சிவபாலன், ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள். அமெரிக்காவிற்கு வந்து விட்டீர்களா? தமிழகப் பயணம் எப்படி இருந்தது?
மேலே உள்ள பல உணவு வகைகள் கேரளத்தினது மட்டுமல்ல யாழ்ப்பாணத்து உணவு வகைகளும் தான். சொன்னால் நம்புவீர்களோ தெரியாது, யாழ்ப்பாணத்து உணவு முறை தமிழகத்து உணவு முறைகளை விட கேரள உணவு முறையோடு தான் அதிகம் ஒப்பானது.இதற்கு நான் அறிந்த காரணம், தற்போதைய கேரளம் அன்றைய சேர நாடு. யாழ்ப்பாணத்தில் குடியேறிய பலர் சேர நாட்டில் இருந்து வந்தவர்களானதால் இன்னமும் அந்த உணவு முறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்ல, யாழ்ப்பாணத்தில் புழங்கும் பல தமிழ்ச்சொற்கள் இன்றும் கேரளத்திலும் புழங்கப்படுகிறது என்பதும் சுவாரசியமான சங்கதி. உங்களின் முதலாவது படத்தில் உள்ள உணவுப் பண்டத்தை யாழ்ப்பாணத்தில் பாலப்பம்[பால் + அப்பம்] என்று சொல்வோம். கேரளாவிலும் அப்படியே அழைப்பதாக எனது மலையாள நண்பர் சொன்னார். 2வது மற்றும் 3வது படத்தில் உள்ள உணவுப்பண்டங்களை குழல் பிட்டு[புட்டு] என்றி யாழ்ப்பாணத்தில் சொல்வார்கள்.
இப்படி இரு படத்தைப் போட்டு பழைய நினவுகளைக் கிளறி விட்டீர்கள். இன்று மதிய உணவுக்கு தமிழ் உணவகத்திற்குப் போக வேணும் போல இருக்கு.:)
13 Comments:
சிபா,
திரும்பி வந்தவுடன் விருந்து வைத்துவிட்டீர்கள். நான் வெஜ் தவிர மற்றவைகள் எல்லாம் பார்க்கும் போதே சாப்பிடத் தோன்றுகிறது !
நேர்த்தியான படங்கள் !
GK,
வந்தவுடன் வரவேற்பு கொடுத்தமைக்கு மிக்க நன்றி!
வருக வருக!!!
இந்திய சுற்று பயணம் இனிதே அமைந்ததா???
பாலாஜி,
இந்திய பயனம் நன்றாக இருந்தது..
உங்கள் நட்சத்திர வார பதிவுகளை இப்பொழுதுதான் படிக்க ஆரபித்துள்ளேன். நட்சத்திரமாக ஜொலித்தற்கு வாழ்த்துக்கள்!
வைசா,
உணமையில் இப்படி ஒரு விருந்து கிடைத்தால் மிகவும் நன்றாக இருக்கும்.. Ha Ha Ha.. Hmmmmmm.....
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
சிவபாலன்,
ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
அமெரிக்காவிற்கு வந்து விட்டீர்களா?
தமிழகப் பயணம் எப்படி இருந்தது?
மேலே உள்ள பல உணவு வகைகள் கேரளத்தினது மட்டுமல்ல யாழ்ப்பாணத்து உணவு வகைகளும் தான். சொன்னால் நம்புவீர்களோ தெரியாது, யாழ்ப்பாணத்து உணவு முறை தமிழகத்து உணவு முறைகளை விட கேரள உணவு முறையோடு தான் அதிகம் ஒப்பானது.இதற்கு நான் அறிந்த காரணம், தற்போதைய கேரளம் அன்றைய சேர நாடு. யாழ்ப்பாணத்தில் குடியேறிய பலர் சேர நாட்டில் இருந்து வந்தவர்களானதால் இன்னமும் அந்த உணவு முறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்ல, யாழ்ப்பாணத்தில் புழங்கும் பல தமிழ்ச்சொற்கள் இன்றும் கேரளத்திலும் புழங்கப்படுகிறது என்பதும் சுவாரசியமான சங்கதி.
உங்களின் முதலாவது படத்தில் உள்ள உணவுப் பண்டத்தை யாழ்ப்பாணத்தில் பாலப்பம்[பால் + அப்பம்] என்று சொல்வோம். கேரளாவிலும் அப்படியே அழைப்பதாக எனது மலையாள நண்பர் சொன்னார். 2வது மற்றும் 3வது படத்தில் உள்ள உணவுப்பண்டங்களை குழல் பிட்டு[புட்டு] என்றி யாழ்ப்பாணத்தில் சொல்வார்கள்.
இப்படி இரு படத்தைப் போட்டு பழைய நினவுகளைக் கிளறி விட்டீர்கள். இன்று மதிய உணவுக்கு தமிழ் உணவகத்திற்குப் போக வேணும் போல இருக்கு.:)
//Sivabalan said...
பாலாஜி,
இந்திய பயனம் நன்றாக இருந்தது..
உங்கள் நட்சத்திர வார பதிவுகளை இப்பொழுதுதான் படிக்க ஆரபித்துள்ளேன். நட்சத்திரமாக ஜொலித்தற்கு வாழ்த்துக்கள்! //
மிக்க நன்றி சிபா...
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!
வெற்றி
நல்ல தகவலை பகிர்ந்து கொண்டுள்ளீர்கள்.. மிக்க நன்றி!
இந்த உணவு வகைகள் யாழ்ப்பாணத்திலும் உள்ளது என்பதை அறிந்து மகிழ்ச்சி..
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
பாலாஜி,
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
வாங்க சிவபாலன். இந்தியப் பயணம் நல்லா இருந்ததா? கேரளா பக்கம் போனீங்களா என்ன?
புத்தாண்டு வாழ்த்துகள்.
குமரன் சார்
பயனம் நன்றாக இருந்தது.
குழாய் பிட்டு இம்முறை கிடைத்தது.. நல்ல சுவை...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
படம் 1 - ஆப்பம்
படம் 2 & 3 குழாய் புட்டு
மற்றவை தெரியவில்லை சிவா!
அய்யா
பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
Post a Comment
<< Home