Tuesday, July 25, 2006

மெய்நிகர் Brainstorming..மேலாண்மையைப் பற்றிய இன்னொரு பதிவு.

இங்கே நான் எடுத்துக் கொண்டுள்ள விசயம் மீன்டும் Brainstorming. இதை இன்னம் கொஞ்சம் எளிமைப் படுத்தி சொல்லலாம் என முயன்றுள்ளேன்.

சரி, "Brainstorming" என்றால் என்ன என்பதை அறிய முந்தைய பதிவுக்கு சென்றுவிட்டு வந்துவிடுங்கள்.

நான் கிழே கொடுத்துள்ள உதாரனம் ஒரு Projectல் உணமையில் நடந்த நிகழ்வு.

சரி... இப்பொழுது...

எடுத்துக்கொண்ட பிரச்சனை, கட்டிட பொருள்கள் (உ.ம். செங்கல்) இதை 8வது மாடிக்கு கொண்டு செல்ல வேண்டும். நவீன Elevator பயன்படுத்தி 4வது மாடிவரை கொண்டுசெல்லப் பட்டது. அதற்கு மேல் ஆட்களை வைத்துதான் கடத்த வேண்டிய சூழ்நிலை. அவ்வாறே முடிவும் செய்யப்பட்டது.

ஆனால் ஆட்களைப் பயன்படுத்தும் போது மிகவும் Productivity குறைந்து காணப்பட்டது. ஆட்களும் வெகு சீக்கிரம் சோர்ந்துவிடுகின்றனர். இந்த Productivity எவ்வாறு அதிகப் படுத்துவது. இது தான் Brainstormingல் வைக்கப்பட்ட பிரச்சனை.

இதே பிரச்சனையை இங்கே நான் வைக்கிறேன். யார் வேண்டுமானலும் யோசனை கூறலாம். இதை "மெய்நிகர்" (Virtual) Brainstorming என்று கூட கூறலாம்.
(நன்றி: திரு.இராம.கி. ஐயா, திரு.குமரன்)

உங்கள் யோசனைகள் கடைசியில் பறிசிலிக்கப்பட்டு தீர்வு காணப்படும்.

அதே போல் உண்மையில் Project என்ன தீர்வு கொடுத்தோம். அது எவ்வாறு பயனளித்தது என்பதை இறுதியில் சொல்கிறேன்.

இங்கே யோசனைகள் மட்டும் சொல்லுங்கள். மற்றவர்களின் யோசனையை குறை கூறவோ அல்லது மதிப்பீடு செய்யவோ கூடாது. இது Brainstormingன் விதிமுறை.

70 Comments:

Blogger பொன்ஸ்~~Poorna said...

சிவபாலன்,

Brainstorming என்றால், ஒரு முடிவெடுக்குமுன் செய்யும் மந்திராலோசனை என்று சொல்லலாம் அல்லவா?

அப்படி இருக்கும் போது, மெய்நிகர் மந்திராலோசனையோ, மெய்யான Brainstorming-ஓ, அதை அந்தந்தத் துறையினர், சம்பந்தப் பட்டவர் செய்யும் போது தானே அது சிறக்கும்?

உதாரணத்துக்கு, இந்த செங்கல்லை மேலே எடுத்துப் போகும் விஷயம் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது.. நான் எப்படி இந்த மாதிரி விஷயத்தில் யோசனை சொல்ல முடியும்?

July 25, 2006 1:20 PM  
Blogger Sivabalan said...

பொன்ஸ்,

நீங்கள் சொல்வது முற்றிலும் சரி.

இங்கே செங்கல் என்பதற்கு பதில், வேறு பொருள் கூட வைத்துக்கொள்ளலாம். உ.ம் துணிக்கடை பொருள்களை ஆட்கள் மூலம் கடத்துவது போல்...

நீங்கள் சொல்வது போல் அந்த துறையை சார்ந்தவர்கள் தான் சரியான ஆலோசனை கூறமுடியும்.

எனினும் Brainstormingயை விளக்கும் முயற்சி இது.

அதனால் தயவுகூர்ந்து தெரிந்த எந்த யோசனையையும் கூறலாம்.

July 25, 2006 1:29 PM  
Blogger Sivabalan said...

இன்னொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன்.

Brainstormingல் பெரிய பெரிய Consulatnt தேவை என்பது கிடையாது. இது பிரச்சனையைப் பொருத்து மாறுவார்கள்.

உணமையை சொன்னால், இந்த குறிப்பிட்ட பிரச்சனைக்கு தீர்வு கொடுத்தது ஒரு மேஸ்திரியே..

July 25, 2006 1:34 PM  
Blogger பொன்ஸ்~~Poorna said...

சிவபாலன்,
யோசனையைச் சொல்றேன்.. தொடர்பிருக்குமோ என்னவோ..

செங்கல்லை எடுத்துச் செல்லும் ஆட்களின் எண்ணிக்கையைக் கூட்டலாம்.. அதன் மூலம் அவர்களுக்கான ஓய்வு நேர இடைவெளியை அதிகரிக்கலாம்..

ஒரே ஆள் கடைசி வரை எடுத்துச் செல்லாமல், ஆங்காங்கே ஆட்களை நிறுத்தி கல்லைக் கை மாற்றி மாற்றி அளிப்பதன் மூலம் உழைப்பும் களைப்பும் குறையும்.. (Conductive Heating Principle)

July 25, 2006 1:43 PM  
Blogger Sivabalan said...

பொன்ஸ்

உங்கள் யோசனைக்கு நன்றி.

விதி முறை கருதி, இக் கருத்தை மதிப்பீடு செய்ய முடியாது.

எனினும் இந்த Brainstorming Idea Session நாளை மதியம் முடிவுக்கு வரும். அதற்கு பின் யோசனைகள் பரிசிலிக்கப்பட்டு தீர்வு காணப்படும்.

July 25, 2006 1:56 PM  
Blogger Thekkikattan said...

என்னத்த சொல்றது இப்பிடி ஒரு கேள்விய கேட்டுப்புட்டிக...

ஏதோ என் மண்டைக்கு எட்டுனத சொல்லிபுடறேன்.

1) வேலை பார்க்கும் திறன், வேலை பார்ப்பவர்களிடம் அதீதப் படுத்த வேண்டுமெனில், அவர்களுடன் கலந்துரையாடி ஒரு Freidnlyயான சூழலை நிலவ விட வேண்டும்.

2) பிறகு Deadline போன்று ஏதாவது அந்த வேலை முடித்துக் கொடுப்பதற்கென இருந்தால் அதனையும் அவர்களிடத்தே பகிர்ந்து கொள்ளலாம்.

3) தேவையான அளவு ட்டீ பிரேக், பிறகு சம்பந்தப்பட்ட சூப்பர்வைசரும் அருகிலேயே இருந்து அவர்களுடன் வேலை செய்தால் அவர்களுக்கு இன்னமும் உற்சாகமூட்டுவதாக இருக்கலாம்.

4) ஆகா மொத்தத்தில் மனிதர்களை உணர்வுப் பூர்வமாக மதித்தால் நிச்சயமாக, productivity எல்லா சூழலிலும் சிறக்க வாய்ப்பு அதிகம் என்பது, என்னுடைய புரிதல்.

July 25, 2006 2:25 PM  
Blogger Sivabalan said...

தெகா,

தங்கள் ஆலோசனைகளுக்கு நன்றி.

July 25, 2006 5:10 PM  
Blogger SK said...

பொன்ஸ் சொன்னதோட உ.கு. தெரியலியா, இல்லை புரியலியா உங்களுக்கு!??

இன்னொரு தபா அவங்க சொன்னதைப் படிங்க!

இ.கொ. தான் இதுக்கு சரியான ஆளு!

அவருக்கு தனிமடல் அனுப்பி கேக்கறதை விட்டுட்டு எங்க உசிரை வாங்கறீங்களேன்னு சொல்லியிருக்காங்க!

சரிதானே பொன்ஸ்!!?
:)))

July 25, 2006 5:46 PM  
Blogger SK said...

//உணமையை சொன்னால், இந்த குறிப்பிட்ட பிரச்சனைக்கு தீர்வு கொடுத்தது ஒரு மேஸ்திரியே..//


ம்ம்ம்ம்! கிட்டத்தட்ட நெருங்கி வந்துட்டீங்க!

July 25, 2006 5:48 PM  
Blogger SK said...

//அதற்கு மேல் ஆட்களை வைத்துதான் கடத்த வேண்டிய சூழ்நிலை. அவ்வாறே முடிவும் செய்யப்பட்டது.//


என்னது....?கடத்துறீங்களா?

அது என்ன செங்கல்லா, இல்லை, ஸ்மக்கிள்டு கோல்டா!![smuggled gold]

இது ரொம்ப வெவகாரமான வேலையா இருக்கும் போலிருக்கே!

பெரிய கேங்க்ஸ்டர் [gangster]கூட்டம் போல!

July 25, 2006 5:54 PM  
Blogger SK said...

//இந்த Productivity எவ்வாறு அதிகப் படுத்துவது. //

ஊக்க போனஸ் கொடுக்கலாமே!!
:))

July 25, 2006 5:56 PM  
Blogger Sivabalan said...

SK அய்யா,

தங்கள் கருத்துக்கு நன்றி.

இ.கோ. சார், வருவார் என நினைக்கிறேன்..

இன்றய நிலையில் அப்பொருள்களின் விலையைப் பார்த்தால் அது கோல்டுதான் என தோன்றுகிறது.


//[gangster]கூட்டம் போல//
நம்ம கூட்டத்துக்கு தலைவரே நீங்கள் தான்..

July 25, 2006 7:34 PM  
Blogger Sivabalan said...

SK அய்யா,

தங்கள் துறையில் இது போன்றதொரு Brainstorming Session வாய்ப்புகள் அதிகம் உள்ளதா? Just அறிய ஆவல்.

July 25, 2006 7:37 PM  
Blogger கோவி.கண்ணன் said...

திரு சிவபாலன்,
தமிழில் ஒரு பாடல் இருக்கிறது 'ஆடிப் பாடி வேலை செய்தால் அலுப்பு இருக்காது' என்ற பாடல்....படம் பெயர் நினைவு இல்லை.

வேலையை வேலை என்று பார்த்தால் ஒரு அலுப்பு வருவது உண்மைதான். வேலைகளில் ஈடுபடும் போது உற்சாகம் இருக்கவேண்டும். முதலாளிகளுக்கு லாபம் கிடைப்பதால் முனைப்புடன் செயல்பட்டு முன்னேறுகிறார்கள். ஆனால் சம்பளம் பெறுகிறவர்கள் கடமைக்குத்தானே வேலை செய்வார்கள். பணியிடத்தில் என்டர்டயின்மென்ட் அவசியம் அது இருந்தால் அசதி தெரியாமல், உற்சாகமாக வேலை செய்வார்கள் என்று நினைக்கிறேன். அதாவது நேரம் செல்வதே தெரியாத அளவுக்கு ஈடுபாடு வைக்கைக் கூடிய சூழலை உருவாக்கவேண்டும்.

இங்கு சிங்கப்பூரில் ஆண்டுக்கு ஒருமுறை டின்னர் அன்ட் டான்ஸ் என்ற கேளிக்கை போன்ற நிகழ்சிகள் தொழிலாளிகளை உற்சாகப்படுத்த நடத்துவார்கள்.

July 25, 2006 8:03 PM  
Blogger Sivabalan said...

கோவி.கண்ணன் சார்,

தங்களுடைய அலோசனையை படித்தவுடன் பெரு மகிழ்ச்சி அடைந்தேன். விதி முறை காரனமாக மேற் கொண்டு என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை. நாளை Brainstorming Idea Session முடிந்து விடும். அதற்கு பிறகு உங்கள் அலோசனையை அலசுவோம்.

தங்கள் கருத்துக்கு நன்றி.

July 25, 2006 8:09 PM  
Blogger பொன்ஸ்~~Poorna said...

//இ.கொ. தான் இதுக்கு சரியான ஆளு!

அவருக்கு தனிமடல் அனுப்பி கேக்கறதை விட்டுட்டு எங்க உசிரை வாங்கறீங்களேன்னு சொல்லியிருக்காங்க!

சரிதானே பொன்ஸ்!!?//

அதே அதே..!!!

ஆனா இகொவைச் சங்கத்துக்குக் கூப்பிட்டாலும் கூப்பிட்டோம், திண்ணையை விட்டு எழுந்திருக்க மாட்டேங்கிறாரே!! எங்கிருந்து இங்க வரப் போறார்?!! :)))

July 25, 2006 8:14 PM  
Blogger SK said...

நிச்சயம் உண்டு, சிவபாலன்!

என்னைப் பொருத்தவரை, பொதுவாக, ஏன்.. பல மருத்துவர்களைப் பொருத்தவரையில், ஒவ்வொரு நோயாளியும் ஒரு தனி மனிதர்தாம் என்ற உணர்வே வரும்.

கேன்சருக்கு, ஒரு உதாரணத்துக்கு, நுரையீரகக் கேன்சருக்கு என்று வைத்துக் கொள்வோம்!

கேன்சரை அறுவைச் சிகிச்சையின்[Surgery] மூலம் அகற்றுவது ஒரு வழி.

புற்று முறி மருந்தின் மூலம் [chemotherapy]அகற்றுவது ஒரு வழி.

கதிரியக்கச் சிகிச்சையின் மூலம்[radiation] அகற்றுவது ஒரு வழி.

இவற்றில் ஒன்றைச் செய்து மற்ற ஏதாவது ஒன்றையோ, அல்லது எல்லாவற்றையுமோ செய்வது இன்னொரு வழி.[multimodal therapy]

இதில், ஒவ்வொரு நோயாளியின், கேன்சர் ஸ்டேஜிங்[Cancer staging] அளவைக் குறித்து அவருக்கு என்ன மாதிரி சிகிச்சை அளிக்கலாம் என "மூளைஇடி' [brainstorm]செய்து அவருக்குத் தேவையானதைச் செய்யும் பணியை அன்றாடம் செய்து கொண்டுதானிருக்கிறோம்!

அதனால்தான், ஒருவர் அதிக நாட்கள் உயிரோடிருக்கிறார்.

சிலர் இருப்பதில்லை.

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.[517]

என வள்ளுவப் பெருந்தகையாரும் அப்போதே சொல்லி வைத்தார்!

July 25, 2006 8:15 PM  
Blogger SK said...

//ஆனா இகொவைச் சங்கத்துக்குக் கூப்பிட்டாலும் கூப்பிட்டோம், திண்ணையை விட்டு எழுந்திருக்க மாட்டேங்கிறாரே!! எங்கிருந்து இங்க வரப் போறார்?!! :)))//


குழந்தையைக் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டுவாங்கன்னு படிச்சிருக்கேன், பொன்ஸ்!
எப்படி உங்களால, இப்படி சிரிக்காம சொல்ல முடியுது?
[சிரிப்பான் போடலை; அதனால சொன்னேன்!]

திண்ணைல கொண்டு அவரை உக்கார வெச்சதே நீங்கதான்!
இப்போ, அவர் போய் திண்ணைல உக்காந்துட்டார்னு கூசாம, சிரிக்காம சொல்றீங்களே!
நெசமாவே, நீங்க ......ஆற்றலரிசிதான்!!
:))
[சிரிப்பான் போட்டுட்டேன்!!]


p.s.:
சிவபாலனை தேத்திருவோம்

July 25, 2006 8:32 PM  
Blogger SK said...

பொன்ஸ்,
சிரிப்பான் பெருசாவே போட்டிருக்கீங்க!
நான் தான் கவனிக்க வில்லை!
இப்போதுதான் கவனித்தேன்!
உடனே அதுக்காக கலாய்க்க வேண்டாம்!

July 25, 2006 8:54 PM  
Blogger Sivabalan said...

SK அய்யா
Brainstormingக்கு அருமையான உதாரனத்தை கொடுத்து அசத்திவிட்டீர்கள்.

Brainstormingக்கு நல்ல தமிழ்ச் சொல்லை அறிமுகப்படுத்தி உள்ளீர்கள். நன்றி.

திருக்குறளுக்கும் நன்றி. மிகச்சரியான தேர்வு. ஆச்சரியம், பல ஆன்டுகளுக்கு முன்னரே இரு வரிகளில் கொடுத்துள்ளார் வள்ளுவப் பெருந்தகை.

நீங்கள் சொல்வதுபோல் நாம் அடையாளத்தை தொலைத்துவிட்டோம் என மிக வருத்தமாக உள்ளது.

July 25, 2006 9:04 PM  
Blogger Orani said...

சிவா,

நீங்க போட்டு இருக்கிற அந்த படம் கூட ஏதோ சொல்ல வார மாதிரி இருக்கே.

நல்ல கவனிச்சுப் பார்த்த விடை அதிலேயே இருக்கிற மாதிரி தெரியுது, அப்பிடியா? :-))

சட்டு புட்டுன்னு தீர்ப்ப சொல்லுங்கப்பா... ஆர்வம் தாங்களே இங்க!

TheKa.

July 25, 2006 9:09 PM  
Blogger SK said...

பொன்ஸ்,
சிரிப்பான் பெருசாவே போட்டிருக்கீங்க!
நான் தான் கவனிக்க வில்லை!
இப்போதுதான் கவனித்தேன்!
உடனே அதுக்காக கலாய்க்க வேண்டாம்!

July 25, 2006 9:17 PM  
Blogger Sivabalan said...

தெகா,

உணமையில் Brainstorming Idea Session ஆரம்பிக்கும் முன் மனசை லேசாக்க சில் பொது கருத்துப் பரிமாற்றம் அல்லது சில் நகைச் சுவை விசயங்கள் பரிமாறப்படும். அதற்காகத்தான் இந்தப படம்.

ஆனால் கடைசியில் சொல்லும் தீர்வு இப் படத்திற்கு சம்பந்தப்பட்டால் நிச்சயம் அதற்கு நான் பொருப்பல்ல..:))

July 25, 2006 9:20 PM  
Blogger SK said...

ஆப்பிரிக்கனும், மெக்சிகனும் விழிக்கும் போது, இந்தியன் மட்டும் முறைக்கிறான்!
அவனையும் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளத்தான் ஊக்க போனஸ் கொடுக்கலாம் என்று சொன்னேன்!
அல்லது நாமும் நாலு செங்கல் கூடத் தூக்கி அவனுக்கு உற்சாகம் ஊட்டலாம்!
முதலாளியே செய்கிறானே என அவனும் சற்று அதிகம் முயல்வான்!

செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல். [516]

மறுபடியும்,.... எப்போதும்,.... வள்ளுவர்!

July 25, 2006 9:42 PM  
Blogger Sivabalan said...

SK அய்யா,

மேலுமொரு கருத்துக்கு நன்றி.

July 25, 2006 9:52 PM  
Blogger இலவசக்கொத்தனார் said...

என்னாங்கடா இது? நம்ம தலை இங்க இப்படி உருளுது. Brainstorming அப்படின்னு பேரு வெச்சா நாங்க எல்லாம் உள்ள வர பயப்பட மாட்டோம்? அதான் வரலை. சரி. அத விடுங்க.

இங்க நம்ம மண்டையை உருட்டுன ஆளுங்களுக்கு வழி ஒண்ணும் தெரியலை. அதான் நம்மளை கை காமிச்சி எஸ் ஆகறாங்க. சரி. அதையும் விடுங்க.

நானும் ஒரு மெய்நிகர் கொத்தனார் என்பதையே மறந்துட்டுப் பேசறா மாதிரி இருக்கு. மெய்நிகர் செங்கல் எடுத்துட்டு போறது எவ்வளவு சுலபம் தெரியுமா? சரி. அதையும் விடுங்க.

இந்த பொன்னி அரிசி, நம்மளை இந்த வாரு வாருது. அதுக்குப் பதில் சொன்னா விஷயம் வேற மாதிரி ஆகிப் போயிடும். சரி. அதையும் விடுங்க.

இப்போ விஷயத்துக்கு வருவோம். என்னமோ கேள்வி கேட்டீங்க. என்னாது அது?

செங்கல் போன்ற பொருட்களை 4 மாடிகள் கொண்டு செல்லும் போது தொழிலாளிகள் விரைவில் களைப்படைகிறார்கள். என்ன செய்வது?

அதை அடுத்த பின்னூட்டத்தில் பார்ப்போம்!

July 25, 2006 9:53 PM  
Blogger இலவசக்கொத்தனார் said...

இந்த மொத்த செய்முறையையும் இயந்திரப்படுத்தி விடலாம். எப்படி எனப் பார்ப்போமா?

1) கையால் தூக்கிச் செல்வதுக்குப்பதிலாக, ஒரு இழுவை மூலமாக உயரே கொண்டு செல்லலாம். இந்த இழுவையானது நான்காம் தளத்திலிருந்து எட்டாம் தளம் செல்ல உபயோகப்படும்.

2) அந்த இழுவையில் இருக்கும் கயிற்றை அந்த விசைத்தூக்கியின் மீது கட்டிவிடலாம்.

3)விசைதூக்கி நான்காவது தளத்தில் இருந்து தரைத்தளத்துக்கு இறங்கும் போது அந்த கயிரானது நான்கு தளங்களின் உயரத்திற்கு இழுக்கப் படுவதால் நான்காம் தளத்தில் ஏற்றிய சுமையானது எட்டாவது தளத்திற்கு சென்றுவிடும்.

4) எட்டாம் தளத்தில் சுமையை இறக்கிவிடலாம்.

5) விசைதூக்கி மீண்டும் நான்காம் தளம் வரும் பொழுது, காலியான தட்டானது எட்டாம் தளத்திலிருந்து இறங்கி நான்காம் தளத்திற்குத் திரும்பும்.

July 25, 2006 9:56 PM  
Blogger இலவசக்கொத்தனார் said...

அருஞ்சொற்பொருள்

செய்முறை - process
விசைதூக்கி - elevator
இழுவை - pulley

என்ன? இது சாத்தியம்தானே. இந்த விளக்கம் சரியாகப் புரியவில்லை என்றால் சொல்லுங்கள். இன்னும் விரிவாக விளக்க முயல்கிறேன்.

July 25, 2006 9:57 PM  
Blogger கோவி.கண்ணன் said...

//செங்கல் போன்ற பொருட்களை 4 மாடிகள் கொண்டு செல்லும் போது தொழிலாளிகள் விரைவில் களைப்படைகிறார்கள். என்ன செய்வது? //
சினிமா பார்க்கும் போது பார்த்திருப்பீர்கள். கதை பார்பவர்களை சோர்வடைய வைக்கக் கூடாது என்று டக்குனு ஒரு 'குத்துப் பாடல்' வரும், அப்படியே எல்லோரும் நெஞ்சை நிமித்தி கண்ணை அகல விரித்துப் பார்க்க ஆரம்பித்து விசில் பறக்க ஆரம்பிக்கும். தமிழ்படங்களாவது இந்த உற்சாகம் குறைவுதான், தெலுங்கு படத்தில் இந்த முறையை படம் முழுவதற்குமே கையாளுவார்கள்.

சிவபாலன் தூக்கம் கெட்டுடும் போய் தூங்குங்க :))

July 25, 2006 10:01 PM  
Blogger SK said...

இப்போ என்ன சொல்ல வர்றீங்க, கோவியாரே!
சிவபாலனை ஒரு குத்துப் பாட்டு பாடச் சொறீங்களா? :))

இ.கொ. வந்துட்டாரு1
இனிமே சிவராத்திரிதான்!
அதாவது, மெய்நிகர் சிவராத்திரிதான்!

July 25, 2006 10:07 PM  
Blogger Sivabalan said...

இகொ சார்,

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

நாளை மீன்டும் வந்து கருத்து மதிப்பீட்டில் கலந்தகொள்ளமாறு அன்புடன் அழைக்கிறேன்.

July 25, 2006 10:10 PM  
Blogger கோவி.கண்ணன் said...

// SK said...
இப்போ என்ன சொல்ல வர்றீங்க, கோவியாரே!
சிவபாலனை ஒரு குத்துப் பாட்டு பாடச் சொறீங்களா? :))//

குத்துப் பாட்டை நினைத்து தூக்கத்தை கெடுத்துக் கொள்ளப் போகிறார் என்று சொன்னேன். எனக்கு தொட்டிலும் தெரியாது தொடையும் தெரியாது, நான் ஒரு அப்பாவி :)))

July 25, 2006 10:13 PM  
Blogger Suka said...

சிவபாலன்,

என்னாலான முயற்சி..

இயந்திரத்தின் மூலம் 4 வது மாடிக்குக் கடத்தி அங்கிருந்து ஆட்கள் மூலம் கடத்துவதில் சில பிரச்சினைகளை ஊகிக்கிறேன்.

1) இயந்திரத்தில் பளு ஏற்றும் போது மேலே உள்ள ஆட்கள் காத்திருக்க வேண்டி இருக்கலாம். (இங்கே வேலை ஏதும் நடைபெறுவதில்லை.)

2) மேலே இயந்திரத்திலிருந்து பொருட்கள் கடத்தப்படும் போது கீழே யாருக்கும் வேலை இல்லை.

3) இயந்திரத்திலிருந்தே ஒவ்வொரு பொருளாக பரிமாறி கடத்தினால் கீழே உள்ளவர்களின் காத்திருப்பு இன்னமும் கூடும்.

வழிமுறை

4வது தளத்தில் போதுமான இடம் இருந்தால், ஆட்களை இரண்டாகப் பிரித்து
ஒரு பாதி ஆட்கள் கீழே ஏற்ற வேண்டும். மீதி ஆட்கள் நான்காம் தளத்தில் அதை இறக்க வேண்டும்.

பின் அனைவரும் 4 ஆம் தளத்திலிருந்து கைமாற்றிக் கடத்தும் முறையில் எட்டாம் தளத்திற்கு எடுத்துச் செல்லலாம்.

2) கீழே ஏற்றும் ஆட்களையும் மேலே கடத்தும் ஆட்களயும் மாற்றிக் கொண்டே இருக்கலாம்..

3) அனைவரும் சேர்ந்து ஒவ்வொருமாடியாக ஏற்றி நடப்பதைக் குறைக்கலாம்

4) கடைசியாக எட்டாம் மாடிக்குக் கடத்தினால் மாலை நேரமாகிவிட்டிருந்தால் வெயிலில் களைத்துப் போகாமல் தப்பிக்கலாம்.

5) ஆட்கள் அதிகமாக இருந்தால் இயந்திரத்தை உபயோக்ப்பதைக்கூட தவிர்க்கலாம். சில சமயம் இயந்திரம் கூட பாட்டில் நெக்காக இருக்கலாம்.
ஆட்களுக்கு ஏற்ப இயந்திரத்தில் ஏற்றும் அளவை நிர்ணயிக்க வேண்டும்.

சுகா

July 25, 2006 10:48 PM  
Blogger இலவசக்கொத்தனார் said...

நான் சொன்னது நிறையா பேருக்குப் புரியலையாம். அதனால தாய்மொழியாம் ஆங்கிலத்தில் நான் சொல்ல வந்தது -


1) Have a pulley installed in 8th floor
2) have a small platform on which bricks can be stored and lifted in the 4th floor
3) have a rope /cable connecting this platform to the pulley.
4) have the other end of the rope tied to the top of the lift /elevator when the elevator is in the 4th floor.
5) the length of the rope would be the height of four floors from the platform to the pulley and the same length from the pulley to the lift.
6) assume the elevatore brought a load of bricks when it came to the 4th floor. Unload the bricks and put them on the platform.
7)take the lift back to the ground. The lift would have travelled four floors down and in the process it would have pulled the equivalent length of the rope.
8) so the platform would have reached the 8th floor.
9) have some one unload the bricks there.
10) take the next load of bricks into the elevator and bring it to the fourth floor.
11) this would make the platform come back to the fourth floor from the eighth floor
12) repeat step 6 onwards.

July 26, 2006 5:58 AM  
Blogger Sivabalan said...

சுகா,

தங்கள் வருகைக்கும் கருத்து பதிவுக்கும் மிக்க நன்றி.

July 26, 2006 6:26 AM  
Blogger Sivabalan said...

இகொ சார்,

அலோசனையை ஆங்கிலத்திலும் விளக்கியைமைக்கு மிக்க நன்றி.

July 26, 2006 6:29 AM  
Blogger Thekkikattan said...

எப்பய்யா, முடிவ சொல்லுவீங்க, ரொம்ப இண்ட்ரஸ்டிங்க போயிகிட்டு இருக்கே... மதியம் வரைக்கும் காத்திருக்கணும, தாங்கலை சாமீ...
;-))

July 26, 2006 6:59 AM  
Blogger SK said...

இ.கொ. சொன்னது மாதிரி செய்து, கூடவே கோவியார் சொன்னது போல ஒரு குத்துப் பாட்டும் பாடிக்கிட்டே இழுத்தா ஜோரா இருக்குமே!!

ஏலேலோ! ஐலஸா!
மேலே இழு ஐலஸா!
தாங்கிப் பிடி ஐலஸா!
விட்டுடாதே ஐலஸா!
டீ வருது ஐலஸா!
தெம்பா இழு ஐலஸா!

இப்படி ஏதாவது...!!!
என்ன கோவியாரே! சரிதானே!

:)

July 26, 2006 7:35 AM  
Blogger Sivabalan said...

SK அய்யா,

கலக்கிடீங்க..

July 26, 2006 7:44 AM  
Blogger Sivabalan said...

தெகா

உங்களைப் போல நானும் ஆவலாக உள்ளேன்.

July 26, 2006 7:59 AM  
Blogger இலவசக்கொத்தனார் said...

எஸ்.கே.

நான் சொன்ன மாதிரி செஞ்சா, வெறும் லோடிங், அன்லோடிங் தானே.

தலைவா, பாட்ட மாத்து.

July 26, 2006 8:00 AM  
Blogger டண்டணக்கா said...

1) if it is brick (volume of raw ingredients is lesser than final product), then explore the possibility to manufacture the brick in 8th floor.
/* ஆட்களைப் பயன்படுத்தும் போது மிகவும் Productivity குறைந்து காணப்பட்டது */
it's inevitable...

2) The pay of sithaal is half of nimunthaal, so use 2 sithaal in place of 1 niminthaal.
2b) Divide and Conquer. Move all man power to move all blocks to 6th floor. Then in step-2 move it from 6th floor to 8th floor.

July 26, 2006 8:02 AM  
Blogger Thekkikattan said...

//ஏலேலோ! ஐலஸா!
மேலே இழு ஐலஸா!
தாங்கிப் பிடி ஐலஸா!
விட்டுடாதே ஐலஸா!
டீ வருது ஐலஸா!
தெம்பா இழு ஐலஸா! //

எஸ்.கே ஐயா, செம ஜாலியான ஆளாக இருக்கீங்களே :-)))), I like that song...

July 26, 2006 8:02 AM  
Blogger கோவி.கண்ணன் said...

//இப்படி ஏதாவது...!!!
என்ன கோவியாரே! சரிதானே!//
sk,

செங்கல்லுக்கு இந்தப்பாட்டெல்லாம் சரிவராது...

அதுக்குன்னே பாட்டு இருக்கு
ஒரு பழைய பாடல் :
'சித்தாட கட்டிக்கிட்டு'
'சிங்காரம் பண்ணிக்கிட்டு'
'மத்தாப்பு சுந்தரி ஒருத்தி'
'மயலாக வந்தாளாம்'
'அத்தானைப் பார்த்து'
'அசந்து போயி நின்னாளாம்' !

புதிய பாடல் :
'சின்ன வீடா வரட்டுமா ?'
'பெரிய வீடா வரட்டுமா ?'
'மேஸ்திரிக்கு சின்ன வீடு புடிக்குமா ?
'இல்ல மேஸ்திரிக்கு பெரியவீடு புடிக்குமா ?'

இப்படி பாட்டு பாடினால் செங்கல்லெல்லாம் ரெக்க மொளைச்சி மேல போய்டும்ம்ம்ம்ம்ம்ம்ம் :))))

July 26, 2006 8:06 AM  
Blogger Sivabalan said...

திரு. டண்டணக்கா,

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

July 26, 2006 8:09 AM  
Blogger SK said...

புல்லி எப்போ வெச்சுட்டீங்களோ, அப்பவே அதை மேற்பார்வை பாக்க, 4-லியும், 8-லியும் ஆளுங்க இருப்பாங்களே!
அவங்க ஒருத்தருக்கு ஒருத்தர் வாக்கி-டாக்கில பாடுற பாட்டுன்னு வெச்சுக்கங்க!

2-வது வரி கீழே எலிவேடர் போகும் போது, ப்ளாட்ஃபார்மைப் பாத்து பாடறது!
3-வது, 4-வது வரிகள் லோடிங், அன்லோடிங் போது!
5-ம், 6-ம் அல்லாருக்கும்!

இப்போ சரியா வரும் பாருங்க!

திருப்புகழ் மட்டும்னு பார்த்தேன்!

இதுக்கெல்லாம் கூட விளக்கம் சொல்ல வெச்சுட்டீங்களே, சாமி!

கோவியாரே! கொஞ்சம் வெவகாரமான ஆளாத்தான் இருக்கீங்க!

July 26, 2006 8:28 AM  
Blogger கோவி.கண்ணன் said...

//கோவியாரே! கொஞ்சம் வெவகாரமான ஆளாத்தான் இருக்கீங்க! //

வெவகாரமா ? ... நெஜந்தான் சொல்லுதேன்.
சித்தாளு வேலைப் பார்த்த அனுபவமெல்லாம் இருக்கு !

சித்தாடை பாடலை நாங்க பாடும்விதமே வேற :)) ரொம்ப கொச்சையாக இருக்கும். ம் அதெல்லாம் ஒரு காலம் :) என்னத்த சொல்ல :))

July 26, 2006 8:51 AM  
Blogger பொன்ஸ்~~Poorna said...

ப்ரெயின் ஸ்டோர்மிங் நல்லா புயலாகத் தான் போகிறது .. :)

July 26, 2006 8:59 AM  
Blogger Sivabalan said...

பொன்ஸ்,

நீங்கள் வந்து ஆரம்பித்து வைத்தது நிச்சயம் நன்றாகத்தான் இருக்கும்.

இன்னும் மூன்று மணி நேரத்தில் முடிவுக்கு வரும்.

July 26, 2006 9:04 AM  
Blogger இலவசக்கொத்தனார் said...

/திருப்புகழ் மட்டும்னு பார்த்தேன்!

இதுக்கெல்லாம் கூட விளக்கம் சொல்ல வெச்சுட்டீங்களே, சாமி!//

எஸ்.கே.

அருஞ்சொற்பொருள் எங்க?


ஐலசா - விளக்கம் குடுங்க.

July 26, 2006 9:07 AM  
Blogger இலவசக்கொத்தனார் said...

சிவபாலன்,

50 வந்திடுச்சே. வாழ்த்துக்கள்! :)

July 26, 2006 9:13 AM  
Blogger Sivabalan said...

இகொ சார்,

நீங்கள் இருக்கும் இடத்தில் எல்லாம் சாத்தியமே.

வருகைக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.

July 26, 2006 9:20 AM  
Blogger இலவசக்கொத்தனார் said...

யப்பா சாமி,

இந்த சார் மோர் போர் எல்லாம் வேண்டாம். சும்மா நம்ம ஆளுங்க மாதிரி இ.கொ., கொத்ஸுன்னே கூப்பிடுங்க.

July 26, 2006 9:39 AM  
Blogger Sivabalan said...

இகொ

நீங்கள் சொல்கிறீர்கள் ஏற்றுக்கொள்கிறேன்...

July 26, 2006 9:50 AM  
Blogger Sivabalan said...

கோவி.கண்ணன் சார்

கலக்கிட்டீங்க...

July 26, 2006 9:55 AM  
Blogger கோவி.கண்ணன் said...

//கோவி.கண்ணன் சார்

கலக்கிட்டீங்க...//

என்னத்த ... சிமென்டையும் செங்கல்லையுமா ? யூ டூ சிவபாலன் ..:))

July 26, 2006 9:57 AM  
Blogger Thekkikattan said...

அடங்கொப்புறான, நான் கவனிக்கவே இல்லையே, நம்ம சிவா ஐம்பத தாண்டுனத.

என்னுடைய காலம் கடந்த வாழ்த்துக்கள்... ஆர் வி தேர் எட்..;)?

//என்னத்த ... சிமென்டையும் செங்கல்லையுமா ? யூ டூ சிவபாலன் ..:)) //

:-))))) @ Govi

July 26, 2006 10:05 AM  
Blogger Sivabalan said...

தெகா

வாழ்த்துக்கு மிக்க நன்றி. உங்கள் ஆதரவு எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

July 26, 2006 10:12 AM  
Blogger SK said...

தோடா....!
அங்கங்கே போயி எல்லாரையும் இட்டுக்கினு வர்றது!
அப்புறமா, அடங்கொப்புறான, கவனிக்கவே இல்லியேன்னு சவுண்டு வுட வேண்டியது!
நல்லா தேந்துதான் இருக்காஹ நம்ம ஆளுவ!
இந்தப் பூனையும் பால் குடிக்குமான்ற மாரி!
:)

July 26, 2006 10:19 AM  
Blogger இலவசக்கொத்தனார் said...

அட, இப்போதான் 50க்கு வாழ்த்திட்டு போனேன். அதுக்குள்ள 60? நல்லாத்தான் கத்துக்கறீங்க. :)

July 26, 2006 10:33 AM  
Blogger Thekkikattan said...

//தோடா....!
அங்கங்கே போயி எல்லாரையும் இட்டுக்கினு வர்றது!
அப்புறமா, அடங்கொப்புறான, கவனிக்கவே இல்லியேன்னு சவுண்டு வுட வேண்டியது!
நல்லா தேந்துதான் இருக்காஹ நம்ம ஆளுவ!
இந்தப் பூனையும் பால் குடிக்குமான்ற மாரி!
:) //

எனக்குத்தான் ஏதாவது மனப்பிராந்திய (;-) இல்லெ எல்லோருக்கும் ரொம்ப நகைச்சுவையுணர்வு கூடிப்போச்சா, எல்லாரும் மாத்தி மாத்தி ஜோக் அடிச்சு எனக்கு கண்ணீர் தண்ணியே வந்துருச்சுங்கோவ்.... :-)))) எமக்கும் ஒண்ணும் தெரியாது... நான் ஒரு காட்டுப்பூனை, இரவில் மட்டுமே வெளிவருவேன்... ;-)

July 26, 2006 10:59 AM  
Blogger இலவசக்கொத்தனார் said...

//இன்னும் மூன்று மணி நேரத்தில் முடிவுக்கு வரும்//

எப்பவாவது முடிவு தெரிஞ்சா ஜெயிச்சவங்க, பரிசுப் பணத்தில் நல்லதா ஒரு கைக்கடிகாரம் வாங்கி சிவபாலனுக்குக் குடுங்கப்பா.

July 26, 2006 8:37 PM  
Blogger Sivabalan said...

இகொ,

நீங்க கொஞ்சம் போல.. அடுத்த பதிவை பார்க்கவில்லையா...

July 26, 2006 8:51 PM  
Blogger இலவசக்கொத்தனார் said...

மன்னிச்சுக்குங்க தல. நம்ம பேருலதான் மிஷ்டேக். ஓவர் டு புதுப் பதிவு.

July 26, 2006 9:27 PM  
Blogger SK said...

//மன்னிச்சுக்குங்க தல. நம்ம பேருலதான் மிஷ்டேக். ஓவர் டு புதுப் பதிவு.//


சிவபாலன், ஒரு சின்ன டெஸ்ட் உங்களுக்கு!
இந்த இ.கொ. வின் கடைசி பதில்ல இருக்கிற உ.கு.வை கண்டுபிடிங்க!
இதுக்கு ஒரு 'மூளை இடி' வேணும்னாலும் போடுங்க!
!!!!!!?????

July 26, 2006 9:44 PM  
Blogger Sivabalan said...

SK அய்யா,

அ.செ.சூ. வை. சொ. செ. சூ. வை.க்கு "தல" என்கிறார்.. இகொ..

சரியா?

July 26, 2006 10:02 PM  
Blogger onfoyou said...

I like it! Good job. Go on.
»

August 10, 2006 4:35 AM  
Blogger Sivabalan said...

Thanks for your visit and appreciation.

Kindly give "only the appropriate link" to the post.

August 10, 2006 6:51 AM  
Blogger elephantcom said...

Your website has a useful information for beginners like me.
»

August 11, 2006 4:47 PM  
Blogger Sivabalan said...

elephantcom,

Thanks for your appreciation and Visit.

August 13, 2006 9:42 AM  

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv