தீர்வு பகுதி - மெய்நிகர் Brainstorming
பொதுவாக Brainstorming Session ஆரபிக்கும் ஒரிரு நாட்களுக்கு முன்னதாகவே நிகழ்ச்சி நிரல் (Agenda) தயார் செய்யப்பட்டு அதில் கலந்து கொள்பவர்களின் பார்வைக்கு அனுப்ப படும்.
இந்த Brainstorming அணி அமைக்கும் போது அந்த துறையை சார்த வல்லுனர்கள் மற்றும் அந்த துறையில் இருக்கும் அனைத்து மட்டத்தை சார்ந்தவர்களுக்கும் இருக்கும் வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும்.
Brainstorming Session நான்கு பகுதிகளாகப் பரிக்கப்படும். அவை
1. அலோசனைப் பகுதி
2. அலோசானைகளை தரம் பிரித்து அலசும் பகுதி.
3. தேர்ந்தெடுக்கப் பட்ட ஆலோசனைகளை வைத்து இறுதி அலோசனை வழங்கும் பகுதி.
4. செயல் முறைப் படுத்துதல்.
அலோசனைப் பகுதியில் அனைவரின் கருத்தும் பதியப்படும். அப்பொழுது அலோசனைகளுக்கு எந்த தடையும் இருக்க கூடாது. ஒருவர் எவ்வளவு அலோசனை வேண்டுமானாலும் கூறலாம்.
இரண்டாம் பகுதியில் எல்லா அலோசனைகளும் பகுந்தாராயப்பட்டு பொருளாதார அவசியம் (Economic Feasibility), தொழில்நுட்ப அவசியம் (Technical Feasibility), ஆட்கள் & பொருள்கள் அவசியம் (Resource Availability & Feasibility) மற்றும் பிற அவசியங்களைக் கருத்தில் கொண்டு தேர்தெடுக்கப்படும். இதை தேர்ந்தெடுக்க வாக்கு முறை (Voting), அனுபவ முறை (Experience) என கையாளப்படும்.
மூன்றாம் பகுதியில், தேர்ந்தெடுக்கப்பட்ட சில அலோசனைகளுக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு ஒரு தீர்வான அலோசனையாக சமர்பிக்கப்படும். இதற்கும் வாக்கு முறை, அனுபவ முறை என கையாளப்படும்.
கடைசி பகுதியில், தீர்வை சம்பந்தப்படடவர்களுக்கு செயல் முறைத் திட்டமாக வழங்கி அமல் படுத்தப்படும்.
இதைப் பற்றி நிறைய நூல்கள் கிடைக்கின்றன. முடிந்தால் படித்து மேலும் பல விசயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த Brainstorming, சிக்கலைத் தீர்க்க அருமையான உபகரணமாக இருந்து வருகிறது. நிச்சயம் ஒவ்வொருவரும் இதைப் பயன் படுத்துக் கொண்டுதான் இருக்கிறோம். வேவ்வேறு சம்யங்களில் வேவ்வேறு பெயர் வைத்துக் கொண்டு.
நான் நேற்று வைத்த பிரச்சனைக்கு அனைவரும் தங்களுக்கு தெரிந்த அலோசனையை அருமையாக கொடுத்திருந்தார்கள்.
இது Brainstorming பற்றி விளக்கும் முயற்சியே. அதனால் தீர்வை அவர் அவர் என்னத்திற்கே விட்டு விடுகிறேன்.
அலோசனை கூறி இதில் கல்ந்துகொண்ட அனைவருக்கும் மிக மிக நன்றி.
நாங்கள் உண்மையில் கொடுத்த தீர்வு (மேஸ்திரியின் அலோசனை)
பல காரனிகளைப் பொருத்து எடுக்கப் பட்ட தீர்வு. அதை இங்கே விளக்கினால் துறை சார்ந்த விளக்கமாகிவிடும். அதனால் அதை தவிர்க்கிறேன்.
"தீர்வு - ஒவ்வொரு தளத்தின் படிக்கடுகளின் இடைத் தளத்தில் (Mid Landing) ஒரு ஆளுயுர பிம்பம் விழும் கண்ணாடியை வைப்பது."
இது எங்களுக்கு தேவையான பலனைத் தந்தது
நான் இங்கே ஒரு சுட்டியை இனைக்க விரும்புகிறேன். அதாவது, இந்த சுட்டி "திரு.இகொ." அவர்களின் பதிவுக்கான சுட்டி. இதில் அவர் ஒரு விசயத்தை எடுத்துக் கொண்டு ஒரளவு Brainstorming முறைப்படி அனுகியுள்ளார். Brainstorming Idea Session போது யாருடைய ஆலோசனையையும் விமர்சிக்க கூடாது. அதனால் யார் எவ்வளவு யோசனை வேண்டுமானலும் கூறலாம். இதனால் கிடைக்கும் பயன் என்ன வென்றால், பல சமயங்களில் கடைசியாக வரும் அலோசனைகள் உபயோகமாக அமைந்து விடுகிறது.
28 Comments:
என்னங்கய்யா இப்படிப் பண்ணிப்புட்டீக, இருந்தாலும் ரொம்ப வித்தியாசமான தீர்வ இருக்கே.
விளக்கமும் அளிக்க மாட்டீங்கன்னு சொல்லிபுட்டீக, தொழில் ரகசியமாக்கி, சரி எனக்கு தெரிஞ்சது - ஏதோ சைக்கலாஜிகல ஒரு எஃபெக்ட் கிடைக்குமின்னு நினைக்கிறேன், அந்த கண்ணாடி விசயம். தூரம் குறைச்சோ, கூட்டியோ, இல்ல தன் அழகை தானே ரசித்துக் கொண்டு செல்வதால், அசதி தெரியாதோ...
இப்படி ஏதோ ஒன்று. இருந்தாலும் மண்டையை குடைஞ்சுப்புட்டீகள ஓய்...!!!
//நாங்கள் உண்மையில் கொடுத்த தீர்வு (மேஸ்திரியின் ஆலோசனை) பல காரனிகளைப் பொருத்து எடுக்கப் பட்ட தீர்வு. அதை இங்கே விளக்கினால் துறை சார்ந்த விளக்கமாகிவிடும்//
இதைத் தான் சொன்னேன், சிவபாலன்.. வெளியிலிருந்து பார்ப்பவர்கள் என்ன தீர்வு கொடுத்துவிட முடியும் என்று..
விளக்கம் நன்றாக இருந்தது.. இப்படியே வேறு சில பதங்களையும் எடுத்து பயனுள்ள முறையில் விளக்கலாம் :)
தெகா,
பொதுவாக வெளையாட்களுக்கு தங்கள் வீடுகளில் கண்ணாடி பார்பதற்கு நேரம் மிக குறைவு.
அதுவும் தங்கள் தலையில் செங்கலுடன் அவர்களை அவர்களே பார்த்துக் கொண்டதில் கொஞ்சம் மகிழ்ச்சி.
ஆனால் இந்த தீர்வு எங்களுக்கு ஒரு சிறு இடைவெளிக்கே தேவைப்பட்டது. செல்வும் மிக குறைவு.
இது ஒரு நீன்டகால தீர்வாக கொள்ளமுடியாது.
பொன்ஸ்,
உண்மைதான். நீஙகள் சொன்னதை அப்பொழுதே அமோதித்துவிட்டேன்.
பிரச்சனைகளைப் பொருத்து வெளியில உள்ளவர்களின் அலோசனைகளும் நன்றாகவே இருக்கும்.
முடிந்த வரை நான் இப்பணியை செய்வேன், பொன்ஸ்.
தரச்சான்றிதழ்களைப் பற்றி நல்ல நல்ல விசயங்கள் என்னிடம் உள்ளன. முடிந்தவரை பதிகிறேன்.
நன்றி.
//அதுவும் தங்கள் தலையில் செங்கலுடன் அவர்களை அவர்களே பார்த்துக் கொண்டதில் கொஞ்சம் மகிழ்ச்சி.//
அடெ இதுவும் நல்ல இருக்கே!
போன வருடம் இப்படித்தான், புதிதாக எனது அப்பா ஒரு வீடு கட்டிக் கொண்டிருந்தார், எல்லா வகை நெம்புகோல்களும் (வேலை ஆட்களுடன்) பயன் படுத்தியும் குறிப்பிட்ட கால கெடுவுக்குள் வேலை முடிந்த பாடில்லையாதலால், இந்த ஆல்-இன் - அழகு ராசாவை வரச்சொல்லியிருந்தார்.
நானும் அங்கு சென்று கோவி அவர்கள் சொன்ன மாதிரி, எல்லா விதமான பாடல்களையும் அள்ளி வழங்கி ஒரே கூத்தும் கும்மாளமுமாக இரவு பகல்னு (பெயிண்ட் ஜாப் மட்டும்) பார்க்கம முடிச்சோம் (கோவியார பார்த்த சொல்லுங்க, சித்தால் மேட்டரைப்பத்தி தெகாவும் சொல்றாப்புலன்னு ;-)).
ஆகா, நீங்க சொன்ன இது கரெக்ட் "இது ஒரு நீன்டகால தீர்வாக கொள்ளமுடியாது.''
தெகா,
பெயின்டர்களிடம் வேலை வாங்கியுள்ளீர்கள் என்றால் நிச்சயம் உங்களைப் பராட்டியே ஆக வேண்டும். எங்களைப் பொருத்தவரை பெயின்டர்கள் கடவுள் மாதிரி. எப்போதாவது காப்பாற்றுவார்கள்..
தெகா
மன்னிக்கவும். பெயின்ட் ஜாப் இல்லாமலா? ஓ .. சரி..
ஆனாலும் ஆட்களிடம் வேலை வாங்குவது ஒரு பெரிய கலையே... அதில் தேரி விட்டீர்கள் போல..
/எங்களைப் பொருத்தவரை பெயின்டர்கள் கடவுள் மாதிரி. எப்போதாவது காப்பாற்றுவார்கள்..//
என்னது எப்போதாவதுதானா, அப்படின்ன கடவுள் எப்போதாவதுதான் கூப்பிட்ட வருவாருங்கிறீங்க... மாட்டீனிங்கள... இந்த வந்துட்டாரு எஸ்.கே , நான் எஸ்கேப்ப்ப்ப்ப்... :-))))
இகொ,
நீங்க கொஞ்சம் Busy போல.. அடுத்த பதிவை பார்க்கவில்லையா...
மன்னிச்சுக்கோங்க தல. பாக்காம விட்டுட்டேன். என்னை மாதிரி ஆளுங்களுக்காக கொஞ்ச நேரம் தமிழ் மண முகப்பில் வண்டி ஓட்டக் கூடாதா?
நீங்க அன்னிக்கு எடுத்த முடிவைச் சொன்னீங்க. அது ஒரு தற்காலிகத் தீர்வுதான், அதையும் நீங்களே சொல்லிட்டீங்க.
இப்போ இங்க வந்ததுக்கு
2. அலோசானைகளை தரம் பிரித்து அலசும் பகுதி.
3. தேர்ந்தெடுக்கப் பட்ட ஆலோசனைகளை வைத்து இறுதி அலோசனை வழங்கும் பகுதி.
இது ரெண்டையும் செஞ்சு பாத்திருக்கலாமில்ல?
இகொ,
நீங்க சொல்வது சரிதான். மற்ற பகுதிகளை அலசியிருக்கலாம். ஆனால் எல்லாருக்கும் போர் அடித்துவிடும் என நினைத்து கொஞ்சம் அடக்கி வாசித்துவிட்டேன்.
நீங்கள் அனுமதித்தால் உங்களுடைய பரிமான பதிவை இங்கே சுட்டி கொடுத்துவிடுவேன். தவறாக என்ன வேண்டாம். கேலி செய்யவில்லை.
ஏனென்றால், உங்களுடைய அந்தப் பதிவுகூட ஒரு விதத்தில் Brainstormingனே. நீங்கள் பொதுவாகவே அந்த முறையைத் தான் உங்கள் பதிவுகளில் கையாளுகின்றீர்கள்..
இது நிச்சயம் வீன் புகழ்ச்சியல்ல.. என் மனதில் பட்டதைச் சொன்னேன்...
//உங்களுடைய அந்தப் பதிவுகூட ஒரு விதத்தில் Brainstormingனே. //
ஆஹா! எத்தனை பேரைய்யா இந்த மாதிரி கிளம்பி இருக்கீங்க? ஒருத்தன் என்னடான்னா மூளையே இல்லையான்னு கேட்கறான். நீங்க இப்படி. நல்லா இருங்கப்பா.
//நீங்கள் அனுமதித்தால் உங்களுடைய பரிமான பதிவை இங்கே சுட்டி கொடுத்துவிடுவேன். //
இலவச விளம்பரத்துக்கு (சிலேடை!)அனுமதி எல்லாம் எதற்கு? :)
//நீங்கள் அனுமதித்தால் உங்களுடைய பரிமான பதிவை இங்கே சுட்டி கொடுத்துவிடுவேன்//
எது?
யார் யாரை எப்படிக் கலாய்க்கலாம்னு ஒரு 'மூளை இடியா"
அதுவும் நம்ம இ.கொ. வுக்கா?!!!!!!!
நல்ல ஆளைப் பாத்தீங்களே, சிவபாலன்!
அவர் நடத்துற 'மூளை இடியைப்' பாத்து அவனவன் துண்டைக் காணோம், துணியைக் காணோம்னு ஓடறான்!
பொன்ஸ் இ.கொ. வை மறைமுகமா சொல்லி இங்கே கூப்பிட்டாங்க.
இன்னொருத்தரு கையோட கூட்டிக்கிட்டு வந்தாரு!
அப்புறம் நடந்ததைப் பாத்தீங்கள்ல?
அ.செ.சூ. வை. சொ. செ. சூ. வை. எல்லாம் ஜோரா நடத்துங்க!
:))
இகொ,
மற்றவர்களைப் பற்றி நான் அதிகம் கவலைப் படுவதில்லை.
அனுமதித்ததற்கு நன்றி.
SK அய்யா
இகொ தனது பதிவில் எடுத்துக் கொண்ட விசயமும் அலோசனைக்கு விட்ட முறையும் அருமை. ஆனால் அதை அவர் அவர் தங்களுக்கு தகுந்தவாறு திசை மாற்றிவிட்டனர். ஆனாலும் தவறு கிடையாது...
என் அனுபவத்தில், ஒரு Brainstorming Session கொஞ்சம் ஜாலியாகத்தான் நடக்க வேண்டும்.. அப்பொழுதுதான் ஒருவரின் ஆழ் யோசனைகள் வெளிவரும்.. இதை நான் நிருப்பிக்கவும் தயார்...
//மன்னிக்கவும். பெயின்ட் ஜாப் இல்லாமலா? ஓ .. சரி..//
அட பெயிண்ட் வேலையும் சேர்த்துத்தான் முடிச்சோம், சிவா. ஆனா கம்ப்ளீட் பண்ணாலே சில பாட்டர்ன்ஸ்.
ஓகோ, இலவசம் இங்க இருந்து ஒபி அடிச்சுகிட்டு இருக்கித, என்னாட இன்னிக்கு க்ளாஸ் எடுக்க வரலையேன்னு நினைச்சேன்.... இ.கொ, வெர் அர் யூ?
பின்னூட்ட கட்டடம் ஒசரமாக வளரனும் என்றால் கொத்தனார் இல்லாமா முடியாது என்று தெரிந்துவிட்டது. அதுவும் இலவசக் கொத்தனார் என்றால் வேகமான வளர்ச்சி தான். சிபா கெட்டியாக இ.கொவை பிடித்து வைத்துக் கொள்ளுங்கள் :))
புடிச்சுட்டாருய்யா, புடிச்சுட்டாருய்யா!
கோவியார் சரியா பாயிண்டைப் புடிச்சுட்டாருய்யா!
நான் சொன்னதும் அதைதான், சிவபாலன்!
தப்பா நெனச்சு எம்மேல பாயாதீங்க!
:(((
தெகா
எல்லா வேலையும் நீங்கதான் வாங்கினிங்களா... பெரிய விசயந்தான்..
கோவி.கண்ணன் சார்
இகொ உள்ளே வந்துட்டாரல்ல... இனி கெட்டியாகப் பிடித்துக் கொள்ளவேண்டியது தான்..
SK அய்யா
தங்களை தவறாக நினைக்க முடியுமா?
//இனி கெட்டியாகப் பிடித்துக் கொள்ளவேண்டியது தான்.. //
அதுக்கு நானும், எஸ்கேவும் கொஞ்சம் சிமன்ட் போட்டு உதவுவோம் :)). எஸ்கே மறுக்கமாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் உங்களை கலக்காமல் சொல்லிவிட்டேன் :))
சிபா, (சிவபாலன் -சுருக்கம் எனக்கு பிடிச்சி இருக்கு ; உங்களுக்கு ஆட்சேபனை ?)
கோவி.கண்ணன் சார்,
நீங்களும் SK அய்யாவும் நிச்சயம் உதவ வேண்டும்.
சிபா... நல்லாயிருக்குங்க...
Update - திரு.இகொ. அவர்களின் பதிவுக்கான சுட்டி.
newloghere,
Thanks for visit.
Please do not give any link..
ddumping,
Thanks for your visit.
elephantcom
Thanks for your visit.
falco348,
Thanks for your visit.
Post a Comment
<< Home