Friday, January 05, 2007

இதற்கு சோ கார்ட்டூன் போடுவாரா?



துக்ளக் ஆசிரியர் சோவின் மகனுக்கு சொந்தமான கட்டிடத்தில் விதிகளை மீறி கட்டப்பட்ட கடைகளை 6 மாதங்களுக்குள் இடித்துத் தள்ள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சென்னை சிபி ராமசாமி சாலையில் இருந்த ஆழ்வார்பேட்டை நிதி நிறுவனத்துக்கு சொந்தமான நிலத்தை சோவின் மகன் ஸ்ரீராம் வாங்கினார். அதில் வர்த்தக மையத்தைக் கட்டினார். ஆனால், விதிகளை மீறி அடித்தளத்திலும் கடைகள் கட்டி வாடகைக்கு விட்டிருந்தார். இதையடுத்து அந்த கடைகளை இடிக்க சிஎம்டிஏ உத்தரவிட்டது.

முதலில் அவர்களுக்கு சிடிஎம்ஏ கொடுத்த அனுமதியின்படி அடித்தளம், தரை தளத்தில் ஸ்டோர் ரூம், ஜெனரேட்டர் ரூம், பாதுகாவலர்கள் ரூம் இருக்க வேண்டும். ஆனால் அந்த இடத்தையும் அவர்கள் வியாபார நிறுவனங்களுக்கு வாடகைக்கு விட்டுள்ளனர். இது விதி மீறல், தவறு.

ஸ்ரீராம் தரப்பில், அடித்தளம், தரைத் தள பகுதிகளை நாங்களே பழைய நிலைக்கு கொண்டு வருகிறோம். அதற்கு 6 மாதம் அவகாசம் தேவை என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் 6 மாதத்திற்குள் கடைகளை அகற்ற விட்டால், விதியை மீறிய பகுதிகளை சிஎம்டிஏ இடிக்கலாம் என்று தீர்ப்பு கூறினர்.


செய்தி: தட்ஸ் தமிழ்

68 Comments:

Blogger Sivabalan said...

சென்னையில் அநேக இடங்களில் இது போல் நடை பெறுகிறது. இந்த விதி மீறலை சிஎம்டிஏ இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

January 05, 2007 10:24 AM  
Blogger கோவி.கண்ணன் [GK] said...

போடுவார் போடுவார்.

கோபாலபுரம் ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது என்று !
:)

January 05, 2007 10:36 AM  
Blogger குழலி / Kuzhali said...

//போடுவார் போடுவார்.

கோபாலபுரம் ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது என்று !
:)
//
இது சூப்பர் :-))))

January 05, 2007 10:39 AM  
Blogger VSK said...

உங்கள் பதிவின் முதல் பகுதி, தவறான பொருள் தரும் வகையில் அமைந்திருக்கிறது, சிபா.

"ஆறு மாதங்களுக்குள்" அல்ல; ஆறு மாதங்களுக்குப் பிறகும் இந்நிலை நீடித்தால் மட்டுமே அவைகளை இடிக்க உத்தரவு இடப்பட்டிருக்கிறது.

மற்றபடி, விதிமீறல் எவர் செய்தாலும் அது தவறுதான்; கண்டிக்கப்படவேண்டியதுதான்.

அது கோபாலபுரமாக இருந்தாலும் சரி, ஸ்ரீராமாக இருந்தாலும் சரி!

January 05, 2007 11:08 AM  
Blogger VSK said...

உங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலப் புலமைக்கும், பாரபட்சமற்ற பதிவுக்கும் முன்னே என் சிற்றறிவு எம்மாத்திரம்?

தலை வணங்குகிறேன் ஸில்வியா !!

January 05, 2007 12:46 PM  
Blogger வெற்றி said...

தகவலுக்கு நன்றி.:)

January 05, 2007 1:19 PM  
Blogger VSK said...

//
Court order is owner must demolish the illegal construction ""within 6 months"" with his own expenditure. ""Otherwise"" Govt itslef will do that and collect the expenditure from the owner. So it is correct.//

That word "otherwise" means that NO demolition will ocur for 6 months!
Only, if Mr.Sriram doesn't comply with this order "within 6 months" , then it will be demoloshed , AFTER 6 months.

Now, pl. read the first line and you will know which one is correct!
//6 மாதங்களுக்குள் இடித்துத் தள்ள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது//

That's the strategy, Ms. Sylvia!
Thank you.

January 05, 2007 2:56 PM  
Anonymous Anonymous said...

சிவபாலன்!
ஞாயமாக இதுக்கும் ஓர் அட்டைப் படம் போட்டுத்தான் இருக்கவேண்டும். நடுநிலைவாதியல்லவா??வாசகரிடம் ஒரு எதிர்பார்ப்பு இருப்பதும் தவிர்க்கமுடியாததே!!வழமையான வாசகன் ;என்னும் இப்புத்தகம் வாங்கவில்லை.
யோகன் பாரிஸ்

January 05, 2007 2:58 PM  
Anonymous Anonymous said...

//biased affections based on community //

இந்தப் பதிவு, அதன் தலைப்பு, முதல் சில வரிகள், அதற்கு வந்த கோ.க.வின் பின்னூட்டம், குழலியின் சூப்பர், பொழுதுவின் நக்கல் எல்லாமே பாரபட்சமில்லாத தான் சார்ந்துள்ள கூட்டத்தின் பாற்படாத அப்பழுக்கில்லாத நேர்மையானவை. எஸ்.கே. அண்ணாவின் பின்னூட்டம் மட்டுமே தான் சார்ந்துள்ள கூட்டத்தின் மேல் வைத்த பாசத்தால் வந்த கருத்து. ஐயோடா. சூப்பர் ஸில்வியா அம்மையாரே. உங்களின் Statregyயே Statregy.

இப்ப எஸ்.கே. அண்ணா அவர் என்ன சொன்னார்ன்னு விளக்கிட்டார். உங்களுக்கு புரியலைன்னா குழலி அவரோட தமிழாசிரியரை அனுப்புவார். அவர்கிட்ட கேட்டு புரிஞ்சிக்கோங்க.

January 05, 2007 3:46 PM  
Anonymous Anonymous said...

ஆணானப்பட்டக் காஞ்சி விவரத்திலேயே நான் மடத்துமேலே மிக்க மரியாதை வைத்திருக்கிறேன் அது பற்றி ஒன்றும் எழுத முடியாது என்றார்.மகன் மேலே எவ்வளவு பற்றும் பாசமும் இருக்கும் இதையெல்லாம் எதிர் பார்க்கலாமா.நோக்குத்தாண்டா சிரிப்பெல்லாம் நேக்கு வந்தா வலிக்காதோன்னா!

January 05, 2007 4:09 PM  
Blogger கால்கரி சிவா said...

சரி சோ மகன் மீறும் விதிமுறைகளுக்கு தண்டனை தந்துவிடலாம், இடித்து விடலாம். ப்ரச்னையே இல்லை

கோபாலபுரம் ஆசாமியும் அவரின் வாரிசுகளும் மீறும் விதிமுறைகளுக்கு எப்ப சாமி இடிக்கிறது

January 05, 2007 5:20 PM  
Blogger Anony said...

எங்கேடா இன்னும் ஆளைக் காணுமேன்னு நெனைச்சேன். வந்துட்டாங்கே பூணூல் பார்ட்டிகளும் அடிவருடிகளும்!

தப்பு யார் செஞ்சாலும்தப்புதான். பூணூல் போட்டா விதி மீறனும்னு ஏதும் இருக்குதா? எல்லாரையும் நொட்டை சொல்லும் மொட்டைத்தலை சோ(மாறி) ராமசாமி இதுக்கும் கார்டூன் போடுவானா?

January 05, 2007 6:16 PM  
Blogger கூத்தாடி said...

சோ நடுநிலை வாதியல்ல என்று அவரே அவர் செயல்களின் மூலம் நிறுவியிருக்கிறார் .அதனால் மட்டுமே அவர் சொல்வது எல்லாமே தவறும் அல்ல .இந்த விவகாரத்தில் கார்டூன் போடும் அளவுக்கு ஒன்றும் பெரிய விசயம் இல்லை

அவர் நடுநிலைவாதியாக இருப்பார் என்று நீங்கள் ஏன் நம்புகிறீர்கள்.ஒரு சிலரை எதிர்த்தால் மட்டுமே அவர் நடுநிலைவாதியாக மாட்டார்.என்னைப் பொறுத்தவரை அவர் கருத்துக்களை அவர் என்றும் மறைத்ததில்லை,அவர் ஒரே மாதிரியாகத் தான் சொல்லிக்கொண்டு இருக்கிறார் ,அவர் துக்ளக்கை படிப்பவர் எல்லோரும் கூட அவர் சொல்லுவதை ஒத்துக்கொள்வதில்லை.அவர் நடுநிலையாகத் தோற்றம் அளிப்பது நம் சமூகத்தின் கொடுமை .மற்றபடி இதை ஒரு பதிவாகப் போடும் அளவிற்கு ஒன்றும் முக்கியமானச் செய்தி அல்ல ..

கால்கரி சிவா
கோடம்பாக்கம் வகையறாக்கள் கொள்ளை அடிப்பதும் புதிதும் இல்லை ,அவர்களுக்கு புனித பிம்பமும் இல்லை ..இங்கு சிலர் சோவை புனிதராக நினைக்கிறார்கள் என் பார்வைபடி எல்லாம் ஒண்ணுதான் சந்தர்ப்பம் கிடைத்தால் நாமக் கூட மாறி விடுவோம் .

January 05, 2007 7:05 PM  
Blogger VSK said...

//சந்தர்ப்பம் கிடைத்தால் நாமக் கூட மாறி விடுவோம் .//

தவறு திரு.கூத்தாடி,

இப்படிச் சொல்லி இருக்க வேண்டும்!

"சந்தர்ப்பம் கிடைத்தால் நாமக் கூட [சோ]மாறி விடுவோம்!!

:)

January 05, 2007 8:12 PM  
Blogger Anony said...

வலையுலக டெண்டுல்கர், ராஜரிஷி சோ ரசிகன் அறுபது வயது இளைஞன் இதுக்கு என்ன பதில் சொல்லப் போகிறான்?

January 05, 2007 8:30 PM  
Blogger கோவி.கண்ணன் [GK] said...

//ராஜசன் said... இந்தப் பதிவு, அதன் தலைப்பு, முதல் சில வரிகள், அதற்கு வந்த கோ.க.வின் பின்னூட்டம், குழலியின் சூப்பர், பொழுதுவின் நக்கல் எல்லாமே பாரபட்சமில்லாத தான் சார்ந்துள்ள கூட்டத்தின் பாற்படாத அப்பழுக்கில்லாத நேர்மையானவை.//

ஆமாம் !!! இப்படித்தான் சரவண ஸ்டோர் மற்றும் பல தி.நகர் கடைகள் இடிக்கப்பட்ட போது நாங்கெளெல்லாம் அவர்களுக்காக ஆதரவு கொடுத்தோம்.

:)))

ஜல்லிகளை மலையாக குவிப்பவரே நன்றி !

January 05, 2007 8:52 PM  
Blogger கருப்பு said...

சிவபாலன், அவருகளே அருமையான இடுகையை எடுத்து இங்கே கொடுத்து இருக்கிறீர்கள். இன்பமும் துன்பமும் நமக்கு வந்தால்தான் தெரியும் என்பார்கள்.

January 05, 2007 9:11 PM  
Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

Indian Express reported that rules were violated for building the deemed university owned by a trust.Ramadoss is associated with
the trust and the university is
Vanniyar University.T.N.govt was rebuffed by Supreme Court for its efforts to get reprive to those who violated building rules in Chennai.In case of son of Cho let the law prevail.Will Kuzhali and
Sivabalans will ever protest about the violations of Ramadoss and Co
or attempts of T.N.Govt to shield
the violators.

January 05, 2007 9:20 PM  
Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

It was one Traffic Ramasamy who went to court against unauthorised
buildings in Usman Road.Will PMK
ever do such a thing.

January 05, 2007 9:21 PM  
Blogger வடுவூர் குமார் said...

கோர்டே சொல்லி இருக்கும் போது அதை நிவர்த்தி செய்வது ஞாயம் தான்,மாற்று கருத்துக்கு இடமில்லை.
சோ கார்டூன் போட்டால் மட்டும் இதெல்லாம் சரியாகாது.
வேண்டுமென்றால் நீங்களும் ஒரு கட்டிடம் கட்டி வியாபாரத்துக்கு விட்டு பாருங்கள், உங்களுக்கு தெரியாமல் எவ்வாளவு விஷயங்கள் உள்ளே போகிறது என்று தெரியும்.

January 05, 2007 9:49 PM  
Blogger ஓகை said...

சோ நாடாளுமன்ற உறுப்பினர். நமது அரசாங்கத்தின் ஒரு அங்கம். அவர் மகன் விதிமுறைகளை மீறிய ஒரு குற்றத்துக்கு வழக்கு தொடரப்பட்டு, விசாரிக்கப்பட்டு, தீர்ப்பளிக்கப்பட்டு, தீர்ப்பும் அவரால் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது. நடக்கப் போவது இரண்டிலொன்று. ஒன்று அவர் தீர்ப்பில் குறித்தபடி நடந்து கொள்ளப் போகிறார். அல்லது அவருக்கான தண்டனை காத்துக் கொண்டிருக்கிறது. ஒரு அரசியல் தொடர்பான மனிதரின் மகன் செய்யும் தவறுகள் கூட இவ்வாறே விசாரிக்கப்ப்ட்டு, தீர்ப்புகள் வழங்கப்பட்டு, நிறைவேற்றப் பட வேண்டுமென்பதே நாட்டு மக்கள் வேண்டுவதும் விரும்புதும்.

அரசியல் தொடர்பான பிரமுகர் விஷயதில் சட்டம் தம் கடமையை ஒழுங்காகச் செய்வது இன்றைய நடைமுறையிலிருந்து வெகுவாக விலகிய நடப்பு. அதைத்தான் சிவபாலன் பதிவிட்டுள்ளார். நன்றி சிவபாலன்.

இதற்குமுன் பல அரசியல் பிரமுகர்களின் மகன்கள் தவறுகள் செய்திருந்தாலும் ஏதோ காரணங்ளால் சிவபாலன் அவற்றையெல்லாம் பதிவாக போடவில்லை. ஆனால் இனிமேல் யாருடைய மகனும் அவ்வாறு தவறு செய்தால் சிவபாலன் பதிவு போடுவார் என்று சில்வியா போன்றவர்கள் நேர்மையாக எதிர்பார்க்கலாம்.

திநகர் கடைக்கள் இடிக்கப்பட்டபோது அவர்களுக்கு ஆதரவு அளிக்காத மிகப் பெரிய தார்மீக உரிமையின் காரணமாக கோவி கண்ணன் போன்றவர்கள் எல்லோருடைய தவறுகளையும் தட்டிக் கேட்பார்கள் என்று சில்வியா போன்றவர்கள் நடுநிலையாக எதிர்பார்க்கலாம்.

நாடு நடப்புகளை நன்கு அறிந்த குழலி இந்த விஷயத்தில் இவ்வளவு மகிழ்ச்சியை வெளிப்படையாக வெளிப்படுத்துவது எனக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது.

எல்லாவற்றுக்கும் கேலிச் சித்திரங்கள் போடும் துக்ளக் இதற்கும் போடுமா என்று சிவபாலன் எதிர்பார்ப்பது கேலிச் சித்திரங்கள் மீதான அவருடைய அதீத ஈடுபாட்டைக் காட்டுகிறது. பொதுவாக துக்ளக் கேலிச்சித்திரங்கள் நாட்டுமக்களை பெரிதும் பாதிக்கும் அரசியல் தலைவர்களைப் பற்றியும் நடப்புகளைப் பற்றியுமே இருக்கும். இதனால் அவர்கள் இதுபற்றி கேலிச்சித்திரங்கள் போட்டால் அது என்னைப் பொருத்தவரையில் தவறாகத் தான் இருக்கும். சிவபாலன் ஒன்று செய்யலாம். அவரே ஒரு கேலிச்சித்திரம் போட்டுவிடலாம். அல்லது இணையத்தில் கோரிக்கை வைஒத்தால் நம்மால் பலவகையிலும் தாங்க முடியாத அலவுக்கு கேலிச்சித்திரங்கள் வந்து குவிந்துவிடாதா?

January 05, 2007 10:15 PM  
Blogger ஓகை said...

// விதிகளை மீறி கட்டப்பட்ட கடைகளை 6 மாதங்களுக்குள் இடித்துத் தள்ள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது //

சிவபாலன், மேற்கண்ட வாக்கியத்தில் உள்ள கருத்துப் பிழை எஸ்கே சுட்டிக் காட்டிய பிறகும் தொடர்கிறதே! ஏதாவது விளக்கம் இருந்தால் கூறுவீர்களா?

January 05, 2007 10:18 PM  
Blogger கால்கரி சிவா said...

//தப்பு யார் செஞ்சாலும்தப்புதான். பூணூல் போட்டா விதி மீறனும்னு ஏதும் இருக்குதா? எல்லாரையும் நொட்டை சொல்லும் மொட்டைத்தலை சோ(மாறி) ராமசாமி இதுக்கும் கார்டூன் போடுவானா?
//

வந்துட்டாரய்யா திராவிட சொறிதாங்கி முகத்தை மூடிக் கொண்டு. தாடி வச்ச வெங்காய வெண்தாடி வேஸ்ட் ராமசாமிக்கும் அவனுடைய தாடியை பிடித்து தொங்கும் கருப்புக் கொடி பசங்களுக்கும் இதே கேள்விதான். கருப்புகொட்டி ஜோக்கர்கள் செயவதை பப்ளிக்கா போடுவார்களா?

January 05, 2007 10:27 PM  
Anonymous Anonymous said...

கோக. யாரு ஜல்லிகளை குவிக்கிறது? தலைப்புலையும் முதல் வரியிலையும் ஜல்லியை குவித்தது உங்க சிபா. அதை தவறென்று சொன்னது உங்க அருமை நண்பர் எஸ்கே. இங்கு யாரய்யா சோவுக்கு ஆதரவு கொடுத்தது? சோ என்றவுடன் தாவி வந்து நக்கல் செய்தது நீர். வந்து சூப்பர் போட்டது சூப்பர் சுப்பராயன். நீங்கள் எல்லாம் சோவின் சாதியை மட்டும் பார்த்து வெறி கொண்டு அலைந்துவிட்டு தெளிவா சோ மகன் செய்ததும் தவறென்று சொன்ன எஸ்கேவை திட்டுகிறார் இன்னொரு ஜல்லி திருமகள் ஸில்வியா. இத்தனைக்கும் பிறகும் உங்க சிபா தான் சொன்னது தவறென்றோ சரியென்றோ சொல்லாமல் 'திரு திரு' என்று முழிக்கிறார். இதில் நடுநிலை வேஷத்தை அப்ப அப்ப போடும் நீர் சொல்ல வந்துவிட்டீர் மற்றவர்களை ஜல்லிகளை குவிக்கிறாரென்று.

சிபா. உங்க நேர்மையை சோதிக்கும் பின்னூட்டம் இது. நீங்கள் இதனை அனுமதிக்கிறீர்களா இல்லை அனுமதி மறுத்து உங்கள் 'உள்ள' நேர்மையை மிதிக்கிறீர்களா பார்ப்போம்.

January 06, 2007 7:51 AM  
Blogger Sivabalan said...

நன்பர்களே,

இந்த சுட்டியில் தட்ஸ் தமிழ் செய்தியை படியுங்கள். அந்த செய்தியை சில வரிகளை அப்படியே கட் அண்ட் பேஸ்ட் செய்திருக்கிறேன். அவ்வளவே..

http://thatstamil.oneindia.in/news/2007/01/05/cho.html
மற்றபடி தலைப்பு மட்டுமே என்னுடையது.

சென்னையில் அநேக இடங்களில் இது போல் நடக்கிறது என்பதை ஏற்கனவே குறிபிட்டுள்ளேன். சென்னையில் பார்க்கிங் பிரச்சனைக்கு இது மிகப் பெரிய காரணமாகிவிடுகிறது.

January 06, 2007 8:02 AM  
Blogger Sivabalan said...

GK,

உங்கள் கமென்டை மிகவும் இரசித்தேன். நல்ல டைமிங் அன்ட் நகைச்சுவை.

வருகைக்கு நன்றி

January 06, 2007 8:10 AM  
Blogger Sivabalan said...

குழலி,

வருகைக்கு நன்றி

January 06, 2007 8:10 AM  
Blogger Sivabalan said...

பொழுது,

வருகைக்கு நன்றி

January 06, 2007 8:11 AM  
Blogger Sivabalan said...

அய்யா

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் கருத்துப் பிழையை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் செய்தி தட்ஸ் தமிழுடையது.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

January 06, 2007 8:13 AM  
Blogger Sivabalan said...

ஸில்வியா,

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

January 06, 2007 8:14 AM  
Blogger Sivabalan said...

வெற்றி,

வருகைக்கு நன்றி

January 06, 2007 8:14 AM  
Blogger Sivabalan said...

யோகன் பாரிஸ்,

வருகைக்கு நன்றி

January 06, 2007 8:16 AM  
Blogger Sivabalan said...

ராஜசன்,


வருகைக்கு நன்றி

January 06, 2007 8:17 AM  
Blogger Sivabalan said...

தமிழன்,

வருகைக்கு நன்றி

January 06, 2007 8:18 AM  
Blogger Sivabalan said...

கால்கரி சிவா ,


வருகைக்கு நன்றி

January 06, 2007 8:19 AM  
Blogger Sivabalan said...

அனானி

தயவு செய்து வார்த்தைகளில் மென்மை ஏற்றுங்கள்.


வருகைக்கு நன்றி

January 06, 2007 8:20 AM  
Blogger Sivabalan said...

கூத்தாடி

உங்கள் கருத்துக்கு நன்றி.


வருகைக்கு நன்றி

January 06, 2007 8:21 AM  
Blogger Sivabalan said...

கூத்தாடி

உங்கள் கருத்துக்கு நன்றி.


வருகைக்கு நன்றி

January 06, 2007 8:21 AM  
Blogger Sivabalan said...

சதிஸ் (விடாது கருப்பு),


வருகைக்கு நன்றி

January 06, 2007 8:21 AM  
Blogger Sivabalan said...

Ravi Srinivas Sir,

தவறு எங்கு நடத்தாலும் தவறுதான்..

ஆமா, சோ பற்றி சொன்னால் ஏன் ராமதாஸ், கருனாநிதி எல்லாம் உள்ளே கொண்டு வருகிறீர்கள்..

January 06, 2007 8:24 AM  
Blogger Sivabalan said...

Ravi Srinivas Sir,


வருகைக்கு நன்றி

January 06, 2007 8:25 AM  
Blogger Sivabalan said...

வடூர் குமார்

இதே சென்னையில் இந்த துறையில் குப்பை கொட்டி அனுபவம் எனக்கு உண்டு. அதனால் கட்டிடம் கட்டிப் பாருங்கள் தெரியும் என்பதெல்லாம் வீன் வாதம்.

நீங்கள் சொல்வதுபோல் சென்னையில் இது புற்று நோய் போல் பல இடங்களில் வந்துவிட்டது. அதைத் தான் நானும் குற்றம் சாட்டுகிறேன்.


வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

January 06, 2007 8:28 AM  
Blogger குமரன் (Kumaran) said...

//இதே சென்னையில் இந்த துறையில் குப்பை கொட்டி அனுபவம் எனக்கு உண்டு. அதனால் கட்டிடம் கட்டிப் பாருங்கள் தெரியும் என்பதெல்லாம் வீன் வாதம்.
//

எப்படி சிவபாலன் அது வீண் வாதம் ஆகும்? உங்கள் அனுபவத்தில் நீங்கள் கண்டதை நீங்கள் சொல்கிறீர்கள். அவர் அனுபவத்தில் அவர் கண்டதைக் குமார் சொல்லியிருக்கலாம் அல்லவா? :-)

January 06, 2007 8:32 AM  
Blogger Sivabalan said...

ஓகை அய்யா,

கொஞ்சம் வெளியே சென்று இந்த பிரச்சனையை கட்டிட் முதலாளிகளிடமும், சிஎம்டிஏ பொறியாளர்களிடமும் விவாதித்து பாருங்கள். பிரச்சனையின் சுய ரூபம் புரியும்.

சோவின் மகனே இதில் பெரிய தவறில்லை என எண்ணியதால்தான் துனிந்திருக்கிறார் என்பது என் குற்றச்ச்சாட்டு. அதாவது இது போன்ற விதி மீறல்கள் மலிந்துவிட்டதையே இது எடுத்துக்காட்டுகிறது.

இவ்வள்வு பேசும் சோவிற்கு இது நன்றாக தெரியும். அதனால்தான் கார்ட்டூன் போடுவாரா என கேள்வி எழுப்பினேன்.


உங்களைப் போன்றோர்களே இதை சப்பைக் கட்டு கட்டுவது மிகுந்த வருத்தமளிக்கிறது.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

January 06, 2007 8:35 AM  
Blogger குமரன் (Kumaran) said...

சிவபாலன். நீங்கள் முதல் பின்னூட்டத்தில் சொன்னதை அப்படியே வழிமொழிகிறேன். சென்னை மட்டுமின்றி நம் நாட்டில் எங்கு இது நடந்தாலும் அது தடுக்கப்படவேண்டும். செய்பவர் யார் என்பதை விட செய்யப்பட்டது விதிகளை மீறுவதாக இருந்தால் தண்டிக்கப் பட வேண்டும். சட்டங்கள் இருப்பதால் மட்டுமே ஒழுங்கு வந்துவிடாது; அவற்றை எப்படி அமல்படுத்துகிறோம் என்பதில் தானே ஒழுங்கு வருகிறது. சட்டங்களையும் விதிகளையும் மதிக்கும் பழக்கம் நம்மவர்களுக்குத் தானே வரவேண்டும். இல்லையென்றால் அந்தப் பழக்கம் தண்டனைகளின் மூலம் வரவைக்கப் பட வேண்டும். யார் யார் பெயர்கள் இங்கே இழுக்கப் பட்டிருக்கின்றனவோ அவர்கள் அனைவருக்கும், பெயர் சொல்லப்படாதவர்களுக்கும், எல்லோருக்கும் இது பொருந்தும்.

வெளிநாட்டில் சம்பாதித்து அதனை நம் ஊரில் வீடு வாங்கி முதலீடு செய்ய விரும்பும் நண்பர்களும் இதனைக் கருத்தில் கொள்ள வேண்டும். அவர்கள் வாங்கும் சொத்து விதிமுறைகளுக்கு உட்பட்டுக் கட்டப் பட்டிருக்கின்றனவா என்று தெரிந்த பின்னரே வாங்க வேண்டும். இதில் பல நன்மைகள் - நமக்கும் நாட்டிற்கும் - உண்டு.

January 06, 2007 8:38 AM  
Blogger Sivabalan said...

கால்கரி சிவா

வார்த்தைகளில் மென்மை ஏற்றுங்கள்.

வருகைக்கு நன்றி

January 06, 2007 8:46 AM  
Blogger Sivabalan said...

பரமபிதா,


வருகைக்கு நன்றி

January 06, 2007 8:50 AM  
Blogger Sivabalan said...

ராஜசன் ,

கருத்து சுதந்திரம் என்ற பேரில் என்ன வேண்டுமாலும் எழுதலாம் என்று ஆகிவிட்டது. அதனால்தான் "திரு திரு என விழிக்கிறேன" என்று கூறுவதெல்லாம்.

இந்த விதி மீறல்கள் பற்றி தங்கள் கருத்தை மட்டுமே எதிர் பார்க்கிறேன்.

வேறு ஒன்றும் சொல்வதிற்கில்லை.

வருகைக்கு நன்றி

January 06, 2007 8:54 AM  
Blogger Sivabalan said...

குமரன் சார்,

ஒரு கட்டிடம் கட்ட ஆரம்பிக்கும் போதே இது போன்ற விதி மீறல்கள் திட்ட மிடப் படுகிறது. (அது பெரிய தவறில்லை என நினைப்பதால்)

இது அநேக கட்டிடங்களுக்கு பொருந்தும்.

அதே துறையை சார்த வடூர் குமாருக்கு இது நன்றாக தெரியும். அதனால் தான் வீண் வாதம் என்று கூறினேன்.

உங்கள் வினாவிற்கு நன்றி

January 06, 2007 8:58 AM  
Blogger Sivabalan said...

குமரன் சார்,

உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி

January 06, 2007 8:59 AM  
Anonymous Anonymous said...

சிபா.

//

இதற்கு சோ கார்ட்டூன் போடுவாரா?

6 மாதங்களுக்குள் இடித்துத் தள்ள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

போடுவார் போடுவார்.

கோபாலபுரம் ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது என்று !
:)

According to IPC ABCD 1234 1903 Act,
it is legal . நாங்க எப்பவுமே rules and regulations
follow பண்றவா. டாட்டாவை மிரட்டிய தயானிதி மாறன் செய்யற சதி இது.

getting rid of our biased affections based on community etc

What is the name of this strategy sir?

நோக்குத்தாண்டா சிரிப்பெல்லாம் நேக்கு வந்தா வலிக்காதோன்னா!

எங்கேடா இன்னும் ஆளைக் காணுமேன்னு நெனைச்சேன். வந்துட்டாங்கே பூணூல் பார்ட்டிகளும் அடிவருடிகளும்!

தப்பு யார் செஞ்சாலும்தப்புதான். பூணூல் போட்டா விதி மீறனும்னு ஏதும் இருக்குதா? எல்லாரையும் நொட்டை சொல்லும் மொட்டைத்தலை சோ(மாறி) ராமசாமி இதுக்கும் கார்டூன் போடுவானா?

"சந்தர்ப்பம் கிடைத்தால் நாமக் கூட [சோ]மாறி விடுவோம்!!

வலையுலக டெண்டுல்கர், ராஜரிஷி சோ ரசிகன் அறுபது வயது இளைஞன் இதுக்கு என்ன பதில் சொல்லப் போகிறான்?

ஆமாம் !!! இப்படித்தான் சரவண ஸ்டோர் மற்றும் பல தி.நகர் கடைகள் இடிக்கப்பட்ட போது நாங்கெளெல்லாம் அவர்களுக்காக ஆதரவு கொடுத்தோம்.

:)))

ஜல்லிகளை மலையாக குவிப்பவரே நன்றி !

வந்துட்டாரய்யா திராவிட சொறிதாங்கி முகத்தை மூடிக் கொண்டு. தாடி வச்ச வெங்காய வெண்தாடி வேஸ்ட் ராமசாமிக்கும் அவனுடைய தாடியை பிடித்து தொங்கும் கருப்புக் கொடி பசங்களுக்கும் இதே கேள்விதான். கருப்புகொட்டி ஜோக்கர்கள் செயவதை பப்ளிக்கா போடுவார்களா?

கட்டிடம் கட்டிப் பாருங்கள் தெரியும் என்பதெல்லாம் வீன் வாதம்.

//

இது எல்லாம் கருத்து சுதந்திரம் படி சரி என்று தானே நீங்க அனுமதிச்சிருக்கீங்க? உங்களை சொன்னா வலிக்குதா? மத்தவங்களை சொன்னா பேசாமல் அனுமதிப்பீர்களா?

உங்க பதிவோட தலைப்பு விதி மீறல்களை பற்றியா கேட்டிருக்கு? வம்புக்கு தானே இழுக்குது. அப்புறம் என்ன 'விதி மீறல்கள் பற்றி தங்கள் கருத்தை மட்டுமே எதிர் பார்க்கிறேன்' என்று புனித பிம்ப வேஷம்? சொ.செ.சூ. வச்சிக்கிட்டா அப்படி தான். அப்புறம் குத்துதே குடையுதேன்னு அலறக்கூடாது.

January 06, 2007 9:06 AM  
Anonymous Anonymous said...

//ஆமா, சோ பற்றி சொன்னால் ஏன் ராமதாஸ், கருனாநிதி எல்லாம் உள்ளே கொண்டு வருகிறீர்கள்..
//

சிபா. இது உங்களுக்கே நியாயமா தோணுதா? யாரு முதல்ல கருணாநிதியை உள்ளே கொண்டு வந்தது? போய் பின்னூட்டமெல்லாம் படிச்சு பாருங்க. முதல்ல கருணாநிதியை கொண்டு வந்தவருக்கு நீங்க சொன்ன பதில்

//உங்கள் கமென்டை மிகவும் இரசித்தேன். நல்ல டைமிங் அன்ட் நகைச்சுவை.

வருகைக்கு நன்றி
//

உங்களுக்கு உறைக்கிற மாதிரி ஏதாவது சொன்னா அது மட்டும் தப்பா? ரவி சீனிவாஸைப் போட்டு தாக்குகிறீர்கள்?

January 06, 2007 9:09 AM  
Blogger Sivabalan said...

அய்யா

நான் பு.பி. வேசம் போட வேண்டிய அவசியமில்லை.

சோவைப் பற்றியும் விதி மீறல் பற்றியும் கேள்வி எழுப்பினால் அது சொ.செ.சூ என்றால், அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை.

January 06, 2007 9:11 AM  
Blogger Sivabalan said...

ராஜசன் ,

முழுமையாக என்பதிவை படித்தமைக்கு நன்றி.

Ravi Srinivas அவர்கள் மிகவும் காட்டமாக கேள்விக்கு என்னுடைய பதில் அது.. Hi Hi Hi...

January 06, 2007 9:24 AM  
Blogger VSK said...

//இந்த சுட்டியில் தட்ஸ் தமிழ் செய்தியை படியுங்கள். அந்த செய்தியை சில வரிகளை அப்படியே கட் அண்ட் பேஸ்ட் செய்திருக்கிறேன். அவ்வளவே.//

ஆக, ஒரு செய்தி தவறாக வெளியிடப்பட்டிருந்தாலும் அதை "அப்படியே" வெளியிடுவதில் தவறில்லை எனச் சொல்ல வருகிறீர்களா, சிபா?

ஒரே பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்வதால் அதை உண்மையாக்கிவிடலாம் என்ற கோயபல்ஸின் கொள்கைக்கும் இதற்கும் அதிக வேறுபாடு நான் காணவில்லை என்பதை வருத்தத்துடன் சொல்லிக் கொள்கிறேன், நண்பரே!!

January 06, 2007 9:27 AM  
Blogger Machi said...

சிவபாலன் சோ-வை சொந்த செலவில் \ பத்திரிக்கையில் சூனியம் வச்சுக்க சொல்லறிங்களே இது நியாயமா?

அவர் law point பேசுரார் என்பதற்காக அவரோட கட்சிக்காரையே /மகனையே 'தப்பா' இருந்தாலும் திட்டனும் என்பது சரியில்லை. :-)))

January 06, 2007 9:37 AM  
Blogger கோவி.கண்ணன் [GK] said...

//நடுநிலை வேஷத்தை அப்ப அப்ப போடும் நீர் சொல்ல வந்துவிட்டீர் மற்றவர்களை ஜல்லிகளை குவிக்கிறாரென்று. //

ராஜசன்,
நடுநிலை எல்லாம் நாமாகவே கற்பனைப் பண்ணிக் கொள்வதுதான். நமக்கு பிடிக்காதவற்றைச் ஒருவர் சொல்லாதவரை யாரும் நடுநிலையாளராகத்தான் தெரிவார்.

நான் நடுநிலை வாதி என்று எங்கும் சொல்லிக் கொள்ளவில்லை நானும் யாரையும் அப்படி இருக்கிறார்கள் என்று சொல்வதும் இல்லை.

//உங்க அருமை நண்பர் எஸ்கே. இங்கு யாரய்யா சோவுக்கு ஆதரவு கொடுத்தது? சோ என்றவுடன் தாவி வந்து நக்கல் செய்தது நீர். //

நண்பர் என்றால் எல்லாவற்றிக்கும் ஜால்ரா அடிக்கவேண்டும் யாராவது கொள்கை வைத்து இருக்கிறார்களா ?
நானும் அவரும் ஒருவருக்கு ஒருவர் ஜால்ரா அடித்துக் கொள்வதில்லை.

சோ ராமாசாமியை நான் அரசியல் விமர்சகராகப் பார்துத்தான் அவர் பாணியில் விமர்சித்தேன் அதற்குள் நீங்கள் ஜாதி வைத்துப் பொருள் சொல்வது உங்கள் குற்றம்.

நீங்கள் யாரென்றே எனக்கு தெரியாது, என்னை எவ்வளவு கேவலமாக திட்டி எழுதினாலும் இனி மதித்து மற்மொழி செல்ல மாட்டேன்.

January 06, 2007 10:09 AM  
Blogger கால்கரி சிவா said...

சிவபாலன், சும்மா சும்மா மென்மையாகவே பேசினால் சூடு எறுமா? அப்பப்போ காரம் சாப்பிட்டால்தானே சாமி நல்லாயிருக்கும். அதானால் தான் சூடு.

நான் வீடுகட்டி பார்த்திருக்கிறேன். விதிமுறைக்குள் ப்ளான் அப்ரூவ் வாங்கி சட்டத்திற்குகாக என் தேவைகளை சுருக்கி 2 வருடங்களுக்கு பிறகு வீடு கட்டினேன்.

கடைசியில் அந்த அரசு அதிகாரி (இவர் அரசியல்வாதி அல்ல. கோட்டாவில் வந்த அதிகாரியும் அல்ல பூணுல் போட்டவரும் அல்ல. மெரிட்டில் படித்த பொறியாளார்) என்னுடைய வீட்டில் 1000 "தவறுகளை" கண்டுபிடித்து சில ஆயிரங்களை லஞ்சமாக பெற்றார். எனக்கு மேலும் பொறுமை நேரம் இல்லை போராட. அந்த அரசு அதிகாரி கலைஞர் என் தெய்வம் என் வழிகாட்டி என்றார்.
அவருக்கு அரசு வேலை இனிக்கிறது. லஞ்சத்திற்கு லஞ்சம் ஜாப் செக்யூரிட்டிக்கு செக்யூரிட்டி.

என்னைப் போன்றவர்கள் இளிச்சவாயர்கள் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் திறமை மட்டும் மூலதனமாக வைத்து நேர்மையாக சம்பாதித்த பணத்தை இந்த கலைஞ சீடர்கள் அப்ரூவ் ஆன டிராயிங்களின் "தப்பு" கண்டுபிடித்து கொள்ளை அடிப்பார்கள்.

தப்பு செய்வது சோவாக இருந்தால் என்ன நானாக இருந்தால் என்ன தப்பிற்கு தண்டனைதான் நம் நாட்டு சட்டப்படி. ஆனால் சில "தப்பு"கள் கரன்சிகளால் மறைக்கப்பட்டு எதிரிகளின் சொத்துகள் மட்டும் இடிக்கப்படுகின்றன. இந்த ரவுடிகளிடன் மென்மை எல்லாம் எடுபடாது.

January 06, 2007 11:32 AM  
Blogger ஓகை said...

// உங்களைப் போன்றோர்களே இதை சப்பைக் கட்டு கட்டுவது மிகுந்த வருத்தமளிக்கிறது.//

என் பதில் சப்பைக்கட்டு என்றால் எனக்கு தமிழ் தெரியவில்லை என்று பொருள். தமிழை நன்றாகக் கற்றுவந்து பிறகு உங்களிடம் பேசுகிறேன். என்னையும் மதித்து பதில் சொன்னதற்கு நன்றி.

January 06, 2007 11:54 AM  
Anonymous Anonymous said...

//சிவபாலன் எழுப்பிய கேள்விக்கு பதில் சொல்வதை விட மொழிக்கூறுகளை வைத்து இந்த பதிவை வேறுமாதிரி திசைதிருப்பியதும் மனதை மகிழ வைத்தது.
//

கோகவின் பின்னூட்டமும் சூப்பர் குழலியின் பின்னூட்டமும் பதிவை வேறு மாதிரி திசைதிருப்பியதை கண்டு உஙகள் மனம் வருத்தப்பட்டிருக்குமே.

// இடிப்பது யாராக இருந்தாலும் (முதல் 6 மாதத்தில்) அதை இடித்துத் தள்ள வேண்டும். இல்லையென்றால் வலுக்கட்டாயமாக இடிக்கப்படும் என்பதுதான் தீர்ப்பு.//

இதை முதலிலேயே சொல்லியிருக்கலாமே? இதில் என்ன Communityம் Strategyம் வந்தது? திசை திருப்பிய Strategyயை செய்தது நீங்க தான் அம்மையாரே.

//அனைவரும் சாதீய சார்பை விட்டு முழுமையாக வெளிவர வேண்டும் என சொன்னது முதன்மையாக சோ வையும் பின்னதாக நம் அனைவரையும் (நான் உட்பட) தான்.
//

வேறு யாருக்கு வேணுமோ இல்லையோ உங்களுக்கு இது நிச்சயம் வேண்டும். நீங்க தான் எதையெடுத்தாலும் சாதீய சார்போட பேசுகிறீர்கள்.

//சாதீய சார்பு சண்டைகளில் சேர்ந்தே ஆக வேண்டும் என இழுக்கும் இந்த வகை தொற்றுநோய் வரவேற்பை புதிதாக வருபவர்களுக்கு பரப்ப வேண்டாம் என பணிவாக கேட்டுக் கொள்கிறேன்.
//

புதிதாக வரும் போதே Community, Strategy என்று பேசிக் கொண்டு வந்தது யாரு? நீங்களா? இல்லை வெறு யாராவதா? உள்ளே வரும் போதே தானாக இந்த சாதீய சார்பு சண்டைகளில் ஏன் போய் விழுகிறீர்கள்?

January 06, 2007 6:18 PM  
Blogger அருண்மொழி said...

பெரியார் அடிக்கடி கூறுவார் - "கன்னியாகுமரி பாப்பானுக்கு தேள் கொட்டினால், காஷ்மீரத்து பாப்பானுக்கு நெறி கட்டும்".

உலகம் ஒரு கிராமமாக சுருங்கி விட்ட நிலையில் "கன்னியாகுமரி பாப்பானுக்கு தேள் கொட்டினால் அமெரிக்கா முதல் அன்டார்டிகா வரை உள்ள பாப்பான்களுக்கு நெறி கட்டுகின்றது" என வைத்துக் கொள்ளலாம்.

January 06, 2007 9:59 PM  
Blogger முத்துகுமரன் said...

நாங்களும் விதிகளை மீறுவோம். தண்டனை கிடைக்கதவரை. கிடைப்பதாக தெரிந்தால் பெருந்தன்மையாக இடித்துவிட்டு இழப்புகளை தாங்கிக்கொள்வோம். எங்களை யாரும் குற்றவாளினு சொல்லகூடாது. தானே இடித்துக் கொள்ளும் நேர்மையை பாரட்ட வேண்டும். நாங்க எல்லாம் கேள்விகளுக்கும் விசாரணைகளுக்கும் அப்பாற்பட்டவர்கள். தீர்ப்பெழுதுகிறவர்கள். எங்களை எப்படி கேள்விகேட்கலாம். உங்களுக்கு அந்த உரிமை கிடையாது. ஏன் தெரியுமா!! நான் .....

முத்து தமிழினி ஒரு தீர்க்க தரிசி. முன்பே வைத்தார் தலைப்பு. சொக்க தங்கமா சோ!! சொக்கத் தகரமாக நிற்கிறார் இப்போது

பிகு: தமிழார்வலர்களின் இலக்கண வகுப்பு பயனுள்ளதே என்பதை ஒத்து கொள்ளவே வேண்டும்.

தப்புச் செய்! இலக்கணப்படி :-)
தப்பாகாது அது

January 07, 2007 12:05 AM  
Blogger முத்துகுமரன் said...

//அதை 'தமாஷாகத்தான்' எடுக்க வேண்டும் என்றெல்லாம் உபச்சாரம் செய்தார்களே என கேட்கலாம். தமாஷ் பேர்வழிகள்ட்ட என்னத்த பேசி என்னத்த பண்ண.//

தமிழர்களுக்கு அங்கத உணர்வு கம்மி. அவங்களும் தமிழர்கள்தானப்பா:-) விட மாட்டீங்களா

January 07, 2007 12:06 AM  
Anonymous Anonymous said...

>> பெரியார் அடிக்கடி கூறுவார் - "கன்னியாகுமரி பாப்பானுக்கு தேள் கொட்டினால், காஷ்மீரத்து பாப்பானுக்கு நெறி கட்டும்".

உலகம் ஒரு கிராமமாக சுருங்கி விட்ட நிலையில் "கன்னியாகுமரி பாப்பானுக்கு தேள் கொட்டினால் அமெரிக்கா முதல் அன்டார்டிகா வரை உள்ள பாப்பான்களுக்கு நெறி கட்டுகின்றது" என வைத்துக் கொள்ளலாம். >>

அப்பிடிப் போடுய்யா அருவாள! :) சும்மா 'கார்ட்டூன் போடுவாரா'ன்னு கேட்டதுக்கு ஒரு wolf pack போல திரண்டு வந்து ஊளையிட்டுப் பார்க்கிறார்களே! ;)

January 07, 2007 12:11 AM  
Blogger dondu(#11168674346665545885) said...

பத்திரிகையாளர் சோ அரசியல் பற்றி எழுதுபவர். அவர் பத்திரிகை கார்ட்டூன்கள் எல்லாம் அரசியல் விஷயங்களுடன் சம்பந்தப்பட்டவை. அதிலும் சம்பந்தப்பட்ட அரசியல் வாதிகளின் கொள்கைகளைத்தான் விமசரிப்பாரே தவிர, அவர்களது சொந்த வாழ்க்கையைப் பற்றி எழுதாதவர்.

சோவின் மகன் அரசியல்வாதி அல்ல, எனக்குத் தெரிந்து. அவர் ஒரு பிஸினஸ்மேன் அவ்வளவே. இந்த நீதி மன்ற ஆணையை அவர் மகன் எங்கும் விமரிசனம் செய்ததாகத் தெரியவில்லை. சட்டம் தன் கடமையைச் செய்யும். அதற்குமேல் கூற என்ன இருக்கிறது? இதைப் பற்றி கார்ட்டூன் போட என்ன அவசியம் உள்ளது?

அன்புடன்,
டோண்டு ராகவன்

January 07, 2007 10:46 AM  
Blogger Machi said...

சிவபாலன் விரைவில் 100 பின்னூட்டம் வாங்கிடுவிங்க போல இருக்கு. வாழ்த்துக்கள்.

தலைப்புக்காக 100 பின்னூட்டம் வாங்குன பதிவு இதுவாக தான் இருக்கும் என்று நினைக்கிறேன். ;)

January 07, 2007 11:22 AM  
Blogger dondu(#11168674346665545885) said...

"மற்றவர்களுக்கு கார்டூன் போட்டு சிரிக்கத் தெரிந்த வாய்களுக்கு, சொந்த செலவில் சூன்யம் ச்சீ கார்டூன் வரைந்தால் சிரிப்பு வருமா என அறியும் முயற்சி இது."
ஓ, அதுதான் உங்கள் பிரச்சினையா. கார்ட்டூன் என்ன பயங்கர கிண்டலே செய்வார் தன்னைப் பற்றியே. முதலில் கார்ட்டூன்.

சமீபத்தில் 15. மார்ச் 1971 இதழில் அட்டைப்பட கார்ட்டூன். துக்ளக் பயாஸ்கோப் படம் காட்டுகிறார். (அவரது தேர்தல் பிரசாரங்களை அந்த கார்ட்டூன் சுட்டுகிறது). வாக்காளர் "போய்யா வேலையைப் பார்த்துக் கொண்டு" என்று கூறிவிட்டு போய்க் கொண்டேயிருக்கிறார்.

அவரது கேள்வி பதில்களில் தன்னை செய்து கொள்ளாத கிண்டலா? ஒரு முறை வீரப்பன அவரைத் தெரியாத்தனமாக கடத்திய கற்[பனையை சுவைபட எழுதினவர். வீரப்பனிடம் போய் பகவத் கீதை, கிருஷ்ண பரமாத்மா என்றெல்லாம் கூறி வெறுப்பேற்ற, "இந்தாள் மறுபடி மறுபடி கிஸ்னனைப் பத்திப் பேசியா வெறுப்பேத்தறாம்பா", என்று டென்ஷனுடன் வீரப்பன் கத்துவதாக கதை போகும் (கதையில் வீரப்பனுக்கு மாரப்பன் என்று பெயர், இவர் என்னவோ சோவாகத்தான் வந்தார்).

இன்னும் எவ்வளவோ கூறிக் கொண்டு போகலாம். அவரது ரேஞ்சே தனி. அவரது பத்திரிகையாளர் நாணயத்தில் பாதியாவது மற்றப் பத்திரிகையாளர்களுக்கு இருந்தாலே பத்திரிகை உலகம் உருப்பட்டு விடும் ஐயா.

கலாநிதி மாறன் விஷயத்தில் மிரட்டல் எல்லாம் பலருக்கு அவர் விட்டவர். சோவின் மகன் அவ்வாறு செய்ததாக நீங்கள் கூறிட இயலுமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

January 07, 2007 12:20 PM  
Blogger VSK said...

//உலகம் ஒரு கிராமமாக சுருங்கி விட்ட நிலையில் "கன்னியாகுமரி பாப்பானுக்கு தேள் கொட்டினால் அமெரிக்கா முதல் அன்டார்டிகா வரை உள்ள பாப்பான்களுக்கு நெறி கட்டுகின்றது" என வைத்துக் கொள்ளலாம். >>

அப்பிடிப் போடுய்யா அருவாள! :) சும்மா 'கார்ட்டூன் போடுவாரா'ன்னு கேட்டதுக்கு ஒரு wolf pack போல திரண்டு வந்து ஊளையிட்டுப் பார்க்கிறார்களே! ;)//

தப்புங்க!

கன்யாகுமரில இருக்கற ஒரு பாப்பானுக்கு தேள் கொட்டினா, அடுத்த நொடியே, சிகாகோ முதல், சிங்கை வரை இருக்கிற திராவிடர்களுக்கு நெறி கட்டுது என்பதே உண்மை!

:))
:))

January 07, 2007 2:13 PM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv