Sunday, December 10, 2006

சாதனை படைத்த சாந்தி!! வாழ்த்துக்கள்!!







சாந்தியின் பெற்றோர்கள்


தோகாவில் 15வது ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. தடகள பிரிவில் மகளிருக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் புதுக்கோட்டை மாவட்டம் கட்டக்குறிச்சியை சேர்ந்த சாந்தி, வெள்ளிப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.


இதன் மூலம் இந்தியாவுக்கு தடகள போட்டியில் முதல் பதக்கத்தை பெற்றுத்தந்தவரும், தமிழக விளையாட்டு வீரர்களில் முதலாவது பதக்கம் பெற்றவர் என்பதும் பெருமைக்குரிய சாதனையாகும்.


இந்த சாதனை படைத்த சாந்தி, ஓர் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது பெற்றோர் செங்கல் சூளையில் கூலி வேலை செய்கிறார்கள்.


இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் பெருமை தேடித் தந்துள்ள சாந்தியின் சாதனையைப் பாராட்டி அவருக்கு ரூ. 15 லட்சம் பரிசு வழங்கப்படும் என முதல்வர் கருணாநிதி, நேற்று அறிவித்தார்.

35 Comments:

Blogger Sivabalan said...

வெள்ளி வென்று தமிழ்கத்தை தலை நிமிர வைத்த வீர மங்கை சாந்திக்கு எனது மன்மார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்..

December 10, 2006 6:43 PM  
Blogger Sivabalan said...

இங்கே வீர மங்கை சாந்திக்கு வாழ்த்து தெரிவிக்க வரும் அனைவருக்கும் எனது நன்றிகள்

December 10, 2006 6:47 PM  
Blogger மங்கை said...

சிவா

அவங்க அம்மா அப்பாவ பார்த்தா எனக்கு கண்ல கண்ணீர் வருது...

இத பத்தியெல்லாம் சரியா தெரிஞ்சிருக்க கூட வாய்ப்பில்லை அவங்களுக்கு...

இன்னும் எத்தனை சாந்திகள் ஒளிந்திருகிறார்களோ ம்ம்ம்ம்ம்

சாந்திக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்...

அவரை பெற்ற தெய்வங்களுக்கு வணக்கங்கள்..

எனோ மனதை தொடும் படமா இருக்கு சிவா இது...

December 10, 2006 7:01 PM  
Blogger வடுவூர் குமார் said...

சாந்தி ஜெயித்ததில் தமிழர்களுக்கு சந்தோஷம் தான்.
விளையாட்டுத்துறைக்கும் நிறைய நிதி உதவி செய்து இந்தியாவை மேம்படுத்த வேண்டும்.
சிங்கையில் தங்கப்பதக்கம் வென்றவர்க்கு எவ்வளவு பரிசுத்தொகை தெரியுமா?
வெறுப்பேத்தவில்லை.. ஆதங்கம் தான்.
S$250000 (Rs x 29)
சைபர் எல்லாம் கரெக்டாத்தான் இருக்கு,மறுபடியும் சரி பார்த்திவிட்டேன்.

December 10, 2006 7:04 PM  
Blogger வெற்றி said...

சிவபாலன்,
ஒரு தமிழிச்சியின் வெற்றி கண்டு மனம் பேருவகை கொள்கிறது. இது தமிழகத்திற்கு மட்டுமல்ல, உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களுக்கே பெருமை தரும் செய்தி.

தமிழிச்சி சாந்திக்கு என் வாழ்த்துக்கள்.

பி.கு: என்ன சிவபாலன், இப்போது எங்கே இருக்கிறீர்கள்? தமிழகத்திலா?

December 10, 2006 7:08 PM  
Blogger Sivabalan said...

மங்கை

சாந்தியின் பெற்றோர்கள் போட்டோ பார்த்த பிறகு தான் இப்பதிவே.. (மிகுந்த சிரமத்திற்கும் நடுவே)

வீர மங்கை சாந்தியை கவுரவப் படுத்தவே இப்பதிவே...

வருகைக்கு நன்றி

December 10, 2006 7:33 PM  
Blogger Sivabalan said...

வடுவூர் குமார்,

வருகைக்கு நன்றி

வெற்றி,

இன்னும் அமெரிக்காவில் தான்.. பேக்கிங் நடக்கிறது..

இருப்பினும் இந்த சாதனையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை

வருகைக்கு நன்றி

December 10, 2006 7:36 PM  
Blogger கஸ்தூரிப்பெண் said...

சேற்றில் முளைத்த செந்தாமரை போல, செங்கல் சூளையில் முளைத்தவரு சூரப்புலி சாந்தி.
தமிழக அரசு பாராட்டியது பெருமையாத்தான் இருக்கு. அதேசமயம், இன்னும் இது மாதிரி இன்னும் பூக்காதா, மற்றும் மொட்டுலேயே கருகிற செந்தாமரைய வெளிக்கொணர என்ன வழின்னும் அரசு யோசிக்கணும்.

December 10, 2006 8:51 PM  
Blogger கோபிநாத் said...

வணக்கம் சிவபாலன்
சாந்திக்கு எனது பாராட்டுக்கள்...
முதல்வர் அவர்களுக்கு நன்றிகள்....

December 10, 2006 9:11 PM  
Blogger Thekkikattan|தெகா said...

சாந்தி எங்க ஊரு... ;-) பாருங்கய்யா எம்புட்டுத் தூரம் போய், எம்புட்டு தூரம் ஓடி எல்லாருக்கும் பேர் வாங்கி கொடுத்துட்டார்.

சாந்தி அப்பா, அம்மாவ பார்த்த எங்க வீட்டு பக்கத்து வீட்டுக்காரங்க மாதிரி இருக்காங்க...

December 10, 2006 9:26 PM  
Blogger BadNewsIndia said...

//சிவா
அவங்க அம்மா அப்பாவ பார்த்தா எனக்கு கண்ல கண்ணீர் வருது...
//

மங்கை எழுதினது படிச்சதுக் பிறகு மீண்டும் படம் பார்த்தால் உண்மையில் கண் கலங்குகிறது.
இந்த பரிசின் முழு அர்த்தம் கூட அவங்களுக்கு தெரியுமோ என்னமோ?

இவ்வளவு போராட்டங்களுக்கு நடுவிலும் வெற்றி பெற்றிருப்பது நமக்கு ஒரு சிறந்த முன்னுதாரணம்.

December 10, 2006 9:32 PM  
Blogger கோவி.கண்ணன் [GK] said...

சாதனைகள் செய்வதற்கு தன்னம்பிக்கையே மூலதனம் என்று சாந்தியின் பெற்றோர்களைப் பார்க்கும் போது தெரிகிறது.

சாந்தி போல பெண்கள் விடாமுயற்சியுடன் வெற்றி பெறவேண்டும் என்று சாந்திக்கு கிடைத்த பதக்கம் சொல்கிறது.

இது சாந்திக்கு மட்டும் கிடைத்த பதக்கமல்ல, ஏழை எளியவர்களின் மறைந்துள்ள திறமைக்கு கிடைத்த வெற்றி !

December 10, 2006 9:37 PM  
Blogger nayanan said...

சாந்திக்கு வாழ்த்துக்கள்.
இதனைப் பதிவில் இட்ட தங்களுக்குப் பாராட்டுக்கள்.

December 10, 2006 10:10 PM  
Blogger வசந்த் said...

சாந்திக்கு வாழ்த்துக்கள்.

நன்றி
வசந்த்

December 10, 2006 10:32 PM  
Blogger லக்கிலுக் said...

தமிழ்நாட்டில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இந்த சகோதரி கலைஞர் சொன்னபடி தமிழ்நாட்டின் மானத்தை மட்டுமல்ல இந்தியாவின் மானத்தையே காத்து பெருமை சேர்த்திருக்கிறார்.

வீரமங்கைக்கு எனது வாழ்த்துக்கள்!!!!

December 10, 2006 10:53 PM  
Anonymous Anonymous said...

சாந்தியின் குடும்ப சூழ்நிலையைப் பார்க்கும் போது, அவருக்கு பயிற்சிக்கான வசதிகள் எந்த அளவுக்கு இருந்திருக்கும் என்று யூகிக்க முடிகிறது. இந்த நிலைமையிலும் அவர் ஆசிய வெள்ளி மங்கை ஆயிருக்கிறார். முறையான பயிற்சிகள் கிடைத்தால் , அவர் , இன்னும் பல சாதனைகள் படைப்பார் என நம்பிக்கை பிறக்கிறது..

December 10, 2006 11:27 PM  
Blogger மதுமிதா said...

உழைப்புக்கும், விடாமுயற்சிக்கும் கிடைத்த வெற்றி இது.
சாந்திக்கு வாழ்த்துகள்
நன்றி சிவபாலன்

December 11, 2006 5:35 AM  
Blogger VSK said...

தடகள வீராங்கனை செல்வி சாந்திக்கு உளங்கனிந்த நல்வாழ்த்துகள்!

இதற்கெல்லாம் வெளிநாட்டு நிறுவனங்களை கோரத் தேவையில்லை.

எத்தனையோ தண்டச் செலவுகள் செய்து மக்கள் பணத்தை வீணடிக்கும் அரசே இதனை ஏற்று, சாந்தியை அரசாங்க விருந்தினராகக் கௌரவித்து, ஒரு மந்திரிக்குரிய அந்தஸ்தைக் கொடுத்து, வேன்டிய வசதிகள் செய்து தர முடியும்.

அரசு விளையாட்டுத் துறை நல்லெண்ணத் தூதர் என்று கூட இவரை நியமிக்கலாம்.

முறைப்படி இங்கு [யூ.எஸ்.ஏ] பயிற்சி பெற வருவாரேயாயின், இங்கு வாழ் தமிழர் மூலம் வேண்டிய வசதிகள் செய்யவும் முடியும்.

வெறும் பாராட்டோடு நின்றுவிடாமல், இந்த அரும்பு எப்படி மலர முடியும் என யோசிக்கலாம்.

தமிழக அரசில் செல்வாக்குள்ளவர்களைத் தெரிந்த பதிவர்கள் இதற்கான முயற்சியை உடனடியாகத் தொடங்க வேண்டும்.

அரிமா சங்கம், ரோட்டரி போன்ற சேவை நிறுவனங்களும் இதில் உதவ முடியும்.

December 11, 2006 7:33 AM  
Anonymous Anonymous said...

சிவபாலன் !
மிகப் பெருமையாகவும்;ஆனந்தமாகவும் இருக்கு!!!
மேலும் அவர் சாதனை படைக்க தமிழக அரசு சகல உதவியும் செய்ய வேண்டும்.
யோகன் பாரிஸ்

December 11, 2006 7:45 AM  
Blogger Sivabalan said...

கஸ்தூரிப்பெண், கோபிநாத், தெகா, BNI, GK, நயனன், வசந்த், லக்கி லுக், ஜீவன், மதுமிதா, சிநேகிதன், SK அய்யா மற்றும் யோகன் பாரிஸ் வருகைக்கும், வீர மங்கை சாந்தியை வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி.

December 11, 2006 9:54 AM  
Blogger gulf-tamilan said...

அவரது சாதனை தொடர வாழ்த்துக்கள்!!

December 11, 2006 12:00 PM  
Blogger aathirai said...

நல்ல செய்தி. பதிவுக்கு நன்றி. நம் ஊரில் விளையாட்டு திறமை
இருந்தாலும் பரவலாக வசதி வாய்ப்புகள் அனைவருக்கும் கிடைக்காததால்தான்
ஒலிம்பிக் போன்ற போட்டிகளில் பின்தங்கி இருக்கிறது. என்றைக்கு
இந்த வாய்ப்பும் திறமைகளும் ஒன்று சேருமோ?

December 11, 2006 12:45 PM  
Blogger Santhosh said...

சாந்தியின் சாதனைகளுக்கு வாழ்த்துக்கள் இன்று தான் அவர்களது குடும்ப மற்றும் வளர்ந்த விதம் குறித்து படித்து வியந்தேன்.

December 11, 2006 3:31 PM  
Anonymous Anonymous said...

2020ல் இந்தியா வல்லரசாகும் என்ற கலாமின் கனவு மெய்ப்பட இன்னும் அதிக நாளில்லை. நன்றி சிவபாலன், இந்த சாதனையை உலகறிய செய்ததற்க்கு.

December 12, 2006 5:27 PM  
Blogger Sivabalan said...

கல்ப் தமிழன், ஆதிரை, சந்தோஷ் மற்றும் ஜி வருகைக்கும், வீராங்கனை சாந்தியை வாழ்த்தியமைக்கும் நன்றி.

December 12, 2006 8:49 PM  
Blogger ஜோ/Joe said...

இந்த பெற்றோருடைய படத்தை பார்க்கும் போது கண்ணீர் வருவதை தடுக்க முடியவில்லை .அதே நேரம் ஆத்திரமும் வருகிறது .இந்த நாசமாய் போன கிரிக்கெட்டிலிருந்து மக்கள் எப்போது வெளியே வருகிறார்களோ அன்று தான் விளையாட்டில் இந்தியா தலை நிமிரும்

December 12, 2006 9:34 PM  
Blogger மணியன் said...

சிபா,உங்கள் நல்ல பதிவை பார்க்காமல் நானும் தனிப் பதிவிட்டுள்ளேன். அடிதட்டு மக்களிலிருந்து சாதனையாளர்கள் வருவது மகிழ்ச்சியாக இருந்தாலும் அவர்கள் பொருளாதார நிலை குறித்து வருத்தமேற்படுகிறது.

December 13, 2006 12:51 AM  
Blogger வாசகன் said...

சகோதரி சாந்திக்கு எனது பாராட்டுக்கள்.
முதல்வர் அவர்களுக்கு நன்றிகள்.

திரு.வடுவூர் குமார், பரிசுத்தொகையை பிறநாட்டுடன் ஒப்பிடுவது சரியல்ல.
சிங்கப்பூருடன் ஒப்பிட்டால் கூடுதலாகத்தான் வரும். பணமாற்று விகிதத்தை கணக்கிட இது இடமல்ல.

ஊக்கம் தான் அலகு. ஊக்கமளிப்போம். உயர்வு பெறுவோம்.

December 13, 2006 3:12 AM  
Blogger na.jothi said...

இந்த பரிசை நேரடியாக நேரத்துடன் கொடுக்க வேண்டும் -ஜோ

December 13, 2006 7:31 AM  
Anonymous Anonymous said...

சாந்தி வரலாற்றை வென்றது. அவரின் பெற்றோர் நமது மனதை வென்று விட்டார்கள்.

சாந்திக்கும் அவரது பெற்றோர்க்கும் என் வாழ்த்துக்கள். இந்தப் பதிவுமூலம் இவர்களை பெருமைப்படுத்திய உங்களுக்கு என் பாராட்டுக்கள்.

December 13, 2006 8:57 AM  
Blogger அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

நான் புதுக்கோட்டை காரன் என்ற முறையில் எனக்கு கூடுதல் பெருமையாக இருக்கிறது. இப்படியான கவனிப்புப் பதிவுகளை தொடர்ந்து போடுங்கள். என் பதிவுகளுக்கு தொடர்ந்து வந்து போவதற்கும் நன்றி

December 14, 2006 12:34 AM  
Blogger Thottarayaswamy said...

என் கவிதை முயற்சியையும் உங்களோட சேர்துக்குங்க..

காண்க: www.pagadaipost.blogspot.com

December 14, 2006 10:48 AM  
Blogger Thottarayaswamy said...

என் கவிதை முயற்சியையும் உங்களோட சேர்துக்குங்க..

காண்க: www.pagadaipost.blogspot.com

December 14, 2006 10:48 AM  
Blogger Sivabalan said...

Thottarayaswamy ,

உங்கள் வருகைக்கும் கவிதைக்கும் மிக்க நன்றி!

உங்கள் பதிவுகளை எவ்வாறு சேர்க்க வேண்டும் என்று கேட்டு இங்கே பின்னூடமிடுங்கள்.

http://blog.thamizmanam.com

நிர்வாகிகள் ஆவன செய்வார்கள்!

நன்றி

December 14, 2006 10:57 AM  
Blogger Unknown said...

http://www.ashokha.com/2012/07/ashamed-for-born-in-india.html

In 2006 Asiads games Santhi of Pudukkottai has won silver medal but it was taken back as the harmone test failed. Now she is working as a daily labour in a brick kiln for Rs 200 in Pudukkottai. I have seen her running in highways hours together to get this medal. Due to excess running her hormone system might be disturbed. But our Sports Authority of India has completely banned her from all sports activities. But in a similar case in 2009 Berlin olympics Mokgadi Caster Semenya of South Africa who has won a gold medal and later lost it because of hormone test and then the South African Government fought for it and got back the medal. Now she is going to run with the South African flag in 2012 London Olympics. Why not the Indian Government has not done that? Dinakaran news 25th July 2012.
செங்கல்சூளையில் தினக்கூலியாக வேலை பார்க்கும் வீராங்கனை
கருத்துகள்

00:58:47
Wednesday
2012-07-25

2006ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டி 800 மீட்டர் மகளிர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்று பின்னர், பாலின சோதனையில் அவருக்கு பெண்ணுக்கான அம்சங்கள் இல்லை என்று கூறப்பட்டதால் பதக்கத்தை இழந்த தமிழக வீராங்கனை சாந்தியை பலரும் மறந்திருக்க வாய்ப்புள்ளது. அந்த போட்டிக்கு பின்னர் அவரது வாழ்க்கையும் மங்கிவிட்டது.

இப்போது அவர் புதுக்கோட்டை அருகே செங்கல் சூளை ஒன்றில், ரூ.200 தினக்கூலியில் எட்டு மணி நேரம் வேலை பார்த்து வருகிறார். பாலின சோதனையில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து அவர் எல்லா வகை போட்டியிலும் கலந்துக் கொள்ள இந்திய தடகள கூட்டமைப்பு தடை விதித்தது. பெண்ணாக இருந்தாலும், சாந்திக்கு இருக்கும் பிரச்னை, அவருக்குரிய சுரப்பிகள் சரியாக வேலை செய்யவில்லை.

இதேபோன்று பாலினச் சோதனையில் தோல்வி அடைந்ததால், 2009ம் ஆண்டில் பெர்லின் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கத்தை இழந்த, தென் ஆப்ரிக்காவின் ஒட்டப்பந்தய வீராங்கனை செமன்யாவுக்கு, அரசே முழு மூச்சுடன் ஆதரவாக செயல்பட்டதால், அவருக்கு விதிக்கப்பட்ட தடையை சர்வதேச தடகள கூட்டமைப்பு சங்கம் கடந்த ஆண்டு நீக்கியது. இப்போது லண்டன் ஒலிம்பிக் போட்டியில் அவர்தான் தன்னாட்டு கொடியை ஏந்திச் செல்ல உள்ளார்.

July 25, 2012 12:25 AM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv