Thursday, January 11, 2007

இது சரியா?


1973 ம் ஆண்டு ஏப்ரல் 24 ம் தேதிக்கு பின்னர் அரசியலமைப்பின் 9 வது அட்டவணையில் இணைக்கப்பட்ட எந்தவொரு சட்டத்தையும் விசாரிக்க கோர்ட்டுகளுக்கு உரிமை உண்டு என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீட்டு சட்டம், பல்வேறு மாநிங்களின் நில சீர்திருத்த சட்டம் உள்ளிட்ட சுமார் 282 சட்டங்கள் 9 வது அரசியலமைப்பின் அட்டவணையில் சேர்க்கப்பட்டிருந்தன இதனால் , இச்சட்டங்களை
கோர்ட் தலையிட முடியாத நிலை இருந்தது. ஆனால் இந்த தீர்ப்பின் மூலம் அந்நிலை மாறியுள்ளது.

உச்ச நீதி மன்றத்தின் இந்த தீர்ப்பு மிக முக்கியமானது. அரசியல்வாதிகளின் சுய நலத்திற்காக சில விசயங்களை செய்வார்களாயின் அவர்களை தட்டிக் கேட்க இது நிச்சயம் உதவும். ஆனால் இதை உணமையில் செயல் முறை படுத்தும் போது எவ்வாறு இருக்கும் என தெரியவில்லை.

முக்கியமாக அட்டவனை எண் 9 ல் கொண்டுவரப்படும் மக்கள் முக்கியதுவம் வாய்ந்த சட்டங்கள் எ.கா தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீடு. இதை வாத பிரதி வாதங்கள் வைக்கும் வழக்குறைஞர்களையும் ஆளும் ஆட்சியையும் பொருத்து தீர்ப்பு வழங்கப்படும். இது சரியான தீர்ப்பாக இருக்குமா?

எனக்கு தெரியவில்லை.. தெரிந்தவர்கள் விளக்கவும்.

இதற்கு பதில் கூறும் முன் இது சம்பந்தமாக திரு. பிரபு ராஜ துரை ஒரு முக்கியமான விசயத்தைப் பற்றி பதிவிட்டிருந்தார். அதை படித்துவிட்டு பதில் சொல்லுங்க..

4 Comments:

Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

முக்கியமாக அட்டவனை எண் 9 ல் கொண்டுவரப்படும் மக்கள் முக்கியதுவம் வாய்ந்த சட்டங்கள் எ.கா தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீடு. இதை வாத பிரதி வாதங்கள் வைக்கும் வழக்குறைஞர்களையும் ஆளும் ஆட்சியையும் பொருத்து தீர்ப்பு வழங்கப்படும். இது சரியான தீர்ப்பாக இருக்குமா?

I think you do not know how the
court functions.69% reservation
violates the judgment given in
Indra Sawhney case (Mandal Commission case) and other cases
wherein the limit was fixed at
50%. So if the SC strikes down
69% reservation there will be
a rationale for it.Whether you
like it or not Constitution
of India has vested some powers
with the court.The court is only
exercising those powers.
see http://ravisrinivas.blogspot.com

January 11, 2007 8:38 AM  
Blogger Sivabalan said...

தமிழக அரசின் 69% இட ஒதுக்கீடு என்பது மக்கள் நலனில் முக்கியதுவம் கொடுத்து எடுக்கப் பட்ட ஒரு முடிவு / சட்டம்.

//Whether you
like it or not Constitution
of India has vested some powers
The court is only
exercising those powers.//

திரு. பிரபு ராஜா துரை அவர்களின் பதிவைப் படித்துவிட்டுதான் பதில் சொல்கிறீர்களா?
அந்த தொடர் முழுவதும் படித்துவிட்டு பதில் சொல்லுங்கன்னு சொல்லியிருக்கிறேனே?!!
படியுங்க.. படித்துவிட்டு சொல்லுங்க..

கொஞம் நேரம் எடுத்து படியுங்க..

அதைப் பற்றி இங்கே கொஞ்சம் விளக்குங்க.. நேரமிருந்தால்..

January 11, 2007 8:47 AM  
Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

I have no time to read that blog now and respond.I may write a post in my blog on this judgment later.
Such issues are controversial and diversity in opinions is natural.
I for one have reservations about
the current reservation system.In my view 69% reservation is unjustified.I dont expect every one to accept this view.

January 11, 2007 8:58 AM  
Blogger Sivabalan said...

Ravi Srinivas Sir,

Please take your time to read that blog.

Please respond back.

Thanks for views.

January 11, 2007 9:01 AM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv