக்கடி கொள்கையில் மாற்றமடைபவன் என்று சொல்லப்படுகிறது. உண்மையாக இருக்கலாம். நீங்கள் அதை ஏன் கவனிக்கிறீர்கள்? ஒரு மனிதன், அவன் பிறந்தது முதல் இன்று வரை திருடிக்கொண்டே இருக்கிற ஒரே நிலைக்காரன் என்று சொல்லப்பட்டால், அவன் மகா யோக்கியனா? எந்த மனிதனும் ஒரே நிலையில் இருக்கவேண்டும் என்று நீங்கள் ஏன் ஆசைப்படுகிறீர்கள்? அதனால் உங்களுக்கு என்ன இலாபம்? மாறுதல் முற்போக்குள்ளதா, பிற்போக்குள்ளதா? அதனால் மக்களுக்கு நன்மையா? தீமையா? என்பன போன்றவற்றைக் கவனிக்க வேண்டியதுதான் அறிவாளிகளின் கடமையாகும்.

மற்றும், பொது நன்மையை உத்தேசித்து-- கஷ்டப்படுகிற மக்கள் நன்மையை உத்தேசித்து மாறினானா? அல்லது சுயநலத்திற்கு -- அக்கிரமமான இலாபமடைவதற்கு மாறினானா? என்று பார்க்க வேண்டும். யோக்கியன், அறிவாளி, ஆராய்ச்சியாளி, பொறுப்பாளி, கவலையாளி ஆகியவர் மாறவேண்டியது அவசியமாகலாம். அதைப் பற்றிய கவலைஏன்? யார் எப்படி மாறினாலும் பார்க்கின்றவர்களுக்கு புத்தியும் கண்ணும் சரியாய் இருந்தால், மாற்றத்தைப் பற்றி ஒன்றும் ஆபத்து வந்துவிடாது.

நான் பலதடவை மாறியிருக்கலாம்; பல குட்டிக்கரணங்கள் போட்டிருக்கலாம்; சுயநலத்திற்காகவும் போட்டிருக்கலாம்; பச்சோந்தியாகவும் இருக்கலாம். அதனால் உங்களுக்கு என்ன கெடுதி? நாடகக் கொட்டகையில் நாடகம் பார்க்கின்ற போது ஒரு மனிதன் எத்தனை வேடம் மாறி மாறிப் போட்டு நடிப்பதை நீங்கள் காசு கொடுத்துப் பார்த்துவிட்டு, நடித்தவனையும் புகழ்ந்துக்கொண்டு போகின்றீர்களா, இல்லையா?
கோயில் கட்டிய மக்கள், கோயிலை இடிக்க வேண்டியவர்களாகி விடுவார்கள். அகிம்சை பேசுபவர்கள் பலாத்காரத்தைப் பேச வேண்டியவர்களாகி விடுவார்கள். இராஜ விசுவாசிகள் இராஜத் துரோகிகள் ஆகிவிடுவார்கள். திருடக்கூடாது என்பவர்கள் கொள்ளையடிக்கச் சொல்வார்கள்.

இப்படியாக, அபிப்பிராயங்கள் மாறிக்கொண்டு போகலாம். இவற்றையெல்லாம், அபிப்ராயங்கள் மாறியதாலேயே குற்றம் என்று சொல்லிவிட முடியாது. தங்களை 'நல்ல சூத்திரர்கள் ' என்று சொல்லிக்கொண்டு பார்ப்பனர் கால்களைக் கழுவிய தண்ணீருக்கு பவுன் கொடுத்துச் சாப்பிட்டவர்கள் இன்று 'சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டு அடி', என்றும் 'பார்ப்பனர்கள் ஜாக்கிரதை ' என்றும் ஏன் சொல்லுகிறார்கள்? இந்த மாற்றத்தால் இப்படிச் சொன்னவர்கள் அயோக்கியர்கள் ஆக முடியுமா? தவிர, 'சூத்திரன் பணம் வைத்திருந்தால், பிராமணர்கள் பலாத்காரத்தால் அதைப் பறித்துக் கொள்ளலாம்' என்று மனுதர்ம சாஸ்திரத்தில் இருந்தது மாறி இப்போது வெள்ளையர் தர்மத்தில் 'தந்திரங்களாலும் சூழ்ச்சிகளாலும் மாத்திரந்தான் பறித்துக் கொள்ளலாம் ' என்கிறதான மாறுதல் ஏற்பட்டுவிட்டது. நாளை ஒரு சமயம் சமதர்ம காலத்தில், 'பிராணர்கள் (சரீரத்தால் பாடுபடாதவன்) சொத்து வைத்திருந்தால், மற்றவர்கள் பலாத்காரத்தில் பிடுங்கிக் கொள்ளலாம்' என்று ஏற்பட்டாலும், ஏற்படலாம். இம்மாதிரி மாறுதல்கள் காலத்திற்கும் பகுத்தறிவிற்கும், நாட்டின் முற்போற்கிற்கும் ஏற்றாற்போல நடந்துதான் தீரும். எனவே, நான் மாறுதல் அடைந்துவிட்டேன் என்று சொல்லப்படுவதில் வெட்கப்படுவதில்லை. நாளை நான் எப்படி மாறப்போகிறேன் என்பது எனக்கே தெரியாது. ஆகையால் நான் சொல்வதைக் கண்மூடித்தனமாய் நம்பாதீர்கள்.

(நாகையில், 3-10-1931-ல் சொற்பொழிவு-- 'குடி அரசு ' ... 11-10-1931)

ஆம்; பரிகாசம் செய்வார்கள்; நமக்கும் அது கொஞ்சம் மானக்கேடாகத்தான் தோன்றும். உண்மையாகவே அது மானக்கேடாகவும் இருக்கலாம். அந்த மானக்கேடு நடத்தை நானோ, நீங்களோ நமது தனிப்பட்ட சுயநலத்துக்காக அல்ல; சமூதாயப் பொதுநலத்துக்காகவே அடைகிறோம். நாம் நமது சமுதாய நலத்துக்காக உயிரைத் தியாகம் செய்வது என்பது எப்படியோ, அப்படித்தான் உயிரிலும் சிறந்தது என்று சொல்லும்படியான மானத்தைத் தியாகம் செய்வது ஆகும்.

('விடுதலை ' -அறிக்கை -20-11-1966)

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20111111&format=print

August 01, 2006 1:15 PM  
Blogger Sivabalan said...

அழுகு அய்யா,

பகிர்ந்து கொண்டமைக்கு மிக மிக நன்றி.

August 01, 2006 1:55 PM  
Blogger Thekkikattan|தெகா said...

மகேஸ்,

மீண்டும் உங்கள் பார்வைக்கு, ஒருவர் ஒரு விசயத்தை சிந்தித்து அதனிற்கு உருவகம் கொடுத்து வெளிக்கொணரும் பொருட்டு, அதில் உள்ள விசயங்களை, அந்த பரிமாணங்களோடு நமது சிந்தனையோட்டத்தை செலுத்தி, சிந்திக்க, மூளைக்கு வேலை கொடுக்க வேண்டுமே தவிர, இப்படி ஒரு தனிப்பட்டவரின் வாழ்வு நெறிகளை உற்று நோக்குவதல் இழப்பு யாருக்கு?

சிந்திக்கும் எவர் ஒருவருக்கும் அது போன்ற சிந்தனை தலத்தை எது போன்ற சூழ்நிலை உருவாக்கி கொடுத்தது என்பது, அத் தனிமனிதரின் பயணமே ஆகும்.

இப்படி உட்கார்ந்து கேள்விகள் கேட்டு எப்படி அவர் அது போன்ற முரண்பாடுற்ற தீர்வுகளுடன் வந்தார் என்று கேட்டுக் கொண்டிருந்தால், நமது கால விரயம்தான் மிச்சம். அடையப் போகும் இலக்கோ அல்லது விசய புரிதல்களொ கிடையாது.

எனக்கு ஒரு தனிமனிதரின் வாழ்வு முறையும் அவர் வாழ்ந்த பரிமாண புரிதல்களும் 100% ஒத்துப் போக வேண்டுமென்ற எதிர்ப்பார்பில் எந்த நம்பிக்கையும் கிடையாது.

ஒரு புத்தகம் வாங்கி படிக்கும் பொழுது அதனை எழுதிய படைப்பாளன் எங்கிருந்து வருகிறான், அவன் பின்புலம் என்ன அவனுக்கு இதனை எழுத தகுதி இருக்கிறதா என்பதனையெல்லாம் அறிந்துதான் நான் ஒரு புத்தகத்தையே படிப்பேன் என்றால். நாம் நமது பரிமாண புரிதல்களை தாண்டி செல்லவே முடியாது.

அப்படியெனில், நாம் நமக்கு நாமே நம்மைச் சுற்றி ஒரு ஃபென்ஸ் போட்டுக் கொண்டதிற்கு சமம்.

நீங்கள் சொல்வதை பார்த்தால் டைவர்ஸ் பண்ணிய யாவரும், குடும்பமும், குடித்தனமுமாக வாழ்வது எப்படின்னு புத்தாகமோ அல்லது அதனைப் பற்றி பேசவோ தகுதியில்லாதவர் ஆகிவிடுகிறார்.

அதனுடைய மறு முகமாக, அவரால் அந்த விசயங்களை நுனுக்கமாக கண்டுபிடித்து பேச முடிகிறது என்றால், அந்த அனுபவ புரிதல்களே, அதற்கு அடிப்படையாக அமையாலம் அல்லவா? யார் ஒரு சிறந்த நிர்வாகியாகவும், புதுக் கண்டுபிடிப்பாளானாகவும் இருக்கிறார்கள்...

துணிந்தவர்கள் மட்டுமே...

August 01, 2006 2:25 PM  
Blogger Sivabalan said...

Update - Kumaran & Vizhipu page link

August 03, 2006 10:23 PM  
Blogger Sivabalan said...

தெகா

கருத்து பதிவுக்கு நன்றி.

August 03, 2006 10:24 PM  
Blogger Thekkikattan|தெகா said...

அது போலவே சுய அறிவை விடுத்து, அரிதுப் பொரும்பாண்மையினர் ஊதுகிறார்களே அந்த சங்கை அதனால் நானும் ஊதுகிறேன், என்று மெத்தப் படித்த குருட்டு ஆசாமிகளும் பகுத்தறிவற்ற ஊன ஜன்மங்களே...

August 03, 2006 10:35 PM  
Blogger Sivabalan said...

//மெத்தப் படித்த குருட்டு ஆசாமிகளும் பகுத்தறிவற்ற ஊன ஜன்மங்களே..//

உணமைதான் தெகா.

பகுத்தறிவு வளர்ந்தாலே நாட்டில் பல கேவலங்கள் குறையும்.

August 03, 2006 10:39 PM  
Blogger Muthu said...

//அது போலவே சுய அறிவை விடுத்து, அரிதுப் பொரும்பாண்மையினர் ஊதுகிறார்களே அந்த சங்கை அதனால் நானும் ஊதுகிறேன்,//

:))

August 03, 2006 10:48 PM  
Blogger Thekkikattan|தெகா said...

//பகுத்தறிவு வளர்ந்தாலே நாட்டில் பல கேவலங்கள் குறையும்.//

சுய உணர்வு முதலில் பெற்றால் தானே, விசயங்களை பகுத்து உணர்வதற்கு... நமது சுய நலமே(லாபம்) முதலில் நிற்பதால், பகுத்து உணரும் பாங்கு பின் இருக்கையை எடுத்துக் கொள்கிறது...

August 03, 2006 10:48 PM  
Blogger Sivabalan said...

முத்து,

நானும் இரசித்தேன்.

வருகைக்கு நன்றி.

August 03, 2006 10:55 PM  
Blogger Sivabalan said...

தெகா

//பகுத்து உணரும் பாங்கு பின் இருக்கையை எடுத்துக் கொள்கிறது//


போட்டு தாக்கிடீங்க... அருமை..

August 03, 2006 10:56 PM  
Blogger Muthu said...

மகேஸ்,

//அவரைக் கொச்சைப் படுத்திப் பார்ப்பதில் என்னக்கு என்னங்க வரப்போகுது//

புகழ்ந்து பேசினா மட்டும் எங்களுக்கு என்ன கிடைக்குது?

///இந்த ஒரு விசயத்துக்காகத்தான் திராவிடத் தமிழர்கள் இயக்கத்தில் இருக்கிறேன்//

எதுக்கு இருக்கீங்கன்னு தான் தெரியுமே:))

//ஏதாவது கேள்வி கேட்டா கொசுவை அடிகிறமாதிரி ஒரே அடி. ம்ம்ம்ம்ம்ம் :) //

கொச்சைப்படுத்தினால் கொச்சைப்படுத்துறீங்க என்றுதான் சொல்லமுடியும்.புனிதப்படுத்தறீங்கன்னா சொல்லமுடியும்?ஏன் இந்த தேவையில்லாத புனித பிம்ப புலம்பல்?:)))

ஒரு மனிதரின் கருத்துக்களை அந்த தளத்தில் வைத்து புரிந்துக் கொள்ளாமல் அவர் சறுக்கிவிழுந்த(அல்லது அப்படி சொல்லப்படுகின்ற)அழுக்கைப்பற்றி பேசுவது சரிதான் என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால் ஆல் தி பெஸ்ட்.

பெரியாரை கருத்துக்கள் முட்டாள் தனமானது.ஏனென்றால் அவர் 70 வயதில் கல்யாணம் செய்தார் என்ற அர்த்தம் வருகிறமாதிரியான உங்கள் வாதம் சீப் டேஸ்ட்டில் இல்லை. அதிமேதாவித்தனமானது. போதுமா?

August 03, 2006 11:03 PM  
Blogger தருமி said...

கோவி.கண்ணன் said...
'கடவுள் அருளால்' பெரியாருக்கு நீண்ட ஆயுள் கிடைத்திருக்காவிட்டால் பல சமூகங்கள் விடுதலை அடைந்திருக்காது :)))))//

நல்லா சொன்னார் கோவி கண்ணன்!!

August 04, 2006 5:04 AM  
Blogger கோவி.கண்ணன் said...

//நல்லா சொன்னார் கோவி கண்ணன்!!//
ஆமாம் தருமி அய்யா ... அவரை ஒரு அவதார புருஷராகத்தான் பார்க்கிறேன். அவர் அடைந்த பகுத்தறிவு ஒளியைத்தான் அனைவருக்கும் அருளினார் :))
எனக்கும் கிடைத்து !

August 04, 2006 7:00 AM  
Blogger Sivabalan said...

முத்து

//சொல்ல வேண்டியதை சரியாக சொல்லிவிட்டீர்கள்.. புரியவேண்டியவர்களுக்கு புரியும் என நம்புகிறேன்.//

நான் மறுபடியும் அதையே தான் சொல்லுகிறேன்..

ஒரு வேளை புரியாத மாதிரி நடிக்கிறாரோ...

ஒன்னும் புரியவில்லை

August 04, 2006 7:18 AM  
Blogger Sivabalan said...

தருமி அய்யா,

வருகைக்கும் கருத்து பதிவுக்கும் மிக்க நன்றி.

August 04, 2006 7:20 AM  
Blogger Sivabalan said...

GK,

//பகுத்தறிவு ஒளியைத்தான் அனைவருக்கும் அருளினார்
எனக்கும் கிடைத்து !//


எனக்கும் கிடைத்தது...

இன்னும் கிடைக்க வேண்டியவர்கள் ஏராளம்...

August 04, 2006 7:22 AM  
Blogger Thekkikattan|தெகா said...

ஏன் எப்பொழுதும் மக்கள், ஒருவர் நெஞ்சு, தொடை கிழிய கஷ்டப்பட்டு உச்சத்தை அடைந்து அங்கிருந்து, கீழே நிற்பவர்களுடன் இதனை எப்படி அணுகி ஏறியிருந்தால் இந்த கிழிதல்களை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம், என்று கோணத்தில் கூட பகிர்ந்து கொள்ள வரும் பொழுது, மக்கள் அவர் சொல்ல வருவதை விடுத்து அவருடைய முதுகில் எத்துனை மூடை அழுக்கு இருக்கிறது என்பதனை சுட்டி காட்டுவதிலேயே கவனமாக இருக்கிறார்கள்.

என்னுடைய ஒரு மனிதப் புரிதல் அதுவும் என்னுடைய சொந்த நிலைப்பாட்டை, நான் இருந்த விகிதத்தில் வைத்துப் பார்க்கும் பொழுது அது நம்முடைய "கையாலாகத தனத்தின்" வெளிப்பாடே அப்படி ஏறி இலக்கை அடைந்தவர்களை கீழே இழுத்துப் போட எத்தனிப்பதும். என்பதாக உணர்கிறேன்.

இது தொண்டு தொற்றே வரலாறுகளில் நடைந்திருப்பதை திரும்பி பார்க்கும் பொழுது தெரிகிறது.

இந்த அடிப்படை "கையாலாகத தனம்" நம்மிடை எங்கே புதைந்திருக்கிறது என்பதனை ஒரு சிறு உதாரணம் கொண்டு எனது அடுத்த பின்னூட்டத்தில் சொல்கிறேன்....

August 04, 2006 9:29 AM  
Blogger Thekkikattan|தெகா said...

பகுதி -2

(எனக்கு வாழ்ந்து கெட்ட மனிதரிகளின் பின்புலங்களை கொண்டு அவரை எடைபோடுவதில் கொஞ்சம் கூட ஈடுபாடு கிடையாது என்பதால் இங்கு மீண்டும் மீண்டும் வந்து பின்னூட்டம் போடும் படியாக ஆகிவிட்டது...)

சரி இப்பொழுது இப்படி வைத்துக் கொள்வோம். நமது அண்டைய வீட்டுகாரரோ அல்லது நமக்கு தெரிந்த ஒருவரோ விலை அதிகமாக கொடுத்து ஒரு வெளி நாட்டு கார் ஒன்றை வைத்திருக்கிறார் அல்லது தனது தேவைக்கும் மிஞ்சிய அளவில் ஒரு வீடு கட்டியிருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.

நமக்கு அப்படி ஒரு ஆசையே கிடையாது என்று நினைத்துக் கொண்டு வாழ்வை நகர்த்தி வருகிறோம் (அதற்கு பின்புலத்தில் சில மனோ தத்துவா சமாளிப்புகளுடன் ;-). திடீரென்று ஒரு நாள் நாம் வாங்கிய லாட்டரி சீட்டில் மூலமாகவோ அல்லது ஏதோ ஒரு வகையில் அதனைவொட்டிய காரோ அல்லது ஒரு வீடோ நமக்கு கிடைக்கும் படியாக ஒரு பரிசு கிடைத்து விடுகிறது.

அச் சூழ்நிலையில் நமது மானோ நிலை என்னவாக இருக்கும்? அதனை ஏற்றுகொள்வோமா அல்லது மறுப்போமா? அப்படி ஏற்று கொண்ட பின், நாம் வைத்திருந்த தத்துவ நோக்கு எங்கே செல்லும். ஒரு மனிதரின் சராசரி வாழ்வு 60 லிருந்து 65 என்று வைத்துக் கொண்டால், இதற்கிடையில் சிலபேர் அப்படி ஆகிறார்கள், சிலபேர் இப்படி ஆகிறார்கள், இருப்பினும் கிடைக்கப் பெற்றிருக்கும் இயற்கை சார்ந்த விசயங்களோ ஒன்றுதான், அல்லாவா?

இந்த கால கட்டத்திற்குள் சிலருக்கு சில பரிமாண புரிதல்கள் அதீதாமாக கிடைக்க காரணியாக இருந்தது எது?

August 04, 2006 9:45 AM  
Blogger Sivabalan said...

தெகா,

வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி.

August 16, 2006 1:15 PM  
Blogger Thangamani said...

சிவபாலன், இந்தப் பதிவுக்கு நன்றி.

பெரியாரின் திருமணத்தைப் பற்றி கூற முழுத் தகுதியும் கொண்டவர்கள் பெரியாரும், மணியம்மையும்தான். பெரியார் தனது திருமணம் குறித்த பதிலாக 'எனது திருமணம்' என்ற கையேட்டையே (தி.க வெளியீடு) வெளியிட்டிருக்கிறார். மணியம்மையும் பல இடங்களில் இதைப் பற்றி பேசியுள்ளார். பெரியாரின் திருமணம் எந்த தளத்திலும் சர்ச்சைக்கு இடமானதன்று. பெரியாரின் சொந்த விளக்கத்தைப் படித்து பின் ஒருவர் எந்த நிலையெடுத்தாலும் அது பெரியாரைப் பற்றிய பிரச்சனை அல்ல; மாறாக அந்த நபரின் பிரச்சனை.

பெரியாரைப்பற்றிய அல்லது பெரியாரின் கட்டுரைகள் அடங்கிய எனது பதிவின் சுட்டிகள் இங்கு வாசிக்க விருப்பமிருப்போரின் வசதிக்காக.


http://bhaarathi.net/ntmani/?p=53

http://bhaarathi.net/ntmani/?p=188

http://bhaarathi.net/ntmani/?p=189

http://bhaarathi.net/ntmani/?p=162

August 16, 2006 2:28 PM  
Blogger Sivabalan said...

தங்கமணி,

சுட்டிக்கு மிக மிக நன்றி.

உங்கள் பதிவைப் படித்துவிட்டு அங்கே இங்கும் எனது கருத்தை பதிந்துவிடுகிறேன்.

வருகைக்கு நன்றி.

August 16, 2006 2:32 PM  
Blogger கருப்பு said...

சிவபாலன்,

அருமையான பணி. அய்யா பெரியாரின் அருமையான சிந்தனைகளை வலையுலக நண்பர்களுக்கு படைக்கும் உங்கள் பணி வாழ்க.

மகேஸ் போன்ற அடிவருடிகளுக்கு பதில் சொல்லி தங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம்.

August 16, 2006 7:46 PM  
Blogger Sivabalan said...

விடாதுகருப்பு,

உண்மைதான். இன்றைய சமுதாய மக்கள் அனைவரும் பெரியாரிடமிருந்து தெரிந்துகொள்ள பல கருத்துக்கள்/ சிந்தனைகள் உள்ளன..

வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் மிக்க நன்றி.

August 16, 2006 9:20 PM  
Blogger வசந்த் said...

அருமையான பதிவு. பெரியாரின் கருத்துகளை வலையுலகில் பதிந்ததற்கு நன்றி.

ஈரோடு நகரில், சில வருடங்களுக்கு முன் பெரியாரின் பொன் மொழிகளை ஆங்காங்கெ பலகையில் எழுதி வைத்தார்கள் (நகராட்சி சார்பாக என்று நினைக்கிரேன்).

படித்ததில் நினைவில் இருப்பது... "கடவுளை மற, மனிதனை நினை"

இது போல அனைத்து ஊர்களிலும் வைத்தால் நன்றாக இருக்கும்.

August 16, 2006 10:03 PM  
Blogger Sivabalan said...

வசந்த்,

நீங்கள் சொல்வது மிகச் சரி. மக்கள் கூடுமிடுங்களில் பெரியாரின் சிந்தனைகள் எழுதிவைப்பது நிச்சயம் சமுதாயத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.


வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் மிக்க நன்றி.

August 16, 2006 10:10 PM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv