படிக்கிறார்கள் அமெரிக்கர்கள் படிக்கிறார்கள்.
நான் அமெரிக்கா வநததும் பல விசயங்கள் என்னை பாதித்தன. அவற்றில் நல்லவையும் கெட்டவையும் பல பல...
பாதித்த நல்ல விசயம் என்னவென்றால் ... புத்தகங்களைப் படிப்பது...
அட என்னங்க எங்கே போனாலும் புத்தகம் புத்தகம் புத்தகம்...
எங்கேன்னு கேட்ட்கிறீங்களா..
1. Hair Cut கடை
2. இரயிலில்
3. இரயில் நிலையங்களில் .. (இங்கே உங்க புத்தகத்தை வைத்துவிட்டு வேறு புத்தகத்தை எடுத்துக்கலாம்)
4. பேருந்துகளில்
5. வீட்டில்
6. வீட்டு கழிவறையில்
7.அலுவலகத்தில்
8.அலுவலக கழிவறையில் (இதுக்கு தனி Stand வேற)
9.காரில் - சில் சமயம் ஓட்டுநர் கூட
10. குழந்தைகளை விளையாட அழைத்து செல்லும் இடங்களில்
11. கார் மெக்கானிக் கடையில்
இன்னும் நிறைய சொல்லிட்டே போகலாம்..
அப்படி என்னத்த படிக்கறானுங்க...
1. நாளிதழ்
2.வார இதழ்
3. மாத இதழ்
3. எல்லா புத்தக வகைகள்
யாரெல்லாம் படிக்கறாங்க...
1. அப்பா
2.அம்மா
3.மகள்
4.மகன்
5.பாட்டி
6.தாத்தா
7.சித்தப்பா
8.சித்தி
9. மாமா
10.அத்தை..
அட எல்லாருந்தாங்க..
எந்த வயசுல இருந்து படிக்கிறாங்க..
நான் பார்த்தவரை 5 வயது குழந்தையே எதையோ புத்தகததை வைத்து நோட்டிட்டு தான் இருக்கிறது...
இங்கே புத்தகம் படிக்க பணக்காரானத்தான் இருக்கனுமின்னு இல்லை..
எனென்றால்.. நான் வாங்கும் Chicagi Tribune நாளிதழ் வாரம் 3 நாட்கள் வீட்டிலேயே கொடுபதற்கு விலை வெரும் ஒரே ஒரு டாலர் தான்...
என்னமோ போங்க ஒன்னும் புரியவில்லை இங்கே...
வந்ததும் வந்தீங்க.."இங்கேயும்"சென்றுவிடுங்கள்...
19 Comments:
சிபா,
தூங்க செல்லும் முன் எதேச்சையாக பார்த்தேன்.
நானும் எல்லா இடங்களிலும் புத்தகம் படிப்பேன். புத்தகம் கையில் இல்லை என்றால் அரைமணி நேரப் பயணம் கூட ரொம்ப கடுப்படிக்கும்.
வாகனங்களில் செல்லும் போது படித்தால் பார்வைக் கோளாருவரும் என்கிறார்கள் உண்மையா ? பொய்யா தெரியவில்லை.
சிவபாலன்,
உங்கள் போன பதிவுக்கு பதில் வராததற்கு இத்தனை வருத்தமா? அந்தப் பதிவுக்கு ஏன் அதிக ரெஸ்பான்ஸ் இல்லை என்பதற்கு ரெண்டு காரணம் எனக்குத் தெரியுது.. (Managerial BrainStorming டெக்னிக்)
1. நீங்க எல்லாரையும் பொதுவா கூப்பீட்டீங்க.. அதனால் பல பேர் நமக்கென்ன வந்தது என்று இருந்துவிடுவது வழக்கம் தான். ஆசிரியர் பாடம் நடத்தி முடித்துவிட்டு யாராவது சொல்லுங்க என்று கேள்வி கேட்கும் போது எத்தனை பேர் தாமாக முன்வந்து பதில் சொல்வார்கள்?
2. கொஞ்ச நாள் முன்பு வரை புத்தக வரிசை என்று ஒரு விளையாட்டு இங்கு ஓடிக் கொண்டிருந்தது. நாலு விளையாட்டு மாதிரி. அவர்வர் தமக்குப் பிடித்த புத்தகங்களில் பெயர்களைச் சொல்வது என்பது போல் வரும். அதெல்லாம் எழுதியவர்கள் இதுவும் வேறு தனியாக எழுதவேண்டுமா என்று நினைத்திருப்பார்கள். (பதிவுக்கு லிங்க் தேடிக் களைத்துப் போனேன்.. நிறைய இருக்கின்றன கொஞ்சம் பழைய பதிவர்களில் தேடவேண்டும்..)
நிற்க, என்னிடம் நூலகமே கிடையாது. என் புத்தகங்கள் நண்பர்களிடமிருந்து கடன் வாங்குவது, அல்லது வெளியில் பாதி விலையில் வாங்குவேன்.. ஒருமுறை படித்து முடித்தவுடன் யாருக்காவது கொடுத்துவிடுவேன். சர்குலேஷன் நிறைய உண்டு.. எனவே என்ன என்ன இருக்கிறது என்று சொல்வது கஷ்டம்..
அத்துடன் சில புத்தகங்கள் நூலகத்தில் இருக்கும்.. படிக்காமலேயே பல நாள் இருக்கும்.. ஆக, சொல்வதற்கு ஒன்றும் பெரியதாக இல்லை.. இருந்தாலும் உங்களுக்காக பதிவு போடலாம்.. ஊருக்குத் திரும்பிப் போய் இப்போதைக்கு என்ன இருக்கிறது என்று பார்த்து போடுகிறேன்...
நண்பர் சிவபாலனின் நன்முயற்சிக்கு ஆதரவாக
தெகா
என்ன உங்க கருத்தை சொல்லுங்க... என்னை விட உங்களுக்கு அனுபவம அதிகம்...
அது என்னங்க? எல்லா விளையாட்டுக்கும் இப்படி தெகாவைக் கூப்பிட்டுக்கறீங்க?
இந்த மடிக்கணினி, அகலப்பாட்டை இணையத் தொடர்பு, கம்பியில்லா உள்வலைப்பின்னல் வந்த பின்னாடி வீட்டில் புத்தகங்கள் படிப்பதே குறைந்து போச்சு. தொலைக்காட்சி பார்த்தாலும் கூடவே இது வேண்டியிருக்கிறது.
இப்போவெல்லாம் விமானப் பயணங்களின் போதுதான் பெரும்பாலும் புத்தகங்கள். அங்கேயும் இணையத் தொடர்பு தரப் போகிறார்களாமே?!
GK,
உண்மையிலேயே நல்ல விசயம் தான்...
ஆனால் அதிர்வுடன் படிப்பது கண்களுக்கு நல்லதல்ல என நானும் எங்கோயோ கேள்விப்பட்டிருக்கிறேன்..
பொன்ஸ்
உங்கள் கருத்தை முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்.
கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு எழுதிவிட்டேன்.மன்னிக்கவும்.
கடைசி இரு வரிகளை மாற்றிவிட்டேன்.
அந்த நாலு பதிவுகளின் தொகுப்பு ஏதாவது இருந்தால் கொடுங்கள் இங்கே இனைத்துவிடலாம்.
திரு. மகேந்திரன்.பெ,
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.
இகொ
நீங்கள் சொல்வது சரிதான். தெகா பேரை உபயோகித்த பிறகு தான் யோசித்தேன். தவிர்திருக்கலாம்.. இனி அவ்வாறு நடக்காது.
நன்றிங்க.. சுட்டிக்காட்டியமைக்கு..
இல்லைங்க பெரிய பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் இன்னும் வலை உலகிற்கு வரவில்லை... அதனால்....
(இ-புக் கூட தாமதமாக வலையுலகிற்கு வருவதாக கேள்விப் பட்டேன்)
விமானத்தில் வலை சேவையை உபயோகப்படித்தினால் பில் எகிரிவிடும் என நினைக்கிறேன்.
சிவபாலன். பொன்ஸ் சொன்னதற்கும் மேல் இன்னும் இரண்டு காரணங்கள் இருக்கின்றன.
3. சோம்பேறித்தனம் - வீட்டில் இருக்கும் புத்தகங்களையே படிக்க நேரமில்லை. இதில் பட்டியல் வேறு இடுவதா?
4. 'உன் நண்பர்களைச் சொல், நான் உன்னைப் பற்றிச் சொல்கிறேன்', 'புத்தகங்கள் நல்ல நண்பர்கள்' இந்த இரண்டும் உண்மை. என் வீட்டில் இருக்கும் புத்தகங்களைப் பட்டியலிடப் போய் ஏற்கனவே முத்திரைக் குத்துவதே வேலையாக இருக்கும் நண்பர்கள் இதிலிருந்து உ.கு., வெ.கு., நி.கு., நே.கு., எல்லாத்தையும் கண்டுபிடிச்சு இன்னும் பலமாக முத்திரைக் குத்துவார்கள் என்ற தயக்கம்.
குமரன் சார்,
நீங்கள் சொல்வதும் சரிதான்..
சரி.. விடுங்க...
உங்களுக்கு எது பாதகம் வராதோ அப் புத்தகங்களை கொஞ்சம் பட்டியலிடுங்கள்.. படிக்க ஆவல்.. அவ்வளவே..
ஆனாலும் இந்த முத்திரை அரசியல் பாட படுத்துங்க... என்னமோ போங்க...
எல்லா இடத்திலேயும் படிக்கிறாங்கதான். ஆனா படிச்சிட்டு சொந்த வாழ்கைக்கு ஏதாவது பயன்படுத்துகிறார்களான்னு தெரியலயே சிவா. எல்லோருகிட்டையும் பேசிப் பார்த்த நிறைய விசயம் தெரியற மாதிரி பேசுறாங்க, இருப்பினும் சின்ன சின்ன விசயங்கள், உதாரணத்துக்கு, ஆசியக் கண்டம் எங்கேய்யா இருக்கு அப்படின்னு கேட்டா சில பேருக்கு அமெரிக்காவ விட்டு வேற நாடுங்க இருக்கிறதே தெரியல. :-)))
என் பையனுக்கு வயது எட்டு Harry Potterயை ஒரு வாரத்தில் படித்து முடிச்சுப்புட்டான் (ஒரு புத்தகத்தை)... அப்படிப் போகுது கதை...
இது ஒரு சுட்டி.. இதே கால கட்டத்தில் இருந்த பதிவர்களில் பதிவுகளைத் தேடிக் கொண்டு போனால், இன்னும் கிடைக்கும்..
நான் பதிய வந்த புதிதில் தேடிப் படித்திருக்கிறேன்.. இப்போ மறுபடி தேட அத்தனை ஆர்வமில்லை சிவபாலன்.. முடிந்தால் அந்த மாத வருடக் கணக்கைப் பிடித்துக் கொண்டு தேடிப் பாருங்கள்.
//இல்லைங்க பெரிய பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் இன்னும் வலை உலகிற்கு வரவில்லை... அதனால்.... //
இதுக்குப் பொருள் என்னன்னா, நீங்க இன்னும் இந்தப் பதிவைப் படிக்கவில்லை :)
படித்துப் பாருங்கள்..
Dr.பிரபாகர்,
பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி.
பொன்ஸ்,
சுட்டிக்களுக்கு மிக்க நன்றி.
திரு. சிவபாலன் நீங்கள் கொஞ்சம் தேவையில்லாம குழம்புகிறீர்கள் என நான் நிணைக்கிறேன்." என்னடா நாம எல்லாறையும் கூப்பிட்டிருக்கோம் யாரும் வந்து எழுதவில்லையென்று. இதனால் யாருக்கும் நஷ்டமில்லை. அனுபவங்கள் வலையில் பகிர்ந்துகொள்ளமுடியாமல் இருக்கலாம் நூலகம் இல்லாமல் இருக்கலாம் அதற்க்காக உங்கள் முயற்சியே தவறு என்பதுபோல் உங்கள் கண்ணோட்டம் மாறுவது தவறு. எதிலும் யாராவது முதல் அடி எடுத்துவைக்கவே வேண்டியிருக்கிரது. வைக்கும் எல்லா அடிகளும் வெற்றிபெரும் என்றால் அடுத்த அடி எடுத்துவைக்க தேவையில்லாது போய்விடும். குமரன் சொல்வதைக் கூட நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் தனது சரியான கருத்தையும் நல்ல புத்தகங்களையும் சொல்வதால் முத்திரை விழுமென்றால் நாம் வலைப்பக்கம் வந்திருக்கவே கூடாது முயற்சியை தொடருங்கள் அடுத்த வாரத்தில் இருந்து தொடர்ச்சியாக புத்தக அறிமுகங்கள் மட்டும் கொண்ட பதிவை ஆரம்பிக்கிறேன் இதை தொடருங்கள்
திரு. மகேந்திரன்.பெ,
அருமையான விளக்கம்..
நீங்கள் எழுதும் புத்தக குறிப்புகள் நிச்சயம் பயனளிக்கும்..
மிக மிக நன்றி.
Sivabalan,
Book meme
Lets thank Cholanaadan for his initiative.
-Mathy
மதி,
மிக மிக நன்றி.
அருமையான சுட்டி.
திரு.சோழநாடன் அவர்களுக்கு மிக்க நன்றி.
Post a Comment
<< Home