ஒர் அழைப்பு!!! - எங்க வீட்டு லைப்ரேரி...
மதிப்பிற்குரிய என் சக வலைப் பதிவாளர்களே, உங்களிடம் இருக்கும் உங்க வீட்டு நூலகத்தின் புத்தகங்கள் வரிசை மற்றும் அதில் முக்கியமானது என நீங்கள் கருதும் புத்தகங்கள் பற்றி சிறு குறிப்பு அடங்கிய ஒரு தனிப் பதிவிடுமாறு உங்களை அன்போடு அழைக்கிறேன்.
நீங்களிடும் பதிவின் முகவரி/சுட்டியை இங்கே கொடுத்துவிடுங்கள். அது நிச்சயம் பல பேருக்கு பேறுதவியாக இருக்கும்.
அனைவரையும் அன்போடு அழைக்கிறேன் .. வாரீர்.. வாரீர்.. வாரீர்..
பி.கு.
அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்....
என்னுடைய பெயரைப் பயன் படுத்தி பதிவிட்டால், ஏதொ ஒரு தனி மனிதனுக்காக இச் சேவையை செய்வது போல் ஒரு உணர்வை ஏற்படுத்திவிடும். அதனால் தயவு செய்து என் பேரை முடிந்தவரை தவிர்க்கவும்.
பதிவிட்ட வலைப் பதிவாளர்கள்.
1. "Mr.Chalam"
2. திரு.மகேந்திரன்.பெ வீட்டு நூலகம் - "பகுதி-1" "பகுதி-2"
3. "திரு.கோவி.கண்ணன்"
4. திருமதி.சந்தரவதனா வீட்டு நூலகம் - "பகுதி-1" , "பகுதி-2" , "பகுதி-3" , "பகுதி-4" , "பகுதி-5"
5. "Dr.பிரபாகர் (தெகா)"
6. "Manu (திருமதி.ஏழிசை நரகரி) "
7. "கப்பி பய"
8."திரு.செந்தழல் ரவி"
9. "மதி கந்தசாமி" நன்றி: சோழநாடன்
10. "திரு.குமரன் எண்ணம்"
11. "Ms.சந்தனமுல்லை"
12. "திரு.சோழநாடன்"
91 Comments:
தெகா
சீக்கிரமே பதிவைப் போடுங்கள்... படிக்க ஆவலாக உள்ளது..
புத்தகம் இல்லாதவர்கள் என்ன போடுவது ?
:))
அப்படி அங்கு சொன்னால் இப்படி இங்கு மாட்டி விடுகிறீர்களே! :((
முயல்கிறேன்! :)
நூலகம் என அழகுத் தமிழில் சொல்லலாமே!
புழக்கத்தில் இருக்கிற நல்ல தமிழ் வார்த்தைகளையாவது பயன்படுத்த முன்வாருங்கள் அன்பர்களே!
John ஜான் போஸ்கோ அய்யா,
மன்னித்துவிடுங்கள். தலைப்பு குங்குமம் வார இதழில் படித்தேன் அதனால் வைத்துவிட்டேன். இனி வரும் காலங்களில் தவிர்த்துவிடுகிறேன்.
சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி.
GK,
//புத்தகம் இல்லாதவர்கள் என்ன போடுவது ? //
புத்தகம் வாங்கி பதிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நானே திறந்த புத்தகம், எனக்கு எதற்கு புத்தகம் :)))
கொஞ்சம் மூடுறீங்களா!!!!!!!!!
:)))))))))))
SK அய்யா,
வேறு வழியில்லை .. தனிப் பதிவு நீங்கள் போட்டுத்தான் ஆக வேண்டும்.
GK,
திறந்த புத்தகத்தின் புத்தகத்தை அறிய ஆவல்.. அவ்வளவே...
நான் தான் முதலாவதா பதிவு எழுதி இருக்கேன்.
http://chennaidhasan.blogspot.com/2006/07/blog-post.html
Chalam,
அழைப்பை ஏற்று பதிவிட்டதற்கு மிக்க நன்றி.
///புத்தகம் இல்லாதவர்கள் என்ன போடுவது ? //
புத்தகம் வாங்கி பதிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.//
:-)))
அது ஒரு நல்ல நகைச்சுவை. வர வர நம்மாளுங்க போட்டுத் தாக்குறாங்கப்ப.
சிவா, நான் கொஞ்சம் கொஞ்சமாத்தான் வருவேன், அதினால இந்த பதிவு ஒரு ரெண்டு வாரம் வரைக்காவது ஓடும், கவலை வேண்டாம் எல்லா பதிவர்களின் "நூல்நிலையத்தில்" உள்ள நூல்களின் தலைப்பு இங்கே பதியப்படுவதால், ஏதாவது நாம் படிக்கமால் விட்டுப் போயிருக்கிற நூலசிரியரை இனம் கண்டு வாங்கிப் படிக்க உதவுமென்று கருதுகிறேன்.
தாங்களின் முயற்சி வெற்றியடைய வாழ்துகள்.
//Sivabalan said...
GK,
திறந்த புத்தகத்தின் புத்தகத்தை அறிய ஆவல்.. அவ்வளவே...//
திறந்த புத்தகம் தானே பதிவுகளாக வருகிறது ! சரி ஒரு பதிவை தட்டிவிடுகிறேன்.
தெகா (Orani),
உண்மைதான். அனைவரின் நூலகங்களை அறிந்துகொள்வதில் நிச்சயம் பல நன்மைகள் உள்ளது.
வாழ்த்துக்கு நன்றி.
GK,
உங்களுக்கு பிடித்த புத்தகத்தைப் பற்றி சிறு குறிப்பும் கொடுங்கள்...
இங்கே எனது நூலகத்தின் கதை
http://paarima.blogspot.com/2006/07/blog-post_28.html
சிபா, சுட்டி இதோ !
http://govikannan.blogspot.com/2006/07/blog-post_29.html
//நானே திறந்த புத்தகம், எனக்கு எதற்கு புத்தகம் :)))//--கோவி,
//கொஞ்சம் மூடுறீங்களா!!!!!!!!!
:)))))))))))//--SK
இந்த மாதத்தின்(இன்னும் தோன்கூடு பாதிப்பில்) சிறந்த "பதிலடி பின்னூட்டமாக" ( இதை நான் சிபாரிசு செய்கிறேன்.
சிவபாலன்,
நல்ல ஒரு தொடரை ஆரம்பித்து இருக்கிறீர்கள், விரைவில் நானும் இணைகிறேன்.
அன்புடன்...
சரவணன்.
திரு.மகேந்திரன்,
பதிவிட்டதற்கும் அதன் சுட்டிக்கும் மிக்க நன்றி.
GK,
அழைப்பை ஏற்று பதிவிட்டதற்கு மிக்க நன்றி.
சரவணன்,
அப்பின்னூடத்தை நானும் இரசித்தேன்.
சீக்கிரமே பதிவிட வாழ்த்துக்கள்!!
//SK said...
கொஞ்சம் மூடுறீங்களா!!!!!!!!!
:)))))))))))
//
அடடா... இங்கே சத்தமில்லாமல் ஒரு கமென்டா ?
ம் ... மருத்துவர்களிடம் எதையும் மறைக்க கூடாது என்பார்களே :)))))))))))
GK,
// மருத்துவர்களிடம் எதையும் மறைக்க கூடாது என்பார்களே //
நல்ல டைமிங்..
சிவா,
அருமைய, நீங்க எண்ணியபடியே பதிவுகள் வெளிவந்து கொண்டு இருக்கிறது.
அசத்தல்ய!!!
இப்ப எனக்கு ஒரு சந்தேகம் வருகிறது, மருத்துவர் போலி மருத்துவராக இருப்பாரோ :))))
தெகா,
சிபா எண்ணத்தில் புத்தகம் அலமாரி அலமாரியாக விழுகிறது... ஒன்னும் இல்லை என்று சொன்ன நானே, தேடி எடுத்துவந்து பட்டியல் எழுதிவிட்டேன்.
:))
இப்ப என்னுடைய கஷ்ட காலம் எங்கிருந்து தொடங்குவதுங்கிறதுதான், தமிழ்வாணன் (இந்த கண்ணாடி போட்டுருப்பாரே) பிரசுரத்தில் வாங்கிய, '30 நாட்களில் காரத்தே கற்றுக்கொள்வது எப்படின்னு" ஒரு புத்தகத்தை எங்கப்பா வி.பி.பி, பார்சல்லெ வந்தததை கையெழுத்துப் போட்டு வாங்கப் போயி, அதை பிரிச்சும் படிச்சுப்புட்ட;
ஏண்டா, புல் தடுக்கிப் பயில்வான் மாதிரி இருந்துக் கிட்டு காரத்தே போடப் போறியான்னு சொல்லப் போக, என் ஒட்டு மெத்த பள்ளிக் கூடத்துக்கே அது தெரிஞ்சு அப்புறம் என்னை "புல் தடுக்கி பயில்வான்னு" கூப்பிட ஆரம்பிச்சத சொல்வேனா, இல்லெ..... நான் எங்கேயிருந்துங்க தொடங்குவேன் :-))))
பட்டியல் ரெடி..
நாளை பதிகிறேன்..
நன்றி சிவபாலன்
தெகா,
புல் தடிக்கி பயில்வானைப் போட்டு ஆரம்பமே அமக்கலப்படுத்துகிறீர்கள்.. முழுவதும் எழுதுங்கள்.
ஒரே மூச்சாக படித்துவிடுவோம்.
திரு.கப்பி பய,
நல்ல விசயம்.
பதிவிடுங்கள்...
படித்துவிடுவோம்..
சிவபாலன்,
நல்ல யோசனை.
தூசு கூடத் தட்டாமல் அப்பொ அப்போ எடுத்துப் படிச்சுட்டு வைத்துவிடுகிற புத்தகங்களைப் போற்ற சந்தர்ப்பம் கிடைத்தது.
நன்றி. பதிவு இடுகிறேன்.
Manu,
உங்கள் நூலகத்தைப் பட்டியலிடுங்கள்..
நிச்சயம் உபயோகமாக இருக்கும்.
Update - பதிவிட்ட வலைப் பதிவாளர்கள் List.
தெகா,
நூலகப் பதிவை எழுத ஆரம்பித்தீர்களா? இல்லையா?
என்னங்க சிவா,
//நூலகப் பதிவை எழுத ஆரம்பித்தீர்களா? இல்லையா?//
இருங்க இப்பத்தான் ஒரு complete inventory எடுக்கிறேன், அது எனக்கும் கொஞ்சம் உதவியா இருக்குமின்னு (என்ன இருக்கு என்ன ரக்கை மொளச்சு பறந்துப் போச்சுன்னு தெரிஞ்சுக்கவாவது)...
ரெண்டு மூணு நாளு போகட்டும் இங்கன ஏத்தி வைச்சுடறேன்...
சிவபாலன்
ஏற்கெனவே புத்தகங்களோடு... என்று சில பதிவுகள் 2005 இல் செய்திருந்தேன்.
உங்களுக்குப் பயன்படுமா என்று பாருங்கள்.
புத்தகங்களோடு பிறந்தேன், வளர்ந்தேன், வாழ்ந்தேன்
புத்தங்களோடு... - 2
புத்தங்களோடு... - 3
புத்தங்களோடு... - 4
புத்தங்களோடு... - 5
சந்திரவதனா,
நிச்சயம் உபயோகமாக இருக்கும்.
மிக்க நன்றி.
Update - திருமதி.சந்திரவதனாவின் நூலகம் - page link.
நண்பரே,
/வீட்டு நூலகத்தின் புத்தகங்கள் வரிசை மற்றும் அதில் முக்கியமானது என நீங்கள் கருதும் புத்தகங்கள் பற்றி சிறு குறிப்பு அடங்கிய ஒரு தனிப் பதிவிடுமாறு உங்களை அன்போடு அழைக்கிறேன்./
கிட்டத்தட்ட 400 புத்தகங்கள் என் வீட்டு நூலகத்தில் வைத்திருக்கிறேன்.
சென்ற வாரமும் இரண்டு தமிழ் அடிப்படை இலக்கணப் புத்தகங்களை என் நண்பர் சென்னையில் இருந்து அனுப்பியிருந்தார். என்னிடம் உள்ள 400 புத்தகங்களும் எனக்குப் பிடித்தவையே. அதில் முக்கியமானது என தேர்ந்தெடுப்பது சுலபமான செயல் அல்ல. ஒன்றை விட்டு இன்னொன்றை எடுப்பதற்கு மனமும் இடம் கொடுக்குதில்லை. எனினும் உங்களின் அழைப்பை ஏற்று வரும் வாரம் ஒரு தனிப்பதிவு போடுகிறேன்.
வெற்றி,
மிக்க நன்றி.
நிச்சயம் நிறைய பேருக்கு உபயோகமாக இருக்கும்..
கரடி விட்டதன் காரணம் என்ன ? ஐ மீன் கரடி படம் :))
GK,
ஆப்பிள் போல் உறைந்து விட்ட புத்தங்களை கடித்தெடுக்கும் கடின முயற்சி.
உண்மையிலேயே ரொம்ப கடினமாகத்தான் இருக்கிறது. Very Very Poor response, GK.
ஒரு வேளை வேறு யாராவது ரொம்ப பிரபலமான யாராவது அழைத்திருந்தால் கொஞ்சம் Response இருந்திருகும் என்று நினைக்கிறேன்.
இந்த நல்ல விசயத்தை வேறு யாராவது எடுத்துக் கொண்டு , தயவு கூர்ந்து வழி நடத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இனி மேல் கொண்டு இது போன்று விசயங்களில் இறங்குவது இல்லை என முடிவு செய்துள்ளேன்..
நன்றி.
நீங்கள் மதுமிதா அவர்கள் போட்டது போல் இரண்டு நாள்களுக்கு ஒருமுறை ஒரு புதுபதிவு போட்டு வேண்டுகோள் விடுங்கள். இந்த பதிவு வெள்ளிக்கிழமை வந்ததால் மற்ற நண்பர்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை.
அன்று அன்று வரும் பதிவுகளைத் தான் பெரும்பாலோர் படிக்கின்றனர். நாளை இந்திய காலை நேரப்படி இதே தகவலுடன் புது பதிவுபோடுங்கள்.
இது ஒரு நல்ல முயற்சி அயற்சி ஏற்படுவது உண்மைதான். தொகுத்தால் பயனளிக்கும்.
இல்லை GK.
இங்கே நிறைய பிரபலங்கள் இருக்கிறார்கள். இது உண்மையிலே நல்ல விசயம் என்றால் அவர்கள் வழி நடத்தட்டும்.
நான் பின்னூடங்களுக்குகாக இதை செயவதாக சில பேர் நினைப்பதால் தான் இங்கே பதிவுகளை காணமுடியவில்லை.
விடுங்கள்... நமக்கு மட்டும் என்ன வந்தது...
எனக்கு திருவிளையாடல் வசனம் நினைவுக்கு வருகிறது:
என்னால் எப்படி முடியும் என்னால் எப்படி முடியும் என்றால் ............
நல்ல முயற்சியை சொல்லடிகளுக்கு பயந்து நிறுத்திவிடாதீர்கள்
//நான் பின்னூடங்களுக்குகாக இதை செயவதாக சில பேர் நினைப்பதால் தான் இங்கே பதிவுகளை காணமுடியவில்லை.//
அடடா, அதெல்லாம் ஒன்னும் இல்லிங்க. நீங்களாக எதையாவது லிங்க் பண்ணிக்காதிங்க. தொடர்ந்து படிப்பவர்கள் எல்லாவற்றையும் புரிந்துதான் வைத்துள்ளார்கள்.
//விடுங்கள்... நமக்கு மட்டும் என்ன வந்தது...//
இலங்கை பிரச்சனையை தைரியமாக எழுதினீர்கள் எனக்கு என்ன வந்தது என்று விட்டு விட்டீர்களா ?
அது போல் நினைத்துக் கொள்ளுங்கள்
திரும்பவம் சொல்கிறேன் ... நீங்கள் எடுத்தது நல்ல முயற்ச்சி... நான் சொன்ன வழிமுறைகளை பின்பற்றுங்கள்.
முடிவெடுக்க வேண்டியது நீங்களே. நான் உங்களை force பண்ணவில்லை.
திரு.மகேந்திரன்.பெ,
உங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றி.
GK,
நீங்கள் சொல்வதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.
//GK,
நீங்கள் சொல்வதை நான் ஏற்றுக் கொள்கிறேன். //
நன்றி சிபா... நான் எஸ்கேவுக்கும் நினைவு 'படுத்துகிறேன்' :)
//இங்கே நிறைய பிரபலங்கள் இருக்கிறார்கள். இது உண்மையிலே நல்ல விசயம் என்றால் அவர்கள் வழி நடத்தட்டும். //
சிவா, இதயத்திற்கு எடுத்துச் செல்லாதீர்கள். உம்மால் முடிந்ததை புரிந்து கொண்டதை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள முயற்சிக்கிறீர்கள், புரிந்து கொண்டவர்கள் புரிந்து கொள்ளட்டும் மற்றவர்களை பற்றி கவலை வேண்டாம்.
பி.கு: இந்த பதிவிற்கான பொருளையும் இதற்காக இப்படி ஒரு அழைப்பு என்பதனையும் அவர்களே புரிந்து கொள்ள விட்டு விட வேண்டியதுதான். நீங்கள் கூறவந்ததை கூறியாகிவிட்டது.
சிபா, மதுமிதா கேட்ட பொழுதும் ரெஸ்பான்ஸ் முதலில் மெதுவாகத் தான் வந்தது. பின்பு 80% பேர் கொடுத்துவிட்டனர். அதற்கு ஒரு மாதகாலம் பிடித்தது. அவரது பதிவில் பின்னூட்டங்களின் மூலம் தெரிந்து கொள்ளவும்.
எதுவும் எழுதுவதற்கு இல்லை என்றால் புத்தக பட்டியலை உடனே எல்லோரும் வெளியிட்டுவிடுவார்கள். ஆகவே பொறுமை காக்க... நானும் வேண்டுமானால் இது குறித்து பதிவு எழுதி உங்களின் பதிவு சுட்டியை அங்கு இடுகிறேன்.
GK,
மிக மிக நன்றி.
நீங்களும் பதிவிடுங்கள் நிச்சயமாக உபயோகமாக இருக்கும்.
இன்னொரு விசயம், நீங்கள் உங்கள் பதிவிலேயே Link கொடுக்கச் சொல்லிவிடுங்கள். இதில் உள் நோக்கம் இல்லை. அனைவரின் சவுரியத்திற்காகவே. மன்னிக்கம் தவறாக எண்ன வேண்டாம்.
நான் உங்களிடம் இருந்து Link எடுத்துக் கொள்கிறேன்.
புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.
//இன்னொரு விசயம், நீங்கள் உங்கள் பதிவிலேயே Link கொடுக்கச் சொல்லிவிடுங்கள்.//
இதில் என்ன சவுகர்யம் இருக்கிறது என்று தெரியவில்லை.
நான் பிரபலம் இல்லிங்க ... என்னால் எல்லோருக்கும் பிராப்ளம் தான் :))
GK,
சிரிக்க வைத்துவிட்டீர்கள்...
தவறாக எண்ண வேண்டாம், சிவபலன்!
இரண்டு நாட்களாய் விட்டில் அதிகம் இல்லை.
மனைவியைக் கவனிக்கச் சென்றிருந்தேன்.
புத்தகங்களும் நிறைய!
ஒரு சில நாட்களில் போட்டுவிடுகிறேன்.
மன்னிக்கவும்.
நல்ல முயற்சி இது.
மனம் தளர வேண்டாம்.
SK அய்யா,
உங்களுக்கு எப்பொழுது நேரம் கிடைக்கிறதோ அப்பொழுது பதிவிடுங்கள்..
நிச்சயம் தவறாக எண்ணவில்லை...
Update - Dr.Prabhakar's page link
சிவபாலன், எங்கள் செல்வப் புத்தகங்களைப் பற்றிய பதிவு தமிழ்மணத்தில் அளித்து இருக்கிறென்.
தெளிவாக எழுதி இருக்கிறேனா தெரியவில்லை.
படிப்பதை விட அதைப் பற்றி எழுதுவது மகா சிரமம்.
என்னுடைய ப்ளாக்ஸ்பாட்,
www.porunaikkaraiyile.blogspot.com
நன்றி சிவபாலன்.
சிவபாலன், எங்கள் செல்வப் புத்தகங்களைப் பற்றிய பதிவு தமிழ்மணத்தில் அளித்து இருக்கிறென்.
தெளிவாக எழுதி இருக்கிறேனா தெரியவில்லை.
படிப்பதை விட அதைப் பற்றி எழுதுவது மகா சிரமம்.
என்னுடைய ப்ளாக்ஸ்பாட்,
www.porunaikkaraiyile.blogspot.com
நன்றி சிவபாலன்.
சிபா இதையும் அப்டேட் செய்யவும் எனது ஞாபகத்தில் இருக்கும் புத்தகங்களின் பட்டியல்
http://paarima.blogspot.com/2006/07/blog-post_31.html
சிவா,
என்னோட நூலகத்தின் பதிவுச் சுட்டி இந்தாங்க...
http://thekkikattan.blogspot.com/2006/07/blog-post_30.html
உண்மையிலேயே ரொம்ப நல்ல முயற்சீங்க... இன்னும் நிறைய பேரு வந்து அவங்களோட நூலக ஸ்டாக்கை இங்கு ஏற்றி வைப்பார்கள் என்று நம்புவோம்...
சிவபாலன்..
என்னுடைய சிறு பட்டியல்..
http://kappiguys.blogspot.com/2006/07/blog-post_31.html
நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள்..
நன்றி!
செந்தழல் ரவியின்,
புத்தம் புதிய புத்தகமே... சுட்டி
http://tvpravi.blogspot.com/2006/07/blog-post_115432258141144350.html
Update - Manu( திருமதி.ஏழிசை நரகரி) Page Link.
Update - Mr.Mahendran, Mr.Ravi, Ms.Mathy - page link.
// "திரு.கப்பி பய"//
சிபா,
திரு-வைத் தூக்கிடுங்களேன்..நல்லாவா இருக்கு?? :))
கப்பி பய,
திரு வேணாமா? சரி விடுங்க..
மற்ற எல்லாரும் எடுத்திருங்கன்னு சொல்லுவாங்க...
கொஞ்சம் மரியாதையாக இருக்கட்டுமேன்னு பார்த்தேன்..
Manu,
அழைப்பை ஏற்று பதிவிட்டதற்கு மிக்க நன்றி
Mahendran,
பதிவிட்டதற்கு மிக்க நன்றி
Theka,
அழைப்பை ஏற்று பதிவிட்டதற்கு மிக்க நன்றி
கப்பி பய,
நூலக பதிவிட்டதற்கு மிக்க நன்றி
GK & செந்தழல் ரவி,
பதிவிட்டதற்கு மிக்க நன்றி
//திரு வேணாமா? சரி விடுங்க..
//
கேட்டதும் எடுப்பவனே(ரே) சிவபாலா...
//GK & செந்தழல் ரவி,
பதிவிட்டதற்கு மிக்க நன்றி //
என்னங்க ரெண்டு பேருக்கும் சேத்து ஒரே பின்னூட்டத்துல நன்றி சொல்றீங்க...
தனி தனியா சொல்லுங்க..
தண்ணீர் தேசம் கிடைத்ததா??
// கேட்டதும் எடுப்பவனே(ரே) சிவபாலா...//
நீங்கள் கேட்டதும் கிடைத்து விட்டதா? சரி சரி சந்தோசம்..
http://kathalregai.blogspot.com/2006/07/blog-post_31.html
எனது பட்டியல்
குமரன் (எண்ணம்) ,
அழைப்பை ஏற்று பதிவிட்டத்தற்கு மிக மிக நன்றி.
நிச்சயம் நல்ல விசயம்..
நம்ம பதிவுக்கு அப்ப அப்ப வந்து போங்க...
http://sandanamullai.blogspot.com/
சந்தன முல்லையின் ஆத்தீ... சுட்டி
http://sandanamullai.blogspot.com/2006/08/blog-post.html
Update- Kumaran Ennam & Santhana Mullai - Page Link
சந்தனமுல்லை,
சுட்டிக்கு நன்றி
மகேந்திரன்.பெ,
சந்தன முல்லையின் சுட்டிக்கு நன்றி
சிவபாலன், இது பழைய புத்தக சங்கிலி போல உள்ளது. பழைய புத்தக சங்கிலியின் சுட்டிகளை என்
தொகுத்து வைத்துள்ள என் பதிவின் சுட்டி
"http://chozanaadan.blogspot.com/2006/02/6_21.html">பதிவில் தொகுத்து வைத்திருக்கிறேன். பார்க்கவும். பழைய பதிவர்கள் ஏற்கனவே எழுதிவிட்டதால் புதிய பதிவர்களை வைத்து நீங்கள் இதனை தொடரலாம்.
தொகுத்து வைத்துள்ள என் பதிவின் சுட்டி
http://chozanaadan.blogspot.com/2006/02/6_21.html
சோழநாடன்,
உங்கள் வருகைக்கும் சுட்டிக்கும் மிக்க நன்றி.
இப்பதிவை இங்கே இனைத்துக் கொள்கிறேன்.
நன்றி.
Update - சோழநாடன் page link
சரவணன் (உங்கள் நன்பன்) பதிவு போடரேன்னு சொன்னீங்களே என்னாச்சு...
சிவபாலன்,
பெத்த ராயுடு 'தண்ணீர் தேசம்' PDF வடிவில் இங்கு ஏற்றியுள்ளார்
http://www.uploading.com/?get=NBOP9A6U
கப்பி பய,
சுட்டிக்கு மிக்க நன்றி.
அன்பு நண்பருக்கு வணக்கம். உங்களின் சீரிய முயற்சிக்கு வாழ்த்துக்கள். இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது....
Post a Comment
<< Home