Friday, January 19, 2007

சீனா செய்வது சரியா? தவறா?



விண்வெளியில் சுற்றும் செயற்கைக்கோளை ஏவுகணை மூலம் தகர்க்கும் அபாயகரமான சோதனையை சீனா ரகசியமாக நடத்தியது. இதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட உலக நாடுகள் அதிர்ச்சியையும் கண்டனத்தையும் தெரிவித்து உள்ளன.


விண்வெளியில் ஆக்கப்பணிகளுக்காக விடப்படும் செயற்கைக்கோள்களை அழிக்கும் திறன் அமெரிக்காவிடமும், முன்னாள் சோவியத் யூனியனிடமும் தான் இருந்தது. கடைசியாக 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அதன்பிறகு எந்த நாடும் இந்த சோதனையில் ஈடுபடவில்லை. தற்போது சீனா இந்த சோதனையை ரகசியமாக நடத்தி உள்ளது.


வானிலை ஆய்வுக்காக விண்வெளியில் சீனா அனுப்பிய ஒரு செயற்கைக்கோள் செயல்பாடு குறைந்துவிட்டது. பழமையான இந்த செயற்கைக்கோளை தாக்கி அழிப்பதற்காக கடந்த 11ம் தேதி சீனா நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய நடுத்தர அணு ஏவுகணை ஒன்றை அனுப்பியது. இந்த ஏவுகணையில் வைக்கப்பட்டு இருந்து ஒரு சாதனம் 860 கி.மீ. உயரத்தில் பூமியை சுற்றிக் கொண்டிருந்த செயற்கைக்கோளை நேரடியாகத் தாக்கியது. இதில் செயற்கைக்கோள் தகர்ந்தது.


சீனா ரகசியமாக நடத்திய இந்த சோதனையை அமெரிக்காவின் உளவுத் துறை கண்டுபிடித்து வெளியிட்டு உள்ளது.

7 Comments:

Anonymous Anonymous said...

யார் பெரியண்ணன்? போட்டி மீண்டும் ஆரம்பம்...ம்ம்ம்

January 19, 2007 8:34 PM  
Blogger வெற்றி said...

/* இதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட உலக நாடுகள் அதிர்ச்சியையும் கண்டனத்தையும் தெரிவித்து உள்ளன. */

ஹிஹிஹி... இது நல்ல பகிடி[தமாஷ்]. உண்மையில் இச் செய்தியை இன்று காலை BBC இணையத்தளத்தில் வாசித்த போது எனக்குச் சிரிப்பு அடக்க முடியவில்லை. யார் யாரைக் கண்டிப்பது! :) சீனா என்ன அரபு நாடா வடிகட்டின முட்டாள்தனமாக நடந்து கொள்ள.

January 19, 2007 8:39 PM  
Blogger Sivabalan said...

திரு

இந்த பெரியண்ணன் சன்டையில் இந்தியா பொன்ற நாடுகளின் நிலை என்ன என்பது சற்று சுவாரசியமான விசயம்.

இந்த நிலையில் நேற்று நமது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்டிற்கான கிரையோஜெனிக் சோதனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வருகைக்கு நன்றி

January 19, 2007 10:49 PM  
Anonymous Anonymous said...

அறிந்தேன். இந்த உலக அரசியல் பற்றி ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதவேண்டும் சிவா.

January 20, 2007 8:12 AM  
Blogger Sivabalan said...

India to assess Chinese anti-satellite test: official

M Natarajan, Scientific Advisor to the Defence Minister and chief of the Defence Research and Development Organisation (DRDO), said it was a matter of concern if such missiles could "disable" satellites, particularly those with GPS, navigation and military applications.

Natarajan told reporters in response to questions that details of the reported test were not available. "We are looking into it. We will make our own assessment (to see) what steps we need to initiate in this direction."

He said India recently conducted a successful test in which a missile intercepted a simulated "enemy" missile at an altitude of close to 50 km.

This exercise of "entire networking -- the continuous monitoring of the missile from the start of launch, handing over from mission control to launch control and several redundancies involved in networking...the whole thing taking off....was done in-house at DRDO", he said.

Natarajan termed this a "real breakthrough" and said this technology has been "put in place".

January 20, 2007 12:04 PM  
Blogger Sivabalan said...

வெற்றி

வருகைக்கு கருத்துக்கும் மிக்க நன்றி!1

சீனாவின் சவால் பிரம்மிப்பாக உள்ளது.

January 22, 2007 12:57 PM  
Blogger Sivabalan said...

திரு

// இந்த உலக அரசியல் பற்றி ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதவேண்டும் //

எழுதுங்க.. படிக்க ஆவல்..

January 22, 2007 12:59 PM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv