Thursday, July 27, 2006

எங்க வீட்டு லைப்ரேரி...

குங்குமம் வார இதழில் எங்க வீட்டு லைப்ரேரி பகுதியில் சிந்தனையாளர் வே.ஆனைமுத்து அவர்களின் வீட்டு நூலகம் பற்றி குறிப்பிட்டுள்ளார். அவர் வைத்திருக்கும் புத்தகங்கள் அவை எவ்வாறு உதவுகின்றன என இப்பகுதியில் கூறியுள்ளார். இப்பகுதி மிகவும் நன்றாக உள்ளது.





நன்றி: குங்குமம் வார இதழ்

இன்னொரு விசயம், நீங்க எல்லாரும் வீட்டில் நூலகம் வைத்திருக்கிறீர்களா? நீங்க வைத்திருக்கும் புத்தகங்களைப் பற்றி ஒரு சில வற்றை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். நிச்சயம் பல பேருக்கு உபயோகமாக இருக்கும்.

நான் வைத்திருக்கும் புத்தகங்கள்..
1.திருக்குறள் தெளிவுரையுடன்
2.பாரதியார் கவிதைகள்.
3. அறிஞர் அண்னாவின் நாடகங்கள்.
4. பெரியார் சிந்தனைகள்.
5. தேவாரம் - அனைத்து பகுதிகளும்.
6. நிறைய மேலாண்மை புத்தகங்கள்..


நூலகங்கள் பற்றி "திரு.பத்ரி" அவர்கள் மிக அருமையான பதிவிட்டிருக்கிறார். அதையும் படித்துவிடுங்கள்.

"திரு.கோவி.கண்ணன் அய்யா" அவர்கள் நூலகம் பற்றி பதிவிட்டிருக்கிறார். அது.. அருமை.. அருமை... அருமை.. அதையும் படித்து விடுங்கள்.

41 Comments:

Blogger Sivabalan said...

test.. test.. test..

July 27, 2006 9:48 AM  
Blogger Sivabalan said...

Sorrt.. again test....

July 27, 2006 9:53 AM  
Blogger Thekkikattan|தெகா said...

என்ன சிவா, இப்படி ஒரு லிஸ்ட் ரெடி பண்ணிக் கொடு கேக்றீங்க. எங்க தொடங்கி எங்க முடிகிறது.

நான் வேண ஒரு ஃபோட்டோ எடுத்து என் லைப்ரரி மொத்தமும் தெரியறமாதிரி கொடுத்துடறேனே ;-)))

இங்க கொடுக்க முயற்சித்தேன் முடியலங்க... ஒருத்தன விட்டு ஒருத்தன சொன்ன அவன் ஒரு மாதிரியா முறைக்கிறான்... எல்லா படிக்கிற புத்தகமும் இருக்கு...

நான் ஒரு சாது ;-))), எனவே என் டேஸ்ட் உங்களுக்கு தெரியும்தானே?

July 27, 2006 10:11 AM  
Blogger Sivabalan said...

தெகா,

கொஞ்சம் பெரிய லிஸ்ட் இருந்தாலும் பரவாயில்லை.. தயவு செய்து இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.. நிச்சயம் உபயோகமாக இருக்கும்..

July 27, 2006 10:28 AM  
Blogger கோவி.கண்ணன் said...

சொல்லிக் கொள்கிறமாதிரி புத்தகங்கள் என்ற பெரிய அளவில் ஏதும் வைத்திருக்கவில்லை. வார்த்தை சித்தர் வலம்புரிஜானின் இந்த நாள் இனியநாள், சொல்வேந்தர் சுகி.சிவம் இவர்களது புத்தகங்கள் சிறிய அளவில் இருக்கிறது. தேவைப்படும் போது நூலகத்தில் எடுத்துவருவதோடு சரி. பெற்றோர்களின் வீட்டில் பகவத் கீதை இருக்கும் எடுத்து படிக்க விட மாட்டார்கள், அதல்லாம் படிச்சா சின்னப்பசங்க சாமியார் ஆகிவிடுவார்கள் என்று பத்திரமாக வைத்திருந்து சரஸ்வதி பூஜைக்கு எடுப்பார்கள். அப்பாவிடம் ஜோதிட புத்தகங்கள் நிறைய இருந்தது, அப்பாவிற்கு பிறகு அவற்றிற்கும் ஆயுள் ரேகை கரையானால் அழிந்தது.

July 27, 2006 7:15 PM  
Blogger Sivabalan said...

கோவி.கண்ணன் சார்,

சுகி.சிவம் நன்றாக இருக்கும்..

கரையானிடமிருந்து காப்பாற்றியிருக்கலாம் புத்தகம் என்ற முறையில்...

July 27, 2006 8:49 PM  
Blogger Unknown said...

நல்ல பதிவு சிவபாலன்

என்னிடம் இருக்கும் தமிழ்புத்தகங்கள்

பாலகுமாரனின் ஓராயிரம் நாவல்கள்:-)
திருக்குறள்
கீதை (கீதா பிரஸ்)
குறையொன்றும் இல்லை
பாரதம்
ராமாயணம்

July 27, 2006 8:56 PM  
Blogger Sivabalan said...

செல்வன் சார்,

உங்கள் புத்தக வரிசை அருமை..

நன்றி.

July 27, 2006 9:01 PM  
Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

சிவபாலன்,

நூலகம்: ரொம்ப ரொம்ப பிடிச்ச விதயமிது. வீட்டு நூலகம் மட்டுமல்ல பொது நூலகங்கள் மிகவும் பிடிக்கும் எனக்கு. இங்கேயிருக்கும் பொது நூலகங்கள் பற்றி ஓர் இடுகை எழுத வேண்டும் என்று நினைத்ததுண்டு. அதுவும் கடந்த மே மாதம் வரை மான்ரியல் 'book capital of the world' என்று பட்டயம் கொடுத்திருந்தபோது. நம்மூரில் நியூடெல்லி அம்மாதிரி ஒரு வருடம் இருந்ததாம்.

என்னுடைய வீட்டில் நூலகம் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்ற கனவெல்லாம்கூட உண்டு. :)

சரி விடுங்க. விட்டா இன்னிக்குப்பூரா பேசிட்டிருப்பேன்.

நூலகம் என்று தனியாக இல்லாவிட்டாலும் ஒரு பெரிய புத்தக அலுமாரி + குட்டி அலுமாரி முழுக்கக் கொஞ்சம் புத்தகங்கள் இருக்கின்றன. பட்டியலிடச் சோம்பலாக இருக்கிறது. பெரும்பாலானவை இந்திய + இலங்கை இலக்கியங்கள் (புனைவு + அபுனைவு). கணினி சம்பந்தமான புத்தகங்கள். தமிழ்ச் சிற்றிதழ்கள். ஆங்கில இலக்கியப் புத்தகங்கள் நாலைந்து. ஆங்கில non-fiction கொஞ்சம். இரண்டு மூன்று ப்ரெஞ்சுப் ஆரம்ப நிலைப்புத்தகங்கள்.

பட்டியலிடும் பழக்கம் பிறவிக்குணம் என்பதால் இங்கே கொஞ்சம்..

கடைசியாக வாங்கியவை:

கொல்லனின் ஆறு பெண்மக்கள் - கோணங்கி
பட்டுப்பூச்சிகள் உறங்கும் மூன்றாம் ஜாமம் - கோணங்கி
உப்புக்கத்தியில் மறையும் சிறுத்தை - கோணங்கி [இப்போதுதான் படிக்க் ஆரம்பித்திருக்கிறேன். ஆனால், இவருடைய வார்த்தைப் பின்னல்களுக்கு அதிபயங்கர விசிறியாகிவிட்டேன். ;) ]
பயங்கரவாதம்: அகமும் புறமும் - jean baudrillard தமிழில் எம்.கண்ணன்

hopscotch - julio cortazar

கடைசியாகக் கிடைத்த அன்பளிப்பு

சொல்லப்படாத சினிமா - 'நிழல்' திருநாவுக்கரசு
தலித் இலக்கியம்: எனது அனுபவம் - எம்.கண்ணன்

இரவல்:
பாழி - கோணங்கி
dictionary of the khazars - milorad pavic
the argumentative indian - amartya sen
The rules of the Game (film script) - Jean Renoir

ஒரு தருணத்தில் ஒரேயொரு புத்தகம் மட்டும் படிப்பேன் என்றில்லை. மனோநிலை + சூழலைப் பொருத்துப் படிக்கும் புத்தகம் மாறுபடும். அதனால் ஒரு தருணத்தில் நாலைந்து புத்தகங்கள் கூடப் படித்து/புரட்டக்கொண்டிருப்பதுண்டு.

பி.கு:
புத்தகம், நூலகம் என்றதும் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு நீட்டி முழக்கிட்டேன். ;)

July 27, 2006 10:16 PM  
Blogger Sivabalan said...

மதி கந்தசாமி அய்யா,

மிக அருமையாக சொல்லியிருக்கிறீர்கள். என்னுடைய பதிவைவிட உங்களுடைய பின்னூடம் மிக அருமை. மிக்க நன்றி.

முடிந்தால், உங்களிடம் இருக்கும் புத்தகங்களின் பட்டியலையை ஒரு தனிப் பதிவாக கொடுத்தால் அனைவருக்கும் மிக உபயோகமாக இருக்கும்.

வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் மிக மிக நன்றி.

July 27, 2006 10:27 PM  
Blogger Sivabalan said...

மதி கந்தசாமி அய்யா,

//ஒரு தருணத்தில் ஒரேயொரு புத்தகம் மட்டும் படிப்பேன் என்றில்லை. மனோநிலை + சூழலைப் பொருத்துப் படிக்கும் புத்தகம் மாறுபடும். அதனால் ஒரு தருணத்தில் நாலைந்து புத்தகங்கள் கூடப் படித்து/புரட்டக்கொண்டிருப்பதுண்டு.//


படிக்கும் சிந்தனையைத் தூன்டும் வரிகள்.. நன்றி

July 27, 2006 10:30 PM  
Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

//மதி கந்தசாமி அய்யா,//

எம்பேரு சந்திரமதி. அய்யா இல்லை. அதுக்காக அம்மாவும் இல்லிங்க. :)

July 27, 2006 11:13 PM  
Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

பாரதியாரே எனக்காகப் பாடியிருக்கார்... :)

இங்க என்னை இத்தனை வருஷத்துக்கப்புறமும் :(

http://mathy.kandasamy.net/musings/2006/07/27/476

July 27, 2006 11:43 PM  
Blogger வெற்றி said...

சிவபாலன்,
நானும் வீட்டில் நூலகம் வைத்திருக்கிறேன். இதுவரை கிட்டத்தட்ட 400 புத்தகங்கள் உள்ளன. அதிகமான புத்தகங்கள் உலகின் போராட்ட/அரசியல் வரலாற்றுப் புத்தகங்கள். அதிகமான புத்தகங்கள் ஆங்கிலப் புத்தகங்கள்.
நீங்கள் கேட்டதற்காக சில புத்தகங்களைப் பட்டியலிடுகிறேன்.

1.Long Walk To Freedom
நெல்சன் மண்டேலாவின் சுயசரிதை.

2.Unequal Conflict: The Palestinians and Israel

3. Break up of SriLanka
ஈழத்தமிழர் போராட்ட வரலாற்றை
அறிய விரும்புவோர் கட்டாயம்
படிக்க வேண்டிய புத்தகம். இப்
புத்தகத்தை எழுதியவர் பற்றி ஒரு
தனிப் பதிவே போடலாம்.
இலங்கை அதிபர் J.R. ஜெயவர்த்தனே, மற்றும் அமெரிக்க அதிபர் றொனால்ட் றேகன் போன்றோருக்கு ஆலோசகராகவும் இருந்தவர். கனடாவில் உள்ள நியூபுறுன்ஸ்விக் பல்கலைக்கழகம் வருடா வருடம் இவரின் பெயரால் புலமைப்பரிசுகள் வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது. இவரைப் போல ஒரு அரசியல்விஞ்ஞானி ஈழத்தில் பிறக்கவில்லை என்பது என் கருத்து.

4. My Life : Bill Clinton
5. The Kennedy Men : 1901 - 1963
6. தொல்காப்பியப் பூங்கா
7. கண்ணதாசன் கவிதைகள்
8. வியாசனின் உலைக்களம்
9. குறளோவியம்
10.The Age of Kali

July 28, 2006 12:05 AM  
Blogger Muthu said...

சிவபாலன்,

சூப்பர்.


1.என்னிடம் சு.ரா வின் அனைத்து புத்தகங்களும் உள்ளன.(கவிதை தவிர்த்து)

2.சத்தியசோதனை

3.பாரதியார் கவிதைகள்

4.பிரம்ம ரகசியம்( இந்தய மதங்கள் பற்றிய தத்துவ விளக்க நூல்)

5.கம்ப்யூட்டர் புத்தகங்கள்

6.ஜெயமோகன் சிறுகதைகள் தொகுப்பு

7.அ.மார்க்ஸ் கட்டுரைகள்

8.இப்ப ரஜினிராம்கியின் மு.க வும் சப்தமா சகாப்தமாவும் படிக்கிறேன்.

(இன்னும் பெரிய லிஸ்ட் இருக்கு)

July 28, 2006 6:41 AM  
Blogger Sivabalan said...

மதி,

தவறுக்கு மன்னித்துவிடுங்கள்.

நிச்சயம் நீங்கள் கொடுத்த சுட்டியை பார்கிறேன்.

மீன்டும் வருகைக்கு நன்றி.

July 28, 2006 7:07 AM  
Blogger Sivabalan said...

வெற்றி,

மிக அருமையான புத்தக வரிசை.

அந்த நெல்சன் மன்டேலா புத்தகத்தை பற்றி ஒரு தனிப்பதிவு போடுங்கள். அனைவரும் தெரிந்துகொள்கிறோம்.

400 புத்தகமா? ஒரு மினி நூலகமின்னு சொல்லுங்க..

நல்ல விசயம். ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது கேட்பதற்கே.

வருகைக்கும் கருத்து பதிவிற்கும் மிக்க நன்றி.

July 28, 2006 7:13 AM  
Blogger Sivabalan said...

முத்து

கலக்கிடீங்க... சரியான புத்தக வரிசை.

நேரம் கிடைக்கும் போது "சத்தியசோதனையைப் பற்றிய உங்களுடைய சிந்தனைகளை ஒரு பதிவாக கொடுங்கள். படிக்க ஆவலாக உள்ளது.

மற்ற புத்தக லிஸ்டை தனிப் பதிவாகவோ அல்லது இங்கேயோ சொல்லிவிடுங்கள்.. எல்லோருக்கும் பயனளிக்கும்..

நன்றி

July 28, 2006 7:19 AM  
Blogger Sivabalan said...

Update - திரு.கோவி.கண்ணன் அய்யா அவர்கள் நூலகம் பற்றி பதிவிட்டிருக்கிறார். அதன் சுட்டி..

July 28, 2006 7:31 AM  
Blogger Sivabalan said...

Update - "Invitation to all Bloggers"

July 28, 2006 8:13 AM  
Blogger கோவி.கண்ணன் said...

அய்யா ... இது என்ன கோவி.கண்ணன் அய்யா ... அய்யா வேண்டம் அய்யா கோவி.கண்ணன் போதும் அய்யா ! அல்லது கோவி அல்லது ஜிகே அல்லது கண்ணன்.

அய்யா என்பது அய்யாக்களுக்கு உரியது, அய்யா... ! நான் ஆகவில்லை அய்யா

வடிவேலு சொல்வது மாதிரி திருப்பி சொல்லிவிடாதீர்கள்.

July 28, 2006 8:42 AM  
Blogger Sivabalan said...

GK, (Genius, Knowledgeable)

தங்கள் விருப்பம்...

July 28, 2006 8:47 AM  
Blogger Unknown said...

என்னால் இப்போது தெளிவாக ஒரு பட்டியலும் தரவியலாது என்றாலும் இன்னொரு பெருமையான ஒரு தகவலை தர முடியும். சிந்தனையாளர் திரு.வே.ஆனைமுத்து அவர்கள் எனது உறவினர். நான் பிறந்தது கிழுமத்தூரில் அவர் பிறந்த ஊர் கிழுமத்தூர் மற்றும் எறையூர் சர்க்கரை ஆலை இடையே இருக்கும் முருக்கன்குடி எனும் சிறு கிராமம். அவரின் சிறுவயதில் எனது தாத்தாவே படிப்பதற்க்கான பொருளுதவிகள் செய்ததாக சொல்வார். அவரோடு எனது குடும்பத்துக்கான நட்பு மிக நீண்டது. அவர் முதலில் திருச்சியில் இருக்கும் போது அவர் தலைமையில் எனது தந்தையின் திருமணம் நடந்தது. எனது தாத்தா இறந்து போனபோது அவர் (வே.ஆனைமுத்து) பட்ட வேதை சொல்லவியலாது. அவரின் ஒரு தம்பியும் இன்று முருக்கன்குடியில் இருக்கிறார். அவரை முதன் முதலில் விபரம் தெரிந்த பிறகு 1995 ம் ஆண்டு சென்னை தாம்பரத்தில் சக்தி திருமண மண்டம் அருகில் அவரின் இல்லத்தில் சந்தித்தேன். எனது இரண்டாவது சகோதரியின் திருமண அழைப்பு கொடுக்க அதன் பின் எனது திருமணமும் அவர் தலைமையில் நடைபெற்றது. சிந்தனையாளன் எனும் மாத இதழும் பெரியார் எரா எனும் ஆங்கில மாத இதழும் அவரின் திருவல்லிக்கேணி முருகப்பா தெருவில் இருக்கும் சிந்தனையாளன் பதிப்பகத்தில் இருந்து வருகின்றன. இன்றுவறை தனது பயனச் செலவுகளுக்காக அழைப்பாளர்களிடம் இருந்து எதுவும் பெறுவதில்லை அப்படி யாரும் வற்புறுத்தினால் சிந்தனையாளன் இதழுக்கு சந்தாவாக செலுத்த சொல்லுவார்.
முன்னாள் பிரதமர் திரு வி.பி.சிங்குடன் அவர் நல்ல நெருக்கம் கொண்டவர். பெரியாரின் கடைசிக் காலங்களில் அவருடனே இருக்கும் சந்தர்பம் பெற்றவர்களுள் இவரும் ஒருவர். மண்டல் அமுல்படுத்தப்பட்ட போது டெல்லியில் மிக நீண்ட காலம் தங்க வேண்டி வந்ததில் தனது சில பூர்வீக சொத்துக்களை இழந்தவர். உண்மையில் சொல்லவேண்டுமானால் பிரபலமாகாத பெரியாரின் வாரிசு. இவர் பற்றிய தனிப் பதிவு விரைவில் வரும் சில கடவுள் சார்ந்த நம்பிக்கைகளை எனது குடும்பம் மறுப்பதற்கு இவரும் ஒரு காரணம் அனது உறவினர் இவர் என்பதில் எனக்கு பெருமைதான். எங்கள் வீட்டின் எல்லா விழாக்களுக்கும் இவர் நிரந்தரத் தலைமை உண்டு

July 28, 2006 8:51 AM  
Blogger கோவி.கண்ணன் said...

//Sivabalan said...
GK, (Genius, Knowledgeable)
//
Genius அல்ல வெறும் Genearal தான் :)

July 28, 2006 8:53 AM  
Blogger VSK said...

அறிவியலில் இருந்து ஆன்மீகம் வரை ஏராளமான புத்தகங்கள் இருக்கின்றன.[படித்தும் உள்ளேன்!!]
இன்னும் வாங்கியும், இரவல் வாங்கியும் படித்துக் கொண்டும் இருக்கிறேன்.
பட்டியல் வேண்டாமே!

நிறையப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டும் பதிவிட்டதற்கு நன்றி, சிபா!
[அப்படித்தானே கோவியார் அழைக்கிறார் உங்களை!]

July 28, 2006 9:04 AM  
Blogger Sivabalan said...

திரு.மகேந்திரன்.பெ,

// உண்மையில் சொல்லவேண்டுமானால் பிரபலமாகாத பெரியாரின் வாரிசு //

சிந்தனையாளர் திரு.வே.ஆனைமுத்து அவர்கள் பற்றி மிக மிக அருமையாக பகிந்துகொண்டுள்ளீர்கள்.

மிக மகிழ்ச்சியாக உள்ளது. அவர் வெளியிடும் இதழ்களைப் பற்றியும் அதன் முகவரி பற்றியும் சொல்லுங்கள். நிச்சயம் பேருதவியாக இருக்கும்.

அவரின் பத்தக வரிசை மற்றும் அதன் சிறப்பு ஆகியவற்றை படித்தவுடன் மனமகிழ்வுற்றேன். அதன் விளைவே இப்பதிவு.

வருகைக்கும் கருத்துபதிவுக்கும் மிக மிக நன்றி.

July 28, 2006 9:07 AM  
Blogger Sivabalan said...

GK,

ஜென்ரலிலேயே ஜீனியசும் இருக்கிறது என்கிறீர்களா.. சரி சரி

July 28, 2006 9:10 AM  
Blogger Sivabalan said...

SK அய்யா,

நீங்கள் படிக்கும் அறிவியல் விசயங்களையும் கொஞ்சம் பகிர்ந்து கொள்ளுங்கள்..

உங்கள் புத்தக வரிசையைப் பார்க்க ஆவலாக உள்ளது..

July 28, 2006 9:22 AM  
Blogger VSK said...

உ.கு. புரிகிறது, சிபா!

:))))

July 28, 2006 9:30 AM  
Blogger Sivabalan said...

SK அய்யா,

க.க.க.போ...

(இம்சை அரசினில் வரும் வசனம்.. கருத்தை கன கச்சிதமாக கவ்விக்கொண்டீர்கள் போங்கள் )

July 28, 2006 9:35 AM  
Blogger Unknown said...

அவரின் மிகச் சரியான முகவரி இப்போது என்னிடம் இல்லை எனது தந்தைக்கு ஒரு தொலைபேசி பின் வாங்கித் தருகிறேன். அல்லது அடுத்ததாக அதையே ஒரு பதிவாக இருகிறேன். அவர் ஒரு கட்சியின் நிருவனரும் கூட : மார்க்கசீய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி.
இனி எனது நூலகத்தில் இருக்கும் குறிப்பிட வேண்டிய சில புத்தகங்கள்:
(நிஜமாகவே என் வீட்டில் நூலகம் உண்டு)
முதலில் எனது தந்தையின் சேமிப்புக்கள்:
1. பிற்கால சோழர் சரித்திரம் - சதாசிவ பண்டாரத்தார் (பாகம்1,2,3,4)
2. திரு.வி.க வின் நூல்கள்
3.பெரியாரின் மனுநீதி ஒரு குலத்துக்கு ஒரு நீதி (இன்னும் சில உண்டு சரியான நிணைவில்லை)
4.திருக்குறள் டாக்டர் மு.வ.விளக்கவுறை
5. கள்ளோ காவியமோ- நாவல்
6. சத்திய சோதனை -mahathma gandhi

எனது சேமிப்புக்கள்:
1.வாழ்வும் மரணமும்- சேகுவேரா வின் வரலாறு -ஜார்ஜ் ஜி காஸ்டனாடா - விடியல் பதிப்பகம்
2.எனது போராட்டம் - சேகுவேரா
3.மோட்டார் சைக்கிள் நாட்குறிப்புக்கள் - சே குவேரா -விடியல் பதிப்பகம்
4.காங்கோ பயனங்கள் - சே குவேரா
5.டிஸ்கவரி ஆப் இந்தியா- ஜவகர்லால் நேரு
6.கற்றதும் பெற்றதும் - சுஜாதா
7. ஏன் ? எதற்கு? எப்படி - சுஜாதா
8.வந்தார்கள் வென்றார்கள் - மதன்
9. வருசனாட்டு ஜமீன் கதை- வடவீர பொன்னையா
10.மெய்ன் காம்ப்- அடால்ப் ஹிட்லர் - ஆங்கிலம்
11. இந்தியா டுடே- இலக்கிய ஆண்டு மலர்கள்
12. 1000 wonders of the world -Readers digest
13. how did it really happen -Readers Digest
14. Mysterious of the World -Readers Digest
15. 100 years Of Civiliation - Time
16. Secretes of Love and sex- Readers Digest
17. God of Small Things - arunthathi rai
18. Foundemental of Economics _peter F Drucker
19. War and Peace -Leo Talstoy

சில ரஷ்ய நாவல்கள்:
1. தாய்- மக்ஸீம் கார்க்கி
2. மூவர் - மக்ஸீம் கார்க்கி
3.மூன்று காதல் கதைகள்- அலெக்ஸாந்தர் குப்ரின்
4. காரின் அழிவுக்கதிர்- அலெக்ஸோய் தல்ஸ்தொய்

ஓஷோ:
1.ஒருகோப்பை தேனீர்
2.வெற்றுப் படகு
3.புத்தரின் தம்மபதம்
இன்னும் சில

July 28, 2006 9:36 AM  
Blogger Sivabalan said...

திரு.மகேந்திரன்.பெ,

சிந்தனையாளர் திரு.வே.ஆனைமுத்து அவர்கள் பற்றிய தகவலுக்கு நன்றி. தனிப் பதிவிடுங்கள். மிகவும் சிறப்பாக இருக்கும்.

உங்களின் புத்தக வரிசை அருமை. ஆழ் சிந்தனையை தூண்டும் புத்தகங்களின் வரிசை.

முடிந்தால் இதைப் பற்றியும் ஒரு பதிவிடுங்கள்.

நன்றி!

July 28, 2006 9:49 AM  
Blogger வெற்றி said...

மகேந்திரன்.பெ,


கீழுள்ள புத்தகங்கள் ஆங்கிலத்தில் இருந்தால் அப் புத்தகங்களின் தலைப்புகளைத் தரமுடியுமா?

//1.வாழ்வும் மரணமும்- சேகுவேரா வின் வரலாறு -ஜார்ஜ் ஜி காஸ்டனாடா - விடியல் பதிப்பகம்
2.எனது போராட்டம் - சேகுவேரா
3.மோட்டார் சைக்கிள் நாட்குறிப்புக்கள் - சே குவேரா -விடியல் பதிப்பகம்
4.காங்கோ பயனங்கள் - சே குவேரா//

மிக்க நன்றி.

சிவபாலன்,

//அந்த நெல்சன் மன்டேலா புத்தகத்தை பற்றி ஒரு தனிப்பதிவு போடுங்கள். அனைவரும் தெரிந்துகொள்கிறோம். //

நிச்சயமாக. வரும் வாரம் ஓரு பரீட்சை எழுதவேண்டியுள்ளதால், கொஞ்சம் தாமதமாகத்தான் பதிவிட முடியும் என்பதையும் இங்கே நினைவுகூர விரும்புகின்றேன். நன்றி.

July 28, 2006 1:25 PM  
Blogger Sivabalan said...

வெற்றி,

பரிட்சையில் பெயருக்கேற்றவாறு வெற்றி பெற வாழ்த்துக்கள்.

July 28, 2006 1:36 PM  
Blogger Unknown said...

//1.வாழ்வும் மரணமும்- சேகுவேரா வின் வரலாறு -ஜார்ஜ் ஜி காஸ்டனாடா - விடியல் பதிப்பகம்
2.எனது போராட்டம் - சேகுவேரா
3.மோட்டார் சைக்கிள் நாட்குறிப்புக்கள் - சே குவேரா -விடியல் பதிப்பகம்
4.காங்கோ பயனங்கள் - சே குவேரா//

here in english:
1).Compañero : the life and death of Che Guevara
by Jorge G. Castañeda
2).The Motorcycle Diaries: Notes on a Latin American Journey: by Ernesto Che Guevara
3).Guerrilla Warfare
by Ernesto Che Guevara
4).The African Dream: The Diaries of the Revolutionary War in the Congo - by Ernesto Che Guevara

July 28, 2006 1:54 PM  
Blogger Unknown said...

இப் புத்தகங்களின் எல்லா தமிழ்ப்பதிப்புக்களும் விடியல் பதிப்பகத்தில்(கோவை) கிடைக்கும்

July 28, 2006 1:55 PM  
Blogger வெற்றி said...

மகேந்திரன்.பெ,

என் கேள்விக்கு சுடச்சுட[உடனடியாக] பதில் தந்தமைக்கு மிக்க நன்றி. மகேந்திரன், உங்களின் முதல் எழுத்தை தமிழில் எழுதிவருவது கண்டு மிக்க மகிழ்ச்சி. பாராட்டுக்கள். இப் பழக்கத்தை தொடருங்கள். ஏனோ தெரியவில்லை சில தமிழக உறவுகள் தமிழில் எழுதும் போதும், தங்களின் முதல் எழுத்தை தமிங்கிலத்தில் அல்லது ஆங்கிலத்தில் எழுதுகின்றனர். ஏன் இந்த மடமைத்தனம்? ஆங்கில மோகமா?

//பரிட்சையில் பெயருக்கேற்றவாறு வெற்றி பெற வாழ்த்துக்கள். //

சிவபாலன், மிக்க நன்றி.

July 28, 2006 2:04 PM  
Blogger Unknown said...

//என் கேள்விக்கு சுடச்சுட[உடனடியாக] பதில் //
மிக்க நன்றி வெற்றி எனக்கு அவற்றின் ஆங்கிலப் பெயர்கள் சரியாக நினைவில் இல்லாத காரணத்தினால் தான் கொஞ்சம் தேடலுக்கானது இல்லாவிட்டால் சுடச்சுட இல்லை ..கொதிக்க கொதிக்க..தந்திருப்பேன்.

//உங்களின் முதல் எழுத்தை தமிழில் எழுதிவருவது கண்டு மிக்க மகிழ்ச்சி//

அது சிறுவயது முதலே எனது தந்தை மற்றும் தாத்தாவை பார்த்து வந்ததது. பின் அதுவே எனது பழக்கமும் ஆனது. அலுவல் தவிர வேறெங்கும் அன்னியர் (தமிழர் இல்லாத) தவிற யாரிடமும் தமிழில் மட்டுமே எழுதுவது பேசுவது என்ற ஒரு பழக்கம் எனக்கே தெரியாமல் ஒட்டியிருக்கிறது என்னிடம்

July 28, 2006 3:10 PM  
Blogger Sivabalan said...

Mobile Mob,

Can you be specific with link. It is going to some sports website.

This blog is about personal library.

Thanks

August 03, 2006 6:48 AM  
Blogger Sivabalan said...

newloghere,

Thanks for your visit.

August 16, 2006 1:17 PM  
Blogger Sivabalan said...

சிந்தனையாளர் வே.ஆனைமுத்து அவர்களைப் பற்றி திரு.மகேந்திரன் அவர்கள் பதிவிட்டிருக்கிறார்.. அதையும் படிங்க..

August 27, 2006 8:53 AM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv